Followers

Search Here...

Showing posts with label ரங்கநாதர். Show all posts
Showing posts with label ரங்கநாதர். Show all posts

Wednesday 12 May 2021

குல தெய்வமான ரங்கநாதரை வழிபட்ட ராமபிரான்... தெரிந்து கொள்வோம்.. வால்மீகி ராமாயணம்

குல தெய்வமான ரங்கநாதரை வழிபட்ட ராமபிரான்

गते पुरोहिते रामः 

स्नातो नियतमानसः |

सह पत्न्या विशालाक्ष्या 

नारायणमुपागमत् ||

- वाल्मीकि रामायण

கதே புரோஹிதே ராம:

ஸ்நாதோ நியத மானஸ: |

சஹ பத்ன்யா விசாலாக்ஷ்யா

நாராயணம் உபாகமத் ||

- வால்மீகி ராமாயணம்


நாளை பட்டாபிஷேகத்துக்கு தயாராக இருக்க, அன்றைய இரவு விரதத்தில் இருந்து தர்ப்பைபுல் படுக்குமாறு சொல்லி விட்டு புரோஹிதரான வசிஷ்டர் சென்றார். ராமபிரான் ஸ்நானம் செய்து விட்டு, விசாலமான கண்களை உடைய சீதா தேவியுடன் ஒருநிலைப்பாடுடன் தன் குலதெய்வமான நாராயணனை தியானித்தார்.


After Vasistha left, Rama took bath and meditated on Lord Narayana with undistracted mind along with his wide-eyed wife, Seetha.


प्रगृह्य शिरसा पात्रं

हविषो विधिवत्तदा |

महते दैवतायाज्यं

जुहाव ज्वलितानले ||

- वाल्मीकि रामायण


ப்ரக்ருஹ்ய சிரஸா பாத்ரம்

ஹவிஷோ விதிவத் ததா |

மஹதே தைவதா யாஜ்யம்

ஜூஹாவ ஜ்வலிதானலே ||

- வால்மீகி ராமாயணம்


பிறகு, ஹோமம் வளர்த்து, யாக பாத்திரத்தில் பசும் நெய்யை தலைக்கு மேல் தூக்கி, அதை நாராயணனுக்கு காட்டி சங்கல்பித்து, யாக அக்னியில் ஆஹுதி செய்தார்.


Taking the vessel with clarified butter on his head as per scriptures, he offered to Lord Vishnu the clarified butter, by dropping it into the blazing fire.



शेषं च हविषस्तस्य

 प्राश्याशास्यात्मनः प्रियम् |

ध्यायन्नारायणं देवं

 स्वास्तीर्णे कुशसंस्तरे ||

वाग्यतः सह वैदेह्या

 भूत्वा नियतमानसः |

श्रीमत्यायतने विष्णोः

 शिश्ये नरवरात्मजः ||

- वाल्मीकि रामायण


சேஷம் ச ஹவிஷ: தஸ்ய

ப்ராஸ்ய ஆசாஸ்ய ஆத்மன: ப்ரியம் |

த்யாயன் நாராயணம் தேவம்

ஸ்வாஸ்தீர்னே குச சம்ஸ்தரே ||

வாக்யத: சஹ வைதேஹ்யா

பூத்வா நியத மானஸ: |

ஸ்ரீமத்யாயதனே விஷ்ணோ:

சிஷ்யே நரவர ஆத்மஜ: ||

- வால்மீகி ராமாயணம்


பக்தியுடன் நாராயணனுக்கு ஆஹுதி கொடுத்த பிறகு, மிச்சமிருந்த ஹவிஸை பிரசாதமாக ராமபிரானும், சீதாதேவியும் எடுத்து கொண்டனர். பிறகு, அந்த விஷ்ணுவின் சன்னதியிலேயே தர்ப்பை புல் பரப்பி, அதில் சீதா தேவியும், ராமபிரானும் படுத்துக்கொண்டனர்.


Rama ate the remainder of clarified butter after finishing the sacrifice, which he performed for his own good, silently meditated on Lord Narayana with controlled mind and slept along with Seetha on a properly laid bed of Kusa grass in a splendid temple of Lord Vishnu.

एकयामावशिष्टायां 

रात्र्यां प्रतिविबुध्य सः |

अलञ्कारविधिं कृत्स्नं

कारयामास वेश्मनः ||

- वाल्मीकि रामायण


ஏகயாம அவசிஷ்டாயாம்

ராத்ரயாம் ப்ரதி-விபூத்ய ச: |

அலங்கார விதிம் க்ருத்ஸ்னம்

காரயாமாச வேஸ்மன: ||

- வால்மீகி ராமாயணம்


விடிவதற்கு ஒரு ஜாமம் முன்னதாகவே (சுமார் 1:12AM) ராமபிரான் எழுந்து விட்டார். அயோத்யா மாளிகையில் செய்ய வேண்டிய அலங்கார காரியங்களை முடிக்க ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தார்.


Rama woke up three hours before dawn and caused to complete the entire decoration of the house.


तत्र शृण्वन् सुखा वाचः 

सूतमागधवन्दिनाम् |

पूर्वां सन्ध्यामुपासीनो 

जजाप यतमानसः ||

- वाल्मीकि रामायण


தத்ர ஸ்ருண்வன் சுகா வாச:

சூதமாகத வந்தினாம் |

பூர்வாம் சந்த்யாம் உபாஸீனோ

ஜஜாப யத மானஸ: ||

- வால்மீகி ராமாயணம்


ப்ரம்ம முகூர்தத்தில், சந்தியா காலம் நெருங்கிய போது, வேதியர்கள் ஓதும் சுகமான வேத சந்தங்கள் காதில் விழுந்தது. 

ராமபிரானும், சூரியன் உதிக்கும் சமயத்தில், ஒருநிலைப்பாடுடன் காயத்ரீ மந்திரத்தை ஜபித்து கொண்டிருந்தார்.


Listening to the pleasing verses of professional reciters, he worshipped the early sunrise and meditated on Gayatri* with an undistracted mind.


तुष्टाव प्रणतश्चैव

शिरसा मधुसूदनम् |

विमलक्षौमसंवीतो

वाचयामास च द्विजान् ||

- वाल्मीकि रामायण


துஷ்டாவ ப்ரணதஸ்ச ஏவ

சிரஸா மதுசூதனம் |

விமலஷௌம சம்விதோ

வாசயாமாச ச த்விஜாம் ||

- வால்மீகி ராமாயணம்


ராமபிரான் தலைக்கு மேல் கை உயர்த்தி விஷ்ணுவை வழிபட்டார். தூய பட்டு ஆடை அணிந்து இருந்தார் ராமபிரான். கோவிலில் பிராமணர்கள் வேத பாராயணம் செய்தனர்.


He praised Lord Vishnu by bowing his head before Him. By wearing pure silk clothes, he got valedictory text recited by Brahmans.

Saturday 29 June 2019

ரங்கநாதர் ராமானுஜருடன் பேசிக்கொண்ட நிகழ்ச்சி. தன்வந்திரி சன்னதி எப்படி வந்தது?

ஒரு சுவையான சம்பவம் ஸ்ரீ ராமானுஜர் அவதார சமயத்தில் நடந்தது.
ஸ்ரீ ராமானுஜர், பெரிய பெருமாளை பார்க்க சென்றார்.
அப்பொழுது தைல காப்பு சாத்தி இருந்தார் பெரிய பெருமாள்.




என்ன காரணத்தாலோ, துணியால் போர்த்திக்கொண்டு படுத்து இருந்தார் பெரிய பெருமாள்.
இதை பார்த்த ஸ்ரீ ராமானுஜருக்கு பெரிய பெருமாளுக்கு உடம்புக்கு ஏதோ சௌகரியம் இல்லையோ என்று மனதில் தோன்றியது.

அர்ச்ச அவதாரம் தானே, கல் தானே என்று நினைக்கும் அஞானிக்கு, ஸ்ரீ ராமானுஜரின் நிலை எப்படி புரியும்?

பெரிய பெருமாளை பார்த்து "ஏன், திருமேனி பாங்கு இல்லையோ?" என்று கேட்டே விட்டார் ஸ்ரீ ராமானுஜர்.

ஸ்ரீ ராமானுஜரை பார்த்தார் பெரிய பெருமாள். பக்தன் மனோபாவத்துக்கு ஏற்று, பெருமாள் பழகுவார்.

அர்ச்ச அவதாரமாகவே பேசினார்,
"ஆமாம். கொஞ்சம் சரியாக இல்லை." என்று சொன்னார் பெரிய பெருமாள்.

"ஏன் இப்படி ஆனது?" என்று ஸ்ரீ ராமானுஜர் கேட்க,






"எனக்கு தயிர் சாதத்துடன், நெல்லிக்காயை வைத்து நிவேதனம் செய்து விட்டனர். நாமும் பக்தன் கொடுப்பதால் சாப்பிட்டு விட்டோம்.
இதனால் கொஞ்சம் உடலுக்கு ஒத்துக்காமல் ஆகி விட்டது. ஜுரம் வந்து விட்டது" என்றாராம் பெரிய பெருமாள்.

தன் பக்தனிடம், பக்தனின் மனோ நிலைக்கு ஏற்றாற்போல லீலை செய்வார் பகவான்.

அதுவரை ஸ்ரீ ரங்கராஜ்யம் நடத்தும் பெரிய பெருமாளுக்கு, தன் ரங்க ராஜ்யத்தில் அரச மருத்துவன் இல்லையாம்.
இதற்காக ஸ்ரீ ராமானுஜரின் மனதில் இப்படி ஒரு எண்ணம் தோன்ற சங்கல்பம் செய்தார், பெரிய பெருமாள்.

பெரிய பெருமாளோ அர்ச்ச அவதாரத்தில் இருக்கிறார்.
ஸ்ரீ ராமானுஜர் 'பெருமாளுக்கு ஜுரம்' என்று கேட்டவுடன், கண்ணீர் விட்டார்.

ஸ்ரீ ராமானுஜர், பெரிய பெருமாளை பார்த்து,
"ஒரு மாமிச சரீரமாக இருந்தால், ஒரு மருத்துவரை கூட்டிக்கொண்டு வந்து காட்டலாம்.
உங்களுடைய அப்ராக்ருத திவ்ய சரீரத்துக்கு எந்த மருத்துவரை (டாக்டரை) கொண்டு வந்து காட்டுவேன்?"
என்று கண்ணீர் விட்டார்.

"நமக்கு தான் டாக்டர் இருக்கிறாரே"
என்றாராம் பெரிய பெருமாள்.

"அதை தேவரீர் தான் சொல்ல வேண்டும்" என்று ராமானுஜர் பிரார்த்திக்க,
"நம் சன்னதியில், 'தன்வந்திரி'யை பிரதிஷ்டை செய்யும். அவர் என்னை அடிக்கடி பார்த்துக்கொள்வார்"
என்று பெரிய பெருமாள் சொன்னார்.
தன்வந்தரி சன்னதி மடப்பளி அருகிலேயே உள்ளது.



அன்று முதல்,
பெரிய பெருமாளுக்கு எந்த பதார்த்தங்கள் தயார் செய்தாலும், அந்த பதார்த்தங்கள் பெரிய பெருமாளுக்கு உகக்குமா? என்று தன்வந்திரி எதிரில் வைத்து, அவர் அனுமதித்த பின் தான், பெரிய பெருமாள் நிவேதனம் செய்வாராம்.
பெரிய பெருமாளும், தன்வந்திரி அனுமதித்த பதார்த்தங்களை மட்டும் தான், அன்று முதல் தொடுவாராம்.
அப்படி ஒரு ப்ராதான்யம் (முக்கியத்துவம்) பெரிய பெருமாள், தன்வந்திரிக்கு கொடுத்துவிட்டார்.

தன்வந்திரியின் பெருமையை காட்ட, ஸ்ரீ ராமானுஜரின் பக்தி பாவத்தை காட்ட பெரிய பெருமாள் செய்த ரசிக்கதக்க லீலை இது.

ஸ்ரீ ராமானுஜர் அவதார காலம் 1017 AD முதல் அடுத்த 120 வருடங்கள் வரை.
2017ADல் ஸ்ரீ ராமானுஜர் ஆயிரமாவது ஜெயந்தி ஹிந்துக்களால் கொண்டாடப்பட்டது.

இப்படி பெரிய பெருமாளே தனக்கு மருத்துவன் என்று வைத்து இருக்கும் தன்வந்திரியும் அவரே தான்.




தானே மருத்துவனாகவும் இருக்கிறேன் என்று காட்டும் அற்புதமான லீீலை.


Friday 21 June 2019

ப்ரம்மாவின் பெருமை ஈடு இணை இல்லாதது. பிரம்மாவின் கருணையாலேயே, நமக்கு ரங்கநாதர் கிடைத்தார், காஞ்சியில் வரதராஜன் கிடைத்தார். பிரம்மா கேட்டதால் தான் பரமாத்மா வாசுதேவன் அவதாரங்கள் செய்தார்.

ஸ்ரீ பாகவதம், யார் சிறந்த பாகவதன்? என்று சொல்லும்போது 'ப்ரம்மாவை' தான் முதலில் சொல்லுகிறது.

ப்ரம்மாவின் பெருமை ஈடு இணை இல்லாதது.



பரவாசுதேவன் முதன் முதலாக படைத்ததே ப்ரம்மாவை தான்.

தன் திருவாயாலேயே ப்ரம்ம தேவனுக்கு "ப்ரம்ம வித்யை"யை உபதேசம் பண்ணினார் பகவான்.

"உலக ஸ்ருஷ்டி செய்யும் பொழுதும், எப்பொழுதும் என் இதயத்தில் ஹரியையே நான் தியானம் செய்து கொண்டிருக்கிறேன்"
என்று சொல்கிறார் ப்ரம்மா.

"மது-கைடபர்கள் வேதத்தை கொண்டு போய் விட்டார்கள்" என்ற பொழுது, ப்ரம்மா பிரார்த்தனை செய்த பின்பு தான், பெருமாள் அவருக்காக மத்ஸ்ய அவதாரம் எடுத்தார்.

"தேவர்கள் அசுரர்களால் துன்பப்படுகிறார்கள்" என்றதும், அவர்கள் பிரம்மாவிடம் ஓடி வழி கேட்க, ப்ரம்மா பிரார்த்தனை செய்த பின்பு தான், பெருமாள், அவருக்காக கூர்ம அவதாரம் எடுத்தார்.

"பூமி பிரளய ஜலத்தில் மூழ்க", ஸ்வாயம்பு மனு பிரம்மாவிடம் சென்று முறையிட, ப்ரம்மா பிரார்த்தனை செய்த பின்பு தான், பெருமாள், அவருக்காக பிரம்மாவின் ஹ்ருதயத்தில் இருந்தே வெளிவந்து வராஹ அவதாரம் எடுத்தார்.

ஹிரண்யகசிபுவுக்கு ப்ரம்மா தான் வரம் கொடுத்தார். பின் 'இவன் அட்டகாசம் தேவர்களை துன்புறுத்த', அவர்களுக்காக, க்ஷீராப்தி வந்து ப்ரம்மா செய்த பிரார்த்தனைக்காக, பெருமாள் நரசிம்ஹ அவதாரம் எடுத்தார்.
ராம அவதாரமும், ப்ரம்மா செய்த பிரார்த்தனைக்காகவே நடந்தது.

பூமி தேவி துஷ்டர்கள் பெருகியதால் "பூபாரம் தாங்க முடியாமல்", ப்ராம்மாவிடம் பிரார்த்திக்க, மீண்டும் ப்ரம்மா செய்த பிரார்த்தனைக்காக, பெருமாள் ஸ்ரீ கிருஷ்ண அவதாரம் எடுத்தார்.

ஸ்ரீ கிருஷ்ண அவதாரத்தில், பிருந்தாவனத்திற்கு வந்து, "இங்கு புல்லாய் இருக்கவாவது அனுமதி கொடு. எனக்கு இந்த ப்ரம்ம பதவி கூட வேண்டாம்"
என்று பிரார்த்திக்கிறார் ப்ரம்மா.
"நீ ஆதிகாரி புருஷன். நீ உன் பதவியில் போய் இரு"
என்று ஸ்ரீ கிருஷ்ணர் சொல்ல, வேறு வழி இல்லாமல் திரும்ப செல்கிறார் ப்ரம்ம லோகத்துக்கு.



இப்படி விபவ அவதாரங்கள், இந்த பூமியில் நிகழ செய்தது மட்டும் இல்லாமல், 
இந்த அவதாரங்கள் நிகழ்ந்த சமயத்தில் இல்லாத நமக்கும் அணுகிரஹம் செய்ய, 
ப்ரம்ம லோகத்தில் தான் வழிபட்ட ஸ்ரீ ரங்கநாதரை, உலக ஸ்ருஷ்டி செய்து,  ஸ்வாயம்பு மனுவை பதவியில் அமர்த்தி, 
அவர் பூமியில் வழிபட தான் வழிபட்ட ஸ்ரீ ரங்கநாதரை வழங்கி விட்டார் ப்ரம்மா.

அந்த ரங்கநாதரை இக்ஷ்வாகு குலத்தில், ஸ்ரீ ராமராக அவதாரம் செய்து, தன் குல தெய்வமாக ஸ்ரீ ராமரே வழிபட்டு,
ராவண வதம் முடிந்து, விபீஷணனுக்கு தன் அடையாளமாக, ஸ்ரீ ரங்கநாதரை கொடுக்க,
ஸ்ரீ ரங்கநாதர் ஸ்ரீரங்க க்ஷேத்ரத்தை தானே தேர்ந்தெடுத்து இன்று வரை நாமும் காண முடியும் என்கிற அளவுக்கு கருணை செய்தார்.

பிரம்மாவின் கருணையாலேயே, நமக்கு ஸ்ரீ ரங்கநாதர் கிடைத்தார்.

'அவரே ப்ரம்ம லோகத்தில் வழிபட்ட தெய்வம்' என்று நாம் பார்க்கும் போது தான், ஸ்ரீ ரங்கநாதரை பற்றியும் புரியும், பிரம்மாவின் கருணையும் புரியும்.
அதே ப்ரம்ம தேவன், இப்பொழுது காஞ்சியில் அஸ்வமேத யாகம் செய்து, நமக்காக, காஞ்சியில் வரதராஜனாக பெருமாளை வெளிப்படுத்தினார்.

இதை உணரும் போது,
பிரம்மாவை விட, சிறந்த பக்திமான் யார் இருக்க முடியும்?


Tuesday 3 October 2017

சயன கோலத்தில் இருக்கும் ஸ்ரீ ரங்கநாதர் கைகளை காட்டி என்ன சொல்கிறார் ?


பெருமாள் ஒரு கையை தலை பக்கமும், தன் இன்னொரு நீண்ட கையை கால் பக்கமும் நீட்டி சயன கோலத்தில் காட்சி தருகிறார்.
இதை எல்லோரும் பார்த்து இருப்போம். இதன் உண்மை உணர்ந்தால், பெருமாள் யார் என்று தெரியும், பக்தியும் தானே வரும்.





நன்றாக கவனித்தால், பெருமாள் நம்மிடம், தன் தலையில் உள்ள பெரிய கிரீடத்தை காட்டி, 'வாழும் காலத்தில், யார் யாரையோ நம்பிக்கொண்டு, ஏமார்ந்து, கடைசியில் ஒருவரும் காக்க முடியாத மரணம் வந்து, இத்தனை நாள் யார் யாரையோ நம்பி வாழ்ந்தது வீண் என்று வெறுத்து, கிடைத்த மனித பிறவியை வீண் செய்யாமல், இந்த உலகத்தையும், உன்னையும் படைத்த மகாராஜன் நான் என்று பார்.
நான் காப்பாற்ற முடிவு செய்தவனை, உலகமே எதிர்த்து கவிழ்க்க நினைத்தாலும் முடியாது.
நான் உலகை படைத்த மகா ராஜா என்று தெரிந்தால் மட்டும் போதுமா, இதோ என் காலை இறுக பிடித்துக் கொள். சம்சார சாகரத்தில் இருந்தும் நான் உன்னை விடுவித்து, மோக்ஷம் தருகிறேன்.

குருவே துணை - ஜூலை 23, 2017