Followers

Search Here...

Showing posts with label அதர்மமா. Show all posts
Showing posts with label அதர்மமா. Show all posts

Friday 13 April 2018

இது தர்மமா? அதர்மமா? எளிதாக புரிந்து கொள்ள: சாஸ்திரம் வழி காட்டுகிறது

தர்மம் என்றால் என்ன?
எளிதாக புரிந்து கொள்ள:
1. எந்த ஒரு செயலை நாம் செய்தால், மற்றவர்களுக்கு பாதிக்குமோ, அது அதர்மம்.
2. எந்த ஒரு செயலை நாம் செய்தால், மற்றவர்களுக்கு நன்மை செய்யுமோ, அது தர்மம்.


உதாரணமாக :
ஒருவன் "கணித மேதை ஆக வேண்டும்" என்று படிக்க ஆசை பட்டாலும், ஆசை படாவிட்டாலும், மற்றவர்களுக்கு அதனால், ஒரு பாதிப்பும் இல்லை. ஆக இது தர்மம் என்று சொல்ல அவசியமில்லை.
இது அவரவர் இஷ்டம்.




ஒருவன் "இனி பொய் மட்டுமே பேசுவேன்" என்றான் என்றால், இவனால் பலர் கெட வாய்ப்பு உண்டு. பாதிப்பு உண்டு.
ஆக "பொய் பேசுவது" அதர்மம் என்று அறியலாம்.

ஒருவன் "இனி உண்மை மட்டுமே பேசுவேன்" என்றான் என்றால், இவனால் பலர் நல் வழியில் வர வாய்ப்பு உண்டு.
சமுதாயத்திற்கும் நன்மை உண்டு.
ஆக "உண்மை பேசுவது" தர்மம் என்று அறியலாம்.

ஒருவன் "அதர்மம் செய்பவனிடம் இருந்து தர்மத்தை காக்க, அவனிடம் பொய் கூட பேசுவேன்" என்றான் என்றால், இவனால் நல் வழியில் தர்மத்தில் இருக்கும் ஹிந்துக்கள் காப்பாற்ற வாய்ப்பு உண்டு.
சமுதாயத்திற்கும் நன்மை உண்டு.
ஆக "அதர்மம் செய்பவனிடத்தில் பொய் பேசி தர்மத்தை காப்பது" தர்ம சூக்ஷ்மம் என்று அறியலாம்.



ஒருவன் "நான் மது அருந்துவேன்" என்றான் என்றால், இவனால் பலர் கெடுவதற்கு வாய்ப்பு உண்டு.
குடிப்பவனும் தன் உடலை கெடுத்துக்கொள்கிறான்.
குடிப் பழக்கத்தால் 70 வயது வரை வாழ்ந்திருக்க வேண்டியவன், 50 வயதில் உயிரை விட்டு குடும்பத்தை நடுத்தெருவில் விட்டு விட வாய்ப்பு உண்டு.

குடிக்காதவனை குடிக்க வைத்து, அவன் ஆயுளையும் குறைத்த பாவம் வேறு. ஆக "மது அருந்துவது" அதர்மம் என்று அறியலாம்.

 அதே போல, எந்த ஒரு செயலையும் இது தர்மமா? அதர்மமா? என்று கேட்கும் கேள்விக்கு, நம் ஹிந்து சாஸ்திரம் வழி காட்டுகிறது.

தர்ம சூக்ஷ்ம வழியிலேயே ராமர், அதர்மம் செய்த வாலியை மறைந்து நின்று கொன்றார்.

தர்ம சூக்ஷ்ம வழியிலேயே ஸ்ரீ கிருஷ்ணர் அதர்மம் செய்த அனைவரையும் அவர்கள் வழியிலேயே சென்று, இறுதியில் பாண்டவர்களுக்கு வெற்றியை தேடி தந்தார்.