Followers

Search Here...

Showing posts with label நிதானம். Show all posts
Showing posts with label நிதானம். Show all posts

Thursday 13 April 2017

சத்தியம் பேசுபவர்கள் வாழ்வில் நினைத்தது எல்லாம் நடக்கும். சத்யஸ்ய பரம் நிதானம் - முண்டகோ உபநிஷத்

ஒரு ஸமயம், சோழ அரசன், ராமானுஜ வழியில் வந்த சிஷ்யர்களிடம் தனக்குள் இருந்த சந்தேகத்தை ஒரு கேள்வியாக கேட்டார்.
பொதுவாக,
மனிதன் "தன்னை தெய்வம்" என்று சொல்லிக்கொள்ள பெருமைபடுவார்கள்.


பரந்தாமன் ஸ்ரீநாராயணன், "ஸ்ரீராமராக" அவதாரம் செய்தும், பகவான் "தன்னை மனிதன்" என்று சொல்லிக்கொண்டார்.

தன் அவதாரம் முழுவதும் மனிதனை போன்றே இருந்து, தன் தெய்வ ஆச்சர்யங்களை காட்டாமல் இருந்தார்.
குணத்தினால் மட்டுமே தெய்வ குணங்கள் தெரிந்தன.

இப்படி தன்னை மனிதனை போன்றே காட்டிக்கொண்டு, மனிதன் எப்படி தர்மபடி வாழ வேண்டும்? என்று நமக்கு காட்டினார்.

இப்படி இருக்க, ஜடாயு என்ற பறவைக்கு ப்ரம்ம ஸம்ஸ்காரம் செய்து, தன் ஆணை என்று சொல்லி "பரம் என்ற வைகுண்டம் செல்" என்று அனுப்பி வைத்தார் ஸ்ரீராமர் என்று பார்க்கிறோம்.


இங்கு இவர் "தன்னை நாராயணன் என்று காட்டுகிறார்".

இருந்தாலும், தன்னை மனிதன் என்று சொல்லிக்கொண்டு எந்த ஆச்சர்யங்களும் காட்டாத ஸ்ரீ ராமர் இந்த நிகழ்விலும் மனிதனுக்கு சொல்லும் தர்மம் என்ன ?

சிறுது நேரம், ராமானுஜர் இதற்கு என்ன சொல்லி இருக்கிறார்? என்று ஆலோசனை செய்த சிஷ்யர்கள் இவ்வாறு பதில் கூறினர்.


"சத்யஸ்ய பரம் நிதானம்" என்று முண்டகோ உபநிஷத் சொல்கிறது.
இதற்கு பொருள், "சத்தியத்தில் இருப்பவனுக்கு, பரம் என்ற வைகுண்டமும் கிடைக்கிறது"

ஸ்ரீராமர் சத்தியசீலன். சத்தியத்தை என்றும் மீறாதவர்.
தன் சத்தியத்தை கொண்டே, உபநிஷத் வாக்கின் படி, ஜடாயு என்ற பறவைக்கு பரம் என்ற வைகுண்டம் கிடைக்க செய்தார்.

இதே உபநிஷத் "சத்யம் ஏவ ஜயதே" (வாய்மையே வெல்லும்) என்றும் சொல்கிறது.
ஸ்ரீ ராமர் சத்தியத்தின் பெருமையை தன் சரித்திரத்தில் காட்டுகிறார்.

நாமும் ஸ்ரீ ராமரை போன்று சத்தியத்தில் முழுவதுமாக நிற்க முயற்சி செய்ய வேண்டும்.
நாம் முடிந்தவரை சத்தியத்தில் இருக்கவாவது முயற்சி செய்ய வேண்டும்.
முடிந்த வரை பொய் பேசாமலாவது இருக்க வேண்டும்.
காரணமே இல்லாமல், விளையாட்டாக கூட பொய் பேச கூடாது.
பொய் பேச, பொய் பேச நம் புண்ணியங்கள் பொசுங்கும்.
சத்தியம் பேச,  சத்தியம் பேச புண்ணியங்கள் சேர்ந்து வாழ்வில் நினைத்தது எல்லாம் நடக்கும், வைகுண்டமும் வசப்படும்
என்று ஸ்ரீ ராமரின் வாக்கில் இருந்து அறிய வேண்டும்.

மனிதன் சத்தியத்தில் இருக்க ஆசை பட வேண்டும்.
புண்ணியத்தை சேர்க்க வேண்டும்.
இதையே ஸ்ரீ ராமர் காட்டுகிறார்.
இவ்வாறு சொன்ன பதிலை கேட்டு ஆனந்தப்பட்டார் அரசன்.

சத்யஸ்ய பரமம் நிதானம்

Narrated by DA Joseph.

sandhyavandanam Evening - Yajur - Hear and understand meaning of each sloka

sandhyavandanam Afternoon - Yajur - Hear and understand meaning of each sloka




sandhyavandanam Morning - Yajur - Hear and understand meaning of each sloka