Followers

Search Here...

Friday 28 July 2023

பீஷ்மர் - 8 வஸுக்களின் அம்சமாகவே பிறந்தார். பீஷ்மரின் பிறப்பு ரகசியம் தெரிந்து கொள்வோமே! - வ்யாஸ மஹாபாரதம்

வியாஸரின் சிஷ்யர் "வைஸம்பாயனர்", ஜனமேஜயனுக்கு அவன் குடும்ப கதையை சொல்கிறார்.

சத்தியம் தவறாத, தோல்வியே அடையாத "மஹாபிஷக்" என்று பெயர் பெற்ற இக்ஷ்வாகு அரசன் ஒருவர் இருந்தார்.

इक्ष्वाकुवंशप्रभो राजासीत्पृथिवीपतिः।

महाभिषगिति ख्यातः सत्यवाक्सत्यविक्रमः।।

- வியாசர் மஹாபாரதம்

அவர் 1000 அஸ்வமேத யாகம் செய்து, 100 ராஜசூய யாகம் செய்து தேவேந்திரனை திருப்தி செய்து இருந்தார்.

அந்த அரசன் பூலோகத்தில் தேகத்தை விட்டு பிரிந்த பிறகு,  மேலுலகில் இருந்தார்.

सोऽश्वमेधसहस्रेण राजसूयशतेन च।

तोषयामास देवेशं स्वर्गं लेभे ततः प्रभुः।।

- வியாசர் மஹாபாரதம்


ஒரு சமயம் தேவர்கள் ப்ரம்ம லோகம் சென்று ப்ரம்ம தேவனை தரிசித்தனர்.

அங்கே ராஜ ரிஷிகளும் இருந்தனர். இந்த மஹாபிஷக் என்ற அரசரும் இருந்தார்.

ततः कदाचिद्ब्रह्माणमुपासांचक्रिरे सुराः।

तत्र राजर्षयो ह्यासन्स च राजा महाभिषक्।।

- வியாசர் மஹாபாரதம்


அப்பொழுது, நதிகளில் சிறந்தவளான கங்கை ப்ரம்மதேவனை தரிசிக்க வந்தாள்.

அப்போது, சந்திரன் போன்ற நிறத்தில் அவள் அணிந்திருந்த பட்டாடை சிறிது காற்றில் சிறிது விலகியது.

अथ गङ्गा सरिच्छ्रेष्ठा समुपायात्पितामहम्।

तस्या वासः समुद्धूतं मारुतेन शशिप्रभम्।।

- வியாசர் மஹாபாரதம்


உடனே அங்கிருந்த தேவர்கள் அனைவரும் தலை குனிந்து கொண்டனர்.

மஹாபிஷக் என்ற இந்த ராஜரிஷி மட்டும் கங்கையை பார்த்து கொண்டே இருந்தார்.

ततोऽभवन्सुरगणाः सहसाऽवाङ्मुखास्तदा।

महाभिषक्तु राजर्षिरशङ्को दृष्टवान्नदीम्।।

- வியாசர் மஹாபாரதம்

இதை கண்ட ப்ரம்ம தேவர், மஹாபிஷக்கை கடிந்து கொண்டார்.

பிரம்மதேவர், "நீ மனிதனாக பிறந்து, பிறகு மீண்டும் நல்ல லோகங்களை அடைவாய்.

மூடனே!  எந்த கங்கையை கண்டு உன் மனம் மயங்கியதோ, அதே கங்கையானவள் மனித லோகத்தில் உனக்கு பிடிக்காததை செய்ய போகிறாள்.

அவள் செயலை கண்டு உனக்கு எப்போது உனக்கு கோபம் வருமோ, அப்பொழுது நீ சாபத்திலிருந்து விடுபடுவாய்." என்று கடிந்து சொன்னார்.

सोपध्यातो भगवता ब्रह्मणा तु महाभिषक्।

उक्तश्च जातो मर्त्येषु पुनर्लोकानवाप्स्यसि।।

यया हृतमनाश्चासि गङ्गया त्वं हि दुर्मते।

सा ते वै मानुषे लोके विप्रियाण्याचरिष्यति।

यदा ते भविता मन्युस्तदा शापाद्विमोक्ष्यते।।

- வியாசர் மஹாபாரதம்


இப்படி சபித்ததும், மனுஷ்ய லோகத்தில் உள்ள ராஜ ரிஷிகளையும், அரசர்களையும் பார்த்த மஹாபிஷக், அங்கு ஆட்சி செய்து கொண்டிருக்கும் "பிரதீபன்" என்ற அரசனை தனக்கு தகப்பனாக ஏற்றார்.

स चिन्तयित्वा नृपतिर्नृपानन्यांस्तपोधनान्।।

प्रतीपं रोचयामास पितरं भूरितेजसम्।

- வியாசர் மஹாபாரதம்


மனதை கட்டுப்படுத்த முடியாமல் தன்னையே பார்த்து கொண்டிருந்த மஹாபிஷக்கை நினைத்து கொண்டே கங்கை திரும்பி சென்றாள்.

सा महाभिषजं दृष्ट्वा नदी दैर्याच्च्युतं नृपम्।।  

- வியாசர் மஹாபாரதம்

ஜனமேஜயா! 

அவள் செல்லும் போது, சொர்க்க லோகத்தில் தேவர்களில் ஒருவர்களான 8 வஸுக்கள் உடல் பொலிவு குன்றி, அறிவு கலங்கி நிற்பதை கண்டாள். உடனே அவர்களை பார்த்து, "ஏன் இப்படி நிறம் மாறி காணப்படுகிறீர்கள்? நீங்கள் நலம் தானே?" என்று விஜாரித்தாள்.

तमेव मनसा ध्यायन्त्युपावृत्ता सरिद्वरा।

सा तु विध्वस्तवपुषः कश्मलाभिहतान्नृप।।

ददर्श पथि गच्छन्ती वसून्देवान्दिवौकसः।

तथारूपांश्च तान्दृष्ट्वा प्रपच्छ सरितां वरा।।

किमिदं नष्टरूपाः स्थ कच्चित्क्षेमं दिवौकसाम्।

- வியாசர் மஹாபாரதம்


தேவர்களாகிய வசுக்கள், கங்கையை பார்த்து, "மஹா நதியே! நாங்கள் விளையாட்டாக வஸிஷ்டருக்கு செய்த சிறு தவறினால் இப்படி ஆகி இருக்கிறோம்.

முன்பு, நான் அறியாமல் சந்தியாவந்தனம் செய்து கொண்டிருந்த வஸிஷ்டருக்கு இடைஞ்சல் செய்தோம்.

உடனே அவர் கோபத்தினால், "நீங்கள் மானிட உலகத்தில் கர்ப்பவாசம் செய்வீர்கள்" என்று சபித்து விட்டார்.

வேத வாக்குள்ள அவர் என்ன சொன்னாலும் பலிக்கும். அதை மாற்றவும் இயலாது.

கங்கா தேவியான நீயே பூலோகத்தில் எங்களை புத்திரர்களாக பெற வேண்டும். மனித பெண் கர்ப்பத்தில் நாங்கள் வசிக்க மாட்டோம்." என்றனர். இப்படி 8 வஸுக்களும் கேட்டு கொண்டதும், "அப்படியே ஆகட்டும்" என்றாள் கங்காதேவி.

तामूचुर्वसवो देवाः शप्ताः स्मो वै महानदि।।

अल्पेऽपराधे संरम्भाद्वसिष्ठेन महात्मना।

विमूढा हि वयं सर्वे प्रच्छन्नमृषिसत्तमम्।।

सन्ध्यां वसिष्ठमासीनं तमत्यभिसृताः पुरा।

तेन कोपाद्वयं शप्ता योनौ संभवतेति ह।।

न तच्छक्यं निवर्तयितुं यदुक्तं ब्रह्मवादिना।

त्वमस्मान्मानुषी भूत्वा सूष्व पुत्रान्वसून्भुवि।।

न मानुषीणां जठरं प्रविशेम वयं शुभे।

इत्युक्ता तैश्च वसुभिस्तथेत्युक्त्वाऽब्रवीदिदम्।।

- வியாசர் மஹாபாரதம்


"மனிதர்களில் எந்த புருஷன் உங்களை உற்பத்தி செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?" என்று கேட்டாள்.

मर्त्येषु पुरुषश्रेष्ठः को वः कर्ता भविष्यति।

- வியாசர் மஹாபாரதம்


அதற்கு வஸுக்கள், "ப்ரதீபனுடைய பிள்ளையாக சாந்தனு என்னும் அரசன் பிறந்து பெரும் புகழ் பெறுவான். மனித லோகத்தில் அவன் மூலம் நாங்கள் வர நினைக்கிறோம்" என்றனர்.

प्रतीपस्य सुतो राजा शान्तनुर्लोकविश्रुतः।

भविता मानुषे लोके स नः कर्ता भविष्यति।।

- வியாசர் மஹாபாரதம்

உடனே கங்கை, "தேவர்களே! நீங்கள் என்னிடம் என்ன சொன்னேர்களோ, அதற்கு நான் சம்மதிக்கிறேன். அந்த அரசனுக்கும், உங்களுக்கும் விருப்பமான காரியத்தை நான் செய்வேன்" என்று சொன்னாள்.

ममाप्येवं मतं देवा यथा मां वदथानघाः।

प्रियं तस्य करिष्यामि युष्माकं चेतदीप्सितम्।।

- வியாசர் மஹாபாரதம்


உடனே வஸுக்கள், "மூன்று லோகங்களும் செல்பவளே! நீண்ட காலம் இந்த சாபத்தை நாங்கள் அனுபவிக்க விரும்பவில்லை. ஆதலால், உனக்கு பிறந்த பிள்ளைகளை பிறந்தவுடனே ஜலத்தில் போட்டு விட வேண்டும். புத்தியில்லாத நாங்கள் வஸிஷ்டர் சந்தியா வந்தனம் செய்து கொண்டிருந்த போது, அவருடைய பசுவை பிடிக்க விரும்பி முயற்சி செய்ய, அந்த ப்ரம்மரிஷியால் சபிக்கப்பட்டு இருக்கிறோம். அப்படி சபிக்கப்பட்ட எங்களை நீ உடனே விடுவித்து விட வேண்டும்" என்று கேட்டு கொண்டனர்.

जातान्कुमारान्स्वानप्सु प्रक्षेप्तुं वै त्वमर्हसि।

यथा नचिरकालं नो निष्कृतिः स्यात्त्रिलोकगे।।

जिघृक्षवो वयं सर्वे सुरभिं मन्दबुद्धयः।

शप्ता ब्रह्मर्षिणा तेन तांस्त्वं मोचय चाशु नः।।

- வியாசர் மஹாபாரதம்


இதை கேட்ட கங்காதேவி, "அப்படியே செய்கிறேன். ஆனாலும், (சாந்தனு) அரசனுக்கு பிள்ளையில்லாமல் செய்ய கூடாது. அவருக்கு ஒரு பிள்ளையாவது நிறுத்த வேண்டும். என்னிடம் புத்திரனை எதிர்பார்த்து சேர்ந்த அந்த அரசன் வீண் போக கூடாது" என்றாள்.

एवमेतत्करिष्यामि पुत्रस्तस्य विधीयताम्।

नास्य मोघः सङ्गमः स्यात्पुत्रहेतोर्मया सह।।

- வியாசர் மஹாபாரதம்


அதற்கு அந்த வஸுக்கள், "நாங்கள் ஒவ்வொருவரும் எங்கள் சக்தியில் 4ல் ஒரு பாகத்தை கொடுக்கிறோம். அந்த சக்தியுடன் உங்களுக்கும் அந்த அரசனுக்கும் பிரியமான புத்திரன் ஒருவன் நிலைப்பான். ஆனால், அவன் மனித லோகத்தில் சந்ததியை உருவாக்க மாட்டான். அதனால், உன்னுடைய வீரமிகு புத்திரனுக்கு புத்திரன் உண்டாக மாட்டான்" என்று சொன்னார்கள். இவ்வாறு கங்கா தேவியுடன் உடன்படிக்கை செய்து கொண்டு, வஸுக்கள் சென்றனர்.

तुरीयार्धं प्रदास्यामो वीर्यस्यैकैकशो वयम्।

तेन वीर्येण पुत्रस्ते भविता तस्य चेप्सितः।।

न संपत्स्यति मर्त्येषु पुनस्तस्य तु सन्ततिः।

तस्मादपुत्रः पुत्रस्ते भविष्यति स वीर्यवान्।।

- வியாசர் மஹாபாரதம்

Sunday 16 July 2023

சரபம் என்ற விலங்கு எப்படி இருந்தது? சரபங்களை யார் படைத்தார்? வ்யாஸ மஹாபாரதம் சரபத்தை பற்றி சொல்கிறது

சரபம் என்ற விலங்கு எப்படி இருந்தது? சரபங்களை யார் படைத்தார்?

पुलहस्य सुता राजञ्शरभाश्च प्रकीर्तिताः।

सिंहाः किपुरुषा व्याघ्रा ऋक्षा ईहा मृगास्तथा।।

- ஆதி பர்வம் (மஹாபாரதம் வியாசர்)

ப்ரம்மாவின் 6 மானஸ புத்ரர்களில் ஒருவர் புலஹர். 

இந்த மகரிஷி, தன் தபோ பலத்தால், 

சரபங்கள், சிங்கங்கள், (குதிரை உடம்பும், மனித முகமும் கொண்ட) கிம்புருஷர்கள், புலிகள், கரடிகள், ஓநாய்கள் போன்றவற்றை ஸ்ருஷ்டி செய்தார்.


இந்த சரபம் என்ற விலங்கு எப்படி இருந்தது? என்பதை, தமிழ்நாட்டில் உள்ள பல கோவில்களில் காண முடிகிறது.


இந்த சரபம் என்ற விலங்கு, இறக்கைகளுடன், எட்டு கால்களுடன், சிங்கம் மற்றும் யானையையும் கொல்லக்கூடிய வலுவுள்ள மிருகமாக சித்தரிக்கப்படுகிறது.


Saturday 15 July 2023

ஸ்வாயம்பு மனுவுக்கும் வைவஸ்வத மனுவுக்கும் உள்ள தொடர்பு... அறிவோம் மனு ஸ்மிருதி...

ஸ்வாயம்பு மனு, பிரம்மாவின் படைப்பையும், உலக ஶ்ருஸ்டியை சொன்னார்.. 

மேலும் விஷயங்களை, பிருகு முனிவர் தன்னிடம் கற்று தெரிந்து இருப்பதால, மேலும் பல தர்மங்களை பிருகு முனிவர் சொல்வார் என்று நியமித்தார்.


பிருகு முனிவர், மிகவும் உற்சாகத்தோடு, ரிஷிகளுக்கு சொல்ல ஆரம்பித்தார்.


स्वायम्भुवस्यास्य मनोः षड्-वंश्या मनवोऽपरे ।

सृष्टवन्तः प्रजाः स्वाः स्वा महात्मानो महौजसः ॥

- மனு ஸ்மிருதி

ஸ்வாயம்பு மனு, ஸ்ருஷ்டி தொழிலை மேலும் செய்ய, தன் வம்சத்தில் 6 பேரை ஸ்ருஷ்டி செய்தார்.


स्वारोचिष: च: उत्तम: च तामसो रैवत: तथा ।

चाक्षुषश्च महातेजा विवस्वत् सुत एव च ॥ 

- மனு ஸ்மிருதி

ஸ்வாரோசிஷன், உத்தமன், தாமஸன், ரைவதன், சாக்ஷுஷன், மஹாதேஜஸ் உடைய வைவஸ்வதனின் அம்சமாக வைவஸ்வதன் என்ற 6 பேரை படைத்தார்.