Followers

Search Here...

Showing posts with label கங்கே. Show all posts
Showing posts with label கங்கே. Show all posts

Monday 25 December 2017

நாம் குளிக்கும் போது கட்டாயம் செய்ய வேண்டியது என்ன? ஹிந்துக்கள் தெரிந்து கொள்ளவேண்டும்

"தினமும் குளிக்கும் போது, 
நமது பாரத பூமியை பசுமையாக்கும், 
நமக்கு உணவாக தானியங்கள் கிடைக்க செய்யும், 
தேவதைகளின் அம்சமான ஒவ்வொரு புண்ணிய நதிகளையும்,
நன்றியுடைய மனிதனும் நினைக்க வேண்டும்" 
என்று சாஸ்திரம் சொல்கிறது.




நாம் குளிக்க வைத்திருக்கும் தண்ணீரும் அந்த புனித நீராக மனதில் தியானித்து, நம் உள்ளும் அந்த பரமாத்மா இருக்கிறார் என்ற த்யானத்துடன், அவருக்கு செய்யும் "அபிஷேகமாக" நினைத்து குளித்தாலும், புண்ணியம் சேரும்.

ஸ்லோகம்:
'கங்கே'-ச 'யமுனே'-சைவ
'கோதாவரி' 'சரஸ்வதி'
'நர்மதே' 'சிந்து' 'காவேரி'
ஜலேஸ்மின் சந்நிதம் குரு

"கங்கா-நதி தேவியே, 
யமுனா-நதி தேவியே, 
கோதாவரி-நதி தேவியே,  
சரஸ்வதி-நதி தேவியே, 
நர்மதா-நதி தேவியே, 
சிந்து-நதி தேவியே, 
காவேரி-நதி தேவியே, 
உங்கள் அணுகிரஹத்தால், நீங்கள் அனைவரும் நான் வைத்திருக்கும் ஜலத்தில் வந்து, உங்கள் சாநித்தயத்தை தாருங்கள்"
என்று பிரார்த்தனை செய்து, குளிக்கலாம்.

ஒவ்வொரு நதியும் தேவதைகளால் உருவானவை. ஒவ்வொரு தேவதையும் ஒரு பலன் தருகிறது.
சரஸ்வதி தேவி, நதியாக உருமாறி உலகில் வந்த போது, அந்த சரஸ்வதி நதியில் ஸ்நானம் செய்பவர்களுக்கு "ஞானம்" உண்டாகும் படி செய்தாள்.
அதேபோல கங்கை, நதியாக உருமாறி உலகில் வந்த போது, அந்த கங்கா நதியில் ஸ்நானம் செய்பவர்களுக்கு "வைராக்கியம்" உண்டாகும் படி செய்தாள்.
கங்கையில் எப்பொழுதும் நீராடும் காசி, கேதார்நாத் போன்ற இடங்களில் இருப்பவர்கள் வைராக்கியம் அதிகம் பெறுகின்றனர்.
அதேபோல யமனின் தங்கை, சூரியனின் புத்ரி யமுனா, நதியாக உருமாறி உலகில் வந்த போது, அந்த யமுனா நதியில் ஸ்நானம் செய்பவர்களுக்கு "பிரேமை (அன்பு)" உண்டாகும் படி செய்தாள்.
அதேபோல காவேரி, நதியாக உருமாறி உலகில் வந்த போது, அந்த காவேரி நதியில் ஸ்நானம் செய்பவர்களுக்கு "அர்ச்ச அவதாரத்தில் பூஜை, அர்ச்ச அவதாரத்தில் பக்தி" உண்டாகும் படி செய்தாள்.




இப்படி ஒவ்வொரு நதிக்கும் ஒரு சாநித்யம் உண்டு என்று சாஸ்திரம் சொல்கிறது.

எளிதான இந்த 7 நதிகளை நினைத்து சொல்லி குளிக்கும் போது, 3 பலன்கள் கிடைக்கிறது.
1. குளித்ததற்கு குளித்தது போலவும் ஆகிறது. உடலில் உள்ள அசுத்தம் போகிறது.
2. புண்ணிய நதியை நாம் வைத்திருக்கும் தண்ணீரில் சாநித்யமாக இருக்க செய்வதால், நம் உள்ளே இருக்கும் கடவுளுக்கு அபிஷேகம் செய்து பூஜித்த பலனும் கிடைக்கிறது. 
மேலும்,
3. ஜீவனாகிய நமக்கு, இந்த தேவதைகளின் ஆசியால், மெய்யான ஞானமும், வைராக்கியமும், ப்ரேமையும், அர்ச்ச அவதாரத்தில் பக்தியும் மேலும் பல அணுகிரஹங்கள் ஏற்படுகிறது. இதனால் மனதில் உள்ள கீழ் தரமான எண்ணங்கள் அழிந்து, இறை ஞானம் உண்டாகிறது.

இனி அனைவரும் இந்த ஸ்லோகத்தை சொல்லி 7 நதிகளை தியானத்தில் கொண்டு வந்து பிராத்தனை செய்து, 3 பலன்களையும் சேர்த்து அடைவோம்.

ஹிந்துவாய் பிறப்பதே புண்ணியம்.