Followers

Search Here...

Showing posts with label போதுமா. Show all posts
Showing posts with label போதுமா. Show all posts

Tuesday 2 October 2018

குடும்ப வாழ்க்கையில் குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டுமா? ஒரு அலசல்...

"ஒரு குழந்தை போதும்அந்த ஒரு குழந்தைக்கு தரமான கல்வி, வசதிகள் செய்து கொடுத்து வாழ்க்கையில் உயர்த்துவோம்"
என்ற எண்ணம் பொதுவாக இன்றைய இந்தியர்களிடம் வந்துள்ளது.


இதற்கு முன் 1970,1980களில் இருந்தவர்கள், "இரண்டு குழந்தை போதும்" என்று எண்ணினார்கள்.

1960களில் அதற்கும் முன் இருந்த காலங்களில் இருந்தவர்கள், :குழந்தைகள் பிறப்பை எண்ணிக்கை அடிப்படையில் தடுக்கவில்லை".
மேலும்,
1970களில் கருத்தடை சாதனங்கள், ஆப்பரேஷன் போன்றவை அன்று இல்லை.
இதனால், பொதுவாக, ஒரு கணவன் மனைவிக்கு "குறைந்தது 5 குழந்தைகள்" இருந்தனர்.

இன்று, 80-90 வயதில் வாழும் இவர்களுக்கு, வாழ ஒரு இடம் உள்ளது. 

5 குழந்தைகளை பெற்ற இவர்கள், தன் 90 வயதில், இரண்டு மூத்த குழந்தைகளை கூட இழந்து இருக்க வாய்ப்பு உண்டு.
மற்ற இரண்டு பேர், வெளிநாட்டில் இருக்கவும் வாய்ப்பு உண்டு.
அல்லது, தன் குடும்ப பொறுப்புகளில் சிக்கி இருக்கவும்  வாய்ப்பு உண்டு.

குறைந்த பட்சம் ஒரு பிள்ளையாவது!! ஆரோக்கியம் உள்ளவனாக, தன் 90 வயது பெற்றோரை வைத்து காப்பாற்ற கூடியவனாக இருப்பான்.
இன்று கூட, சில வீடுகளில் 90 வயது கிழவன்/கிழவி நிம்மதியாக இருப்பதை நாம் பார்த்து இருக்க வாய்ப்பு உண்டு.

"இந்த நிம்மதியை, நம்முடைய வயதான காலத்தில் நாம் அனுபவிக்க போவதில்லை" என்பதையே இதில் கவனிக்க வேண்டும்.
பெரும் அபாயம் நமக்கு முன் காத்துக்கொண்டு இருக்கிறது.




பல குழந்தை பெற்ற இவர்கள், தங்கள் குழந்தைகள் அனைவருக்கும் தரமான கல்வி கொடுக்க இயலாமல் போனாலும், குடும்ப பொறுப்பு ஒருவன் தலையில் மட்டும் ஏறாமல் இருக்க உதவி செய்தனர்.
தம்பியின் கஷ்டத்தில் அண்ணன் கை கொடுப்பதும்,
அண்ணன் கஷ்டத்தில் தம்பி கை கொடுப்பதும்,
தங்கை தம்பியிடம் பாசத்தை பொழிவதும்,
அண்ணன் தங்கைக்கு தான் சேர்த்த பொருளை கொடுத்து சுகமாக வைப்பதும் இன்றுவரை நடந்துள்ளது. 
இனி நடக்கப்போவது இல்லை..

துக்கமும், சுகமும் ஒருவருக்கு ஒருவர் பகிரப்பட்டதால், நோய் இல்லாமல் இருந்தனர். எதிர்கால பயமே இல்லாமல் இருந்தனர்.

பல குழந்தை பெற்று இன்று வயதாகி விட்ட முதியவர்களுக்கு ஒரு மகனோ, மகளோ இருக்கின்றனர்.
இது இன்று வரை நாம் பார்க்க கூடிய காட்சி.
இனி பார்க்க இயலாத காட்சி.

1980-90களில் "இரண்டு குழந்தை போதும்" என்று இருந்தனர் முந்தைய தலைமுறைகள்,

இரு குழந்தைகள் பெற்று 60 வயதை கடந்து நிற்கும் இவர்கள்,
"6 மாதம் ஒரு பையன் வீடு, 6 மாதம் மற்றொரு பையன் வீடு" என்று நாடோடி வாழ்க்கை வாழ்கின்றனர்.
இரண்டும் பெண் குழந்தையாக இருந்தால், "அனாதைகளாக" தனியாக தன் 60 வயதுக்கு மேல் வாழ ஆரம்பிக்கின்றனர்.
இன்று நாம் பார்க்க கூடிய காட்சி !!

இதில் கணவன் இறந்து, வயதான மனைவியின் வாழ்க்கை அந்தோ பரிதாபம்.
அதை விட கொடுமை,
மனைவி இறந்து, 60 வயதுக்கு மேல் கணவன் மட்டும் வாழும்  தனிமை வாழ்க்கை.
பிறந்த 2 இரண்டு குழந்தைகளில் ஒன்று இறந்து, மற்றொருவனும் பணமில்லாமல் கஷ்டப்படும் வாழ்க்கை, அதை விட நரகம்

வயதான காலத்தில் நோய், பார்த்துக்கொள்ள ஆள் இல்லை. இது அதை விட நரகம்.

இவை எல்லாம் இன்று 60 வயதை கடந்து நிற்கும் ஆண்களும், பெண்களும் சந்திக்கும் நிஜங்கள்..

இன்று "ஒரே குழந்தை போதும். அந்த குழந்தைக்கு தரமான கல்வி தருவது ஒன்றே லட்சியம்" என்று வீறுநடை போடும் தலைமுறை, 60 வயதுக்கு மேல் உயிருடன் இருப்பதே தேவையா? என்ற நிலைக்கு நிச்சயம் கொண்டு போகப்போகிறது.

60 வயதுக்கு மேல், நோய் வந்தால், பெற்ற ஒரு மகன்
மொத்த செலவை சமாளித்து, 
பெற்றவர்கள் உடம்பையும் பார்த்துக்கொள்வான் 
என்று எதிர்பார்க்க முடியாது.

தன் கஷ்டங்களை, சுகங்களை தன் உடன்பிறந்த தம்பி தங்கைகளிடம் சொல்லிக்கொள்ள கூட ஆளில்லாமல், பெற்ற ஒரு மகனே, stress, tension என்று முழித்து, நமக்கு முந்தி கொண்டு இறக்கவும் வாய்ப்பு உண்டு.

பண தேவைகளை சமாளிக்க முடியாமல் மகனும்,
நோய் வந்ததால் உதவிக்கு ஆள் இல்லாமல் பெற்றவர்களும்,
சுக துக்கங்களை பகிர முடியாமல் இருவரும் 
"குடும்ப வாழ்க்கையே நரகம்" 
என்று தோன்ற வைத்து, "இனி குழந்தையே வேண்டாம்!!" என்று நிலைக்கு வந்து விடுவோம்.

அப்படியே பெற்றாலும், "பிள்ளையை அரசு காப்பாற்ற வேண்டும். வயதான பின், அரசாங்கம் காப்பாற்ற வேண்டும்" என்று பயமுறுத்தவும் வாய்ப்பு உண்டு.

இப்படி குடும்ப வாழ்க்கை பொதுவாக அழிந்தாழும்,
இன்றும்
சொந்தமாக தொழில் செய்து,
இரண்டுக்கு மேல் குழந்தை பெற்று, மேலும்
கூட்டு குடும்பமாக வாழும் எவரும்,
இது போன்ற துன்பங்களை எதிர்காலத்திலும் எதிர்கொள்ள போவதில்லை என்பதே உண்மை.

மார்வாடி, நகை செட்டியார் போன்றவர்கள் இன்று வரை,
சொந்தமாக தொழில் செய்து,
இரண்டுக்கு மேல் குழந்தை பெற்று, மேலும்
கூட்டு குடும்பமாக வாழ்கின்றனர்.
இவர்கள் இப்படியே இருக்கும் வரை, இவர்கள் சுகமாகவே வாழ்வார்கள்.

"நோயும், ஆயுசும் நம் கையில் இல்லை" என்பதை மறக்க கூடாது.
ஆனால், "குடும்ப வாழ்க்கை அமைத்து கொள்வது நம் கையில் உள்ளது", என்பதை மறக்க கூடாது.

இரண்டு மூன்று குழந்தைகள் பெற்றுக்கொள்வது வளர்ப்பதற்கு கடினமாக இருந்தாலும், அது  குழந்தைகளுக்குள் ஒரு பாதுகாப்பு உணர்வை தரும். எதிர்கால பயத்தை , அநாதை என்ற பயத்தை போக்கும்.

ஒரு குழந்தை போதுமே !
குழந்தையே வேண்டாமே !
தனியாக வாழ்கிறோமே !
என்ற சிந்தனை உடைய இன்றைய சமுதாயம், "தனக்கும் 60, 80 வயதாகும்!!" என்பதை சிந்திக்க வேண்டி இருக்கிறது.

70 வயதில், பெற்ற ஒரு  பிள்ளையும் 40 வயதை கடந்து இருப்பான். 
அவனும் உடல் பலமில்லாமல் இருக்க வாய்ப்பு உண்டு.
அவனும் பண வசதி இல்லாமல் இருக்க வாய்ப்பு உண்டு.
அவன் கஷ்டத்தை யாரிடமும்  சொல்லிக்கொள்ள முடியாமல் இருக்க வாய்ப்புண்டு.
அவனும் பென்ஷன் இல்லாத வாழ்க்கை வேறு வாழ வேண்டும்.


80 வயதுக்கு மேல் வாழ நேர்ந்தால், காப்பாற்ற பெற்ற ஒரு மகனும் உயிருடன் இருப்பானா? என்று கூட தெரியாது.
"நோயும், ஆயுசும் நம் கையில் இல்லை" என்பதை மறக்க கூடாது.

சிதறிய குடும்பங்கள்,
குழந்தை இல்லாத குடும்பங்கள்,
ஒரே குழந்தை பெற்ற குடும்பங்கள்,
சீரழிய வாய்ப்புக்கள் கோடி உள்ளது.

பாரத நாட்டின் தனித்துவம் "குடும்ப கலாச்சாரமே".  
அது அழியாமல் இருக்க, சற்று சிந்திப்போம்..  பகிர்வோம்.