Followers

Search Here...

Saturday 27 March 2021

நமோ என்றால் என்ன? தெரிந்து கொள்வோமே!

"நமோ" என்றால் என்ன? 

'நம:' என்பதே நமோ என்று சொல்கிறோம். 

நம: என்ற சொல், "நான்(ம) எனக்கு இல்லை (ந)" என்று அர்த்தத்தை கொடுக்கிறது.

நம: என்ற சொல், "நான் எனக்கு சொந்தம் இல்லை. நான் பரமாத்மாவுக்கே சொந்தமானவன்" என்ற சரணாகதி புத்தியை கொடுக்கும்.

நம: என்ற சொல் "நான் வாகனம் மட்டுமே. என்னை சாரதியாக இருந்து ஓட்டுபவன் அந்த பார்த்தசாரதியே" என்ற சரணாகதி புத்தியை கொடுக்கும். 




நம: என்ற அக்ஷரத்தின் அர்த்தம் புரிந்து, உணர்ந்து கொள்ளும் போது தான், 

'இனி நாமாக எந்த முயற்சியும் செய்யாமல்.. என்னை சேர்த்து கொள்ள வேண்டிய முயற்சியை பரமாத்மாவே செய்யட்டும். 

என்னை ரக்ஷிக்கும் பொறுப்பு அவர் கையில் இருக்கும் போது, நானும் தனியாக அவரை அடைவதற்கு எதற்காக முயற்சி செய்ய வேண்டும்? 

அவர் எப்போது வருவார் என்று எதிர்பார்த்து காத்து கொண்டே இருப்பதே என் வேலை

என்று சரணாகதியின் உண்மையான நிலை ஏற்பட்டு விடும்.


சரணாகதி லக்ஷணத்தை காட்டும் "நம:" என்ற சொல்லுக்கு நிரூபணம் காட்டினாள் சீதாதேவி. 

ராவணன், ராமபிரான் இல்லாத சமயம் பார்த்து, சீதாதேவியை கடத்தி, இலங்கைக்கு தூக்கி சென்று  விட்டான். அசோக வனத்தில் கடுங்காவல் வைத்து, நரமாமிசம் உண்ணும் ராக்ஷஸிகள் மத்தியில் சிறைப்படுத்தி விட்டான்

தினமும் சீதாதேவியிடம், ஆசைவார்த்தை சொல்லி, ராமபிரானை அவமானப்படுத்தி தன் பெருமையை மெச்சி பேசி, மிரட்டி, கெஞ்சி எப்படியாவது சம்மதிக்க முயற்சி செய்து கொண்டிருந்தான்.

தன் "கற்பு என்ற அக்னியாலேயே" ராவணனை பொசுக்கி விடும் சக்தி இருந்தும், சீதாதேவி பொறுமை காத்தாள்.

தானே தப்பிக்க, சிறு முயற்சியும் செய்யாமல், சீதா தேவி "ராமபிரான் வருவார்" என்று காத்து இருந்தாள்.


ஹனுமான் இலங்கை வந்து போது, சீதாதேவியிடம் "இப்பொழுதே தூக்கி சென்று ராமபிரான் முன் நிறுத்தி விடுகிறேன்" என்று சொல்லியும், பிறர் உதவி வேண்டாம் என்று மறுத்தாள். 

இதுவே சரணாகதி தத்துவம். 





"பகவான் காப்பாற்றுவார்" என்று நிச்சய புத்தி உள்ளவனுக்கு, 'பகவான் காப்பாற்றுவாரோ?' என்ற சந்தேகம் ஏற்படாது. 

'எதற்கும் நாமும் ஒரு சில முயற்சி செய்து வைப்போமே!', "எதற்கும் இன்னொரு கோவிலுக்கும் சென்று பிரார்த்தனை செய்து வைப்போமே!" என்ற சபல புத்தி ஏற்படாது.  


சீதாதேவியை ராவணன் தூக்கி சென்ற போது, ராமபிரானுக்கு சீதாதேவி எங்கு சென்றாள்? என்று கூட தெரியாது.


சரணாகதி செய்த சீதாதேவி, "ராமபிரான் எப்படியும் தான் எங்கு இருக்கிறோம் என்று கண்டுபிடித்து விடுவார், நம்மை காப்பாற்றி விடுவார்" என்று திடநம்பிக்கையுடன் இருந்தாள். 


நம: என்ற சொல்லுக்கு நிரூபணமாக இருந்தாள் சீதாதேவி.


சீதாதேவி சரணாகதி என்றால் என்ன? என்று நமக்கு காட்டினாள்.

குருநாதர் துணை

Tuesday 9 March 2021

இக்ஷ்வாகு பரம்பரை... ராமபிரானின் மூதாதையர்கள்.. ராம பரம்பரை தெரிந்து கொள்வோமே! - வால்மீகி ராமாயணம்

 'அப்பாவுக்கு கொடுத்த வாக்கை மீற முடியாது' என்று உறுதியாக இருந்தார் ராமபிரான்.

கைகேயீ மாதாவுக்கு பரிந்து கொண்டு, ராமபிரான், பரதனை பார்த்து பேசலானார், 


पुरा भ्रातः पिता नः 

स मातरम् ते समुद्वहन् |

मातामहे समाश्रौषीद्

राज्य शुल्कम् अनुत्तमम् ||

- वालमीकि रामायण


புரா ப்ராத: பிதா ந: 

ச மாதரம் தே சமுத்வஹன் |

மாதாமஹே சமாஸ்ரௌஷீத்

ராஜ்ய சுல்கம் அனுத்தமம் ||

 - வால்மீகி ராமாயணம்

பரதா! வெகு வருடங்களுக்கு முன், நம் தந்தை தசரத மஹாராஜன், உன்னுடைய தாயார் கைகேயீயை மணக்கும் போது, "வரதட்சிணையாக" அவருடைய மாமனாருக்கு தன் அரசாங்கத்தை கொடுப்பதாக சொல்லி இருந்தார்"

O, My brother! Long ago, when our father married your mother, he promised your maternal grandfather that he would confer his kingdom as an exceptional marriage-dowry"




'ஆண்கள் வரதட்சிணை கொடுக்கும் வழக்கம் பாரத தேசத்தில் இருந்தது' என்று தெரிகிறது. 

947ல் நுழைந்த இஸ்லாமியர்களாலும், 1498ல் நுழைந்த வாஸ்கோ-ட-காமா என்ற கிறிஸ்தவர்களாலும், பாரத மக்கள் சூறையாடப்பட்டனர். செல்வங்கள் கொள்ளை அடிக்கப்பட்டது. பெண்கள் கற்பை காக்க பெரும் அபாயம் ஏற்பட்டது. 

ஆண்கள் வரதட்சிணை கேட்கும் நிலை வந்ததும், கணவன் இறந்தால் பெண் உடன்கட்டை ஏறுவதும், பிராம்மணர்கள் தங்கள் வேதத்தை விட்டதும், ஹிந்துக்கள் நம் கலாச்சாரத்தை புரிந்து கொள்ளாமல் போனதற்கும், 1000 வருட அந்நிய ஆக்ரமிப்பினால் ஏற்பட்ட கலாசார சீரழிவே காரணம்.

देव असुरे च सम्ग्रामे

जनन्यै तव पार्थिवः |

सम्प्रहृष्टो ददौ राजा

वरम् आराधितः प्रभुः ||

- वालमीकि रामायण


தேவ அசுரே ச சம்க்ராமே

ஜனன்யே தவ பார்திவ: |

சம்ப்ரஹ்ருஷ்டோ ததொள ராஜா

வரம் ஆராதித: ப்ரபு: ||

 - வால்மீகி ராமாயணம்

"அதற்கு பிறகு தேவாசுர போர் நடக்கும் சமயத்தில், தசரத மஹாராஜா உன் தாயாருக்கு இரண்டு வரங்களை, தக்க சமயத்தில் உதவி செய்ததற்கு நன்றியாகவும், ஆசையாகவும் கொடுத்தார்."

Thereafter, in a conflict between Gods and demons, your mother received the promise of two boons from the efficient lord of the earth, King Dasartha, as a token of his joy and gratitude.


ततः सा सम्प्रतिश्राव्य

तव माता यशस्विनी |

अयाचत नर श्रेष्ठम्

द्वौ वरौ वर वर्णिनी ||

तव राज्यम् नर व्याघ्र

मम प्रव्राजनम् तथा |

तच् च राजा तथा तस्यै

नियुक्तः प्रददौ वरौ ||

- वालमीकि रामायण


தத: ஸா சம்ப்ரதிஸ்ராவ்ய

தவ மாதா யஷஸ்வினி |

அயாசத் நர ஸ்ரேஷ்டம்

த்வௌ வரௌ வர வர்ணிநீ ||

தவ ராஜ்யம் நர வ்யாக்ர

மம ப்ரவ்ராஜனம் ததா |

தச் ச ராஜா ததா தஸ்யை

நியுக்த: ப்ரததொள வரௌ ||

 - வால்மீகி ராமாயணம்

"மஹா வீரனே! புகழ் கொண்ட உனது தாயார், அந்த இரண்டு வரங்களை தான் இப்பொழுது கேட்டு கொண்டு இருக்கிறாள். அதில் ஒன்று உனக்கு நகர ராஜ்யம், எனக்கு வனவாசம்".

O, Tiger among men! Your illustrious mother of beautiful complexion consequently demanded these two boons from that chief of men, for you the throne and for me the exile to the forest.


'கைகேயீ மாதா தனக்கு உரிய சொத்தை தான் கேட்டு இருக்கிறாள்' என்று பரதனை சமாதானம் செய்தார் ராமபிரான்.

'எப்படியாவது ராமபிரானை அயோத்திக்கு வரவழைக்க வேண்டும்' என்று நினைத்த ஜாபாலி 

"ராமா! தசரதரோ இறந்து விட்டார். யாருக்கும் யாரும் உறவு கிடையாது. தனியாக பிறக்கிறார்கள். தனியாக இறக்கிறார்கள். ஆட்சி உன் வருகைக்காக காத்து இருக்கிறது. தர்மமாவது சத்யமாவது… இகலோகமாவது! பரலோகமாவது! இறந்தவனுக்கு திதி அன்று, இங்கு உணவு கொடுத்தால், இறந்தவன் சாப்பிட போகிறானா? கைக்கு வரும் ஆட்சியை பிடித்து கொள்" என்று பேசினார். 


இந்த நாஸ்தீக பேச்சுக்கு பதில் கொடுத்த ராமபிரான், கடைசியாக ஜாபாலியை பார்த்து, 'எப்படி உங்களை போன்ற ஒருவரை, அயோத்தி அரச சபையில் என் தகப்பனார் அனுமதித்தார்?" என்று கேட்டார். 

ஜாபாலியின் பேச்சு ராமபிரானை கோபப்படுத்தியது.

வசிஷ்டர், 'ராமபிரானின் குல தர்மத்தை காட்டியாவது, வனம் செல்ல விடாமல் தடுக்கலாம்' என்று நினைத்தார்.


क्रुद्धम् आज्ञाय राम: तु

वसिष्ठः प्रत्युवाच ह।

जाबालिः अपि जानीते 

लोकस्य अस्य गत आगतिम्॥

- वालमीकि रामायण


க்ருத்தம் ஆஞாய ராம:து 

வசிஷ்ட ப்ரத்யுவாச ஹ |

ஜாபாலி: அபி ஜாநீதே

லோகஸ்ய அஸ்ய கத ஆகதிம் ||

 - வால்மீகி ராமாயணம்

ராமபிரானுக்கு ஏற்பட்ட கோபத்தை கவனித்த வசிஷ்டர், பேச தொடங்கினார்..  

"ராமா! ஆத்மாக்கள் இந்த உலகத்துக்கு எப்படி வருகிறது, போகிறது என்ற உண்மையை அறிந்தவர் தான் ஜாபாலி"

Recognizing that Rama has become angry, Vashishta spoke as follows: "Even Jabali is aware of the going and coming of this world."


निवर्तयितु कामः तु त्वाम् 

एतद् वाक्यम् अब्रवीत् |

इमाम् लोक समुत्पत्तिम् 

लोक नाथ निबोध मे ||

- वालमीकि रामायण


நிவர்தயிது காம: து த்வாம்

ஏதத் வாக்யம் அப்ரவீத் |

இமாம் லோக சமுத்பத்திம்

லோக நாத நிபோத மே ||

 - வால்மீகி ராமாயணம்

"எப்படியாவது உங்களை அயோத்திக்கு திருப்பி அழைத்து சென்று விட வேண்டும் என்ற ஆசையால் தான், ஜாபாலி இப்படியெல்லாம் பேசிவிட்டார். 

லோகத்திற்கு தலைவனே! நான் உமக்கு உம்முடைய வம்ச வரலாற்றை சொல்கிறேன்.."

"He spoke in this manner, on account of his desire that you should return. O, Lord of the people! Learn from me of the creation of the world!"


सर्वम् सलिलम् एव आसीत् 

पृथिवी यत्र निर्मिता |

ततः समभवद् ब्रह्मा 

स्वयम्भूर् दैवतैः सह ||

- वालमीकि रामायण


சர்வம் சலிலம் ஏவ ஆஸீத்

ப்ருத்வீ யத்ர நிர்மிதா |

தத: சமபவத் ப்ரஹ்மா

ஸ்வயம்பு: தைவதை: சஹ ||

 - வால்மீகி ராமாயணம்

முதலில் எங்கும் காரனோதகம் என்ற பிரளய ஜலமே எங்கும் இருந்தது. ஜலத்திலிருந்து இந்த உலகம் (மண்) உண்டானது. பிரம்ம தேவன் வெளிப்பட்டார்.

"All was water only in the beginning" from which element the earth was formed. After that, the self-existent Brahma with all the gods came into existence."


स वराहः ततो भूत्वा

प्रोज्जहार वसुंधराम् |

असृजच् च जगत् सर्वम्

सह पुत्रैः कृत आत्मभिः ||

- वालमीकि रामायण


ச வராஹ: ததோ பூத்வா

ப்ரோஜ்ஹார வசுந்தராம் |

அஸ்ருஜச் ச ஜகத் சர்வம்

சஹ புத்ரை: க்ருத ஆத்மபி: ||

 - வால்மீகி ராமாயணம்

பிரளய ஜலத்தில் மூழ்கி இருந்த பூமியை வராஹ ரூபத்துடன் பகவான் வெளிக்கொணர்ந்தார். ப்ரம்ம தேவன் தன் மானஸ புத்ரர்களை கொண்டு, கோடிக்கணக்கான மோக்ஷமடையாத ஜீவன்களுக்காக உலகத்தில் பசு, பக்ஷி, மனிதன், ஈ, எறும்பு உட்பட பல வித உடல்களை ஸ்ருஷ்டி செய்தார். 

"Thereafter, that baghavan, assuming the form of boar, caused the earth to rise from water and with his sons of pure soul, created the entire world."




आकाश प्रभवो ब्रह्मा

शाश्वतो नित्य अव्ययः |

तस्मान् मरीचिः सम्जज्ने

मरीचेः कश्यपः सुतः ||

- वालमीकि रामायण


ஆகாச ப்ரபவோ ப்ரஹ்ம

சாஸ்வதோ நித்ய அவ்யய: |

தஸ்மான் மரீசி: சம்ஜஜ்னே

மரீசே: கஸ்யப: சுத: ||

 - வால்மீகி ராமாயணம்

ப்ரம்ம தேவன் மரீசி என்ற ரிஷியை படைத்தார். 

மரீசியின் மானஸ புத்ரனாக கஷ்யபர் வெளிப்பட்டார்.

From Brahma was born Marichi. Marichi's son was kashyapa.


विवस्वान् कश्यपाज् जज्ने

मनुर् वैवस्तवः स्मृतः |

स तु प्रजापतिः पूर्वम्

इक्ष्वाकुः तु मनोः सुतः ||

- वालमीकि रामायण


விவஸ்வான் கஷ்யபாஜ் ஜஜ்னே

மனு: வைவஸ்தவ: ஸ்ம்ருத: |

ச து ப்ரஜாபதி: பூர்வம்

இக்ஷ்வாகு: து மனோ: சுத: ||

 - வால்மீகி ராமாயணம்

கஷ்யபரின் மானஸ புத்ரனாக விவஸ்வான் (சூரிய தேவன்) வெளிப்பட்டார். விவஸ்வானின் மானஸ புத்ரனாக ஸ்வாயம்பு மனு வெளிப்பட்டார்.

From Kashyapa, Vivasvan(sun-god) was born. manu was the son of Vivasvan. Manu for his part, was formerly the lord of creation. Ikshvaku was Manu' s son.


यस्य इयम् प्रथमम् दत्ता

समृद्धा मनुना मही |

तम् इक्ष्वाकुम् अयोध्यायाम्

राजानम् विद्धि पूर्वकम् ||

- वालमीकि रामायण


யஸ்ய இயம் ப்ரத்மம் தத்தா

சம்ருத்தா மனுனா மஹீ |

தம் இக்ஷ்வாகும் அயோத்யாயாம்

ராஜானம் வித்தி பூர்வகம் ||

 - வால்மீகி ராமாயணம்

ஸ்வாயம்பு மனு இந்த பூலோகத்தை இக்ஷ்வாகுவுக்கு கொடுத்தார். அயோத்தி ஆண்ட முதல் அரசர் இவரே.

The entire fertile earth was given by Manu to Ikshvaku and know that Ikshvaku was thus the first king of Ayodhya!


इक्ष्वाकोः तु सुतः श्रीमान् 

कुक्षिर् एव इति विश्रुतः |

कुक्षेर् अथ आत्मजो

वीरो विकुक्षिर् उदपद्यत ||

- वालमीकि रामायण


இக்ஷ்வாகோ: து சுத: ஸ்ரீமான்

குக்ஷி: ஏவ இதி விஸ்ருத: |

குக்ஷேர் அத ஆத்மஜோ

வீரோ விகுக்ஷி: உதபத்யத ||

 - வால்மீகி ராமாயணம்

இக்ஷ்வாகுவின் மூத்த மகன் குக்ஷி.

குக்ஷியின் மூத்த மகன் விகுக்ஷி.

Ikshvaku's son was known as Kukshi, the illustrious king. Then, Kukshi's son was the valiant Vikukshi.


विकुक्षेः तु महा तेजा

बाणः पुत्रः प्रतापवान् |

बाणस्य तु महा बाहु:

अनरण्यो महा यशाः ||

- वालमीकि रामायण


விகுக்ஷே: து மஹா தேஜா

பான: புத்ர: ப்ரதாபவான் |

பானஸ்ய து மஹா பாஹு

அநரண்யோ மஹா யஷா: ||

 - வால்மீகி ராமாயணம்

விகுக்ஷியின் மூத்த மகன் பானன்.

பானனின் மூத்த மகன் அநரண்யன்.

To Vikukshi was born the most splendid and powerful son, Bana. To Bana was born Anaranya the mighty armed and the most illustrious son.


नाना वृष्टिर् बभूव अस्मिन्

न दुर्भिक्षम् सताम् वरे |

अनरण्ये महा राजे

तस्करो वा अपि कश्चन ||

- वालमीकि रामायण


நாநா வ்ருஷ்டி: பபுவ அஸ்மின்

ந துர்பிக்ஷம் சதாம் வரே |

அநரண்யே மஹா ராஜே

தஸ்கரோ வா அபி கஸ்சன ||

 - வால்மீகி ராமாயணம்

அநரண்யன் ஆட்சி காலத்தில் மழைக்கு குறை இல்லாமல் இருந்தது. வறட்சி இல்லாமல் இருந்தது. திருடர்கள் இல்லாத காலமாக இருந்தது.

While this King Anaranya, the most excellent among beings was reigning, there was neither dearth of rain nor a drought. No one was a thief.


अनरण्यान् महा बाहुः

पृथू राजा बभूव ह |

तस्मात् पृथो: महा राजः

त्रिशन्कु: उदपद्यत ||

स सत्य वचनाद् वीरः

सशरीरो दिवम् गतः |

- वालमीकि रामायण


அநரண்யான் மஹா பாஹு:

ப்ருதூ ராஜா பபூவ ஹ |

தஸ்மாத் ப்ருதோ: மஹா ராஜ:

த்ரிசங்கு உதபத்யத ||

ச சத்ய வசநாத் வீர:

ஸ-சரீரோ திவம் கத: |

 - வால்மீகி ராமாயணம்

அநரண்யனின் மூத்த மகன் ப்ருது. 

ப்ருதுவுக்கு மூத்த மகனாக திரிசங்கு பிறந்தார்.

சத்யமே பேசும் திரிசங்கு தன் மனித சரீரத்தோடு சொர்க்க லோகம் சென்றார்.

Anaranya elder son is Prutu. Prutu son is Trisanku. Trisanku due to his truthness was able to reach swarg loka with his human body.


त्रिशन्को: अभवत् सूनुर्

धुन्धुमारो महा यशाः |

धुन्धुमारान् महा तेजा

युवन अश्वो व्यजायत ||

- वालमीकि रामायण


த்ரிசங்ஜோ: அபவத் சூனு:

துந்துமாரோ மஹா யஷா: |

துந்துமாரன் மஹா தேஜா

யுவனஸ்வோ வ்யஜாயத ||

 - வால்மீகி ராமாயணம்

திரிசங்குவுக்கு மூத்த மகனாக துந்துமாரன் பிறந்தார்.

துந்துமாரனுக்கு மூத்த மகனாக யுவனஸ்வன் பிறந்தார்.

To Trishanku was born a son, the highly illustrious Dundhumara. From Dundhumara was born the hero, Yuvanasva.


युवन अश्व सुतः श्रीमान्

मान्धाता समपद्यत |

मान्धातुः तु महा तेजाः

सुसंधि: उदपद्यत ||

- वालमीकि रामायण


யுவனஸ்வ சுத: ஸ்ரீமான்

மான்தாதா சமபத்யத |

மான்தாது: து மஹா தேஜா:

சுசந்தி: உதபத்யத ||

 - வால்மீகி ராமாயணம்

யுவனஸ்வனுக்கு மூத்த மகனாக மான்தாதா பிறந்தார்.

மான்தாதாவுக்கு மூத்த மகனாக சுசந்தி பிறந்தார்.

The illustrious Mandhata was born as a son to Yuvanasva. To Mandhata was born the hero, Susandhi.


सुसंधेर् अपि पुत्रौ द्वौ

ध्रुव संधिः प्रसेनजित् |

यशस्वी ध्रुव संधेः 

तु भरतो रिपु सूदनः ||

- वालमीकि रामायण


சுசந்தே அபி புத்ரௌ த்வௌ 

த்ருவசந்தி: ப்ரசேனஜித் |

யஷஸ்வீ த்ருவ சந்தே:

து பரதோ ரிபு சூதன: ||

 - வால்மீகி ராமாயணம்

சுசந்திக்கு, 'த்ருவசந்தி பிறகு ப்ரசேனஜித்' என்ற இரண்டு மகன்கள் பிறந்தனர்.

த்ருவசந்திக்கு மூத்த மகனாக அழியா புகழ் பெற்ற பரதன் பிறந்தார்.

There were two sons Dhruvasandhi and prasenajit to Susandhi. From Dhruvasandhi was born the illustrious Bharata, the annihilator of enemies."


भरतात् तु महा बाहो:

असितो नाम जायत |

यस्य एते प्रतिराजान

उदपद्यन्त शत्रवः |

हैहयाः ताल जन्घाः च 

शूराः च शश बिन्दवः ||

- वालमीकि रामायण


பரதாத்: து மஹா பாஹோ

அசிதோ நாம ஜாயத |

யஸ்ய ஏதே ப்ரதிராஜான்

உதபத்யன்த சத்ரவ: |

ஹைஹயா: தாளஜன்கா: ச 

சூரா: ச ஸஸ பிந்தவ: ||

 - வால்மீகி ராமாயணம்

மஹா வீரரான பரதருக்கு மூத்த மகனாக அசிதர் பிறந்தார்.

அசிதரின் சபையில் ராஜ மந்திரிகளாக இருந்த ஹைஹயன், தாளஜன்கன், ஸஸபிந்தவன் ஆகியோர் அரசனுக்கு எதிராக திரும்பினர்.

"From the mighty armed Bharata was born a son named Asita, for whom his royal adversaries, Haihayas, Talajanghas and the valiant Shashibindavas became the enemies.





तामः तु सर्वान् प्रतिव्यूह्य

युद्धे राजा प्रवासितः |

स च शैल वरे रम्ये

बभूव अभिरतो मुनिः ||

- वालमीकि रामायण


தாம: து சர்வான் ப்ரதி வ்யூஹ்ய

யுத்தே ராஜா ப்ரவாசித: |

ஸ ச சைல வரே ரம்யே

பபூவ அபிரதோ முனி: ||

 - வால்மீகி ராமாயணம்

மற்ற அரசர்களோடு போர் செய்யும் போது, சமயத்தில் இவருடைய போர் படையே இவர் மீது திரும்ப, காட்டுக்குள் தப்பித்தார் அசிதர். 

அங்கேயே அசிதர் ராஜ ரிஷியாக மலைகளில் வசித்து வந்தார். 

Having drawn out his battle-array against all those kings in a combat, the king Asita was driven away. Asita then became a devoted sage taking asylum in an excellent and charming mountain.


द्वे च अस्य भार्ये गर्भिण्यौ

बभूवतुर् इति श्रुतिः |

एका गर्भविनाशाय

सपत्न्यै गरळं ददौ ||

- वालमीकि रामायण


த்வே ச அஸ்ய பார்யே கர்பின்யௌ

பபூ-வது: இதி ஸ்ருதி: |

ஏகா கர்ப விநாசாய

ச-பத்ன்யை கரலம் ததொள ||

 - வால்மீகி ராமாயணம்

அசிதருடைய 2 மனைவிகள் கர்ப்பமாக இருந்தனர். ஒருவள், பொறாமையினால் மூத்த மனைவியின் (காளிந்தீ) கர்ப்பத்தை கலைக்க விஷம் கொடுத்து விட்டாள்.

Asita's two wives became pregnant. It is a hearsay that one of his wives gave poison to the other co-wife in order to destroy her foetus.



भार्गवः च्यवनो नाम

हिमवन्तम् उपाश्रितः |

तम् ऋषिम् समुपागम्य

कालिन्दी तु अभ्यवादयत् |

स ताम् अभ्यवदद् विप्रो

वर ईप्सुम् पुत्र जन्मनि ||

- वालमीकि रामायण


பார்கவ: ச்யவனோ நாம

ஹிமவந்தம் உபாஸ்ரித: |

தம் ரிஷிம் சமுபாகம்ய

காளிந்தீ து அப்யவாதயத் |

ச தாம் அப்யவதத் விப்ரோ

வர ஈப்சும் புத்ர ஜன்மனி ||

 - வால்மீகி ராமாயணம்

ப்ருகு வம்சத்தில் உதித்த ச்யவன ரிஷி, ஹிமாலயத்தில் இருந்து வந்தார்.

கற்பவதியான காளிந்தீ ச்யவன ரிஷியிடம் சரண் புகுந்தாள். குழந்தை நன்றாக பிறக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்தாள்.

A sage called Chyavana, belonging to Bhrigu race was staying in a Himalayan mountain. Kalindi (Asita's wife) approached that sage and offered her salutation. That brahmna spoke the following words to her, who wanted to obtain a boon for the birth of a son.


पुत्रस्ते भविता देवि

महात्मा लोकविश्रुतः |

धार्मिकश्च सुशीलश्च

वंशकर्तारिसूदनः ||

- वालमीकि रामायण


புத்ர: தே பவிதா தேவி

மஹாத்மா லோக விஸ்ருத: |

தார்மிக: ச சுசீல: ச

வம்ச கர்தாரி சூதன: ||

 - வால்மீகி ராமாயணம்

ச்யவன ரிஷி, கற்பவதியான காளிந்தீயை பார்த்து, "அரசியே! உலகம் புகழும் பிள்ளை மஹாத்மாவாக பிறப்பான். தர்மம் தெரிந்தவனாகவும், நன்நடத்தை உள்ளவனாகவும், உங்கள் வம்சத்தை வளர்ப்பவனாகவும், எதிரிகளை ஒழிப்பவனாகவும் ஒரு மகன் பிறப்பான்" என்று ஆசி கூறினார்.

Queen! A high-souled son, who will be world-famous, righteous, of a good conduct, a perpetuator of the race and an annihilator of enemies will be born to you.


कृत्वा प्रदक्षिणं हृष्टा

मुनिं तमनुमान्य च |

पद्मपत्र समानाक्षं

पद्मगर्भ समप्रभम् |

ततः सा गृहम् आगम्य

देवी पुत्रम् व्यजायत ||

- वालमीकि रामायण


க்ருத்வா ப்ரதக்ஷிணம் ஹ்ருஷ்டா

முனிம் தம் அனுமான்ய ச |

பத்ம பத்ர சமானாக்ஷம்

பத்ம கர்ப சமப்ரபம் |

தத: ஸா க்ருஹம் ஆகம்ய

தேவீ புத்ரம் வ்யஜாயத ||

 - வால்மீகி ராமாயணம்

பெருமகிழ்ச்சி அடைந்த அரசி, ச்யவன ரிஷியை வலம் வந்து நமஸ்கரித்து விட்டு, தன் இருப்பிடம் திரும்பினாள். அவளுக்கு தாமரை போன்ற கண்களுடைய, தாமரை இலையில் மலர்ந்த பிரம்மாவை போன்ற ப்ரகாசத்துடன் ஒரு மகன் பிறந்தான்.

The delighted Queen Kalindi circumambulated that sage, took permission from him to leave and thereafter on reaching home, had delivered a son, having eyes resembling lotus-leaves and having a radiance like that of Brahma the Lord of creation.


सपत्न्या तु गरः तस्यै

दत्तो गर्भ जिघांसया |

गरेण सह तेन एव

जातः स सगरो अभवत् ||

- वालमीकि रामायण


ஸ-பத்ன்யா து கர: தஸ்யை

தத்தோ கர்ப ஜிகாம்சயா |

கரேன சஹ தேன ஏவ

ஜாத: ஸ சகரோ அபவத் ||

 - வால்மீகி ராமாயணம்

கர்ப்பத்தை கலைக்க விஷம் (கர) கொடுத்து அசிதரின் மற்றொரு மனைவி கொல்ல பார்த்தும், இந்த பிள்ளை பிறந்தான். விஷம் குடித்தும், விஷத்தோடு பிறந்த பிள்ளை என்பதால், இவனுக்கு "சகரன்' என்று பெயர்.

Poison was given earlier by her co-wife with an intention to kill her foetus. Born with that poison itself, he became Sagara (a man with poison).


स राजा सगरो नाम यः

समुद्रम् अखानयत् |

इष्ट्वा पर्वणि वेगेन

त्रासयन्तम् इमाः प्रजाः ||

- वालमीकि रामायण


ச ராஜா சகரோ நாம ய:

சமுத்ரம் அகானயத் |

இஷ்ட்வா பர்வனி வேகேன

த்ராசயந்தம் இமா: ப்ரஜா: ||

 - வால்மீகி ராமாயணம்

கடலை முழுக்க அகற்றி ஆராய்ச்சி செய்தவர், இந்த சகர சக்கரவர்த்தி. (குறிப்பு: எகிப்த் அருகே உள்ள சஹாரா என்ற கடற்பரப்பு இன்று பாலைவனமாக உள்ளது)

அவர் சக்தியை கண்டும், இவர் பௌர்ணமி அன்று செய்யும் யாகங்களை கண்டும் உலகமே ஆச்சர்யப்பட்டது. தேவர்கள் தங்கள் பதவி பறிபோய் விடுமோ என்று பயந்தனர்.

It was king SAgara who excavated the ocean and who, by his sacrifice, on the day of the full moon, by his energy, frightened the people here by the speed of his digging.


असमन्जः तु पुत्रो अभूत्

सगरस्य इति नः श्रुतम् |

जीवन्न् एव स पित्रा तु

निरस्तः पाप कर्म कृत् ||

- वालमीकि रामायण


அசமஞ்ச: து புத்ரோ அபூத்

சகரஸ்ய பாப கர்ம க்ருத் |

ஜீவன்ந ஏவ ஸ பித்ரா து

நிரஸ்த: பாப கர்ம க்ருத் ||

 - வால்மீகி ராமாயணம்

சகர சக்கரவர்த்திக்கு அசமஞ்சன் என்ற மகன் பிறந்தான். அவனுடைய அதர்மம் மீறிய செயல்களை கண்டு, சகர சக்கரவர்த்தி நாடு கடத்தினார். 

Asamanja was Sagara's son. There was a hearsay that on account of his wicked deeds, Asamanja was banished by his father even during his life time.


अंशुमान् इति पुत्रो अभूद्

असमन्जस्य वीर्यवान् |

दिलीपो अंशुमतः पुत्रो

दिलीपस्य भगीरथः ||

- वालमीकि रामायण


அம்சுமான் இதி புத்ரோ அபூத்

அசமஞ்ச: ய வீர்யாவான் |

திலீபோ அம்சுமத: புத்ரோ

திலீபஸ்ய பகீரத: ||

 - வால்மீகி ராமாயணம்

அதன் பிறகு, அஸமஞ்சனின் மகன் மகா வீரனான 'அம்சுமான்' சகர சக்கரவர்த்திக்கு ஆட்சி செய்தார். 

(குறிப்புசகர சக்ரவர்த்திக்கு இரண்டு மனைவிகள். மூத்தவள் பெயர் 'கேஷினி' விதர்ப தேசத்து பெண். இளையவள் பெயர் சுமதி. அரிஷ்டநேமி என்று அழைக்கப்படும் காஷ்யபரின் மகள் இவள். கருடனின் சகோதரி. சகர மன்னன் தன் இரு மனைவிகளுடன் 100 வருடங்கள் இமாலய பர்வதத்தில் தவம் செய்தார். ப்ருகு ரிஷி காட்சி கொடுத்து, ஒருவளுக்கு ஒரே ஒரு புத்ரன் குலத்தை விருத்தி செய்ய பிறப்பான். மற்றொருவளுக்கு 60000 புத்ரர்கள் மகாபலத்துடன், புகழுடன், உற்சாகம் குறையாமல் பிறப்பார்கள் என்று வரம் கொடுத்தார். கேஷினி தனக்கு குலத்தை வளர செய்யும் ஒரு புத்ரன் வேண்டும் என்று கேட்டாள். அவளுக்கு "அசமஞ்சன்" என்ற புத்ரன் பிறந்தார். சுமதி 60,000 புத்ரர்களை பெற்றாள். மூத்தவன் அசமஞ்சன், தன் சகோதரர்களை கங்கையில் மூழ்கடித்து விளையாடினான். இதை தொடர்ந்து செய்ய, ஜனங்களை காக்க இவன் தகுதி அற்றவன் என்று இவனை நாடு கடத்தினார் சகர மன்னன். அசமஞ்சனின் பிள்ளை அம்ஷுமான் பொறுப்பாக இருந்தான். இவன் மூலம் குலம் விருத்தி ஆனது.

தான் சகல சுகங்களுடன் பிறந்ததற்கு காரணம், முந்தைய ஜென்மத்தில் ப்ராம்மணனாக பிறந்து கன்னிகா தானம் செய்த பலனே என்று அறிந்தார். ஒரு கன்னிகா தானம் செய்ததற்கே இத்தனை பலன் கிடைக்குமென்றால், இந்த பிறவியில் 60000 பெண் குழந்தைகளை கன்னிகா தானம் செய்து மேலும் புண்ணியங்கள் செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டார். சகர சக்கரவர்த்திக்கு ஏற்படும் புண்ணியத்தை தடுக்க, தேவேந்திரன், வரம் கேட்கும் போது "60000 புத்ரி" என்று வேண்டும் சொல்லும் போது, "60000 புத்ர' என்று கேட்டு விட்டார். 

மற்றொரு முறை, அஸ்வமேத யாகம் செய்த போது, யாக குதிரையை மறைத்து, கபில ரிஷி இருக்கும் ஆசிரமத்துக்கு அருகில் (While Horse Island is in Riverside county, CA) கட்டி விட்டு மறைந்து விட்டார் இந்திரன்.

60000 புத்திரர்களும், யாக குதிரை இருக்குமிடத்தை கண்டுபிடித்தனர். பல ஆயிரம் தூரம் கடந்து, கபிலர் ஆசிரமம் (california) வந்து, 'இவர் தான் திருடிவிட்டார்' என்று விஜாரிக்காமல் தாக்க நினைத்தனர். கபிலர் கண் திறந்து கோபமாக பார்க்க, அந்த பார்வையிலிருந்து வெளிப்பட்ட அக்னியால் 60000 மகன்களும் அங்கேயே (Ash Island is in Oregon) பொசுங்கி சாம்பலாகினர். 60000 பேரும் திதி கொடுப்போர் இல்லாமல், அபர காரியம் செய்யப்படாமல் இறந்ததால், பசி தாகத்துடன் ஆவியாக அலைந்து கொண்டிருந்தனர்)

அம்சுமானுக்கு திலீபன் பிறந்தார்.

திலீபனுக்கு பகீரதன் பிறந்தார்.

(குறிப்பு: தன் மூதாதையர்களான 60000 பேரும் புண்ணிய லோகங்கள் செல்லாமல் இருப்பதை அறிந்து கொண்டான் பகீரதன். ப்ரம்ம தேவனை பிரார்த்தனை செய்தார். த்ரிவிக்ரம அவதாரம் செய்த போது, ப்ரம்ம தேவன் தன் கமண்டல ஜலத்தால் பெருமாளின் திருவடிக்கு பாத பூஜை செய்த ஜலம், சத்ய லோகம் தாண்டி சொர்க்க லோகம் வரை வந்து தங்கி இருந்தாள். அந்த புண்ணியமான கங்கை ஜலத்தை பூமிக்கு கொண்டு வந்து அந்த சாமபலில் தெளித்தால், அனைவரும் புண்ணிய லோகங்களுக்கு செல்வார்கள் என்று ப்ரம்ம தேவன் தெரிவித்தார். பகீரதன் மீண்டும் கங்கையை நோக்கி தவம் செய்து, கங்கா தேவியை சொர்க்கத்தில் இருந்து பூமிக்கு கொண்டு வந்தார். கங்கையின் வேகத்தை தானே தாங்குவதாக சிவபெருமான் ஹிமாலயத்தில் கைலாயத்தில் இருந்து தாங்க சம்மதித்தார். கங்கை பூமிக்கு வந்தாள். 60000 பெரும் புண்ணிய லோகங்களுக்கு சென்றனர்)

"A valiant son called amshuman was born to Asamanja. Dilipa was Amshuman's son. Bhagiratha was Dilipa's son.





भगीरथात् ककुत्स्थः तु

काकुत्स्था येन तु स्मृताः |

ककुत्स्थस्य तु पुत्रो अभूद्

रघु: येन तु राघवः ||

- वालमीकि रामायण


பகீரதாத் ககுத்ஸ்த: து

காகுத்ஸ்தா ஏன து ஸ்ம்ருதா: |

ககுத்ஸ்தஸ்ய து புத்ரோ அபூத்

ரகு: ஏன து ராகவ: ||

 - வால்மீகி ராமாயணம்

பகீரதனுக்கு ககுத்ஸ்தன் பிறந்தார்.

காகுஸ்தன் என்று உங்கள் வம்சத்தில் உள்ளவர்களை அழைக்கும் முறை இவரால் ஏற்பட்டது.

ககுத்ஸ்தனுக்கு ரகு பிறந்தார். ராகவா என்று உங்கள் வம்சத்தில் உள்ளவர்களை அழைக்கும் முறை இவரால் ஏற்பட்டது.

Of Bhagiratha was born kakutstha, from whom the Kakutsthas take their name. To Kakutsthas was born a son called Raghu, from whence spring Raghavas.


रघोः तु पुत्रः तेजस्वी

प्रवृद्धः पुरुषदकः |

कल्माषपादः सौदास

इत्य् एवम् प्रथितो भुवि ||

- वालमीकि रामायण


ரகோ: து புத்ர: தேஜஸ்வீ

ப்ரவ்ருத்த: புருஷதக: |

கல்மாஷபாத: சௌதாஸ

இத்யேவம் ப்ரதிதோ புவி ||

 - வால்மீகி ராமாயணம்

ரகுவுக்கு ப்ரவ்ருத்தன் பிறந்தார்.

இவர் புருஷதக என்றும், கல்மாஷபாதர் என்றும், சௌதாஸர் என்றும் அழைக்கப்பட்டார்.

From Raghu was born a renowned son named Pravriddha, known in the world under the names Purushadaka, Kalmashapada and Soudasa.


कल्माषपाद पुत्रो अभूत्

शन्खणः तु इति विश्रुतः |

यः तु तद् वीर्यम् आसाद्य

सह सेनो व्यनीनशत् ||

- वालमीकि रामायण


கல்மாஷபாத புத்ரோ அபூத்

சங்கண: து இதி விஸ்ருத: |

ய: து தத் வீர்யம் ஆஸாத்ய

சஹ சேனோ வ்யநீனஸத் ||

 - வால்மீகி ராமாயணம்

கல்மாஷபாதனுக்கு சங்கணன் பிறந்தார். சங்கணன் போரில் வீர மரணம் எய்தார்.

Kalmashapada's son was renowned as Shankhana, who, even on attaining his father's valour, perished (in a battle) along with his army.


शन्खणस्य तु पुत्रो अभूत्

शूरः श्रीमान् सुदर्शनः |

सुदर्शनस्य अग्नि वर्ण

अग्नि वर्षस्य शीघ्रगः ||

- वालमीकि रामायण


சங்கநஸ்ய து புத்ரோ அபூத்

சூர: ஸ்ரீமான் சுதர்சன: |

சுதர்சனஸ்ய  அக்னிவர்ண

அக்னி வர்ஷஸ்ய சீக்ரக: ||

 - வால்மீகி ராமாயணம்

சங்கணனுக்கு சுதர்சனன் பிறந்தார்.

சுதர்சனனுக்கு அக்னிவர்ணன் பிறந்தார்.

அக்னிவர்ணனுக்கு சீக்ரகன் பிறந்தார்.

The fortunate Sudarshana was the son of Shankhana. Sudarshana's son was Agnivarna; and of Agnivarna was born Sheeghraga.


शीघ्रगस्य मरुः पुत्रो

मरोः पुत्रः प्रशुश्रुकः |

प्रशुश्रुकस्य पुत्रो अभूद्

अम्बरीषो महा द्युतिः ||

- वालमीकि रामायण


சீக்ரகஸ்ய மரு: புத்ரோ

மரோ: புத்ர: ப்ரசுஸ்ருக: |

ப்ரசுஸ்ருகஸ்ய புத்ரோ அபூத்

அம்பரீஷோ மகா த்யுதி: ||

 - வால்மீகி ராமாயணம்

சீக்ரகனுக்கு மரு மகனாக பிறந்தார். 

மருவுக்கு ப்ரசுஸ்ருகன் பிறந்தார்.

ப்ரசுஸ்ருகனுக்கு அம்பரீஷன் பிறந்தார்.

Shighraga son was Maru and Maru's son was Prashushruga from Prashushruga was born Ambarisha of that great radiance


अम्बरीषस्य पुत्रो अभून्

नहुषः सत्य विक्रमः |

नहुषस्य च नाभागः

पुत्रः परम धार्मिकः ||

* नहुषस्य ययातिस्तु नाभागस्तु ययातिजः |

- वालमीकि रामायण


அம்பரீஷஸ்ய புத்ரோ அபூன்

நஹுஷ: சத்ய விக்ரம: |

நஹுஷஸ்ய ச நாபாக:

புத்ர பரம தார்மிக: ||

* நஹுஷஸ்ய யயாதி: து 

  நாபாக: து யயாதிஜ: |

 - வால்மீகி ராமாயணம்

அம்பரீஷனுக்கு நஹுஷன் மகனாக பிறந்தார். 

நஹுஷனுக்கு நாபாகன் என்ற தர்மாத்மா பிறந்தார்.

* வசிஷ்டர் ஜனகரிடம் இக்ஷ்வாகு பரம்பரை சொல்லும் போது, கொஞ்சம் விரிவாக சொல்கிறார். 

நஹுஷனுக்கு யயாதி பிறந்தார். யயாதிக்கு நாபாகன் பிறந்தார்.

To Ambarisha was born a son named Nahusha who was full of valor. Nahusha's son was Naabhaga of outstanding virtue.

* At marriage vashishta narrates ikshvaku lineage. There he elaborates little more to janaka.

Nahusha's son was Yayati.Yayati's son was Naabhaga of outstanding virtue.


अजः च सुव्रतः चैव

नाभागस्य सुताउ उभौ |

अजस्य चैव धर्मात्मा

राजा दशरथः सुतः ||

- वालमीकि रामायण


அஜ: ச சுவ்ரத: சைவ

நாபாகஸ்ய சுதாஉ உபௌ |

அஜஸ்ய சைவ தர்மாத்மா

ராஜா தசரத: சுத: ||

 - வால்மீகி ராமாயணம்

நாபாகனுக்கு, அஜன் சுவ்ரதன் என்ற இரு மகன்கள் பிறந்தனர்.

அஜனுக்கு தசரத ராஜன் பிறந்தார்.

Aja and Suvrata were the two sons of Naabhaga and it was Aja who begot the virtuous King Dasartha.

तस्य ज्येष्ठो असि दायादो

राम इत्य् अभिविश्रुतः |

तद् गृहाण स्वकम् राज्यम्

अवेक्षस्व जगन् नृप ||

- वालमीकि रामायण


தஸ்ய ஜ்யேஷ்டோ அசி தாயாதோ

ராம இதி அபிவிஸ்ருத: |

தத் க்ருஹான ஸ்வகம் ராஜ்யம்

அவேக்ஷஸ்வ ஜகன் ந்ருப ||

 - வால்மீகி ராமாயணம்

ராமா! தசரதற்கு மூத்த பிள்ளையான நீ, வம்ச வழக்கப்படி ராஜ்யத்தை பெற்று கொள்ளலாம். ஆதலால், ராஜ்யத்தை ஏற்றுக்கொண்டு, மக்களை வழி நடத்துவாயாக !"

You are the eldest son of that Dasaratha, very well-known as Rama, the heir who can claim over the inheritance. O, King! Hence, take over your kingdom and look after your people there.

इक्ष्वाकूणाम् हि सर्वेषाम्

राजा भवति पूर्वजः |

पूर्वजेन अवरः पुत्रो

ज्येष्ठो राज्ये अभिषिच्यते ||

- वालमीकि रामायण


இக்ஷ்வாகூனாம் ஹி சர்வேஷாம்

ராஜா பவதி பூர்வஜ: |

பூர்வஜேன அவர: புத்ரோ

ஜ்யேஷ்டோ ராஜ்யே அபிஷிச்யதே ||

 - வால்மீகி ராமாயணம்

மூத்த பிள்ளையே அரசனாகும் வழக்கம் இக்ஷ்வாகு வம்சத்தில் கடைபிடிக்கப்பட்டுள்ளது.

மூத்த மகன் இருக்கும் போது, இளையவன் அரசனாக முடியாது. மூத்த பிள்ளையே முடி சூட்டிக்கொள்ள வேண்டியவன்.

The eldest son only becomes the king in the entire Ikshvaku race. When the eldest son exists, the younger son will not become a king. The eldest son only is anointed to the crown.





स राघवाणाम्

कुल धर्मम् आत्मनः |

सनातनम् न अद्य

विहातुम् अर्हसि ||

प्रभूत रत्नाम् अनुशाधि मेदिनीम् |

प्रभूत राष्ट्राम् पितृवन् महा यशाः ||

- वालमीकि रामायण


ச ராகவானாம்

குல தர்மம் ஆத்மன: |

சனாதனம் ந அத்ய

விஹாதும் அர்ஹசி ||

ப்ரபூத ரத்னாம்

அனுசாதி மேதிநீம் |

ப்ரபூத ராஷ்ட்ராம்

பித்ருவன் மஹா யஷா ||

- வால்மீகி ராமாயணம்

குல தர்மம் அறிந்தவனே! ரகு குலத்தில் உள்ள வழக்கம் இது. இந்த வழக்கம் உன்னால் மீறப்பட கூடாது. இந்த பூமியை, பெரிய ராஜ்யத்தை உன் தந்தை ஆண்டு காத்தது போல, நீயும் காக்க வேண்டும்." என்று வசிஷ்டர் ராமபிரானை பார்த்து சொல்லி, ராஜ்யத்தை ஏற்க வைக்க முயற்சித்தார். 

"O, the celebrated one! This is the eternal tradition of your race, those born in Raghu dynasty and ought not to be violated by you. Rule over the earth, this vast kingdom abudant with precious metals, as did your father."

Thus Vashishta also tried to convince Shri Rama to come back and take up Throne in his kingdom based on ikshvagu tradition.


ஜெய் ஸ்ரீராம்

Jai Shri Ram