Followers

Showing posts with label பிராம்மணன். Show all posts
Showing posts with label பிராம்மணன். Show all posts

Friday, 6 May 2022

ப்ராம்மணத்துவம் அடைவது எப்படி? க்ஷத்ரியத்துவம் அடைவது எப்படி? வியாசர் பதில் சொல்கிறார்.

"ப்ராம்மணத்துவம் அடைய" என்ன வேண்டும்?

"க்ஷத்ரியத்துவம் அடைய" என்ன வேண்டும்?

பாரத போர் முடிந்த பிறகு, கௌரவர்கள் பக்கம் இருந்த அனைவரும் மடிந்தார்கள்.

பாண்டவர்கள் பக்கமும் அபிமன்யு, மற்றும் திரௌபதியின் 5 பிள்ளைகள் உட்பட அனைவரும் மடிந்து விட்டார்கள்.


அனைவருக்கும் தகனம் செய்து, கங்கையில் தீர்த்த தர்ப்பணம் தானே செய்தார் யுதிஷ்டிரர்

அந்த சமயத்தில், கர்ணன் தனது மூத்த சகோதரன் என்ற செய்தியையும் குந்திதேவி மூலமாக கேட்ட யுதிஷ்டிரர், மீள முடியாத சோகத்தில் மூழ்கினார்.


நிலத்திற்க்காக குலத்தை அழித்தோமே! உலகத்தில் இருந்த க்ஷத்ரிய அரசர்கள் எல்லோரும் அழிந்து விட்டனரே! பிள்ளைகளும் போய் விட்டனரே! என்றதும், 

'இனி ராஜ்யம் எனக்கு தேவையில்லை. ஒரு மரத்தடியில் போய் அமர்ந்து, உடல் சம்பந்தமாகவோ, மனம் சம்பந்தமாகவோ இனி எந்த ஒரு முயற்சியும் செய்யாமல், விருப்பும் இல்லாமல், வெறுப்பும் இல்லாமல், வனம் சென்று வாழ போகிறேன்

என்று சொல்லி விட்டார்.


யுதிஷ்டிரர் சந்நியாசியாக செல்ல கூடாது என்று, அர்ஜுனன், பீமன், நகுலன், சகாதேவன் போன்றோர் கர்மாவே சிறந்த தர்மம், க்ருஹஸ்த தர்மமே சிறந்தது என்று சொல்லி சமாதானம் செய்ய முயற்சித்தனர்.

அந்த சமயம், திரௌபதியும், "தண்ட நீதியே' சிறந்தது என்று பேசினாள். 

இப்படி பலர் சொன்ன பிறகு, வியாசர் யுதிஷ்டிரரிடம் உபதேஸிக்கிறார்.

तपॊ यज्ञ: तथा विद्या भैक्षम् इन्द्रिय निग्रहः |

ध्यानम् एकान्तशीलत्वं तुष्टिर दानं च शक्तितः |

ब्राह्मणानां महाराज चेष्टाः संसिद्धि कारिकाः ||

- வ்யாஸ மஹாபாரதம் (Vyasa Mahabharata)

மஹாராஜனே! தவம், யக்ஞம், ஆத்மாவை பற்றிய அறிவு, உயிர் தக்க வைக்க பிக்ஷை வாழ்க்கை, புலன் அடக்கம், தியானம், தனிமையை விரும்புவது, ஆத்ம சுகத்தில் இருப்பது, கிடைத்ததில் திருப்தி, தன் சக்திக்கு தகுந்த தானம் செய்வது,

இந்த தர்மங்கள்  அனைத்தும், ப்ராம்மணர்களுக்கு ப்ராம்மணத்துவம் 'ஸித்தி' அடைவதற்காக விதிக்கப்பட்டவை. 


क्षत्रियाणां च वक्ष्यामि तवापि विदितं पुनः |

यज्ञॊ विद्या समुत्थानम् असंतॊषः श्रियं प्रति |

दण्डधारणम् अत्युग्रं प्रजानां परिपालनम् |

वेद  ज्ञानं तथा कृत्स्नं तपॊ सुचरितं तथा |

द्रविणॊपार्जनं भूरि पात्रेषु प्रतिपादनम् |

एतानि राज्ञां कर्माणि सुकृतानि विशां पते |

इमं लॊकम् अमुं लॊकं साधयन्तीति नः श्रुतम ||

- வ்யாஸ மஹாபாரதம் (Vyasa Mahabharata)

க்ஷத்ரியர்களுக்கு விதிக்கப்பட்ட தர்மம் உனக்கு தெரிந்தாலும், மீண்டும் சொல்கிறேன்.

யாகம் செய்வதிலும், உலகம் மற்றும் ஆத்மா பற்றிய அறிவு, பொருள் சேர்ப்பதில் திருப்தி இல்லாமலும், புகழில் ஆசையும், ஆட்சியில் பாராபட்சம் இல்லாமல் தண்ட நீதியோடு நிர்வாகமும், அனைத்து உயிர்களையும் காப்பதும், வேதனையை அறிவதும், தவமும், ஒழுக்கமான தனிமனித வாழ்க்கையும், பொருள் ஈட்டுவதில் திறனும், அந்த பொருளை நல்ல தர்மங்களுக்கு கொடுப்பதும், அரசர்களுக்கு விதிக்கப்பட்ட தர்மம்.

இப்படி க்ஷத்திரியன் க்ஷத்ரியத்துவம் அடையும் போது, இவ்வுலகில் மட்டுமல்ல, மேல் உலகிலும் புகழோடு இருப்பான்.

Tuesday, 5 March 2019

யார் ரிஷி? யார் முனி? யார் த்விஜன்? யார் விப்ரன்? யார் பிராம்மணன்? தெரிந்து கொள்வோமே...

ஒரு பிராம்மண தகப்பனுக்கும், பிராம்மண தாய்க்கும் பிறப்பதால் 'பிராம்மணன்' என்ற பெயரை மட்டுமே பெறுகிறான்.
வெறும் பிறப்பினால் மட்டும், ஒருவன் பிராம்மணத்துவம் அடைவதில்லை. 
பிறக்கும்போது ப்ராம்மணனும் நாளாம் வர்ணத்தவன் தான். சூத்திரன் தான் (employee)


உபவீதம்(பூணுல்) என்ற சம்ஸ்காரம் செய்து, தன் தகப்பானரிடம் மந்திர உபதேசம் பெற்ற பின், "த்விஜன்" என்ற அடுத்த பிறவியை அடைகிறான்.
ப்ரம்மத்தை (பரவாசுதேவனை) உபாசனை செய்ய உலக ஆசைகளை துறக்க தயாராவதால், உபவீதம் அணிந்த பின், இரண்டாம் பிறவி (த்விஜன்) எடுக்கிறான்.
அலங்காரங்கள் ஆசைகள் விட்டு, வேஷ்டி, குடுமி, நெற்றியில் திலகம் வைத்து கொண்டு, கடல் போன்ற வேதத்தை 12 வருடங்கள் அத்யயணம் குருவிடம் இருந்து கற்று, குருவுக்கு பணிவிடை செய்து,  வேதியனாக ஆகும் போது, "விப்ரன்" என்று பெயர் பெறுகிறான்.
வேத மந்திரங்கள் கற்ற வேதியன், வேத மந்திரங்களை ஜபித்து, அந்த மந்திரங்களுக்கு உரிய தெய்வங்களை ஆகர்ஷிக்கும் சக்தி பெறும் போது "ரிஷி" என்ற பெயர் பெறுகிறான்.பிராம்மண குடும்பத்தில் பிறக்காது போனாலும், "பிராம்மணத்துவம் பெற்றே தீருவேன்" என்று, பல வருடங்கள் ஓங்கார ஜபம் செய்து, காயத்ரி மந்திரத்தை ஆகர்ஷிக்கும் சக்தி பெற்ற பின், க்ஷத்ரியனாக பிறந்த இவர், விஸ்வாமித்ர "ரிஷி" என்று ஆனார்.
ரிஷியாக உள்ளவன், "எங்கும் பாண்டுரங்கனான ஸ்ரீ கிருஷ்ணரே (நாராயணன்) உள்ளார்" என்று எப்பொழுதும் பகவத் தியானத்திலேயே இருப்பவன், "முனி" என்ற பெயர் பெறுகிறான்.

ரிஷிகளும் மதிக்ககூடியவர்கள் முனிகள்.
ரிஷிகளை முனி என்று சொல்வதில்லை. முனியை ரிஷி என்றும் சொல்லலாம்.
அகத்தியர் முனி, பிரம்மாவின் மானஸ புத்ரன் "நாரத முனி" போன்றவர்கள், ரிஷிகளுக்கும் மேலானவர்கள்.
தன் ஆத்ம ஸ்வரூபத்தை உணர்ந்தவன் "ப்ராம்மணன்" (ப்ரம்மத்தை உபாசிக்கும்) ஆகிறான். ப்ராஹ்மணத்துவம் பெறுகிறான்.
ப்ரஹ்ம-பதத்தால் (வேதத்தால்) குறிப்பிடப்படும் பரமாத்மாவைப் பற்றிய ஞானத்தில்(அறிவில்) ஸித்தி அடையும்போதே ‘ப்ராம்மணன்’ ஆகிறான்.

வெறும் பிறப்பால் பிராம்மண குலத்தில் பிறந்து, உலக ஆசைகளோடு வாழ்பவன் பிறரால் ப்ராம்மணன் என்று மதிப்பு பெற மாட்டான்.

சப்த ப்ரஹ்மமாகிய வேதத்தால் குறிப்பிடப்படும் பரமாத்மாவிலேயே ரமிக்கும் ப்ராம்மண குலத்தில் பிறந்தவர்கள் இன்றும் மதிக்கப்படுகிறார்கள். sandhyavandanam Evening - Yajur - Hear and understand meaning of each sloka 
HARE RAMA HARE KRISHNA - BHAJAN

sandhyavandanam Afternoon - Yajur - Hear and understand meaning of each sloka 
sandhyavandanam Morning - Yajur - Hear and understand meaning of each sloka  
Friday, 17 November 2017

பிராம்மணன் அனைவருக்காகவும் பிரார்த்திக்கிறான்


பிராம்மணன் சந்தியா வந்தனம் செய்வதால்,
தனக்காகவும், மற்ற அனைவருக்காகவும் பிரார்த்திக்கிறான்.


வருடத்தில் ஒரு முறை மாலை போட்டு, ஐயப்ப மலை செல்பவர்கள் உணவு, ஒழுக்கம், இறை வழிபாடு, ஆடை என்று அனைத்திலும் இறை சம்பந்தமாகவே இருப்பதால், ஜாதி பேதம் இல்லாமல், அந்த மாலை போட்ட சமயத்தில், அனைவரையும் "சாமி" என்றும் "ஸ்வாமி" என்றும் மரியாதையுடன் அழைக்கிறோம்.

மற்ற ஜாதியில் பிறந்து இறை வாழ்க்கை வாழ்பவர்கள், மகான் என்றும் சொல்லி அனைவரும் வணங்குகிறோம்.

ப்ராம்மணர்கள் வாழ்நாள் முழுவதுமே இப்படி உணவு கட்டுப்பாடு, ஒழுக்கம், ஆடை, வழிபாடு அனைத்திலும் இறை சம்பந்தமாகவே இருந்ததால், பொதுவாகவே ப்ராம்மணனை எப்பொழுதுமே, "சாமி" என்றனர்.

இன்றைய பிராம்மணன் இந்த மதிப்பை இழக்க காரணம் அவர்களே காரணம் ஆகின்றனர். ஒழுக்கம் இல்லாத, உணவு கட்டுப்பாடு இல்லாத, வழிபாடு இல்லாத வாழ்க்கை வாழும் பிராம்மணன் மதிப்பை இழக்கிறான்.

மற்றவர்கள் தெய்வத்திடம் பிரார்த்தனை செய்ய முடியாமல் போனாலும், பிராம்மணனை மற்றவருக்காகவும் சேர்த்து தினமும் பிரார்த்திக்க வேண்டும் என்று விதிக்கப்படுகிறான்.

இதற்கு சந்தியா வந்தனம் பிராம்மணனின் கடமையாக விதிக்கப்படுகிறது. விதிக்கப்பட்டது என்பதாலேயே, இதை செய்தே ஆக வேண்டும் என்றும் தெரிகிறது.

இன்றைய பிராம்மணன் குடும்பத்தில், பஞ்சாத்ரம் இருக்கிறதா என்பதே கேள்விக்குறியாக உள்ளது. பிராம்மணன் என்ற போர்வையில் வாழ்கிறான்.

சந்தியா வந்தனம் செய்வது பிராம்மணர்களிடையே குறைந்து வருகிறது. அவன் தனக்காகவும், பிறருக்காகவும், குழந்தைகள், பிராம்மண பெண்கள் உள்பட,  அனைவருக்காகவும் செய்ய வேண்டிய இந்த கடமையை முடிந்தவரை செய்ய வேண்டும். கட்டாயம் செய்ய வேண்டும். குறைந்த பட்சம் வருத்தப்படவாவது வேண்டும்.

இதன் அர்த்தத்தை புரிந்து கொள்ளவாவது முயற்சி செய்தால், அதன் அர்த்தம், அதன் நோக்கம், சந்தியா வந்தனம் செய்ய ஆசை தூண்ட வாய்ப்புள்ளது.
சந்தியா வந்தனத்தில், முடிக்கும் போது கூட, பகவானிடம் பிராம்மணன் தனக்காகவும், பிறருக்காகவும் பிரார்த்தனை செய்வது போல வருகிறது.

கடைசியாக சொல்லும் ரக்ஷை என்ற பிரார்த்தனையில்,

"இப்பொழுது எங்களுக்கு சந்ததியுடன் கூடிய சௌபாக்யத்தை அருள வேண்டும்.
கெட்ட கனவின் நிமித்தத்தையும், பலனையும் விலக்கி அருள வேண்டும்.
சூரிய நாராயணா பகவானே! எல்லாப் பாவங்களையும் விலக்கி அருள வேண்டும்.
எது உயர்ந்த நன்மையோ அதை எங்களுக்கு கூட்டிவைத்து அருள வேண்டும்."

அத்யா நோ தேவ ஸவித: ப்ரஜாவத் ஸாவீ: சௌபகம் !
பரா துஷ்வப்னியஹும் ஸூவ !
விச்வானி தேவ ஸவிதுர் துரிதானி பரா ஸூவ !
யத் பத்ரம் தன்ம ஆஸூவ !!

இப்படி தினமும் மற்றவர்களும், தானும் நலமாக இருக்க பிரார்த்திக்க சொல்கிறது.

சுயநலம், அலட்சியம், அர்த்தம் புரிந்து கொள்ள ஆசையின்மை இவையெல்லாம் சேர்ந்து, பிராம்மணன் தனக்கு விதித்த கடமையை செய்யாமல் காலம் கழிக்கிறான்.

முடிந்த வரை பிராம்மணன் சந்தியா வந்தனம் செய்ய முயற்சிக்க வேண்டும். ஆசை பட வேண்டும். பிறருக்காகவும் பிரார்த்ததனை செய்ய கொடுத்த வாய்ப்பை பிராம்மணன் தன் வாழ்க்கையில் தவற விட கூடாது. செய்யாவிட்டால், பிராம்மணனாக பிறவி கிடைத்ததை வீணாக்குகிறான்.

sandhyavandanam Evening - Yajur - Hear and understand meaning of each sloka 

sandhyavandanam Afternoon - Yajur - Hear and understand meaning of each sloka sandhyavandanam Morning - Yajur - Hear and understand meaning of each sloka