Followers

Search Here...

Sunday 29 November 2020

மனித முயற்சி பலன் கொடுக்காத போது, வேறு என்ன வழியை தேட வேண்டும்? ஹனுமான் நமக்கு விடை சொல்கிறார்... தெரிந்து கொள்வோமே *வால்மீகி ராமாயணம்

 ஹனுமான், சீதா தேவியை தேடி இலங்கைக்கு வந்து விட்டார்.

பாதி இரவு முழுக்க தேடியும் சீதா தேவி எங்கு இருக்கிறாள்? என்று கண்டுபிடிக்க முடியாமல் தவித்தார்.


"தற்கொலை செய்து கொண்டு விடலாமா?" என்று கூட நினைத்து விட்டார் ஹனுமான்.


"கஷ்டம் வரும் சமயத்தில், உற்சாகத்தை இழப்பவன் தான், தற்கொலை செய்து கொள்வான்" என்று தன்னையே சமாதானம் செய்து கொண்டார்.


"உற்சாகத்துடன் மீண்டும் தேடுவோம்" என்று மீண்டும் பல இடங்களில் தேடி பார்த்தார்.





அப்பொழுதும் சீதா தேவி இருக்குமிடத்தை கண்டுபிடிக்க முடியவில்லை.


"தன் முயற்சியும் வீணாகி விட்டது.

உற்சாகமும் பலனளிக்கவில்லை" என்றதும், மீண்டும் சோகத்தில் மூழ்கினார் ஹனுமான்.

புஷ்பக விமானம் இருந்த இடத்தில் இருந்த மதில் சுவரில் வந்து அமர்ந்தார்.


'இலங்கை முழுவதும் தேடியும் சீதா தேவியை காண முடியவில்லையே!!

தடாகங்கள், நதிகள், வனங்கள், மலைகளில் தேடியும் தேவியை காண முடியவில்லையே!!

சம்பாதி, ராவணன் அரண்மனையில் சீதா தேவி இருப்பாள் என்று சொன்னாரே!

அங்கும் சீதாதேவி காணப்படவில்லையே!

ராம பானத்துக்கு பயந்து, ராவணன் ஒளிந்து இருந்து சீதா தேவியை கடத்தி சென்ற போது, ஒருவேளை விமானத்தில் இருந்து விழுந்து விட்டாளோ?

கடல் கடந்து விமானத்தில் சென்ற போது, இதயம் வெடித்து சீதா தேவி கடலில் விழுந்து விட்டாளோ?

அல்லது,

ராவணனிடமிருந்து தன்னை காத்து கொள்ள, தானே கடலில் குதித்து விட்டாளோ?

அல்லது,

நர மாமிசம் சாப்பிடும் இந்த ராக்ஷஸ, ராக்ஷஸிகள் சீதா தேவியை தின்று விட்டார்களோ?

(அதவா ராக்ஷஸேந்த்ரஸ்ய பத்னீபி: அசிதேக்ஷனா | அதுஷ்டா  துஷ்ட பாவபி: பக்ஷிதா ஸா பவிஷ்யதி || - வால்மீகி ராமாயணம்)

அல்லது,

ராமபிரானை தியானித்து கொண்டே சீதா தேவியின் உயிர் பிரிந்து விட்டதோ?


ஹா ராமா! ஹா லக்ஷ்மணா! ஹா அயோத்தியா! என்று ஒருவேளை சீதா தேவியின் உயிர் உடலை விட்டு பிரிந்து விட்டதா?


சீதா தேவி உயிரை பிரிந்து விட்டதா? அல்லது தொலைந்து விட்டாளோ?

நான் ராமபிரானிடம் இதை எப்படி சொல்வேன்?


நான் ராமபிரானிடம் சீதையை காணவில்லை என்று சொன்னாலும் விபரீதமாகும்..

சொல்லாவிட்டாலும் தவறாகிவிடும்.

நான் எப்படி இந்த நிலைமையை சமாளிக்க போகிறேன்?


ஒருவேளை நான் கிஷ்கிந்தை திரும்பினாலும், என்ன சாதித்தேன் என்று சுக்ரீவ மஹாராஜனிடம் சொல்லுவேன்?


இந்த கடலை கடந்து, இலங்கையில் நுழைந்து, இந்த ராக்ஷஸர்களை பார்த்தும் ப்ரயோஜனமில்லாமல் போய் விட்டதே!!

(மமேதம் லங்கனம் வ்யர்தம் சாகரஸ்ய பவிஷ்யதி | ப்ரவேஷ்சைவ லங்காய ராக்ஷஸானாம் ச தர்சனம் - வால்மீகி ராமாயணம்)


சீதா தேவியை கண்டுபிடிக்க முடியாமல் திரும்பினால் ராமபிரான் உயிர் விட்டு விடுவாரே! 

(கத்வா து யதி காகுத்சம் வக்ஷ்யாமி பரம ப்ரியம் | ந த்ருஷ்டதே மயா சீதா தத: த்யக்ஷதி ஜீவிதம் || - வால்மீகி ராமாயணம்)


அதை பார்த்து லக்ஷ்மணன் உயிர் விடுவாரே.

அதை பார்த்து, 

அயோத்தியில் இருக்கும் பரதனும், சத்ருக்னனும் உயிர் விடுவார்களே!

இதை கண்டு அவர்கள் தாயார் அனைவரும் உயிர் விடுவார்களே! 


அதை கண்டு அயோத்தி மக்கள் உயிர் விடுவார்களே!


நண்பனுக்கு பதில் செய்ய முடியாமல் போனதே! என்று சுக்ரீவ மகாராஹா உயிர் விடுவாரே!. 

அதை கண்டு அவர் மனைவி 'ருமா' உயிர் விடுவாளே!

கணவனும் இல்லை, இப்போது வானர அரசன் சுக்ரீவனும் இல்லை என்றதும் தாராவும் உயிர் விடுவாளே!.

இதை கண்டு வாலியின் பிள்ளை அங்கதனும் உயிர் விடுவானே!


வானர ராஜனை உயிருக்கும் மேலாக நினைக்கும் வானரர்கள் தங்கள் கைகளாலேயே தன் தலையை அடித்து உடைத்து கொண்டு உயிர் விடுவார்களே!


வானர பெண்கள் தங்கள் குழந்தைகளோடு மலையிலிருந்து குதித்தும், விஷம் அருந்தியும், அக்னியில் இறங்கியும் உயிர் விடுவார்களே!..

(சபுத்ர தாரா: சாமாத்யா பர்த்ரு வ்யசன பீடிதா: | சைலாக்ரேப்ய: பதிஷ்யந்தி சமேத்ய விஷமேஷு ச || - வால்மீகி ராமாயணம்)


இத்தனை நாசம் என்னால் ஏற்படுவதற்கு பதில், நாமே இங்கு உயிரை விட்டு விடுவோம்.."

என்று நினைத்து விட்டார் ஹனுமான்.


பலத்திற்கு தைரியத்துக்கு பெயரெடுத்த ஹனுமான், தன் முயற்சியும், உற்சாகமும் பலனிக்கவில்லை என்ற நிலையில், உயிர் விட்டு விடலாமா? என்று நினைத்தார் என்பதை கவனிக்க வேண்டும்.





இங்கு, 'மனித முயற்சியும்' கைகொடுக்கவில்லை, 'உற்சாகமும்' கைகொடுக்கவில்லை ஹனுமானுக்கு.


புத்திக்கு பெயரெடுத்த ஹனுமான், தன் முயற்சியும், உற்சாகமும் கைவிட்டபோது, கடைசியாக இந்த நிலையில், 

'இனி தெய்வம் தான் தனக்கு கைகொடுக்க வேண்டும்' என்று முடிவு செய்தார்.

நாராயணனும், மஹாலக்ஷ்மியும், ஆதிசேஷனுமான, ராம, சீதா, லக்ஷ்மணனை, மனதால் நமஸ்கரித்தார்.

(நமோஸ்து ராமாய ச லஷ்மணாய தேவ்யை ச தஸ்யை ஜனகாத்மஜாயை - வால்மீகி ராமாயணம்)


'மனித முயற்சிக்கும் கிடைக்காத சில விஷயங்கள், தெய்வ அருள் மூலம் கிடைக்கிறது' என்று இங்கு நமக்கு உணர்த்துகிறார்.


'சீதாதேவியே தான் இருக்குமிடத்தை காட்டட்டும்' என்று சீதாதேவியை ராமபிரானோடு சேர்த்து பிரார்த்தித்த ஹனுமானுக்கு, உடனே அதுவரை கண்ணில் படாத 'அசோக வனம்' தென்பட்டது.


அங்கு சென்று பார்த்த ஹனுமான், சீதா தேவியை முதன் முதலாக தரிசித்தார்.


புழுதி படர்ந்த ஆடையுடன், ராக்ஷஸிகள் சூழ சீதா தேவி அமர்ந்து இருந்தாள்.


பல மாதங்கள் சாப்பிடாமல் இருந்ததால் சீதா தேவி மெலிந்து இருந்தாள்.

பெருமூச்சு விட்டு கொண்டு இருந்த சீதா தேவியின் முகம், அந்த இரவிலும் குளுமையான நிலவு போல பிரகாசித்தது.


மெதுவாக ஒவ்வொரு மரமாக தாவி அருகில் செல்ல செல்ல, சீதா தேவியின் தரிசனம் தெளிவாக தெரிந்தது ஹனுமானுக்கு.


சீதா தேவியின் பேரழகு அங்கு பிரதிபலித்தது.

அதே சமயம், வெளியில் புகை போல காட்டிக்கொண்டு, உள்ளே வேள்வி தீ போல இருந்தாள் சீதா தேவி.


தாமரை பூக்கள் இல்லாத, கலங்கி போன தாமரை தடாகம் போல இருந்தாள் சீதா தேவி.


பெரும் சோகத்தில் ஆழ்ந்து இருந்தாள் சீதா தேவி.


வாடி போய் இருந்தாள். 

கற்புடையவளாக இருந்தாள்.


கண்களில் கண்ணீருடன் காணப்பட்டாள் சீதா தேவி.


மிகவும் மெலிந்து காணப்பட்டாள்.


தவத்தில் இருப்பவள் போல இருந்தாள்.. ஏழையாக காணப்பட்டாள்.

பெரும் ஆபத்தில் இருந்தாள்.


சீதா தேவியை சுற்றி ராக்ஷஸிகள் சூழ்ந்து இருந்தனரே தவிர, இவளுக்காக நிற்பவர் யாருமில்லை.


சீதா தேவியின் கருமையான தலை கேசம் அவள் கால்முட்டி வரை படர்ந்து இருந்தது.. அதை பார்க்க கரு நாகம் போல இருந்தது.


ஆனந்தமாக வாழ வேண்டிய சீதா தேவி, பெரும் துயரில் இருந்தாள்.


'இது போன்ற நிலையை அனுபவிப்போம் 'என்று சீதா தேவி அனுமானம் செய்து கூட பார்த்து இருக்க மாட்டாள்.


'இப்படி பெரும் சோகத்தில் காணப்படும் இவள், சீதா தேவியாக தான் இருக்க முடியும்' என்று ஹனுமான் தனக்குள் தீர்மானம் செய்து கொண்டார்.


மேலும், 'இந்த ராவணன் அன்று கடத்தி சென்ற தேவியை தான் இன்று இங்கு பார்க்கிறேன்' என்று தனக்குள்ளேயே  சொல்லிக்கொண்டார். 

மேலும், 

சீதா தேவியின் தாமரை போன்ற முகத்தையும், 

உயர்ந்த பெண்மணியின் லக்ஷ்ணத்தையும், 

அவளிடமிருந்து வெளி வரும் ப்ரகாசத்தையும், 

கருமையான கேசத்தையும், சிவப்பான உதடையும், 

மெலிந்த இடையையும், 

ரதி போன்ற ரூபத்தையும், 

உறுதியான கொள்கையுடன் இருக்கும் தவத்தையும், 

கொடிய விஷத்தை கக்கும் கருநாக பாம்பு போல மூச்சு விட்டு கொண்டு இருப்பதையும், பார்த்த ஹனுமான், தான் பார்ப்பது சீதா தேவியே! 

என்று உணர்ந்து கொண்டார்.


ராமபிரான் சீதா தேவியை இழந்து துக்கப்படுகிறார்


இங்கு சீதா தேவி ராமபிரானை பிரிந்து, மெலிந்து போய், ராமபிரானின் துக்கத்தையும் சேர்த்து கொண்டு, துக்கப்படுவதை கண்டார் ஹனுமான்.


பேராபத்தில் சிக்கிய பெண் மான் குட்டி, தன் அகன்ற கண்களால் அங்கும் இங்கும் பார்ப்பது போல, சீதா தேவி பார்த்து கொண்டே அழுது கொண்டிருந்தாள்.





சீதா தேவியின் முகம் வெளிர்த்து போய் இருந்தது.


கருமேகங்கள் அழகிய சந்திரனை சூழ்ந்து இருப்பது போல, சீதா தேவியின் மீது புழுதி படர்ந்து இருந்தது.


கலாச்சாரமுள்ள ஒருவனை, கலாச்சாரமில்லாமல் வாழும் கூட்டத்தில் வாழ வைத்தது போல, சீதா தேவி காணப்பட்டாள்.


ஹனுமான் சீதா தேவியின் நிலையை கண்டு பெரிதும் துக்கப்பட்டார்.

இவள் சீதா தேவியே! என்று உறுதி கொண்டார்.


ராவணன் சீதா தேவியை தூக்கி சென்ற போது தூக்கி எறிந்த ஆபரணங்களை தவிர, அவள் அணிந்து இருந்த தோடுகள், கைகளில் அணிந்து இருந்த வைர ஆபரணங்களை பற்றி ராமபிரான் சொன்னது நினைவுக்கு வந்தது.


ராமபிரான் சொன்ன அதே ஆபரணங்கள் தேவியிடம் காணப்பட்டது

பலநாட்கள் இதை சுத்தம் செய்யாததால், அழுக்கு படிந்து பார்க்க கருப்பாக இருந்தது.


ராமபிரான் சொன்ன ஆபரணங்கள் காணப்பட்டதும், 'தான் காண வந்த சீதா தேவி இவள் தான்' என்று முடிவுக்கு வந்தார்.


ராமருக்கு பிரியமான சீதா தேவி இவள் தான்.


இத்தனை காலங்கள் சீதா தேவியை தொலைத்து இருந்தாலும், ராமபிரான் சீதா தேவியை தன் இதயத்திலிருந்து தொலைக்கவில்லை.


தான் கண்ட ராமபிரான், சீதா தேவியை தொலைத்து, நான்கு துக்கங்களை ஒரு சேர அனுபவித்தாரே!! என்று நினைத்து பார்த்தார் ஹனுமான்.

(இயம் ஸா யத்க்ருதே ராம: சதுர்பி: பரிதப்யதே - வால்மீகி ராமாயணம்)

1.

சீதாதேவி ஒரு பெண், என்ற ரீதியில், அவள் படும் துக்கத்தை நினைத்து இரக்கம் கொண்டு அழுதார்.

2.

சீதாதேவி தன்னை நம்பி காட்டுக்கு வந்தவள், என்ற ரீதியில், அவள் படும் துக்கத்தை நினைத்து பெரும் சோகத்தில் அழுதார்.

3.

சீதாதேவி என் மனைவி, என்ற ரீதியில், அவள் படும் துக்கத்தை நினைத்து, அவள்  நல்லொழுக்கத்திற்கு வந்த ஆபத்தை நினைத்து அழுதார்.

4.

சீதாதேவி தன் பிரியமான காதலி, என்ற ரீதியில், அவள் படும் துக்கத்தை நினைத்து, அழுதார்.


இப்படி பெரும் துக்கத்தில் இருக்கும் ராமபிரான் நினைவு ஹனுமானுக்கு வர, அதே சமயம் சீதா தேவியின் நிலையை கண்ட போது, ராமபிரானின் துக்கத்தை போலவே, சீதா தேவியின் துக்கமும் காணப்பட்டது.


இருவரது சோகமும் ஒன்று போல காணப்பட்டது.


சீதாதேவியின் இதயத்தில் ராமபிரான் இருப்பதும், 

ராமபிரான் இதயத்தில் சீதாதேவி இருப்பதும் ஹனுமானுக்கு புரிந்தது.

(அஸ்யா தேவ்யா மன: தஸ்மின் தஸ்ய ச ஆஸ்யாம் பிரதிஷ்டிதம் - வால்மீகி ராமாயணம்)

"ராமபிரானின் இதயம் சீதா தேவியிடம் இருந்ததால் தான், ராமபிரான் இன்றுவரை ஜீவிக்கிறார்.

(தேநேயம் ச ச்ச தர்மாத்மா முகூர்த்தம் அபி ஜீவதி - வால்மீகி ராமாயணம்)

இப்படிப்பட்ட சீதையை விட்டு, ராமபிரான் ஜீவித்து இருப்பது நடக்காத காரியம். 

இந்த சீதா தேவி இல்லாமலும், ராமபிரான் ஜீவிக்கிறார்.

சோககடலில் மூழ்கி விடாமல், உயிரை உடலில் இவர் தரித்து கொண்டு இருக்கிறாரே!! 

இதற்கு காரணம், ராமபிரானின் இதயம் சீதாதேவியிடம் அல்லவா உள்ளது.."

என்று தனக்குள் சொல்லிக்கொண்டார்.


சீதாதேவியை கண்ட பேரானந்தத்தில், ராமபிரானின் பெருமையையும், சீதா தேவியின் பெருமையையும் தனக்குள் சொல்லி சொல்லி ஆனந்தப்பட்டார்.


பிறகு, சீதா தேவியிடம் பேச சரியான காலத்தை எதிர்நோக்கி காத்து இருந்து, சீதாதேவியை தரிசித்தார்.


குருநாதர் துணை

Wednesday 25 November 2020

மனதுயரங்கள், நம்மை பாதிக்காமல் இருக்க வழி என்ன? தெய்வம் நமக்கு கருணை செய்ய சுலபமான வழி என்ன? 'அபிமான பாத்திரம்' என்றால் என்ன? தெரிந்து கொள்வோம்...

குடும்ப சுமை, வேலை பலு, எதிர்ப்பார்ப்பு, எதிர்கால பயம், பண தேவை, போட்டி, பொறாமை, 

ஆகியவை இன்றைய மக்களை பாகுபாடு பார்க்காமல் துரத்துகிறது.

கிடைத்ததை வைத்து நிம்மதியாக வாழ முடியாது, 

படிக்க வைக்க முடியாது, 

கல்யாணம் ஆகாது 

என்ற சூழ்நிலையில் இன்றைய மக்கள் இருக்கிறோம்.


பெரும்பாலான மக்களுக்கு வாழ்க்கையே போர்க்களமாகிவிட்டது.

'நிம்மதி' என்பது ஒருவர் மனதிலும் காணப்படவில்லை.





தெய்வத்துக்கு சம்மதமாக, இன்று ஒருவரும் வாழ முடிவதில்லை.


தெய்வம் நம்மை கண்டு திருப்தி அடையும் படியாகவும் வாழ முடியவில்லை.


தெய்வத்துக்கு நேரம் ஒதுக்க கூட முடிவதில்லை.


கோவிலில் கைங்கர்யம் செய்ய யாருக்கும் நேரமில்லை. 

பல கோவில்களில் உண்மையான பக்தர்கள் காணப்படவில்லை. 

கோவிலை திருடர்களும், பக்தி இல்லாதவர்களும், நாதீகர்களும் நடத்துகிறார்கள்


கோவில் பட்டர்கள் இவர்களிடம் சிக்கிக்கொண்டு, பெருமாளுக்கு முடிந்தவரை பூஜைகளை செய்து கொண்டு, நம்மை போன்று லட்சம் சம்பாதிக்க வேண்டும் என்று கோவிலை விடாமல், தட்டு காசை வைத்து கொண்டு, முடிந்தவரை காப்பாற்றி வருகின்றனர்.


நம் தெருவில் உள்ள பெருமாள் கோவிலுக்கு சென்று ஒரு தீபம் ஏற்ற கூட நமக்கு நேரமில்லை.


கோவிலுக்கு செல்லவும் நேரமில்லை.


கோவில் நகரத்தில் வாழவும் முடியாத சூழ்நிலை.


இதையும் தாண்டி, 

பாரத நாட்டை விட்டே பணத்துக்காக சென்று, பரதேசி போல வெளிநாட்டு கலாச்சாரத்தோடு வாழும் நிலை.


இப்படி உடல் பலம் இருக்கும் வரை, 

பணத்துக்காகவும், பெருமைக்காகவும், 

பதவிக்காவும் அலையும் ஜனங்கள் கோடிக்கணக்கில் இன்று உள்ளனர்.


மோக்ஷம் அடைய தெய்வத்தின் கருணை வேண்டும். 

அது இல்லாததால், மீண்டும் மீண்டும் அவர்கள் செய்த பாவ புண்ணியத்துக்கு ஏற்ப பிறக்கதான் வேண்டும்.


ஒவ்வொரு ஜென்மத்தில், மீண்டும் பணத்துக்காகவும், பெருமைக்காகவும், 

பதவிக்காவும் அலையும் போராட்டம் நமக்கு தொடரத்தான் போகிறது.  

இப்படி 'வழி தவறி போனவர்களும் தெய்வத்தின் கருணையை பெற வேண்டும், மோக்ஷம் அடைய வேண்டும்' என்று ஸ்ரீ ராமானுஜர் ஆடைப்பட்டார். 


அதற்கு வழியும் நமக்கு சொன்னார். தெரிந்து கொள்வோம்...


'தெய்வத்தின் கருணையை சம்பாதிக்க குறைந்த பட்சம், அபிமான பாத்திரமாகவாவது ஆக வேண்டும்

என்று சொல்கிறார் ராமானுஜர்.


அதாவது, நாம் எதற்கும் லாயக்கு இல்லாமல் போய் விட்டாலும், அந்நிய கலாச்சாரத்தோடு இருந்தாலும், பாரத நாட்டை விட்டு வேறு எங்கோ வாழ்ந்தாலும், ஸ்ரீ ரங்கம், திருப்பதி போன்ற திவ்ய தேசத்தில், 'பெருமாளையே நினைத்து கொண்டு இருக்கும் ஒரு அடியார் (மகாத்மா) மனதில், ஒரு ஓரத்திலாவது இடம் பெற்று விட வேண்டும்

என்கிறார் ராமானுஜர்.

'அடியார்கள் மனதில் ஒரு ஓரத்திலாவது, நம்மை பற்றியும் ஒரு நல்ல அபிமானம் பெற்று விட வேண்டும்

என்று சொல்கிறார் ராமானுஜர்.


அப்படி நாம் அடியார்களின் அபிமானத்துக்கு பாத்திரமாகிவிட்டால் 

அந்த மகாத்மா 

'ஐயோ! இவன் நல்ல பிள்ளையாயிற்றே! இவன் பெருமாளுக்கு கைங்கர்யம் செய்யாமல், யாருக்கோ, எங்கோ வாழ்கிறானே! 

குடும்ப சுமையில் தவிக்கிறானே! இவனுக்கு ஒரு நல்ல வழி அமையட்டுமே !" 

என்று நம்மை பற்றியும் ஒரு வேளை நினைத்து விட்டால், அந்த அடியாரின் மனக்குறையை தீர்க்க, பெருமாள்  நமக்கும் கருணை செய்து விடுவார்.





அந்த அடியார்/பக்தன்/மகாத்மா (குரு) ஆசைபட்டதற்காக, வழி தவறி போன நம் வாழ்க்கையை மாற்றி காட்டுவார்


தன் பக்தன் ஆசைபட்டதற்காக,

  • நாம் இருக்கும் இடத்தையே வைகுண்டம் ஆக்குவார். 
  • நம் மனதிலும் தெய்வ சிந்தனை ஏற்பட செய்வார். 
  • தன்னை பற்றி நினைக்க செய்வார். 
  • வரும் ஆபத்துக்கள் தானாக விலகுவதை உணர செய்வார். 
  • தான் இருப்பதை உணர செய்வார்.
  • கடைசியில் தன் அடியார் குழுவில் சேர்த்து கொண்டு

வைகுண்டம் வரை அழைத்து சென்று விடுவார்.


இப்படி, 'வழி தவறி போனவர்கள் அடியார்களின் அபிமானத்துக்காவது பாத்திரமாகி விட வேண்டும்

என்று சுலபமான வழியை காட்டுகிறார் ஸ்ரீ ராமானுஜர்.


குருநாதர் துணை...

Tuesday 17 November 2020

எந்த வித கெட்ட பழக்கமும் இல்லாதவருக்கு கூட கேன்சர் வருகிறதே! ஏன்?

எந்த வித கெட்ட பழக்கமும் இல்லாதவருக்கு கூட கேன்சர் வருகிறதே! ஏன்?




சிலர் 80 வயதிலும் புகைத்து கொண்டு, குடித்து கொண்டு உயிரோடு இருக்கிறார்கள். எப்படி?


மனித ரத்தத்தை வெளியோட்டமாக பார்த்தால் கூட சிவப்பாக தான் தெரியும். ரத்தத்தை வெளியோட்டமாக பார்த்து விட்டு 'மனிதன் அனைவரும் ஒன்று தான்' என்று கூட சொல்ல தோன்றும். 

ஆனால்,

ரத்தத்தில் 'பல வகை உண்டு' என்பதே உண்மை. 

ஒரு ரத்தம் அடுத்த ரத்தத்தோடு சேராது. மீறி செலுத்தினால் 'உயிருக்கே ஆபத்தாகி கூட முடிந்து விடும்' என்பதும் உண்மை.


ரத்தத்திலும் யாவருக்கும் பொதுவான ரத்த வகையும் இருக்கிறது.

அது போல,

மனிதர்களில் யாவருக்கும் பொதுவான மகான்கள் இருக்கிறார்கள்.


மனிதர்கள் உடல் ரீதியாக பல விதத்தில் வேறுபடுகிறார்கள்.


ஒவ்வொருவரின் 'எதிர்ப்பு சக்தியும்' வேறுபாடு கொண்டது. 


ஒவ்வொருவர் 'எண்ணமும், லட்சியமும்' வேறுபட்டு இருக்கிறது.


ஒவ்வொருவர் 'உணவு பழக்கமும்' வேறுபட்டு இருக்கிறது.


ஒரு சில வருடங்கள் சிகரெட்டை புகைத்தாலே, சிலருக்கு கேன்சர் வருகிறது.

அதே சமயம், 80 வயது வரை ஊதி தள்ளினாலும், சாகாமல் சிலர் இருக்கிறார்கள். 

அவரவர் எதிர்ப்பு சக்தியை பொறுத்தே நோய்கள் தாக்குகிறது.


ஆனால், எதிர்ப்பு சக்தி நமக்கு எத்தனை உள்ளது? என்பது விடை தெரியாத கேள்வி...

அதனாலேயே நாம் கவனமாக இருக்க வேண்டியது அவசியமாகிறது.


தினமும் மூன்று வேளையும் நாம் வாயில் போட்டு கொள்ளும் உணவையெல்லாம், இந்த வயிறு அரைத்து செமிக்க வேண்டியிருக்கிறது

இந்த வேலையை ஒரு நாள் அல்ல, ஒரு வருடம் அல்ல..100 வயது வரை இந்த வயிறு செய்ய வேண்டும்..

அப்படியென்றால், 

நாம் எத்தனை கவனமாக இருக்க வேண்டும்? என்று எண்ணி பார்க்க வேண்டும்.


நம் ஹிந்து சாஸ்திரம், 'இரண்டு வேளை சாப்பிட்டாலே அதிகம்' என்று சொல்கிறது...

ஒரு வேளை சாப்பிடுபவன் - யோகி.

இரண்டு வேளை சாப்பிடுபவன் - போகி.

மூன்று வேளை சாப்பிடுபவன் - ரோகி (நோயாளி)

என்று சொல்கிறது..


ஹிந்து தர்மத்தில், 100 வயது வரை ஆரோக்கியமாக வாழ, 'மாதத்தில் 2 நாள் (ஏகாதசி அன்று) இந்த வயிற்றுக்கு ஓய்வு கொடுக்க வேண்டும்' என்று விதிக்கப்படுகிறது. 


நம் பாட்டனார்கள் வரை, மாதத்தில் 2 நாளாவது விரதம் இருந்தனர் என்று பார்க்கிறோம்.


'அதிகபட்சம் மூன்று வேளை தான் சாப்பிட வேண்டும்' என்ற முறையை சொல்லியும், இன்று நொறுக்கு தீனியும் சேர்ந்து கொண்டு வயிற்றுக்கு ஓய்வே கிடையாது என்ற நிலையாகிவிட்டது.


இப்படி வாழ்பவர்களுக்கு, 60 வயதிலேயே 100 வயதுக்கான வேலையை செய்து வயிறு ஓய்ந்து விடுகிறது.. வயிற்று உபாதைகள் வந்து விடுகிறது.


பெரும்பாலான நோய்கள் வயிற்றிலிருந்து தான் ஆரம்பிக்கிறது.





உடல் உழைப்பும் இன்று பெரும்பாலானவர்களுக்கு கிடையாது.

ப்ராணாயாமம் செய்து இதயத்தை, நுரையீரலை வலுப்படுத்தும் முறையும் கிடையாது.

நம் எதிர்ப்பு சக்தி என்ன? என்பது நமக்கு தெரியாது.

மாதத்தில் 2 நாள் வயிற்றுக்கு ஓய்வும் கொடுப்பதும் கிடையாது.


மூன்று வேளைக்கும் மேலே சாப்பிட்டு கொண்டு, மாதத்தில் 2 நாள் ஓய்வும் கொடுக்காமல் இருப்பதால்,

எந்த வித கெட்ட பழக்கமும் இல்லாதவர்களுக்கு கூட கேன்சர் வந்து விடுகிறது. 

அகால மரணம் ஏற்பட்டு விடுகிறது. 

இதில் நாம் அனைவருமே ஏறத்தாழ சிக்கி விட்டோம் என்பதே உண்மை.


நம் எதிர்ப்பு சக்தி என்ன? என்பது நமக்கு தெரியாத போது, 

முடிந்தவரை மூன்று வேளையோடு வாயை கட்டி போட வேண்டும்.

மாதத்தில் 2 நாள் விரதம் இருந்து,

மேலும் உடலை கெடுக்கும் சிகரெட், குடியை தவிர்த்து,

கொஞ்சம் பிராணாயாமம் செய்து, குனிஞ்சு நிமிர்ந்து சூரிய நமஸ்காரம் செய்து, 

கொடுக்கப்பட்ட ஆயுளை 90%வது ஆரோக்கியமாக வைத்து, வாழ முயற்சிக்கலாம்.


ப்ராம்மணர்கள் ஒழுங்காக சந்தியா வந்தனம் செய்தால், அதிலேயே பல பயிற்சிகள் இருப்பதை அறியலாம்...


அபிவாதயே சொல்லி குனியும் போதும்

நான்கு திசைகளில் தேவதைகளை சுற்றி சுற்றி நமஸ்கரிக்கும் போதும்,

சூரியனை உச்சி வேளையில் தலை தூக்கி முதுகு தண்டை நேராக வைத்து, சூரியனை பார்த்து நமஸ்கரிக்கும் போதும், மந்திரத்தோடு, உடற்பயிற்சியும் இருப்பதை அறியலாம்...


மதியம் சூரியனை பார்த்து சந்தியாவந்தனம் செய்யும் போது, vitamin D குறை வருவதே இல்லை என்ற உண்மையை அறியலாம்.


மதியம் "ஆப: புனந்து ப்ருத்வீம்.." என்று சொல்கிறோம்.

உணவை பற்றி சொல்லும் இந்த மந்திரம் காலையிலும், மாலையிலும் கிடையாது...

இந்த மந்திரத்தின் அர்த்தம் தெரிந்தால், 'ஒரு நாளுக்கு ஒரு வேளை சாப்பிட்டால் போதும்' என்று சொல்லும் ரகசியம் புரியும். 


மதியம் சூரியனை பார்த்து சொல்லும் மந்திரத்தின் அர்த்தம் புரிந்தால், நாமும், நம்மை சூழ்ந்துள்ள அனைவரும் 100 வயது ஆரோக்கியமாக, உற்றார் உறவினரோடு, பேசிக்கொண்டு, கேட்டுக்கொண்டு, மரியாதையோடு, புகழோடு வாழ ப்ரார்த்திக்கிறோம் என்ற உண்மை புரியும்.


சரியான உணவு பழக்கமும், 

ஏகாதசி விரதமும், 

ப்ராணாயாமமும், 

உடற்பயிற்சியும் இருந்தால், 

நோய் அண்டாமல் வாழும் நாட்கள் வரை வாழலாம். 

இதை முடிந்தவரை முயற்சிப்போம்.

குருநாதர் துணை.

Sunday 15 November 2020

ஸ்கந்தம் 1: அத்யாயம் 9 - பீஷ்ம ஸ்துதி (தமிழ் அர்த்தத்துடன்) - ஸ்ரீமத் பாகவதம்

பீஷ்ம ஸ்துதி
ஸ்கந்தம் 1: அத்யாயம் 9

'வேதவியாசர்' வேதத்தையும், தான் இயற்றிய மகாபாரத இதிகாசத்தை அவரது சிஷ்யரான "வைசம்பாயனருக்கும்', சூத குலத்தவரான 'ரோமஹர்சணருக்கும்' சொல்லி வைத்தார். தான் இயற்றிய பாகவதத்தை சுக ப்ரம்மத்துக்கு மட்டும் சொல்லி வைத்தார். பிராம்மண தாய்க்கும் (spiritual), க்ஷத்ரியத் தந்தைக்கும் (protection) பிறந்தவர்களை, 'சூதர்கள்' என்று அடையாளம் கண்டனர். ரோமஹர்சணர், இதிகாச புராணங்களை (மகாபாரதம், இராமாயணம்), ஸ்மிருதிகளை மன்னர்கள் மற்றும் ரிஷிகளுக்கு விரிவாக விளக்குவார். ஆதலால் 'சூத பௌராணிகர்' என்று அழைக்கப்பட்டார். 'பௌராணிகன்' என்றால் உபன்யாசம் செய்பவர் என்று அர்த்தம்.

அர்ஜுனனின் பேரனும், அபிமன்யுவின் மகனுமான, பரிக்ஷித்துக்கு, 'சுக ப்ரம்மம்' ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவை பற்றி கூறும் 'பாகவதத்தை' உபதேசித்தார்.



சுகரும், பரிக்ஷித்தும் பேசியதை அங்கு குழுமி இருந்த பல ரிஷிகள் கேட்டனர். அப்போது, அங்கு இருந்த ரோமஹர்சணரின் புத்திரனான உக்கிரசிரவசும் கேட்டார்.
அர்ஜுனனின் கொள்ளுப்பேரனும், அபிமன்யுவின் பேரனும், பரிக்ஷித்தின் மகனுமான ஜனமேஜயனுக்கு, வைசம்பாயனர் அவனுடைய குடும்ப சரித்திரமான மஹாபாரத சரித்திரத்தை கூறினார்.
பிறகு, உக்கிரசிரவஸ் என்ற சூத பௌராணிகர், தான் கேட்ட பாகவதத்தை, ப்ருகு ரிஷியின் வழியில் தோன்றிய சௌனக ரிஷிக்கு சொல்ல வந்தார்.
ப்ராம்மணரான சௌனக ரிஷி, தன் ஆயிரக்கணக்கான சிஷ்யர்களுடன், ஆயிரக்கணக்கான ரிஷிகளுடன் கீழே அமர்ந்து கொண்டு, பெரிய ஆசனத்தில் சூத பௌராணிகரான உக்கிரசிரவஸை அமர வைத்து, பாகவத, மஹாபாரத சரித்திரத்தை ஆசையுடன் கேட்டார்கள்.

மஹாபாரத போர் முடிந்து, இறந்து போன அனைத்து சொந்தங்களுக்கும், பாண்டவர்கள் கங்கையில் ஈம காரியங்களை செய்து, கங்கா தீர்த்தத்தால் தர்ப்பணம் செய்தனர்.


பெரும் சோகத்தில் இருந்தார் யுதிஷ்டிரர்.

கிருஷ்ண பரமாத்மா துவாரகை செல்ல முடிவு செய்து கிளம்ப, அந்த சமயத்தில், அஸ்வத்தாமா உத்தராவின் கர்ப்பத்தில் இருக்கும் சிசுவை நோக்கி பிரம்மாஸ்திரம் எய்து விட்டான்.

மந்திர பலத்தில், சிசுவை தாக்க வந்த பிரம்மாஸ்திரத்தை கண்டு ஸ்ரீ கிருஷ்ணரிடம் சரணடைந்தாள்.
கட்டை விரல் அளவுக்கு ரூபம் எடுத்து, கர்ப்பத்தில் இருக்கும் சிசுவை காப்பாற்றினார் பரமாத்மா.


துவாரகை செல்ல தேரில் ஏற, அத்தையான குந்தி தேவி, ஸ்ரீ கிருஷ்ணன் தங்கள் குடும்பத்துக்கு செய்த உதவியை நினைத்து ஸ்துதி செய்தாள்.

கிருஷ்ணனே 'பரமாத்மா நாராயணன்' என்று சொல்லி நமஸ்கரித்தாள்.


துன்பம் வரும்போதெல்லாம் கூடவே இருந்த கிருஷ்ணரின் கருணை நினைத்து, ஆச்சர்யமாக, 'தனக்கு துக்கமே கொடுக்க வேண்டும்' என்று கூட வேண்டினாள்.


பிறகு, யுதிஷ்டிரர் 'இப்போது துவாரகை போக வேண்டாம்' என்று மன்றாடி கேட்டுக்கொண்டார். மீறமுடியாமல் கிருஷ்ணர் அங்கேயே இருந்தார்.


'தன்னால் தான் இத்தனை குடும்பங்கள் நாசமாகி போனது.

சொத்து சண்டையில் இப்படி அநியாயம் செய்து விட்டேனே' என்று வருந்தினார்.
'தனக்கு வெளி வரமுடியாத நரகமே கிடைக்கும்' என்று கூட சொல்லி சொல்லி அழுதார்.

இந்த நிலையில்

ஸூத உவாச (சூத பௌராணிகர் பேசுகிறார்)

இதி பீத: ப்ரஜா த்ரோஹாத்

ஸர்வ தர்ம விவித்சயா | 

ததோ வினஷனம் ப்ராகாத்

யத்ர தேவவ்ரத பதத் ||

सूत उवाच

इति भीत: प्रजा-द्रोहात् सर्व-धर्म विवित्सया । ततो विनशनं प्रागाद् यत्र देव-व्रत: अपतत् ॥ 1

"இப்படி (இதி) பல லட்ச மக்களை கொன்று! பெரும் துரோகம் செய்து! (ப்ரஜா த்ரோஹாத்) தான் அதர்மம் செய்து விட்டோமோ?" என்று தர்மபுத்திரர் (யுதிஷ்டிரர்) பயந்தார் (பீத:)

தானே அனைத்து தர்மம் விஷயங்களையும் அறிந்து இருந்தாலும் (ஸர்வ தர்ம விவித்சயா), இந்த மனோ நிலையில், தன் தாத்தா பீஷ்மர் (தேவவ்ரத) எங்கு (யத்ர) அம்பு படுக்கையில் கிடந்தாரோ (அபதத்), அந்த (ததோ) போர்க்களத்திற்கு வந்தார் (வினஷனம் ப்ராகாத்). 

ததா தே ப்ராதர: சர்வே

த் ஸ்வை: ஸ்வர்ண பூஷிதை: |

அன்வ கச்சன் ரதைர் விப்ரா

வ்யாச தொளம்ய தயஸ் ததா ||

तदा ते भ्रातर: सर्वे सद्-अश्वै: स्वर्ण-भूषितै: । अन्वगच्छन् रथै: विप्रा व्यास-धौम्य-आदय: तथा ॥ 2

அப்பொழுது (ததா) அவருடைய (தே) சகோதரர்கள் அனைவரும் (ப்ராதர: சர்வே), தங்க கவசங்கள் அணிந்திருந்த (ஸ்வர்ண பூஷிதை:) உயர்ந்த ரக குதிரைகள் (சத் அஸ்வை:) பூட்டப்பட்ட அவரவர்களுடைய தேரில் (ரதைர்) அமர்ந்து, ஒருவர் பின் ஒருவராக (அன்வ கச்சன்) தொடர்ந்து வந்தனர்.

அவர்களை தொடர்ந்து ப்ராம்மணர்களான (விப்ரா) வேத வியாசரும், வ்யாக்ரபாதரின் பிள்ளையும், பாண்டவர்களின் குருவான தொளம்யரும் (வ்யாச தொளம்ய), மேலும் (ததா) பலரும் (ஆதயஸ்) தொடர்ந்து வந்தனர். 

பகவானபி விப்ரர்ஷே

தேன ச-தனஞ்சய: |

ஸ தைர் வ்யரோசத ந்ருப:

குவேர இவ குஹ்யகை: ||

भगवानपि विप्रर्षे रथेन स-धनञ्जय: । स तै: व्यरोचत नृप: कुवेर इव गुह्यकै: ॥ 3

இப்படி ப்ராம்மணர்களும் (விப்ரர்ஷே) கிளம்பி செல்ல,  தேரில் (ரதேன) அர்ஜுனனோடு (ச-தனஞ்சய:) தானும் கூட அமர்ந்து கொண்டு வந்தார், கிருஷ்ண பரமாத்மா (பகவானபி).

இப்படி பலரும் (ஸ தைர்) பின் தொடர்ந்து வர, பிரபுவாக இருக்கும் (வ்யரோசத) யுதிஷ்டிரரை (ந்ருப:) கண்ட போது, உலக செல்வங்களை தன் கையில் கொண்டிருக்கும் குபேரன் (குவேர) தன் பரிவாரங்களுடன் (இவ குஹ்யகை:) வருவது போல இருந்தது.

த்ருஷ்டா நிபதிதம் பூமௌ

திவஸ் ச்யுதம்வ அமரம் |

ப்ரணேமு: பாண்டவா பீஷ்மம்

னுகா: சஹ சக்ரினா ||

द‍ृष्ट्वा निपतितं भूमौ दिव: च्युतम् इव अमरम्

प्रणेमु: पाण्डवा भीष्मं स नुगा: सह चक्रिणा ॥

அமரர்களான தேவர்கள் (அமரம்) ஆகாயத்திலிருந்து (திவஸ்)  பூமியில் விழுந்தது (ச்யுதம்) போல (இவ), போர்க்களத்தில் பீஷ்ம தாத்தா பூமியில் (பூமௌ) கிடப்பதை (நிபதிதம்) பார்த்தனர் (த்ருஷ்டா).

பீஷ்ம தாத்தாவை (பீஷ்மம்) பாண்டவ (பாண்டவா) சகோதர்களும் (ச அனுகா:), சக்ர-தாரியுமான வாசுதேவ கிருஷ்ணரும் (சஹ சக்ரினா) நமஸ்கரித்தனர் (ப்ரணேமு:). 

தத்ர ப்ரம்மர்ஷய: சர்வே

தேவர்ஷய: ச சத்தம | 

ராஜர்ஷய: ச தத்ர ஸன்

த்ரஷ்டும் பரத புங்கவம் ||

तत्र ब्रह्मर्षय: सर्वे देवर्षयश्च सत्तम ।

राजर्षयश्च तत्र सन् द्रष्टुं भरत पुङ्गवम् ॥

பரத குலத்திற்கே ரத்தினமான (பரத புங்கவம்) பீஷ்மரை தரிசிக்கும் (த்ரஷ்டும்) ஆசையில், அங்கு (தத்ர)  ப்ரம்ம ரிஷிகளும் (ப்ரம்மர்ஷய:), அனைத்து (சர்வே) தேவ ரிஷிகளும் (தேவர்ஷயஸ் ச), கூடிவிட்டனர் (சத்தம). அங்கு (தத்ர) ராஜ ரிஷிகளும் (ராஜர்ஷயஸ் ச) வந்து சேர்ந்தனர் (ஆஸன்)

பர்வதோ நாரதோ தொளம்யோ

பகவான் பாதராயன: |

ப்ருஹதஷ்வோ பரத்வாஜ:

சிஷ்யோ ரேணுகாசுத: || 

வசிஷ்ட இந்த்ர ப்ரமத:

த்ரிதோ க்ருத்சமத: சித: |

கக்ஷீவான் கௌதம: த்ரி:

கௌசிக த சுதர்ஷன:॥

पर्वतो नारदो धौम्यो भगवान् बादरायण: ।

बृहदश्वो भरद्वाज: सशिष्यो रेणुकासुत: ॥

वसिष्ठ इन्द्र-प्रमद: त्रितो गृत्समद: सित: ।

कक्षीवान् गौतम: त्रिश्च कौशिक: थ सुदर्शन: ॥

பர்வத முனியும், நாரதரும், தொளம்யரும், வ்யாஸ பகவானும் (பகவான் பாதராயன:), ப்ருஹதஷ்வரும், பரத்வாஜ ரிஷியும் அவரது சிஷ்யர்களும், ரேணுகாவின் புத்திரனாக அவதரித்த பரசுராமரும் (ரேணுகாசுத:), வசிஷ்டரும், இந்த்ர ப்ரமதரும், த்ரிதரும், க்ருத்சமதரும், அசிதரும், கக்ஷீவானும், கௌதமரும், அத்ரி ரிஷியும், கௌசீகரும், சுதர்சனரும் அங்கு ப்ரத்யக்ஷம் ஆகி இருந்தனர்.




அன்யே ச முனயோ ப்ரஹ்மன்

ப்ரஹ்மராத ஆதய அமலா: |

சிஷ்யை: உபேதா ஆஜஃமு:

கஷ்யப ங்கிரச தய: ||

अन्ये च मुनयो ब्रह्मन् ब्रह्मरात दय: मला: ।

शिष्यै: पेता आजग्मु: कश्यप ङ्गिरस दय: ॥

அவர்களை தவிர, அப்பழுக்கற்ற (அமலா:) மேலும் (அன்யே ச)  பல முனிவர்கள், பிராம்மணர்கள் (முனயோ ப்ரஹ்மன்), ப்ரம்ம அனுபூதியில் உலகையே மறந்த ஞானிகளும் (ப்ரஹ்மராத) குழுமியிருந்தனர் (ஆதய). 

கஷ்யபரும், ஆங்கீரசரும் (கஷ்யப ஆங்கிரச) தங்கள் சிஷ்யர்களோடு (சிஷ்யைர் உபேதா) வந்து (ஆஜஃமு:) சேர்ந்து விட்டனர் (ஆதய).

தான் சமேதான் மஹா பாகான்

உபலப்ய வசு உத்தம: |

பூஜயாமாச தர்மஞ்யோ

தேச கால விபாகவித் ||  

तान् समेतान् महाभागान् पलभ्य वसु त्तम: ।

पूजयामास धर्मज्ञो देशकाल विभागवित् ॥

இப்படி மஹாத்மாக்களான (மஹா பாகான்) இவர்கள் அனைவரும் (தான்) வந்து சேர்ந்து நிற்க (சமேதான்), 8 வசுக்களில் ஒருவரான உத்தமர் பீஷ்மர் (வசு உத்தம:), அனைவரையும் வரவேற்றார் (உபலப்ய).

தேச, காலத்தின் வேறுபாடு தெரிந்தும் (தேச கால விபாகவித்), தர்மாத்மாவான (தர்மஞ்யோ) பீஷ்மர் இந்த நிலையிலும், அனைவரையும் பூஜித்தார் (பூஜயாமாச).

க்ருஷ்ணம் ச தத் ப்ரபாவஞ்ய

ஆஸீனம் ஜகதீஸ்வரம் |

ஹ்ருதிஸ்தம் பூஜயாமாச

மாயயா பாத்த விக்ரஹம் ||

कृष्णं च तत् प्रभावज्ञ आसीनं जगदीश्वरम् ।

हृदिस्थं पूजयामास मायया पात्त विग्रहम् ॥

உலகத்துக்கே ஈஸ்வரனும் (ஜகதீஸ்வரம்), அனைவரது இதயத்தில் வசிப்பவரும் (ஹ்ருதிஸ்தம்), தன் மாய சக்தியால் (மாயயா), ரூபம் தரித்து (விக்ரஹம்) அவதரித்து (உபாத்த) அமர்ந்து கொண்டு (ஆஸீனம்) இருக்கும் கிருஷ்ணரையும் (க்ருஷ்ணம் ச), அவர் மகத்துவம் தெரிந்திருந்த (ப்ரபாவஞ்ய), பீஷ்மர் பூஜித்தார்.

பாண்டு புத்ரான் பாசீனான்

ப்ரஸ்ரய ப்ரேம சங்கதான் |

அப்யாசஷ்னுராக ஸ்ரை:

அந்தீ பூதேன சக்ஷுஷா ||

पाण्डु पुत्रान् पासीनान् प्रश्रय प्रेम सङ्गतान् ।

अभ्याचष्ट नुराग श्रै: न्धीभूतेन चक्षुषा ॥

பீஷ்ம தாத்தாவின் பாசத்தை நினைத்து (ப்ரஸ்ரய ப்ரேம சங்கதான்), கண்ணீர் விட்டு கொண்டே, அமைதியாக பாண்டவ சகோதரர்கள் அமர்ந்து (பாண்டு புத்ரான் உபாசீனான்) இருந்தனர்.

இவர்களை கவனித்த (சக்ஷுஷா) பீஷ்மர், பெருமகிழ்ச்சியுடன் (அந்தீ பூதேன) ஆனந்த கண்ணீருடன் (அனுராக அஸ்ரை:), பாரத போரில் வெற்றி கண்ட பாண்டவர்களை பாராட்டினார் (அப்யாசஷ்ட).

(பீஷ்மர் பேசுகிறார்) பீஷ்ம உவாச

அஹோ கஷ்டம் அஹோ ந்யாய்யம்

யத் யூயம் தர்ம நந்தனா: |

ஜீவிதும் ந ர்ஹத க்லிஷ்டம்

விப்ர தர்மாத் ச்யுத ஸ்ரயா: ||

भीष्म उवाच

अहो कष्टम् हो न्याय्यं यद् यूयं धर्म-नन्दना: ।

जीवितुं न र्हथ क्लिष्टं विप्र धर्मा च्युत श्रया: ॥

தர்ம புத்ரா !! (தர்ம நந்தனா:) நீங்கள் அனைவரும் (யூயம்), ஐயோ, எத்தனை (யத்) கஷ்டங்கள்! (அஹோ கஷ்டம்) ஐயோ, அநியாயங்களை! (அஹோ அந்யாய்யம்) எதிர்கொண்டீர்கள்.
இனி வாழ முடியுமா? (ஜீவிதும் ந அர்ஹத) என்ற அளவுக்கு உங்களுக்கு துன்பங்கள் சம்பவித்ததே (க்லிஷ்டம்)! இந்த கஷ்ட காலங்களில், உங்களை ப்ராம்மணர்களும் (விப்ர), உங்கள் தர்மமும் (தர்மாத்), உங்களை விட்டு என்றுமே பிரியாத அச்சுதனான கிருஷ்ணரும் (அச்யுத) தானே உங்களை காத்தனர் (ஆஸ்ரயா:).

சம் ஸ்திதே திரதே பாண்டௌ

ப்ருதா பாலப்ரஜா வது: |

யுஸ்மத் க்ருதே பஹுன் கலேசான்

ப்ராப்தா தோகவதி முஹு: ||

संस्थिते तिरथे पाण्डौ पृथा बालप्रजा वधू: ।

युष्मत्कृते बहून् क्लेशान् प्राप्ता तोकवती मुहु: ॥

என் அருமை மருமகள் (வது:) குந்தி (ப்ருதா), அதி-ரதனான பாண்டுவின் (அதிரதே பாண்டௌ) இறப்பிற்கு பிறகு (சம் ஸ்திதே), பல குழந்தைகளுடன் (பாலப்ரஜா) கஷ்டத்தை அனுபவித்தாள். நீங்கள் வளர்ந்த பிறகும் (தோகவதி), உங்களின் செயல்களால் (யுஸ்மத் க்ருதே) தொடர்ந்து (முஹு:) பலவித கஷ்டத்தையே (பஹுன் கலேசான்) அனுபவித்தாள் (ப்ராப்தா).




சர்வம் காலக்ருதம் மன்யே

பவதாம் ச யத் ப்ரியம் |

ச-பால: யத்வசே லோக:

வாயோர் இவ கனாவலி: ॥

सर्वं कालकृतं मन्ये भवतां च यद् प्रियम् ।

स-पालो यद्वशे लोको वायोरिव घनावलि: ॥

உங்களுக்கு (பவதாம் ச) என்னென்ன கசப்பான சம்பவங்கள் நேர்ந்ததோ (யத் அப்ரியம்), அவையெல்லாம் (சர்வம்) தலைவிதி (காலக்ருதம்) என்றே என் மனதுக்கு தோன்றுகிறது (மன்யே).
எப்படி மேக கூட்டங்களை (கனாவலி:) தன் ஆளுமையில் காற்று (வாயோர்) கொண்டுபோகிறதோ, அது போல (இவ), இந்த உலகத்தில் (லோக:) இருக்கும் அனைவரின் காலத்தையும் (யத்வசே) ஒருவர் கட்டுப்படுத்தி பரிபாலிக்கிறார் (ச-பால:).

யத்ர தர்மசுத: ராஜா

கதாபானிர் வ்ருகோதர: |

க்ருஷ்ண: ஸ்த்ரி காண்டீவம் சாபம்

சுஹ்ருத் க்ருஷ்ணஸ் ததோ விபத் ||

यत्र धर्मसुतो राजा गदापाणि: वृकोदर: ।

कृष्ण: स्त्री गाण्डिवं चापं सुहृत्कृष्ण तो विपत् ॥

எங்கு (யத்ர) தர்மமே ரூபமான ராஜா யுதிஷ்டிரனும் (தர்மசுத: ராஜா), கதயை ஏந்தி இருக்கும் மஹாபலம் கொண்ட பீமன் இருந்தும் (கதாபானிர் வ்ருகோதர:), காண்டீபமும் வில்லும் (காண்டீவம் சாபம்) கையில் ஏந்தி இருக்கும் (அஸ்த்ரி) பராக்ரமசாலியான க்ருஷ்ணன் என்ற அர்ஜுனன் (க்ருஷ்ண:) இருந்தும், உங்கள் நலனை எப்போதும் விரும்பும் கிருஷ்ணரே (சுஹ்ருத் க்ருஷ்ணஸ்) இருந்தும், இத்தனை கஷ்டங்கள் (ததோ விபத்) நேர்ந்ததே !

ந ஹி அஸ்ய கர்ஹிசித்

ராஜன் பூமான் வேத விதித் சிதம் |

யத் விஜிக்யாசயா யுக்தா

முஹ்யந்தி கவய பி ஹி ||

न ह्यस्य कर्हिचिद् राजन् पुमान् वेद विधित्सितम् ।

यद् विजिज्ञासया युक्ता मुह्यन्ति कवयोऽपि हि ॥

ராஜன் !
யாராலும் (பூமான்) அவர் (அஸ்ய) திட்டத்தை (விதித் சிதம்) எப்பொழுதும் (கர்ஹிசித்) நிச்சயமாக (ஹி) அறிந்து (வேத) கொள்ள முடியாது ().
புலன்களை வென்ற மிகப்பெரிய ஞானிகள் (கவய) கூட (அபி) முழு மூச்சாக தங்களை அர்பணித்து (யுக்தா) அவரை ஆராய்ச்சி செய்தும் (யத் விஜிக்யாசயா), நிச்சயமாக (ஹி) புரிந்து கொள்ள முடியாமல், அவர்களும் திகைத்துப் நிற்கிறார்கள் (முஹ்யந்தி).

தஸ்மாத் இதம் தைவ தந்த்ரம்

வ்யவஸ்ய பரதர்ஷப |

தஸ்ய அனுவிஹித: நாதா நாத

பாஹி ப்ரஜா: ப்ரபோ ||

तस्माद् दिदं दैव-तन्त्रं व्यवस्य भरतर्षभ ।

तस्य नुविहित: नाथा नाथ पाहि प्रजा: प्रभो ॥

ஆகையால் (தஸ்மாத்), பரத குலத்தில் தோன்றிய தர்மபுத்திரா (பரதர்ஷப) ! இவை அனைத்தும் (இதம்) தெய்வ செயல் (தைவ தந்த்ரம்) என்று நிச்சயமாக (வ்யவஸ்ய) அறிந்து கொள்.
அவர் (தஸ்ய) (ஸ்ரீகிருஷ்ணர்) விருப்பப்படி (அனுவிஹித:), அரசே !(ப்ரபோ) நீ அனாதைகளுக்கும் நாதனாக (அநாத: நாத) இருந்து, மக்களை (ப்ரஜா:) காக்க (பாஹி) வேண்டும் இனி.

ஏஷ வை பகவான் சாஷாத்

த்யோ நாராயண: புமான் |

மோஹயன் மாயயா லோகம்

கூடஸ் சரதி வ்ருஷ்ணிசு ||

एष वै भगवान् साक्षाद् द्यो नारायण: पुमान् ।

मोहयन् मायया लोकं गूढश्चरति वृष्णिषु ॥

தர்மபுத்ரா ! இவரே (வை) ஆதி (ஆத்யோ) பகவான், சாஷாத் நாராயணன், ஆதி புருஷன் (புமான்) என்று நிச்சயமாக (ஏஷ) தெரிந்து கொள்.
அந்த ஆதி புருஷனே! தன் மாய சக்தியால் (மாயயா) இந்த உலகை (லோகம்) மயக்க (மோஹயன்) செய்து கொண்டு, இந்த வ்ருஷ்ணி குலத்தில் (வ்ருஷ்ணிசு) ஸ்ரீ கிருஷ்ணராக அவதரித்து, யாரும் புரிந்து கொள்ளமுடியாத (கூடஸ்) வஸ்துவாக சஞ்சரிக்கிறார் (சரதி).




அஸ்ய
னுபாவம் பகவான்

வேத குஹ்யதமம் சிவ: |

தேவர்ஷி நாரத: சாஷாத்

பகவான் கபிலோ ந்ருப ||

अस्य नुभावं भगवान् वेद गुह्यतमं शिव: ।

देवर्षि र्नारद: साक्षाद् गवान् कपिलो नृप ॥

அரசனாக போகும் (ந்ருப) தர்மபுத்திரா ! பகவானாகிய அவருடைய (அஸ்ய) மகத்துவத்தை (அனுபாவம்), வேத ரகசியத்தை (வேத குஹ்யதமம்), சிவபெருமானும், தேவ ரிஷியான நாரதரும், சாஷாத் பகவான் கபிலரும் அறிவார்கள்.

யம் மன்யசே மாதுலேயம்

ப்ரியம் மித்ரம் சுஹ்ருத்தமம் |

அகரோ: சசிவம் தூதம்

சௌஹ்ருதாத் த சாரதிம் ||

यं मन्यसे मातुलेयं प्रियं मित्रं सुहृत्तमम् ।

अकरो: सचिवं दूतं सौहृदाद् थ सारथिम् ॥

அந்த (யம்) ஆதி புருஷனான ஸ்ரீ கிருஷ்ணரை, நம் தாய்வழி உறவினன் (மாதுலேயம்) என்றும், நம் பிரியமுள்ள நண்பன் (ப்ரியம் மித்ரம்) என்றும், என்றுமே இருக்கும் நம் நலம் விரும்பி (சுஹ்ருத்தமம்) என்றும், எதையும் நடத்தி காட்டும் திறன்கொண்டவர் (அகரோ:) என்றும், சரியான ஆலோசனை தருபவர் (சசிவம்) என்றும், நமக்காக தூது சென்றவர் (தூதம்) என்றும், நம் இதயம் தெரிந்து பழகுபவர் (சௌஹ்ருதாத்) என்றும், மேலும் (அத), ரதத்தை ஓட்டும் தேரோட்டி (சாரதிம்) என்றும் நீ நினைத்து இருக்கலாம்.

சர்வ ஆத்மன: சம த்ருஷோ ஹி

த்வயஸ்ய னஹங் க்ருதே: |

தத்க்ருதம் மதி வைசம்யம்

நிரவத் யஸ்ய ந க்வசித் ||

सर्वात्मन: समद‍ृशो हि द्वयस्य नहङ्‍कृते: ।

तत्कृतं मति वैषम्यं निरवद् स्य न क्‍वचित् ॥

இவரே அனைவரிடத்திலும் ஆத்மாவாக (சர்வ ஆத்மன:) இருக்கிறார். அனைவரையும் சமமாகவே பார்க்கிறார் (சம த்ருஷோ).
முழுமையாக (அத்வயஸ்ய) தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்கு அப்பாற்பட்டு (அனஹங் க்ருதே:) அவர் மட்டுமே (ஹி) இருக்கிறார்.
செய்யும் காரியங்களில் (க்ருதம்), தனிப்பட்ட பற்று கொள்வதில்லை (நிரவத் யஸ்ய). அது போல, மனதில் (மதி) வேறு நினைத்துக்கொண்டும் (வைசம்யம்) எந்த நிலையிலும் (க்வசித்) அவர் (தத்) செய்வதில்லை ().

ததாபி ஏகாந்த பக்தேசு

பஸ்ய பூப னுகம்பிதம் |

யன்மே சூன் த்யஜத:

சாஷாத் க்ருஷ்ணோ தர்சனம் கத:॥

तथापि कान्त भक्तेषु पश्य भूप नुकम्पितम् ।

यन्मे सूं त्यजत: साक्षात्कृष्णो दर्शनमागत: ॥

ஏகாந்த பக்தி கொண்டவர்களுக்கே (ஏகாந்த பக்தேசு) பரமாத்மா தரிசனம் (பஸ்ய) கிடைக்கும் என்ற போதும் (தாதாபி), பூமியை வென்றவனே (பூப:)! கருணையின் காரணத்தால் (அனுகம்பிதம்), எந்த சமயத்தில் என் (யன்மே) வாழ்க்கையை (அசூன்) முடித்துக்கொள்ள (த்யஜத:) நினைத்து இருந்தேனோ, அந்த சமயத்தில், சாஷாத் க்ருஷ்ணரே (சாஷாத் க்ருஷ்ணோ) எனக்கு முன் வந்து (ஆகத:) தரிசனம் தந்து கொண்டிருக்கிறார்.

பக்த்யா வேஸ்ய மனோ யஸ்மின்

வாசா யந்நாம கீர்தயன் |

த்யஜந் கலேவரம் யோகி

முச்யதே காம கர்மபி:॥

भक्त्या वेश्य मनो यस्मिन् वाचा यन्नाम कीर्तयन् ।

त्यजन् कलेवरं योगी मुच्यते कामकर्मभि: ॥

எவருக்கு (யஸ்மின்) அலையாத ஒரே எண்ணமும் (பக்த்யா), தீவிர ஈடுபாடு (ஆவேஸ்ய) கொண்ட மனமும் (மனோ), வாக்கினாலும் அந்த கிருஷ்ண நாமத்தை சொல்லிக்கொண்டே (வாசா யந்நாம கீர்தயன்), இருக்கும் நிலையும் ஏற்படுமோ, அப்படிப்பட்ட யோகிகள் உடலை விட்டு (கலேவரம்) தன்னை பிரித்து (த்யஜந்) கொள்ளும் போது, ஆசையினால் (காம) தான் செய்த (கர்மபி:) புண்ணிய-பாப இரட்டையிலிருந்தும் விடுபடுவார்கள் (முச்யதே).

ச தேவதேவோ பகவான் ப்ரதீக்ஷதாம்

கலேவரம் யாவத் இதம் ஹினோமி ஹம் |

ப்ரசன்ன ஹாச ரு லோசன

ல்லஸத் முகாம்புஜோ த்யானபத: சதுர் புஜ: ||

स देवदेवो भगवान् प्रतीक्षतां

कलेवरं यावदिदं हिनोम्यहम् ।

प्रसन्न हास रुण-लोचन ल्लसत्

मुखाम्बुजो ध्यानपथ: तुर्भुज: ॥

கிருஷ்ணா ! தேவாதி தேவா! பகவான்! கொஞ்சம் காத்திருங்கள் (ப்ரதீக்ஷதாம்).
நான் (அஹம்) இந்த (இதம்) உடலை (கலேவரம்) விட்டு (ஹினோமி) என்னை பிரித்து கொள்ளும் வரை (யாவத்), எனக்கு உற்சாகம் தரும் புன்னகை கொண்ட திருமுகம் கொண்ட கிருஷ்ணா! கொஞ்சம் காத்திருங்கள்.
ப்ரசன்னமான முகம் (ப்ரசன்ன ஹாச) கொண்ட, கண்களின் ஓரத்தில் உதய சூரியனில் உள்ள சிவப்பு ஓடும் (அருண லோசன), சர்வ அலங்காரத்துடன் தாமரை போன்ற திருமுகம் கொண்ட (உல்லஸத் முகாம்புஜோ) உங்களை, சதுர் புஜனாக (சதுர் புஜ:) தியானிக்கிறேன் (த்யானபத:).

ஸூத உவாச

யுதிஷ்டிர: தத் கர்ண்ய

சயானம் சரபஞ்சரே |

அப்ருச்சத் விவிதான் தர்மாந்

ருஷீனாம் ச னு ஸ்ருண்வதாம் ||

सूत उवाच

युधिष्ठि: द् कर्ण्य शयानं शरपञ्जरे ।

अपृच्छद् विविधान् र्मान् रुषीणां च नु श‍ृण्वताम् ॥

அம்பு படுக்கையில் (சரபஞ்சரே) படுத்து இருக்கும் (சயானம்) பீஷ்மர் இவ்வாறு (தத்) பேசியதை கேட்ட (ஆகர்ண்ய) யுதிஷ்டிரர், ரிஷிகள் பலர் (ருஷீனாம் ச) சூழ்ந்து இதை கேட்டு கொண்டு இருக்க (அனு ஸ்ருண்வதாம்), தனக்கு பல வித தர்மங்களை (விவிதான் தர்மாந்) உபதேசிக்க வேண்டும் என்று பிரார்த்தித்தார் (அப்ருச்சத்).

புருஷ ஸ்வபாவ விஹிதான்

யதா வர்ணம் யத ஸ்ரமம் |

வைராக்ய ராக பாதிப்யாம்

ம்நாத பய லக்ஷணான் ||

पुरुष स्वभाव विहितान् यथावर्णं यथाश्रमम् ।

वैराग्य राग पाधिभ्याम् म्नात: भय लक्षणान् ॥

மனிதர்களின் குணத்தை (புருஷ ஸ்வபாவ) அடிப்படையாக கொண்டு (யதா) வரையறுக்கப்பட்ட (விஹிதான்) வர்ணங்களை பற்றியும் (வர்ணம்),
மனிதர்களின் குணத்தை (புருஷ ஸ்வபாவ) அடிப்படையாக கொண்டு (யதா) வரையறுக்கப்பட்ட (விஹிதான்), வாழ்க்கை முறையையும் (ஆஸ்ரமம்),
பற்று (ராக), பற்றற்ற (வைராக்ய) நிலை இரண்டும் (உபய) கொடுக்கும் பலன்களை (உபாதிப்யாம்), இவர்களின் லக்ஷணங்களை (லக்ஷணான்) வரிசையாக சொல்லி விளக்கினார் (ஆம்நாத) பீஷ்மர்.

தான-தர்மான் ராஜ-தர்மான்

மோஷ தர்மான் விபாக ச: |

ஸ்த்ரீ-தர்மான் பகவத்-தர்மான்

சமாஸ வ்யாஸ யோகத:॥

दान-धर्मान् राज-धर्मान् मोक्ष-धर्मान् विभागश: ।

स्त्री-धर्मान् भगवद्-र्मान् समास व्यास योगत: ॥

தானம் செய்யும் போது பின்பற்ற வேண்டிய தர்மத்தை பற்றியும் (தான-தர்மான்),
அரசர்கள் பின்பற்ற வேண்டிய தர்மத்தை பற்றியும் (ராஜ-தர்மான்),
மோக்ஷம் அடைய பின்பற்ற வேண்டிய தர்மத்தை பற்றியும் (மோஷ தர்மான்),
பிரித்து விவரித்து, மேலும் (விபாக ச:),
பெண்கள் பின்பற்ற வேண்டிய தர்மத்தை பற்றியும் (ஸ்த்ரீ-தர்மான்),
பக்தர்களான பாகவதர்கள் பின்பற்ற வேண்டிய தர்மத்தை பற்றியும் (பகவத்-தர்மான்),
சுருக்கமாகவும் விரிவாகவும் (சமாஸ வ்யாஸ) விளக்கி சொன்னார் (யோகத:) பீஷ்மர்.




தர்ம அர்த காம மோஷாம்ஸ் ச

ஸஹ உபாயான் யதா முனே |

நாநா ஆக்யாந இதிஹாசேசு

வர்ணயாம் ஆஸ தத்வ வித் ||

धर्मार्थ काम मोक्षांश्च सह उपायान् यथा मुने ।

नाना आख्यान इतिहासेषु वर्णयामास तत्त्व वित् ॥

அறம், பொருள், இன்பம், வீடு (தர்ம அர்த காம மோஷாம்ஸ் ச) என்ற நான்கு புருஷார்த்தங்களை ரிஷிகள் சொன்னபடி (யதா முனே) பல உதாரணங்களுடன் (ஸஹ உபாயான்), பல (நாநா) நடந்த சரித்திரங்கள் (இதிஹாசேசு) சொன்னபடியே (ஆக்யாந) வர்ணித்து (வர்ணயாம் ஆஸ) தத்துவத்தை விளக்கினார் (தத்வ வித்)

தர்மம் ப்ரவதத: தஸ்ய ச

கால: ப்ரத்யுபஸ்தித: |

யோ யோகின: சந்த ம்ருத்யோர்

வாஞ்சித: து உத்தராயண: ||

धर्मं प्रवदत: स्य स काल: प्रत्युपस्थित:

यो योगिनश्छन्द मृत्यो: वाञ्छित: तु उत्तरायण: ||

இப்படி பல தர்மங்களை (தர்மம்) உபதேசித்து (ப்ரவதத:) கொண்டிருந்த பீஷ்மருக்கு (தஸ்ய ச) அவர் எதிர்பார்த்த (ப்ரத்யுபஸ்தித) காலம் (கால:) வந்தது. தான் விரும்பிய போது மரணிக்கலாம் (சந்த ம்ருத்யோர்) என்ற வரம் பெற்று இருந்த அந்த யோகியான பீஷ்மர் (யோ யோகின) தான் விரும்பும் (வாஞ்சித: து) உத்தராயண புண்ய காலம் வந்ததை உணர்ந்தார்.

தத உபசம்ஹ்ருத்ய கிர: சஹஸ்ரனி:

விமுக்த சங்கம் மன ஆதிபுருஷே ||

க்ருஷ்ணே லஸத்-பீத-படே சதுர்புஜே

புரஸ்திதே அமீளித த்ருக் வ்யதாரயத் ||

तद् उपसंहृत्य गिर: सहस्रणी- र्विमुक्त सङ्गं मन आदि-पूरुषे ।

कृष्णे लसत् पीत पटे चतुर्भुजे पुर:स्थिते अमीलित द‍ृग् व्यधारयत् ॥

தர்ம சம்பந்தமான விஷயங்களை தர்மபுத்ரருக்கு உபதேசித்த ஆயிரம் சாஸ்திரங்களை அறிந்த (சஹஸ்ரனிர்) பீஷ்ம தாத்தா, அந்த சமயத்திலேயே (தத) தன் பேச்சை (கிர:) முழுவதுமாக நிறுத்திக்கொண்டு (உபசம்ஹ்ருதய) பற்றுதலை விட்டு (விமுக்த சங்கம்) மனதை (மன) ஆதி புருஷனிடம் (ஆதிபுருஷே) திருப்பினார். பளபளபாக பிரகாசமாக மின்னும் பீதாபரத்தை (லஸத்-பீத-படே) அணிந்து இருக்கும், நான்கு கைகளுடன் (சதுர்புஜே), கண் எதிரே நின்று கொண்டு (புரஸ்திதே) இருக்கும், ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவின் மீது பீஷ்மருடைய அகன்ற பார்வை (அமீளித த்ருக்) போய் நிலைத்தது (வ்யதாரயத்).

விசுத்தயா தாரயா ஹத அசுப:

த் க்ஷயா சு கதா யுத ஸ்ரம: |

நிவ்ருத்த சர்வேந்த்ரிய வ்ருத்தி விப்ரம:

துஷ்டாவ ஜன்யம் விஸ்ருஜன் ஜனார்தனம் ||

विशुद्धया धारणया हत शुभ:

द् क्षया इव शु गता युध श्रम: ।

निवृत्त सर्वेन्द्रिय वृत्ति विभ्रम:

तुष्टाव जन्यं विसृजन् नार्दनम् ॥

தூய்மையான எண்ணத்துடன் (விசுத்தயா), ஸ்ரீ கிருஷ்ணனின் ரூபத்தை மனதில் நிறுத்த (தாரனயா), மங்களமற்றவைகள் அனைத்தும் மனதிலிருந்து அழிந்தது.
இது போல ஸ்ரீகிருஷ்ணரை பார்த்த மாத்திரத்தில், பீஷ்மருக்கு யுத்த களத்தால் ஏற்பட்ட காயங்கள், வலிகள் கூட (யுத ஸ்ரம:), உடனே (ஆசு ) மறைந்து சென்று விட்டன (கதா).
உலக விஷயங்களில் இன்றுவரை உழன்று (விப்ரம:) காரியங்கள் செய்த (வ்ருத்தி) ஐம்-புலன்கள் (சர்வேந்த்ரிய), இன்று ஆமை தன் கால்களை ஒடுக்கி கொள்வது போல ஒடுக்கிக்கொண்டது (நிவ்ருத்த).
பூமியில் பிறந்த (ஜன்யம்) தான் விடைபெறும் (விஸ்ருஜன்) முன், ஆத்மாக்களை ஆளும் (ஜனார்தனம்) ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவை பார்த்து துதிக்கலானார் (துஷ்டாவ) பீஷ்மர்.

ஸ்ரீபீஷ்ம உவாச

இதி மதி: ப கல்பிதா வித்ருஷ்ணா

பகவதி ஸாத்வத புங்கவே விபூம்ணி |

ஸ்வ சுகம் பகதே க்வசித் விஹர்தும்

ப்ரக்ருதிம் பேயுஷி யத் பவ ப்ரவாஹ: ||

श्रीभीष्म उवाच

इति मति: पकल्पिता वितृष्णा

भगवति सात्वत पुङ्गवे विभूम्नि ।

स्व-सुखम् पगते क्‍वचिद् विहर्तुं

प्रकृतिम् पेयुषि यद्भ‍व प्रवाह: ॥

எல்லா ஆசைகளிலிருந்தும் விடுபட்டு (வித்ருஷ்ணா) பாண்டவர்கள் போன்ற சாதுக்களுக்கு (ஸாத்வத) ரக்ஷகனாக, நாதனாக (புங்கவே) இருக்கும், ப்ரபுவுக்கும் ப்ரபுவாக இருக்கும் (விபூம்ணி) பகவானிடமே (பகவதி) என் மனம் (இதி மதி:) சமர்ப்பணமாகட்டும் (உப கல்பிதா). தானே ஆனந்த ஸ்வரூபியாக (ஸ்வ சுகம்) இருந்தும் (உபகதே), சில சமயம் (க்வசித்), கருணையின் காரணமாக(விஹர்தும்) தன் மாயா சக்தியை கொண்டு, மூன்று குணங்கள் பிரவாகமாக (யத் பவ ப்ரவாஹ:) ஓடும் உலகை (ப்ரக்ருதிம்) தானே ஆசையோடு (உபேயுஷி) பிரகடனம் செய்தார்.

த்ரிபுவன கமனம் தமால வர்ணம்

ரவிகர கௌர வராம்பரம் ததானே |

வபு: லக கு வ்ருத நந ப்ஜம்

விஜய சகே ரதிரஸ்து மே னவத்யா ||

त्रि-भुवन कमनं तमाल-वर्णं

रविकर गौर वराम्बरं दधाने ।

वपु: लक कुल वृत नन ब्जं

विजय-सखे रतिरस्तु मे नवद्या ॥

மூன்று உலகும் (எதிரிகள் கூட) சொக்கி போகும் அழகுடன் (த்ரிபுவன கமனம்), தமால மரத்தில் காணப்படும் ருநீல வர்ணமாக காட்சி கொடுத்து கொண்டு (தமால வர்ணம்), அந்த ருநீல வர்ணத்துக்கு ஏற்றவாறு, சூரிய கிரணத்தில் (ரவிகர) காணப்படும் தங்கம் (கௌர) போல ஜொலிக்கும் வஸ்திரத்தை (வராம்பரம்) உடுத்திக்கொண்டு கொண்டிருக்கும் (ததானே), அந்த கண்ணனின் திவ்யமான தேகத்தில்,(வபு:) தவழும் (ஆவ்ருத) சுருண்ட கேசமும் (அலக குல) அன்று மலர்ந்த தாமரை போன்ற முகமும் கொண்ட (அநந அப்ஜம்), அர்ஜுனனின் நண்பனா (விஜய சகே) ருக்கும் அந்த சாரதியிடமே (ரதி), சிறிதும் சந்தேகமில்லாமல் (மே அனவத்யா) என் மனம் லயிக்கிறது (ரதிரஸ்து).

யுதி துரக ரஜோ விதூம்ர விஷ்வக்

கச லுலித ஸ்ரமவாரி லங்க்ருத ஸ்யே |

மம நிசித சரை: விபித்யமான

த்வசி விலசத் கவசே ஸ்து க்ருஷ்ண ஆத்மா ||

युधि तुरग रजो विधूम्र विष्वक्-

कच-लुलित श्रमवारि अलङ्‍कृत स्ये ।

मम निशित शरै: विभिद्यमान-

त्वचि विलसत् वचेऽस्तु कृष्ण आत्मा ॥

அன்று, பிருந்தாவனத்தில் மாடு மேய்க்கும் போது, அந்த பசுமாடுகள் கிளப்பிய பிருந்தாவன மண்ணை தன் தலையில் ஏந்திய கண்ணன், இந்த பாரத யுத்த களத்தில் (யுதி) பாண்டவர்களுக்காக 18 நாளும் தேரோட்டி, அந்த குதிரைகள் (துரக) கிளப்பிய புழுதி (ரஜோ) செம்மண் (விதூம்ர) சந்தன குழம்பாக அந்த அலைகின்ற (விஷ்வக்) சுருண்ட கேசத்தில் (கச) தாமரையில் உள்ள மகரந்த பிஞ்சம் படர்ந்தது போல படர்ந்து இருக்க (லுலித), 'என் பக்தனுக்காக வியர்வை சிந்த உழைப்பேன்' என்று காட்டும்படி, முத்து வியர்வை (ஸ்ரமவாரி) திவ்யமான திருமுகத்தில் அரும்ப, அந்த திவ்யமான வியர்வை துளிகள் அந்த கேசத்தின் நுனியில் பனி முத்துக்களை போல அரும்பி இருக்க, அதுவே ஒரு முத்து பந்தல் போட்டு அலங்கரித்தது (அலங்க்ருத) போல, அன்று இந்த கண்ணனின் திருமுகம் (ஆஸ்யே) இருந்தது.

'ஜன்ம கர்ம ச மே திவ்யம்' என்று கிருஷ்ணனே 'தன் பிறப்பும், செயலும் திவ்யம்' என்று சொன்னார் அர்ஜுனனிடம். திவ்யமான திருமுகத்தில் விழுந்த வியர்வையும் திவ்யமாகவே தெரிந்தது.
அந்த அருமையான கண்ணனை அன்று எப்படியாவது 'ஆயுதம் எடுக்க வைப்பேன்' என்ற என் சபதத்தை நிறைவேற்ற, நான் (மம) கூரான அம்புகளை (நிசித சரைர்) கொண்டு, அந்த திவ்யமான சரீரத்தில் (த்வசி) செலுத்தி, குத்தி காயப்படுத்தினேன் (விபித்யமான). அணிந்திருந்த அந்த ஜொலிக்கும் (விலசத்) கவசத்தையும் (கவசே) உடைத்தேன். அனைத்தையும் விளையாட்டாக ஏற்றுக்கொண்ட, அந்த கண்ணனின் (க்ருஷ்ண) திருமுகம் நெஞ்சை (ஆத்மா) விட்டு அகலாமல் இன்னும் நெஞ்சிலே இருக்கிறது (அஸ்து).





சபதி சகி வச: நிஷம்ய மத்யே

நிஜ பரயோர் பலயோ ரதம் நிவேஸ்ய |

ஸ்திதவதி பர-சைனிக யு: க்ஷணா

ஹ்ருதவதி பார்த்த சகே ரதி: மம ஸ்து ||

सपदि सखि वचो निशम्य मध्ये

निज-परयो: लयो रथं निवेश्य ।

स्थितवति पर-सैनिक यु: क्ष्णा

हृतवति पार्थसखे रति: स्तु ॥

அன்று, போர் களத்தில் (சபதி) அர்ஜுனன் தன் ரதத்தை கொண்டு போய் இரண்டு சேனைக்கு நடுவில் நிறுத்த சொல்ல, தன் நண்பன் சொன்னதை (சகி வச:) அப்படியே கேட்டு (நிஷம்ய), உடனேயே தங்கள் (நிஜ) சேனையின் பலத்தையும், எதிரிகளான (பரயோர்) கௌரவ சேனையின் பலத்தையும், அர்ஜுனனுக்கு காட்ட, ரதத்தை (ரதம்) இரு சேனைக்கு நடுவே (மத்யே) கொண்டு வந்து நிறுத்தினார் (நிவேஸ்ய).
அப்படி நிறுத்தப்பட்ட (ஸ்திதவதி) அந்த தேரில் ஒரு கையில் குதிரையின் லகானை பிடித்துக்கொண்டு, இன்னொரு கையில் சாட்டை வைத்து இருக்கும் கண்ணன், கையால் எதிரிகளின் சேனையை (பர-சைனிக) அர்ஜுனனுக்கு காட்ட முடியாததால், தன் கண்களாலேயே "இதோ பார் துரியோதனன்! இதோ பார் துச்சாதனன்! இதோ பார் துரோணர்! இதோ பார் கர்ணன்! இதோ பார் சகுனி! இதோ பார் பீஷ்மர்!" என்று அர்ஜுனனுக்கு ஒவ்வொருவராக காட்ட, அந்த பார்வையை (அக்ஷணா) கண்டதிலேயே எதிரிகளின் சேனையில் (பர-சைனிக) நின்று கொண்டிருந்த எங்கள் ஆயுசு (ஆயு:) அன்றே குறைந்து விட்டது (ஹ்ருதவதி). அன்று என்னை உருட்டி விழித்து பார்த்த, அந்த பாரத்தசாரதியின் (பார்த்த சகே ரதி:) ரூபம் என் (மம) நெஞ்சில் அகலாமல் நிற்கிறது (அஸ்து).

வ்யவஹித ப்ருதனா முகம் நிரீக்ஷ்ய

ஸ்வஜந வதாத் விமுகஸ்ய தோஷபூத்தயா |

குமதிம் ஹரத் த்ம வித்யயா

ய: சரண ரதி: பரமஸ்ய தஸ்ய மே அஸ்து ||

व्यवहित पृतना मुखं निरीक्ष्य

स्वजन वधाद् विमुखस्य दोष-बुद्ध्या ।

कुमतिम् हरद् त्म विद्यया

य: श्चरण रति: परमस्य तस्य मेऽस्तु ॥

தூரத்தில் (வ்யவஹித) எதிரி படையில் (ப்ருதனா) நின்று கொண்டிருந்த எங்கள் முகத்தை பார்த்து (முகம் நிரீக்ஷ்ய) சொந்தக்காரர்களை (ஸ்வஜந) கொல்வதா? என்று தயங்கி (விமுகஸ்ய), தர்மம் எது? அதர்மம் எது? என்று புரியாத நிலையில் (தோஷபூத்தயா), பெரும் சோகத்தில் (குமதிம்), அர்ஜுனன் மூழ்கி இருந்தான்.
சோகத்தில் (குமதிம்) மூழ்கி இருந்த அர்ஜுனனுக்கு, ஆத்ம வித்யையான பகவத் கீதையை (ஆத்ம வித்யயா) உபதேசித்து, அகற்றினார் (அஹரத்). பரவாசுதேவனான (பரமஸ்ய) அந்த (தஸ்ய) சாரதியின் தாமரை பாதம் (ய: சரண ரதி:), என் நெஞ்சை (மே) விட்டு அகலாமல் நிற்கிறது (அஸ்து).

ஸ்வ நிகமம் அபஹாய மத் ப்ரதிஞாம்

ருதம் அதி கர்தும் அவப்லுதோ ரதஸ்த: |

த்ருத ரத சரண: அப்யயாத் சலத்கு:

ஹரிர் ஏவ ஹந்தும் பம் கத த்தரீய: ||

स्व निगमम् पहाय मत्प्रतिज्ञाम्

रुम् धि-कर्तुम् वप्लुतो रथस्थ: ।

धृत रथ चरणो भ्ययाद् लद्गु:

रिरिव हन्तुम् भं गत त्तरीय: ॥

அன்றைய போரில் பாண்டவர்கள் சேனைக்கு பெரும் நாசம் உண்டானது. கிழவரான பீஷ்மரின் வில்லிலிருந்து அம்பு மழை பொழிய, பாண்டவர்கள் பக்கம் உள்ள, ரதங்கள் சாய, காலாட்படைகள் கீழே விழ, குதிரை படை, யானை படை எல்லாம் நாசமாகி ரத்தம் ப்ரவாகமாக ஓட, 25 வயது வீரன் போல, பம்பரமாக சுழன்று இன்று அதி ஆச்சர்யமாக போர் செய்தார் பீஷ்மர். இப்படி போர் செய்யும் பீஷ்ம தாத்தாவை கண்டு அர்ஜுனனே மூச்சு திணறி போனான். உடனே கிருஷ்ணரை பார்த்து. "கிருஷ்ணா! பீஷ்ம தாத்தா இளமை காலத்தில் எப்படி செய்து இருப்பார்? என்று இப்போது தான் தெரிகிறது. இந்த யுத்தத்தில் இவரை எதிர்க்க முடியாது.. நீ ரதத்தை திருப்பு." என்று சொல்ல…

கிருஷ்ணர் ஆத்திரத்தோடு, "சீ! ரதத்தை திருப்பு என்று நீ சொல்வதாவது? இப்பேர்ப்பட்ட யுத்தம் அருமையல்லவா!" என்று சொல்லி கொண்டே, தன் ரதத்தை பீஷ்மர் இருக்கும் ரதத்துக்கு முன்னே கொண்டு செல்ல, சாரதியான ஸ்ரீகிருஷ்ணரின் மேல் அம்புகளை மழை போல செலுத்தினார். 'ஸ்ரீகிருஷ்ணை நாளைய போரில் ஆயுதம் எடுக்க வைப்பேன்' என்று நான் (மத்) உரக்க சொல்லி செய்த (ருதம்) சபதத்தை (ப்ரதிஞாம்) காக்க, சத்தியமே ஸ்வரூபமான ஸ்ரீகிருஷ்ணன், 'ஆயுதம் எந்த மாட்டேன்' என்று தான் செய்த சபதத்தை (ஸ்வ நிகமம்) எனக்காக விட்டு கொடுத்து (அபஹாய), அன்றைய போரில் என்னால் பாண்டவர்கள் சேனைக்கு பெரும் நாசம் உண்டாவதை பார்த்து, மகா ஆத்திரத்தோடு, திடீரென்று 'பார்த்தா! இனி பொறுக்க முடியாது.. இதோ பீஷ்மரை நானே கொல்கிறேன் பார்..!' என்று கூறிக்கொண்டே (அதி கர்தும்), தன் மேல்-அங்கவஸ்திரத்தை (உத்தரீய:) தான் அமர்ந்த ஆசனத்தில் போட்டு விட்டு (கத), நீல ஜோதி போல, ரதத்திலிருந்து (ரதஸ்த:) குதித்து (அவப்லுதோ), ஒரு ரத சக்கரத்தையே சக்ராயுதமாக எடுத்துக்கொண்டு (த்ருத ரத), என்னை நோக்கி துள்ளி கொண்டு (அப்யயாத்) பூமி அதிர ஒரு சிங்கம் (ஹரிர்) எப்படி (ஏவ) யானையை (இபம்) தாக்க வருமோ (ஹந்தும்) அப்படி வந்தாயே! பக்தனான என் சபதத்தை காக்க, தன் சத்தியத்தை கூட விட்டு, சக்கரத்தை ஏந்தி வந்தாயே, கிருஷ்ணா!.

பொதுவாக, ஆத்திரம் வரும் போது, அவசரத்தில் 'என்ன செய்கிறோம்' என்றே தெரியாது. பீஷ்மர் அன்று பாண்டவ சேனைக்கு ஏற்படுத்திய பெரும் நாசத்தை பார்த்து, 'தான் ஆத்திரப்பட்டது போல' காட்டிக்கொள்ள, முடிந்திருந்த கேசங்கள் அவிழ, தன் மேல் அங்கவஸ்திரம் அவிழ்ந்தது கூட கவனிக்காமல், தேர் சக்கரத்தை எடுத்துக்கொண்டு கோபத்தோடு ஓடி வந்தாராம். இந்த கோப நாடகத்தை கவனித்த பீஷ்மர், தன் உத்தரீயம் விழுந்தது (கத உத்தரீய:) கூட கவனிக்காமல் வரும் அந்த அழகான கோப கண்ணனை கண்டு ஆனந்தப்படுகிறார். "அர்ஜுனா! நானே இந்த போரை செய்து முடித்து விடுகிறேன். இதோ என் அங்கவஸ்திரத்தையே ஜெய கொடியாக கட்டு" என்று தேரிலேயே அங்கவஸ்திரத்தை வைத்து விட்டு (கத உத்தரீய:), பீஷ்மரை நோக்கி வரும் அந்த அழகான கண்ணனை கண்டு ஆனந்தப்படுகிறார். "அர்ஜுனா! நான் தேரிலிருந்து இறங்கி விட்டேன் என்று, வேறு சாரதியை நியமித்து விடாதே.. இதோ என் அங்கவஸ்திரத்தை என் சார்பாக வைத்து விட்டு (கத உத்தரீய:) செல்கிறேன்" என்று சொல்வது போல தன்னை நோக்கி வரும், அழகான கண்ணனை கண்டு ஆனந்தப்படுகிறார். "சாரதி இல்லை என்று குதிரைகள் நினைத்து விட கூடாதே!" என்று நினைத்து, தன் அங்கவஸ்திரத்தை தன் ஆசனத்தில் வைத்து விட்டு (கத உத்தரீய:) தன்னை நோக்கி வரும், அழகான கண்ணனை கண்டு ஆனந்தப்படுகிறார். 'தான் இல்லாத சமயத்தில், அர்ஜுனனை யாராவது தாக்கி விடுவார்களே! அர்ஜுனனுக்கு ஒரு கவசமாக என் அங்கவஸ்திரம் இருக்கட்டும்' என்று நினைத்து, தன் அங்கவஸ்திரத்தை தன் ஆசனத்தில் வைத்து விட்டு (கத உத்தரீய:) தன்னை நோக்கி வரும், அழகான கண்ணனை கண்டு ஆனந்தப்படுகிறார். "அர்ஜுனா! நான் இல்லாமல் போனாலும், என் அங்கவஸ்திரமே ரதத்தை ஓட்டும்" என்று காட்ட, தன் அங்கவஸ்திரத்தை தன் ஆசனத்தில் வைத்து விட்டு (கத உத்தரீய:) தன்னை நோக்கி வரும், அழகான கண்ணனை கண்டு ஆனந்தப்படுகிறார். அங்கவஸ்திரம் போட்டு பீஷ்மரை தாக்கினால், 'யார் அடித்தார்?' என்றே தெரியாமல் போய் விட கூடாது! 'வந்தது கிருஷ்ணன் தான்" என்று பார்க்கட்டும் என்று காட்ட, தன் அங்கவஸ்திரத்தை தன் ஆசனத்தில் வைத்து விட்டு (கத உத்தரீய:) தன்னை நோக்கி வரும், அழகான கண்ணனை கண்டு ஆனந்தப்படுகிறார். 'அங்கவஸ்திரம் போட்டு பீஷ்மருக்கு முன் வந்தால், தன் வக்ஷஸ்தலத்தில் இருக்கும் மஹாலக்ஷ்மியின் கடாக்ஷம் பீஷ்மருக்கு கிடைக்காமல் போய் விடுமே!' என்று நினைத்து, தன் அங்கவஸ்திரத்தை தன் ஆசனத்தில் வைத்து விட்டு (கத உத்தரீய:) தன்னை நோக்கி வரும், அழகான கண்ணனை கண்டு ஆனந்தப்படுகிறார்.


ஷித விஷிக ஹதோ விஷீர்ண தம்ச:

க்ஷதஜ பரிப்லுத ஆததாயினோ மே |

ப்ரசபம் அபிசசார மத்-வத-ர்தம்

ச பவது மே பகவான் கதி: முகுந்த: ||

शित विशिख हतो विशीर्ण दंश:

क्षतज परिप्लुत आततायिनो मे ।

प्रसभम् भिससार मद् र्थं

स भवतु मे भगवान् गतिर्मुकुन्द: ॥

சாரதியாக அமர்ந்து இருந்த இந்த கண்ணனை நோக்கி, வதம் செய்யக்கூடிய (ஹதோ) கூரான அம்புகளை (ஷித விஷிக) பொழிந்து, அவர் கவசத்தை (தம்ச:) உடைத்தெறிந்து (விஷீர்ண) அவர் திருமேனியை காயப்படுத்தி (க்ஷதஜ) ரத்தம் வழிய (பரிப்லுத) செய்து, முரட்டுத்தனமாக நான் (ஆததாயினோ மே) க்ஷத்ரியனையாக சண்டையிட்டேன்.
பெரும் நாசத்தை பாண்டவர்களுக்கு அன்று செய்து, படு பயங்கரமாக சண்டையிட்ட என்னை அர்ஜுனனும் தடுக்கமுடியாமல் திகைக்க, 'இனியும் பொறுக்கமுடியாது' என்ற ஆத்திரத்தோடு (ப்ரசபம்) தேரிலிருந்து குதித்து, அன்றே என்னை கொன்று (மத்-வத), வைகுண்டம் என்ற சொந்த வீட்டுக்கு (கதிர்) அனுப்பும் நோக்கத்துடன் (அர்தம்), நோக்கி ஓடி வந்த (அபிசசார) மோக்ஷம் கொடுக்க (முகுந்த:) வந்த பகவானை தியானிக்கிறேன்.




விஜய ரத குடும்ப ஆத்த-தோத்ரே

த்ருத-ஹய ரஷ்மினி தச் ஸ்ரியா க்ஷணீயே |

பகவதி ரதிரஸ்து மே முமூர்ஷோ:

ம் ஹ நிரீக்ஷ்ய ஹதா கதா: ஸ்வரூபம் ||

विजय रथ कुटुम्ब आत्ततोत्रे

धृत-हय-रश्मिनि तच्छ्रिय क्षणीये ।

भगवति रतिरस्तु मे मुमूर्षो:

म् इह निरीक्ष्य हता गता: स्वरूपम् ॥

பாண்டவர்களை தன் குடும்பம் (குடும்ப) ஆக்கி கொண்டு, அர்ஜுனனுக்கு (விஜய) சாரதியாக (ரத) ஆகி, வலது கையில் குதிரையின் (ஹய) லகானை பிடித்து (ஆத்த-தோத்ரே) கட்டுப்படுத்தி (த்ருத) கொண்டு, மற்றொரு கையால் சாட்டையை (ரஷ்மினி) பிடித்துக்கொண்டு, இருந்த அந்த பேரழகை (தச் ஸ்ரியா) இந்த கண்கள் (ஈக்ஷணீயே) தரிசித்தது!
மரணிக்க போகிறேன் (மம முமூர்ஷோ) என்றதும், என்னை காண, எனக்காக இங்கு (யம் இஹ) வந்து நிற்கும், பரமாத்மாவான பார்த்தசாரதியை (பகவதி ரதிரஸ்து) பார்த்து (நிரீக்ஷ்ய) கொண்டே இந்த உடலை விட்டு பிரிந்து (ஹதா), என் நிஜ ஸ்வரூபத்தை (8வது வசு) அடைவேன் (கதா).

லலித கதி விலாச வல்கு ஹாஸ

ப்ரணய நிரீக்ஷண கல்பித ருமானா: |

க்ருதம் னுக்ருதவத்ய உன்மத ந்தா:

ப்ரக்ருதிம் கன் கில யஸ்ய கோப வத்வ :॥

ललित गति विलास वल्गुहास-

प्रणय निरीक्षण कल्पित रुमाना: ।

कृतम् नुकृतवत्य उन्मद न्धा:

प्रकृतिम् गन् किल यस्य गोप वध्व: ॥

பகவானிடம் போர் செய்து, முரட்டு பக்தி செய்த பீஷ்மர், அந்த பகவானிடம் கோபியர்கள் போல தனக்கு கோமளமான பக்தி செய்ய தெரியவில்லையே!! என்று நினைத்தார். உடனே கோபியர்கள் பக்தி நினைவுக்கு வர, அந்த உன்னதமான பக்தியை ஸ்மரிக்கிறார்.
கிருஷ்ணா! பொதுவாக பக்தி யோகமான அஷ்டாங்க யோகம் செய்து, பகவத் தரிசனம் கிடைக்க வேண்டி உள்ளது. ஆனால், பாக்கியவாதிகளான கோபிகைகளோ! பகவத் தரிசனம் பெற்று விட்டு, பிறகு, பகவானிடமே கேட்டு, பகவானை பார்த்து பக்தி செய்கிறார்கள்.
அப்படி பகவத் தரிசனம் பெற்ற பிறகு, நீயே அவர்களுக்கு குருவாகவும் இருப்பதால், அவர்கள் உன்னுடைய நளினமான நடை (லலித கதி) அழகையும், விளையாட்டையும் (விலாச), சிரிப்பையும் (வல்கு ஹாஸ), அன்பையும் (ப்ரணய) பார்த்து பார்த்து (நிரீக்ஷண), அதையே ஞாபக படுத்திகொண்டு (கல்பித), தங்கள் மனதில் உரு போட்டு (உருமானா:), உன்னை போலவே நடந்தும், சிரித்தும், விளையாடியும், அபிநயம் (அனுக்ருதவத்ய) செய்து கொண்டு (க்ருதம்), உலக நினைவே இல்லாமல் (அந்தா:) மோக்ஷத்தை விரும்புபவர்களாக (உன்மத), உன்னை போலவே ஆகி விட்ட (ப்ரக்ருதிம் அகன் கில) அந்த (யஸ்ய) மாடுகளை மேய்த்து கொண்டிருக்கும் கோபியர்களின் (கோப வத்வ :) பக்தியை நான் நினைக்கிறன்.

முனிகன ந்ருப வர்ய சங்குலே ந்த:

சதசி யுதிஷ்டிர ராஜசூய ஏஷாம் |

அர்ஹனம் உபபேத ஈக்ஷணீயோ

மம த்ருஷி கோசர ஏஷ ஆவி: த்மா ||

मुनिगण नृप वर्य सङ्कुले न्त:

सदसि युधिष्ठिर राजसूय एषाम् ।

अर्हणम् उपपेद ईक्षणीयो

मम द‍ृशि-गोचर एष आवि: त्मा ॥

அன்று என் பேரன் "யுதிஷ்டிரன்" ராஜசூய யாகம் செய்த போது, அந்த சபையில் (அந்த: சதசி) கூடியிருந்த (சங்குலே) ரிஷிகளும் (முனிகன), பல நாட்டு அரசர்களும் (ந்ருப வர்ய) தங்களில் உயர்ந்தவராக (ஏஷாம்) ஸ்ரீ கிருஷ்ணனையே ஏற்று, தகுந்த முதல் மரியாதை (அர்ஹனம்) செய்ய, அதை ஏற்று கொண்ட (உபபேத ) அந்த கண்கவரும் காட்சியை (ஈக்ஷணீயோ) அங்கு இருந்து (ஏஷ ஆவி:) அன்று நான் ஏன் கண்களால் அருகிலேயே பார்த்தேன் (மம த்ருஷி கோசர). அந்த ஸ்ரீ கிருஷ்ணனை என் மனதில் (ஆத்மா) நினைத்து வழிபடுகிறேன்.

ம் இமிம் அஹம் ஜம் சரீர பாஜாம்

ஹ்ருதி ஹ்ருதி திஷ்டிதம் ஆத்ம கல்பிதானாம் |

ப்ரதி த்ருஷம் இவ ந கதா ர்கம் கம்

சமதிகத ஸ்மி விதூத பேத மோஹ: ||

तमिम् इम् म् जं शरीरभाजां

हृदि हृदि धिष्ठितम् त्म कल्पितानाम् ।

प्रति द‍ृशम् इव न कधा र्कम् कं

समधिगत: स्मि विधूत भेद मोह: ॥

இங்கு (இமிம்) என் கண் எதிரே காட்சி கொடுக்கும் இந்த (தம்) பரந்தாமனை, பிறப்பற்றவன் (அஜம்) என்று அறிகிறேன். இந்த பிறப்பற்ற பரமாத்மாவே அனைத்து சரீரத்திலும் பிரவேசித்து (சரீர பாஜாம்), நான் (அஹம்), ஒவ்வொருவர் இதயத்திலும், இதயத்திலும் இருந்து கொண்டு, பல ஆத்மாவாக தன்னை காட்டிக்கொள்கிறார்.
ஒரே ஒரு (ஏகம்) சூரியன் (அர்கம்) நாற்புறமும் (ப்ரதி த்ருஷம்) தன் கிரணங்களை வெளிப்படுத்தி, ஜலத்தில் சூரியன், கண்ணாடியில் சூரியன், என்பது போல காட்டி, அது (இவ) ஒன்று அல்ல (ந ஏகதா), பல என்று காட்டிக்கொள்வது போல, நீ ஒருவனே, அனைவரிடத்திலும் ஆத்ம சைதன்யமாக (mirage) இருக்கிறாய் என்று அறிகிறேன். பிறப்புக்கு அப்பாற்பட்ட தனித்த பொருள் நீ என்று அறிகிறேன். இந்த த்யானத்துடனேயே சமாதி நிலைக்கு செல்கிறேன் (சமதிகத அஸ்மி). இரட்டைகளில் (சுகம்/துக்கம், மானம்/அவமானம்,வெற்றி/தோல்வி, ஆரோக்யம்/ரோகம்) (பேத) தள்ளும் இந்த மோகத்திலிருந்து (மோஹ) விடுபடுகிறேன் (விதூத).

ஸூத உவாச (சூத பௌராணிகர் பேசுகிறார்)

க்ருஷ்ண ஏவம் பகவதி மனோ

வாக் த்ருஷ்டி வ்ருத்திபி: |

ஆத்மனி த்மானம் வேஸ்ய

ச: அந்த: ஸ்வாச உபாரமத் ||

सूत उवाच

कृष्ण एवं भगवति मनो वाग्द‍ृष्टि वृत्तिभि: ।

आत्मनि त्मानम् वेश्य स: न्त:श्वास उपारमत् ॥

ஸ்ரீ கிருஷ்ணனே (க்ருஷ்ண ஏவம்) பரமாத்மா (பகவதி) என்று மனதாலும் (மனோ), வாக்காலும் (வாக்), கண்களாலும் (த்ருஷ்டி), செயலாலும் (வ்ருத்திபி:) ஸ்மரித்து கொண்டே, பீஷ்மரின் ஆத்மா (ஆத்மானம்), பரமாத்மாவோடு (ஆத்மனி) கலந்தது (ஆவேஸ்ய). அவரின் (சோ) சுவாசம் (அந்த: ஸ்வாச) அமைதியானது (உபாரமத்).

சம்பத்யமானம் ஆஞாய பீஷ்மம்

ப்ரஹ்மணி நிஷ்கலே |

சர்வே பபூவுஸ்தே தூஷ்னீம்

வயாம்சி வ தினாத்யயே ||

सम्पद्यमानम् आज्ञाय भीष्मं ब्रह्मणि निष्कले ।

सर्वे बभूवुस्ते तूष्णीं वयांसीव दिनात्यये ॥

பீஷ்மர் (பீஷ்மம்) காலத்துக்கும் அப்பாற்பட்ட (நிஷ்கலே) பரப்ரம்மத்துடன் (ப்ரஹ்மணி), கலந்து விட்டார் (சம்பத்யமானம்) என்று அறிந்ததும் (ஆஞாய), மாலை ஆனதும் (தினாத்யயே) அமைதியாக பறவைகள் (வயாம்சி) தன் வீட்டுக்கு திரும்புவது போல (இவ), பீஷ்மரை சுற்றி இருந்த அனைவரும் (சர்வே பபூவுஸ்தே) அமைதியாக (தூஷ்னீம்) இருந்தனர்.




தத்ர துந்துபயோ நேது:

தேவ மானவ வாதிதா: |

சசம்சு: சாதவோ ராக்யாம்

காத்பேது: புஷ்ப வ்ருஷ்டய:॥

तत्र दुन्दुभयो नेदु: देव मानव वादिता: ।

शशंसु: साधवो राज्ञां खात्पेतु: पुष्प वृष्टय: ॥

பிறகு அங்கு (தத்ர), பேரிகைகள் (துந்துபயோ) முழங்கின (நேதுர்).
ஞானியான (சாதவோ) தேவர்களும், மனிதர்களும் (தேவ மானவ) மங்களங்கள் (சசம்சு:) சொல்லி (வாதிதா), பீஷ்மருக்கு, ராஜமரியாதை (ராக்யாம்) செய்தனர்.
ஆகாயத்திலிருந்து (காத்) புஷ்ப மழையை (புஷ்ப வ்ருஷ்டய:) பொழிந்தனர் (பேது) தேவர்கள்.

தஸ்ய நிர்ஹரந ஆதீனி

சம்பரே தஸ்ய பார்கவ |

யுதிஷ்டிர: காரயித்வா

முஹூர்தம் துக்கிதோ பவத் ||

तस्य निर्हरण दीनि सम्परे तस्य भार्गव ।

युधिष्ठिर: कारयित्वा मुहूर्तं दु:खितोऽभवत् ॥

ப்ருகு குலத்தில் தோன்றிய சௌனக ரிஷியே (பார்கவ)!
பீஷ்மரின் (தஸ்ய) சரீரத்துக்கு (சம்பரே தஸ்ய), செய்ய வேண்டிய அந்திம காரியங்களை (நிர்ஹரந ஆதீனி) செய்து முடித்த (காரயித்வா) யுதிஷ்டிரர், அந்த சமயத்தில் (முஹூர்தம்) தாத்தாவை இழந்த பெரும் சோகத்தில் (துக்கிதோ பவத்) கண்ணீர் விட்டு அழுதார்.

துஷ்டுவுர் முனயோ ஹ்ருஷ்டா:

க்ருஷ்ணம் தத் குஹ்ய நாமபி: |

ததஸ்தே க்ருஷ்ண ஹ்ருதயா:

ஸ்வ ஸ்ரமான் ப்ரயயு: புன: ||

तुष्टुवु: मुनयो हृष्टा: कृष्णं तद् गुह्य नामभि: ।

ततस्ते कृष्ण हृदया: स्व श्रमान् प्रययु: पुन: ॥

அப்பொழுது, ரிஷிகள் (முனயோ) அனைவரும் அங்கு நின்று கொண்டிருந்த ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவை (க்ருஷ்ணம்) அந்த (தத்) மறையான (குஹ்ய) வேத நாமங்களால் (நாமபி:) ஸ்தோத்திரம் (துஷ்டுவுர்) செய்து பேரானந்தம் (ஹ்ருஷ்டா) அடைந்தார்கள்.
அதற்கு பிறகு (ததஸ்), அவர்கள் (தே) ஸ்ரீ கிருஷ்ணனின் திவ்ய ரூபத்தை தங்கள் இதயத்தில் (க்ருஷ்ண ஹ்ருதயா) சுமந்து கொண்டு, தங்கள் தங்கள் ஆஸ்ரமத்துக்கு (ஸ்வ ஆஸ்ரமான்) திரும்பி திரும்பி பார்த்து கொண்டே (ப்ரயயு புன:) சென்றனர்

ததோ யுதிஷ்டிரோ கத்வா

சஹ க்ருஷ்ணோ கஜாஹ்வயம் |

பிதரம் சாந்த்வயாம்

காந்தாரீம் ச தபஸ்வினீம் ||

ततो युधिष्ठिरो गत्वा सह-कृष्णो गजाह् यम् ।

पितरं सान्‍त्वयामास गान्धारीं च तपस्विनीम् ॥

அதற்கு பிறகு (ததோ), யுதிஷ்டிரர் ஸ்ரீ கிருஷ்ணரோடு (சஹ க்ருஷ்ணோ), ஹஸ்தினாபுர (கஜாஹ்வயம்) அரண்மனைக்கு சென்றார் (கத்வா).
தன் பெரியப்பாவையும் (பிதரம்) தபஸ்வினியான காந்தாரியையும் (காந்தாரீம் ச) சமாதானப்படுத்தினார் (சாந்த்வயாம் ஆஸ).

பித்ரா ச அனுமதோ ராஜா

வாசுதேவ அனுமோதித: |

சகார ராஜ்யம் தர்மேன

பித்ரு பைதாமாஹம் விபு :॥

पित्रा च नुमतो राजा वासुदेव नुमोदित: ।

चकार राज्यं धर्मेण पितृ-पैतामहं विभु: ॥

பெரியப்பா த்ருதராஷ்ட்ரனின் (பித்ரா) அனுமதியோடு (அனுமதோ), மேலும் () வாசுதேவ கிருஷ்ணனின் அனுமதியையும் பெற்று (அனுமோதித:), யுதிஷ்டிர மகாராஜன் (ராஜா), தன் தந்தை வழி பேரரசர்கள் புகழ் (விபு:) பெரும் வண்ணம், உலக ராஜ்யத்தை (ராஜ்யம்) தர்மம் (தர்மேன) மீறாமல் நடத்தி (சகார) வந்தார்.


குருநாதர் துணை