Followers

Search Here...

Showing posts with label madhya pradesh. Show all posts
Showing posts with label madhya pradesh. Show all posts

Sunday 26 November 2017

மஹா பாரத சமயத்தில், மத்யபிரதேச தேசம்: Madhya Pradesh எப்படி இருந்தது? தெரிந்து கொள்வோமே...

மஹா பாரத சமயத்தில், மத்யபிரதேச தேசம்: Madhya Pradesh எப்படி இருந்தது?.


குந்தி தேசம், அவந்தி தேசம், சேடி தேசம், கருஷ தேசம் போன்றவை இந்த மத்யபிரதேச தேசத்தை சேர்ந்தவை.

சேடி தேசம் என்ற தேசம், இன்றைய மத்யபிரதேச தேசத்தின், கிழக்கு திசையில் உள்ள ஒரு பகுதி.

குந்தி தேசம் என்ற தேசம், இன்றைய மத்யபிரதேச தேசத்தின், வடக்கு திசையில் உள்ள ஒரு பகுதி.

கருஷ தேசம் சேடி தேசத்தின் தெற்கில் உள்ள ஒரு பகுதி.

அவந்தி தேசம் என்ற தேசம், இன்றைய மத்யபிரதேச தேசத்தின், மேற்கு திசையில் உள்ள ஒரு பகுதி.

குந்தி, சேடி, கருஷ மற்றும் அவந்தி தேசத்தின் பெரும் பகுதியை "யாதவ" குல அரசர்கள் ஆண்டு வந்தனர்.

குந்தி தேசத்தை 'குந்தி போஜன்' ஆண்டு வந்தார். இவருக்கு வாரிசு இல்லை.

சூரசேனர், குந்தி போஜ அரசனின் சகோதரர்.
வசுதேவன், ப்ரீதா, ஸ்ருதஸ்ரவா, ராஜதி ஆகியோர் சூரசேனரின் பிள்ளைகள்..

சூரசேனர் தன் மகள் 'ப்ரீதா"வை வளர்ப்பு மகளாக கொடுத்தார்.
தன் வளர்ப்பு மகளை "குந்தி தேவி"யாக வளர்த்தார் குந்தி போஜன்.

ப்ரீதா"வை (குந்தி தேவி) உத்திர பிரதேசத்து குரு தேச அரசன் பாண்டுவுக்கு மணம் செய்து கொடுத்தார்.

அவந்தி தேசத்தில் கல்வி கற்க பல தேசத்தில் இருந்து வந்து படித்தனர்.

அவந்தி தேசத்தில் (மத்யபிரதேசம்) உள்ள உஜ்ஜைன் (Ujjain) என்ற ஊருக்கு வந்து, ஸ்ரீ கிருஷ்ணரும், பலராமரும் வந்து படித்தனர்.

மதுராவில் (UP, India) இருந்து அவந்தி தேசம் வந்து கிருஷ்ணரே படித்தார் என்றால், 5000 வருடம் முன்பு வரை, கல்வி எப்படி உயர்ந்து இருந்தது இந்த உஜ்ஜைனில் என்று அனுமானிக்கலாம்.

குஜராத் மாநிலம் போர்பந்தரில் இருந்து வந்த சுதாமா என்ற குசேலன் இதே சமயத்தில் ஸ்ரீ கிருஷ்ணருடன் படிக்கும் பாக்கியத்தை பெற்றார்.
சாந்தீபினி ஆசிரமத்தில் கிருஷ்ணரே படித்தார்.
ஸ்ரீ கிருஷ்ணரின் ஆத்ம நண்பண் சுதாமா என்ற குசேலன் என்ற பெருமை அடைந்தார். 

பாண்டவர்களின் தாய் "குந்தி" தேவியின் சகோதரி "ராஜதி" தேவி, அவந்தி தேச அரசனை மணமுடித்தாள்.

சேடி நாட்டின் அரசனாக "சிசுபாலன்" இருந்தான்.
இவன் தாயார் 'ஸ்ருதஸ்ரவா'வும், குந்தியும் சகோதரிகள்.
இவர்களின் சகோதரன் "வசுதேவன்".
வசுதேவனுக்கும் தேவகிக்கும் சாஷாத் பரப்ப்ரம்மமான "ஸ்ரீ கிருஷ்ணர்" பிறந்தார்.


கருஷ நாட்டின் அரசனாக "தண்டவக்ரன்" இருந்தான்.
இவன் தாயார் 'ஸ்ருததேவா'வும், குந்தியும் சகோதரிகள்.

ஸ்ரீ கிருஷ்ணருக்கு, 'குந்தியும், ஸ்ருதஸ்ரவா'வும் "அத்தை" முறை.

சிசுபாலனுக்கும், தண்டவக்ரனுக்கும், ஸ்ரீ கிருஷ்ணர் மாமன் மகன்.

சிசுபாலனும், தண்டவக்ரனும், பாற்கடலில் இருக்கும் மஹா விஷ்ணுவின் துவார பாலகர்கள். 
இவர்களே மஹா விஷ்ணு, ஸ்ரீ கிருஷ்ணராக அவதாரம் செய்த போது, சிசுபாலன், தண்டவக்ரன் என்று அவதாரம் செய்து, அவர் கையாலேயே முக்தி வேண்டி பிறந்தனர்.
சேடி நாட்டில் பிறந்த "சிசுபாலன்" பிறந்த பொழுது 3 கண், நான்கு கையுடன் விகாரமாக பிறந்தான். இதனால் பயந்து போனாள் அவன் தாயார்.

அப்பொழுது அசரீரி வாக்கு ஒன்று கேட்டது "யார் கை பட்டவுடன் இவன் மூன்றாவது கண்ணும், அதிகம் உள்ள இரண்டு கைகளும் மறையுமோ, அவனே இவன் மரணத்திற்கும் காரணம் ஆவான்".

இதை கேட்டு ஒரு புறம் கவலை கொண்டாலும், தன் குழந்தை சாதாரணமாக ஆக வழி இருப்பதால், அனைவரையும் தொட சொன்னாள்.
ஸ்ரீ கிருஷ்ணர் வந்து தொட்டதும், அதிகமாக இருந்த கண்ணும், கைகளும் மறைந்தன.
அவன் தாயார், ஸ்ரீ கிருஷ்ணர் "எக்காரணம் கொண்டும் சிசுபாலன் மரணத்திற்கு காரணம் ஆக கூடாது" என்று வேண்டினாள்.

ஸ்ரீ கிருஷ்ணர், அசரீரி வாக்கையும் மீறாமல், இவன் தாயாருக்கும் சமாதானமாக "ஒரு மனிதன் சாதாரணமாக ஒருவனை 100 முறை தொடர்ந்து திட்ட வாய்ப்பு இல்லை. எப்பொழுது, உன் மகன் என்னை தொடர்ந்து 100 முறைக்கு மேல் திட்டுவானோ அப்பொழுது மட்டுமே இவன் மரணத்திற்கு நான் காரணம் ஆவேன்" என்று சமாதானம் செய்தார்.

சேடி அரசன் சிசுபாலன், குரு தேச (உத்திர பிரதேச) இளவரசன் துரியோதனனுடனும், மகத தேச (Jamshedpur near Bihar) அரசன் ஜராசந்தனுடனும் நெருங்கிய நட்பு உள்ளவன்.

தான் பிறந்ததில் இருந்தே, தன் மாமன் மகன், 'ஸ்ரீ கிருஷ்ணரை' பகையாக நினைத்தான் சிசுபாலன். இவனுடன் சேர்ந்து இருந்தான் "தண்டவக்ரன்".

பார்க்கும் பொழுது எல்லாம், ஸ்ரீ கிருஷ்ணரை தகாத வார்த்தைகளால் காரணமே இல்லாமல் சிசுபாலன் திட்டுவான்.
சரியாக 100 நெருங்கும் முன், திட்டுவதை நிறுத்தி விட்டு, சென்று விடுவான். ஸ்ரீ கிருஷ்ணரும் கோபப்படாமல்  சிரித்துக்கொள்வார்.

ஒரு சமயம், அசுரன் ஒருவன் தேவர்களையும் அடக்கி, இவர்கள் யாராலும் வெல்ல முடியாதபடி வரம்பெற்று, பூமியில் பிறந்து அட்டகாசம் செய்து வந்தான்.
இவன் ப்ரக்ஜ்யோதிஸம் என்ற தேசத்தில் இருந்து கொண்டு அசுரர் குலத்தை மனித அவதாரம் செய்து பெரும் அட்டகாசம் செய்து வந்தான்.


ப்ரக்ஜ்யோதிஸம் என்ற தேசம் இன்றைய அஸ்ஸாம் (Assam) தேசம்.

ஸ்ரீ கிருஷ்ணரின் உதவியை சொர்க்கத்தில் உள்ள தேவர்கள் வந்து நாட, நரகாசுரனை அழிக்க துவாரகையில் இருந்து ப்ரக்ஜ்யோதிஸம் சென்றார்.
இந்த சமயத்தில், சிசுபாலன், தன் படையுடன் துவாரகை சென்று, துவாரகையில் தீ வைத்து கொளுத்தினான்.


சத்யபாமாவை கொண்டு நரகாசுரனை கொன்று திரும்பிய ஸ்ரீ கிருஷ்ணர், சிசுபாலனின் இந்த குற்றத்தையும் பொறுத்தார்.
நரகாசுரனின் வேண்டுதல் ஏற்று, அவன் இறந்த நாள், அதர்மம் அழிந்து தர்மம் நிலைநாட்ட பட்டதால், தேவர்களும் மகிழ்ந்ததால், அந்த நாள், தீபாவளி என்று இன்று வரை  கொண்டாடப்படுகிறது.

சிசுபாலன், தன் சகோதரியை பாண்டவர்களில் ஒருவரான 'பீமனுக்கு' மணமுடித்தான்.

ராஜசுய யாகம் நடத்த வேண்டுமானால், அனைத்து பிற அரசர்களும் சம்மதிக்க வேண்டும்.
யுதிஷ்டிரர் ராஜசுய யாகம் நடத்த தன் சகோதரர்களை அனைத்து தேசத்திற்கும் அனுப்பினார்.
தம்பி 'சகாதேவன்' அவந்தி தேசம் வந்து போர் புரிந்து வென்றார்.

உறவுமுறையில் உள்ள சிசுபாலன், யுதிஷ்டிரர் நடத்திய ராஜசுய யாகத்தில் கலந்து கொண்டான்.
அங்கு முதல் மரியாதை "ஸ்ரீ கிருஷ்ணருக்கு" கொடுக்க அனைவரும் சம்மதிக்க, யுதிஷ்டிரர் மரியாதை செய்ய ஆரம்பித்த போது, சிசுபாலன் தலைக்கு ஏறிய கோபம் கொண்டான்.

மதி மழுங்கிய நிலையில், சபையில் அனைவரின் முன்னிலையில் ஸ்ரீ கிருஷ்ணரை தகாத வார்த்தையில் திட்ட ஆரம்பித்தான்.

அனைவரும் தடுக்க நினைக்க, ஸ்ரீ கிருஷ்ணர் "அவன் பேசட்டும், என்னை 100 முறை தொடர்ச்சியாக திட்டுகிறானா என்று எண்ணிக்கொண்டு இருக்கிறேன்" என்றார்.
நிதானம் தவறிய சிசுபாலன், 100 முறை திட்டி, 101வது தடவை திட்ட ஆரம்பிக்க, தன் சுதர்சன சக்கரத்தால் அனைவரும் பார்க்க, அவன் கழுத்தை அறுத்து எறிந்தார்.

யாகம் முடிந்து, துவாரகை நோக்கி புறப்பட்டார் ஸ்ரீ கிருஷ்ணர்.
சிசுபாலனை இறந்ததால், கோபத்துடன், தண்டவக்ரன் அவன் சகோதரன் "விதுரதன்" இருவரும், ஸ்ரீ கிருஷ்ணரை துவாரகை செல்லும் வழியில் மறித்து போரிட்டனர்.
ஸ்ரீ கிருஷ்ணர் இருவரையும் தன் கதையால் கொன்றார்.
சிசுபாலன் இறந்த பின், யுதிஷ்டிரர், சேடி தேசத்தின் அரசனாக சிசுபாலனின் புதல்வன் "த்ருஷ்டகேது"வை அரசன் ஆக்கினார்.
த்ருஷ்டகேது "சேடி மற்றும் கருஷ தேசம்" இரண்டையும் ஆண்டு வந்தான்.


பகடை ஆடி சூழ்ச்சி செய்து பாண்டவர்களை 13 ஆண்டுகள் வனவாசம் மற்றும் 1 வருடம் அஞானவாசம் செய்ய வேண்டும் என்று ஒப்பந்தம் செய்து, இவர்கள் சொத்தை, நாட்டை எல்லாம், துரியோதனன் எடுத்துக்கொண்டான்.
பாண்டவர்கள், இந்த வன வாச காலத்தில், சில வருடங்கள் சேடி தேசத்திலும் (Madhya Pradesh) தங்கினார்கள்.

மஹாபாரத போர், நடக்கப்போவது நிச்சயம் என்று அறிந்த, கௌரவர்கள், பல தேச அரசர்களை தன் பக்கம் இழுத்தனர்.

அங்க தேச (வங்காளம் West Bengal) அரசன் கர்ணன், இந்த சமயத்தில், அவந்தி தேசத்தில் படை எடுத்து, அங்கு ஆண்ட அரசர்களை தோற்கடித்தான். 
உடன்படிக்கையின் பெயரில், அவந்தி தேச அரசர்கள், கௌரவர்கள் பக்கம் நின்று போர் புரிந்தனர்.

குந்தி தேச அரசர் 'குந்தி போஜன்' பாண்டவர்கள் பக்கம் நின்று போரிட்டார். 
துரோணரால் குந்தி போஜன் கொல்லப்பட்டார்.

சேடி மற்றும் கருஷ தேசத்தின் அரசன் 'த்ருஷ்டகேது', பாண்டவர்கள் பக்கம் நின்று போர் புரிந்தான்.
'த்ருஷ்டகேது' 14ஆம் நாள் போரில் துரோணரால் கொல்லப்பட்டான்.

சிசுபாலனின் இன்னொரு மகன் "சுகேது"வும் துரோணரால் கொல்லப்பட்டான்.
இவனுக்கு பிறகு சிசுபாலனின் இன்னொரு மகன் "சரபன்" சேடி தேசத்து ஆட்சி புரிந்தான்.

மஹா பாரத போரில், அவந்தி தேச அரசர்கள் யாவரும், அர்ஜுனனின் பானத்தினால் கொல்லப்பட்டனர். 
அரசர்கள் இழந்த அவந்தி தேச போர் வீரர்கள், கடைசி வரை துரியோதனன் பக்கம் நின்று போர் புரிந்தனர்.


மஹா பாரத போர் முடிந்த பின், சக்ரவர்த்தி ஆன யுதிஷ்டிரர், பாரத தேசம் முழுவதும் தன் ஆட்சியில் கட்டுப்பட்டு நடக்க, தன் சகோதரர்களை அனுப்பினார்.
சேடி நாட்டு அரசன் "சரபன்", அர்ஜுனனிடம் போரிட்டு, தோற்றான்.