Followers

Search Here...

Showing posts with label தண்டனை. Show all posts
Showing posts with label தண்டனை. Show all posts

Tuesday 1 May 2018

பாபங்களுக்கு தண்டனை அனுபவித்தும் ஏன் மீண்டும் மீண்டும் ஜீவன் பாபம் செய்கிறான்?

பாப வாசனை
இந்த உடலை விட்டு ஜீவன் பிரிந்த பின்,
எம தர்மராஜன் ஆணை படி "செய்த பாவங்களுக்கு நரகத்தில் தண்டனை அனுபவிக்கிறான்".



மீண்டும், இந்த உலகில், இவன் செய்த கர்ம பலன்களை பொறுத்து, அதற்கு தகுந்த தாய், தந்தை தேர்ந்தெடுத்து, இந்த உலகில் மீண்டும் பிறக்க அனுக்கிரஹம் செய்கிறார்.

'தான் கொடுத்த தண்டனையில் இவன் திருந்தி, இப்பொழுது கிடைத்த இந்த சரீரத்தை கொண்டாவது ஒழுங்காக வாழ்ந்து, கிருஷ்ண பக்தி செய்து,   கிருஷ்ண சரணம் அடைவானா' என்று எம தர்மராஜன் எதிர்பார்க்கிறார்.

ஆனால் கிடைத்த பிறவியை இந்த ஜீவன், மீண்டும் பாவங்கள் செய்து, கிருஷ்ண பக்தி செய்யாமல் வீணடித்து, கிடைத்த மனித சரீரத்தை இழக்கிறான்.
கிடைத்த ஜென்மத்தை வீணடித்து, மீண்டும் எம தர்மராஜன் முன் வந்து நிற்கும் போது எம தர்மராஜன்,
"எத்தனை தண்டனை முன்பு கொடுத்தாலும், வைகுண்டம் செல்லாமல், ஏன் மீண்டும் மீண்டும் இங்கேயே தண்டனைக்கு வருகிறாய்?"
என்று வருத்தத்தால், கடுங்கோபத்துடன், தன் கடமை படி மீண்டும் தண்டனை கொடுத்து முடிந்தவரை மகா பாபங்களை குறைத்து, மீண்டும் இந்த உலகில் பிறக்க (மனிதனாகவோ, விலங்காகவோ, மரமாகவோ) வழி செய்கிறான்.
பாபங்களுக்கு தண்டனை அனுபவித்தும், ஏன் மீண்டும் மீண்டும் ஜீவன் பாபம் செய்கிறான்? 
அதற்கு பெயர் தான் "வாசனை"

தண்டனை அனுபவித்தும், ஜீவனுக்கு அவன் "பாப குணங்கள் என்ற வாசனை விட்டு விலகுவதில்லை".

இந்த வாசனையே இந்த ஜீவனுக்கு மீண்டும் மீண்டும் செய்த பாபத்தையே செய்ய வைக்கிறது.

வாசனை என்றால் என்ன? புரியும் படியாக சொல்ல வேண்டுமானால்.

போலீஸ் ஸ்டேஷனுக்கு ஒருவன் வந்து "என்னுடைய வீட்டில் இருந்த நகையை யாரோ திருடி விட்டார்கள்… யார் திருடினார்கள் என்று தெரியவில்லை" என்று அழுதான்.

போலீஸ் இன்ஸ்பெக்டர், அருகில் இருந்த போலீஸ்காரரிடம் அந்த ஏரியாவில் உள்ள ஒரு கேடியின் பெயரை சொல்லி அழைத்து வரச் சொன்னார்.
போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்த அந்த கேடி, தலையை சொறிந்து கொண்டே, சிரித்துக் கொண்டு, போலீஸ் இன்ஸ்பெக்டரை பார்த்து "வணக்கம் ஸார்" என்று ஸலாம் போட்டான்.

போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபத்துடன் ஒரு அடி போட்டு, "என்னடா, நகையை திருடினாயா?" என்றார்.



உண்மையை ஒத்துக்கொண்டு, திருடிய நகையை திருப்பி கொடுத்தான்.

நகையை இழந்தவர், "எப்படி கண்டுபிடித்தீர்கள்?" என்று கேட்டார்

"இவன் ஒரு கேடி. இது போன்று பல முறை, இதே போல தவறு செய்து என்னிடம் மாட்டியிருக்கிறான். 
ஒவ்வொரு தடவையும் அடி கொடுத்தாலும் திருந்தாமல் மீண்டும் மீண்டும் செய்கிறான். 
பல தடவை இது போல அடி வாங்கி, பழகி போனதாலோ என்னவோ, ஜெயிலுக்கு போவதும், அடி வாங்குவதும் இவனுக்கு பழகிவிட்டது போல" என்று வருந்தவும் செய்தார்.

இது தான் "வாசனை".
அது போல, 
"பாபம் செய்ய வேண்டும் என்ற வாசனை", இந்த ஜீவனை விட்டு விலகுவதில்லை.
அதனால் தான், தண்டனை பல அனுபவித்தும், உலகில் துக்கமே அதிகம் அனுபவித்தும், பாப வாசனை இருப்பதால், பாபம் செய்து கொண்டே இருக்கிறான்.

இந்த பாப வாசனையை அழிக்க எம தர்மராஜனாலும் முடியாது.

இந்த பாப வாசனை அழிய வேண்டுமானால், இடை விடாது "ராம, ராம, ராம, ராம ..." என்று சொல்லுவதே இந்த ஜீவனுக்கு சித்த சுத்தி தரும்.
ராம நாமம் என்ற மந்திரம், இந்த ஜீவனின் இந்த பாப வாசனையை அழித்து, ராம, கிருஷ்ண பக்தியில் ஆழ்த்தி விடும்.
பாபம் செய்ய வேண்டும் என்ற ஆசையை அழித்து விடும்.

எம தர்மராஜன் "ராம, ராம, ராம, ராம …" என்று சொல்லும் ஜீவனை கண்டு பேரானந்தம் அடைகிறார்.

இந்த ஜீவன் இந்த உலகத்தை விட்டு செல்லும் போது, தானே வந்து, தன் தலை மேல் கால் வைத்து ஏறி வைகுண்டம் செல்லுமாறு வேண்டுகிறார்.

ஒரு ஜீவன் முக்தி அடைந்து விட்டது என்று ஆனந்தம் அடைகிறார் எம தர்மராஜன்.

sandhyavandanam Evening - Yajur - Hear and understand meaning of each sloka 

sandhyavandanam Afternoon - Yajur - Hear and understand meaning of each sloka 





sandhyavandanam Morning - Yajur - Hear and understand meaning of each sloka