Followers

Search Here...

Showing posts with label வாசுதேவன். Show all posts
Showing posts with label வாசுதேவன். Show all posts

Tuesday 24 April 2018

வாசுதேவன் என்ற சொல்லுக்கு அர்த்தம் என்ன? உள்ளே இருக்கும் பரமாத்மாவை பார், உடம்பை பார்த்து பழகாதே!! உலகத்தால் ப்ரம்மத்தை மறைக்காதே ! ப்ரம்மத்தை கொண்டு, உலகத்தை மறைத்து விடு !

வாசுதேவன் என்ற சொல்லுக்கு அர்த்தம்.

"வச" என்ற சொல்லுக்கு "மறைத்தல்" என்று அர்த்தம்.

'ஸர்வம் விஷ்ணு மயம் ஜகத்' என்று "உலகம் அனைத்திலும் விஷ்ணுவே எங்கும் புகுந்து அந்தர்யாமியாக (ஆத்மாவாக) உள்ளார்" என்று வேதம் சொல்கிறது.

இதையே, அர்ஜுனன், ஸ்ரீ கிருஷ்ணர் காண்பித்த விஸ்வரூப தரிசனத்தில் கண்டான். அவரே அனைத்துமாக இருப்பதை கண்டான்.

வேதம்
"உலகத்தால் ப்ரம்மத்தை மறைக்காதே.
ப்ரம்மத்தை கொண்டு, உலகத்தை மறைத்து விடு"
என்று ஈஷோ உபநிஷத் ஆரம்பிக்கிறது.

புரியவில்லையே !!
உலகத்தால் ப்ரம்மத்தை மறைக்காதே என்றால் என்ன அர்த்தம்?

ஆத்மா இல்லாத ஒரு உடம்பை, நாம் எத்தனை முறை கூப்பிட்டாலும் நடந்து வராது.
ஆத்மா இல்லாத ஒரு உடம்புக்கு "பிரேதம்" என்று பெயர்.

உடம்பு இல்லாத ஆத்மாவை கூப்பிட்டால், நம் கண்ணுக்கு தெரியாது.

நாம் ஒருவரை கூப்பிட்டால், உடம்போடு கூடவே அதன் ஜீவ ஆத்மாவும் கூடவே வருகிறது.

வருபவரை வெறும் உடம்பு சம்பந்தமாக நீ பார்த்தாய் என்றால், அவரை பார்த்ததினால், பேராசை, பொறாமை, கோபம் போன்ற குணங்கள் உனக்குள் எழும்.






உடம்பை மட்டும் கவனிக்கும் போது, "இவன் தனக்கு வேண்டியப்பட்டவன்", "இவன் எதிரி", "இவன் உயர்ந்தவன்", "இவன் தாழ்ந்தவன்" போன்ற எண்ணங்கள் நமக்குள் வந்து விடும்.

நமக்கு பிடிக்காதவர்கள் வந்தால், "இவன் ஏன் வந்தான்?" என்று கோபம் வரும்.

உடம்பை பார்க்காமல், ஆத்மாவை பார்த்தாய் என்றால், ஒருவரை பார்த்து, பொறாமையோ, கோபமோ உண்டாகாது.

மகாத்மாக்கள், ஞானிகள், ஆத்மாவை மட்டும் தான் பார்க்கின்றனர். இதனாலேயே அவர்களுக்கு யார் மீதும் கோபமோ, பொறாமையோ வருவதில்லை.

ஞானிகள், உடம்பை கவனிக்காமல், ஆத்மாவை மட்டும் கவனிப்பதால், அனைவரும் அந்த பகவானின் அம்சமே என்று பார்க்கின்றனர்.
இதனால் தன்னிடம் துர்குணங்கள் சேராமல் பார்த்துக்கொள்கின்றனர்.

இந்த ஞானம் இல்லாத சாதாரண ஜனங்கள், யாரை பார்த்தாலும் சரீரத்தையே கவனிக்கின்றனர். ஆத்மாவை கவனிப்பதில்லை.

மற்றவர்கள் மீது உள்ள ஆசை, பொறாமை, கோபத்தால், தன்னிடம் துர்குணங்களை வளர்த்து கொள்கின்றனர்.

இந்த ஞானத்தை நாம் அனைவரும் பெற வேண்டும்.

துர்குணங்கள் நமக்கு எழாமல் இருக்க வேண்டும் என்ற ஆசையில், வேதம் நம்மை பார்த்து,
"உள்ளே இருக்கும் பரமாத்மாவை பார், உடம்பை பார்த்து பழகாதே"
என்று சொல்கிறது.

உலகம் முழுவதும் அந்த பரமாத்மா ப்ரவேசித்து உள்ளார். 
ஒவ்வொரு உடம்பிலும் ஜீவாத்மாவாக அவரே உள்ளார்.

'உள்ளே இருக்கும் ஆத்மாவை கவனிக்காமல், உடம்பையே கவனிப்பவர்கள்' அஞானிகள் (உண்மையை அறியாதவர்கள்).




அஞானிகளுக்கு, உடம்புக்குள் ஆத்மாவாக இருக்கும் விஷ்ணு தெரிவதில்லை.
உடம்பையே பார்க்கும் அஞானிகளுக்கு, விஷ்ணு என்ற தேவன் மறைக்கப்படுகிறார்.
இதனாலேயே, விஷ்ணுவுக்கு "வாசுதேவன்" (மறைந்து இருக்கும் தேவன்) என்று பெயர்.

ஞானிகள், உடம்பை பார்க்காமல், உள்ளே மறைந்து இருக்கும் ஆத்மாவை கவனிப்பதால், வாசுதேவனாக இல்லாமல், ப்ரத்யக்ஷமாக தெரிகிறார் பரப்ரம்மா.

ஸ்ரீகிருஷ்ணர், அர்ஜுனனை பார்த்து,
"அர்ஜுனா !! கோடி ஜென்ம புண்யத்தால், ஒருவனுக்கு இந்த ஞானம் உண்டாகிறது.
அத்தகைய ஞானிக்கு, நாயை பார்த்தாலும், கழுதையை பார்த்தாலும், தன்னை கொல்ல வரும் சத்ருவை பார்த்தாலும், அவர்களுக்கு உள்ளே உள்ள பரப்ரம்ம ஸ்வரூபமே தெரிகிறது. அத்தகைய ஞானி எனக்கு மிகவும் பிரியப்பட்டவன்" என்று சொல்கிறார்.
பிரகலாதன் போன்ற தன் பக்தனை மனதில் கொண்டு இதை சொன்னார், ஸ்ரீ கிருஷ்ணர்.