Followers

Search Here...

Showing posts with label Afghanistan. Show all posts
Showing posts with label Afghanistan. Show all posts

Tuesday 26 December 2017

மஹா பாரத சமயத்தில், ஆப்கானிஸ்தான், உஸ்பேகிஸ்தான், தஜிகிஸ்தான், கஜாகிஸ்தான் (Iran, Afghanistan, Uzbekistan and Tajikistan, Kazakhstan)

மஹா பாரத சமயத்தில்,
ஆப்கானிஸ்தான், உஸ்பேகிஸ்தான், தஜிகிஸ்தான், கஜாகிஸ்தான்
(Iran, Afghanistan, Uzbekistan and Tajikistan, Kazakhstan)


இந்த தேசங்கள் அனைத்தும் பாரத தேசமாக இருந்தது.

Afghanistan, Uzbekistan and Tajikistan போன்ற தேசங்கள் அனைத்தும் "காந்தார தேசம்" என்று அழைக்கப்பட்டது. 


அனைவரும் துரியோதனனின் பக்கம் நின்று போரிட்டனர்.
ராமாயண காலத்தில்,
பரதனின் தாயார் "கைகேயி" கேகேய நாட்டின் இளவரசி. 
கேகேய நாடு இன்றைய பாகிஸ்தான் தேசம்.

கேகேய நாடும், காந்தார நாடும் அருகருகே உள்ள தேசங்கள்.

ராமரின் தம்பி பரதன், "காந்தார தேசம்" என்ற பெரிய தேசத்தை அமைத்தார். மக்கள் வாழும்படி நகரை அழகாக அமைத்தார்.

மஹாபாரத சமயத்தில், இந்த தேசங்களில், பெரும்பாலானோர் "வாலிகா அல்லது பாலிகா" என்று அழைக்கப்பட்டனர்.
யார் வாலிகர்கள்? யார் மிலேச்சர்கள்? 
https://www.proudhindudharma.com/2018/04/MlechaVahlika.html படிக்கவும்

அன்றைய பாரத தேசத்தில், இந்த தேசங்களும் அடக்கம்.

அனைவரும் சனாதன தர்ம வழியில் வேத கலாச்சாரத்தின் படி வாழும் பரம்பரையில் வந்தவர்கள்.

வேத கலாச்சாரம் உள்ள இந்த பாரதத்தில் பிறந்தும், தன் முன்னோர்கள் வேத கலாச்சார படி வாழ்ந்தவர்கள் என்று தெரிந்தும், வேத கலாச்சாரத்திற்கு எதிராக எண்ணம் கொண்டு நடப்பவர்கள், குடி பழக்கம், மாட்டு மாமிசம் உண்ணும் பழக்கம், பச்சை அரிசியாக வாங்காமல், புழுங்கல் அரிசியை வாங்கி உண்பவர்களும், பொதுவாக வாலிகர்கள் என்று அழைக்கப்பட்டனர்.
அனைத்து தேசமும் பாரத நாடாக இருந்த சமயம் அது.




ஆப்கான் (Afghan) நாட்டில் உள்ள காந்தகார் (Gandahar) என்ற நாட்டின் பெண், த்ரிதராஷ்டிரனுக்கு மனைவி ஆனாள். இவளே "காந்தாரி".
இவள் வேத கலாச்சாரத்தில் உள்ளவள்.
இவள் மூத்த சகோதரன் "சகுனி".
ஒரு சமயம், திக் விஜயமாக சென்ற கர்ணன், "காந்தார" தேசத்தை கண்டு, இவர்கள் வாழும் முறையை கண்டு, "இவர்கள் யாவரும் வாலிகர்கள்" என்றான்.
இதன் காரணமாகவே, சகுனிக்கும், கர்ணனுக்கும் ஒரு வித கசப்பு உணர்வு கடைசி வரை இருந்தது.

பாகிஸ்தான் பகுதியில், சிந்து நதி ஓரம் உள்ள பஞ்சாப் தேசம், அன்று மாத்ர தேசம் என்ற பெயருடன் இருந்தது.

இங்கு உள்ள மக்கள், பல சமயம் வேத கலாச்சாரத்திற்கு எதிராக செயல்கள் செய்தனர். 
இந்த தேசத்தை ஆண்டு வந்தார் "சல்லியன்" என்ற அரசர். 
வேத கலாச்சாசரத்திற்கு எதிராக பல சமயம் இந்த தேச மக்கள் நடப்பதால், இவர்களையும் பல சமயம் வாலிகர்கள் என்று அழைத்தனர்.

பொதுவாக, வேத மார்க்கத்தை இகழ்பவர்கள், வாலிகர்கள் என்று கூறப்பட்டனர். (Convert)

வேத மார்க்க வழியில் நடப்பவனை, "நீ ஒரு வாலிகன்" என்று சொன்னால், அது ஒரு பெருத்த அவமானம்.

ஆப்கானிஸ்தான், உஸ்பேகிஸ்தான், தஜிகிஸ்தான் போன்ற தேசத்து அரசர்கள், குதிரைபடை கொண்டு போர் புரிவதில் வல்லவர்கள். 
இந்த தேசத்தில் உள்ள குதிரைகள் மிகவும் மதிப்பு உடையவையாக இருந்தன.




பீஷ்மரின் தந்தை சந்தனுவுக்கு ஒரு அண்ணன் இருந்தார். 
அவரின் செயல்கள் யாவும், வேத கலாச்சாரத்திற்கு எதிராகவும், மேலும் அரசாட்சி செய்யும் திறன் குறைந்தும் இருக்க, சந்தனு அரசனாக முடி சூட்டப்பட்டார். 
சந்தனு மகாராஜாவின், அண்ணனை பொதுவாக 'வாலிக அரசன்' என்று அழைத்தனர்.
இன்றைய பொழுதில், நாத்தீகன், ஆத்தீகன் என்று சொல்லி, இவன் கடவுள் மறுப்பாளியா, ஒத்துக்கொள்பவனா என்று அறிவது போல, வாலிகா என்பது "வேத கலாச்சாரத்தை" மீறி செயல் செய்பவர்களை குறிக்கும் ஒரு சொல்.

மஹாபாரத சமயத்தில், வியாச பகவானை பார்க்க நாரதர் வந்து பேசும் போது, வாலிகர்களை பற்றி சொல்லும்போது, 
"வாலிகர்கள் (convert) இந்த பூமிக்கு ஒரு கறை போன்றவர்கள்" என்று சொல்கிறார்.
இவர்களால் நல்லவர்கள் நிம்மதியாக தர்மத்தில் வாழ முடியாது. தானும் கெட்டு, மற்றவர்களையும் கெடுப்பவர்கள் என்கிறார்.

துரியோதனனும் அவன் சகோதரர்களும், தன் குரு 'துரோணர்' மற்றும் 'க்ருபர்' முன்னிலையில் தாங்கள் கற்ற வித்தைகளை செய்து காட்டி கொண்டு இருந்தனர். 
அந்த சமயத்தில் இந்த வாலிக அரசரும் (சந்தனுவின் சகோதரர்), உடன் இருந்து பார்த்தார்.

யுதிஷ்டிரரின் ராஜசுய யாகம் நடத்த மற்ற தேச அரசர்கள் ஒத்துக்கொள்ள வேண்டும். 
தன் சகோதரர்களை பல தேசங்கள் அனுப்பி சம்மதமோ, அல்லது போரில் ஜெயித்தோ வர சொல்லி அனுப்பினார்.

யுதிஷ்டிரரின் தம்பி "நகுலன்" இந்த வாலிக அரசரிடம் 'போர் புரிய வேண்டுமா? அல்லது உங்களுக்கு யுதிஷ்டிரரின் ராஜசுய யாகம் நடக்க ஆட்சேபனை ஏதும் இல்லையா?' என்றார்.
வாலிகா அரசர், 'போர் தேவையில்லை, யுதிஷ்டிரரின் ராஜா சுய யாகம் சிறப்பாக நடக்கட்டும்' என்று கூறி, முழுவதும் தங்கத்தில் ஆன தேரை பரிசாக தந்தார். 
யுதிஷ்டிரரின் ராஜசுய யாகத்தில் கலந்து கொண்டார்.

கர்ணனும், துரியோதனனும் அவன் தம்பி துச்சாதனனும், குல பெண் "திரௌபதி"யை சபையில் அவமானப்படுத்த முயற்சி செய்தபோது, எதிர்க்காமல், அமைதியாக உட்கார்ந்து இருந்தார், வாலிகா அரசர்.

மஹா பாரத போரில், பெரும்பாலான வாலிகா அரசர்கள், துரியோதனன் பக்கம் நின்று போர் புரிந்தனர்.

காந்தார தேச படைகள், "சகுனி"யின் பின்னால் நின்று போர் புரிந்தனர்.




13ஆம் நாள், போரில் பலரும் சேர்ந்து அர்ஜுனனின் மகன் 'அபிமன்யு'வை கொன்றனர். 
இந்த சமயமும் துரியோதனன் செயலை எதிர்க்காமல், அமைதியாக இருந்தார் வாலிகா அரசர்.

15ஆம் நாள் போரில், பீமன் தன் கதையால் ஓங்கி அடித்து, வாலிக அரசர் தலையை பிளந்தார்.

வாலிகா அரசரின் இரு புதல்வர்கள் 'சோமதத்தன், புரிச்ரவஸ்' இருவரும் 'சாத்யகி'யினால் கொல்லப்பட்டனர்.

மஹா பாரத போரில், பீஷ்மர், துரோணர் வீழ்ந்த பின், அங்க அரசன் கர்ணன் தலைமை ஏற்றான். 
கர்ணனுக்கு, தேர் ஓட்ட மாத்ர அரசர் - சல்லியன் (punjab in today's pakistan) நியமிக்கப்பட்டார். இது சல்லியனை அவமானம் படுத்துவதாக இருந்தது.

போர் புரியும் சமயத்தில், இருவருக்கும் பல வாக்குவாதம் ஏற்பட்டது.
ஆத்திரம் கொண்ட கர்ணன், ஓரு சமயம், த்ரிதராஷ்டிரன் சபையில், வேதம் கற்ற ப்ராம்மணர்கள், 'எந்த ஒரு காலத்திலும் வாலிகர்களுடனும், அதே போன்ற செயல்களில் ஈடுபடும் மாத்ர தேசத்தவர்களுடனும் சகவாசம் வைத்துக் கொள்ள கூடாது' என்று கூறியதை நினைவு கூறி, 'நீ அந்த தேச அரசன் தானே!' என்றான்.

வேத மார்க்க வழியில் நடப்பவனை, நீ ஒரு வாலிகன் என்று சொன்னால், அது ஒரு பெருத்த அவமானம். சல்லியன் பெரும் அவமானம் கொண்டார். இப்படிப்பட்ட வாக்குவாதங்களின் காரணமாக, இக்கட்டான சமயத்தில், தேர் குழியில் சிக்கி கொண்ட சமயத்தில், சல்லிய அரசர், தேரை விட்டு இறங்கி சென்று விட்டார். 
கர்ணன் அர்ஜுனன் பொழிந்த அம்பு மழையில் மடிந்தான்.




18ஆம் நாள் யுத்தத்தில், காந்தார அரசன் சகுனி, கடைசியில், சகாதேவனால் அடித்து விழ்த்தப்பட்டான். 
சகுனியின் மகன் "உலுகன்" என்பவனும் சகாதேவனால் மரணத்தை தழுவினான்.

போர் முடிந்து, அஸ்வமேத யாகத்திற்காக திக்விஜயம் புறப்பட்ட அர்ஜுனன், காந்தார தேசம் செல்லும் போது, சகுனியின் இன்னொரு மகனுடன் சண்டையிட்டான். 
இறுதியில் தோற்கடித்து, காந்தார தேசத்தை, யுதிஷ்டிரரின் அரசாட்சியின் கீழ் கொண்டு வந்தான்.