Followers

Search Here...

Showing posts with label ஆயுளும். Show all posts
Showing posts with label ஆயுளும். Show all posts

Friday 17 November 2017

பிரம்மாவின் ஆயுளும், மனித ஆயுளும்

காலத்தை வைத்து ஒரு பார்வை:

பிரம்மாவினால், படைக்கப்பட்ட 'வைவஸ்வதன்' 7வது மனு அரசராக, மனித சமுதாயம் வாழ தர்மங்களை சொல்கிறார்.
மனு தர்மம் என்பது இன்றும் பிரஸித்தம்.



இந்த சமஸ்க்ரித சொல்லான 'மனு'வை தமிழர்கள் "மனிதன்" என்கின்றனர். இதில் இருந்தே சமஸ்க்ரித மொழியில் இருந்து தமிழ் உருவாகி உள்ளது என்று தெரிகிறது.
வழக்கம் போல, மற்றவர்களிடம் திருடியே உருவாக்கப்பட்ட கிறிஸ்தவர்களின் ஆங்கிலேயே மொழி "Man" என்று பச்சையாக  பயன்படுத்துகிறது.

ப்ரம்மா, உலகை படைத்த பின், தன்னுடைய ஒவ்வொரு நாளும், இது போன்று 14 மனு அரசர்களை உருவாக்கி, மனித குலத்தை ஆள செய்கிறார்.

இன்றைய பொழுதில் ப்ரம்மாவிற்கு 50 வயது முடிந்து, தன் 51வது வயதின் முதல் நாளில் இருக்கிறார்.

இந்த ஒரு நாளில், 14 மனு அரசர்கள் வரிசையில், ஸ்வாயம்பு என்ற முதல் மனுவில் ஆரம்பித்து, இதுவரை 6 மனு அரசர்கள், தங்கள் ஆட்சியில் ஒவ்வொருவரும் 71 சதுர் யூகங்களை ஆண்டு முடித்து விட்டனர்.



இப்பொழுது பிரம்மாவின் படைப்பான "வைவஸ்வதன்" என்பவர், 7வது மனு அரசனாக 71 சதுர் யூகங்களை ஆண்டு வருகிறார்.
இவர் ஏற்கனவே 27 சதுர் யூகங்களை ஆண்டு முடித்து விட்டார்.

இப்பொழுது 28வது சதுர் யூகத்தை ஆண்டு கொண்டிருக்கிறார். இதில் 3 யுகங்கள் முடிந்து, நாம் கலி யுகத்தில் இருக்கிறோம். கலியுகம்  ஆங்கிலேய calendar படி 3102BCல் ஆரம்பிக்கிறது.

நாம் எறும்பை பார்த்து "ஒரு நாள் வாழும், அற்ப வாழ்க்கை கொண்ட ஜீவன்" சொல்வது போல, ஒரு மனு அரசரின் காலத்தை கணக்கிட்டு பார்க்கும் போதே, மனு அரசரின் பார்வையில், நம் 100 வயது கால பரிபூரண வாழ்வை பார்த்தாலும் கூட, நம்மை பார்த்து, "அற்ப ஜீவன்கள்" என்று தோன்றலாம்.

எறும்பு கூட்டம் சேர்ந்து கொண்டு கூச்சல் போட்டாலும், அந்த ஒரு நாள் வாழும் கூட்டத்தை மதிக்காமல் ஒரு மனிதன் தன் வேலையை செய்வது போல, நாம் போடும் கூச்சலை, இந்த எறும்பு போடும் கூச்சல் போல மதிக்காமல் இருக்க வாய்ப்பு உள்ளது.

காலத்தை வைத்து பார்க்கும் போது, ஒரு மனுவுக்கே இப்படி தோன்ற வாய்ப்பு இருக்கும் என்றால், இப்படி 14 மனு அரசர்கள் ஆண்ட பின், பிரம்மாவுக்கு ஒரு பகல் மட்டும் முடிகிறது.

இப்போது உள்ள பிரம்மா தன் 100 வயதில் 50 வயது முடித்து இருக்கிறார். பிரம்மாவுக்கு, மனு அரசர்களின் காலமே "அற்ப வாழ்க்கை" என்று தோன்ற வாய்ப்பு உள்ளது.
மனிதர்களின் வாழ்வு அவர் பார்வையில் மதிக்கத்தக்கதா என்று கூட சொல்ல இயலாது.



ராவணன், ஹிரண்யகசிபு போன்ற மகா பலசாலிகள், பிரம்மாவின் கவனத்தை தன் பக்கம் திருப்புவதற்கே, கடும் தவங்கள் பல வருடங்கள் இருக்க வேண்டி இருந்தது. ஏன் இவர்கள் கடும் தவம் இருந்தார்கள் என்று நமக்கு இப்பொழுது கொஞ்சம் புரிய வாய்ப்பு உள்ளது.



இப்பொழுது உள்ள பிரம்மாவுக்கு 100 வயது முடிந்த பின், நித்யமாக உள்ள பரவாசுதேவன் "நாராயணன்" மீண்டும் பிரம்மாவை உருவாக்கி உலகை நடத்த ஆணை இடுகிறார்.

ஒரு நாள் பிரம்மாவும் மறைவார் என்பதை பார்த்து, "அற்ப வாழ்க்கை" என்று நிலையான பரவாசுதேவன், பிரம்மாவை பார்த்து சொல்ல கூட வாய்ப்பு உள்ளது.

பிரம்மாவை பார்ப்பதற்கே, ராவணன், ஹிரண்யகசிபு எத்தனை முயற்சி செய்தார்கள் என்று தெரிகிறது.

பிரம்மாவின் ஆணையில், இப்பொழுது ஆளும் "வைவஸ்வத" மனுவை, நாம் இருக்கும் காலத்திற்குள், ஏதாவது செய்து அவர் கவனத்தை நம் பக்கம் திருப்பி கொண்டு வந்து, அவரை நம் கண் எதிரே காட்சி கொடுக்க வைக்கவே எத்தனை முயற்சி செய்ய வேண்டும்?

காலம் கடந்து இருக்கும் பரவாசுதேவனை, உலகியல் வாழ்க்கை வாழ்ந்து கொண்டு, "எங்கே, கடவுளை காட்டு?" என்கிறான் நாத்தீகன்.

ஊரில் உள்ள கலெக்டரை பார்க்கவே, நாம் எத்தனை முயற்சி செய்து அவர் கவனத்தை திருப்ப வேண்டி இருக்கிறது.

இப்படி இருக்க, நாத்தீகனுக்கு இவன் பாட்டுக்கு கும்மாளம், குடி என்று வாழ்க்கையை நடத்தி விட்டு, "கடவுளை காட்டு" என்பானாம். பரவாசுதேவன் சரி என்று சொல்வதற்குள்ளாகவே, பிரம்மாவுக்கு ஒரு நொடி ஆகி விடுமே?.
பிரம்மாவின் ஒரு நொடி கணக்கு போட்டாலே, ஒரு யுகமே முடிந்து விடுமே?

நாம் கூப்பிட்டு அவர் சரி என்று வந்தால், அவர் கணக்கு படி, அவர் வருவதற்குள், நாம் இறந்து, யூகமே முடிந்து விடுமே?

இதையெல்லாம், கருத்தில் கொண்டு தான், மனிதர்களை பார்த்து, பக்தி செய். தர்மத்தில் இரு. பரவாசுதேவனை காண ஆசைப்படு என்று சொல்லி வைத்தார்கள்.

நாம் வைக்கும் அன்பு என்ற பக்தி ஒன்றே, ஒரு ஜென்மத்தில் அவர் இஷ்டப்பட்டு, நமக்கு முன் காட்சி கொடுக்க வைக்கும்.

நாம் இந்த பிறவியில் நாத்தீகனாகவோ, பொய் மதங்களை நம்பி ஏதோ ஒன்றை தெய்வம் என்று வணங்கினாலோ, மனுவை பொறுத்தவரை, பிரம்மாவை பொறுத்தவரை, இவையெல்லாம் ஒன்றும் இல்லாத விஷயம்.

மறு பிறவிக்கோ குறைவே இல்லை. காலமோ எல்லை இல்லாதது.
அவர்களை பொறுத்தவரை, பரவாசுதேவனிடம் பக்தி செய்யும் வரை இந்த மறு பிறவி கடலில் தள்ளிக்கொண்டே இருப்பர்.

எவன் இந்த பக்தி என்ற ஆயுதம் கொண்டு, பரவாசுதேவனின் கவனத்தை திருப்பி அவரின் காட்சியை பெறுகிறானோ, அவன் பரவாசுதேவனோடு ஐக்கியமாகிறான்.

இதை எல்லாம் கருத்தில் கொண்டு தான், "உலகை பற்றி கவலை படாதே.. நீ உன் கடமையை செய். பக்தி செய்" என்று கீதையில் ஸ்ரீ கிருஷ்ணர் சொல்லி இருப்பார் போலும்.