Followers

Search Here...

Showing posts with label ஹிந்துக்கள். Show all posts
Showing posts with label ஹிந்துக்கள். Show all posts

Friday 16 October 2020

கோஹினூர் வைரம்....யாருடையது..? ஹிந்துக்கள் நம் சொத்தை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் - தெலுங்கானா

கோஹினூர் வைரம்… யாருடையது..?  

தெலுங்கானா : (மஹாகாளி சொத்து - ககாத்திய ஹிந்து ஆட்சி)

கோஹினூர் வைரம் - வாரங்கல், தெலங்கானாவில் இருந்த மஹாகாளி கோவிலை இடித்து, மாலிக் காபூர் கொள்ளை அடித்து, 1310ADல் கில்ஜியிடம் கொடுத்தான்.

அதற்கு பிறகு, கோஹினூர் வைரம் டில்லியில் இருந்தது.




டில்லி : (1310AD - 1749AD) 439yrs

கோஹினூர் வைரம் - அலாவுதீன் கில்ஜிக்கு பிறகு பலரிடம் கை மாறியது.

ஷிஹாபுதின் கில்ஜி (அலாவுதீன் கில்ஜி பிள்ளை)

குதுப்தின் முபாரக் (அலாவுதீன் கில்ஜி பிள்ளை)

குஷ்ரோ கான் (அலாவுதீன் படைத்தளபதி)

கியாசுதீன் துக்ளக் (அலாவுதீன் ஆட்சியில் பஞ்சாப் கவர்னராக வேலை பார்த்தவன்)

முகம்மது பின் துக்ளக் (கியாசுதீன் துக்ளக் மகன்)

பெரோஸ் ஷா துக்ளக் (முகம்மது பின் துக்ளக்கும், அவன் சகோதரிக்கும் பிறந்தவன்)

துக்ளக் கான் (பெரோஸ் ஷா துக்ளக் பேரன்)

அபு பக்கர் ஷா (பெரோஸ் ஷா துக்ளக் பேரன்)

நசுருத்தின் ஷா (பெரோஸ் ஷா துக்ளக் மகன்)

அலாவுதீன் சிக்கந்தர் ஷா (நசுருத்தின் ஷா மகன்)

நசுருத்தின் மகமூத் ஷா || (நசுருத்தின் ஷா மகன்)

கைசர் கான் (பெரோஸ் ஷா துக்ளக் ஆட்சியில் ஆரம்பித்து முல்தான் கவர்னராக இருந்தான். ஈரான், ஆப்கான், மங்கோலிய தேசம் அவரை கைப்பற்றி இருந்த தைமூர் என்ற இஸ்லாமியன் துணை கொண்டு, நசுருத்தின் மகமூத் ஷாவை கொன்று, தைமூரின் பெயரில் அடிமை (சயீத்) ஆட்சி ஆரம்பித்தது)

முபாரக் ஷா (கைசர் கான் மகன்)

முகம்மது ஷா (முபாரக் ஷாவின் தங்கை மகன்)

ஆலம் ஷா (முகம்மது ஷாவின் மகன்)

பஹ்லுல் லோடி (ஆப்கானில் லோடி என்ற இனத்தை சேர்ந்தவன்.. இவன் பஞ்சாபில் உள்ள சிர்ஹிந்த் என்ற ஊருக்கு கவர்னராக இருந்தான்)

சிக்கந்தர் லோடி (பஹ்லுல் லோடி மகன்)

இப்ராகிம் லோடி (சிக்கந்தர் லோடியின் மகன்)

பாபர் (கெங்கிஸ் கான், தைமூர் பரம்பரையில் வந்தவன். பாணிபட் போரில் இப்ராகிம் லோடியை கொன்று டெல்லியை கைப்பற்றினான்)

ஹுமாயுன் (பாபர் மகன்)

அக்பர் (ஹுமாயுன் மகன்)

ஜஹாங்கீர் (அக்பர் மகன்)

ஷாஹ்யர் மிர்சா (ஜஹாங்கீர் மகன்)

ஷாஜஹான் (ஜஹாங்கீர் மகன். ஷாஹ்யர் மிர்சா கொன்று சுல்தான் ஆனான்)

இவன் காலத்தில் தங்கத்தால் தனக்கு உருவாக்கப்பட்ட மயில் ஆசனத்தில் (peacock throne) இந்த கோஹினூர் வைரத்தை பதித்து வைத்து இருந்தான் ஷாஜஹான்.


ஔரங்கசீப் (ஷாஜஹான் மகன்)

பகதூர் ஷா (ஔரங்கசீப் மகன்)

ஜஹந்தர் ஷா (ஔரங்கசீப் மகன்)

பரூக்சியர் (பகதூர் ஷா பேரன், ஜஹந்தர் ஷாவை கொன்று சுல்தான் ஆனான்)

ரபிஉத் தரஜித் (பகதூர் ஷா பேரன், பரூக்சியரை கொன்று சுல்தான் ஆனான்)

ரபிஉத் தௌலத் (ரபிஉத் தரஜித் சகோதரன்)

நேகு சியர் (ஔரங்கசீப் பேரன்)

முகம்மது ஷா (பகதூர் ஷா பேரன்)

முகம்மது இப்ராஹிம் (ரபிஉத் தரஜித் சகோதரன்)

முகம்மது ஷா (பகதூர் ஷா பேரன். இவன் ஆட்சியில் 1772ல் அயோத்தியை 'பைசாபாத்' மாற்றினான்)

ஈரான் : (1739 AD - 1747 AD) 8yrs




ஈரான் தேசத்தை ஆக்கரமித்து அரசாங்கம் செய்து இருந்த நாதீர் ஷா,  1739ல் டெல்லியை தாக்கினான்

டெல்லியில் 6 மணி நேரத்தில் 30000 பொது மக்களை கொன்று விட்டான். கோட்டையை உடைத்து 'முகம்மது ஷா'வை பிடிக்க, பயந்து போய் டெல்லி கஜானாவை திறந்து விட்டான். 

அப்போது கோஹினூர் வைரத்தை தன் கைக்கு ஆபரணமாக போட்டு கொண்டு விட்டான். 

ஒரு நாள் டில்லியில் கொள்ளை அடித்த பணத்தை வைத்து, அடுத்த 3 வருடங்கள் நாதீர் ஷா, ஈரான் மக்களிடம் வரியே கேட்கவில்லை. 

ஒரு டில்லியின் சொத்தே எத்தனை இருந்துள்ளது என்று நினைத்து பார்க்கும் போது, பாரத தேசம் முழுவதும் எத்தனை இருந்து இருக்கும் என்று யோசியுங்கள்.

முகலாய அரசன் ஒரு ஈரான் அரசனிடம் தோற்றுவிட்டான், என்றதும், கிழக்கு இந்திய கம்பனி என்ற பெயரில் வந்து இருந்த பிரிட்டிஷ் கிறுஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் ஆட்சியை ஒடுக்க இதுவே சரியான நேரம் என்று கணித்தனர்.

முகலாய இஸ்லாமியர்கள் பலம் குறைய, அவர்களுக்கு கீழ் அடிபணிந்து ஆட்சி செய்த அனைத்து இஸ்லாமிய சிற்றரசனும் அந்த அந்த ஊருக்கு நாங்களே சுல்தான் என்று சொல்லி கொள்ள ஆரம்பித்தனர்.


ஆப்கான் : (1747 AD - 1809 AD) 62 yrs

1747ல் நாதீர் ஷாவை அவனது மெய்காப்பாளன் தலை சீவினான்.

மற்றொரு மெய்காப்பாளன் "அஹமத் ஷா அப்தலி" இவன் கையிலிருந்த வைரத்தை எடுத்து கொண்டான்.



இவனை காந்தகாரில் உள்ள அப்தலி இன மக்கள், காந்தகார் அரசனாக ஏற்றனர். இவன் பெஷாவர் (புருஷோத்தமபுறம்) வரை கைப்பற்றினான். 

7 முறை முகலாயர்களை தாக்கி டில்லியை கைப்பற்ற முயற்சித்தான்.

கடைசியாக முகம்மது ஷா டில்லியை இழந்து விடுவோமோ? என்ற பயத்தில், சிந்து தேசம், பஞ்சாப் (பாஞ்சாலம்) வரை கொடுத்து விட்டான்.

சண்டையே போடாமல், காந்தகார் அரசன் அஹமத் ஷா அப்தலிக்கு சிந்து, பஞ்சாப் கிடைத்தது.

பிறகு, நாதீர் ஷா வைத்து இருந்த ஈரான் தேசத்தை போரிட்டு கைப்பற்றி விட்டான்.

இவனை தொடர்ந்து வந்த இவன் பரம்பரை 1809 வரை கோஹினூர் வைரத்தை ஆப்கானில் வைத்து இருந்தனர்.

1809ல் ஆப்கான் அரசனாக இருந்த ஷா சஹுஜ் துர்ரானியை அவன் சகோதரன் மஹ்மூத் ஷா தூக்கி எறிந்து பதவியில் அமர்ந்தான். 

உயிருக்கு பயந்து கோஹினூர் வைரத்துடன் இந்தியாவுக்கு ஓடி வந்து, அப்போது லாகூரில் (லவ புரம்) இருந்த சீக்கிய அரசன் 'ரஞ்சித் சிங்'கிடம் அடைக்கலம் கேட்டான்.




மீண்டும் இந்தியாவுக்கு : (1809 AD - 1849 AD) 40 yrs

1813ல் காப்பற்றியதற்கு பதிலாக கோஹினூர் வைரத்தை வாங்கி கொண்டார்.

கோஹினூர் வைரத்தை "புரி ஜகன்நாத்" கோவிலுக்கு உயில் எழுதி கொடுக்க ஆசைப்பட்டார் ரஞ்சித் சிங். 


ஆனால் ரஞ்சித் சிங் உயில் எழுதாமலேயே, 1839ல் இறந்து விட்டார்.

1849ல் கிழக்கு இந்திய கம்பனி கிறிஸ்தவர்கள், சீக்கியர்களிடம் போர் செய்து, பஞ்சாப், லாகூரை கைப்பற்றினர்.

ரஞ்சித் சிங் மகன் துலீப் சிங் , "லாகூர் ஒப்பந்தம்" என்று பிரிட்டிஷ் அரசுக்கு அனைத்தையும் ஒப்படைத்து விட்டான்.

சீக்கிய அரசாங்க சொத்து, கோஹினூர் வைரம் அனைத்தையும் பிரிட்டனில் இருக்கும் விக்டோரியாவுக்கு அனுப்பி விட்டனர்.

துலீப் சிங் பிரிட்டனில் சென்று வசித்து, 2 கிறிஸ்தவ பெண்களை மணந்து, தானும் கிறிஸ்தவன் ஆகி, நாட்டை விற்று விட்டு, அங்கேயே குடியேறினார்.


Sunday 6 September 2020

ஹிந்து மதத்தை விட்டு விலகி போனவர்கள் என்ன செய்தார்கள்? அவர்கள் பரம்பரை மூலம் என்ன நடந்தது? பாரத மண்ணின் சரித்திரம் தெரிந்து கொள்வோம்.

ஒரு ஹிந்து மதம் மாறிய பிறகு, அவன் காலம் வரை கூட நல்லவனாக கூட இருக்கலாம்.




அவன் சந்ததியால் ஹிந்துக்களுக்கு ஏற்படுத்தும் அபாயங்கள் என்ன? தெரிந்து கொள்ள வேண்டாமா?


1000 வருட நம் சரித்திரமே இதற்கு சான்று..

கவனமுடன் படியுங்கள்..


268BCE சமயத்தில், ஆப்கான் முதல், பெரும்பாலான பாரத தேசத்தை ஆண்டு வந்தான் ஹிந்து மன்னன் "அசோக சக்கரவர்த்தி". 

பகவத் கீதை படிக்காத இவன், திடீரென்று மூளை கெட்டு, பௌத்த மதத்தை ஏற்றான்.

குறிப்பாக ஸ்ரீ கிருஷ்ணர், அரசனுக்கு குறிப்பாக சொன்ன, க்ஷத்ரிய தர்மத்தை விட்டான்.


போர் வீரர்களை பயிற்சியில் ஈடுபடுத்தாமல், வீரத்தை வளர்க்காமல், பௌத்த மடம் கட்டவும், காவல் காக்கவும் பயன்படுத்தினார்கள் பௌத்த மதம் மாறிய அரசர்கள். 


பலம் வாய்ந்த எதிரிகள் ஒரு பக்கம் வளர்ந்து கொண்டு இருக்க, 

பாரத நாட்டை காக்கும் அரசர்கள் பௌத்த மதத்தை ஏற்று, போர் வீரர்களை போதுமான போர் பயிற்சி இல்லாமல் வைத்து இருந்தனர்.


அசோக சக்கரவர்த்தியே பௌத்த தர்மத்தை கடைபிடிப்பதால், சிற்றரசர்கள் அனைவரும் மெதுவாக பௌத்த தர்மத்தை ஏற்க ஆரம்பித்தனர்.


சுமார் 1100 வருடங்கள் பாரத நாடு பௌத்த தர்மத்தில் மூழ்கியது. 

பகவத் கீதையை மறந்து, மொட்டை அடித்து சமாதானம் பேசிக்கொண்டு சாது தேசமாக ஆகி இருந்தது பாரத நாடு.

சிங்கம் போன்ற க்ஷத்ரிய அரசர்கள் உலவிய நாட்டில், மொட்டை தலைகள் அலைந்தது.


அரசன் வீரத்தை விட்டு விட்டு, சந்நியாசி போன்று பேசிக்கொண்டிருந்த அபாய காலம் அது


சரயு என்ற நதியின் ஒரு பிரிவாக அழைக்கப்பட்ட, "ஹரி நதி", ஆப்கான் தேசத்தில் ஓடிக்கொண்டு இருக்கிறது.

இன்று, அதை "ஹீரத்" என்று மாற்றி விட்டனர்

(https://en.m.wikipedia.org/wiki/Hari_(Afghanistan))


மதம் மாறிய வரலாற்றை பாருங்கள்...

1. அமீர் பாஞ்சி (Amir Bhanji) (ஆப்கான் ஹிந்து அரசன் ஆண்டு வந்தான். 9th Century)

2. His son அமீர் சூரி (பௌத்த மதத்துக்கு மாறினான். 10th Century.  

பௌத்த மடம் கட்டிக்கொண்டு இருந்த போர் வீரர்கள், போருக்கு தயாராக இல்லாமல் இருந்ததால், அரேபிய Saffarid இஸ்லாமிய படையெடுப்பில் பெரும் தோல்வியை சந்தித்தான். 

பௌத்த தர்மத்தை விட இஸ்லாம் வீரம் மிக்கது என்று மதம் மாறாவிட்டாலும், ஆப்கான் தேசத்தில் குர்ரான் படிப்பதை அனுமதித்தான்.).  கோர் (Ghor) என்ற ஆப்கான் நகரை தலைநகராக ஆண்டு வந்தான்.

இவன் மூலமாக கோரி பரம்பரை உருவானது.


3. His son முகம்மது இபின் சூரி (பௌத்த மதம், ஆனால் குரான் மூலம் வளர்க்கப்பட்டான். கஜினி படையெடுத்து, இவனை கைது செய்து, சிறையிலேயே கொன்றான். நாடு முழுவதும் இஸ்லாமிய ஆளுமைக்கு உட்பட ஆரம்பித்தது. 10th century)


4. His son அபு அலி இபின் முஹம்மது (இஸ்லாமிய வளர்ப்பு. ஆப்கான் மக்களை முழுவதுமாக  இஸ்லாமியர்கள் ஆக்கினான். 20 வருடங்களில் கோவில்கள், மடங்கள் தரைமட்டம் ஆனது. 1011 AD)


5. His Nephew அப்பாஸ் இபின் ஷித் (மாமா அபு அலியை கொன்று தான் அரசன் ஆனான். 1035 AD)


6. His son முகம்மது இபின் அப்பாஸ் (1060 AD)





7. His son குதுப் அல்தின் ஹசன் (1080 AD)

இவன் காலத்தில் தான் கர்நாடக தேசத்தில் மேல்கோட்டையில் உள்ள செல்லபிள்ளை என்ற பெயர் கொண்ட கோவிலை சூறையாடினான். 

அங்கு இருந்த நாராயணன் உற்சவ மூர்த்தியை தூக்கி சென்று விட்டான்.

இந்த கோவில் மதில் சுவர்களில் உள்ள உடைக்கப்பட்ட சிலைகள் நமக்கு கதை சொல்கிறது.

80 வயது நெருங்கி இருந்த ராமானுஜர் (1017ல் அவதரித்தார்) அந்த சமயத்தில் குலோத்துங்க சோழனின் (கிருமி கண்ட சோழன்) வைணவ வெறுப்பால், ஸ்ரீ ரங்கத்தை விட்டு வெளியேறி, நடந்து நடந்து, கர்நாடக தேசம் வந்து, மேல்கோட்டை அடைந்தார்.

அங்கு பெருமாள் இல்லை என்றதும், தானே டெல்லிக்கு சென்று சுல்தானிடம் கேட்டு, "வாராய் செல்ல பிள்ளாய்" என்று பெருமாளை கூப்பிட, அரசன் கண் எதிரே, சிலையாக இருந்த நாராயண விக்கிரகம் அவன் பெண் கையிலிருந்து குதித்து, ஓடி சென்று ராமானுஜர் அருகில் சென்றது.

பயந்து போன சுல்தான், "உடனே எடுத்து சொல்லுங்கள்" என்றான்.

பெருமாளின் இந்த லீலையை நேரில் காண வாய்ப்பு கிடைத்தும், சுல்தான் ராமானுஜர் பெரிய மாயக்காரர் போல என்று தான் நினைத்தான். 

"அவரை அனுப்பி விடுவதற்கு, இந்த சிலையை கொடுப்பதே வழி" என்று நினைத்தான்.

சுல்தானின் பெண், பெருமாளின் பிரிவு தாங்காமல், மேல்கோட்டை ஓடி வந்து, விரகத்தால் உயிரையே விட்டு விட்டாள்.

அந்த முஸ்லீம் பெண், இன்றும் அந்த உற்சவ பெருமாளின் கால் அருகே சிறு மூர்த்தியாக இருக்கிறாள்.

பெருமாளை அடைந்த அந்த முஸ்லீம் பெண்ணும், இன்று வரை பூஜிக்கப்படுகிறாள். 


8. His son இஸ் அல்தின் ஹுசைன் (1100 AD)


9. His son சயப் அல்தின் சூரி (1146 AD. இவன் ஆப்கான் தேசத்தை, தன் 6 சகோதரர்களுக்கு பிரித்து கொடுத்தான்)


10. His brother பஹா அல்தின் சம்

முஹம்மது கோரி(1149AD. ஆனால் அதே வருடம் இறந்து விட்டான். இவனுடைய 2 பிள்ளைகளே முகம்மது கோரி, முகம்மது கியாசுத்தின்)


11. His  another brother அலாவுதீன் ஹுசைன் (1149AD)





12. His son சயப் அல்தின் முகம்மது (1161AD)


13. முகம்மது கியாசுத்தின் (பஹா அல்தின் சம் முஹம்மது கோரியின் மூத்த மகன். 1163AD. 

இவனால் பாரத தேசத்தின் வங்காள தேசம் வரை சூறையாட பட்டது..  

பலர் கத்தி முனையில் மதம் மாற்றப்பட்டனர். 

இந்திய மண்ணின் இருண்ட காலம் ஆரம்பமான நேரம்...)

15. முகம்மது கோரி (பஹா அல்தின் சம்

முஹம்மது கோரியின் இளைய மகன். 1173AD).  

இவன் காலத்தில் தான் மஹாராஷ்ட்ர தேசம் வரை இஸ்லாமிய ஆக்கிரமிப்பு பெருமளவில் நடந்தது. 

பண்டரிபுரம் கோவிலை இடிக்க கூட வந்து விட்டான் இவன்.

ப்ரித்விராஜ் சவுஹான் என்ற ஹிந்து அரசன் இவனை பாரத மண்ணில் கால் பதிக்க விடாமல் தடுத்தான். 

முதல் படையெடுப்பில் கோரி படு காயம் அடைந்தான். ப்ரித்விராஜ் சவுஹான் மன்னித்து அனுப்பினான்.

விளைவு: இரண்டாவது முறை திடீர் தாக்குதல் செய்து, ப்ரித்விராஜ் சவுஹானை சிறை பிடித்து, கண்ணை பிடுங்கினான்.

ஆப்கான் கொண்டு சென்று சிறை வைத்தான்.

இவனை கேலி செய்து விளையாடிய கோரியை, கண் இல்லாமலேயே ப்ரித்விராஜ் சவுஹான் அம்பு எய்து கொன்றான். 

ஹிந்து அரசன் வீர மரணம் அடைந்தார். 

கோரியின் மரணம் ஆப்கானில் முடிந்தது. 


1000ADல் அமீர் சூரி என்ற ஒரு ஹிந்து மதம் மாறினான். 

அவன் நல்லவனாக கூட இருந்து இருக்கலாம்.

ஆனால், 

150 வருடங்கள் கழித்து 12வது தலைமுறையாக வந்த 'முகம்மது கோரி' ஹிந்துக்களை கொல்வதும், கோவிலை இடிப்பதும், கொள்ளை அடைப்பதையும் தன் கொள்கையாக கொண்டு இருந்தான்.

முகம்மது கோரி, ஆப்கான் தேசத்தை முழுவதுமாக ஒரு ஹிந்து, ஒரு பௌத்தன் கூட இல்லாத நகரமாக ஆக்கி, இஸ்லாமிய நாடாக ஆக்கியதை காட்ட, வெற்றி சின்னமாக , "ஜாம் மினார்" (minaret of jam) என்ற கோபுரத்தை அங்கு கட்டினான்.

மதம் மாறுபவன் நல்லவனாக கூட இருக்கலாம். 

ஆனால் அவன் பரம்பரை உருவாக்கும் விஷங்கள் எப்படிப்பட்டது? என்பதற்கு நம் 1000 வருட துன்ப காலங்களே சான்று.


கோரி பரம்பரை 1000AD முதல் சுமார் 1206AD வரை ஆப்கான் முதல் வங்காள தேசம் வரை, மராட்டிய தேசம் வரை ஆக்ரமித்து ஆண்டு வந்தது.. 

பிறகு, மாம்லுக் என்ற அடிமை பரம்பரை என்ற பெயரில் குதுப்தின் ஐபக், முஸ்உத்தின் ஐபக் 1296AD வரை ஆண்டனர். 

குதுப்தின் ஐபக், தன் எஜமானன் ஆப்கான் தேசத்தை இஸ்லாமிய நாடாக ஆக்கி, "ஜாம் மினார்" கட்டியது போலவே, டெல்லி நகரமும் இஸ்லாமிய தேசம் என்று காட்ட, "குதுப் மினார்" என்ற அதே போன்ற வடிவமைப்பில் ஹிந்து அடிமைகளை கொண்டே கட்டினான். 




பாரத தேசத்தை இஸ்லாமிய நாடாக ஆக்கி விட்டேன் என்று காட்ட "குதுப் மினார்" கட்டப்பட்டது.

ஹிந்துக்களை அழிக்கும் இவன் கனவு கனவாகவே போனாலும், இவன் கட்டிய இந்த ஸ்தூபம் இன்றும் பாரத மண்ணில் இருக்கிறது.


இதற்கு பிறகு கில்ஜி பரம்பரை இவர்களை துரத்தி ஆட்சியை பிடித்தனர்.

இதில் இரண்டாவது ஆட்சியாளனாக வந்த அலாவுதீன் கில்ஜி, ராஜஸ்தான், குஜராத் போன்ற ராஜ்யங்களை முழுவதும் இஸ்லாமிய மண்ணாக ஆக்க, பெரும் படைகளை திரட்டி கொண்டு போனான்.

இந்த சமயத்தில் தான் ராணி பத்மாவதி ராஜஸ்தான் கோட்டை தகர்க்கப்பட்ட செய்தி கேட்டதும், மானத்தை காத்து கொள்ள, அக்னி குண்டத்தில் பல ராஜ ஸ்த்ரீகளுடன் குதித்து உயிர் விட்டாள். 

குஜராத் தேசத்தில் போர் செய்த போது, ஹிந்து மக்கள் பலரை அடிமைகளாக ஆக்கினான் அலாவுதீன்.

அதில் மாணிக் என்ற ஹிந்து வீரனாகவும் இருந்ததை பார்த்து, அலாவுதீன் கில்ஜிக்கு ஒரு நட்பும் பரிவும் உண்டானது.


இந்த நன்றிக்கு, ஹிந்துவாக இருந்த மாணிக், தன்னை முஸ்லீமாக மாற்றிக் கொண்டான்.

ஹிந்து மதத்தை விட்டு விலகிய இவன் தான் "மாலிக் காபுர்".


மதம் மாறிய இவனையே படை தளபதியாக ஆக்கி, முதல் முறையாக ஆந்திர தேசமும், தமிழகமும் கில்ஜி காலத்தில் தாக்கப்பட்டது.


இஸ்லாமியனாக போன இந்த மாலிக் காபுர், ககாத்திய தேசத்து அரசனை நேரடியாக எதிர்க்க முடியாமல், கோவில்களுக்குள் நுழைந்து கொள்ளை அடித்து, பொது மக்களை கொன்று பெரும் கலவரத்தை உருவாக்கினான்.

ககாத்திய தேசத்தில் பல கோவில்களில் பெரும் கொள்ளை நடந்தது. அதில் ஒரு காளி கோவிலில் மஹாகாளி அணிந்து இருந்த வைர மாலைகளில் இருந்த ஒரு வைரம் தான் "கோஹினூர்" என்று அழைக்கப்படும் வைரம். 

இன்று இது பிரிட்டன் நாட்டில் உள்ளது.

தெலுங்கு தேசத்தின் சொத்து இது.


இது மட்டுமா மாலிக் காபுர் செய்தான்.. 

பிறகு காஞ்சிபுரம் வந்து, பிறகு பாண்டிய தேசத்துக்குள் நுழைந்து மதுரை மீனாட்சி கோவிலில் புகுந்தே விட்டான்.

அங்கிருந்த பட்டர்கள், மூல மூர்த்தியான சுந்தரேஸ்வரர் இருக்கும் இடத்துக்கு முன் கல் சுவரை எழுப்பி, வேறொரு பெரிய சிவலிங்கத்தை வைத்து விட்டனர்.


செருப்பு காலில் லட்சம் இஸ்லாமிய படையுடன் நுழைந்த மாலிக் காபுர் சிவலிங்கத்தை குத்தி தள்ளி விட்டான்.

(இன்றும் அந்த சிவலிங்கம் உள்ளது.. மதம் மாறியவன் என்னவெல்லாம் செய்வான் என்று கதை சொல்கிறது) 




பாண்டிய மன்னன் பொது மக்களை காக்க, கோவிலை காக்க, அடி பணிந்தான். 


பாண்டிய தேசத்து மொத்த கஜானாவையும், 1000 யானை படைகளையும் கொடுத்தான்.


மாலிக் காபுர், பாண்டிய தேசத்து எல்லையான ஸ்ரீ ரங்கம் வரை சென்றான். 


அங்கு கோவிலை சூறையாடி 13000 வைஷ்ணவர்களை கோவிலேயே கழுத்தை வெட்டி கொன்றான்.


உற்சவ மூர்த்தியான ரங்கநாதரை டெல்லிக்கே தூக்கி சென்று விட்டான்.

ரங்கநாதரை விளையாட்டு பொம்மையாக இவன் பெண்ணுக்கு கொடுத்து விட்டான்.

பேசும் தெய்வமான ரங்கநாதர், இவளிடம் பேசி கொண்டு இருக்க, 'பொம்மையை வைத்து கொண்டு இருக்கும் தன் மகள் பைத்தியம் ஆகி விட்டாள்' என்று பயந்தான்.


பிறகு வைஷ்ணவர்கள் சிலர் டெல்லிக்கே சென்று ரங்கநாதரை கேட்க, 'அபாயமான இந்த ரங்கநாத பொம்மை வேண்டவே வேண்டாம்' என்று கொடுத்து விட்டான். 

ஸ்ரீ ரங்கம் வந்து விட்டார் ரங்கநாதர்.


ஆனால், மீண்டும் கலவரம் ஏற்பட, அடுத்த 70 வருடங்கள் தமிழகம் முஸ்லிம்களால் இருண்டது.

கில்ஜியை தொடர்ந்து ஆட்சிக்கு வந்த துக்ளக் தமிழகம் வரை வந்து விட்டான். 

மேலும் அறிய.. இங்கே படிக்கவும்.


சுமார் 70 வருடங்கள், 

ஸ்ரீரங்கம் கோவில் மூடப்பட்டது. 

மீனாட்சி கோவில் மூடப்பட்டது. 

காஞ்சியில் இருந்த அத்தி வரதர் குளத்துக்குள் வைக்கப்பட்டு விட்டார்.


யார் ஹிந்துக்களை மீட்பார்கள்? என்ற கேள்வி பாரத தேசம் முழுவதும் பரவி, பெரும் கேள்விக்குரியானது. 


தெலுங்கு தேசத்தை பூர்வீகமாக கொண்டு, கர்நாடக தேசத்தின் ஹம்பியை தலைநகராக கொண்டு, விஜயநகர அரசர்கள் தலையெடுத்தார்கள்.


தமிழகம் 80 வருடங்கள், துக்ளக் ஆட்சியின் கீழ் உள்ள முஸ்லிம்களால் பெரும் ஆபத்தில் சிக்கி இருந்தது. 


ஹிந்துக்களை காக்க, வந்தார் கம்பண்ணா. வென்றார் தமிழகத்தை. மீண்டும் ஹிந்துக்கள் வாழ வழி செய்தார். 

அடைக்கப்பட்ட மூன்று கோவில்களும் மீண்டும் திறக்கப்பட்டன.


அழிக்க நினைத்தும், ஹிந்துக்கள் அழிந்து விடாமல், ஹிந்து தெய்வங்களே கம்பண்ணா ரூபத்தில் காத்தது.


ஒவ்வொருவரின் பரம்பரையை நன்றாக கவனித்தால், முகம்மது கோரியின் மூதாதையனும் ஒரு காலத்தில் ஹிந்துவாக இருந்தவன் என்று தெரிகிறது. 

இன்று மதம் மாறுபவன் விதைக்கும் விஷம் எப்படிப்பட்டது என்று சரித்திரத்தை கொண்டே நாம் அறியலாம்.

மாலிக் காபுர் தானே மதம் மாறியவன்.

தான் பிறப்பில் ஒரு ஹிந்து என்று தெரிந்தும், அவனே பெரும் கோவிலை இடித்தான்.


ஹிந்து மதம் விட்டு, சென்றவர்கள் எந்த காலத்திலாவது நமக்கு தீங்கு செய்வார்கள் என்பதற்கு, நாம் 1000 வருடங்கள் அனுபவித்த இழப்புகளே சான்று.


நம் சரித்திரத்தை அறிந்து கொள்வது போல, அந்நியர்கள் என்று அறியப்பட்ட கோரி, கில்ஜி போன்றவர்கள் யார் என்பதையும் நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

Saturday 11 April 2020

பன்றியை, ஆமையை தெய்வமாக ஏன் கும்பிடுகிறீர்கள்?... காரணம் என்ன?

ஒரு கிறிஸ்தவன் கேட்டான் :
உங்கள் ஹிந்து மதத்தில், பல தெய்வங்கள்.. 
அதில் ஒரு தெய்வம் பன்றி. 
இன்னொரு தெய்வம் ஆமை. 
இன்னொரு தெய்வம் மனிதன். 
இன்னொரு தெய்வம் நரனும் சிங்கமும் சேர்ந்த உருவம்...
இப்படி நீங்கள் தெய்வத்தை காட்டி கொள்வது, 
மனிதன் வேறு, தெய்வம் வேறு என்று காட்டவா?
மனித சக்தி வேறு? தெய்வ சக்தி வேறு என்று காட்டவா?...
கேட்ட கிறிஸ்தவன் கேலிக்காக கேட்காமல், உண்மையான சந்தேகத்துடனேயே கேட்டான்.
தெரிந்து கொள்ளும் ஆசையில் தான் கேட்டான்.




மகான்கள் நேர்மையாக, உண்மையிலேயே தெரிந்து கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுபவனுக்கு, நேரடியாகவோ, அனுபவ ரீதியாகவோ கட்டாயம் பதில் கிடைக்க செய்வார்கள்.. சொல்வார்கள்..

குருநாதர் சொல்கிறார் :
"மனிதன் வேறு தெய்வம் வேறு" என்று காட்டுவதற்காக இப்படி சொல்லப்படவில்லை.
இந்த அவதாரங்கள் கற்பனையும் அல்ல.
ஒவ்வொரு சமயத்தில், ஒவ்வொரு காரணத்துக்காக இது போன்ற அவதாரங்கள் நடந்தது.

"பன்றி" முகத்தில் பகவான், "க்ஷத்ரியனாக" பகவான், "ப்ராம்மணனாக" பகவான், "சண்டாளனாக" பகவான், "ரிஷியாக" பகவான் 
என்று பல வித அவதாரம் பகவான் செய்தார் என்பது ஒரு புறம் சத்தியமாக இருந்தாலும்,
"பகவான் எந்த ரூபத்திலும் வர சக்தி உடையவர்.. அவர் உன் கண் எதிரே கழுதையாகவும் வந்து நிற்பார், பிராம்மணனாகவும் வந்து நிற்பார், அரசனாகவும் வந்து நிற்பார்"
என்று மனிதனை நிதானிக்க செய்கிறார்.

இந்த உணர்வு தான், ஹிந்துக்களுக்கு ஜீவ காருண்யத்தை ஊட்டுகிறது.

"கல்லை கல் என்று மட்டும் பார்க்காதே! 
ஆடு மாடு வந்தாலும் மிருகமாக மட்டும் பார்க்காதே ! 
தெய்வத்தால் எப்படியும் வர முடியும் என்று அறிந்து கொள்! எதையும் அலட்சியம் செய்து விடாதே!!" என்று  மனிதனை நிதானிக்க செய்கிறது.

கல்லை பார்த்தாலும், மரத்தை பார்த்தாலும், விலங்கை பார்த்தாலும், மனிதனை பார்த்தாலும், "அனைத்துக்குள்ளும் பரமாத்மா இருக்கிறார்" என்ற அனுபவத்தை கொடுக்கிறது.

"விலங்கு, பயிர்கள் எல்லாம் மனிதன் தின்பதற்கே" என்ற எண்ணம் ஹிந்துக்களுக்கு கிடையாது.
அப்படி இருந்தால் அவன் வழிதவறி போன ஹிந்து, என்றே சொல்லி வருத்தப்பட வேண்டும்.

"பகவான் எந்த ரூபத்திலும் வர சக்தி படைத்தவர்" என்கிற போது, ஹிந்துக்கள் யாரிடத்திலும், எதனிடத்திலும் இயற்கையாகவே மரியாதையோடு பழகுகிறார்கள்.

பகவான் ஒருவர் தான். 
பகவான் ரூபம், குணங்களை கடந்தவர் தான். 
அத்வைதம் "இதை தானே சொல்கிறது".

ஆயிரம் கைகளால் செய்ய வேண்டியதை, கைகள் இல்லாமலே செய்து விடுவார் பகவான்.
ஆயிரம் கண்கள் சேர்ந்து பார்க்க வேண்டிய காட்சிகளை, கண்கள் இல்லாமலேயே பார்த்து விடுவார் பகவான்.

பரமாத்மா கிருஷ்ணராக அவதாரம் செய்த போது, ஹஸ்தினாபுரத்தில் திருத்ராஷ்டிரன் அரண்மனையில் திரௌபதி "கோவிந்தா" என்று அலற, துவாரகையில் இருந்த கண்ணன் கேட்டார்.

உத்திர பிரதேசம் எங்குள்ளது? துவாரகை எங்குள்ளது?

"கடவுள் இருக்கிறார். அவர் அவதாரம் செய்ய தேவையில்லை. 
இருந்த இடத்திலேயே இருந்து கொண்டு நம்மை ரக்ஷிக்கிறார்" 
இது போன்ற போதனைகள் புதிதான விஷயமில்லையே ஹிந்துக்களுக்கு.
கிருஷ்ண பரமாத்மா, திரௌபதி அலறியதை பல கிலோ மீட்டர்  தள்ளி இருந்தும் கேட்டாரே! அது மட்டுமா,
வண்ண வண்ண புடவைகள் கைகள் இல்லாமலேயே கொடுத்தாரே!, 

ஹஸ்தினாபுரம் வரை நடந்து செல்லாமலேயே, துவாரகையில் இருந்த படியே கொடுத்து, அவள் மானத்தை காப்பாற்றினாரே!.
கிருஷ்ண அவதார காலத்திலேயே, தான் பகவான், தனக்கு கை இல்லாமலேயே கொடுக்க முடியும், கண் இல்லாமலேயே பார்க்க முடியும், கால் இல்லாமலேயே பயணிக்க முடியும் என்று காட்டினாரே!

அஸ்தினாபுரம் பகவான் வராமலேயே ரக்ஷித்து விட்டாரே!.
தெய்வம் வர தேவை இல்லை. அங்கிருந்தபடியே ரக்ஷிப்பார் என்று இதை தானே மற்ற மதங்கள் சொல்கிறது... ஹிந்துக்களுக்கு புதிதில்லையே!.

பின்பு ஏன் பகவான் அழகான கிருஷ்ண ரூபத்தை, ராம ரூபத்தை ஏற்றார்? பகவான் உருவம் எடுத்து கொள்வது பக்தன் பார்த்து ரசிப்பதற்காக தான்.

"பகவானுக்கு உருவம் இல்லை" என்று நினைப்பவனுக்கு,  மறைந்தே இருக்கிறார். அவனுக்கு காட்சி
கிடைப்பதில்லை.

பொதுவாக ஹிந்துக்கள் ரசிகர்களாக இருக்கின்றனர்.

"பகவான் சர்வ சக்தி வாய்ந்தவர்" என்று ஒரு பக்கம் பேசி விட்டு, இன்னொரு பக்கம் "அவர் உருவம் தரிக்க மாட்டார்" என்று சொல்வதே தெய்வத்தை அவமானப்படுத்தும் பேச்சாகும்.
மனிதனுக்கு வழிகாட்ட ராமபிரானாக பரமாத்மா அவதரித்தார். 
மனிதனுக்கு தர்மத்தை காட்ட, மனிதனாக தானே அவதரித்து ஆக வேண்டும்.



மனிதனாக அவதரித்தும் தெய்வமாகவே இருந்து காட்டினார் கிருஷ்ண அவதாரத்தில்.
பிறந்த போதே "என்னை கோகுலத்தில் விடுங்கள்" என்று பேசினார். சாதாரண குழந்தை பேசுமா?
7 வயதில் மலையை சுண்டு விரலால் தூக்கி விட்டார். சாதாரண 7 வயது குழந்தை மலையை தூக்க முடியுமா?
இவர் செய்த எந்த செயலுமே பிரமிக்க தக்கதே தவிர, நாமும் செய்ய முடியாதது.. தெய்வம் தெய்வமாகவே இருந்தார். அனைத்து சக்திகளையும் காட்டினார்.
மோக்ஷம் அடைய பகவத் கீதையை உபதேசித்தார்.
சக்தியுள்ள தெய்வத்துக்கு, மனிதனாக மட்டும் தான், வர முடியுமா? இல்லையே..
நாயாக வந்தார் பாண்டுரங்கன்..
"வந்திருப்பது பகவான்" என்று  நாமதேவர் கண்டுபிடித்து விட்டார்.

கழுதை ரூபத்தில் வந்தார் பகவான், ஏகநாதர் கண்டுபிடித்து விட்டார்.
பிராம்மண ரூபத்தில் தத்த்ராத்ரேயர், பரசுராமர், வாமனன், வியாச ரிஷி போன்ற ரூபங்களில் வந்தார்.
'தெய்வம் என்றால் கிரீடம் தானே வைத்து இருக்கும்?' என்று ஏமாறாமல், தெய்வம் எப்படி வந்தாலும், பாரத மக்கள் கண்டுபிடித்தனர்.
க்ஷத்ரியன் போல, கிரீடம், வாள், அம்பு வில் எடுத்து ராமபிரானாக வந்த போதும்,
க்ஷத்ரியன் போல, சக்கரம் எடுத்து கிருஷ்ண பரமாத்மாவாக வந்த போதும் பாரத மக்கள் கண்டுபிடித்தனர்.

"தெய்வம் அவதரிக்க முடியாது, தெய்வத்துக்கு அவதரிக்க சக்தி இல்லை, தேவையும் இல்லை" 
என்று நினைப்பவர்களால், தெய்வ அவதாரம் நிகழ்ந்தாலும் உணர முடிவதில்லை.

வராக, கூர்ம, ராம அவதாரங்களை வழிபடும் போது, "பகவான் எந்த ரூபத்திலும் வருவார்" என்ற சிந்தனை, ஹிந்துக்களுக்கு சாதாரணமாகவே ஏற்பட்டு விடுவதால்,
மனித குணத்துக்கு மீறிய குணங்கள் கொண்டவர்கள் பிறக்கும் போதே, ஹிந்துக்களால் ஒரு கால கட்டத்தில், அவன் 'அசுரனா? தேவனா? ரிஷியா? ஸித்தனா? சிவபெருமானா? அல்லது சாக்ஷாத் அந்த நாராயணனா?'
என்று புரிந்து கொள்ள முடிகிறது.

"எதுவாகவும் பகவான் வர முடியும்" என்ற இந்த ஞானம் ஹிந்துக்களுக்கு இருப்பதாலேயே, தேவர்களும், சில சமயம் அசுரர்களும், ரிஷிகளும், சிவபெருமானும், நாராயணனும் பாரத மண்ணில் அவதரித்து கொண்டே இருக்கிறார்கள்.

"தெய்வம் வரவே வராது" என்று தீர்மானித்து விட்டவர்களிடம்,
"தெய்வம் இப்படி மட்டும் தான் இருப்பார்" என்று முடிவு கட்டி விட்டவர்களிடம், "தெய்வங்கள் வருவதே இல்லை".

அவர்கள் செய்யும் புண்ணிய கர்மாவுக்கு ஏற்ப பலனையும், 
அவர்கள் செய்யும் பாப கர்மாவுக்கு ஏற்ற பலனையும் கொடுத்து விட்டு, 
மீண்டும் மீண்டும் பிறந்து கொண்டே இருக்கிறார்கள்.
மோக்ஷம் இவர்களுக்கு இப்போது இல்லை என்று சம்சார உலகில் உழன்று கொண்டே இருக்கிறார்கள்.

பாரத மண்ணில் தெய்வ அவதாரம், தேவ அவதாரம், ரிஷிகளின் அவதாரம், சித்தர்களின் அவதாரம் நிகழ்ந்து கொண்டே இருப்பதற்கு காரணம் இதுவே... 

தெய்வத்தை பார்க்க தெரிந்தவனிடம், தெய்வமும் விளையாட ஆசைப்படும்.

கல் என்று நினைத்தால், கல்லுக்குள் தெய்வம் வருவதில்லை.

"கல்லுக்குள் தெய்வம் வரும்" என்று நினைக்கும் ஹிந்துவுக்கு,
"சக்தி உள்ள தெய்வம் அவனுக்காக கல்லுக்குள் பிரவேசித்து" அவன் நம்பிக்கையை வளர்க்கிறது.




ஹிரண்யகசிபு தானே கல், மண் கொண்டு கட்டிய தூணை காட்டி,
"இந்த தூணில் உன் நாராயணன் இருக்கிறானா?" என்று கேட்கிறான்.
அவன் சொல்வது உண்மைதான். அவன் கட்டிய தூண் தான். அது கல் தான்.
ஆனால், "அந்த தூணிலும் பரமாத்மா இருக்கிறார்" என்று அவன் பிள்ளை பிரகலாதன் சொல்ல,
பக்தன் சொன்ன சொல்லுக்காக, பகவான் தன்னை கல்லுக்குள் பிரவேசித்து கொண்டு நரசிம்மமாக வெளிப்பட்டார்.

கல், தெய்வமா? இல்லை.
ஆனால், ஒரு பக்தன் அந்த கல்லில் தெய்வத்தை கண்டு விட்டால், அந்த கல்லிலும் தெய்வம் வருகிறார்.

"தெய்வம் உண்டு" என்று சொல்லி, ஆனால் "தெய்வத்துக்கு இந்த சக்தி கிடையாது, அவர் இப்படி பக்தனுக்காக வர மாட்டார்" என்று சொல்வதே வழிபடும் தெய்வத்தை இகழும் செயலாகும்.
தெய்வத்தை சிறுமைப்படுத்துவதை ஹிந்துக்கள் ஏற்றுக்கொள்வதில்லை.

ஹிந்துக்கள் பரந்த மனம் கொண்டதற்கு காரணமும் இதுவே.
அதிதியையும் தெய்வமாக வழிபடும் வழக்கம் ஏற்பட்டதற்கு காரணமும் இதுவே.
பசுவை தெய்வமாக வணங்குவதும் இதன் காரணமே.
யாரை பார்த்தாலும் கை கூப்பி வணங்கும் காரணமும் இதுவே.

"தானே அனைத்துமாக இருக்கிறேன்" என்று பரமாத்மா நாராயணன் காட்டுவதை, ஹிந்துக்கள் புரிந்து கொள்ள முடிவதால், எதை பார்த்தாலும், யாரை பார்த்தாலும் வணங்குகிறார்கள்.

குருவே துணை.
இது அந்த கிறிஸ்தவனுக்கு புரிந்ததோ இல்லையோ!!..
ஹிந்துக்களுக்கு நம் பெருமை புரிந்து கொள்ள வாய்ப்பாக அமைகிறது.

வாழ்க நம் குருநாதர்.
வாழ்க ஹிந்துக்கள்.
வாழ்க நம் தெய்வங்கள்.

Wednesday 31 July 2019

Thought for Hindus - ஹிந்துக்கள் சிந்தனைக்கு... 10

சனாதன தர்மத்தில் இருக்கும் ஹிந்துக்கள் சிந்தனைக்கு....






மேலும் படிக்க


Saturday 20 July 2019

Thought for Hindus - ஹிந்துக்கள் சிந்தனைக்கு...9

சனாதன தர்மத்தில் இருக்கும் ஹிந்துக்கள் சிந்தனைக்கு...





மேலும் படிக்க






Thought for Hindus - ஹிந்துக்கள் சிந்தனைக்கு...8

சனாதன தர்மத்தில் இருக்கும் ஹிந்துக்கள் சிந்தனைக்கு...





மேலும் படிக்க



Thought for Hindus - ஹிந்துக்கள் சிந்தனைக்கு...7

சனாதன தர்மத்தில் இருக்கும் ஹிந்துக்கள் சிந்தனைக்கு..






மேலும் படிக்க


Wednesday 15 May 2019

ஹிந்துக்கள் ஏன் கேலிக்கு ஆளாக வேண்டி உள்ளது?ஹிந்துக்கள் நெற்றியில் திலகம், பாரம்பரிய உடை அணிந்து, தெய்வ சம்பந்தமான விஷயங்களில் இருப்பது பற்றி ஒரு அலசல்... ஹிந்துக்கள் சிந்தனைக்கு...




ஆஃபீஸில் சேர்ந்து விட்டு, அதற்கான ஆடை அணியாமல் இருந்தால் அங்கு மரியாதை கிடைக்காது
போலீஸ் வேலையில் சேர்ந்து விட்டு, 'காக்கி துணி அணியமாட்டேன், க்ராப் செய்து கொள்ள மாட்டேன்' என்று சொன்னால், 'போடா வெளியே.. உனக்கு இங்கு வேலை கிடையாது' என்று அனுப்பி விடுவார்கள்..
கோர்ட்டில் வக்கீலாக இருந்து கொண்டு, அதற்கான ஆடை அணிய மாட்டேன் என்றால், உள்ளே அனுமதிக்கவும் மாட்டார்கள். மரியாதையும் கிடைக்காது.

கூர்க்கா வேலை செய்தாலும் அதற்கான ஆடை, ஒழுக்க விதிகள் சொல்லப்படுகிறது.
பள்ளி செல்லும் போது அதற்கான யூனிபார்ம் போட மாட்டேன், பனியன் போட்டு தான் வருவேன் என்று சொன்னால், பள்ளியில் சேர்த்து கொள்ள மாட்டார்கள்.
செருப்பு காலோடு சர்ச்சுக்குள் செல்லும் கிறிஸ்தவனுக்கு கூட, "பாதிரியார்" என்று ஆகும் போது, அதற்கான பாவாடையை அணிந்து கொள்கிறான். 
'ஊர் கேலி செய்யுமே!! அவமானமாக இருக்குமே!! ' என்று நினைத்து அதற்கான ஆடை அணியாமல் இருப்பதில்லை கிறிஸ்தவன்.

பாதிரியை பார்த்து கிறிஸ்தவ மக்களும் 'ஒய்.. பாவாடை' என்று கிண்டல் செய்வதும் இல்லை. பாதிரிக்கு கொடுக்கப்பட்ட உடை அது என்று வரம்பு தெரிந்து இருக்கிறார்கள்.
உலகமே நாகரீகம் என்ற பெயரில் அலைந்து கொண்டு இருக்க, இஸ்லாமிய பெண்கள் இன்றும் தங்களை, கருப்பு ஆடை கொண்டு மறைத்து கொண்டு தான் வெளியில் வருகின்றனர்.
'உலகத்தோடு ஆட்டம் பாட்டம் போட முடியவில்லையே!!' என்று தனக்குள் நினைத்தாலும், விதித்த ஒழுங்கு முறையை இன்று வரை அவர்கள் விடவில்லை.



மீசையை மழித்து, தாடி மட்டும் வைத்து உலகமே 'தீவிரவாதி' என்று பார்க்கும் அளவிற்கு போன நிலையிலும், 'அதற்கும் என் ஆடைக்கும் சம்பந்தம் இல்லை' என்று இஸ்லாமிய ஆண்கள் அவர்களுக்கு சொல்லப்பட்ட ஆடை ஒழுக்கத்தை கடைபிடிக்கின்றனர்.
'அடேய்.. தீவிரவாதி..' என்று நம்மை சொல்வானோ என்று இஸ்லாமியன் தனக்கு கொடுக்கப்பட்ட வேஷத்தை மாற்றிக்கொள்ளவில்லை. கவலைப்படவும் இல்லை.

ஒரு முல்லாவை பார்த்து, மற்ற இஸ்லாமியன் "மானத்தை வாங்காதே... ஊர் உலகம் போல ஜீன்ஸ் போட்டு, க்ராப் செய்து, ஷேவ் செய்து கொள், வேஷத்தை மாற்று" என்று சொல்வதும் இல்லை, கேலி செய்வதும் இல்லை.
ஆனால்,
ஒரு வேதியன், நெற்றியில் விபூதியும், குடுமியும், கச்சமும் கட்டி, கோவிலுக்கு பூஜைக்கு சென்றால், 'ஒய்.. குடுமி.. !! பூ வாங்கி போ' என்று ஹிந்துவே கேலி செய்கிறான். இப்படி கிண்டல் செய்பவனை மற்ற ஹிந்துக்கள் தடுத்து, மன்னிப்பு கேட்க செய்வதும் இல்லை.
எங்கே போகிறான் ஹிந்து?
ஹிந்துக்கள் அனைவருமே, ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, குழந்தையாக இருந்தாலும் சரி, நெற்றியில் விபூதியோ, சந்தனமோ, குங்குமமோ ஏதாவது இட்டு கொள்ள வேண்டும் என்று சொன்னாலும், இட்டுக்கொள்ள வெட்கப்படுகிறான்.
நெற்றியில் ஒன்றும் இல்லாத இவன் ஹிிந்துவா? கிறிஸ்தவனா? என்று குழம்பும் அளவுக்கு இவனே தன்னை காட்டி கொள்ள, மத மாற்றத்துக்கும் இடம் கொடுக்கிறான்.






பெண்கள் "பெரிது பெரிதாக நகம் வளர்க்க கூடாது, தலை விரித்து அலைய கூடாது, நெற்றியில் கண்ணுக்கு தெரியும் அளவுக்காவது குங்குமம் இட்டுக்கொள்ள வேண்டும்" என்று சொன்னால், இன்றைய பெண்களால் எதையுமே ஏற்க முடியவில்லை.
அதே சமயம், இஸ்லாமிய பெண்களுக்கு "முகத்தை காட்டவே அனுமதி இல்லை" என்று சொன்னாலும், இது நம் ஆசாரம் என்று வாழ்கின்றனர் இன்று வரை.

"நீ வழிபடும் தெய்வங்களே நெற்றியில் இட்டுக்கொண்டு உள்ளதே, உனக்கு என்ன?" என்று கேட்டால், 'ஊரார் ஏதாவது சொல்வார்களோ!!' என்று நினைக்கிறான்.
தன் தெய்வம் இட்டு கொள்ளும் திலகத்தை தானும் இட்டு கொண்டு, 'நான் உன்னை சேர்ந்தவன்' என்று சொல்லிக்கொள்ள ஆசை இல்லை. ஊரை மகிழ்விக்க ஆசைப்படுகிறான்.


"தெய்வங்கள் தன் செயலை பார்த்து மகிழ வேண்டும்" என்று நினைப்பதை விட, "உலகத்தில் தன்னை பற்றி என்ன சொல்வார்களோ?" என்று நினைத்து சுய மரியாதை என்ற பிரமையில், வாழ போகும் 100 வருட வாழ்க்கைக்காக, தெய்வ அனுகிரஹத்தை இழக்க துணிகிறான்.

கோவிலுக்கு வந்தால் மட்டுமாவது, "பாரம்பரிய ஆடையான வேஷ்டி, புடவை அணிந்து செல்" என்றாலும் கேட்பதில்லை.
"போலீஸ் வேலை சேர்ந்தால்", போலீஸ் ஆடை அணிய எதிர்ப்பு தெரிவிக்காமல், வாய் பேசாமல் ஒப்புக்கொள்ளும் இவன்,
"ஆஃபீஸ் சென்றால்", அதற்கான ஆடை அணிய எதிர்ப்பு தெரிவிக்காமல், வாய் பேசாமல் ஒப்புக்கொள்ளும் இவன்,
"கூர்க்கா வேலை செய்தாலும்" அதற்கான ஆடை அணிய எதிர்ப்பு தெரிவிக்காமல், வாய் பேசாமல் ஒப்புக்கொள்ளும் இவன், 
"மற்ற மதத்தவன்" அவன் கலாச்சார ஆடை, வேஷம் போட்டு அலைவதை பார்த்தும்,
தன் கோவிலுக்கு செல்லும் போது, "நான் ஏன் வேஷ்டி அணிய வேண்டும்? நான் ஏன் புடவை அணிய வேண்டும்? இந்த ஆசாரம் எதற்கு? அது எதற்கு?" என்று கேட்கிறான்.

ஆபிஸ், கோர்ட், கூர்க்கா வேலை செய்தால், "அந்த அந்த இடத்துக்கான ஆடை ஒழுக்கத்தில் இருக்க வேண்டாமா?" என்று வேதாந்தம் பேசும் இவர்கள்,
"கோவிலுக்கு செல்லும் போது வேஷ்டி கட்ட வேண்டுமா? புடவை கட்ட வேண்டுமா?" என்று கேட்க துணிகிறார்கள்..

'தான் அவமானப்படுவோமோ' என்ற பயத்தை மறைக்க, பேடித்தனத்தை மறைக்க,
லட்சக்கணக்கான வருடங்களாக இருக்கும் பாரத தேசத்தில் இருக்கும் ஒழுக்கத்தை கெடுக்க கூட துணிகிறான்.

உலக கிண்டலுக்காக கோவிலையும் கெடுக்க முயலுகிறான்.
ஆசாரத்தையும் அழிக்க முயலுகிறான்.

"கோவிலில் உள்ள மூல விக்ரஹத்தை நானும் தொட்டால் என்ன?" என்று கேட்கிறான்.
'உனக்கு வழிபட உன் வீட்டிலேயே அதே போல விக்ரஹம் செய்து வழிபட அனுமதி உள்ளதே!' என்று சொன்னாலும், பக்தி இல்லாத, பொறாமை மட்டுமே கொண்டுள்ள இவர்கள், 'ஏன் நான் கோவிலில் உள்ள சிவபெருமானை தொட கூடாது?' என்று ஆசாரத்தை கெடுக்க முயலுகிறார்கள்.
இது பக்தியா? பொறாமை அல்லவா இது !! 
இது போன்று பேசுபவர்களை  ஹிந்துக்கள் அடக்க வேண்டாமா?

'பக்தி தான் காரணம், பொறாமை இல்லை என்றால்' சிதம்பரம் கோவிலுக்கு அருகிலேயே, 1000 ஏக்கர் நிலம் வாங்கி, உலகிலேயே பெரிய கோவிலை தாங்களே கட்டி, உலகிலேயே பெரிய சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து தன் கையாலேயே பூஜை செய்யலாமே?.. யார் தடுத்தார்கள்?
அப்படி ஒரு பக்தி செய்தால், தெய்வம் அணுகிரஹம் கூட செய்யுமே... 

பொறாமையை லட்சியமாக கொண்டு, காலம் காலமாக உள்ள ஆசாரத்தை கெடுத்து, தானும் ஆசாரம் இல்லாமல் வாழும் இவர்களை என்ன சொல்வது? அடக்க பட வேண்டியவர்கள் அல்லவா இது போன்ற விஷமிகள்.

இப்படி ஆசாரத்தை கெடுக்க முயற்சித்து கொண்டும்,
'தன் ஆடைக்கு தகுந்தாற்போல கோவில் ஆசாரத்தை மாற்றுவேன்' என்று சொல்லி கொண்டும்,
தன்னை யாரும் கேலி செய்வார்களோ! என்று நினைத்து, இவன் தகப்பனார் வரை காத்து வந்த  அற்புதமான கலாச்சாரத்தை இவன் காலத்தோடு அழிக்க முயலுகிறான்.


பக்தன் இப்படி தாறுமாறாக சென்று கொண்டு இருக்க,
கோவிலில் மூல விக்ரஹ தெய்வத்தை தொட்டு அர்ச்சனை செய்ய பாக்கியம் உள்ள அர்ச்சகனும் தடம் புரண்டு ஓடுகிறான். இது அதைவிட வேதனையான விஷயம்,

தெய்வத்தை தொட்டு அர்ச்சனை செய்ய பாக்கியம் உள்ள "அர்ச்சகனுக்கு",

  • "வேதம்" தெரிந்து இருக்க வேண்டும்.
  • சிவ பெருமானை தொட்டு அபிஷேகம் செய்பவன் என்றால் ருத்ரம், நாயன்மார் பாசுரம் தெரிந்து இருக்க வேண்டும்.
  • பெருமாளை தொட்டு அபிஷேகம் செய்பவன் என்றால், புருஷ சூக்தம், ஆழ்வார் பாசுரங்கள் தெரிந்து இருக்க வேண்டும்.
  • எந்த தெய்வங்களை தொட்டு அலங்காரம் செய்ய அர்ச்சகனுக்கு அனுமதி உள்ளதோ, அந்த தெய்வத்திடம் அசையாத 'பக்தி' வேண்டும்.
  • பணத்தில் விரக்தியும், பக்தியில் ஆர்வமும் வேண்டும்.
  • நாவடக்கம் வேண்டும்.
  • இன்முகம் உள்ளவனாக, வரும் பக்தர்களை கடிந்து கொள்ளாதவனாக இருக்க வேண்டும்.
  • ஆயுஸில் அசைவம் தொடாத, சாத்வீக உணவே உண்பவனாக இருக்க வேண்டும்,
  • 'குடுமி' வைத்து இருக்க வேண்டும்.
  • 'கச்சம்' கட்டி இருக்க வேண்டும்.
  • வீண் பொழுது போக்காமல் தெய்வ சிந்தனையே உள்ளவனாக, அது சம்பந்தமான திவ்யமான நூலை படித்து கொண்டு இருக்க வேண்டும்

என்று அர்ச்சகனுக்கும் விதி உள்ளது.
இப்படிப்பட்ட அர்ச்சகன் தன்னை தொடும் போது, அந்த பக்தனான அர்ச்சகரிடம் பேசுகிறார் பெருமாள்.

ஒழுக்கம் இல்லாத வாழ்க்கை வாழ்ந்து,
குடுமி, கச்சம் இல்லாமல்,
வேதம் கற்காமல்,
ஒழுக்கமில்லாமல் வாழும் அர்ச்சகன் தொடும் போது,
அர்ச்ச அவதாரத்தில் உள்ள 'தெய்வங்கள் அருவெறுப்பு கொள்கிறார்கள்'.  
இதனால் பெரும் பாபத்தை சம்பாதிக்கிறான். குல நாசத்தை தனக்கே தோண்டிக்கொள்கிறான்.

அர்ச்ச அவதாரங்கள் செய்யும் தெய்வங்கள், ஆசாரங்களை மீறி, செய்யப்படும் ஒழுக்க கேடான செயல்களுக்கு சரியான தண்டனையை கொடுத்து விடுகிறார்கள்.
கோவிலில் உள்ள தெய்வங்கள் எதிர்பார்க்கும் முறைகளை கடைபிடிக்காமல்,
'ஏன்.. நான் இப்படி செய்தால் என்ன?..
நான் trouser போட்டு வந்தால் என்ன?
குடுமி இல்லாமல் பூஜை செய்தால் என்ன?, வேதம் ஓதாமல் மூல விக்ரகத்தை தொட்டால் என்ன?' 
என்று விதண்டா வாதம் செய்து தெய்வத்தை பழிக்கிறார்கள்.


மற்ற மதத்தவன் அவனவன் ஆடை ஒழுக்கத்தில் இருக்கிறானே, நாமும் இருந்தால் என்ன மோசம்? என்று நினைக்காமல் பேடியாக, உலகத்திற்கு பயந்து வாழ்கிறார்கள்.
வாழ்க்கை இழுக்கும் திசையெல்லாம் ஓடி, அடிமை வாழ்க்கை வாழ்கிறார்கள்.

கோவிலுக்கு வரும் பக்தர்களும் வேஷ்டி, புடவை கட்டிக்கொண்டு வருவதில்லை.
அர்ச்சகனுக்கும் குடுமி, கச்சம் இல்லை, வாயில் வேதமும் இல்லை, த்ரி கால சந்தியும் இல்லை.

இருவருக்குமே, தான் வழிபடும் தெய்வத்துக்கு பிடித்தமாதிரி வாழவேண்டும் என்றும் எண்ணம் இல்லை.

ஹிந்துக்கள் மற்றவர்களுக்காக வாழும் வரை, முதுகெலும்பு இல்லாதவரை, மற்றவர்கள் கேலிக்கு ஆளாக வேண்டியது தான்.

ஹிந்துக்கள் சிந்தனைக்கு...

Hare Rama Hare Krishna - Listen to Bhajan

Sandhya Vandanam -  Morning (With Meaning)



Sandhya Vandanam -  Afternoon (With Meaning)

Sandhya Vandanam -  Evening (With Meaning)