Followers

Search Here...

Showing posts with label kerala. Show all posts
Showing posts with label kerala. Show all posts

Wednesday 27 December 2017

மஹா பாரத சமயத்தில், தமிழ்நாடு், கேரளா : Tamilnadu, Kerala.


மஹா பாரத சமயத்தில், தமிழ்நாடு், கேரளா : Tamilnadu, Kerala.

பாண்டிய தேசம், திராவிட தேசம், சோழ தேசம், காஞ்சி தேசம் ஆகிய தேசங்கள், இன்று ஒருசேர தமிழ்நாடு என்று கூறப்படுகிறது.

கேரள (சேர) தேசம், மூஷிக தேசம் ஆகிய தேசங்கள், இன்று ஒருசேர கேரளா என்று கூறப்படுகிறது.

மஹாபாரத போர் நடந்த காலம் ஏறத்தாழ 3127BC.
இதற்கும் 1000 வருடங்களுக்கு முன்பு திருகோவிலூரில் உள்ள த்ரிவிக்ரம பெருமாள் கோவிலில் முதல் 3 ஆழ்வார்கள் திருவந்தாதி பாசுரங்கள் அருளினர். மேலும் திருமழிசை ஆழ்வாரும் மஹாபாரத காலத்துக்கு முன்பே அவதரித்தவர்கள்.


சுமார் 4000BCல் பொய்கை ஆழ்வார் காஞ்சிபுரத்தில் அவதரித்தார்.
பூதத்தாழ்வார் மஹாபாலிபுரத்தில் அவதரித்தார்.
பேயாழ்வார் மயிலையில் அவதரித்தார்.

மூன்று ஆழ்வார்களும், திருகோவிலூரில் உள்ள த்ரிவிக்ரம பெருமாள் கோவிலில் சந்தித்தனர். 3 திருவந்தாதி இயற்றினார்கள்.

மஹாபாரத சமயத்தில், திரௌபதியின் சுயம்வரம் நடந்த போது, பாண்டிய தேச அரசர்கள் கலந்து கொண்டனர்.

யுதிஷ்டிரரின் ராஜசுய யாகத்திற்கு, தம்பி 'சகாதேவன்' தெற்கு தேசம் நோக்கி திக்விஜயம் சென்றார். கேரள அரசர்கள், திராவிடர்கள், பாண்டிய அரசர்கள் சகாதேவனிடம் போரிட்டு தோற்றனர்.
தோற்ற அரசர்கள் யாகத்திற்கு சன்மானங்கள் கொடுத்தனர்.

பாண்டிய தேச அரசர்கள், சேர தேச அரசர்கள் தங்கத்தால் ஆன எண்ணிலடங்கா கோப்பைகளில் சந்தனம் மற்றும் நறுமணமிக்க பல திரவியங்கள் சேர்த்து ராஜசுய யாகத்திற்கு பரிசளித்தனர்.

காஞ்சி, சோழ தேச அரசர்கள் தங்கத்தால் நெய்த பல வித வண்ண ஆச்சர்யமான பட்டு துணிகள், புடவைகள் ராஜசுய யாகத்திற்கு பரிசளித்தனர்.


அனைவரும், யுதிஷ்டிரரின் ராஜசுய யாகத்திலும் கலந்து கொண்டனர்.

ஒரு பகுதி திராவிடர்கள், கௌரவர்கள் பக்கம் நின்று போரிட்டனர்.
ஒரு பகுதி திராவிடர்கள், பாண்டவர்கள் பக்கம் நின்று போரிட்டனர்.

பெரும் பலம் கொண்ட சோழ அரசர்கள் மஹா பாரத போரில் பாண்டவர்கள் பக்கம் நின்று போரிட்டனர்.

பாண்டிய தேசம், திராவிட தேசம், சோழ தேசம் ஆகிய தேசங்கள், பெரும்பாலும் பாண்டவர்கள் பக்கம் நின்று போரிட்டனர்.

திரௌபதிக்கு கௌரவர்களால், நடந்த அவமானம், அவள் செய்த சபதம், இன்று வரை தமிழ்நாட்டில் கொண்டாடப்படுகிறது. திரௌபதிக்கு கோவில் கட்டி வழிபடும் முறை தமிழ்நாட்டில் மட்டுமே.

த்ருஷ்டத்தியும்னன், சிகண்டி, சேகிதானன், திரௌபதியின் 5 புதல்வர்களை பின் தொடர்ந்து சேர தேச படை மற்றும் சோழ தேச படை வீரர்கள் போரிட்டனர்.

இந்த மகாபாரத போரில், அனைத்து வீரர்களுக்கும், உணவு தயாரித்து பெரும் சேவை செய்தனர், சேர தேசத்தவர்கள்.

பாண்டிய அரசர்களுக்கும், பாண்டவர்களுக்கும், ஸ்ரீ கிருஷ்ணருக்கும் ப்ரத்யேகமாக கர்நாடக தேச உடுப்பி அரசன், உணவு தயாரித்து சேவை செய்யும் பாக்கியம் பெற்றான்.

பீமன் தன் படையை கௌரவர்கள் பக்கம் நோக்கி செலுத்தினான். பீமனின் சேனையை தொடர்ந்து திராவிடர்கள், பாண்டிய தேச வீரர்கள், சோழர்கள், கேரள அரசர்கள், கருஷ தேச படை வீரர்கள், காஞ்சி தேச வீரர்கள், மகத தேச வீரர்கள், பாஞ்சால தேச வீரர்கள் கௌரவ படை நோக்கி போரிட சென்றனர்.

பாண்டிய தேச அரசர்கள் தேர் படை செலுத்துவதில் வல்லவர்கள். இதை பீஷ்மர் கண்டு, பாண்டிய தேச அரசர்கள் 'மஹாரதர்கள்" என்று பாராட்டினார்.

பாண்டிய தேச அரசர், துரோணரின் மகன் "அஸ்வத்தாமா"வை எதிர்த்து போரிட்டார். போரில், பாண்டிய தேச அரசன், 'அஸ்வத்தாமா'வினால் கொல்லப்பட்டான்.

மகாபாரத போர் முடிந்து, யுதிஷ்டிரர் அரசாட்சி அமைத்த பின், பாரத நாட்டை ஒரு தேசமாக ஆக்கி, அரசர்கள் யாவரும் சக்கரவர்த்தி யுதிஷ்டிரரின் கீழ் கொண்டு வர, அர்ஜுனன் திராவிட தேசங்களில் படை எடுத்தான். பல அரசர்கள் நட்பு கொண்டனர். எதிர்த்த சில அரசர்கள் போரில் தோற்கடிக்கப்பட்டனர்.

ஸ்ரீ கிருஷ்ணர் அவதாரத்திற்கு பிறகு, பிற் காலத்தில் தமிழ்நாட்டில் வந்த ஆழ்வார்கள், ஸ்ரீ கிருஷ்ணரின் அவதாரங்களை பாசுரங்கள் செய்துள்ளனர்.

ஸ்ரீ கிருஷ்ணர் அவதாரம் செய்த பின், பாரதம் முழுவதும் தெய்வ பக்தி மேலும் பிரகாசம் அடைந்து, பக்தி மார்க்கம் தழைத்தது.