Followers

Search Here...

Showing posts with label கொண்டாடும். Show all posts
Showing posts with label கொண்டாடும். Show all posts

Tuesday 29 January 2019

தெய்வத்தை வசப்படுத்த, நாம் என்ன செய்ய வேண்டும்? கோவிலில் சென்று பிரார்த்தனை செய்தால், எளிதில் பகவான் கருணைக்கு வழி கிடைக்கிறது. ஏன்? தெரிந்து கொள்வோமே...

பகவான் "நாராயணன்", பிரம்மாவை படைத்தார்.
பிரம்மாவின் பிள்ளை, மரீச்சி.
மரீச்சி முனிவரின் பிள்ளை, கஷ்யபர்.
கஷ்யபருக்கு திதி, அதிதி, தனு முதலியவர்கள் மனைவிகள்.


அதிதிக்கு பிறந்தவர்கள், இந்திரன் முதலான தேவர்கள்.
திதிக்கு பிறந்தவர்கள், "ஹிரண்யாக்ஷன், ஹிரண்யகசிபு" போன்ற அசுரர்கள்.

ஹிரண்யகசிபுவின் பிள்ளை பிரகலாதன்.
பிரகலாதன் பிள்ளை விரோசனன்.
விரோசனன் பிள்ளை பலி சக்கரவர்த்தி.
மகாபலி சக்கரவர்த்தியின் பிள்ளை பாணாசுரன்.

அசுரர் குலத்தில் பிறந்தாலும் பலி சக்கரவர்த்தி, சத்யம் தவறாதவன், சொன்ன சொல் தவறாதவன் என்று இருந்தான்.

'ஸ்ரீமந்நாராயணனே பர தெய்வம். படைப்புக்கே மூல காரணம்'
என்று நம் சந்ததியை பின்னோக்கி பார்த்தாலே புரிந்து விடும்.

தேவர்கள் ஸ்ரீமந்நாராயணனை ஆச்ரயித்ததால், தேவர்கள் பக்கமே எப்பொழுதும் இருக்கிறார் பெருமாள்.

ஏன் அசுரர் பக்கம் பெருமாள் இருப்பதில்லை?
அசுரர்கள் ஸ்ரீமந்நாராயணனை ஆச்ரயிக்க மறுத்தனர்.

பெருமாளுக்கு பாகுபாடு கிடையாது.
அசுரர்கள் ஸ்ரீமந்நாராயணனை ஆச்ரயித்ததால், பெருமாள் அவர்கள் பக்கமும் இருக்கிறார்.

அசுர குலத்தில் இருந்தாலும் சரி,
தேவ குலத்தில் இருந்தாலும் சரி,
யாராக இருந்தாலும் சரி,
யார் தன்னை ஆச்ரயிக்கிறார்களோ, பெருமாள் அவர்கள் பக்கம் நிற்கிறார்.
"குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்திலே"
என்று ஒரு வசனம் தமிழில் உண்டு.
இது நம் தெய்வத்தின் நடு நிலைப்பாட்டை காட்டும் சொல்.

ஹிந்துக்கள் சொல்லும் எதுவும் தெய்வ சம்பந்தம் உடையது.
ஹிந்துக்களே உயர்வான சிந்தனை உடைவர்கள்.

தெய்வத்தை தன் வசப்படுத்த, நாம் என்ன செய்ய வேண்டும்?
என்ற கேள்விக்கு பதில் சொல்லும் வசனம் இது.
ஆழ்ந்த கருத்து உள்ள சொல்.
சொந்த ரத்தபந்தம் உள்ள ஒரு உறவினன் தன் வீட்டு குழந்தையை "சீ போ...." என்று திட்டினால், உறவினர் என்று தெரிந்தாலும், அதற்கு மேல் அந்த குழந்தை அந்த உறவினன் பக்கம் போகாது. விலகியே இருக்கும்.


ஒரு வேளை,
அடுத்த வீட்டு அம்மாளுக்கும், நம் வீட்டு அம்மாளுக்கும் சண்டையே இருந்தாலும்,
அந்த வீடு வழியாக போகும் நம் குழந்தையை, அடுத்த வீட்டு அம்மாள் ஆசையோடு அழைத்து கொஞ்சம் பட்சணம் கொடுத்தால், அடுத்த நாளிலிருந்து அவள் வீட்டுக்கே போய் போய் நிற்கும் நம் குழந்தை.
இது குழந்தையின் ஸ்வபாவம்.
யாரிடத்திலும் பகைமை இல்லை குழந்தைக்கு.
யார் தன்னை விரும்புகிறார்களோ, கொண்டாடுகிறார்களோ  அவர்களிடம் தானே சென்று, தன் வருகையாலேயே அவர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தி விடும் சாமர்த்தியம் உள்ளது குழந்தை.
எப்பொழுதும் சிரித்து கொண்டே, கவலையை மறக்க செய்யும் கலை தெரிந்தது குழந்தை.
ஆசையோடு அணைப்பவனை விட்டு பிரியாதது குழந்தை.
ஆசையோடு அழைப்பவன் இதயத்தில் பிடிவாதம் செய்தாவது அமரும் குணம் உடையது குழந்தை.

'குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்திலே' என்று இதனால் தான் சொல்கிறார்கள்.

குழந்தைக்கு தனிப்பட்ட விருப்பு, பிடிக்காத்தனம் கிடையாது.
ஆசையோடு எடுப்பாருக்கு கைபிள்ளையாக இருக்கிறது குழந்தை.

அதே போல, பகவான் ஸ்ரீமந் நாராயணனும் இருக்கிறார்.

அதனால் தான்,
"குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்திலே"
என்று சொல்கிறோம்.

குழந்தையை போல, பெருமாளுக்கும், தனிப்பட்ட விருப்பு, பொறாமை, பிடிக்காத்தனம் கிடையாது.

ஒரு வேளை நீ ஸ்ரீமந்நாராயணனிடம் அன்பு (பக்தி) செய்தாய் என்றால்,
உன் அன்புக்கு ஏற்ற அளவுக்கு சுலபமாக அணுகுகிறார்.

ஸ்ரீமந்நாராயணன் யாரோ!! நான் யாரோ!! என்று ஏனோதானோ என்று இருந்தால், அவரும் அப்படியே இருக்கிறார்.

தன்னிடம் அன்பு செய்யாதவனுக்கு, அவனவன் செய்யும் பாவ புண்ணியங்களுக்கு ஏற்ற பலன்களை இதே ஜென்மத்திலோ, அடுத்த ஜென்மங்களிலோ அனுபவிக்க செய்து, விலகியே நிற்கிறார்.

தன்னிடம் அன்பு செய்யாதவனுக்கு,
  • பிரத்யேக கருணை (special mercy),
  • மோக்ஷம் (escape from rebirth),
  • பகவான் அருகில் இருப்பதை உணரும் ஆனந்தம்

இவை எதுவும் கிடைக்காமல் வாழ வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது.

பகவான் ஏன் எனக்கு தெரியவில்லை?
பகவான் ஏன் என் அனுபவத்தில் இல்லை?
என்று எப்படி கேட்டாலும், பதில் ஒன்றே தான்.
நமக்கு "பக்தி குறைவே" காரணம்.





நம் பக்தி (அன்பு) ஸ்ரீமந்நாராயணனிடத்தில் 1% இருந்தால், பகவான் 1% அணுகிரஹம் செய்கிறார்.

நம் பக்தி 100% இருந்தால், 100% அணுகிரஹம் செய்கிறார், பேசுகிறார், தரிசனம் தருகிறார், மோக்ஷமும் தருகிறார்.

இப்படி பக்தியில் ஆரம்ப நிலையில் இருப்பவன்,
"இந்த காரியம் நடக்குமா?, கவலையாக இருக்கிறதே..."
என்று மனம் கலங்கும் போது, அருகில் அந்த வழியாக சென்று கொண்டிருக்கும் யாரோ ஒருவர், யாரிடமோ "கவலையே படாதீர்கள்" என்று சொல்ல, இவனுக்கு அது தெய்வ வாக்காக தோன்றும். 
தான் பயப்பட வேண்டாம் என்று மனம் சமாதானம் அடைகிறது.

ஆரம்ப நிலையில் உள்ள தன் பக்தனுக்கு, மறைந்து இருந்து பகவான் அணுகிரஹிக்கிறார்.

பகவான் தன்னிடம் உறவாடுகிறார் என்பதை உணறுபவன், மேலும் பகவானிடம் அன்பு செய்ய ஆரம்பிக்கிறான்.

நம்பிக்கையும், ஆசையும் ஸ்ரீமந்நாராயணனிடத்தில் அதிகமாகி 5% உயர்ந்தால், பக்திக்கு ஏற்ப பகவானும் 5% அருகில் வருகிறார். அணுகிரஹம் செய்கிறார்.

"கனவில் பெருமாள் வந்தது போல கண்டேன். கோவிலில் நான் இருப்பது போல கனவு கண்டேன்"
என்று ஒரு படி மேலே போய், சில அனுபவங்களை பெறுகிறான் பக்தன்.
பகவான் இன்னும் ஆசையோடு உறவாடுகிறார்.

நம் பக்தி வளர வளர, ஆத்மாவின் உறவான பகவான் ஸ்ரீமந்நாராயணன், நம்மிடம் உறவு கொண்டு, பக்தியை தானே வளர்க்கிறார்.
பக்தியில் உயர்ந்த துளசிதாஸ், தியாகராஜர் போன்ற மகான்களுக்கு உள்ளிருக்கும் பரமாத்மாவான ஸ்ரீமந்நாராயணன், அவர்கள் ஆசைப்பட்டார்கள் என்பதற்காக அவர்களுக்காக மீண்டும் ராமனாக அவர்கள் கண் எதிரே காட்சி கொடுக்கிறார்.

அவர்கள் ஆசைப்பட்டால், அவர்கள் பக்திக்காக நிரந்தரமாக ஒரு கல்லில், மரத்தில் கூட ஆவேசித்து விடுகிறார் ஸ்ரீமந்நாராயணன்.
கோவிலில் தூண்களில் இருக்கும் பெருமாளை "தெய்வம்" என்று பார்ப்பதில்லை ஹிந்துக்கள்.
"தெய்வத்தின் சிலை" என்றே பார்க்கின்றனர். மரியாதை செய்கின்றனர்.
ஆனால்,
பூரி ஜெகன்னாத் போன்ற கோவிலில் அத்தி கட்டையில் பெரிய முழியுடன் செய்த சிலையாக இருந்தாலும், கர்பக்ரஹத்தில் உள்ள அந்த சிலையை "தெய்வம்" என்றே பார்க்கின்றனர்.
கர்பக்ரஹத்தில் உள்ள இந்த தெய்வசிலை மட்டும் எப்படி 'தெய்வம்' ஆனது?
இதற்கு காரணம், அந்த சிலையை பிரதிஷ்டை செய்தவர்களின் பக்தியே.


ரிஷிகள், மகான்கள் செய்த பக்திக்கு, அவர்கள் ஆசைப்பட்டதற்காக பகவான் அவர்கள் வழிபட ஏதுவாக கல்லில் பிரவேசிக்கிறார்.
பக்தி உள்ளவன் ஆசைப்பட்டால்,
அத்திக்கட்டையிலும் பிரவேசிக்கிறார்,
இதயத்திலும் பிரவேசிக்கிறார்.
எல்லாம் வல்லவனுக்கு இது முடியாதா?

"எல்லாம் வல்ல இறைவன்"
என்று சொல்லி, ஆனால்
அவர் மனிதராக வர முடியாது,
கல்லில் பிரவேசிக்க முடியாது என்று போலி மதங்கள் பிதற்றும்.
இறைவனை குறைத்து மதிப்பீடு செய்யும் போலி மதங்கள் உண்டு.

போலி மதங்கள் இந்தியாவை விட்டு, அழியும் காலம் வெகு தொலைவில் இல்லை.
அறிவாளிகளான பாரத மக்கள் சுய சிந்தனை உடையவர்கள்.
அதன் காரணத்தாலேயே போலி கொள்கையை கொண்ட பௌத்த மதத்தை முதலில் ஆதரித்தாலும், அந்த மதமே இன்று இந்தியாவில் காணாமல் போய் விட்டது.
அது போல வந்தேறி மதங்களை தூக்கி ஏறிவார்கள் பாரத மக்கள்.

கோவிலில் இன்று நடக்கும் ஒழுக்க கேடுகள்,
மக்களின் ஒழுக்கமின்மை,
போலி பக்தி பிரார்த்தனைகள்
இவைகளை கண்டும், காணாதது போல, கற்பக்ரஹத்தில் தெய்வங்கள் தெய்வங்களாகவே இருப்பதற்கு காரணம், அந்த சிலையை பிரதிஷ்டை செய்த ரிஷிகளின், மகான்களின் பிரார்த்தனைக்காகவே.

நம்முடைய 1% பக்திக்கும், 20% பலன், "கோவிலில்" கிடைப்பதற்கு காரணம், அந்த ரிஷிகளே, மகான்களே.

பகவானை பொறுத்தவரை நாம் எத்தனை சதவீதம் பக்தி செய்கிறோமோ, அதே அளவுக்கு பதில் கருணை செய்வார்.
இது அவர் கோட்பாடு. இது அவரின் நடுநிலை.

ஆனால், கோவிலில் மட்டும், ரிஷிகள், மகான்களுக்காக கல்லில் பிரவேசித்த பெருமாள், அந்த ரிஷிகளின் பிரார்த்தனைக்காக, பக்திக்காக, நாம் 1% பக்தி செய்தாலும், அதை விட கருணை செய்கிறார்.
தனியாக வீட்டில் பிரார்த்தனை செய்வதை விட, கோவிலில் சென்று பிரார்த்தனை செய்தால், எளிதில் பகவான் கருணைக்கு வழி கிடைக்கிறது.
இது நம் பக்திக்காக அல்ல. அந்த ரிஷிகளின் பக்திக்காக கிடைத்தது என்று நாம் உணர வேண்டும்.
ஹிந்துக்கள் அனைவரும் ஒரு ரிஷியின் பரம்பரையில் வந்தவர்கள் என்பதை மறக்க கூடாது.
ரிஷியின் பரம்பரை பற்றி சிறிது தெரிந்து கொள்ள Rishi_Gotra  படிக்கவும்.


பகவான் அந்த ரிஷிகள் செய்த 90% பக்திக்கு, அவர்களுக்காக 'எதுவும் செய்ய தயார்' என்று இருக்க, பக்தி இல்லாத நமக்கும் அருள் கிடைக்க செய்து, அதனால் நம் நம்பிக்கையும் உயர்ந்து, பக்தி வளருமே என்று ஆசையில், பகவானை கோவிலில் தன் பக்தியால் நிரந்தரமாக கட்டி போட்டு விட்டனர் மகான்கள்.
கோவிலில் சென்று வழிபடும் போது, நம் பக்தி குறைவாக இருந்தாலும், அந்த கோவிலில் உள்ள பெருமாளை வணங்கிய ரிஷியின், மகானின் பக்தியை நினைத்து, பகவான் ஸ்ரீமந்நாராயணன், நம் பக்தி அளவை விட, அதிகமாக அருள் செய்கிறார்.

பொதுவாக பகவான் நாம் எவ்வளவுக்கு எவ்வளவு அருகில் வருகிறோமோ,
அவ்வளவுக்கு அவ்வளவு அவரும் அருகில் வருகிறார்.
எப்படி ஒரு கண்ணாடி முன் நிற்பவன்,

  • தூர நின்றால் அவன் பிம்பமும் தூர நிற்குமோ,
  • அருகில் வந்தால், பிம்பமும் அருகில் வந்து விடுமோ,

அது போல,
பகவானிடம் பக்தி (அன்பு) குறைவாக இருந்தால், பகவானும் தான் அவன் அருகில் இருப்பதை வெளிக்காட்டாமல் இருக்கிறார்.

பகவானிடம் பக்தி (அன்பு) அதிகமாக இருந்தால், பகவானும் தான் அவன் அருகில் இருப்பதை உணர செய்கிறார்.

பொதுவாக பகவான் தேவர்கள் பக்கமே கருணை செய்கிறார், அசுரர்களை பக்கம் இருப்பதில்லை என்று சொல்வதும், அவரவர்கள் குணத்தை பொறுத்தே..

அசுர குணமும், தேவ குணமும் மனிதர்களுக்கும் உண்டு.

பொதுவாக,
விஷ்ணுவிடம் பக்தி செய்பவன் தேவன்.
விஷ்ணுவிடம் கோபம், ஆத்திரம், பொறாமை இருந்தால், அவன் அசுரன்.
நம் குணத்தை பொறுத்ததே.

விஷ்ணுவிடம் பக்தி செய்யும் மனிதனும், தேவன் தான்.
விஷ்ணுவிடம் துவேஷம் உள்ள மனிதனும் அசுரன் தான்.

திதிக்கு பிறந்தவர்கள், பெரும்பாலும் விஷ்ணுவிடம் துவேஷம் உள்ளவர்களாகவே இருந்ததால், அசுரர்கள்.

அதிதிக்கு பிறந்தவர்கள்,  பெரும்பாலும் விஷ்ணுவிடம் பக்தி உள்ளவர்களாகவே இருந்ததால், தேவர்கள்.

தன்னை கொண்டாடும் தேவர்களுக்கு பகவான் அருள் செய்தார்.
தன்னை துவேஷிப்பவர்களிடம், பகவான் விலகி இருந்தார்.

அதே அசுர குலத்தில் தான், பிரகலாதன் அவதரித்தார்.
அவர் அப்பா ஹிரண்யகசிபு விஷ்ணு துவேஷியாகவே இருந்தான்.

ஹிரண்யகசிபுவை "அசுரன்" என்று சொல்லும் போது, யாருமே "பிரகலாத அசுரன்" என்று சொல்வதில்லை.
பக்த பிரகலாதன் என்றும் பிரகலாதன் ஆழ்வான் என்றே சொல்கிறோம்.
அசுர குலத்தில் பிறந்தாலும், குணத்தால் தேவன் பிரகலாதன்.
பகவான் நாராயணன், பிரகலாதனை அவன் தந்தை மலையில் இருந்து உருட்டினாலும், விஷம் கொடுத்து குடிக்க செய்தாலும் காப்பாற்றினார்.

பெரும்பாலும் விஷ்ணு பக்தி செய்யும் தேவ குலத்தில், இந்திர தேவனுக்கு மகனாக பிறந்தவன் "ஜெயந்தன்".
தேவனுடைய பிள்ளை தேவன் தானே!! என்று நினைத்தால், அவனை "காகாசுரன்" என்று அழைக்கிறோம்.
த்ரேதா யுகத்தில், ஸ்ரீராம அவதாரத்தில், வன வாச சமயத்தில், சீதா பிராட்டி இருப்பதை பார்த்த இந்த தேவன், சீதா பிராட்டியை காக்கை ரூபத்தில் வந்து தொட முயற்சித்தான்.
ஸ்ரீ ராமர், அவன் ஒரு கண்ணை பிடுங்கி தண்டித்தார்.

தேவன் செய்ய கூடிய காரியமா? இது.
தேவ குலத்தில் பிறந்தாலும், இந்திரனுக்கே மகனாக பிறந்தாலும், அசுர குணத்தினால், விஷ்ணு பக்தி இல்லாததால், அசுரன் என்ற பெயரை பெற்றான்.

தேவனுடைய பிள்ளை ஜெயந்தனை "காக அசுரன்" என்று சொல்கிறோம்.
அசுரனுக்கு பிறந்த பிரகலாதனை "பிரகலாத ஆழ்வான்" என்று சொல்கிறோம்.

பகவானுக்கு குலம் முக்கியமில்லை.
தன்னை கண்டு யார் அன்பு செய்கிறார்களோ, அவர்களுக்கு கருணை செய்கிறார்.
தன்னை வெறுப்பவர்களுக்கு அவர்கள் செய்யும் பாவ புண்ணிய செயலுக்கு பலனை கொடுத்து விட்டு, பிரத்யேக கருணை செய்ய வாய்ப்பு இல்லாததால், விலகியே நிற்கிறார்.

அசுர குலத்தில் பிறந்தாலும், தன்னிடம் பக்தி செய்த பிரகலாதனை தன் மடியில் அமர்த்திக்கொண்டார்.

பகவானுக்கு பாகுபாடு இல்லை, அவர் குழந்தை போன்ற ஸ்வபாவம் உடையவர் என்பதாலேயே,
"குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்தில்"
என்று சொல்கிறோம்.

நம் கஷ்டங்களுக்கு காரணம், நம் பக்தி குறைவே காரணம்.

எம்பெருமானை கொண்டாடி, அன்பு செய்தால்,
நம் பாவங்களை களைந்து, இந்த கலியிலும் தீயவர்களோடு நாம் மாட்டிக்கொள்ளாமல், தீய எண்ணங்கள் தோன்றாமல், வாழ்க்கையில் கஷ்டங்கள் நெருங்கி விடாமல், ஸத் சங்கம் கொடுத்து, கடைசி காலம் வரை காப்பாற்றி, வைகுண்டம் திறந்து வைப்பார்.

ஹிந்துக்கள் ஹிந்துக்களாக வாழ்வோம்.
பக்தி செய்வோம்.
கோவிலுக்கு செல்வோம்.
ஹிந்துக்களின் பெருமையை உணர்வோம்.
அனைவரையும் ஹிந்துக்கள் ஆக்குவோம்.
போலிகளை உதறுவோம்.

HARE RAMA HARE KRISHNA - BHAJAN

sandhyavandanam Evening - Yajur - Hear and understand meaning of each sloka 

sandhyavandanam Afternoon - Yajur - Hear and understand meaning of each sloka 




sandhyavandanam Morning - Yajur - Hear and understand meaning of each sloka