Followers

Search Here...

Showing posts with label மன்வந்தரம். Show all posts
Showing posts with label மன்வந்தரம். Show all posts

Monday 11 June 2018

14 மனு அரசர்கள் யார்? பிரம்மாவின் வயது என்ன?

ஒரு மன்வந்தரம் என்பது 71 சதுர் யுகம் ஆகும்.
ஒரு ஸம்தி காலம் என்பது 17,28,000 வருடங்கள் ஆகும்.




இந்த ஸம்தி காலத்தில் (அதாவது ஒரு சத்ய யுக காலம் வரை) உலகம் நீரில் மூழ்கிவிடும்.

14 மன்வந்த்ரம், மேலும் 15 ஸம்தி காலம் என்பது ப்ரம்மாவின் ஒரு பகல்.

அதற்கு சமமான காலம் என்பது ப்ரம்மாவின் ஒரு இரவு.
ப்ரம்மாவின் இந்த இரவில், பிரபஞ்சம் அனைத்தும் இல்லாமல் அடங்கிவிடும்.

ப்ரம்மாவின் ஒரு நாள், கல்பம் என்று அறியலாம்.




ஒவ்வொரு மன்வந்த்ரமும், ஒரு மனுவால் ஆளப்படுகிறது.

இப்பொழுது நடப்பது - 7வது மன்வந்தரமான "வைவஸ்வத" மன்வந்தரம். சூரியனுடைய மைந்தனான வைவஸ்வதர் இப்பொழுதுள்ள மனு.

1 மன்வந்த்ரம் - ஸ்வாயம்பு மனுவால் ஆளப்படுகிறது. இந்த மனு ப்ரம்மாவின் மானசீக புத்ரன். ஸ்வாயம்பு மனு வழிபடுவதற்காக, தான் ப்ரம்ம லோகத்தில் வழிபட்ட "யோக நித்திரையில் உள்ள நாராயணரை" இவருக்கு தந்தார். இந்த பெருமாளே பின்பு, ஸ்ரீ ராமர் அயோத்தியில் தன குல தெய்வமாக வழிபட்டார். பின்பு, ஸ்ரீ ராமர் விபீஷணனுக்கு கொடுத்தார். விபீஷணர் அயோத்தியிலிருந்து இலங்கை நோக்கி எடுத்து செல்லும் போது, சந்தியா வந்தனம் செய்ய காலம் வந்தவுடன் இறக்கி விட, அன்று முதல், இன்று வரை ரங்கநாதராக - ஸ்ரீ ரங்கம் என்ற ஊரில் காட்சி கொடுக்கிறார்.
2 மன்வந்த்ரம் - ஸ்வரோசிச மனுவால் ஆளப்படுகிறது.
3 மன்வந்த்ரம் - உத்தம மனுவால் ஆளப்படுகிறது.
4 மன்வந்த்ரம் - தாமஸ மனுவால் ஆளப்படுகிறது.
5 மன்வந்த்ரம் - ரைவத மனுவால் ஆளப்படுகிறது.
6 மன்வந்த்ரம் - சாக்ஷுச மனுவால் ஆளப்படுகிறது.
7 மன்வந்த்ரம் - வைவஸ்வத மனுவால் ஆளப்படுகிறது.

தற்போதைய "வைவஸ்வத" மன்வந்தரம் முடிந்தபின், வரப்போகும் ஏழு மனுக்களின் பெயர்களும் புராணங்களில் கூறப்பட்டிருக்கின்றன.

இன்றைய மன்வந்தரமான வைவஸ்வத மன்வந்தரத்தில், 27 மகாயுகங்கள் முடிந்து விட்டன.

இப்பொழுது நடப்பது, 28-வது மகாயுகம். அதில் கலியுகம் நடந்துகொண்டிருக்கிறது.

கலியுக ஏறத்தாழ 3102 BC ஆண்டில் ஆரம்பிக்கிறது.

கலியுகம் முடிய இன்னும் பல லட்சம் ஆண்டுகள் உள்ளன.
பூமியில் 4,32,000 வருடங்கள் என்பது 1 கலி யுக காலம்.


8 மன்வந்த்ரம் - ஸாவர்னி மனுவால் ஆளப்படுகிறது.
9 மன்வந்த்ரம் - தக்ஷ ஸாவர்னி மனுவால் ஆளப்படுகிறது.
10 மன்வந்த்ரம் - ப்ரம்ம ஸாவர்னி  மனுவால் ஆளப்படுகிறது.
11 மன்வந்த்ரம் - தர்ம ஸாவர்னி  மனுவால் ஆளப்படுகிறது.
12 மன்வந்த்ரம் - ருத்ர ஸாவர்னி   மனுவால் ஆளப்படுகிறது.
13 மன்வந்த்ரம் - ரௌச்ய தேவ ஸாவர்னி மனுவால் ஆளப்படுகிறது.
14 மன்வந்த்ரம் - இந்திர ஸாவர்னி மனுவால் ஆளப்படுகிறது.

பிரம்மாவின் ஆயுட்காலம் 100 பிரம்ம ஆண்டுகள்.




அந்தக் காலத்தை இரண்டாகப் பிரித்து, இரண்டு 'பரார்த்தங்கள்' என்று புராணங்களில் சொல்லப்படுகின்றன

இன்றைய பொழுதில், ப்ரம்மாவிற்கு 50 வயது ஆகியுள்ளது.

இன்று ப்ரம்மா தன் 51வது வயதில், முதல் நாளை கொண்டாடுகிறார்.

50 வயதை கடந்துவிட்டதால், ப்ரம்மா இப்பொழுது தன் இரண்டாவது பரார்த்தத்தில் உள்ளார்.