Followers

Search Here...

Showing posts with label Zamorin. Show all posts
Showing posts with label Zamorin. Show all posts

Wednesday 8 March 2017

Goa முதல் கபாலீஸ்வரர் வரை நடந்த 463 வருட வரலாறு - Vasco da gama, Portuguese in INDIA (1498AD to 1961AD)

500 வருடங்கள் முன் நடந்த வரலாறு :  
நம் பாரத கலாச்சாரத்தை கெடுக்க, செல்வங்கள் கொள்ளையடிக்க பட, மதம் மாற்றப்பட, Portuguese, Dutch, France, Britain நாட்டில் இருந்து வந்த கிறிஸ்துவர்களுக்கு, நாம் கொடுத்த காலம் ஓரிரு வருடங்கள் இல்லை. 1498ல் முதல் 1961 வரை (சுமார் 463 வருடங்கள்).
இஸ்லாமிய மத மாற்றம், கோவில் இடிப்பு, ஹிந்துக்கள் கொலை எல்லாம் இந்தியாவில் பெரும்பாலும் தெலுங்கு தேசம் வரை பரவியது.
இன்றும் இஸ்லாமிய பெரும்பான்மை வடக்கில் பெங்கால், ஹைதிராபாத், போன்ற மாநிலங்களில் நாம் காணலாம்.
மத்திய பிரதேசம், உத்திர பிரதேசம் போன்ற மாநிலங்களில் மதம் மாறி 1000 வருடங்களாக இருந்த முஸ்லீம்கள், தனி நாடு வேண்டும் என்று கேட்டு பங்களாதேஷ், பாகிஸ்தான் போன்ற உருவாக்கப்பட்ட தேசங்களில் குடி புகுந்தனர்.
இது நடக்காமல் இருந்து இருந்தால், இன்று, ஒரு ஹிந்து இந்தியாவில் இருந்து இருக்க முடியாது.

அதே சமயம், பாரத தேசத்தை கவனித்தால், கோவா முதல், விசாகப்பட்டினம் வரை கடற் கரை ஓரம் முழுவதும், கிறிஸ்த்துவ மதம் பரவி உள்ளது.

ஒரு பக்கம், இந்தியாவை இஸ்லாமிய மதம் 1000 வருடங்களாக தாக்கி கொண்டு இருக்க, இன்னொரு பக்கம், இந்த கிறிஸ்துவ கூட்டம் உள்ளே நுழைந்து விட்டது.

இந்த இரண்டு மதமும் பெரும் முயற்சி செய்தும், இன்றும் இந்தியாவில் ஹிந்துக்கள் இருக்கிறோம் என்றால், அதற்கு ஒரே காரணம் தான் சொல்ல முடியும்.
மற்ற மதங்கள் மனிதர்களால் காக்கப்படுகிறது. வளர்க்கப்படுகிறது.
ஹிந்து தர்மத்தை தெய்வமே காக்கிறது. வளர்க்கிறது.  

தெய்வம் இந்த சமயத்தில் பாரத தேசத்தில் எத்தனை மகான்களை அவதரிக்க செய்தார் என்று பார்க்கிறோம்.
தானே கிருஷ்ணா சைதன்யராகவும், ஸ்ரீ ராம கிருஷ்ணராகவும் அவதரித்தார்.

சென்னையில் இருக்கும் கபாலீஸ்வரர் கோவில் இடிக்கப்பட்டு, பின் 
விஜயநகர ராஜ்யத்தின் கீழ் இருந்த துலு அரசர்கள் மீண்டும் இப்போது இருக்கும் கபாலீஸ்வரர் கோவிலை 2km கடலை தாண்டி ஊருக்கு உள்ளே, ஆகம விதிப்படி மீண்டும் கட்டினர்.
இந்த கோவிலே இன்று நாம் காணும் கபாலீஸ்வரர் கோவில்.

அந்நிய மதக்காரர்கள், ஹிந்து கோவிலில் உள்ளே நுழைந்தால் என்ன செய்வார்கள் என்பதற்கு கபாலீஸ்வரர் கோவில் சான்று போதாதா?

எப்படி இந்த கிறிஸ்துவ கூட்டம் பாரத தேசத்தில் புகுந்தது?  தெரிந்து கொள்ள வேண்டாமா?
வாஸ்கோட காமா (Vascoda Gama) எப்படிப்பட்டவன் ? தெரிந்து கொள்வோமே 

பொறுமையுடன் படித்தால், வரலாறு கொஞ்சமாவது தெரிந்து கொள்ளலாம்.

இந்தியாவுக்கு செல்கிறேன் என்று செவ் இந்தியர்கள் இருந்த அமெரிக்காவில் 1492ம் (AD or CE) ஆண்டு கால் அடி எடுத்து வைத்தான் கொலம்பஸ் என்ற இத்தாலி நாட்டவன்.

மதத்தை பரப்பும் நோக்கத்திலேயே, இவர்கள் எதையும் செய்வதால், இவர்கள் அமெரிக்காவில் செய்தது மனித படுகொலை.
அடுத்தவன் வீட்டில் சென்று கொலை செய்து, அவன் வீட்டிலேயே உட்கார்ந்து நியாயம் பேச முடியுமா? இவர்களிடம் அந்த நியாயத்தை தெரிந்து கொள்ளலாம்.

இவர்கள் செய்த அட்டகாசத்தின் வினை, இப்போது இந்த அமெரிக்க நாடே இந்த புதிய கலாச்சாரம், புதிய மதத்தால் படர்ந்து இருக்கிறது.
தன் மதமே இப்படி புகுத்தப்பட்டது தான் என்றாலும், இப்பொழுது இஸ்லாம் போன்ற பிற மதங்கள் இங்கு வேரூன்றுவது இவர்களுக்கு பொறுக்கவில்லை. என்ன அநியாயம்?

அடுத்தவன் நோவு தனக்கு வந்தால் தான் தெரியும் என்று சொல்வது இவர்களுக்கு பொருந்துகிறது. ஐரோப்பிய தேசங்கள், அமெரிக்கா போன்ற தேசங்கள் இஸ்லாம் தேசமாக ஆக போவது நிச்சயமே.

இது ஒரு புறம் இருக்க, 8 வருடம் கழித்து, இதே ஸமயத்தில், வியாபாரம், மத மாற்றம் என்ற நோக்கில் 1498ம் (AD or CE) ஆண்டு போர்ச்சுகல் நாட்டிலிருந்து அட்லாண்டிக் கடல் வழியாக, இந்திய பெருங்கடலை கடந்து கோழிக்கோடு (Calicut), கேரளா கடற்கரை ஓரம் படகில் வந்தான் வாஸ்கோட காமா (Vasco da gama).

கடல் ஓர மீனவர்கள், நாகரீகம் கொண்டு விரட்டி அடிக்காமல், இவர்களை உள்ளே வர அனுமதித்தனர்.
மிலேச்ச தேசத்தவன் உள்ளே நுழைந்தால் என்னென்ன கலாச்சார சீரழி செய்வான் என்பதை இந்த வாஸ்கோட காமா கதை சொல்லிவிடும்.

தன் மதத்தை பரப்ப, நம் கலாச்சாரத்தை கெடுக்க இவர்களுக்கு நாம் கொடுத்த காலம் 1498ல் முதல் 1961 வரை (சுமார் 463 வருடங்கள்).

இன்று, இவர்கள் நாட்டை விட்டு போனாலும், இவர்களால் தன் மதத்தை, கலாச்சாரத்தை விட்டு வாழும் ஹிந்துக்கள் (convert) இன்று நாட்டை சீரழிக்கும் காட்சி நடக்கிறது.

வரலாற்றை படிப்பதால், குறைந்த பட்சம், இந்த போர்ச்சுகல் நாட்டினர் என்ன செய்தனர்? நாம் இழந்தது என்ன?  நம் வீட்டில் இருந்து கொண்டு நமக்கு என்ன செய்தனர்? என்பது விளங்கும்.

இந்த கோழிக்கோடு (Calicut) என்ற கேரளா நாட்டை ஆண்டு வந்தான் ஒரு ஹிந்து அரசன்.
சமுத்திர கரை ஓரத்தில் இருந்தவர்கள் பொதுவாக இந்த அரசனை "சமுத்திரி" என்று அழைத்து இருக்கின்றனர். இவர் ஒரு நாயர் குல அரசர்.

தமிழோ, சமஸ்க்ரிதமோ, மலையாளமோ எதுவும் வாயில் நுழையாத போர்ச்சுகல் வியாபாரிகள் "சமுத்திரி" என்று உச்சரிக்க தெரியாமல் "Zamorin" என்று அழைத்தனர்.
திருச்சிரார்பள்ளியை trichy என்றனர்.

தமிழில் பேச முயற்சி செய்த இவர்களால், தமிழும் இவர்களால் கெட்டது.
பலமானவர்கள் என்று சொல்ல தெரியாமல் "பெலமானவர்கள்" என்றனர். தமிழ் மொழிக்கு வந்த கேடு.
இந்த உண்மை ஒரு புறம் இருக்க, வணிகம் செய்ய  கோழிக்கோடு (Calicut) நாட்டில் போர்ச்சுகல் நாட்டினர் நுழைந்து உள்ளனர் என்று கேள்விப்பட்டு, சமுத்திரி அரசன் இவர்களை பார்க்க வந்தார்.
வந்தாரை வாழ வைக்கும் புத்தி இந்தியர்களுக்கே உள்ள குணம். 
இதுவே பல நேரம் நமக்கு இன்னல் தந்துள்ளது.

அரசருக்கு, இவர்கள் வருகை தவறாக தெரியவில்லை. வியாபாரம் செய்ய அனுமதி அளித்தார் அரசன்.
ஏலக்காய், மிளகு, இன்னும் பல இந்திய உணவு தானியங்கள் ஐரோப்பிய தேசம் பார்த்திராத உணவு பொருட்கள்.

இதை போன்ற விலை மதிப்புள்ள, மருத்துவ குணம் உள்ள பொருட்களை இந்தியர்களிடம் வாங்கிக் கொண்டு, துணி, தொப்பி, சக்கரை, தேன் போன்ற பொருட்களை பண்டை மாற்று முறைப்படி தந்தான் வாஸ்கோட காமா.
மதிப்பில்லாத இந்த பொருட்களை ஏற்று கொள்ள மறுத்தார் அரசர்.

அனைத்து வாணிகமும் தங்கம், வெள்ளியிலேயே பொருட்களுக்கு மாற்றும் வழக்கம் இருந்தது.

சமுத்திரி அரசன், போர்ச்சுகல் நாட்டினர் தங்கள் நாட்டு உணவு பொருட்களை எடுத்து கொண்டு தொப்பி, துணி போன்றவை மாற்றப்படுவதை மறுத்தார்.
தங்கம், வெள்ளியாக கொடுத்தால், வாணிகம் தொடரலாம் என்று உத்தரவு இட்டார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பிழைப்புக்கு வந்த நாட்டில்,  வாஸ்கோட காமா கீழ்த்தரமான செயலில் ஈடுபட்டான்.
இவன் செய்த செயல் இவன் எப்பேற்பட்டவன் என்று காட்டுகிறது.
வாஸ்கோட காமா கப்பலில் ஏற்றப்பட்ட தானிய மூட்டைகளுடன், அங்கிருந்த சில நாயர்களையும், 16 மீனவர்களையும் வலுக்கட்டாயமாக சிறைபிடித்து,  பொருட்களுடன் திருடி கொண்டு தப்பித்து விட்டான்.

இவன் அள்ளிக்கொண்டு போன பொருட்கள் பெரும் லாபத்தை அந்த ஊரின் போர்ச்சுகல் அரசனுக்கு ஈட்டு தந்தது.
மீண்டும் இந்த தானியங்கள் இந்தியாவிலிருந்து கிடைக்க எப்படியாவது ஒரு உடன்படிக்கை ஏற்பட்டாக வேண்டும் என்று போர்ச்சுகல் அரசன் முடிவு செய்தான்.

மீண்டும் வாஸ்கோடகாமாவை அனுப்பினால், இவன் செய்த செயலுக்கு வாணிகமும் தடைபடும், உயிரும் போகும் என்பதால், போர்ச்சுகல் அரசன் "பெட்ரோ காப்ரல்" என்ற ஒருவன் தலைமையில் "எப்படியாவது கோழிக்கோடு (Calicult) சென்று சமுத்திரி அரசனை சமாதானம் செய்து, தொடர்ந்து வாணிகம் செய்ய அனுமதிக்க வைக்க வேண்டும்" என்று கூறி அனுப்பி வைத்தான்.

ஆச்சர்யம், ஹிந்து அரசன் நடந்ததை மறந்து, தொடர்ந்து வாணிகம் செய்து கொள்ள அனுமதித்தான்.
அதர்மம் செய்தவனை இந்த ஹிந்து அரசன் மன்னித்ததன் படு பயங்கர விளைவை அடுத்த 500 வருடங்களுக்கு ஒட்டுமொத்த ஹிந்துக்களுக்கு தந்தது. இதுவே நமக்கு பாடம்.

மீண்டும் வாணிகம் செய்து கொண்டிருந்த இவர்கள், கோழிக்கோடு மட்டுமில்லாது, கொச்சின் (Cochin now Kochi), கண்ணனூர் (Cannanore (now Kannur)) போன்ற ஊர்களிலும் வாணிகம் செய்வதை விரிவு படுத்தினர்.

கேரளா தேசம் இவர்களால் மதம் மாற்றம் செய்யப்பட ஆரம்பித்த காலம் இது.

இந்த நிலையில், கோழிகோட்டில் வாழ்ந்த அரேபிய இஸ்லாம் வணிகர்களுடன், தகராறில் ஈடுபட்டனர்.
ஹிந்துக்களை போல அடித்தாலும், திருடினாலும் அமைதியாக போகக் கூடியவர்கள் அல்ல அரேபிய இஸ்லாம் வணிகர்கள்.
இஸ்லாம் வணிகர்கள், நடந்த கலவரத்தில் 60 போர்ச்சுகல் வணிகர்களை கொலை செய்தனர்.

இந்த சம்பவத்தினால், "பெட்ரோ காப்ரல்", சமுத்திரி அரசன், தங்களை இந்த இஸ்லாமிய கூட்டத்திலிருந்து காப்பாற்றி இருக்க வேண்டும் என்று கூறி, ஆத்திரம் அடைந்து, நாட்டில் பல இடங்களில் குண்டு வைத்தான்.

இப்படி அட்டகாசம் செய்த இந்த போர்ச்சுகல் வணிகன் "பெட்ரோ காப்ரல்" 1501ம் ஆண்டு தன் நாட்டுக்கு திரும்பினான்.

இந்த நிகழ்விலிருந்து கடைசி வரை, போர்ச்சுகல் வணிகர்களுக்கு இதனால் தீராத கோபம் இஸ்லாமியர்கள் மீது கடைசி வரை இருந்தது.

போர்ச்சுகல் நாட்டினர் வாணிகம் தொடர்ந்து கொண்டிருந்த இந்த காலத்தில், விஜயநகர ஹிந்து பேரரசர் "கிருஷ்ணதேவ ராயர்" ஹிந்து தேசங்களான கர்நாடகம், ஆந்திர, தமிழகம் அனைத்தையும் ஒருவனாக இரவு பகலாக காத்துக் கொண்டிருந்தார்.
இவர் சபையில் விகடகவியாக இருந்தவரே "தெனாலி ராமன்".
கிருஷ்ணதேவ ராயரை ஒழிக்க 6 சுல்தான்கள் கடும் முயற்சி செய்து கொண்டிருந்த சவாலான காலம் இது.
* டெல்லியை கைப்பற்றி இருந்த லோதி சுல்தான் "சி்கந்தர் லோதி",
* கர்நாடக நாட்டின் சில பகுதியை கைப்பற்றி இருந்த பீஜாப்பூர் சுல்தான், பிடார் சுல்தான்,
* ஆந்திர நாட்டின் சில பகுதியை கைப்பற்றி இருந்த கோல்கொண்டா சுல்தான், பிரார் சுல்தான்,
* மஹாராஷ்டிரா நாட்டின் சில பகுதியை கைப்பற்றி இருந்த அஹமத்நகர் சுல்தான்.
இந்த சவாலான இஸ்லாமிய எதிர்ப்பை சந்திக்கும் காலத்தில், 1502ம் ஆண்டு, போர்ச்சுகல் வணிகர்கள் இஸ்லாமியர்களை எதிர்க்கிறார்கள் என்பதால், இவர்கள் பழுவேற்க்காடு (pulicat) என்ற தமிழ்நாட்டில் உள்ள ஊரில் வர்த்தக புறக்காவல் நிலையம் (trading outpost) அமைக்க முயற்சித்தபோது எதிர்ப்பு தெரிவிக்காமல் இருந்தது விஜயநகர சாம்ராஜ்யம்.

இதுவும் ஒரு விஷ பாம்பை கொல்ல, இன்னொரு தேளை வளர்த்தது போல தான் ஆனது.
இதுவும் நாம் வரலாறை படிக்கும் போது கற்க வேண்டிய பாடம்.

விஜயநகர அரசின் பாதுகாப்பினால், போர்ச்சுகல்காரர்கள் 1502ல் இருந்து 1560ம் ஆண்டு வரை, சுமார் 58 வருடங்கள் தமிழ்நாட்டில் தன்னை வ்யாபித்துக் கொண்டனர்.

இருந்தாலும், கேரளாவில் உள்ள கோழிக்கோடு மட்டும் போர்ச்சுகல்காரர்களுக்கு காலடி வைக்க முடியாததாகவே இருந்தது.

இதே வருடம், 1502ம் ஆண்டு, போர்ச்சுகல் நாட்டிலிருந்து மீண்டும் "வாஸ்கோட காமா" 15 கப்பலகள் மற்றும் 800 படை வீரர்களுடன் கோழிக்கோடு (calicult, Kerala) ஹிந்து அரசனை தாக்குவதற்கு அனுப்பப் பட்டான்.

மேலும் வாணிகம் மூலம் இந்த இடத்தில் உள்ள பொருட்களை எடுத்துச் செல்ல திட்டமிட்டு அனுப்பப்பட்டான்.

வரும் வழியில், கப்பலில் மெக்காவிற்கு (Mecca) சென்று கொண்டிருந்த அரேபிய இஸ்லாம் வணிகர்களை கண்டான்.
உடனே தன் படைகளை கொண்டு கடலிலேயே தாக்கி கொன்று, அனைவரையும் கடலில் தூக்கி வீசினான்.

ஹிந்து அரசன் இரு முறை இந்த போர்ச்சுகல்காரர்கள் வந்து நாசம் செய்த போதிலும், நல்ல குணத்தின் காரணமாக மீண்டும் சுமூகமாக உடன்படிக்கைக்கு சம்மதித்தான்.

வாஸ்கோட காமா கோழிகோட்டில் இருக்கும் அனைத்து அரேபிய இஸ்லாமியர்களையும் வெளியேற்ற சொன்னான்.
இதற்கு சமுத்திரி அரசன் "சம்மதிக்க முடியாது" என்று தீர்மானமாக சொல்லி விட்டான்.

இதனால் ஆத்திரம் அடைந்த வாஸ்கோட காமா பல இடங்களில் அணுகுண்டு வீசி ஊரை சேதப்படுத்தினான்.
பலர் பலி ஆனார்கள்.
இப்படி அட்டகாசம் மீண்டும் செய்து விட்டு, தன் நாட்டிற்கு 1503ம் ஆண்டு திரும்பினான்.
இவனை மீண்டும் அனுப்பினால் இனி வியாபாரேமே செய்ய முடியாது என்று போர்ச்சுகல் அரசன் முடிவு செய்தான்.
அடுத்த 20 வருடங்களை வாஸ்கோட காமா தனிமையில் கழித்தான்.

1505ம் ஆண்டு, பிரான்சிஸ்கோ அல்மெய்தா என்பவன் 22 கப்பளுடன், 1500 போர் வீரர்களுடன் போர்ச்சுகல் நாட்டிலிருந்து கிளம்பி, கோழிக்கோடு இறங்கினால் போர் அபாயாயம் உள்ளதால், கோவா "Goa" கடல் ஓரம் இறங்கினான்.

வந்து 7 வருடங்கள் ஆன நிலையில், போர்ச்சுகல்காரர்களின் மத சம்பந்தமான வேலைகள் ஆரம்பமானது.
Goaவில் இவன் "Anjediva கோட்டை" கட்டி முடித்தான்.
அதே வருடத்தில் கேரளாவில் உள்ள கண்ணனூரில் இவன் "செயின்ட் St.Angelo" என்ற ஒரு கோட்டையை கட்டினான்.

இவர்கள் கேரள நாட்டில் மேலும் படர்வதை திறம்பட எதிர்த்தான், கோழிக்கோடு சமுத்திரி அரசன்.

இந்த நிலையில், 1508ம் ஆண்டு பிரான்சிஸ்கோ Goaவிலிருந்து குஜராத் வரை தன் வணிகத்தை விஸ்தாரப்படுத்த ஆசைப்பட்டு, குஜராத்தில் இருந்த இஸ்லாமிய சுல்தானை எதிர்த்து போரிட்டு உயிர் இழந்தான்.

1509ம் ஆண்டு "அபோன்சா" (Afonsa) என்பவனை  போர்ச்சுகல் அரசன் அனுப்பினான்.
சமுத்திரி அரசனை இவர்களால் சமாளிக்க முடியாமல் இவர்களின் வாணிகம், தமிழகம் பக்கமும், கோவா பக்கமும் திரும்பியது.

1510ம் ஆண்டு, "அபோன்சா" (Afonsa), விஜயநகர தேசத்தின் "திம்மய்யா" என்ற ஹிந்துவின் துணை கொண்டு, கர்நாடகா தேசத்தின் பீஜாப்பூர் சுல்தான் "யூசுப் அடில் ஷா"வை கொன்றனர்.
இது மிக பெரிய வெற்றியாக கருதப்பட்டது.
விஜயநகர அரசின் மதிப்பை பெற்றனர் உள்ளே புகுந்த போர்ச்சுகல் நாட்டினர்.

இப்படி மதிப்பை பெற்றுக் கொண்ட போர்ச்சுகல் நாட்டினர் தைரியமாக தங்கள் மத வேலைகளை தமிழகத்தில் செயலாக்கினர்.

இதுவும் நாம் புரிந்துகொள்ள வேண்டிய ஒரு பாடமே. திருடன் திருடனே.
1516ம் ஆண்டு, தமிழகத்தில் இவர்களின் மத வேலைகள் ஆரம்பித்தது. இன்றும் கோவில் நகரமாக இருக்கும் மயிலாப்பூரில் "luz church" இந்த காலத்தில் தான் கட்டினார்கள்.

2 ஆண்டுகளில், 1518ம் ஆண்டு மேலும் "st. Thomas fort" கேரளாவில் உள்ள கொல்லம் நகரில் கட்டினார்கள்.

இதனை தொடர்ந்து, 4 வருடங்கள் கழித்து, மயிலாப்பூரில் கடற்கரையில் இருந்த கபாலீஸ்வரர் கோவிலை இடித்து, தாமஸ் (Thomas) என்பவரின் சமாதி என்ற பெயரில் "Santhome cathedral" என்ற கட்டிடம் கட்டினார்கள்.
இதற்கு போர்ச்சுகல்காரர்கள் அன்று வைத்த பெயர் "saao tome church".
இது மறுவி santhome ஆனது.
கடல் ஓரத்தில் ஆதியில் இருந்த கபாலீஸ்வரர் கோவில் 7ம் நூற்றாண்டில் பல்லவர்களால் கட்டப்பட்டது என்பது வரலாறு.

திருஞான சம்பந்தர் பாடிய "பூம்பாவை" பதிகத்தில் அவர் பாடிய 6வது பாடலில் "கபாலீஸ்வரர் கடல் ஓரத்தில் இருந்ததை" சரியாக குறிப்பிடுகிறார்.
இதேபோல்
அருணகிரிநாதரின் 697வது பாட்டிலும் இது அறியப்படுகிறது.

திருச்செந்தூர் முருகன் போன்று, தந்தைக்கும் கடற்கரை ஓரம் கோவில் இருந்ததை ஹிந்துக்கள் இழந்தது சோகமே !
ஞான சம்பந்தர் பாடலில்
"மடலார்ந்த தெங்கின் மயிலையார் மாசிக்
கடலாட்டுக் கண்டான் கபாலீச் சரம் அமர்ந்தான்  
அடல்ஆனே றூரும் அடிகளடி பரவி நடமாடல் காணாதே போதியோ பூம்பாவாய்" என்று பாடுகிறார்.
அருணகிரிநாதரின் பாடலில் 
"கடலக்கரை திரையருகே சூழ் மயிலைப் பதி உறைவோனே" என்று பாடுகிறார்.

கோவிலை இடித்து, கலாச்சார சீரழிவு செய்வது என்பது இந்த வெளி மதங்கள் லட்சியம்.
இது இவர்கள் தவறில்லை.
ஆனால், இப்படி நடந்ததற்கு காரணம், ஆரம்பத்திலேயே இவர்கள் அதர்மம் செய்யும் போது ஹிந்துக்கள் மன்னித்ததே !!

விஜயநகர ராஜ்யத்தின் கீழ் இருந்த துலு அரசர்கள் மீண்டும் இப்போது இருக்கும் கபாலீஸ்வரர் கோவிலை 2km கடலை தாண்டி ஊருக்கு உள்ளே, ஆகம விதிப்படி மீண்டும் கட்டினர்.
இந்த கோவிலே இன்று நாம் காணும் கபாலீஸ்வரர் கோவில்.

ஆச்சர்யம் என்னவெனில், கோழிக்கோடு (Calicut) சமுத்திரி அரசன், போர்ச்சுகல் நாட்டினர் பல முறை தவறு செய்தும் வாணிகம் செய்ய அனுமதித்தது போல, விஜயநகர அரசும், சுல்தான்களை எதிர்க்க இந்த போர்ச்சுகல் படை உதவுவதை கருத்தில் கொண்டு, வந்த ஊரில் கலாச்சார சீரழிவு செய்தவனை மன்னித்து, அவர்கள் கட்டிய கட்டிடத்தை இடிக்காமல் விட்டனர்.

இன்று வரை பிற மத த்வேஷம் காட்டாமல் ஹிந்துக்கள் இருக்கின்றனர். போர்ச்சுகல் நாட்டினர் கட்டிய "saao tom church" இன்றும் கடல் கரையில் உள்ளது.
இந்த இரக்கமே, ஹிந்துக்களுக்கு இன்று வரை நல்ல குணமாகவும், பல சமயம் தன் கலாச்சார சீரழிவுக்கும் காரணமாகி இருக்கிறது.
இதுவும் நாம் இதிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்.

இப்படியே இந்திய கடல் ஓரங்களை பலமாக பிடித்து கொண்டிருந்த சமயத்தில், இந்த போர்ச்சுகல் அரசன் மீண்டும் 1524ம் ஆண்டு, ஒதுக்கப்பட்டு இருந்த "வாஸ்கோட காமா"வை மீண்டும் இந்தியாவுக்கு அனுப்பினான்.

1526ம் ஆண்டு, கோவாவில் (Goa) இருந்து குஜராத் பக்கம் போக முடியாததால், அருகில் இருந்த மங்களூர் (Mangalore), உடுப்பி (Udupi) போன்ற தேசங்களை போர்ச்சுகல் நாட்டினர் கைப்பற்றினர்.

1530ம் ஆண்டு, கேரள தேசத்தை விட இவர்கள் பலம் கோவாவில் (Goa) அதிகம் இருந்ததால், தன் தலைநகரமாக "Goa"வை மாற்றினர்.
1530ம் ஆண்டு முதல் 1961ம் ஆண்டு வரை (431 வருடங்கள்) இவர்கள் இந்த நகரத்தை தன் வசத்தில் வைத்து இருந்தனர்.

இன்று கூட Goa என்றதும் இந்த ஊரை பற்றி ஹிந்துக்களுக்கு ஒரு கீழ் தரமான எண்ணமே உருவாகிறது. 
இதுவே இவர்கள் எப்படிப்பட்ட கலாச்சாரம் கொண்டிருந்தனர் என்பதற்கு சான்று.

1531ம் ஆண்டு, மேலும் கோவா (Goa) அருகில் இருந்த பம்பாய் (Mumbai), டையூ (Diu), டாமன் (Daman) போன்ற நகரங்களையும், குஜராத் சுல்தானிடம் இருந்து கைப்பற்றினர்.

இந்தியாவில் இருந்து எடுத்து சென்ற, பொருட்களை கொண்டு, போர்ச்சுகல் நாடு, அனைத்து ஐரோப்பிய நாடுகளையும், பல வருடங்கள் தன்னை நம்பி வாழ வைத்தது.
இந்த காரணத்தினாலேயே, சுமார் 100 வருடம் கழித்து பிரிட்டிஷ் ராணி "எலிசபெத்", ஜான் கம்பெனி (John Company) என்ற கப்பல் வியாபாரம் செய்யும் கம்பெனியை அழைத்து இந்தியாவுக்கு சென்று இந்த தானிய உணவுகளை நேரடியாக வாங்க அனுமதி தந்தாள்.

இப்படி 1601ம் ஆண்டு இந்தியாவிற்கு வந்தவர்கள் தான் "பிரிட்டிஷ் ஈஸ்ட் இந்திய கம்பெனி" (British East India Company) என்ற "ஜான் கம்பெனி"

இந்த இரு நாட்டினரும் (British, Portuguese) சேர்ந்து, இந்திய கலாச்சாரத்தை அழிக்கவும், தன் மதத்தை புகுத்தவும், ஆதரவு செய்யாத ஹிந்துக்களை எதிர்த்தும், வ.வு,சி முதல் காந்தி வரை ஜெயிலில் தள்ளியும், செல்வத்தையும் தன் நாட்டிற்கு எடுத்துச் சென்றும் 1601ம் முதல் 1947ம் ஆண்டு வரை (சுமார் 347 வருடங்கள்) இந்திய கலாச்சார அழிவில் சேர்ந்து ஈடுபட்டனர்.

1612ம் ஆண்டு, "பிரிட்டிஷ் ஈஸ்ட் இந்திய கம்பெனி" தன் எதிரியான போர்ச்சுகல் நாட்டு வணிகர்களுடன் போர் செய்து, குஜராத் தேசத்தில் உள்ள சூரத் (Surat) நகரை முதலில் கைப்பற்றியது.

போர்ச்சுகல் நாட்டு வணிகர்களை சமாளிக்க, அப்போதைய முகலாய மன்னன் "ஜஹாங்கிர்" (Jahangir) உதவியை சாதுர்யமாக பெற்றனர்.

பெருங்குடிகாரனான "ஜஹாங்கிர்" இவர்கள் கொடுத்த மது பானத்தில் மயங்கினான். இவன் மனைவி "நூர்ஜஹான்" (Noor Jahan) நாட்டை இவன் பெயரில் நிர்வாகித்தாள்.

இப்படி ராஜ தந்திரம் செய்து போர்ச்சுகல் நாட்டினர் தன்னை எதிர்க்க விடாமல் தடுத்தனர்.

1619ம் ஆண்டு, சூரத் (Surat) நகரில், பிரிட்டிஷ் காரர்கள் இப்போது இவர்களின் "எல்லைப்புற காவல் நிலையத்தை" அமைத்தனர்.

முகலாயர்கள் உதவியுடன் பிரிட்டிஷ்காரர்கள் பெங்கால் தேசத்தை (Bengal) கைப்பற்றினர் சில வருடங்களில்.

இன்னும் ஒரு படி மேல் போய், பிரிட்டிஷ் அரசன் "சார்லஸ் II" (Charles II), போர்ச்சுகல் நாட்டின் இளவரசி "catherine" என்பவளை மணந்து, வரதக்ஷனையாக (dowry) பம்பாய் சுற்றி கைப்பற்றிய 7 இடங்களை வாங்கி கொண்டான்.

இந்த இடங்களை, வாடகைக்கு "பிரிட்டிஷ் ஈஸ்ட் இந்திய கம்பெனி" கொடுத்தான் பிரிட்டிஷ் அரசன் "சார்லஸ் II" (Charles II).

இதனால் "பிரிட்டிஷ் ஈஸ்ட் இந்திய கம்பெனி"யின் பலம் எளிதாக கிழக்கு இந்தியா, மேற்கு இந்தியாவிலும் வேகமாக பரவியது.

இதுவும் நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடமே. எதிரியான போர்ச்சுகல் நாட்டை தந்திரமாக தன் வழிக்கு கொண்டு வந்து பின் அவர்களையே தன் வழிக்கு கொண்டு வந்தனர் பிரிட்டிஷ்காரர்கள்.

இந்த இரு நாடும் சேர்ந்து கொண்ட பின், முதலில் முகலாயர்களை மராத்திய, விஜயநகர ஹிந்துக்களின் துணை கொண்டு முடிவுக்கு கொண்டு வந்தனர்.

இதற்கு பின், ஹிந்துக்களையும் அடக்க 1857ம் ஆண்டிலிருந்து பல வித முயற்சி செய்தனர்.

இந்த 100 வருட காலங்களில் பல வித முயற்சி செய்து, 2 உலக போரை ஹிட்லரின் காரணமாக சந்தித்து, பல வித காரணங்களின் காரணமாக, இறுதியில் நாட்டை விட்டு வெளியேறினர்.

Goaவில் அப்பொழுதும் அமர்ந்து கொண்டு நாட்டை விட்டு போக மறுத்த போர்ச்சுகல் படையை, இந்திய சுதந்திர நாட்டின் (Independent INDIA) ராணுவம் எளிதாக தோற்கடித்து, 1961ம் ஆண்டு நாட்டை விட்டு போர்ச்சுகல் நாட்டினரை இறுதியாக துரத்தியது.

இவர்கள் சென்றாலும், Goa என்ற நகரம் கலாச்சார சீரழிவில் இருந்து இன்னும் விடுபடவில்லை.
இந்த நகரை பற்றிய எண்ணமும் தவறாகவே உள்ளது.
மிலேச்சனை உள்ளே விட்டால், கோவில் நகரம் கூட குடிகார ஊராகும் என்பதற்கு இந்த நகரமே உதாரணம்.

அமெரிக்க நாடு, ஒரு புது மதம் நுழைந்ததனால், அங்கு இருந்த மக்களை அகற்றி, தன் மதத்தை எளிதாக நிலை நிறுத்தி கொண்டது.
அங்கு இருந்த செவ்விந்தியராகள் (Red Indians) என்ன ஆனார்கள் என்று தெரியவில்லை, அவரகள் கலாச்சாரம் என்ன என்றும் தெரியவில்லை.

ஆச்சர்யம் என்னவென்றால், இந்தியாவில் 1300 வருடங்களில், நான்கு புது மதங்கள் புகுந்து  (இந்தியாவிலிருந்தே 2, மற்ற நாட்டிலிருந்து 2) முடிந்த அளவு அட்டகாசம் செய்தும், இன்றும் ஸ்ரீனிவாசன், ராதா, சிவா, ராமன் கிருஷ்ணன், கார்த்திக், அஜய், விஜய் என்ற பெயர் நிலைத்து இருப்பதே !

ஹிந்து கலாச்சாரத்தை 1300 வருடங்கள் நம் குடும்பத்து பாட்டனார்கள் தான் நமக்கு காப்பாற்றி தந்துள்ளனர் என்பதை இதில் இருந்து நாம் மறக்கக்கூடாது.

இனி அடுத்த தலைமுறைக்கு இந்த கலாச்சாரத்தை இன்னும் மெருகேற்றி காத்தக் கொடுப்பதே, நம் ஹிந்துக்களின் கடமை.

இதற்கு ஹிந்துக்களாகிய நாம் முதலில்  வரலாற்றையும், இது ஏன்? இது எதற்கு? என்ற கலாச்சார மற்றும் தெய்வ சம்பந்தமான கேள்விகளை சரியான ஆன்மீக அறிவுள்ள பெரியோர்களிடம் கேட்டும் தெரிந்து கொள்ள வேண்டும்.

நம் கலாச்சாரத்தின் அறிவை நாம் விரிவடைய செய்து கொள்ள ஆரம்பிக்கும் போது தான், நாம் நம் தலைமுறைக்கு வழி காட்ட முடியும்.
வரலாற்றை படிக்கும் போது, நாம் செய்த தவறு ஒன்றே ஒன்று தான்.
"தவறு செய்தவனை, கலாச்சார சீரழிவு செய்தவனை, மீண்டும் மீண்டும் மன்னித்தது தான்".

மிகவும் நல்லவர்களாக இருந்து இருக்கிறோம்.
அதனாலேயே ஹிந்துக்களின் பல உயிர்கள் வீழ நாமே காரணம் ஆனோம் என்பதே நம் வரலாறு நமக்கு சொல்லும் நீதி.

sandhyavandanam Evening - Yajur - Hear and understand meaning of each sloka

sandhyavandanam Afternoon - Yajur - Hear and understand meaning of each sloka 

sandhyavandanam Morning - Yajur - Hear and understand meaning of each sloka