Followers

Search Here...

Showing posts with label பாத்யம். Show all posts
Showing posts with label பாத்யம். Show all posts

Wednesday 13 March 2019

காலையில் எழுந்தவுடன் முதலில் காபி. இது சரியா? தெய்வம் நம்மிடம் எதிர்பார்ப்பது என்ன? தெரிந்து கொள்வோம்..

குளிக்காமல், காலை எழுந்தவுடன் எதுவும் (காபி) சாப்பிட கூடாது.




அப்படியும் காபி குடிக்க நேர்ந்தால், 'ப்ராசன மந்திரம்' சொல்லி தீர்த்தம் பருகி விட்டு, 
பிறகு பத்ம புராணத்தில் உள்ள இந்த ஸ்லோகத்தை சொல்லி விட்டு செய்யலாம்.
ஹிந்துவாக பிறந்த அனைவரும் சொல்ல வேண்டும்.
அர்த்தம் புரிந்து சொன்னால், ஈடுபாடு நமக்கு வரும். அர்த்தத்தை கவனித்து, இந்த ஸ்லோகம் சொல்ல வேண்டும்.
அபவித்ர: பவித்ரோ வா 
ஸர்வ அவஸ்தாம் கதோபி வா |
ய: ஸ்மரேத் புண்டரீகாக்ஷம் 
ஸ பாஹ்ய அப்யந்தர: ஸுசி: ||  
(ஸ்ரீ பத்ம புராணம் 9.80.12)
தூய்மையாக இருக்கின்றானோ (பவித்ர)
தூய்மையாக இல்லையோ (அபவித்ர)
அவன் எத்தகைய நிலையில் இருந்தாலும் (ஸர்வாவஸ்தாம்), தாமரைக்கண்ணன்
பகவான் ஸ்ரீ விஶ்ணுவை
நினைத்த மாத்திரத்திலேயே
ஒருவன் உள்ளும் புறமும்
தூய்மையடைகிறான் (ஸுசி).

இன்றைய "காலத்தில்" சந்தியா வந்தனம் செய்து, அர்க்கியம் கொடுக்கும் ப்ராம்மணர்கள் மிக குறைவே. 

அர்க்கியம் கொடுக்கும் ப்ராம்மணனை விட, கொடுக்காதவர்கள் இன்று அதிகம் ஆகி விட்டனர்.

சந்தியா வந்தனமே செய்யாத பிராம்மணர் கூட்டம் ஜாஸ்தியாகி விட்டது. 
இந்த பிராம்மண கூட்டம், காலை எழுந்தவுடன் "முதலில் காபி சாப்பிடலாமா?" என்று நினைக்கிறானே தவிர, 
'ஸ்நானம் செய்ய வேண்டும்' என்று கூட நினைப்பது இல்லை.
" 'சூர்யஸ்ய மாமன்யுஸ்ச... ஸ்வாஹா' 
என்ற சந்தியா வந்தனத்தில் வரும் மந்திரத்தை சொல்லி 'முதலில் இந்த தீர்த்தம் குடிப்போம்' பிறகு, 
"வேறு எதையாவது குடிப்போமே" 
என்று கூட இந்த ப்ராம்மணர்கள் நினைப்பதில்லை!! 

"காபி குடிப்பதே முதல் காரியம்" என்று ஆகி விட்டார்கள்.
ப்ராம்மணர்கள், ப்ராம்மணர்களாக இல்லையே !!

கடமை தவறிய ப்ராம்மணர்களாக ஆகி விட்டார்களே இவர்கள்.

ஒருத்தனும் சந்தியா வந்தனம் செய்வது இல்லை. 

எனக்கு முன்பே எழுந்து அர்க்கியம் விட்டு, உதய காலத்தில் என்னை தரிசக்க இவர்கள் காத்து இருப்பதில்லையே! 

நான் உதித்தும் தூங்கி கொண்டு இருக்கின்றனரே இந்த ப்ராம்மணர்கள்" 
என்று சூரிய தேவன் ஒரு முறை கோபம் கொண்டார்.

உலகத்தை அழிக்கும் எண்ணத்தில் தன் எல்லையை கொஞ்சம் தாண்டியே வந்து விட்டார். 
பூமி வெப்ப காற்றால் வெந்தது.

ரிஷிகள் சாரங்கபாணி பெருமாளிடம் பிரார்த்திக்க, 
பெருமாள், "திருக்குடந்தையில் சக்கரபாணியாக அவதரித்து, தர்மத்தை மீறி வாழும் மனிதர்களை கண்டு கோபம் கொண்ட சூரிய தேவனை பிறகு சமாதானம் செய்தார்
என்பது நாம் அனைவரும் அறிந்த சரித்திரமே.

ப்ராம்மணர்கள், குறைந்த பட்சம், காபி சாப்பிடும் முன், 'சூர்யஸ்ய மாமன்யுஸ்ச... ஸ்வாஹா' என்று சொல்லி அந்த தீர்த்தையாவது முதலில் குடித்து விட்டு, பிறகு காபியோ மற்ற பானங்களோ குடிக்கலாம். 

ப்ராசன மந்திரம் சொல்லி தீர்த்தம் பருகி விட்டு, பிறகு காபி குடிக்கலாமே!!!




அர்க்கியம் என்றால் என்ன?
கை அலம்ப கொடுக்கப்படும் நீர் "அர்க்கியம்" என்று சொல்வார்கள்.
பாத்யம் என்றால் என்ன?-
கால் அலம்ப கொடுக்கப்படும் நீர் "பாத்யம்" என்று சொல்வார்கள்.

அப உப ஸ்பர்ஸ்ய என்றால் என்ன?
அருகில் (உப) வைக்கப்பட்டுள்ள ஜலத்தை (அப) தொடு (ஸ்பர்ஸ்ய) என்று அர்த்தம். 
இதை சொல்லி, வலது கையினால் ஜலத்தை தொட்டு, கையை துடைத்து கொண்ட பின் தான், வீட்டில் உள்ள ஸ்வாமியை (தெய்வங்களை) தொட வேண்டும்.

ஹிந்துக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சிறு குறிப்புகள் இவை.


sandhyavandanam Evening - Yajur - Hear and understand meaning of each sloka 
Hare Rama, Hare Krishna - Bhajan

sandhyavandanam Afternoon - Yajur - Hear and understand meaning of each sloka 

sandhyavandanam Morning - Yajur - Hear and understand meaning of each sloka