Followers

Search Here...

Showing posts with label திருமங்கையாழ்வார். Show all posts
Showing posts with label திருமங்கையாழ்வார். Show all posts

Monday 9 March 2020

பாசுரம் (அர்த்தம்) - முன்னோர் தூது வானரத்தின் - திருமங்கையாழ்வார் எவ்வுள் (திருவள்ளூர்) வீர ராகவ பெருமாளை பார்த்து பாடிய அழகான பாசுரம். தமிழன் அர்த்தம் தெரிந்து கொள்ள வேண்டாமா?

எவ்வுள்” (திருவள்ளூர்) என்ற இந்த திவ்ய தேசத்தில்,
"வீர ராகவ பெருமாளுக்கு", மங்களாசாசனம் செய்து பாடுகிறார் திருமங்கையாழ்வார்.




எவ்வுள் என்ற இந்த திவ்ய தேசம் வந்து, "எம்பெருமானை பார்த்த" திருமங்கை ஆழ்வாருக்கு,
ராம அவதாரத்தில் ஹனுமார் செய்த தூதும்,
கிருஷ்ணா அவதாரத்தில் கிருஷ்ணர் செய்த தூதும்,
நினைவுக்கு வர, இந்த இரண்டு அவதாரமும் செய்த எவ்வுள் பெருமாளிடமே தன் அனுபவத்தை சொல்கிறார்.

முன்னோர் 
தூது வானரத்தின் வாயில் மொழிந்து,
அரக்கன் மன்னூர் தன்னை 
வாளியினால் மாள முனிந்து
அவனே!!
பின்னோர் 
தூதன் ஆதிமன்னர்க்கு ஆகிப் 
பெருநிலத்தார் இன்னார் தூதன் என 
'நின்றான்' 
எவ்வுள் கிடந்தானே!!
-- பெரிய திருமொழி 

எவ்வுள் என்ற இந்த திவ்ய தேசத்தில் இருக்கும் இதே பெருமாள் தான்,
முன்னொரு காலத்தில் (த்ரேதா யுகத்தில்),
ராமபிரானாக அவதரித்த போது,
தனக்கும் சீதைக்கும் மட்டுமே தெரிந்த சம்பவங்களையும்,
சீதையின் அடையாளங்களையும்,
தன் நம்பிக்கைக்கு பாத்திரமான "ஹனுமான்" என்ற வானரத்திடம் சொல்லி தூது அனுப்பினராம்.

இதையே
"முன்னோர் 
தூது வானரத்தின் வாயில் மொழிந்து" 
என்று சொல்லி எவ்வுள் பெருமாளிடமே அவருடைய ராம அவதாரத்தை பற்றி சொல்லி,

"கண்டேன் சீதையை" என்று தூது சென்ற ஹனுமான் நல்ல சேதி சொல்ல, "அந்த அரக்கன் ராவணனை வாளெடுத்து தன் விபவ அவதாரத்தின் போது ஒழித்தாராம், எவ்வுள் என்ற திவ்ய தேசத்தில் இருக்கும் அர்ச்சா அவதார பெருமாள்..

இதையே
அரக்கன் மன்னூர் தன்னை 
வாளியினால் மாள முனிந்து, 
என்று சொல்கிறார்.


தூது சென்று, சீதை இருக்குமிடத்தை கண்டுபிடித்து, வெற்றியுடன் திரும்பிய ஹனுமான், ராமபிரானின் தாபத்தை, தீர்த்தார்.
ஹனுமானுக்கு பதில் செய்ய முடியாமலேயே அந்த அவதாரம் முடிந்து விட, அதே ராமபிரானே (அவனே!!),
அடுத்த அவதாரமான கிருஷ்ண அவதாரத்தில்,
"இந்த முறை ஹனுமனை போல தான் தூது போக வேண்டும்... அவருக்கு இந்த அவதாரத்தில் பதில் செய்து விடவேண்டும்"
என்று நினைத்தாராம்.




வாயு புத்ர ஹனுமானே, இங்கு பீமனாக அவதரிக்க,
"தான் தூது போகிறேன்!!" என்று யுதிஷ்டிரரிடம் யாசித்து "ஹனுமானுக்கு பதில் செய்து விட நினைத்தாராம்" இந்த எவ்வுள் பெருமாள்...

ஆழ்வாருக்கு கண்ணன் மாடு மேய்க்கும் சிறு பாலகனாக தெரிய, கண்ணபிரானை சிறு பாலகனாகவே ரசிக்கிறார்.

"ஹனுமானுக்கு இந்த அவதாரத்தில் பதில் செய்து விடலாம்" 
என்று ஏதோ ஒரு ஆசையில் கிளம்பி விட்டாலும், 
இந்த கண்ணனோ, சிறு பாலகனாம். 

"வெண்ணை கொடுத்தால் சாப்பிடும்" இந்த பாலகண்ணன்,
ஹனுமானுக்கு பதில் செய்து விடலாம் என்ற ஆசையில், த்ருத ராஷ்டிரன் சபைக்கு வந்து விட்டானாம்.

ஹனுமானை போல சாமர்த்தியமாக குடும்ப விவகாரம் பேச தெரியாத சிறு பாலகன்,
"பகவத் கீதை சொல்" என்று ஞானத்துக்கு வழி கேட்டால், ஒரு மணி நேரம் பேசுவானாம்.
இதுவோ!! "குடும்ப பிரச்சனை. சொத்து பிரச்சனை".

குழந்தைக்கு, குடும்ப பிரச்சனையை எப்படி பேச தெரியும்?
"மாட்டை பற்றி கேட்டால் கூட" ஒரு மணி நேரம் பேசுவானாம்.
அல்லது,
"உலக படைப்பை பற்றி கேட்டால்", அதை பற்றியும் கூட பேசுவானாம் இந்த கண்ணன்.

"குடும்ப விவகாரமே தெரியாத இந்த பால கிருஷ்ணன்"
ஏதோ ஆசையில் தூதுவனாக சபைக்கு வந்து விட, ஹனுமானை போல சாமர்த்தியமாக பேச தெரியாமல், கையை பிசைந்து கொண்டு "நின்றானே" என்று கொஞ்சி மகிழ்கிறார்.

பால கிருஷ்ணனாக இருந்தால் தான், ஹநுமானை போல தூதில் சாமர்த்தியமாக பேச தெரியாமல், சமாதான பேச போய், 
"ஒரு குண்டூசி நிலம் கூட தர முடியாது" என்று துரியோதனன் சொல்ல, 
"நீங்களெல்லாம் அயோக்கியன்" என்று சொல்லி மிரட்டி விட்டு, 
தகுதி இல்லாதவர்களுக்கு போய் இந்த கண்ணன் "விஸ்வ ரூபமும்" காண்பித்து விட்டு
ஹநுமானுக்கு பதில் செய்ய முடியாத வருத்தத்துடன் திரும்பி சென்று விட்டானாம்.

அதையே
பின்னோர் 
தூதன் ஆதிமன்னர்க்கு ஆகிப் 
பெருநிலத்தார் இன்னார் தூதன் என, 
'நின்றான்'
என்று பாடுகிறார்.

ராமனாகவும், கிருஷ்ணனாகவும் விபவ அவதாரம் செய்த அதே எம்பெருமான் தான்,  எவ்வுள் என்ற திவ்ய தேசத்தில் அர்ச்சா திருமேனியுடன் காட்சி கொடுத்துக்கொண்டு சயன கோலத்தில் இருக்கிறார் (எவ்வுள் கிடந்தானே!!)  
என்று என்று நாம் எல்லோரையும் வீர ராகவ பெருமாளை பார்க்க அழைக்கிறார் திருமங்கையாழ்வார்.

"எவ்வுள்" என்று அழைக்கப்படும் இந்த திவ்ய தேசத்துக்கு "திருவள்ளூர்" என்று இன்று பெயர்.
அவசியம் பார்க்க வேண்டிய திவ்ய தேசம்சென்னைக்கு அருகில் உள்ளது.


 

Wednesday 5 February 2020

பாசுரம் (அர்த்தம்) - தாயே தந்தை என்றும் - திருமங்கையாழ்வார் திருப்பதி பெருமாளை பார்த்து பாடிய அழகான பாசுரம். தமிழன் அர்த்தம் தெரிந்து கொள்ள வேண்டாமா?

திருப்பதியில் ஸ்ரீனிவாசபெருமாள், 'நமக்காகவே எப்பொழுதும் நின்று கொண்டே காத்துக்கொண்டிருக்க',

நாமோ, "நேரம் கிடைக்கவில்லை, தலை போகிற காரியம் இருக்கிறது" என்று திருமலை போகாமல் இருப்பதற்கு, காரணங்கள் சொல்லி கொண்டு இருக்கிறோம்.




திருமலையப்பனிடம் கொஞ்சம் தலையை காண்பித்து விட்டு வந்தாலும், தலை போகும் காரியத்தையும் சாதிக்க வைத்துவிடுவாரே!!
தலையும் போகாமலும் காப்பாற்றி விடுவாரே பெருமாள் !!

அல்ப பலன் முதல் மோக்ஷம் வரை தர, சங்கல்பம் செய்து, அர்ச்ச அவதாரம் எடுத்த திருமலையப்பனை காண்பதை விட, வேறு என்ன சாதனை நாம் செய்ய வேண்டும்?

"வாழ்நாள் முழுவதும், ஏதேதோ காரணத்தை சொல்லிக்கொண்டே, கோவிலுக்கு போகாமல், பெருமாளை சரணம் அடையாமல் இருக்கும் நம்மை போன்றவர்கள்,
எதிர்பாராவிதமாக ஒரு நாள் திருமலையப்பனை தரிசிக்கும் வாய்ப்பு கிடைத்து விட்டால், பெருமாளிடம் என்ன சொல்லி சரணாகதி செய்ய வேண்டும்?"
என்று திருமங்கையாழ்வாரே, பாசுரம் மூலமாக, நமக்கு சொல்லி தருகிறார்.

தாயே தந்தை என்றும்,
தாரமே, கிளை மக்கள் என்றும்,
நோயே பட்டு ஒழிந்தேன் !!
நுன்னை காண்பது ஓர் ஆசையினால்,
வேயேய் பூம்பொழில் சூழ்,
விரையார் திருவேங்கடவா
நாயேன் வந்து அடைந்தேன்,
நல்கி ஆள் என்னை கொண்டருளே !!
-- பெரிய திருமொழி (திருமங்கையாழ்வார்)

நாம் பிறந்தநாளாக, நம்மை காண்பதற்கு, திருமலையில் அரச்சா திருமேனியுடன் ஸ்ரீனிவாச பெருமாள் காத்து கொண்டு இருக்கிறார்.

பல காரணங்கள் சொல்லி, வராமல் இருக்கும் நாம், ஒருநாள் திடீரென்று திருமலைக்கு வருமாறு நேர்ந்து விட,
பக்தன், 'ஏன் இத்தனை தாமதமாக வந்தேன் என்று பெருமாளிடம் பேசுவது போல' இந்த பாசுரத்தை திருமங்கையாழ்வார் பாடுகிறார்.

பெருமாள், பக்தனிடம்,
"நல்ல இளமையான பால்ய வயதிலேயே, உடம்பில் தெம்பு இருக்கும் போதே, திருமலை ஏறி வந்து இருக்கலாமே?"
என்று கேட்க,
பக்தன் உண்மையை சொன்னான்..
'பாசம் என்ற நோய் (மாயை) தன்னை தொற்றியதால், பெருமாளை பார்க்க இத்தனை வருடங்கள் ஆகி விட்டது' என்று சொல்லும்படியாக பாசுரம் அமைந்துள்ளது.

பெருமாளை பார்த்து,
"வாஸ்தவம் தான். இளமையான வயதிலேயே வந்திருக்கலாம்!!.
ஆனால்,
 எனக்கு வயதான அப்பா அம்மா.
நான் தான் அவர்களை பார்த்து கொள்ள வேண்டும்.
என் மனைவி ஒழுங்காக பார்த்து கொள்ள மாட்டாள்.




ஒரு சமயம், என் அப்பாவுக்கு உடம்பு முடியாமல் போய் விடும்.
ஒரு சமயம், என் அம்மாவுக்கு உடம்பு முடியாமல் போய் விடும்.
இப்படியே அந்த சமயங்களில், 
நான் திருப்பதி வர முடியாமல் போய் விட்டது.
பிறகு, 
பெற்றோர்கள் பரமபதம் அடைந்த பின், திருப்பதி கிளம்பலாம் என்றால், 'குடும்ப பொறுப்பு' வந்துவிட்டது.
குழந்தைகள், அம்மாவிடம் கூட போகாமல், "அப்பா.. அப்பா..." என்று எப்பொழுதும் என்னையே சுற்றி சுற்றி வருகின்றனர்.




நான் குழந்தைகளை பார்த்து கொள்ளவில்லையென்றால், என் மனைவி 'உங்களை கட்டிக்கொண்டு இப்படி மாரடிக்கிறேனே' என்று என்னை திட்டுகிறாள்.
இப்படிப்பட்ட நிலையில் நான் எப்படி திருப்பதி வருவது?

உங்களுக்கு நேரம் ஒதுக்கி உங்களை தரிசிக்க முடியாமல், எனக்கு ஏதாவது வியாதி வந்துகொண்டே இருக்கிறது.

அப்படி என்ன வியாதி உனக்கு என்று கேட்கிறீர்களா?? 
பிறந்தது முதல், 
அப்பா என்ற ஒரு வியாதி, 
அம்மா என்ற ஒரு வியாதி, 
மனைவி என்ற ஒரு வியாதி, 
பிள்ளைகள் என்று ஒரு வியாதி.
இப்படி பலவிதமான 'பாசம் என்ற வியாதிகளை' காரணம் சொல்லி சொல்லி, இப்பொழுது எனக்கு வயதும் ஆகிவிட்டது.
'திருமலை போகவேண்டும்' என்ற நினைவு மட்டும் எப்பொழுதும் இருக்கிறது.

'கடமையை செய்து முடிக்க வேண்டும்.
கடமையை செய்து முடிக்க வேண்டும்'
என்று சொல்லிக்கொண்டே இவ்வளவு நாள் காரணங்கள் சொல்லி உங்களிடமிருந்து தப்பித்தேன்.

உண்மையில் கடமை காரணமா?
என் பக்தி குறைவு காரணமா?
ஸ்ரீனிவாசா, உங்களுக்கு உண்மை தெரியுமே!!

'கடமை கடமை' என்ற போர்வை போர்த்திக்கொண்டு நான் உங்களை இது நாள் வரை ஏமாற்றினேன்.

இன்று, 
எல்லாவற்றையும் எப்படியோ விட்டு விட்டு, உங்களை பார்க்க வேண்டும் என்ற ஆசையால், ஒரு வழியாக ஓடி வந்து விட்டேன்.
இங்கு வந்து, இந்த திருமலையை பார்த்தால், 
எத்தனை குளிர்ச்சியாக இருக்கிறது?
ஏழு மலைகளும் எத்தனை அழகாக இருக்கிறது?
இத்தனை ஆச்சர்யமான திருமலையில், ஒரு நாய் புகுந்து விட்டதே?

'நாய் புகுந்து விட்டதே!! சீ சீ.. ஓடு' 
என்று சொல்லி துரத்தி விடாமல், அந்த நாய்க்கும் கொஞ்சம் எச்சில் இலையை போடுவது போல, எப்படியோ திருமலைக்குள் புகுந்து விட்ட என்னையும், ஸ்ரீனிவாச பெருமாளே!! நீங்கள் அழைத்து அருள் செய்ய வேண்டும்."
என்கிறார் திருமங்கையாழ்வார்.

இதையே
திருவேங்கடவா
நாயேன் வந்து அடைந்தேன்,
நல்கி ஆள் என்னை கொண்டருளே !!
என்கிறார்.

பிறந்தது முதல் பெருமாள் பக்கமே போகாமல்,
தாய், தந்தை, மனைவி, மக்கள் என்று பலரிடம் பாசம் வைத்து,
ஒரு நாள் கூட,
நாராயணன் மீது பாசம் வைக்காமல்,
பெருமாள் கோவிலில் கூட கால் வைக்காமல் இருந்து விட்டு,
திடீரென்று ஒரு நாள்,
திருமலைக்கு வந்து 
"நாராயணா அருள் செய்ய வேண்டும் (நல்கி ஆள் என்னை கொண்டருளே)" என்று கேட்டால்,
"இது என்ன நியாயம்?!!
கொஞ்சம் கூட மதிக்காத இவனுக்கு ஏன் பெருமாள் அருள் செய்ய வேண்டும்?"




பெரியவாச்சான் பிள்ளை போன்ற ஆச்சாரியர்கள் இதற்கு விளக்கம் கொடுக்கும் போது,
"நமக்கு தாய் தந்தை மனைவி மக்கள் மேல் பாசம் என்ற நோய் உள்ளது போல,
பெருமாளுக்கு தன் அம்சமான 'ஜீவனிடம் அளவுகடந்த பாசம்' என்ற நோய் எப்பொழுதும் உண்டு.
பரமபதத்தை விட்டு, நாராயணன் திருமலைக்கு வந்து நிற்பதே, நம்மை எல்லாம் எப்படியாவது திருமலைக்கு வரச்செய்து, தன் தரிசனத்தை கொடுத்து, மோக்ஷம்  கொடுத்து அருள வேண்டும் என்பதற்காக தான்.

ஜீவனுக்கும் பரமாத்மாவுக்கும் உள்ள சம்பந்தத்தை காட்டி, பல காரணங்கள் சொல்லி பெருமாளிடம் வராத ஜீவனையும், பெருமாள் உகப்புடன் ஏற்று அருள் செய்வார் என்று காட்டுகிறார்.

திருமலைக்கு சென்று பெருமாளை தரிசிப்போம்.