Followers

Search Here...

Showing posts with label இஸ்லாம். Show all posts
Showing posts with label இஸ்லாம். Show all posts

Wednesday 8 August 2018

வைஷ்ணவம் இஸ்லாம்





வைஷ்ணவம்:
சாத்வீக உணவே உண்ண வேண்டும்.
மாமிசம் ராஜஸ உணவு. கோபம், பரபரப்பு போன்ற குணங்கள் உண்டாகும்.
மது தாமச உணவு. அழுகை, சோம்பேறித்தனம், தூக்கம் போன்ற குணங்கள் உண்டாகும். மூளையை குழப்பும்.

கோப குணமும், சோம்பேறித்தனமும் ஒருவன் தெய்வத்தை அணுக முடியாதபடி செய்யும் எதிரியாகும்.
ராஜஸ, தாமச உணவு உண்ண கூடாது. இது மனதை சஞ்சலப்படுத்தும்.

காய் கறிகளிலும் தாமச மற்றும் ராஜஸ உணவு உண்டு. அப்படிப்பட்ட  காய் கறிகளை தவிர்க்க வேண்டும்.
எப்பொழுதும் சாத்வீக உணவே உண்ண வேண்டும். முடிந்தால் மற்றவர் சமைத்த உணவை உண்ணாமல், தானே சாத்வீக உணவை சமைத்து உண்ண வேண்டும்.




இஸ்லாம்:
மது குடிக்க கூடாது.
வளர்க்கப்படும் விலங்குகளை சாப்பிடலாம்.
பன்றி, வேட்டையாடும் விலங்குகள், வேட்டையாடும் பறவைகள், இறந்த விலங்குகள் தவிர மற்ற அனைத்தையும் உண்ணலாம்.


வைஷ்ணவம்:
நாராயணனின் 5 வித அவதாரங்களில், ஒன்று அந்தர்யாமி.
அந்தர்யாமியாக ஒவ்வொரு ஜீவனுடனும் சேர்ந்தே உள்ளார். யோகிகள் யோகத்தினால் பகவானை தானே அடைகின்றனர். இது எல்லோருக்கும் எளிதல்ல.
இப்படி தெய்வத்துடன் பேசும் சக்தி உள்ள மகான்கள் கொண்டே, பகவானை அடைய முடியும். ஒரு தேச பிரதமரை தானே முயற்சி செய்து பார்க்கலாம், இல்லை அவருக்கு மிகவும் தெரிந்தவரை கொண்டும் பார்க்கலாம்.

இஸ்லாம் :
கடவுளின் மீதான நம்பிக்கை கொண்டு ஒவ்வொருவரும் தானே கடவுளை அடையலாம். தேவ தூதர், போதனைகள் செய்பவர்கள் யாவரும் அறிவுரை சொல்பவர்களே. இவர்கள் கடவுளை அடைய தேவையில்லை.


வைஷ்ணவம்:
ஒருவன் பிச்சைக்காரன் குடும்பத்தில் பிறப்பதும், கஷ்டப்படுவதும், பணக்காரன் குடும்பத்தில் பிறப்பதும், சுகமாக இருப்பதும் அவன் செய்த பூர்வ ஜென்ம பாப, புண்ணியத்தினால் மட்டுமே.

பிறக்கும் போது ஒருவன் பாபம், புண்ணியம் செய்யவில்லை. பூர்வ ஜன்மம் இல்லை என்றால்,
ஏன் ஒரு பாவமும் செய்யாத ஒருவனை ஏழை குடும்பத்தில் பிறக்க வைத்தான்?
ஏன் வேறு மதங்களில், வேறு தேசங்களில் பிறக்க வைத்தான்? என்று கடவுள் மீது குறை உண்டாகும்.

கடவுள் காரணமே இல்லாமல் பலரை ஏழை குடும்பத்திலும், மற்ற மதத்திலும் பிறக்க வைக்கிறார் என்று ஆகும்.

வைஷ்ணவம் பூர்வ ஜென்மம் உண்டு, இன்னும் பல கோடி ஜென்மங்கள் உண்டு என்றும் சொல்கிறது.

எப்பொழுது எந்த பிறவியில், பாவ புண்ணியம் செய்யாமல், நாராயணனை சரணாகதி செய்து வாழ்கிறானோ, அப்பொழுது மோக்ஷம் அடைவான்.

இஸ்லாம் :
முற் பிறவி இல்லை. வயது வரும்வரை பாவங்கள் கடவுளால் எடுத்து கொள்ளப்பட மாட்டாது.
பின் செய்யும் பாவங்களுக்கு அவனுக்கு தண்டனை கடவுளே கொடுப்பார்.
செய்யும் பாவங்களுக்கு கடவுளிடம் மன்னிப்பு கேட்டால் மட்டுமே போதும். இதற்கு மத போதகர்கள் தேவை இல்லை.
நேரடியாக வேண்டினாலே கடவுள் பாவங்களை மன்னிப்பார்.
இறந்த பின் புண்ணியம் செய்தவர்கள் சொர்க்கமும், பாவம் செய்தவர்கள்  நரகம் போவார்கள்.
மீண்டும் பிறப்பு வாய்ப்பில்லை.
ஏழையாக ஏன் பிறக்கிறார்கள்? மற்ற மதங்களில் ஏன் பிறக்கிறார்கள்? இப்படி கேள்வி கேட்க கூடாது.


வைஷ்ணவம்:
நாராயணன் 5 விதமாக (பரம், வ்யுகம், விபவம், அந்தர்யாமி, அர்ச்ச) அவதாரங்கள் எடுக்கிறார். அதில் அர்ச்ச அவதாரமே கோவில்களிலும், வீடுகளிலும் உள்ள விக்ரஹங்கள்.
பக்தியும், ஞானமும் வளர, சர்வ சக்தி உள்ளவர் அர்ச்ச அவதாரத்தில் பிரவேசித்து மகான்களிடம் பேசுகிறார். நம்பிக்கையை பொறுத்து மூடனுக்கு கூட அவன் கேட்டதை செய்கிறார்.

இஸ்லாம்:
கடவுள் இருக்கிறார். அவர் எப்படி இருப்பார் என்று கற்பனை செய்ய கூடாது. அவர் பெயரை கொண்டு கட்டிடம் கட்ட கூடாது.


வைஷ்ணவம்:
நாராயணன் சர்வ சக்தி உள்ளவர் என்பதால், மகான்களை உலகிற்கு அனுப்பி (ராமானுஜர், காந்தி, ஆதிசங்கரர்) உலகிற்கு போதனைகள் கிடைக்க வழி செய்கிறார்.
வேத தர்மம் உலகில் வீழ்ச்சி அடையும் போது தானே அவதாரங்களை செய்தார், செய்கிறார்.
அவர் 5 விதமாக (பரம், வ்யுகம், விபவம், அந்தர்யாமி, அர்ச்ச) அவதாரங்கள் எடுக்கிறார் என்று வைஷ்ணவ தர்மம் காட்டுகிறது.




இஸ்லாம்:
கடவுள் சர்வ சக்தி உள்ளவர் என்றாலும், மகான்களை (ஆபிரகாம், மோசஸ், நபி போன்றோரை) உலகிற்கு அனுப்பி உலகிற்கு போதனைகள் கிடைக்க வழி செய்கிறார்.
ஆனால் அவரே அவதாரம் செய்ய மாட்டார்.


வைஷ்ணவம்:
ஒரே கடவுள். முழு முதற்கடவுள் நாராயணணே. அவரே ஆண் (புருஷ)
அவரே பரமாத்மா.
நாம் எல்லோரும் தேவர்கள் உட்பட ஜீவாத்மா (பெண்).
நம் லட்சியம் அந்த பரமாத்மாவை அடைவதே.
அவர் பார்க்க எப்படி உள்ளார், எங்கு உள்ளார், எப்படியெல்லாம் உள்ளார் என்று சொல்கிறது வைஷ்ணவம்.

இஸ்லாம்:
ஒரே கடவுள். கடவுள் எங்கு உள்ளார், எப்படி உள்ளார், அவர் ஆனா பெண்ணா என்று கேட்க கூடாது. உலகையும், மனிதனையும் படைத்த கடவுளை உருவகப் படுத்தக் கூடாது. இருக்கிறார் என்று மட்டும் நம்பவேண்டும்.