Followers

Search Here...

Showing posts with label கோவில். Show all posts
Showing posts with label கோவில். Show all posts

Saturday 15 April 2023

மகாபாரத சமயத்தில் மதுரை, தமிழ்நாடு... ஏன் திரௌபதி அம்மனுக்கு கோவில் தமிழகத்தில் அதிகம் உள்ளது? வாருங்கள்.. அறிவோம் வியாச மஹாபாரதம்

ஏன் திரௌபதி அம்மனுக்கு கோவில் தமிழகத்தில் அதிகம் உள்ளது? 

தமிழர்களுக்கும் திரௌபதிக்கும் எப்படி சம்பந்தம் உண்டாகி இருக்கும்?

 

திரௌபதியை மணந்து கொண்ட அர்ஜுனன், தமிழகம் வந்தாரா?

மஹாபாரதம் படிக்கும் போது, இதற்கான விடை நமக்கு தெரிகிறது.


அது மட்டுமல்ல, அர்ஜுனன் பாண்டிய இளவரசியான சித்ராங்கதையை மணந்து கொண்டார் என்று தெரிகிறது.


அர்ஜுனன் பிள்ளையே பிறகு பாண்டிய மன்னன் ஆனான் என்றும் தெரிகிறது. 

மஹாபாரத போருக்கு பிறகு 4000 வருடங்கள் (பாண்டிய ஆட்சி இருந்த வரை) அர்ஜுனன் வம்சமே பாண்டிய மன்னர்களாக ஆண்டனர்.


அர்ஜுனன் பாண்டிய இளவரசி சித்ராங்கதையை மணக்க இடம் கொடுத்த திரௌபதிக்கு இந்த தமிழ் மண் தெரிவிக்கும் நன்றி என்று அறிய முடிகிறது.


மேலும், திரௌபதி அக்னியில் இருந்து வந்தவள் என்று காட்ட, தீ மிதிக்கும் வழிபாடும் ஏற்பட்டது என்று அறிய முடிகிறது.


மஹாபாரத காலத்தில் (3100BCE) "மதுரை"க்கு பெயர் என்ன இருந்து இருக்கிறது? என்று அறிய முடிகிறது.

பாண்டியர்களுக்கும் அர்ஜுனனுக்கும் எப்படி சம்பந்தம் உண்டாகி இருந்தது?

சோழ அரசாட்சியும், சேர அரசாட்சி முடிந்ததும், பாண்டிய அரசாட்சி பல வருடங்கள் நடந்தது என்பது மாலிக் காபூர் வந்த சமயத்தில் அறிய முடிகிறது. இஸ்லாமியர்கள் தாக்கிய மீனாக்ஷி கோவிலில் இன்றும் உடைக்கபட்ட சிவ லிங்கம் கதை சொல்கிறது.

5000 வருடம் முன் மஹாபாரத காலத்தில் "மணிபூரம்" என்றும் மதுரை அழைக்கப்பட்டு இருக்கிறது.

பார்வதி தேவியே மலயத்வஜ பாண்டியனுக்கு மீனாக்ஷியாக பிறந்து இந்த பாண்டிய தேசத்தை ஆண்டாள். மலயத்வஜன் வம்சத்தில் வந்த பாண்டிய மன்னன் என்று சகாதேவனுக்கு தன்னை அறிமுகப்படுத்தி கொள்கிறார், அன்று இருந்த பாண்டிய அரசர்.

பிற்காலத்தில் பெரியாழ்வார் இங்கு வந்து வசித்த போது, சில மைல் தூரத்தில் கள்ளழகர் இருக்கும் இடத்தை பார்த்தால் கோகுலம் போலவும், அங்குள்ள மலையை பார்த்தால் கோவர்த்தனம் போலவும், பிருந்தாவனம் போலவும், இந்த தலைநகரை பார்த்தால் மதுரை போலவும் தெரிய, அங்கேயே கடைசி வரை வசித்தார்.
மணிபூரம் தென்மதுரை போல இவருக்கு தெரிய, உத்திர பிரதேசத்தில் இருக்கும் நிஜமான மதுராவை வடமதுரை... வடமதுரை என்று குறிப்பிட்டு பாடுகிறார்.

அவர் காலத்துக்கு பிறகே, மதுரை என்ற பெயர் உண்டாகியது.

ஆண்டாளை பெற்ற பெரியாழ்வார் முக்தி பெற்ற ஸ்தலம் அழகர்மலை என்ற சோலைமலை என்ற திருமாலிருஞ்சோலை.

பாண்டியர்களுக்கும் அர்ஜுனனுக்கும் எப்படி சம்பந்தம் உண்டாகி இருந்தது?


தமிழர்களுக்கும் அர்ஜுனனுக்கும் எப்படி சம்பந்தம் உண்டாகி இருந்தது?


வாருங்கள்.. அறிவோம் வியாச மஹாபாரதம்


Connection between tamil people (Pandiya and chola) in mahabharat?

In 3 chapter, we see  this connection.
Also we see that, from 3102BCE Mahabharata period, pandya kings are Arjuna lineage.

1st when Arjuna goes for theertha yatra,
2nd sahadeva when he goes for rajasuya yagya,
3rd Arjuna goes again for aswamedha yaga where he gets killed by his son babruvahana and gets life back from Udupi another wife.

பாண்டிய அரசன் அர்ஜுனனின் மகன் என்றும்,
தமிழர்கள் "தமிழ் மொழி பேசினார்கள்" என்றும் மகாபாரதத்தில் காண்கிறோம்.

நம் பாண்டிய அரச வம்சமே, அர்ஜுனன் வம்சம் என்று தெரிகிறது.

மஹாபாரத ஸ்லோகத்துடன், அர்த்தம் இங்கே குறிப்பிடப்பட்டுள்ளது

1.
அர்ஜுனன் இந்திரப்ரஸ்தத்தில் (old Delhi) இருந்து தீர்த்த யாத்திரையாக 12+1 மாதங்கள் செல்கிறான்.

அப்பொழுது, பாண்டிய தேசத்தில், மணலூர் வருகிறான். அப்பொழுது சித்ரவாகனன் என்ற பாண்டிய அரசன், தன் பெண்ணை (சித்ராங்கதை) நிபந்தனை பேரில் திருமணம் அர்ஜுனனுக்கு செய்து முடிக்கிறான்.
ஆதி பர்வம், 61, 235 அத்தியாயம்
https://www.proudhindudharma.com/2022/10/Pandya-king-dynasty-arjuna.html?m=1

2.
யுதிஷ்டிரர் ராஜசூய யாகம் செய்ய முடிவு செய்த போது, சகாதேவன் தமிழகம் வருகிறார்.
இங்கு, சோழர்களை முதலில் பார்க்கிறான். பிறகு பாண்டிய தேசம் செல்கிறான். இவர்கள் தமிழர்கள், தமிழ் மொழி பேசினார்கள் என்று வியாசர் சொல்கிறார். தன் சகோதரனின் மனைவியும், அவன் பிள்ளை பப்ருவாகனனும் இருப்பதால், மலயத்வஜ அரசன் பரம்பரையில் வந்த சித்ரவாகனன் அரண்மனைக்கு வந்து பார்க்கிறான். அர்ஜுனன் பிள்ளைக்கு பொன்னும் மணியும் தருகிறான். யாகத்துக்கு வரவேண்டும் என்று அழைக்கிறான்.
சபா பர்வம், அத்தியாயம் 33
https://www.proudhindudharma.com/2022/08/Sahadeva-visit-tamilnadu-and-chitrangada.html?m=1

3.
போர் முடிந்த பிறகு, அஸ்வமேத யாகம் செய்ய யுதிஷ்டிரர் முடிவு செய்கிறார்.
அப்போது, அர்ஜுனன் பாண்டிய தேசம் வருகிறான்.
பாண்டிய மன்னனான தன் மகனையும், தமிழ் பெண்ணான சித்ராங்கதையையும் பார்கிறான்.
அஸ்வமேத பர்வம், அத்தியாயம் 79
https://www.proudhindudharma.com/2023/01/arjuna-killed-by-pandiya-king.html?m=1

Saturday 12 December 2020

கோவிலை சீர்திருத்தம் செய்து, இந்தியாவின் பொருளாதாரத்தை மாற்ற வழி.. தமிழ்நாட்டை ஆன்மீக பூமியாக ஆக்க வழி.. டாஸ்மாக் வருமானம் தேவையே இல்லை

இன்றைய கோவில்கள் நிலை:

* கோவில் நிர்வாகம், கோவில் நிலம், சொத்து, வருமானம், உத்சவங்கள், திருப்பணிகள் அரசு கவனிக்கிறது.
* 13000 கோவில்கள் (அதற்கு மேலும் இருக்கலாம்) தமிழ்நாட்டில் இருந்தாலும் (அதில் 108 திவ்ய தேசங்களில் 80க்கும் மேற்பட்ட கோவில்கள் இருந்தாலும், நாயன்மார்கள் பாடிய சிவ ஸ்தலங்கள் ஆயிரம் இருந்தாலும்) இந்த 13000க்கும் மேற்பட்ட கோவில்களில் அதிகபட்சம் இவர்களுக்கு மீனாட்சி கோவில், திருவரங்கம், பழனி என்று 10 கோவில்கள் மட்டுமே பெரும் வருமானம் கொடுக்கிறது.
* 10 கோவில்களில் வரும் வருமானத்தை, அரசு பகிர்ந்து 13000 கோவில்களில் விளக்கு ஏற்றும் அளவுக்காவது உதவி செய்கிறது. 
அது போக, இந்த 10 கோவில்களின் வருமானத்தில் வரும் மீதி பணத்தை கோவிலில் வேலை பார்க்கும் அதிகாரிகள் முதல் மூஞ்சூர் வரை சம்பளமாக பெறுகின்றனர்.. 

காலை 4மணிக்கு குளித்து பூஜை ஆரம்பித்து இரவு வரை பூஜை செய்து, கேலி செய்யும் மக்களை, பொறாமை படும் மக்களிடம் கோபப்படாமல் விபூதி, அர்ச்சனை செய்யும்  அர்ச்சகனுக்கு 5000 ரூபாய் சம்பளம்
"தட்டில் கிடைக்கும் காசை வாங்கி கொள்" என்று கிண்டல்.. 
12 வருடம் வேதம் படித்து, "கோவிலே கதி" என்று இருக்கும் அர்ச்சகருக்கு மதிப்பு இல்லை. 

கோவிலை எப்போது மூட வேண்டும்? 
யார் வந்தால் தனியாக மீண்டும் தீபாதாரனை காட்ட வேண்டும்? 
என்று அரசு அலுவல் அதிகாரி தான் சொல்வார். அதை அர்ச்சகர் கேட்க வேண்டும். 
அதிகாரிகளுக்கு உள்ளே இருக்கும் மூலவர் கற்சிலை.. தெய்வமில்லை.




* இது தவிர, 10 கோவிலில் வரும் மீதி வருமானம் அரசாங்கமும் பொது செலவுக்கு எடுத்து கொள்ளும்.

இன்றைய நிலை:
* வேதம் படித்து அர்ச்சர் ஆகி 5000 ரூபாய் சம்பளம் வாங்கி வாழ முடியாததால், இவர்கள் சந்ததி குறைந்து விட்டனர். ப்ராம்மணர்களை விரட்ட, அவர்கள் மற்ற வேலைகளை செய்ய ஆரம்பித்து விட்டனர்.
வேலை வாய்ப்பு போட்டிகள், பிராம்மண வெறுப்பு உண்டாகி விட்டது.

* 10 கோவிலால் கிடைக்கும் வருமானத்தை மட்டுமே கவனிக்கும் அரசு, மிச்சம் இருக்கும் 13000 கோவிலை குப்பை மேடாக ஆக்கி விட்டது...
காஞ்சியில் மட்டும் 18 திவ்ய தேசங்கள் உண்டு. 
ஆனால் இவர்கள் கண்களுக்கு காஞ்சி வரதர் கோவில் மட்டும் தான் வருமானம் தரும் என்று ஆக்கி விட்டனர். 
மற்ற கோவில்களை சென்று பார்த்தால், கோபுரத்தை கட்டிய அரசனுக்கு பிறகு இன்று வரை யாரும் அதை சரி செய்ய முயன்றதாக தெரியவில்லை.

இது போன்ற பல கோவில்களை காப்பது ஒரு கிழ அர்ச்சகர். 
அவர் பிள்ளையும் அர்ச்சகர் ஆக வேண்டாம் என்று படித்து அமெரிக்காவில் செட்டில்.
கோவிலை அழிக்க அருமையாக காய் நகர்த்தி, 13000 வருமானம் தராத கோவில்களில், வேதம் அறிந்த சந்ததிகள் இல்லாமல் செய்து விட்டனர்...
மறு பக்கம், 
ப்ராம்மணனும் வேலைக்கு வருகிறான் என்று பொறாமை வேறு...

* அரசாங்க அதிகாரிகள் கோவிலில் பக்தர்கள் கொடுக்கும் பணத்தில் தினமும் பட்சணம், காபி சாப்பிட்டு வாழ்கிறார்கள். நிம்மதியான வாழ்க்கை...

* தேவைப்பட்டால், 13000 கோவில்களில் ஒரு கோவிலை இடித்து வேறு ஏதாவது அரசாங்க கட்டிடம் கட்டவும் இவர்களுக்கு வழி உண்டு, காரணமும் உருவாக்குவார்கள்..

* நிர்வாகம் தான் முக்கியம் என்பதால், கோவிலை நிர்வகிக்க கமலஹாசன் போன்ற குணம் கொண்ட இந்துவாக உள்ள நாதீகனும் பதவிக்கு வரலாம், கிறிஸ்தவனும் பதவிக்கு வரலாம்.
இவர்கள் என்ன நாசமும் செய்யலாம்.. இல்லை ஒன்றுமே செய்யாமல் கோவிலை தானாக அழியவும் செய்யலாம்...

கோவிலையே வியாபார ஸ்தலமாக்கி, கோயிலிலேயே கடைகள் அமைக்க இடம் கொடுத்து, 
கோவிலில் நாயன்மார் பாடிய பதிகங்கள் பாடிய ஓதுவார்களை அழித்து விட்டனர்.. 
அவர்கள் சந்ததியும் இன்று வேலைக்கு சென்று விட்டனர்.. 
திருவாசகம் என்ற தமிழை வளர்க்க ஆள் இல்லை. இந்த தமிழை புரிந்து கொள்ளாத தமிழர்கள் ஆக்கி விட்டனர்.
எப்படி பார்த்தாலும், கோவிலில் வருமானம் பார்க்கலாம் என்று தான் பார்க்கிறார்கள்..


மாற்றம் என்ன?

'சிலர் அரசு கோவில் நிர்வாகத்தை விட்டு செல்ல வேண்டும்' என்று கோரிக்கை வைக்கிறார்கள்..

இது சரி போல இருந்தாலும், பிரச்சனை உருவாக்கவும் இது செய்யும்..

ஆதீனங்கள், தீட்சிதர்கள் கட்டுக்குள் இருக்கும் சில கோவில்களை பார்த்தால், கோவிலுக்கு வரும் உண்மையான பக்தனுக்கு வருத்தம் தான் வரும்..

அத்தனை பெருமை வாய்ந்த வைத்தீஸ்வரன் கோவில் எப்படி உள்ளது?
உள்ளே இருக்கும் சிவபெருமான், அம்பாள் தவிர, பார்க்கும் இடமெல்லாம் எண்ணெய் படிந்த அழுக்கு, கும்பாபிஷேகம் செய்ய சோம்பேறித்தனம்..  கோவில் கோபுரங்களில் செடிகள்...

அது போல, சிதம்பரம் கோவிலுக்கு சென்றால், அர்ச்சனை செய்கிறோம் என்று பிடிவாதமாகவாவது கேட்டு காசு வாங்கி கொள்கிறார்கள் தீட்சிதர்கள்.. 
அவர்கள் இதை நம்பி தான் வாழ்க்கை என்பதாலோ என்னவோ, வரும் பக்தர்களில் காசு கொடுப்பவர்களுக்கு முதல் மரியாதை செய்கிறார்கள்..

இப்படி பார்க்கும் போது, ஒட்டு மொத்தமாக அரசு விலகுவது கூடவே கூடாது
ஒரு மேற்பார்வை அவசியம்..


இதோ என்னுடைய பிளான்:
1. கோவிலை விட, கோவிலில் எந்த தெய்வம்? என்பது மிக முக்கியம்... 

நிர்வாகம் செய்பவர் கமலஹாசன் போன்ற பல வித்தைகள் செய்ய தெரிந்தவர் என்றாலும், அந்த கோவில் தெய்வத்திடம் பக்தி உள்ளவனா? என்பது மிக மிக முக்கியம்..

ராமானுஜர் அடியார்கள் இருக்கிறார்கள். பக்தி உள்ளவர்கள் தான். 
திறன் அடிப்படையில் ஒரு நாமம் போட்டு கொள்ளும் விஷ்ணு பக்தனை, 'திருவண்ணாமலை கோவிலை நிர்வாகம் செய்' என்று செய்தால், அதை விட வேறு முட்டாள் தனம் இருக்கவே முடியாது...
ஆக, 
சில நடைமுறை சிக்கலை உணர்ந்து இப்படி செய்யலாம்..




* 13000 கோவில்கள் தமிழகத்தில் இருக்கிறது என்றால், மூலவராக இருக்கும் ஸ்வாமியை பொறுத்து காஞ்சி மடம், ஜீயர் மடம், ஆதீனம், என்று தெய்வமே கதி என்று இருக்கும் இவர்களிடம் நிர்வாக பொறுப்பை கொடுக்கலாம். 

முழுவதும் கொடுக்காமல், சுழற்சி முறையில், உடுப்பி கோவிலில் உள்ளது போல, 4 வருடத்திற்கு கோவில் பொறுப்புகளை மாற்ற வேண்டும்...

உதாரணத்திற்கு, காஞ்சியில் உள்ள 18 திவ்ய தேச கோவில்களை ஒரு ஜீயர் (வடகலை ஜீயரா? தென்கலை ஜீயரா? என்பது அந்த கோவில் அர்ச்சகரை கேட்டாலேயே தெரிந்து கொள்ளலாம்) மடம் நிர்வாகம் செய்ய வேண்டும். உதாரணமாக, வடகலை ஜீயர், தேசிகர் வழி வந்த ஜீயர் மடம் நிர்வகிக்க வேண்டும்.
அதுபோல,

தஞ்சை மாவட்டத்தில் உள்ள 15 வடகலை சம்பிரதாய கோவிலை இன்னொரு வடகலை ஜீயர் நிர்வகிக்க வேண்டும்.
அடுத்த 5 ஆண்டுக்கு பிறகு, கோவில் நிர்வாகம் சுழற்சி செய்யப்பட்டு, ஒரு புத்துணர்ச்சி உண்டாக்க வேண்டும்..

இவர்கள் கோவில் நிர்வாகம், உத்ஸவம், வருமானம், பணி அமர்த்தல் பார்த்து கொள்ள வேண்டும்.

பாகுபாடு, பொறாமை காட்ட விடாமல் இருக்க, அரசு மேற்பார்வை வேண்டும்.

அதற்கு ஒரு சிலர் மேற்பார்வைக்கு அரசு பணி அமர்த்தலாம்..

இப்படி சிவன் கோவிலுக்கு சைவ மடங்கள் என்று கொடுத்தால், அவர்கள் நிர்வாகம் செய்வார்கள்..

வரதர் கோவிலுக்கு வரும் வருமானத்தை கொண்டு, தன்னிடம் இருக்கும் மற்ற 15 கோவில்களை பக்தி இருப்பதால், உண்மையாக செலவு செய்ய ஆரம்பிப்பார்கள்.
அனைத்து கோவிலுக்கும் கும்பாபிஷேகம் நடக்க ஆரம்பிக்கும்.. 
கோவில் உத்சவங்கள் நடக்க ஆரம்பிக்கும்..

"கோவில் நடத்த அர்ச்சர் தேவை" என்ற நிலையில், 
"மற்றவர் வேலையை பிடுங்குகிறான் பிராம்மணன்" என்ற நிலை மாறி, பிராமணர்கள் வேதம் படித்து கோவில் அர்ச்சகன் ஆக முயல ஆரம்பிப்பார்கள்..

அரசுக்கு மற்ற ஜாதிகார்களுக்கு அதிகம் வேலை கொடுக்க முடியும்..
கோவில் உத்சவங்கள் நடக்க ஆரம்பிக்க, கோவிலை சுற்றி உள்ள தெருக்களில் உள்ள கடைகளுக்கு வருமானம் கிடைக்க ஆரம்பிக்கும்..
சுய தொழில் பெருகும்..

10 கோவில் வருமானமே இவ்வளவு பேருக்கு சோறு போடும் நிலையில், இந்த மாற்றத்தால் 13000 கோவிலும் பழனி, திருப்பதி போல பிரகாசம் அடையும்..
13000 கோவில்களும் பெரும் வருவாய் தரும்.. 

காஞ்சியில் உள்ள பாண்டவ தூதன் பெருமாளுக்கு பெரிய ரதத்தில் தேர் விட்டு கொண்டாடினால், 
காஞ்சி மடம் காமாக்ஷி கோவிலில் அதை விட பெரிய தேர் அமைத்து சிவ பக்தர்களை மகிழ்விப்பார்கள்..

இது ஆரோக்கியமான போட்டியாகவும் இருக்கும். 

'பொறாமை ஏற்படாமல் பார்த்து கொள்வது' நிர்வாகத்தை மேற்பார்வை பார்க்கும் அரசு அதிகாரிகளின் பொறுப்பு.

இப்படி சரியாக கோவில் நிர்வாகத்தை கட்டு அமைக்கும் போது, 
பக்தி வளரும்.. 

சிவ பக்தன் லட்சம் லட்சமாக சிதிலமடைந்த தன் இஷ்டப்பட்ட கோவிலுக்கு கொடுக்க முன் வருவான்.. 
கோவில்கள் மீண்டும் பிரகாசிக்க, சுய தொழில் பெறுக ஆரம்பிக்கும்.

108 திவ்ய தேசத்தில் ஒரே ஒரு கோவில் திருப்பதி.. 
அந்த கோவில் இருப்பதோ மலை உச்சியில்..  
மலை உச்சுக்கு சென்று கோடி கோடியாக பணம் கொட்டுவதற்கு காரணம் கோவிலை பக்தர்கள் நிர்வாகம் செய்கிறார்கள்..
மேற்பார்வை அரசு செய்கிறது... 

அது போல நாமும் இந்த கட்டமைப்பை செய்து விட்டால், 

15 கோவிலை நிர்வாகம் செய்யும் ஒரு மடத்திடம், வருடா வருடம் 15%  வருமானத்தை அரசு தாராளமாக கேட்டு கொள்ளலாம்.

மீதி பணத்தை இவர்கள் எப்படி செலவு செய்கிறார்கள்? 
ன்ற மேற்பார்வை ஆலோசனை மட்டும் வழங்கலாம்.. 

85% வருமானத்தை கொண்டு இவர்கள் கையாள முழு சுதந்திரம் கொடுக்க வேண்டும்.. 
பணி அமர்த்துவது, மற்ற கோவிலுக்கு செலவு செய்வது, ஊதியம் அதிகமாக கொடுப்பது என்ற எதிலும் இவர்கள் தலையிட கூடாது..

இந்த மாற்றம், தமிழ்நாட்டை ஆன்மீக பூமியாக ஆக்கி விடும்.

ஒரு பக்கம் திருவாசகம் ஓதும் ஒலி கேட்கும்.
ஒரு பக்கம் பாசுரங்கள் ஓதும் ஒலி கேட்கும்.
கோவிலை சுற்றி சுய தொழில் பெருகும். 

இந்திய மக்கள், 
கோவில் தேசமான தமிழகத்தை பார்க்க 4 கோவிலை அல்ல, 13000 கோவிலையும் பார்க்க வருவார்கள்...

பெரும் வருமானம் கிடைக்க ஆரம்பிக்கும் போது, வேலை கொடுக்க வேண்டிய நிலை அரசுக்கு குறையும்..

அவரவர்கள் நிம்மதியாக வாழ ஆரம்பிப்பார்கள்..

இதை விட்டு விட்டு, "கோவில் நிர்வாகம் அரசு எடுக்கவே கூடாது." என்று சொன்னால் வைணவ கோவிலுக்கு மற்றவர்கள் நுழைய முடியாமல் கூட போகலாம்.
சைவ வைணவ சண்டை கூட வரலாம்.

மேற்பார்வை செய்ய அரசு நிர்வாகம் தேவை.

Election commission போல, அரசு அதிகாரியாக இருக்கும் சிலரை ஆண்டு வருமானம் என்ன? என்று கவனித்து, 
அதில் 15% வருமானத்தை அரசு கஜானாவில் போட தற்காலிக அமைப்பும் செய்யலாம்.. 
இதனால், நிரந்தர மேற்பார்வை கூட தேவை இல்லை அரசுக்கு..

இது நடைமுறைக்கு கொண்டு வந்தால், 
கோவில் நிறைந்த தமிழகம் பெரும் கோடிகளை தானே சம்பாதிக்கும்..

"டாஸ்மாக் வருமானம் தேவையே இல்லை" அரசுக்கு என்று தோன்றி விடும்.

பக்தி உள்ளவர்கள் கோவிலை பார்க்கும் போது, தானாக இடிந்து போன கோவில்கள் நிமிரும்.

சிவன் கோவில் இடிந்து கிடப்பதை பார்க்கும் மடாதிபதிகள், அதை சரி செய்ய சிவ பக்தர்களை கொண்டே திருப்பணி செய்து விடுவார்கள்..

பூஜைகள் நடக்க, திருவிழாக்களை நடக்க ஆரம்பிக்க, தொழில் பெருகி, வருமானம் கொட்ட ஆரம்பிக்கும்..

அரசுக்கு உட்கார்ந்தபடி கோடி கோடியாக வருமானம் கிடைக்கும்..
பக்தியும் வளரும்..

உங்கள் கருத்து என்ன?...

Friday 8 November 2019

சிலை திருட்டு.. தெய்வங்களுக்கு சக்தி இருந்தால் காப்பாற்றி கொண்டு இருக்கலாமே? இது போன்ற பிதற்றல் கேள்விகளை, தெய்வங்கள் எப்படி பார்க்கிறார்கள்? தெரிந்து கொள்ள வேண்டாமா?

ஆழ்வார்களுக்குள்ளே வேறுபாடு உண்டா?



"சித்தாந்த" ரீதியில்,
'ஒரு ஆழ்வார் பேசுவதையே, மற்றொரு ஆழ்வாரும் பேசுகிறார்' என்று பார்க்கிறோம்.
ஆழ்வார்களுக்கிடையே சித்தாந்தத்தில் வேற்றுமை கிடையாது..

ஆனால்,
எம்பெருமானை "அனுபவிப்பதில்" ஆழ்வார்களுக்கிடையே வேறுபாடு இருப்பதை காணலாம்.
பொதுவாக எம்பெருமான் நாராயணன் 5 அவதாரங்கள் செய்கிறார்.
1. பரமபதத்தில் பரவாசுதேவன் (வைகுண்ட நாதன் /ஆதி பரமாத்மா)
2. க்ஷீராப்தியில் (பாற்கடலில்) மஹாவிஷ்ணு.
3. பல சமயங்களில் விபவ அவதாரங்கள் (ராம, கிருஷ்ண, நரசிம்ம..முதலிய)
4. அந்தர்யாமியாக (அனைத்திற்குள்ளும் இருப்பவர்)
5. அர்ச்ச (விக்ரஹ) அவதாரம்
முதல் ஆழ்வார்கள், திருமழிசை ஆழ்வார் போன்றவர்கள் வரை, யோகத்தில் இருந்து கொண்டு, எம்பெருமான் நாராயணனை "அந்தர்யாமி"யாக (4) அனுபவித்தார்கள்..

ஸ்வாமி நம்மாழ்வாரோ, எம்பெருமான் நாராயணனின் "பரத்துவத்தை" (1) அனுபவித்தார்.
பரதத்துவ அனுபவத்துடனேயே இருந்ததால் தான், அவருக்கு கோவிலுக்கு சென்று எம்பெருமானை தரிசிக்க கூட அவசியம் ஏற்படவில்லை.
கோவிலுக்கே போகாத ஆழ்வார் இவர் ஒருவர் தானே..
மாறாக ஸ்ரீரங்கம் என்று நினைத்தால், அந்த கோவிலில் உள்ள ஸ்ரீரங்கபெருமாள், இவர் இருக்கும் இடத்துக்கு வந்து காட்சி கொடுப்பார்.
அத்தகைய அனுபவத்திலேயே இருந்தார் நம்மாழ்வார் என்று பார்க்கிறோம்.
பெரியாழ்வார், குலசேகர ஆழ்வார், நாச்சியார் (ஆண்டாள்) போன்ற அனைவரும் "ராம, கிருஷ்ண, கூர்ம, நரசிம்ம" போன்ற விபவ அவதாரங்களையே (3) அனுபவிப்பவர்களாக இருந்தனர்.
விபவ அவதாரமான "கண்ணனிடம் மட்டுமே பக்தி செய்தாள்" ஆண்டாள்.
அர்ச்சா திருமேனியாக உள்ள ஸ்ரீ ரங்கநாதரிடம் கிருஷ்ண பரமாத்மாவை கண்டாள் ஆண்டாள் நாச்சியார் என்று பார்க்கிறோம்.

சாமானிய ஜனங்களான நாம்,
"ராமரையோ, கிருஷ்ணரையோ பக்தி செய்து, அதே ரூபத்தை கனவிலாவது தரிசிக்க முடியுமா?" என்பது தெரியாது..

திடபக்தி உள்ள மகான்களுக்கு, சாத்தியமாகும் இந்த பகவத் தரிசனம், நமக்கு சாத்தியமாகுமா? என்பது கேள்விக்குறியே !!

தெய்வத்திடம் திடபக்தி இல்லாத நமக்கும், வழி உண்டா? 
ஆழ்வார்களில் நமக்காக நிற்பவர் திருமங்கை ஆழ்வார் ஒருவரே.

திருமங்கை ஆழ்வார் மட்டுமே, "அர்ச்ச" அவதாரத்தையே (5) எம்பெருமானாக அனுபவித்தார்.
அர்ச்ச (விக்ரஹ) அவதாரத்தில் இருக்கும் பெருமாளிடம், ஆண்டாளை  போல விபவ அவதாரத்தை கூட பார்க்கவில்லை, இவர். 
எம்பெருமானே "விக்ரஹ ரூபமாக அவதரித்து இருக்கிறார்" என்றே அனுபவித்தார் திருமங்கை ஆழ்வார்.



நாம் கோவிலுக்கு சென்று,
கோவிலில் உள்ள பெருமாளை எப்படி பார்க்க வேண்டும்? 
எப்படி பக்தி செய்ய வேண்டும்? என்று கேள்விக்கு,
தன் வாழ்க்கையே இதற்கு பதிலாக வாழ்ந்து காட்டி,, 
எம்பெருமானை பார்த்து நாமும் பாடுவதற்கு தன் பாசுரங்களையே கொடுத்து, 
நம் "பக்தியை" வளர்க்க செய்கிறார் திருமங்கை ஆழ்வார்.
சாதாரண மக்களும், எம்பெருமானை எப்படி பக்தி செய்ய வேண்டும்? என்று வழிகாட்டிய திருமங்கை ஆழ்வாருக்கு, ஹிந்துக்கள் பெரும் கடன் பட்டு இருக்கிறோம் அல்லவா..

நாம் எப்படி கோவிலில் உள்ள பெருமாளை பார்த்து பக்தி செய்ய வேண்டும்? 
என்று காட்டுவதற்காகவே, திருமங்கை ஆழ்வார் அவதரித்தார் போலும்.

திருமங்கை ஆழ்வாருக்கு, அர்ச்ச அவதார விக்ரஹங்களே பூரணமான அனுபவத்தை கொடுத்தது.
திருமங்கை ஆழ்வாரை போல கோவில் கோவிலாக சென்று தரிசித்த ஆழ்வார்கள் இல்லை.
கோவில் கோவிலாக சென்று, அங்கு "அர்ச்ச அவதாரமாக உள்ள பெருமாளை பார்ப்பதினாலேயே அவருக்கு ஏற்படும் உகப்பு, வேறு எந்த அனுபவத்திலும் அவருக்கு ஏற்படவில்லை" என்று தெரிகிறது.

திருமங்கை ஆழ்வாரை போல, கோவில் கோவிலாக சென்று எம்பெருமானை நேரில் பார்த்து, பார்த்து, மங்களாசாசனம் செய்த ஆழ்வார்கள் வேறு இல்லை.

தியானத்தில் எம்பெருமானை புருவ மத்தியில் தரிசனம் செய்வதை காட்டிலும், இவருக்கு மட்டும் தான், எம்பெருமானை கோவிலில் சென்று அரச்சா திருமேனியாக பார்த்தால் தான் திருப்தி ஏற்பட்டது.

கோவிலில் இருக்கும் பெருமாள், "அரச்சா (விக்ரஹ) திருமேனி"யாக தான் இருக்கிறார்.
நம்மை போன்ற சாதாரண ஜனங்களுக்கு, "இது கல் சிலை தானே" என்று தோன்றுகிறது.
ஆனால்,
திருமங்கை ஆழ்வாருக்கோ, அர்ச்சா திருமேனியை பார்க்கும் போதே,
"இது நமக்காக எம்பெருமான் செய்த அர்ச்சா (5) அவதாரமாயிற்றே"
என்றே தோன்றுகிறது..

"ஸ்வயம் பகவான் நாராயணன், அர்ச்சா திருமேனியுடன் அவதரித்து உள்ளார்"
என்றே ஆழ்வார்கள், மகான்கள், ஆச்சாரியர்கள் பார்க்கிறார்கள்.
பகவான் ராமராகவும், கிருஷ்ணராகவும் விபவ அவதாரங்கள் (3) செய்த சம காலத்தில் கூட, சில மூடர்கள், நேரில் பரமாத்மாவை பார்த்தும்,
"இவர்கள் மனிதர்கள்" என்று தானே நினைத்தார்கள்..

ராவணன், துரியோதனன், கம்சன் போன்றவர்கள், 'ராமரையும், கிருஷ்ணரையும் "மனிதன்" என்று தானே நினைத்தார்கள்'.
அதே சமயத்தில்,
ரிஷிகள், ஜடாயு, பீஷ்மர் போன்ற உத்தமர்கள், மனிதனாக வந்திருப்பது பகவான் நாராயணன் என்று உணர்ந்து பக்தி செய்து மோக்ஷம் அடைந்தார்களே!!..,
அதே போல,
கோவிலில் அர்ச்சா திருமேனியாக இருக்கும் எம்பெருமானை பார்க்கும் சாமானிய ஜனங்கள்,
"இது சிலை தானே"
என்று பார்த்து ஏமாறுகிறார்கள்.



ராமபிரான் அவதார காலத்தில், அவரை "மனிதன்" என்றே நினைத்தவர்களும் உண்டு.
ஞான கண் கொண்டு பார்த்தவர்கள்
"மனிதனாக சாஷாத் பரப்ரம்மமே அவதரித்து உள்ளார்" என்று புரிந்து கொண்டனர்.
அது போல,
திவ்ய ஞானம் கொண்ட ஆழ்வார்கள்,
கோவிலில் உள்ள "அர்ச்சா திருமேனியை" எம்பெருமானின் அவதாரமாகவே பார்த்தனர்.

நமக்கும் ஆழ்வார்களை போன்று, அத்தகைய உணர்வு ஏற்படும் போது, கோவிலில் உள்ள அரச்சா மூர்த்தியை பார்க்கும் போது
"ஐயோ.. எம்பெருமானை பார்க்க முடியவில்லையே..விக்ரஹ ரூபமாக தானே பார்க்க முடிகிறது"
என்ற எண்ணம் கூட ஏற்படாது..
"அர்ச்சா திருமேனியே பகவானின் ஒரு அவதாரம் தான்" என்று ஆழ்வார்களை போன்று பார்க்க நம் ஆரம்பித்தால்,
அந்த எண்ணமே, பக்திக்கு விதை ஆகி விடும்.

அர்ச்ச அவதாரமாக கோவிலில் வீற்றிருக்கும் பெருமாள், நம் பக்திக்கு ஏற்ப அவர் நம்மிடம் நெருங்குவார்.

அர்ச்சா திருமேனியை "சிலை" என்று பார்த்தால், அவர் விக்ரஹமாகவே உனக்கு தோன்றுவார்.

அதே அர்ச்சா திருமேனியை "பெருமாள்" என்று பார்த்தால், அவர் பெருமாளாகவே உனக்கு தோன்றுவார்.
கர்நாடகாவில் உள்ள மேல்கோட்டையில், இஸ்லாமிய சுல்தான்கள் புகுந்து, அங்கிருந்த கோவிலை இடித்து, உற்சவராக இருந்த பெருமாளை டில்லிக்கே எடுத்து கொண்டு சென்று விட்டான்.

"சிலை தானே" என்று பார்த்த அவர்களுக்கு, சிலையாகவே இருந்து விட்டார் பெருமாள்..

சில வருடங்கள் கழித்து, ஸ்ரீ ரங்கத்தில் கிருமிகண்ட சோழனால் ஆபத்து ஏற்பட, ராமானுஜர் அங்கிருந்து புறப்பட்டு, மேல்கோட்டை வந்து சேர்ந்தார்.
"கோவில் உள்ளதே!! மூலவரை காணவில்லையே!! உற்சவரையும் காணவில்லையே!!"
என்று கண்ணீர் விட்டார் ராமானுஜர்..




"சிலை" என்று பார்த்த இஸ்லாமியனுக்கு சிலையாகவே இருந்து விட்ட பெருமாள்,
"தான் எங்கு இருக்கிறேன்?" என்பதை ராமானுஜருக்கு சொப்பனத்தில் காட்டினார்..

இஸ்லாமியர்கள் மேல்கோட்டையில் புகுந்து விட்டனர் என்ற பயத்தில், அங்கிருந்த ஹிந்துக்கள் தன் உயிரையும் பொருட்படுத்தாது, மூலவரை குழி தோண்டி புதைத்து விட்டனர்... உற்சவரை மறைப்பதற்குள் எடுத்து சென்று விட்டான்..
ராமானுஜருக்கு தான் மூலவராக இருக்கும் இடத்தையும் காட்டி, டெல்லி சுல்தான் அரண்மனையில் உற்சவராக இருப்பதாக தானே காட்டினார்..

தெய்வ பலத்துடன், தைரியமாக டில்லி சென்று, டில்லி சுல்தானிடம் பெருமாளை திருப்பி தர கேட்க,
ராமானுஜரின் திவ்யமான ரூபத்தை கண்டு எதிர்க்க முடியாமல்,
தன் சேனைகள் பல கோவில்களில் இருந்து கொள்ளையடித்த கோவில் சிலைகளை காட்ட அனுமதித்தான்.

ஆயிரக்கணக்கான கோவில் சிலைகளை கொள்ளை அடித்து வைத்து இருந்த இடத்துக்கு சென்று, "தான் கனவில் கண்ட பெருமாள் இருக்கிறாரா? என்று பார்த்தார், ராமானுஜர்.

"தான் கண்ட பெருமாள் அங்கு இல்லை" என்றதும் ராமானுஜர்,
"வேறு எங்காவது உள்ளதா? யாரிடமாவது கொடுத்து விட்டீர்களா?" என்று கேட்க,
"தன் மகள் அங்கிருந்த ஒரு சிலையை மட்டும் எடுத்து வைத்து இருந்ததாக ஞாபகம்", என்று தன் மகளை அழைத்தான்.
அவன் மகளிடம் தான் கண்ட அதே பெருமாளை கண்ட ராமானுஜர், "வாராய் செல்ல பிள்ளாய்" என்று அழைக்க, சுல்தான் பார்க்க,
அர்ச்ச அவதாரமாக (சிலையாக) இருந்த பெருமாள், அவள் மடியிலிருந்து இறங்கி ஓடி வந்து ராமானுஜரை நோக்கி வந்தது...
இந்த அதிசயத்தை கண்டு பிரமித்து போன இஸ்லாமியனுக்கு, இன்னொரு அதிர்ச்சியாக,
அவன் மகள் தன்னிடம் இருந்த பெருமாளை பதியாக நினைத்து இருந்தாள்...
இவளிடம் மட்டும் பேசி கொண்டு இருந்த பெருமாள், இவள் கூப்பிட்டவுடன் ராமானுஜரை விட்டு இறங்கி "கிடு கிடு வென ஓடி சென்று" அவள் மடியில் போய் அமர்ந்து விட்டது..



"இந்த துலுக்க பெண் செய்த பக்திக்காக, எம்பெருமான அவளிடமும் பேசுகிறார்" என்பதை உணர்ந்த ராமானுஜர், "மேல்கோட்டைக்கு அழைத்து செல்ல வேண்டுமே!! கோவிலில் இருக்க வேண்டிய உற்சவர் அல்லவா இவர்" என்று மீண்டும் அழைக்க, அதே போல விக்ரஹ ரூபத்துடனேயே ஓடி வந்து ராமானுஜர் மடியில் போய் அமர்ந்து விட்டார் பெருமாள்.

இந்த ஆச்சர்யம் ஒரு வித பயத்தை இஸ்லாமிய சுல்தானுக்கு உண்டாக்கியது...
"வந்திருக்கும் சாமியார் மந்திரங்கள் தெரிந்தவர் போல, கல் சிலையை நடக்க வைக்கிறாரே" என்று பயந்தான்...
"அந்த மாய சிலை தன் மகளையும் மாற்றி விட்டதே!!" என்று அச்சம் ஏற்பட, ராமானுஜரை பார்த்து,
"அந்த சிலையை தன் மகள் மீண்டும் கேட்பதற்குள் எடுத்து சென்று விடுங்கள்" என்று அனுமதி அளித்தான்..

மேல்கோட்டை பெருமாளிடம் பக்தி செய்த அவளுக்கும் இடம் கொடுத்து விட்டார் பெருமாள்.
இன்று போய் அந்த உற்சவ பெருமாளை பார்த்தாலும், அவர் திருப்பாதங்களில், துலுக்க நாச்சியாராக அமர்ந்து இருக்கிறாள் அந்த பக்தை.
பகவான், பக்தன் எங்கு இருந்தாலும், எப்படி இருந்தாலும் ஏற்றுக்கொள்கிறார் என்பது தெரிகிறது.
"இது சிலை அல்ல, பகவான் அர்ச்ச அவதாரத்தில் இருக்கிறார் என்று உணர்ந்து  பக்தி இருந்தால், நம்மிடமும் பேசுவார்" என்று திடமாக தெரிகிறது.

"சிலை" என்று பார்க்கும் போது, அர்ச்ச ரூபத்துடன் இருக்கும் எம்பெருமான் சிலையாகவே இருக்கிறார்...
காழ்ப்புணர்ச்சி, தெய்வ நிந்தை செய்யும் சிலரால், சில சமயங்களில் கோவில்கள் இடிக்கப்படுகிறது..
சில சமயம், கோவில் சொத்துக்கள் கொள்ளை அடிக்கப்படுகின்றன.
சில சமயம், கோவிலில் உள்ள பெருமாளையே தூக்கி சென்று விடுகின்றனர்..
சிலர், கோவில் விக்ரஹங்களை மீண்டும் பயன்படுத்த முடியாதபடி உடைத்து விடுகின்றனர்.

"கோவிலில் கொள்ளை, கோவில் சிலை திருட பட்டு விட்டது"
போன்ற செய்திகளை பார்த்து விட்டு,
ஹிந்து தர்மத்தின் மீது காழ்ப்புணர்ச்சி, தீராத வெறுப்பு உள்ள ஈனர்கள்,
"சிலையை தெய்வம் என்றாயே!! சக்தி இருந்தால் கொள்ளையை தடுத்து இருக்கலாமே? சிலையையே தூக்கி சென்ற போது, உடைத்த போது உங்கள் தெய்வம் ஒன்றும் செய்ய வில்லையே?"
என்று கேட்கிறார்கள்..
"தெய்வத்தை "மனிதனை போன்று" நினைப்பதால் தான் இவர்களுக்கு வேதத்தில் உள்ள தெய்வங்கள் என்ன நினைக்கிறார்கள்?" என்று புரியவில்லை.

தன் அர்ச்சா (சிலை) திருமேனியை, "சிலை தானே" என்று ஒருவன் எடுத்து சென்று ஒளித்தாலும், உடைத்தாலும் பெருமாளுக்கு ஒரு சேதமும் கிடையாது...

நாத்தீகன், மிலேச்சன், ஆஸ்தீகன் அனைவரையுமே அவர் தானே படைத்தார்..
அப்படி இருக்க,
ஒரு நாதீகனோ, மிலேச்சனோ "சிலை தானே" என்று தன் அர்ச்ச அவதாரத்தை பார்க்கும் போது, சிலையாகவே இருந்து விடுகிறார்..
அவன் 'தன் கழுத்தில் போட்டு இருக்கும் வைர மாலையை கழட்டினால் கூட' அமைதியாக இருக்கிறார்..
"தன் குழந்தைகள் தானே" என்று சிரித்து கொண்டு இருக்கிறார்.

"வைரமாகவும், கல் சிலையாகவும் அகில உலகங்களாகவும் தானே இருப்பதால், தன் அர்ச்ச அவதாரத்தை சேதம் செய்தாலும்" பொறுத்து கொள்கிறார்.
ஆனால்,
பல வருடம் கழிந்தாலும்,
பல ஆயிரம் வருடங்கள் கழிந்தாலும் கூட,
ஒரே ஒரு உண்மையான பக்தன் "இங்கே இருந்த என் பெருமாள் எங்கே?" என்று அழுது கதறினான் என்றால், தன் பக்தன் அழுவதை சகிப்பதில்லை எம்பெருமான்.



மேல்கோட்டைக்குள் புகுந்து, கோவிலை உடைத்து, உற்சவ பெருமாளை பார்த்ததும் "சிலை தானே" என்று நினைத்த இஸ்லாமியனுக்கு சிலையாகவே இருந்து விட்டார். 
அவன் மகள், 'தனக்கு ஒரு விளையாட்டு பொம்மையாக வைத்து கொள்ளலாம்' என்று எடுத்து சென்று, அந்த சிலையுடனேயே பேசி கொண்டு, விளையாட, அர்ச்சா அவதாரமாக உள்ள பெருமாள் அவளிடம் பேச ஆரம்பித்து விட்டார். 
பெருமாள், துலுக்க பெண் என்றா பார்க்கிறார்?
"இவன் என் பக்தனா?" என்று தானே பார்க்கிறார்.

"சிலை" என்று பார்த்த சுல்தானுக்கு "சிலையாகவே இருந்து அவன் கூடவே சென்று விட்ட பெருமாள்",
ராமானுஜர் "எங்கே போய் விட்டார் எம்பெருமாள்?" என்று கதற,
"தான் இருக்கும் இடத்தை காட்டி, ஒரு பெரும் நாடகத்தையே ஆடி, மீண்டும் மேல்கோட்டைக்கே வந்து விட்டாரே.."
18 முறை, தங்கத்தால் ஆன சோம்நாத் கோவிலை இடித்து, தங்கங்களை எல்லாம் கொள்ளை அடித்து, சிவ லிங்கத்தை உடைத்து, முகம்மது கஜினி பெரும் சேதம் விளைவித்தான்...
மூர்த்தியே போய் விட்டது.. கோவிலும் இடிந்து விட்டது...

சிவபெருமான் "தன்னை சிலையாக பார்க்கும் அவனுக்கு சிலையாகவே இருந்து விட்டார்".
தங்கத்தில் ஆசை கொண்ட கொள்ளையன், தங்கத்தை கொள்ளை அடித்தான்.

சிலையை உடைத்து விட்டதால், சிவபெருமான் இல்லாமல் போய் விடுவாரா?

"ஒரு பக்தன் தன் சிவபக்திக்காக  கட்டிய கோவிலை, காலப்போக்கில் பக்தி இல்லாதவன் இடிக்கிறான்" என்று தான் தெய்வங்கள் பார்க்கிறார்கள்.

இந்த அசம்பாவிதங்களை தடுத்து, தான் இருப்பதை மனிதனுக்கு காட்டி, தன் பெருமையை நிலைநாட்டலாமே?"
வேதத்தில் சொல்லப்படும் நம் தெய்வங்களுக்கு, இது அவசியமில்லாதது.. 

"இந்திரன், வருணன், வாயு போன்ற தேவர்கள் கூட, மனிதனுக்கு காட்சி கொடுத்து தான், தன் பெருமை நிலைக்கும் என்று நினைக்கவில்லை" எனும் போது, தேவர்களுக்கும் மேற்பட்ட பெருமாளும், சிவபெருமானும், "மனிதர்களுக்கு தன் தரிசனத்தை வலுக்கட்டாயமாக கொடுத்துத்தான் தன் பெருமையை நிலைநாட்ட வேண்டும் என்ற அவசியமில்லை". 

தெய்வங்கள் எதிர்பார்ப்பது, உண்மையான ஒரே ஒரு பக்தனை மட்டுமே.

"சோம்நாத் கோவிலை இடித்து விட்டான், அங்கு இருந்த சிவலிங்கத்தையும் உடைத்து விட்டானே..." என்று மனம் குமுறி ஹிந்துக்கள் மனம் கொதித்து, வழி தெரியாமல் அழ, மீண்டும் மீண்டும் கோவில் எழுந்தது...
கதறிய ஹிந்துக்கள் மீண்டும் மீண்டும் சிவபெருமானுக்கு கோவில் எழுப்பினார்கள்...
அதன் பின் வந்த கில்ஜி, லோடி, துக்ளக், முகலாய ஆட்சி வரை கோவில் பல முறை இடிக்கப்பட்டது...
மீண்டும் மீண்டும் ஹிந்துக்களால் கட்டப்பட்டது...

"சக்தி இல்லாத தெய்வ சிலையை உடைப்பேன்!!.. மக்களை கொன்று குவிப்பேன்.."
என்று 1000 வருடங்கள் பாரத தேசத்தை உருட்டி, மிரட்டி பார்த்த கில்ஜி, துக்ளக், லோடி, பாபர், ஒளரங்கசீப் போன்ற முகலாய அந்நியர்கள் அனைவரும் மண்ணோடு மண் ஆகி விட்டனரே!!..
சோம்நாத்தில், இன்றும் புதிய உருவத்துடன், அதே சிவபெருமான் அர்ச்சா ரூபத்துடன் வந்து விட்டாரே? 

சிவன் சொத்தை அபகரித்த இவர்கள் குலமே நாசம் ஆகி போனதே!!..

"ஹிந்து கோவில்களை இடித்து விட்டேன். அங்கு இருந்த வேத ப்ராம்மணர்களை கொன்று விட்டேன்.. ஹிந்துக்கள் மீது மட்டும் அதிக வரி விதிப்பேன்...ஹிந்துக்கள் ஒழிந்தார்கள்.. இனி இவர்கள் ஹிந்துக்களாக வாழ இயலாது" 
என்று 1000 வருடங்கள் ஆதிக்கம் செய்தும், ஒன்றும் ஆகவில்லையே..!!

மனிதனை மனிதன் கேலி செய்தால், தப்பிக்க வழி உண்டு.. 
முட்டாள்கள் தானே, தன்னை விட பலசாலியான தெய்வத்தை கேலி செய்ய துணிவான்..? 
தெய்வத்தை கேலி செய்து, குல நாசம் ஆகாதவன் உலகிலேயே இல்லையே !
நம் பாரத நாட்டின் சரித்திரமே காட்டுகிறதே!! 
சிந்திக்க வேண்டாமா?

"நிறுத்துவோமே ஹிந்து தெய்வங்களின் மீது உமிழப்படும் காழ்ப்புணர்ச்சியை..."

"சக்தி உள்ள ஹிந்து தெய்வங்கள் நமக்கு அனுக்கிரஹம் செய்ய இருக்கும் போது, அந்த தெய்வத்தின்  அனுக்கிரஹம் பெற வழி என்ன?" என்று நினைப்பது தானே புத்திசாலித்தனம்!!



வேதத்தில் சொல்லப்பட்ட தெய்வங்கள் கற்பனை அல்ல..
அவர்கள் நிஜமான தெய்வங்கள்.
"அர்ச்ச அவதாரம்" செய்த எம்பெருமான், அந்த இடங்களில் தன் சாந்நித்யத்துடனேயே இருக்கிறார்.

"கோவிலே இடிக்கப்பட்டாலும், தெய்வ சிலைகளே இடிக்கப்பட்டாலும்" அங்கு தன் சாந்நித்யத்துடனேயே இருக்கிறார்..

"உண்மையான பக்தி நாம் செய்தால், தன்னை மீண்டும் அர்ச்ச அவதார மூர்த்தியாக காட்டி நமக்கு முன் வந்து விடுகிறார்..." என்பதை நாம் மறக்க கூடாது.

எம்பெருமான் நாராயணனை "அந்தர்யாமி"யாக (4) அனுபவிக்கும் திருமழிசை ஆழ்வார், திருக்குடந்தை (கும்பகோணம்) சென்ற போது,
"அர்ச்சா (விக்ரக)" திருமேனியுடன், மூலவராக உள்ள ஆராவமுதனை (சாரங்கபாணி) தரிசிக்க வந்தார்.

பெருமாள் சயன கோலத்தில் படுத்து இருந்தார்.
அர்ச்ச ரூபத்தில் உள்ள பெருமாள், அனைவருக்கும் காட்சி கொடுப்பது போல தான் காட்சி கொடுத்தார்...

"பக்தனான தன்னை கவனிக்கவில்லையோ!!" என்று நினைத்த திருமழிசை ஆழ்வார், பின்வருமாறு பாட,
படுத்து இருந்த பெருமாள், "பக்தன் அழைக்கிறானே" என்றதும், கல் சிலையாக உள்ள பெருமாள், சயன கோலத்துடனேயே கொஞ்சம் எழுந்து (உத்தான சயனம்) அமர்ந்து விட்டார்.

நடந்த கால்கள் நொந்தவோ
....
காவிரிக்கரை குடந்தையுள்,
கிடந்தவாரே எழுந்திருந்து
பேசுவாழி கேசனே
என்று பாசுரம்..
இன்று நாம், கும்பகோணம் சென்று பார்த்தாலும், "சாரங்கபாணி கோவிலில் மூலவர் உத்தான சயனத்தில் (கிடந்தவாரே எழுந்திருந்த)" இருப்பதை காணலாமே!!..
"மூலவரை 'கல்' என்றா பார்த்தார்கள்? 5 வித அவதாரங்களில், நமக்காக பெருமாள் அர்ச்சா அவதாரமாக இருக்கிறார்" என்று தானே பார்த்தார்கள்.

"இந்த அனுபவத்தை, நாமும் நம் மனதில் கொண்டு வந்தால் தானே நமக்கும் பக்தி ஏற்படும்.. 
அப்பொழுதுதானே அர்ச்சா அவதாரத்தில் இருக்கும் பெருமாள், நம்மிடமும் பகவான் பேச முன் வருவார்".

"ஆழ்வார்கள் கண்களுக்கு அர்ச்சா திருமேனி எம்பெருமானாக தோன்றியதால் தானே, அவர்கள் பக்திக்கு பகவான் தலை அசைத்தார்" என்று கண்கூடாக காட்டுகிறதே...

இதே திருமழிசை ஆழ்வார், காஞ்சிபுரம் சென்ற போது, காஞ்சி அரசன் இவரை நாடு கடத்த உத்தரவு இட,
அரச்சா திருமேனியுடன் சயன கோலத்தில் இருந்த யதோக்தகாரி என்ற வேகாசேது பெருமாளை, அர்ச்சா (விக்ரக) ரூபத்துடனேயே "ஓரிருக்கை" என்ற ஊர் வரை கூட்டிக்கொண்டு கிளம்பி சென்று விட்டாரே..
அந்த பெருமாளை பார்த்து,
கணிகண்ணன் போகின்றான், 
காமரு பூங்கச்சி மணிவண்ணா ! கிடக்க வேண்டா ! 
துணிவொன்றிச் செந்நாப் புலவோன்யான் செல்கின்றேன், 
நீயுமுன்றன் பைந்நாகப் பாய் சுருட்டிக் கொள்
என்று சொல்லி, கல் சிலையாக உள்ள பெருமாளை நடக்க வைத்து விட்டாரே...

அரசன் மன்னிப்பு கேட்க, பின்னர் "மீண்டும் படுத்துக்கொள்" என்றதும் மீண்டும் வந்து படுத்து கொண்டு விட்டாரே!! பெருமாள்.

அர்ச்சா அவதாரமாக இருந்து கொண்டே பெருமாள், இவர்களிடம் பேசினார் என்றால், "நம் பக்தியை பொறுத்து பகவான் நம்மிடம் பேசுவார்" என்பது தானே இதில் நிரூபணம் ஆகிறது..



உன் பக்தி எந்த அளவு உள்ளதோ, அந்த அளவுக்கு பகவான் பேசுகிறார்..

25% உனக்கு பகவான் மீது நம்பிக்கை இருந்தால், பகவான் உன்னிடம் 25% பழகுகிறார்.
50% உனக்கு பகவான் மீது நம்பிக்கை இருந்தால், பகவான் உன்னிடம் 50% பழகுகிறார்.
100க்கு 100% ஆழ்வார்களை போன்று, மீராவை போன்று, சக்குபாய் போன்று பக்தி செய்தால், நேரில் வந்து பழகுகிறார்.
நம் பக்தியை கொண்டு தானே, இறை அருள் நமக்கு கிடைக்கிறது.

நமக்கும் ஆழ்வார்கள் போன்று, "அர்ச்சா மூர்த்தியே பகவானின் அவதாரம் தான்" என்ற தெளிந்த பக்தி இருந்தால், நம்மிடமும் பெருமாள் அர்ச்ச அவதாரமாகவே இருந்து கொண்டே பேசுவார்.

திருமங்கை ஆழ்வாருக்கு விசேஷமாக "அர்ச்சா திருமேனியையே" பெருமாளின் அவதாரமாக அனுபவிப்பதால், பெருமாளின் திவ்ய காட்சியை கூட இவர் பார்க்க ஆசைப்படவில்லை..
அர்ச்ச அவதாரமே இவருக்கு பகவானாக தெரிவதால், பல இடங்களில் "கண்டு கொண்டேன்" என்று பாடுவதை பாசுரங்களில் கவனிக்கிறோம்..

கதியேல் இல்லை
நின் அருள் அல்லது
எனக்கு நிதியே
திருநீர்மலை நித்திலத் தொத்தே,
பதியே பரவித் தொழும்
தொண்டர் தமக்குக் கதியே 
உனை "கண்டு கொண்டு" உய்ந் தொழிந்தேனே
என்று "பெரிய திருமொழி"யில் திருமங்கை ஆழ்வார் பாடும் போது,
வால்மீகி முனிவருக்கு ஏற்பட்ட தாபத்தை போக்க, அர்ச்ச திருமேனியுடன் திருநீர்மலையில் காட்சி கொடுத்த எம்பெருமானை பார்த்த உகப்பில் "கண்டு கொண்டேன்" என்று பாடுகிறார்.

புருவத்தின் மத்தியில் எம்பெருமான் திவ்ய காட்சி கண்டதை சொல்கிறாரா? இல்லை..
எம்பெருமான் ராமராக தன் விபவ அவதாரத்தை காட்டி தரிசனம் தந்ததை சொல்கிறாரா? இல்லை.
திருமங்கை ஆழ்வார், திருநீர்மலையில், அர்ச்சா திருமேனியுடன் இருக்கும் எம்பெருமானையே தனக்காக அவதரித்த பெருமாளாகவே பார்த்தார்.
சிலையாக தோன்றிய எம்பெருமானை பார்த்ததினால் வந்த உகப்பில் "கண்டு கொண்டேன்" என்று ஆனந்தப்படுகிறார்..

இந்த பாசுரத்தை ஆரம்பிக்கும் போது "கதியேல்" என்ற சொல்லை கொண்டு ஆரம்பிக்கிறார்.

திருநீர்மலை பெருமாளை நேரில் கண்ட திருமங்கை ஆழ்வார், "தனக்கு ஒரு கதி உண்டா? மோக்ஷத்துக்கு கதி (வழி) உண்டா?" என்று தன் மனசாட்சியையே கேட்க.. மனசாட்சியே பதிலாக
"என் திறமையால் எனக்கு மோக்ஷத்துக்கு கதி இல்லை." என்று  சொல்ல,
"எனக்கும் என்று ஒரு கதி (வழி) உண்டாகில், அது உம்முடைய அருளை கொண்டு தான்" என்று எம்பெருமான் அருளை எதிர்பார்த்து,
கதியேல் இல்லை...
நின் அருள் அல்லது
என்று ஆரம்பிக்கிறார் திருமங்கை ஆழ்வார்.
மேலும்,
உலகத்தில் உள்ளவர்கள் பொதுவாக, வயதான காலத்துக்காக தன் பாதுகாப்புக்காக, நிதியை சேர்த்து வைத்து கொள்வார்கள்..
அதே போல,
பரலோக வாழ்க்கைக்காக, புண்ணிய காரியங்களை செய்து புண்ணியம் என்ற நிதியையும் சேர்த்து வைத்து கொள்வார்கள்..

இந்த இரண்டு நிதியுமே அல்பமானவை, நிரந்தரமற்றவை..
சேர்த்த பணம் எல்லாம் ஒருநாள் செல்வழிந்து போய் விடும்..
இல்லை, செல்வம் இருக்கும் இவன் போய் விடுவான்..



புண்ணியம் காக்குமே என்றாலும், கொஞ்ச காலம் சொர்க்க லோகத்தில் இருக்க செய்து விட்டு, "பூலோகத்தில் நீ செய்த புண்ணியங்கள் இன்றுடன் தீர்ந்தது போ" என்று இந்திரனும் கீழே தள்ளி விட்டு விடுவான்..
மீண்டும் பிறக்க வேண்டியது தான்...

இதனை கருத்தில் கொண்டு,
செல்வம் என்ற நிதியையும் தள்ளி,
புண்ணியம் என்ற நிதியையும் தள்ளி விட்டு,
திருமங்கை ஆழ்வார், "எனக்கு இகத்திலும் பரத்திலும் என்றும் அழியாத வைப்பு மா நிதியாக எம்பெருமானே திருநீர்மலையில் இருக்கிறார்" என்று பாடுகிறார்.
எனக்கு நிதியே
திருநீர் மலை நித்திலத்தொத்தே

இங்கு நித்தில தொத்தே என்றால் "பவள கொத்து" என்று அர்த்தம்..

பவளத்திற்கு இயற்கையாகவே ஒரு குளிர்ச்சி உண்டு.
பவள மணி மாலையாக கழுத்தில் போட்டு கொண்டால், உடல் குளிர்ச்சியாகும்..
இங்கு, பவள கொத்து என்று திருநீர்மலை எம்பெருமானையே சொல்லி கொஞ்சுகிறார் திருமங்கை ஆழ்வார்.

குளிர்ச்சி தரும் கருணை கொண்ட திருநீர்மலை பெருமாளை பார்த்ததுமே, 'பெருமாளையே ஒரு பவள மாலை என்ற தன் நிதியாக ஆக்கிக்கொண்டு, தன் கழுத்தில் போட்டு கொண்டு விட வேண்டும்' என்று ஆசை உண்டாகி விட்டது ஆழ்வாருக்கு.

"எனக்கும் கதி உண்டா?" என்று மோக்ஷத்துக்கு வழி தெரியாமல் வந்த தனக்கும், "கதி உண்டு" என்று காட்டி விட்டார் திருநீர்மலை பெருமாள் என்றதும், அடுத்த பதத்தில் "பதியே" என்று சொல்லி, "உன்னை கண்டு கொண்டேன்" என்று சரண் அடைகிறார்..

பதியே பரவித் தொழும் தொண்டர் தமக்குக்
கதியே உனை "கண்டு கொண்டு" 
உய்ந் தொழிந்தேனே

ஆழ்வார்கள் பாசுரங்கள் தமிழே தமிழ்...

தமிழை வளர்க்க, பாசுரங்களை புரிந்து கொண்டாலேயே தமிழ் வாழுமே. .



Saturday 6 July 2019

கோவில்கள் எதற்கு? கோபுரங்களில் சில சிலைகள் ஏன் காமத்தை தூண்டும் விதமாக செதுக்கப்பட்டது? ஹிந்துக்கள் தெரிந்து கொள்ள வேண்டும்..

"தியானம் செய்வது, ஜபம் செய்வது" முக்கிய கடமையாக அந்நிய மதத்தினர்களுக்கு சொல்லப்படுகிறது.
.


மாதா கோவில்களில் "ஜபம்" முக்கியம் என்று சொல்கிறார்கள்.
ஏதோ அவர்களுக்கு தெரிந்த ஜபம் செய்கிறார்கள். அவர்கள் அவர்கள் மதத்தில் இருக்கிறார்கள்.

மசூதிகளில் "தியானம்" முக்கியம் என்று சொல்கிறார்கள்.
ஏதோ அவர்களுக்கு தெரிந்த தியானம் செய்கிறார்கள். அவர்கள் அவர்கள் மதத்தில் இருக்கிறார்கள்.
"கோவில்களில் உத்சவங்கள் நடத்துவது தான்" ஹிந்துக்களுக்கு முக்கிய கடமையாக சொல்லப்படுகிறது.

  • கோவில்  உத்சவங்கள் நடந்த வரை, 
  • கோவில் உத்சவங்களில் நாம் கலந்து கொண்டு இருந்த வரை,

ஹிந்துக்கள் ஹிந்துக்களாகவே இருந்தோம்.
இன்று,

  • கோவில் உத்சவங்களில் நாம் கலந்து கொள்ளாமல் இருப்பதாலும்,
  • கோவிலில் உத்சவங்கள் நடக்காமல் இருந்தால், அதை நடத்த முயற்சி செய்யாமல் இருப்பதாலும்,

ஹிந்துக்கள் அழிந்து கொண்டு இருக்கின்றோம். இது ஹிந்துக்களுக்கு பேராபத்து.

ஹிந்துக்கள் "ஹிந்துக்களாக இருக்க வேண்டும்" என்றால், நாம் கோவிலில் உத்சவங்கள் நடக்க செய்ய வேண்டும்.

"உத்சவங்கள் நடத்துவதற்காக" தான், ஹிந்து கோவில்கள் அரசர்களால் அமைக்கப்பட்டன.
"தியானம்", "ஜபம்" செய்வதற்காக கோவில்கள் அமைக்கப்படவில்லை.

ஹிந்து தர்மத்தின் நோக்கம், நம் அனைவருக்கும் "தெய்வ சிந்தனையை" ஏற்பட செய்வது தான்.

தெய்வ சிந்தனை ஏற்பட, நமக்கு 'ஜபமும்' சொல்லப்படுகிறது.
தெய்வ சிந்தனை ஏற்பட, நமக்கு 'தியானமும்' சொல்லப்படுகிறது.
தெய்வ சிந்தனை ஏற்பட, நமக்கு 'புராணங்கள், இதிகாசங்கள், பகவத் கீதை, பாசுரங்கள், பிரபந்தங்கள்' உள்ளது.
ஆனால் இவை அனைத்துக்கும், சில தகுதிகள் தேவைப்படுகிறது.

தியானம் செய்து தெய்வ அனுபவம் ஏற்பட, நமக்கு "வைராக்யம்" வேண்டும்.

உலக ஆசையில் வெறுப்பும், தெய்வத்தை அடைவதில் ஆர்வமும் இருந்தால், தியானம் ஸித்திக்கும்.

யோகத்தை உலகுக்கு கற்றுக்கொடுத்து,
தியானம் எப்படி செய்ய வேண்டும்? என்று சொல்லி கொடுத்து, கூடவே "ஓம்" என்று ஜபமும் 'செய்'
என்று சொல்லி கொடுத்ததே, ஹிந்துக்கள் தானே.


நம்மிடம் இல்லாத விஷயங்கள் பிறரிடம் இல்லை.
நம்மிடம் பிச்சை வாங்கித்தான் அனைவரும் பிழைக்கின்றனர்.
இல்லாதவர்கள் பொறாமைப்பட்டு கொண்டு இருக்கிறார்கள்.  அவ்வளவு தான்.
ஹிந்துக்களின் பெருமையை ஹிந்துக்கள் உணர வேண்டும்.

தியானம் செய்ய சக்தி உள்ளவர்களுக்கு, தியானத்தின் மூலம் தெய்வ சிந்தனை ஏற்படுகிறது.

தியானம் மூலம், பெருமாளை தன் இதயத்தில் தரிசனம் செய்யும் திறன் உள்ளவர்களுக்கு, கோவில் கூட தேவைப்படவில்லை..
ஆழ்வார்களில், நம்மாழ்வார் கோவிலுக்கு சென்றதே இல்லை.
நம்மாழ்வார் தியானத்திலேயே ஒவ்வொரு திவ்ய தேச பெருமாளையும் தரிசனம் பெற்று இருந்தார்.
ஒவ்வொரு திவ்ய தேச பெருமாளும் இவர் இதயத்துக்குள் வந்து தரிசனம் தந்தனர். நமக்கு திவ்ய தேச பாசுரங்கள் கிடைத்தது.
தியானம் செய்ய சக்தி உள்ளவர்களுக்கு, தியானத்தின் மூலம் தெய்வ சிந்தனை ஏற்படுகிறது.

தியானம் மூலம், பெருமாளை தன் இதயத்தில் தரிசனம் செய்யும் திறன் உள்ளவர்களுக்கு, கோவில் தேவை இல்லை.
தியானம் செய்ய கோவில்கள் கட்டப்படவில்லை. தியான மண்டபம் தனியாக உள்ளது.

புலன்கள் அடங்காதவர்கள் தியானம் செய்தும், ஜபம் செய்தும், புராணங்கள் படித்தும் தெய்வ சிந்தனை எளிதில் ஏற்படாது.

கோடிக்கணக்கான மக்களுக்கு, புலன் அடக்கம் கிடையாது. உலக நாட்டமும் அதிகம்.
இவர்களுக்கும் வழி காட்டுவதே நம் "ஹிந்து மதத்தின் நோக்கம்". 
இவர்களுக்கும் தெய்வ சிந்தனை ஏற்பட வழி காட்டுவதே நம் ஹிந்து மதத்தின் நோக்கம்.

புலன்கள் அடங்காத கோடிக்கணக்கான மக்களுக்கு,

  • வித விதமாக சாப்பிடுவதில் ஆர்வம் (நாக்கு) உள்ளது,
  • வித விதமான காட்சிகளை பார்ப்பதில் ஆர்வம் (கண்) உள்ளது,
  • வித விதமான நறுமணங்கள் நுகர்வதில் ஆர்வம் (மூக்கு) உள்ளது,
  • வித விதமான இசைகளை கேட்க ஆர்வம் (காது) உள்ளது,

இப்படி புலன்களில் வீழ்ந்து கிடைக்கும் கோடிக்கணக்கான மக்களை பார்த்து, 'நம்மாழவார் போல தியானம் செய்' என்று சொன்னாலும், செய்ய மாட்டார்கள்.

இப்படி புலன்களில் வீழ்ந்து கிடைக்கும் கோடிக்கணக்கான மக்களை பார்த்து, "கோடி ராம ஜபம் செய்" என்று சொன்னாலும், செய்ய மாட்டார்கள்.

புலன்கள் அடங்காத கோடிக்கணக்கான மக்களுக்கும், தெய்வ சிந்தனை ஏற்பட செய்வற்கே 'கோவில் உத்சவங்கள்'.

தியானம் செய்ய கோவில்கள் இல்லை.






முனிவர்களும், ரிஷிகளும், தியானம் செய்ய காட்டிற்கு தான் சென்றனர். தனிமையை தான் விரும்பினர். கோவிலுக்கு செல்லவில்லை.
தியானத்திற்கு தனிமை அவசியம். 

இத்தனை பெரிய கோவில்கள் நம் அரசர்கள் கட்டி, 
நான்கு வீதிகள் அமைத்தது, தியானம் செய்ய இல்லை. 
கோவிலில் உத்சவங்கள் செய்வதற்கே.
இதை ஹிந்துக்கள் புரிந்து கொள்ளவேண்டும்.
புலன்கள் அடங்காத கோடிக்கணக்கான மக்களுக்கும், தன் தரிசனத்தை எப்படியாவது கொடுத்து, தெய்வ பக்தியை கொடுப்பதற்காக தான், நம் தெய்வங்கள் கோவிலில் வீற்று இருக்கிறார்கள்.

புலன்கள் அடங்காத கோடிக்கணக்கான மக்களுக்கு தன் தரிசனத்திதை  கொடுக்க நம் ஹிந்து தெய்வங்கள் காத்து இருந்தாலும், இவர்கள் கோவிலுக்கு வர  வேண்டுமே?
தான் கோவில் கர்பக்ரஹத்திலேயே இருந்தால் சரி வராது என்று தான், அம்மன் வீதி உலா, பெருமாள் புறப்பாடு, சிவபெருமான் புறப்பாடு, கந்தன் புறப்பாடு என்று, நம் தெய்வங்கள், கோவிலை விட்டு தானே வெளியே வந்து, புலன்கள் அடங்காத கோடிக்கணக்கான மக்களுக்கு தன் தரிசனத்திதை கிடைக்க செய்கின்றனர்.

வீதியில் வரும் பெருமாளை, நாத்தீகனும் பார்க்கிறான், புலன் அடங்காதவனும் பார்க்கிறான்.

வீதியில் உலா வரும் தெய்வத்தை நாம் பார்க்கிறாமோ இல்லையோ, தெய்வங்கள் நம் அனைவரையும் பார்த்து விடுவதால், நம்மை அறியாமலேயே நமக்கு தெய்வ சிந்தனை விதைக்கப்படுகிறது.

ஹிந்து மதத்தின் நோக்கமே நம் அனைவருக்கும் தெய்வ சிந்தனை ஏற்பட செய்வது தான்.

தன் தரிசனத்தை கொடுத்து, நம் மன அழுக்கை நீக்கி, புலன்களில் வீழ்ந்து கிடைக்கும் நமக்கும் தெய்வ சிந்தனை கொடுக்கவே, கோவிலில் தெய்வங்கள் குடி கொண்டு உள்ளனர்.
தியானத்திலும், ஜபத்திலும் ஸித்தி அடைந்த ரிஷிகளும், முனிகளும், மகான்களும், ஞானிகளும்,
நமக்காக பகவானை பிரார்த்தனை செய்து, அவரை சாநித்யம் குறையாமல் தான் தரிசித்த இடத்திலேயே இருக்க செய்து, அங்கு ஒரு கோவில் அமைத்து, அந்த பெருமாளுக்கு உத்சவங்கள் செய்ய சொல்லி, நமக்கு தந்து விட்டு சென்றனர்.


புலன்கள் அடங்காத கோடிக்கணக்கான மக்களை, கோவிலுக்குள் வரவழைத்து தன் தரிசனத்தை எப்படி தருவார் பெருமாள்?
கோவிலுக்கு வந்தால் தானே, சிவனோ, பெருமாளோ, அம்மனோ  தன் தரிசனத்தை தர முடியும் !!

தெய்வ தரிசனம் பெற்றால் தானே நம் மன அழுக்குகள் நீங்கும்..
தெய்வ சிந்தனை ஏற்படும்...சித்தம் சுத்தி ஆகும்.. ஞானம் கிடைக்கும் !

இவர்களையும் இழுப்பதற்கே, கோவில் உத்சவங்கள்.. 
கோவிலில் தெய்வ விக்ரகங்களுக்கு செய்யப்படும் ஆராதனைகள், பூஜை, அபிஷேகம், தேர் இழுத்தல், வான வேடிக்கை, இசை, நடனம், நாட்டியம், சிற்பம், யாகங்கள், பிரசாத விநியோகம் எல்லாம், புலன்கள் அடங்காத கோடிக்கணக்கான மக்களையும் இழுத்து, தெய்வத்தின் முன் நிறுத்தத்தான்.

யோகாவினால் சேர்க்க முடியாத மக்கள் கூட்டத்தை,
தியானத்தால் சேர்க்க முடியாத மக்கள் கூட்டத்தை,
ஜபத்தினால் சேர்க்க முடியாத மக்கள் கூட்டத்தை,
ப்ரவசனங்களால், உபன்யாசங்களால் சேர்க்க முடியாத மக்கள் கூட்டத்தை,
ஒரே ஒரு கோவில் திருவிழா மூலம் கோடிக்கணக்கான மக்களை கூட்ட முடிகிறது.
ஹிந்துக்களை ஹிந்துக்களாக வைத்து இருப்பது கோவில் உத்சவங்களே என்பதை யாரும் மறுக்க முடியாது.

மீனாக்ஷி திருக்கல்யாணம் என்றால், எத்தனை  கோடிக்கணக்கான மக்களை, மீனாக்ஷி இழுக்கிறாள் என்று கண்கூடாக பார்க்கிறோம்..

அண்ணாமலை தீபம் என்றால், எத்தனை  கோடிக்கணக்கான மக்களை, சிவபெருமான் இழுக்கிறார் என்று கண்கூடாக பார்க்கிறோம்..

அழகர் ஆற்றில் இறங்குகிறார் என்றால், எத்தனை  கோடிக்கணக்கான மக்களை இழுக்கிறார் என்று கண்கூடாக பார்க்கிறோம்..

சமயபுர மாரியம்மனுக்கு திருவிழா என்றால், எத்தனை  கோடிக்கணக்கான மக்களை இழுக்கிறாள் என்று கண்கூடாக பார்க்கிறோம்..

ஹிந்துக்களை ஹிந்துக்களாக வைத்து இருப்பது கோவில் உத்சவங்களே என்பதை யாரும் மறக்க கூடாது.

புலன்களை அடக்க முடியாமல் இருக்கும் கோடிக்கணக்கான மக்களுக்காக தான், கோவில் திருவிழாக்கள், ஆராதனைகள் எல்லாம் நடத்தப்படுகிறது.

இவர்கள் அனைவரையும் எப்படியாவது கோவிலுக்குள் இழுத்து, தன் தரிசனத்தை கொடுத்து, பக்தியை ஊட்டி, ஞானத்தை கொடுக்க நம் தெய்வங்கள் காத்து இருக்கிறார்கள்.
நம் தெய்வங்கள் எத்தனை கருணை கொண்டு இருக்கிறார்கள் என்று, நாம் உணர்ந்து கொண்டாலே போதும்.


"'காதுக்கு நல்ல பாட்டு கச்சேரி கேட்க தான், எனக்கு ரொம்ப பிடிக்கும்'
என்று ஒலியில் (சப்தம்) மயக்கமுற்று இருக்கிறாயா?
கவலையே இல்லை. கோவிலுக்கு வா.
கோவிலில் கச்சேரி வைக்கிறேன். இங்கேயே வந்து கேள்.
பல வித வாத்தியங்கள், பல அற்புதமான பாடகர்கள் எல்லோரும் வந்து கோவிலில் கச்சேரி செய்வார்கள்.
இங்கேயே உட்கார்ந்து கேட்டு கொண்டிரு."
என்று இழுக்கிறது நம் கோவில்கள்.
யாரோ பெரிய பாடகர் வந்து பாடுகிறாராம் என்று, பாட்டு கேட்கும் ஆசையில் வருபவன், "சரி அப்படியே கர்பக்ரஹத்தில் உள்ள ஸ்வாமியையும் பார்த்து விட்டு செல்வோம்" என்று தரிசனம் செய்து விடுவான்.

புலனிகளில் விழுந்து கிடைக்கும் இவனுக்கு,
நல்ல கச்சேரி கேட்க செய்வது போல செய்து, கோவிலுக்கு வர செய்து, தன் தரிசனத்தை கொடுத்து, தன் தரிசனத்தாலேயே அவனுக்குள் இருந்த மன அழுக்குகளை நீங்க செய்து, தெய்வ சிந்தனை கிடைக்க செய்து, ஞானத்தை கொடுத்து, தன் பக்தனாக்கி, சகல சுகங்களும் கிடைக்க அருள் செய்து விடுகிறார்கள் நம் தெய்வங்கள்.

அதே போல,
"'எனக்கு சாப்பிட பிடிக்கும்' என்று சுவையில் (ரஸம்) மயக்கமுற்று இருக்கிறாயா?
கவலையே இல்லை. கோவிலுக்கு வா.
கோவிலில் அருமையான நெய் சொட்ட சொட்ட உனக்கு சாப்பிட பிரசாதங்கள் கிடைக்க செய்கிறேன்.
கோவில் விழா சமயத்தில் பல விதமான பானங்கள் (மோர், பானகம்), கல்யாண விருந்து போட்டு சாப்பிட செய்கிறேன்.
இங்கேயே உட்கார்ந்து கொண்டிரு."
என்று நம்மை நம் போக்கிலேயே சென்று, கோவிலுக்கு இழுத்து, தன் தரிசனத்தை கொடுத்து விடுகிறார்கள் நம் தெய்வங்கள்.

அதே போல,
"'எனக்கு பார்க்க அழகான காட்சிகள் தான் பிடிக்கும்'
என்று பார்வையில் (ரூபம்) மயக்கமுற்று இருக்கிறாயா?
கட்டாயம் கோவிலுக்கு வா.
தினசரி பெருமாளுக்கு ஒவ்வொரு அலங்காரம் செய்கிறேன். பார்.
கண்ணுக்கு வித வித அலங்காரம் பார்க்க கிடைக்கும்.
கோவிலில் உத்சவங்கள் நடக்கும் போது, கோவிலே அலங்கார விளக்குகளால், பூக்களால் நிரப்பப்பட்டு, கண்ணுக்கு ஆனந்தம் தரும்.
இங்கேயே உட்கார்ந்து கொண்டிரு."
என்று நம்மை நம் போக்கிலேயே சென்று, கோவிலுக்கு இழுத்து, தன் தரிசனத்தை கொடுத்து விடுகிறார்கள் நம் தெய்வங்கள்.

அதே போல,
'எனக்கு நல்ல வாசனை பிடிக்கும்' என்று நுகருதலுக்கு (கந்தம்) மயக்கமுற்று இருக்கிறாயா?
கவலையே இல்லை.
கோவிலில் தூபம், ஊதுபத்தி என்று வாசனை பொருட்களை ஏற்றி வைக்கிறேன்.
பூக்களின் சுகந்தமும் சேர்ந்து கோவிலே கமகமக்க செய்கிறேன். கோவிலுக்கு வா. இங்கேயே நீ அதை அனுபவிக்கலாம்."
என்று நம்மை நம் போக்கிலேயே சென்று, கோவிலுக்கு இழுத்து, தன் தரிசனத்தை கொடுத்து விடுகிறார்கள் நம் தெய்வங்கள்.

புலன் அடக்கம் இன்றி, காமத்தை அடக்க முடியாதவர்களையும் நம் ஹிந்து மதம் விட்டு விடுவதில்லை.
அவர்களுக்காக கோவில் கோபுரங்களில் கேளிக்கை நிறைந்த சிலைகள், சில ஆபாசமான சிலைகள் கூட கோபுரங்களில் செதுக்கி வைத்து இருப்பார்கள்.
காம சுகத்திலேயே சிக்கி உள்ள இது போன்ற மனிதர்களும், இது போன்ற சிலைகளை பார்ப்பதற்கென்றே கோவிலுக்கு வருவார்கள்.
"ஹாய்.. ஒய்" என்று கோவில் கோபுரத்தில் இருக்கும் சிலைகளை பார்த்து சிரித்து கொண்டே புலன்கள் அடங்காத இவர்கள், கோவிலுக்கு உள்ளேயும் இப்படி தான் இருக்குமோ? என்று நினைத்து வந்து, கடைசியில் பெருமாளை தரிசித்து விட்டு சென்று விடுவார்கள்.

"தன் தரிசனத்தை இது போன்ற ஆசாமிகளுக்கும் கொடுத்து", நாளடைவில் இவர்களுக்கும் தெய்வ சிந்தனை ஏற்பட செய்து, கடைசியில் மோக்ஷத்திற்கான சாவியை கொடுத்து விடுகிறார் பெருமாள்.
தெய்வ சிந்தனை ஏற்பட,
தியானம் செய்பவர்கள் தனியாக செய்யட்டும், ஜபம் செய்பவர்கள் தனியாக செய்யட்டும்.. புராணங்கள் படிப்பவர்கள் தனியாக படிக்கட்டும்,,,

நம் ஹிந்துக்களுக்கு, தெய்வ சிந்தனை ஏற்பட, நமக்கு கொடுக்கப்பட்ட கடமை "கோவிலில் உத்சவங்கள் நடக்க செய்து, நாம் கலந்து கொள்வதே.."

'கோவில் திருவிழாக்களில் கலந்து கொண்டு, கோவிலில் உள்ள தெய்வத்தை நாம் தரிசித்து கொண்டு இருந்தாலே' நமக்கு எல்லா நன்மைகளும் தெய்வ அருளாலேயே ஏற்படும்.

காஞ்சியில் அத்தி வரதர் 40 வருடங்களுக்கு பிறகு வருகிறார்  என்று கேள்விப்பட்டதும், ஹிந்துக்கள் கூடியதை பாருங்கள்.. இதை விட சான்று வேண்டுமா, ஹிந்துக்களை கோவில்களே காக்கிறது என்பதை...




ஹிந்துக்கள் மறக்க கூடாத சில விஷயங்கள் :

  1. "கோவில்களில் உத்சவங்கள் நடத்துவது தான்" ஹிந்துக்களுக்கு முக்கிய கடமை.
  2. கோவில் உத்சவங்கள் நடந்த வரை, கோவில் உத்சவங்களில் நாம் கலந்து கொண்டு இருந்த வரை, ஹிந்துக்கள் ஹிந்துக்களாகவே இருந்தோம்.
  3. கோவில் திருவிழாக்கள் ஒவ்வொரு மாதமும் நடக்க செய்ய வேண்டும்.
  4. கோவில் திருவிழாக்கள் நின்று போன கோவில்களை, ஹிந்துக்கள் சேர்ந்து கொண்டு முயற்சி செய்து மீண்டும் விழாக்களை நடத்த வேண்டும். பணம் படைத்தவர்கள் பொருள் உதவி செய்ய வேண்டும்.  உடலாலும்  தன்னால் முடிந்த உதவி செய்ய வேண்டும்.
  5. கோவிலை சுற்றி உள்ள நான்கு வீதிகள் வரை, நிலங்களையோ, வீடுகளையோ, ஹிந்துக்களுக்கு மட்டுமே விற்க வேண்டும். பணத்திற்காக ஆசைப்பட்டு, பிற மதத்தினருக்கு விற்றால், கோவில் உத்சவங்கள் நின்று போகும். நம் தெய்வங்கள் மீது பொறாமை கொண்டு விழாக்கள் நடக்க விடாமல் செய்து விடுவார்கள். நம்மால் கோவில்கள் அழிந்த பாவத்தை நாம் சுமக்க கூடாது.
  6. ஹிந்துக்கள் ஹிந்துக்களாக வாழ, ஹிந்துக்கள் கோவில் திரு விழாக்கள், பண்டிகைகள் அனைத்திலும் கலந்து கொள்ள வேண்டும்.


வாழ்க ஹிந்துக்கள்