Followers

Search Here...

Showing posts with label குழந்தை. Show all posts
Showing posts with label குழந்தை. Show all posts

Tuesday 2 October 2018

குடும்ப வாழ்க்கையில் குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டுமா? ஒரு அலசல்...

"ஒரு குழந்தை போதும்அந்த ஒரு குழந்தைக்கு தரமான கல்வி, வசதிகள் செய்து கொடுத்து வாழ்க்கையில் உயர்த்துவோம்"
என்ற எண்ணம் பொதுவாக இன்றைய இந்தியர்களிடம் வந்துள்ளது.


இதற்கு முன் 1970,1980களில் இருந்தவர்கள், "இரண்டு குழந்தை போதும்" என்று எண்ணினார்கள்.

1960களில் அதற்கும் முன் இருந்த காலங்களில் இருந்தவர்கள், :குழந்தைகள் பிறப்பை எண்ணிக்கை அடிப்படையில் தடுக்கவில்லை".
மேலும்,
1970களில் கருத்தடை சாதனங்கள், ஆப்பரேஷன் போன்றவை அன்று இல்லை.
இதனால், பொதுவாக, ஒரு கணவன் மனைவிக்கு "குறைந்தது 5 குழந்தைகள்" இருந்தனர்.

இன்று, 80-90 வயதில் வாழும் இவர்களுக்கு, வாழ ஒரு இடம் உள்ளது. 

5 குழந்தைகளை பெற்ற இவர்கள், தன் 90 வயதில், இரண்டு மூத்த குழந்தைகளை கூட இழந்து இருக்க வாய்ப்பு உண்டு.
மற்ற இரண்டு பேர், வெளிநாட்டில் இருக்கவும் வாய்ப்பு உண்டு.
அல்லது, தன் குடும்ப பொறுப்புகளில் சிக்கி இருக்கவும்  வாய்ப்பு உண்டு.

குறைந்த பட்சம் ஒரு பிள்ளையாவது!! ஆரோக்கியம் உள்ளவனாக, தன் 90 வயது பெற்றோரை வைத்து காப்பாற்ற கூடியவனாக இருப்பான்.
இன்று கூட, சில வீடுகளில் 90 வயது கிழவன்/கிழவி நிம்மதியாக இருப்பதை நாம் பார்த்து இருக்க வாய்ப்பு உண்டு.

"இந்த நிம்மதியை, நம்முடைய வயதான காலத்தில் நாம் அனுபவிக்க போவதில்லை" என்பதையே இதில் கவனிக்க வேண்டும்.
பெரும் அபாயம் நமக்கு முன் காத்துக்கொண்டு இருக்கிறது.




பல குழந்தை பெற்ற இவர்கள், தங்கள் குழந்தைகள் அனைவருக்கும் தரமான கல்வி கொடுக்க இயலாமல் போனாலும், குடும்ப பொறுப்பு ஒருவன் தலையில் மட்டும் ஏறாமல் இருக்க உதவி செய்தனர்.
தம்பியின் கஷ்டத்தில் அண்ணன் கை கொடுப்பதும்,
அண்ணன் கஷ்டத்தில் தம்பி கை கொடுப்பதும்,
தங்கை தம்பியிடம் பாசத்தை பொழிவதும்,
அண்ணன் தங்கைக்கு தான் சேர்த்த பொருளை கொடுத்து சுகமாக வைப்பதும் இன்றுவரை நடந்துள்ளது. 
இனி நடக்கப்போவது இல்லை..

துக்கமும், சுகமும் ஒருவருக்கு ஒருவர் பகிரப்பட்டதால், நோய் இல்லாமல் இருந்தனர். எதிர்கால பயமே இல்லாமல் இருந்தனர்.

பல குழந்தை பெற்று இன்று வயதாகி விட்ட முதியவர்களுக்கு ஒரு மகனோ, மகளோ இருக்கின்றனர்.
இது இன்று வரை நாம் பார்க்க கூடிய காட்சி.
இனி பார்க்க இயலாத காட்சி.

1980-90களில் "இரண்டு குழந்தை போதும்" என்று இருந்தனர் முந்தைய தலைமுறைகள்,

இரு குழந்தைகள் பெற்று 60 வயதை கடந்து நிற்கும் இவர்கள்,
"6 மாதம் ஒரு பையன் வீடு, 6 மாதம் மற்றொரு பையன் வீடு" என்று நாடோடி வாழ்க்கை வாழ்கின்றனர்.
இரண்டும் பெண் குழந்தையாக இருந்தால், "அனாதைகளாக" தனியாக தன் 60 வயதுக்கு மேல் வாழ ஆரம்பிக்கின்றனர்.
இன்று நாம் பார்க்க கூடிய காட்சி !!

இதில் கணவன் இறந்து, வயதான மனைவியின் வாழ்க்கை அந்தோ பரிதாபம்.
அதை விட கொடுமை,
மனைவி இறந்து, 60 வயதுக்கு மேல் கணவன் மட்டும் வாழும்  தனிமை வாழ்க்கை.
பிறந்த 2 இரண்டு குழந்தைகளில் ஒன்று இறந்து, மற்றொருவனும் பணமில்லாமல் கஷ்டப்படும் வாழ்க்கை, அதை விட நரகம்

வயதான காலத்தில் நோய், பார்த்துக்கொள்ள ஆள் இல்லை. இது அதை விட நரகம்.

இவை எல்லாம் இன்று 60 வயதை கடந்து நிற்கும் ஆண்களும், பெண்களும் சந்திக்கும் நிஜங்கள்..

இன்று "ஒரே குழந்தை போதும். அந்த குழந்தைக்கு தரமான கல்வி தருவது ஒன்றே லட்சியம்" என்று வீறுநடை போடும் தலைமுறை, 60 வயதுக்கு மேல் உயிருடன் இருப்பதே தேவையா? என்ற நிலைக்கு நிச்சயம் கொண்டு போகப்போகிறது.

60 வயதுக்கு மேல், நோய் வந்தால், பெற்ற ஒரு மகன்
மொத்த செலவை சமாளித்து, 
பெற்றவர்கள் உடம்பையும் பார்த்துக்கொள்வான் 
என்று எதிர்பார்க்க முடியாது.

தன் கஷ்டங்களை, சுகங்களை தன் உடன்பிறந்த தம்பி தங்கைகளிடம் சொல்லிக்கொள்ள கூட ஆளில்லாமல், பெற்ற ஒரு மகனே, stress, tension என்று முழித்து, நமக்கு முந்தி கொண்டு இறக்கவும் வாய்ப்பு உண்டு.

பண தேவைகளை சமாளிக்க முடியாமல் மகனும்,
நோய் வந்ததால் உதவிக்கு ஆள் இல்லாமல் பெற்றவர்களும்,
சுக துக்கங்களை பகிர முடியாமல் இருவரும் 
"குடும்ப வாழ்க்கையே நரகம்" 
என்று தோன்ற வைத்து, "இனி குழந்தையே வேண்டாம்!!" என்று நிலைக்கு வந்து விடுவோம்.

அப்படியே பெற்றாலும், "பிள்ளையை அரசு காப்பாற்ற வேண்டும். வயதான பின், அரசாங்கம் காப்பாற்ற வேண்டும்" என்று பயமுறுத்தவும் வாய்ப்பு உண்டு.

இப்படி குடும்ப வாழ்க்கை பொதுவாக அழிந்தாழும்,
இன்றும்
சொந்தமாக தொழில் செய்து,
இரண்டுக்கு மேல் குழந்தை பெற்று, மேலும்
கூட்டு குடும்பமாக வாழும் எவரும்,
இது போன்ற துன்பங்களை எதிர்காலத்திலும் எதிர்கொள்ள போவதில்லை என்பதே உண்மை.

மார்வாடி, நகை செட்டியார் போன்றவர்கள் இன்று வரை,
சொந்தமாக தொழில் செய்து,
இரண்டுக்கு மேல் குழந்தை பெற்று, மேலும்
கூட்டு குடும்பமாக வாழ்கின்றனர்.
இவர்கள் இப்படியே இருக்கும் வரை, இவர்கள் சுகமாகவே வாழ்வார்கள்.

"நோயும், ஆயுசும் நம் கையில் இல்லை" என்பதை மறக்க கூடாது.
ஆனால், "குடும்ப வாழ்க்கை அமைத்து கொள்வது நம் கையில் உள்ளது", என்பதை மறக்க கூடாது.

இரண்டு மூன்று குழந்தைகள் பெற்றுக்கொள்வது வளர்ப்பதற்கு கடினமாக இருந்தாலும், அது  குழந்தைகளுக்குள் ஒரு பாதுகாப்பு உணர்வை தரும். எதிர்கால பயத்தை , அநாதை என்ற பயத்தை போக்கும்.

ஒரு குழந்தை போதுமே !
குழந்தையே வேண்டாமே !
தனியாக வாழ்கிறோமே !
என்ற சிந்தனை உடைய இன்றைய சமுதாயம், "தனக்கும் 60, 80 வயதாகும்!!" என்பதை சிந்திக்க வேண்டி இருக்கிறது.

70 வயதில், பெற்ற ஒரு  பிள்ளையும் 40 வயதை கடந்து இருப்பான். 
அவனும் உடல் பலமில்லாமல் இருக்க வாய்ப்பு உண்டு.
அவனும் பண வசதி இல்லாமல் இருக்க வாய்ப்பு உண்டு.
அவன் கஷ்டத்தை யாரிடமும்  சொல்லிக்கொள்ள முடியாமல் இருக்க வாய்ப்புண்டு.
அவனும் பென்ஷன் இல்லாத வாழ்க்கை வேறு வாழ வேண்டும்.


80 வயதுக்கு மேல் வாழ நேர்ந்தால், காப்பாற்ற பெற்ற ஒரு மகனும் உயிருடன் இருப்பானா? என்று கூட தெரியாது.
"நோயும், ஆயுசும் நம் கையில் இல்லை" என்பதை மறக்க கூடாது.

சிதறிய குடும்பங்கள்,
குழந்தை இல்லாத குடும்பங்கள்,
ஒரே குழந்தை பெற்ற குடும்பங்கள்,
சீரழிய வாய்ப்புக்கள் கோடி உள்ளது.

பாரத நாட்டின் தனித்துவம் "குடும்ப கலாச்சாரமே".  
அது அழியாமல் இருக்க, சற்று சிந்திப்போம்..  பகிர்வோம்.


Friday 13 April 2018

இன்றைய ஹிந்துக்கள் ஒன்றுக்கு மேல், குழந்தை பெற்றுக் கொள்ள ஏன் தயங்குகிறார்கள்?... ஒரு அலசல்

இன்றைய ஹிந்துக்கள் ஒன்றுக்கு மேல், குழந்தை பெற்றுக் கொள்ள தயங்குகிறார்கள். ஏன்?

சிலர் "குழந்தையே வேண்டாம்" என்கிறார்கள்.




சிலர், "திருமணம் செய்தால் தானே இந்த கேள்வி வருகிறது. திருமணமே வேண்டாம்" என்கிறார்கள்.

அப்படியானால் "இவர்கள் காமத்தை வென்றவர்களா ?!!" என்றால் அதுவும் இல்லை.

திருமணம் வேண்டாம், நட்பாக நாங்கள் வாழ்வோம் என்று குடும்பம் (live-in relationship) நடத்துகிறார்கள்.

இப்படி ஏன்? என்றால், அதில் ஒரு லாபம் பார்க்கிறார்கள்.

குழந்தை பெற்று கொள்ளாமல் குடும்பம் நடத்தி, 
எப்பொழுது பிடிக்கவில்லை என்று தோன்றுகிறதோ, செலவே இல்லாமல் divorce செய்து விடலாம்.

குழந்தை பெற்றுக்கொள்வதில் ஏன் இந்த தயக்கம் உருவானது இந்த ஹிந்து சமுதாயத்தில் ?

குழந்தை பெற்றுக்கொள்வதில் ஒரு லாபமும் தெரியாததால் (உண்மையில் அறியாததால்) இப்பொழுது குழந்தை பெற்றுக் கொள்ள யாவருக்கும் தயக்கம் உள்ளது.

மற்ற தேசங்களில் (குறிப்பாக கிறிஸ்தவ மக்களின்) நிலை இதை விட மோசம்.
பொதுவாக, பலர் பெற்றுக் கொள்ளவே தயார் இல்லை.
குடும்பம் நடத்த தயார் இல்லை. 
 நடத்தினாலும் பாதி விவாகரத்தில் முடிகிறது.

இஸ்லாமிய சமூகத்தின் எண்ணிக்கை இந்த கிறிஸ்தவ நாடுகளில் அதிகமாகி கொண்டே இருப்பதாக புள்ளிவிவரம் சொல்கிறது.
இந்த இஸ்லாமிய சமூகம் இந்த கிறிஸ்தவ நாடுகளை இன்னும் சில நூற்றாண்டுகளில் வ்யாபிக்கும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.

இது பொறாமை படக்கூடிய விஷயம் அல்ல. இவர்கள் வளர்ச்சி இவர்கள் சமூகத்திற்கு நன்மையே.
சமுதாயத்தில் ஒரு கலாச்சாரம் காக்கப்பட தலைமுறைகள் தேவை.

ஏழு, எட்டு குழந்தைகள் பெற்ற அந்த கால நம் தாத்தா பாட்டிக்கு "ஏற்பட்டது பல சொந்தம்".

ஏழு குழந்தைகளில், 6 உருப்படி இல்லாமல் பெற்றவர்களை கவனிக்காமல் விட்டாலும், சில குழந்தைகள் பரலோகம் போனாலும்,
ஒருவனாவது கடைசி மூச்சு வரை காப்பாற்றுவான்.

பல குழந்தைகள் உள்ள ஒரு குடும்பத்தில்,
ஒரு குழந்தை கஷ்டப்படும் போது, மற்ற குழந்தைகள் சேர்ந்து காப்பாற்றும். 

இனி வரும் காலங்களில்,
ஒரு பிள்ளை பெற்று வாழப்போகும் அப்போதைய 80 வயது தொடும் கிழவனுக்கு கிழவிக்கு, 
பெற்ற ஒரு பிள்ளை எங்கோ ஒரு நாட்டில் வாழ அல்லது 
அவன் இவனை முந்தி, பரலோகம் செல்ல, 
யாரும் இல்லாத நிலையில் கஷ்டப்பட கூடிய காலம் வரும் அபாயம் உள்ளது. 

குழந்தை பெற்றுக் கொண்டால் என்ன என்ன கஷ்டம் வரும்? என்ற உணர்வே இன்று உள்ளவர்களுக்கு அதிகமாகிறது.

வயதான காலத்தில் காப்பாற்ற மாட்டான் என்று தெரிந்த பிறகு யார் குழந்தை பெற்று வளர்ப்பார்கள் ?
அதனால், திருமணமும் வேண்டாம்.

அப்படியே திருமணம் செய்து கொண்டாலும் குழந்தை வேண்டாம்.

இப்போது இதற்கும் மேல் போய், கல்யாணம் எதற்கு ? பேசாமல், சேர்ந்து பிடிக்கும் வரை வாழ்வோம். எப்பொழுது சரியாக படவில்லையோ, விலகி விடுவோம்.  இதனால் divorce செலவும் மிச்சம்.
இப்படி செல்கிறது பல நாடுகள். 
இதில் இப்போது நம் நாடும் சேர்ந்துள்ளது.

குழந்தைகள் இல்லை எனில், அந்த வீட்டில் உள்ள வயதானவர்களை யார் காக்க வேண்டும் ?
அதை அரசாங்கம் ஏற்கிறது பல நாடுகளில் இப்போது.
Social tax என்று வரி மக்களிடமே வாங்கி பல நாடுகள் இந்த சேவையை நடத்துகிறது.
இது பெரும் கேடு.




இதே சிந்தனை, வாழ்க்கை முறை, ஹிந்துக்களின் வாழ்க்கையிலும் இப்போது 15 வருடங்களாக நன்றாக புகுந்துள்ளது.

Divorce என்ற வார்த்தை கேட்டாலே ஆச்சர்ய படும் ஹிந்து குடும்பங்களில், வீட்டுக்கு ஒரு divorce கதை உள்ளது.

இந்த அவலங்களுக்கெல்லாம் ஒரே காரணம், நம்மிடம் இருந்த "கூடி வாழும்" குடும்ப தர்மம் காணாமல் போனதேயாகும்.

அந்த காலத்தில் 5 குழந்தை பெற்றாலும் பெற்றவனுக்கு, ஒருவனாவது தனக்கு கடைசி வரை கஞ்சி ஊற்றுவான் என்ற நம்பிக்கை இருந்தது.

5 குழந்தை பெற்றாலும், கணவன் மனைவி சேர்ந்தே இருப்பர் என்ற தைரியம் இருந்தது.

ஆபத்து காலத்தில் மாமன், சகோதர, சகோதரிகள் போன்ற உறவினர்கள் துணை இருந்தது.

குழந்தைகளே தங்களுக்குள் வரும் ஆபத்தை காத்துக் கொள்ளும் பாதுகாப்பு இருந்தது.

இப்படி கூடி வாழ்ந்த ஹிந்துக்கள், 1000 வருட இஸ்லாமிய, 300 வருட கிறிஸ்தவ ஆட்சியிலும் குடும்ப தர்மம் கெடுக்கப் படாமல் இருந்ததால், ஹிந்துக்கள் ஹிந்துக்களாகவே இருந்தனர்.

சாதாரண வாழ்க்கை நடத்திய நம் முன்னோர்கள், ஒரு வசதியும் கிடைக்காது அவதிப்பட்ட காலத்திலும் ஒரு குடும்பத்தில் 5 குழந்தைகள் சாதாரணமாக பிறந்தன.

எப்படி வளர்க்க முடியும்?
யார் சோறு போடுவார்கள் ? 
என்ற ஐயம் இவர்களுக்கும் இருந்திருக்கும். 
இருந்த போதிலும் என்ன தைரியம் இவர்களுக்குள் இருந்தது ?

இத்தனை குழந்தைகளா? என்று கேலியாக பார்க்கும் முறை ஒரு புறம் இருக்க, சற்று சிந்தித்து பார்த்தால் நமக்கு பல உண்மைகள் வெளிப்படும்:

 குழந்தைகள் பெற்று கொள்ள யோசிக்கும், ஹிந்துக்களுக்கு பெரும்பாலும் இப்போது
"கூட வாழ்ந்தால் கோடி நன்மை" என்று சொல் மறந்து விட்டது.

கூடி வாழ்வதற்கு பொறுமை மிக அவசியம்.
அனைவருக்கும் நா அடக்கம் அவசியம்.
சேர்ந்து வாழ்வதில் ஆசை அவசியம்.

பண பலத்தை விட உறவுகளுடன்
கூடி வாழ்பவர்களுக்கு வாழ்க்கையில் வரும் இன்னல்களை சமாளிக்க தைரியம் வரும்.
ஒருவர் கஷ்டப்படும் காலத்தில் கை தூக்க இன்னொருவர் இருப்பர்.

கூடி வாழ்வதாலேயே, குழந்தைகள் பெற்று கொள்ள தைரியம் வரும்.
கூடி வாழ்வதாலேயே, குடும்ப கலாச்சாரம் அழியாமல் இருக்கும்.

புனிதமான இந்திய நாட்டில், இன்று இந்த குடும்ப தர்மம் அழிந்து வருகிறது.

வெளிநாட்டவர்கள், நம்மை பார்த்து ஆச்சர்யப்பட்ட இந்த குடும்ப வாழ்க்கை இன்று நம்மை விட்டு விலகி வருவது நம் சமுதாயத்துக்கு கேடு.

இதனால், ஹிந்துக்கள் குறைந்து போவார்கள்.

வயதான பின், காப்பாற்ற பல குழந்தைகள் இல்லாததால், வயதான காலத்தில் இருக்கும் ஒரு மகன் எங்கோ வாழ, அல்லது அவனும் முடியாமல் இருக்க, துணைக்கு ஆள் இல்லாமல் திண்டாட வேண்டிய நிலை வெகு தொலைவில் இல்லை. 

பெற்ற ஒரு குழந்தை கஷ்டப்படும் போது, சகோதர, சகோதரிகள் சேர்ந்து காப்பாற்றிய காலம் போய், ஆதரவை இழந்து வாழ நேரிடும்.

பெற்றோருக்கு செய்யும் மொத்த மருத்துவ செலவும் பெற்ற ஒரு குழந்தை மேல் கடனாக விழுந்து விடும். 

இதுவே கலியின் கொடுமை. இந்த நிலை மாற, கூடி வாழ கற்று கொள்ள வேண்டும்.

கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்பது உண்மை. 

இன்றைய கால கட்டத்தில், கூடி வாழும் நன்மையை அறியாமல், வரப்போகும் ஆபத்தை அறியாமல் பல செயல் செய்கிறோம்.

  • கணவனுக்கு மனைவியிடம் பொறுமை இல்லை. 
  • மனைவிக்கு கணவனிடம் பொறுமை இல்லை.
  • மாமியாருக்கும், மாமனாருக்கும் வீட்டுக்கு வந்த பெண் மேல் பொறுமை இல்லை. 
  • கல்யாணமாகி வந்த பெண்ணுக்கும் பொறுமை இல்லை.

ஆசையும், எதிர்பார்ப்பும் அதிகமாக, பொறுமை இல்லாததினால் ஹிந்து குடும்பம் சிதறுகிறது.

சேர்ந்து அன்போடு வாழ்ந்தால் என்னென்ன நன்மை? என்பதை மறந்து, பணத்திற்காகவும், சுய அபிமானத்தின் அற்ப காரணத்திற்கு சண்டை இட்டு, அழகான கூட்டு குடும்ப வாழ்க்கையை தன் செயலாலேயே அழித்துக் கொள்கின்றனர்.

ஹிந்துக்களிடம் இருந்த பொறுமை எங்கே போனது ?




இரண்டு தலைமுறை முன்வரை கூட, நம் முன்னோர்கள் கூடி வாழ்ந்துள்ளனர்.

கூடி வாழ்வதே நம் கலாச்சாரம், நம் குடும்பத்தில் நிலைக்க வழி.

கூடி வாழாது போனால்,
  • நம் கண் முன்னரே ஒரு சொந்தம் அழிவதை பார்க்க நேரும்.
  • நம் கண் முன்னரே ஒரு சொந்தம் மற்ற கீழ் மதங்களில் அறியாமையால் போய் விழுவார்கள்.
  • நம் கண் முன்னரே, பணம் இருந்தும் நம்மை கடைசி காலத்தில் கூட இருந்து காக்க துணையில்லாமல் போகும்.
ஹிந்துக்கள் சற்று சிந்திக்க வேண்டிய விஷயம் இது.