Followers

Search Here...

Showing posts with label தான. Show all posts
Showing posts with label தான. Show all posts

Friday 15 March 2019

சாம, தான, பேத, தண்ட நீதிகள் எப்படி கடைபிடிக்கப்பட்டது? தாய் மொழிகள், சமஸ்க்ரித மொழி அழிந்து கொண்டு வருகிறது. இதற்கு காரணம் யார்?

"சாம, தான, பேத, தண்ட" என்ற ராஜ நீதிகள் (law) பாரத தேசத்தில் கடைபிடிக்கப்பட்டது.
சரியாக புரிந்து கொள்ளப்படாமல் இருந்தாலும், இன்று வரை பாரத தேசம் கடைபிடிக்கின்றது.


ஹிந்துக்களுக்கு "யோகா, தியானம், கடவுளை வழிபடுவது" மட்டும் தான் தெரியும் என்று நினைத்து விட கூடாது.
"உலகையே ஒரு குடையில் ஆண்ட" மகாவீரர்களை பெற்றெடுத்ததும் இந்த பாரத மண் தான்.

இந்தியாவை தேடி, நாயாக கடலில் அலைந்து திரிந்து தான், "கொலம்பஸ்" தவறுதலாக அமெரிக்காவில் கரை இறங்கினான்.
"அடுத்தவன் வீட்டில் எதை கொள்ளை அடிக்கலாம். யாரை ஏமாற்றலாம்?"
என்று தேடி தான், இந்தியாவை நோக்கி தொப்பியும், ரொட்டியும் மட்டுமே பார்த்த, போர்ச்சுகல், டச், பிரெஞ்ச், பிரிட்டிஷ் போன்றவர்கள் நுழைந்தனர்.
இந்தியாவின் செல்வத்தை பார்த்து தான் "கஜினி முகம்மது" 17 முறை உள்ளே நுழைய பார்த்தான்.
17 முறை ஹிந்து அரசனிடம் தோற்றவன் இவன்.
17 முறையும், ஹிந்து அரசனிடம் மன்னிக்கப்பட்டவன்.
18வது முறை திடீரென்று தாக்கி சோம்நாத் கோவிலில் உள்ள தங்கத்தை எடுத்து கொண்டு ஓடினான்.
18 முறை ஒரே ஒரு கோவிலை மட்டுமே குறி வைத்து கொள்ளை அடித்தான் என்றால், பாரத பூமி முழுவதும் எத்தனை செல்வங்கள் இருந்து இருக்கும் என்று நினைத்து பாருங்கள்..

"இந்தியாவுக்குள் நுழைந்த பின்னர் தான் இவர்களுக்கு அறிவியல் வளர்ச்சி மட்டுமல்ல, அறிவு வளர்ச்சியே ஏற்பட்டது" 
என்பதற்கு சான்று, இன்று வரை இவர்கள் கண்டுபிடித்த அறிவியல் சாதனைகள் தான்.
ராமாயண காலத்தில், "ராவணன் புஷ்பக விமானம் (flight) வைத்து இருந்தான்" என்று வால்மீகி எழுதி உள்ளார்.
சீதையை, இலங்கையில் இருந்து அயோத்திக்கு ஸ்ரீ ராமர் அதே புஷ்பக விமானத்தில் ஏற்றி கொண்டு, ஓரே நாளில் திரும்பினார் என்றும் பார்க்கிறோம்.
பரதன், தன் அண்ணன் ஸ்ரீ ராமரை மீண்டும் அயோத்திக்கு கூட்டி வர புறப்பட்ட போது,
தன்னுடன் வந்த அயோத்தி மக்கள் வசதிக்காக,
  • போகும் வழியெல்லாம், உடனுக்குடன் சாலைகள் அமைத்து,
  • தண்ணீர் உணவு ஆங்காங்கு ஏற்பாடு செய்து,
  • பெரிய பெரிய மரங்களை காட்டிலிருந்து வேரோடு எடுத்து, சாலைகள் இருபுறமும் நட்டு,




தன் மக்களுக்கு வெயில் கூட படாமல் கூட்டி சென்றான் என்று பார்க்கும் போது, ஹிந்துக்களின் அறிவியல் வளர்ச்சி எப்படி இருந்துள்ளது என்று தெரிகிறது.
எத்தனை அற்புதங்களை இழந்து நிற்கிறோம் என்று தெரிகிறது.

இன்றைய என்ஜினீயரிங் படிப்பு மூலம், இது போன்று
ஒரே நாளில் ரோடு போட்டு,
மரங்களை ஒரு இடத்தில் இருந்து எடுத்து சாலை நெடுக வைத்து,
சாப்பாடு வசதி செய்து விட முடியுமா? என்பது கூட சந்தேகம் தான்.

12 லட்ச வருடம் முன்பு இருந்தது த்ரேதா யுகம்.
த்ரேதா யுகத்தில் "ராமர்" அவதாரம் நிகழ்ந்தது.
அந்த சமயத்திலேயே பாரத மக்களாகிய (நாம்), இத்தனை அறிவியல் முன்னேற்றம் பெற்று இருந்தனர் என்று பார்க்கிறோம்.

பொதுவாகவே, த்ரேதா யுகத்தில், "யோகம், தியானம், விரதம்" போன்ற பயிற்சிகளால் அனைவருக்கும் ஆயுசும் அதிகமாக இருந்தது.
16000 வருடங்கள் வாழ்ந்த தசரதன், தன் மகன் "ஸ்ரீ ராமனுக்கு முடி சூடலாம்" என்று நினைத்த போது,
அவர் தலைமுடியில் 'ஒரு முடி மட்டும் வெள்ளையாக இருந்ததை கவனித்தார்' என்றால், அன்று இருந்த அறிவியலை என்னவென்று சொல்வது?
"தலை முடி கொட்டாமல், தலை முடி நரைக்காமல் இருக்க" ராஜ யோகங்களை கடைபிடித்தனர் அரசர்கள் என்று சொல்கிறது இதிகாசங்கள்.

"மேலை நாடுகளின் உதவியால் தான் அறிவியல் முன்னேற்றம் ஏற்பட்டது"
என்று யாராவது சொன்னால், அவர்களிடம் ஒரே கேள்வி தான் ஹிந்துக்கள் கேட்க வேண்டும்.
இந்தியாவுக்குள் இவர்கள் அனைவரும், நுழைவதற்கு முன் என்ன அறிவியல்  கண்டுபிடிப்பு செய்தார்கள் இவர்கள்?
ஒரு ஊசியில் நூல் கோர்க்க, ஊசியில் எங்கு ஓட்டை போடுவது? என்று கூட தெரியாமல் இருந்தனர் என்பது தான் உண்மை.
ஆதி காலத்தில் இவர்கள் உடை அலங்காரத்தை பார்த்தால்,
நம் அரசர்களின் அலங்காரத்தை பார்த்தாலே,
நம் பாரத மக்கள் ஆடையில் எத்தனை ஆச்சர்யமான வண்ணங்கள் கொண்ட ஆடைகளை அணிந்தவர்கள் என்று தெரியும்.
1000 வருடங்களில், தேவ பாஷையில் (சமஸ்கரித மொழியில்) உள்ள,
ரகசிய க்ரந்தங்கள், சாஸ்திரங்கள் எல்லாவற்றையும் max muller முதல் பல வெளிநாட்டவர்கள் படித்து,
அதன் சூத்திரத்தை (formula) அவர்கள் நாட்டிற்கு எடுத்துக்கொண்டு, ஆராய்ச்சிகள் பல செய்து கண்டுபிடிக்க ஆரம்பித்தனர்.
இந்த 1000 வருடத்தில், நாம் அனைவரும் பேசி வந்த தேவ பாஷையை பயன்படுத்த முடியாமல்,
"கொலைகள், கொள்ளைகள், கற்பழிப்புகள்" என்று பாரத தேசம் முழுவதும் அரங்கேற்றி,
பல ஹிந்துக்களை கத்தியை காட்டி மதமும் மாற்றி,
தமிழ் நாட்டில் தமிழும், சமஸ்கரிதமும் அறிந்த நம்மை,
ஊர் விட்டு ஊர் சென்று வியாபாரமோ, வேலையோ செய்ய விடாமல்,
உயிர் பயத்தை உருவாக்கி,
தனியாக பெண்களை வீட்டில் விட்டு சென்றால், "எவன் வீட்டுக்குள் புகுவானோ?"
என்ற பயத்தில், அடுத்த தேசங்களான கர்நாடக தேசம் கூட செல்ல முடியாமல், பாரத மக்கள் அவரவர் தெருவிலேயே கிடைத்ததை வைத்து வாழ ஆரம்பித்தனர்.



தசரதன் இறந்த பின், அவருடைய மனைவிகள் யாரும் தீக்குளிக்கவில்லை.  ஸ்ரீ ராமர் திரும்பி வரும்போது, கோசலை வரவேற்றாள்
பாண்டு இறந்த பின்னும் குந்தி தேவி வாழ்ந்தாள்.
பெண்களின் பாதுகாப்புக்கு அச்சம் தலை விரித்து ஆடிய இந்த 1000 வருடத்தில்,
கணவன் இறந்தால், விதவைகளாக போன பெண்கள் கணவனோடு உடன் கட்டை ஏறினர். 
எத்தனை உயிர் பயம் இருந்தால் பொது மக்கள் இந்த காரியத்தை செய்ய துணிந்து இருப்பார்கள்?
ராஜஸ்தான் சித்தூர் கோட்டையை கில்ஜி படையினர் தகர்த்து விட்டனர் என்றதும், தன் கணவன் போரில் இறந்து விட்டான் என்றதும்,
மகாராணியே தன்னோடு சேர்த்து பல ஹிந்து பெண்களுடன் தீக்குளித்தால் என்றால், பொது மக்களின் (பெண்களின்) கற்புக்கு என்ன பாதுகாப்பு இருந்து இருக்க முடியும் இந்த சமயத்தில்?
ஹிந்துக்களின் இருண்ட காலங்கள் என்று தான் சொல்ல வேண்டும்.

குறைந்தது 1000 வருடங்களில் (947AD to 1947AD),
நம் 40 தலைமுறை பாட்டனார்களாவது இந்த பேராபத்தில் அவதிப்பட்டு இருப்பார்கள்.

தமிழன் கன்னடகாரனோடு பேச பொது மொழியாக இருந்த 'சமஸ்கரித மொழி' பயன்பாட்டில் இல்லாமல் போக, பாரத மக்களுக்குள் தொடர்பு அகன்றது.

"நான் தமிழன்", "நான் தெலுங்கன்" என்று இன்று பிரித்து பேசும் குணம், 1000 வருட வெளி ஆக்ரமிப்பால், நமக்கு வந்த சிறுமை எண்ணங்கள்.
இது முதலில் தொலைய வேண்டும்.
நாம் அனைவருமே ஹிந்துக்கள். பாரத தேசத்தவர்கள்.

சம்ஸ்க்ரிதம், பேச்சு வழக்கில் இருந்து மெதுவாக நம்மிடம் அழிய, இஸ்லாமிய ஆட்சி முடிந்த சமயத்தில்,
கிறிஸ்தவர்கள் தங்கள் மொழியை பிரபலப்படுத்த, வர்த்தகம் செய்ய, ஆங்கிலத்தை புகுத்தி, பொது மொழியாக "ஆங்கிலம்" உருவாக,
பள்ளிகளை கட்டி, அங்கு படிக்கும் ஹிந்துக்களுக்கு கணக்கு எழுதும் வேலை, கூர்க்கா வேலை தருவதாக பிச்சைக்கார அடிமை வேலைகள் கொடுத்து,
ஆங்கில மோகத்தை உருவாக்கி, முதலில் ஆதரவு இல்லாமல் விடப்பட்ட பிராம்மண சமுதாயத்தை ஆசை காட்டி இழுத்தனர்.

ப்ராம்மணன் ஆங்கிலம் கற்று, அரசாங்கத்திற்கு, கணக்கு எழுத போனான்.
சமஸ்கரிதம் பேச்சு வழக்கில் அழிந்ததும், அந்த மொழியை வைத்து தான்,
வேதம் என்ன சொல்கிறது?
யோக சாஸ்திரம் என்ன சொல்கிறது?
நாட்டிய  சாஸ்திரம் என்ன சொல்கிறது?
சிற்ப சாஸ்திரம் என்ன சொல்கிறது?
என்று கற்று வந்த பாரத மக்கள், அதை திருடி ஆராய்ச்சிகள் செய்து,
அதையே ஆங்கிலத்தில் நமக்கு கொடுத்து,
ஆங்கிலத்தில் மருத்துவம்,
ஆங்கிலத்தில் கணிதம்,
ஆங்கிலத்தில் இன்ஜினியரிங்,
ஆங்கிலத்தில் கவிதை
என்று நமக்கே திருப்பி கொடுத்து விட்டனர் ஆங்கிலேயர்கள்.

சமஸ்கரித மொழியை அறிந்து கொள்ள முடியாததால், பல அற்புதமான ரகசிய சூத்திரங்கள் இன்றும் கண்டுபிடிக்க படாமலேயே உள்ளது.
"பொன்னான சமஸ்கரித மொழியை 1200 ஆக்கிரமிப்பால் இழந்தோம்"
என்ற அறிவு இல்லாமல்,
சுதந்திரம் அடைந்த பின்னும்,
மீண்டும் சமஸ்கரித மொழியை படித்து ஆராய்ச்சிகள் செய்து சுயமாக பாரத மக்கள் வாழ வழி செய்யாமல்,
கடந்த 70 வருடங்களாக மெக்காலேயின் கிறிஸ்தவ பாட புத்தகத்தை கொண்டே கல்வியை தொடர்ந்தது நேருவின் அரசாங்கம்.


விளைவு, வேற்று மொழியான ஆங்கிலத்தில் தமிழன் படித்து, அதை பற்றிய மேலும் ஆராய்ச்சி செய்ய, அவர்கள் என்ன எழுதியுள்ளார்கள்? என்றே படித்து,
வாணிபம், தொழில், படிப்பு என்று எதை எடுத்தாலும் வெளிநாட்டிடம் பிச்சை எடுக்கும் நிலை வந்தது.

ஜப்பான் போன்ற சிறு நாடுகள் கூட அவர்களுக்கான மொழியிலேயே படிக்கிறார்கள். அவர்கள் எந்த நாட்டையும், இன்று வரை நம்பி வாழவில்லை.

இந்தியா முழுவதும் அவரவர் தாய் மொழியும், பொது மொழியாக சம்ஸ்க்ரிதமும் வளர்க்கப்பட்டு இருந்தால்,
இன்று சிற்ப சாஸ்திரம் படிப்பவன், வேதத்தில் சொன்ன ரகசியங்களை அறிந்து, உலகமே இவன் சிற்பங்களை வாங்க அலைய வைத்து இருப்பானே!!
தமிழ் முனி என்று பெருமையாக நாம் சொல்லும் "அகத்தியர்",
வனவாசமாக "ஸ்ரீ ராமர்" வந்த பொழுது, பொது மொழியான சமஸ்கரித மொழியில் பேசி, தான் வைத்து இருந்த அஸ்திர சஸ்திரங்களை ஸ்ரீ ராமரின் பாதத்தில் சமர்ப்பித்தார் என்று பார்க்கிறோமே..
பாரத பூமி முழுவதும் மொழி பிரச்சனை இல்லாமல் தமிழன் சுற்றி இருக்கிறானே!!

திருச்சி அருகில், வனமாக இருந்த "அன்பில்" என்ற ஊரில் பிறந்த வேடுவன் தானே "பிரம்மாவை, நாரதரை" தரிசித்தான்.
தமிழனாக பிறந்து "வால்மீகி" என்ற முனியாக ஆகி, சமஸ்கரித மொழியில் "ராமாயணம்" எழுதி உலகம் முழுவதும் பிரபலமாக உள்ளாரே!!
வால்மீகி "தமிழன்" என்று கூட தெரிய கூடாது என்ற அளவுக்கு, தமிழனை மூளை சலவை செய்தது யார்?
70 வருட காங்கிரஸ் அரசாங்கம் தானே!!
ஸ்ரீ ராமர் அவதார காலம் வரை உத்தர பிரதேசம் சென்று ராமாயணத்தை எழுதி முடித்து,
மீண்டும் தமிழகம் வந்து "திருநீர்மலையில் ராமர் இவருக்கு காட்சி கொடுத்து, வைகுண்டம் அழைத்து சென்றார்"
என்பதும் தமிழனுக்கு தெரியாமல் மறைக்கப்பட்டதே !!
வால்மீகியின் முக்தி ஸ்தலம் அல்லவா திருநீர்மலை !!. 
நம் தமிழன் அல்லவா வால்மீகி.
இதன் காரணமாக தானே, கம்பன் ஸ்ரீ ராமாயணத்தை "தமிழில்" எழுத ஆசைப்பட்டான்.
தமிழனின் பொக்கிஷம் அல்லவா ராமாயணமும், வால்மீகியும்.
ஆதி சங்கரர் கேரள தேசத்தில் பிறந்தும், பாரதம் முழுவதும் சஞ்சரித்தார் என்று பார்க்கிறோம்.
மற்றவர்களுடன் மலையாளமா பேசினார்?
பொது பாஷையான சம்ஸ்க்ரித மொழியில் தானே பேசினார்.

ஆங்கில வழி கல்வியால், தமிழையும் இழந்து விட்டான் தமிழன்.




தமிழில் எழுதி உள்ள,
  • திருக்குறளுக்கும்,
  • கம்ப ராமாயணத்துக்கும்,
  • ஆழ்வார்கள் பிரபந்தங்களுக்கும்,
  • நாயன்மார்கள் பாசுரங்களுக்கும்

இன்றைய தமிழனுக்கு உரை தேவைப்படுகிறதே!! 

இதை விட அவமானம் நமக்கு என்ன இருக்கப்போகிறது?.


1947ல் சுதந்திரம் அடைந்து, 70 வருடங்கள் நாட்டை மறைமுகமாக அடிமை நாடாக ஆக்கி விட்டனர் காங்கிரஸ் அரசாங்கம். 
காங்கிரஸில் அன்று இருந்த அனைவருமே, ஆங்கில வழி கல்வி கற்றவர்கள். நாட்டின் கல்வியை சீர்படுத்த கிடைத்த வாய்ப்பை கோட்டை விட்டனர்.
1200 வருட சுரண்டலில் இந்தியர்கள் அனைவரும் பிச்சைகாரர்களாக விடப்பட்ட சூழ்நிலையில்,
காங்கிரசில் உள்ள முக்கிய தலைவர்கள் ஆங்கில வழி கல்வி கற்றவர்கள் என்பதை நாம் மறந்து விட முடியாது.

இன்று பல இந்தியர்கள் "வெளி நாடு சென்று வேலை பார்த்தால் தான், அதிகம் பணம் சம்பாதிக்க முடியும்" என்று நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.
வெளிநாடு சென்று, மேற்கத்திய கலாச்சாரம் ஊடுருவ,
இன்று முதியோர்கள் அனாதைகளாக யாரும் பார்க்க ஆளில்லாமல் தனி வீட்டில் வாழ்கின்றனர்.

இந்த அவலம் போக வேண்டும் என்றால்,
தாய் மொழியையும், சம்ஸ்க்ரித மொழியையும் கட்டாய கல்வி ஆக்க வேண்டும்.

"சம்ஸ்க்ரிதமும், தமிழும்" கற்ற ஒரு தமிழன்,
அகத்தியர், சித்தர்கள் அருளிய ஆச்சர்யமான சித்த மருத்துவ நூல்களின் ரகசியங்களை புரிந்து கொண்டு வெளி கொண்டு வரலாம்.
சம்ஸ்க்ரிதமும் தெரிவதால்,
வேத சாஸ்திரங்கள், யோக சாஸ்திரங்கள், சிற்ப சாஸ்திரங்கள் என்ன சொல்கிறது? என்று ஆராய்ச்சி செய்து,
எந்த நாட்டையும் நம்பி பிழைப்பு நடத்தும் அவசியம் பாரத மக்களுக்கு இல்லை, என்று ஆக்கலாம்.

இதற்கு கல்வியில்,
தாய் மொழியும், சமஸ்கரித மொழியும் கட்டாயப்படுத்தியே ஆக வேண்டும்.

பாரத மக்களில் பல லட்சக்கணக்கான ஹிந்துக்கள், இன்று இஸ்லாமிய, கிறிஸ்தவர்களாக வாழ்கின்றனர்.
இவர்கள் சமஸ்கரித மொழியை படிக்க மறுத்தால், அவர்களுக்கு தாராளமாக விலக்கு அளிக்கலாம்.
கோடிக்கணக்கான ஹிந்துக்கள் சமஸ்கரித மொழியை கற்று கொள்ளும் வாய்ப்பை அரசு தர வேண்டும்.
இந்த மொழிகளை கற்றுக்கொள்ளும் போது தான், நாம் இன்று பார்க்கும் கோவிலில்,

  • கல்லில் எப்படி சங்கிலி செய்தார்கள்?
  • கல் தூணில் எப்படி சப்த ஸ்வரங்கள் கேட்கிறது?

என்று ஆராய முடியும்.

இது போன்ற சட்டம், ஆங்கில மோகம் கொண்ட அரசால் நமக்கு கிடைக்கவே கிடைக்காது.
சமஸ்கரித மொழி, அவரவர் தாய் மொழியை வளர்க்க, 
முன் வரும் கட்சிகளே நம் பாரத மக்களுக்கு தேவை.

70 வருடங்களாக ஆங்கில மோகம் கொண்ட அரசுகள், 
நம் வாழ்க்கையே வெளிநாட்டுக்காரனுக்கு வேலை செய்து பிச்சை வாங்கும் நிலையில் தான் வைத்து உள்ளது.

இந்த நிலை மாற,
நம் தாய் மொழியையும், சம்ஸ்க்ரித மொழியையும் கட்டாய கல்வியாக ஆக்க முயற்சி செய்யும் அரசே நமக்கு தேவை.

மொழி அறிவு நமக்கு வரும் போது, 
தொலைந்த பொக்கிஷங்களை நாமே தோண்டி எடுத்து விடலாம்.

ஆயிரம் மொழிகளை கற்று தேர்ச்சி அடைய புத்தியுடைய நமக்கு,
தாய் மொழியையும், சம்ஸ்க்ரித மொழியையும் கற்பது என்ன கஷ்டமா? புத்திசாலிகள் தானே நாம் !!.

ஹிந்துவாக பிறந்தோம்!! என்ற பெருமையில் மேலும் தொடர்வோம்...

இரண்டு எதிரிகள் (எதிர் கொள்கை) ஒன்று சேர்ந்து,
ஹிந்துக்களை அழிக்க நினைக்கும் போது,
"பேத நீதியை" கையாள வேண்டும் என்று சொல்கிறது நம் சாஸ்திரம்.

ஹிந்துக்களை எதிர்க்கும் இரண்டு எதிரிகளுக்கு இடையே உள்ள பகையுணர்வை காட்டி, பிரச்சாரம் செய்து, கலகத்தை அவர்களுக்குள் உருவாக்கி, "எதிரிகள் ஒன்று சேர விடாமல் அவர்களுக்குள் பகையை உண்டாக்க வேண்டும்" என்பது பேத நீதி.

பாகிஸ்தான் போன்ற சிறிய நிலப்பரப்பை கொண்ட எதிரிகள்,
"ஆப்கான், சீன" தேசத்தோடு சேர்ந்து கொண்டு,
இந்தியாவை தாக்கும் போது,
பாகிஸ்தான் போன்ற எதிரியின், பலத்தை துண்டிக்க "பேத நீதியை" எடுத்துக்கொள், என்கிறது.

ஆப்கான் இன்று இந்தியாவுடன் நட்பு நாடாக ஆகி,
பாகிஸ்தான் நம்மிடம் கடந்த 70 வருடங்களாக சுதந்திரமாக செய்த தீவிரவாதத்திற்கு தடை ஆனது.

சீனாவுடன் வர்த்தக அனுமதி கொடுத்து, இந்தியாவை எதிர்க்க நினைக்கிறது பாகிஸ்தான்.
சீனாவை பாகிஸ்தானுடன் பேத படுத்த, இந்தியா சீனாவின் எல்லையில் இருக்கும் பலம் வாய்ந்த ரஷ்யாவுடன் நட்பு கொண்டது.
மிகவும் பலம் வாய்ந்த ஜப்பான், அமெரிக்காவுடனும் நட்பு கொள்ள,
சீனா பாகிஸ்தான் விவகாரத்தில் தலையிட்டு இந்தியாவை தாக்க பயப்படுகிறது.

"சாம தான பேத தண்ட" என்ற ராஜ நீதிகளை, ஹிந்துக்களான நாம் லட்சக்கணக்கான வருடங்களாக பின்பற்றி வருகிறோம்.

"சரியாக இந்த ராஜ நீதிகளை பயன்படுத்த படும் போது, எதிரிகளை அடக்கி, அரசாங்கத்தை செயல் படுத்த முடியும்" என்கிறது நம் சனாதன தர்மம்.

"சாம, தான, பேத" நீதி செல்லுபடியாகவில்லை என்றால்,
போர் என்ற "தண்ட" நீதியை கடைசியாக பயன்படுத்த வேண்டும்
என்கிறது சாஸ்திரம்.

பெரும்பாலான எதிரிகளை, போர் செய்து அழிப்பதை விட,
பேத நீதியை பயன்படுத்தி எதிரிகள் சேர விடாமல், அவர்களுக்குள் உள்ள சண்டையை கிளப்பி, கலகம் செய்து, போரை நம் வரையில் தவிர்க்க வேண்டும்.

த்ரேதா யுகத்தில்,
ராவணன் சீதையை இலங்கைக்கு கொண்டு சென்று விட்டான் என்ற நிலையிலும், உடனே "தண்டனை", "போர்" என்று ஸ்ரீ ராமர் தண்ட நீதியை எடுத்துக்கொள்ளவில்லை.
கோபத்தையும் ஒரு கட்டுப்பாட்டில் வைத்து இருந்தார் ஸ்ரீ ராமர்.

மகா தவறு செய்த ராவணனை, காலில் விழுந்தால் மன்னிக்கவும் தயாராக இருந்தார் ஸ்ரீ ராமர்.

1. முதலில் "போர் வேண்டாம்" என்று சமாதான முயற்சி செய்ய அங்கதனை அனுப்பினார்.
"சீதையை திருப்பி அனுப்பி, மன்னிப்பு கேட்டால்" மன்னிக்க தயாராக இருந்தார். ராவணன் மதிக்கவில்லை..
"சமாதான" நீதி தோற்றது.
2. 'அரசனான நான் சீதையை அபகரித்தேன். அபகரித்த அனைத்தும் என் சொத்து' என்று பிடிவாதம் செய்தான் ராவணன்.
போரில் உயிர் சேதம் அளவில்லாமல் ஏற்படும்.
"போரை தவிர்க்க தானமாக நினைத்தாவது சீதையை திருப்பி கொடு" என்று கேட்டும், மறுத்தான் 10 தலைக்கனம் கொண்ட ராவணன் (பிராம்மண குலத்தில் பிறந்தும் ராக்ஷசன்).
"தான" நீதி தோற்றது.

3. விபீஷணன், தன் அண்ணன் செய்யும் காரியம் "அநாகரிகமானது" என்று சொல்லி திருத்த பார்த்தான்.
தர்மம் சொன்ன விபீஷணனை சபையில் எட்டி உதைத்தான் ராவணன்.
விபீஷணன் "தர்மம் ஸ்ரீ ராமர் பக்கம் இருப்பதை பார்த்து" ஸ்ரீ ராமரை சரணம் அடைந்தார்.
ராவணன் தம்பியை பேதப்படுத்தியும், ராவணன் சீதையை கொடுக்க மறுத்தான்.
ராவணனின் இன்னொரு தம்பி கும்பகர்ணனிடம் விபீஷணன் பேசியும், "ராவணன் தவறே செய்தாலும் அவன் பக்கமே நிற்பேன், உயிர் துறப்பேன்" என்று அதர்மத்திற்கு துணை நின்றான்.
ராவணனின் முக்கிய பலமான கும்பகர்ணனை பேத படுத்த முயன்றும் அந்த முயற்சி வீணானது.
"சீதையை திருப்பி அனுப்ப மாட்டேன்" என்று பிடிவாதமாக இருந்தான் ராவணன்.
"பேத" நீதியும் தோற்றது.
4. சமாதானம், தானம், பேதம் செல்லுபடியாகவில்லை என்றதும், ஸ்ரீ ராமர், தண்ட நீதியை எடுத்தார்.
பல நூறு வருடங்களாக இலங்கையை தலைமையாக கொண்டு,
சொர்க்க லோகத்தில் உள்ள வேதத்தில் சொல்லியுள்ள தேவர்களையும் அடக்கி கொண்டு,
உலகையே மிரட்டி,
தேவைப்படும் போது சூரியனை உதிக்க செய்தும், வருணனை மழை பொழிய செய்தும்,
அழிக்க முடியாத ராக்ஷஸ படைகளுடன் ஆட்சி செய்த ராவணன்,
ஸ்ரீ ராமரின் அம்பு மழையில் ஒரு ராக்ஷஸன் கூட மிஞ்சாத படி இழந்து, பிள்ளை, சகோதரன் என்று அனைவரையும் இழந்து, 10 தலையும் மண்ணில் உருண்டு வீழ்ந்தான்.

பின் வந்த துவாபர யுகத்தில்,
துரியோதனன் பாண்டவர்களை சூதாடி ஏமாற்றி, பாண்டவர்கள் ராஜ்யத்தை பிடுங்கினான். 
"க்ஷத்ரியனாக இருந்தால் போர் செய்து உன் சொத்தை திரும்ப வாங்கி கொள்" என்று பாண்டவர்களை அவமதித்தான்.


1. ஸ்ரீ கிருஷ்ணர் போரை தவிர்க்க, சமாதான தூதுவனாக சென்றார்.
சூதாடி ஏமாற்றிய பாண்டவர்கள் சொத்தை திருப்பி தர கேட்டும் பிடிவாதமாக மறுத்தான் துரியோதனன்.
"சமாதான" நீதி தோற்றது.
2. "தானமாக 5 கிராமத்தை தந்தால் கூட போரை தவிர்க்கலாம்" என்று கேட்டும், "ஒரு குண்டூசி முனை கூட பாண்டவர்களுக்கு தர முடியாது" என்று மறுத்தான் துரியோதனன்.
"தான" நீதியும் தோற்றது.

3. துரியோதனனின் முக்கிய பலமான கர்ணனை "அநீதி செய்யும் துரியோதனனுக்கு துணை போகாதே" என்று பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் சொல்லியும், உலக சாமானிய நீதிகளை சொல்லி, தர்மத்தை மீறி, துரியோதனன் பக்கம் நின்றான் கர்ணன்.
"பேத" நீதியும் தோற்றது.
4. சமாதானம், தானம், பேதம் செல்லுபடியாகவில்லை என்றதும், ஸ்ரீ கிருஷ்ணர் தண்ட நீதியை எடுத்தார். 
அதர்மம் செய்கிறான் என்று தெரிந்தும், துரியோதனன் பக்கம் துணை நின்ற அனைத்து அரசர்களும், துரியோதனோடு பிறந்த மற்ற 99 சகோதரர்களும், கர்ணன், பீஷ்மர், துரோணர், துரியோதனன் உட்பட அனைவரும் அழிந்தனர்.

இதே நீதி, பாரத நாடு சுதந்திரம் அடைந்த போதும் கடைபிடித்தது.

கோரி ஆட்சி, சயீத் ஆட்சி கில்ஜி ஆட்சி, துக்ளக் ஆட்சி, லோடி ஆட்சி, முகலாய ஆட்சி என்று 1000 வருட இஸ்லாமிய ஆக்கிரமிப்பில் பாரத நாடு சிக்கிய போது,
லட்சக்கணக்கான ஹிந்துக்கள் அடிமைகளாக, கைதிகளாக ஆக்கப்பட்டு, உயிருக்கு பயந்தவர்கள் இஸ்லாமிய மதத்துக்கு மாற்றப்பட்டனர்.
கற்பழிக்கப்பட்ட பெண்கள் பெற்ற குழந்தைகள் இஸ்லாமியனாக வளர்க்கப்பட்டனர்.

1857ல் இஸ்லாமிய அந்நியர்களின் கொட்டம் அழிந்த நிலையில், 
வியாபாரம் செய்ய வந்த பிரிட்டீஷ் போர்ச்சுகல் ட்ச், பிரெஞ்ச் போன்ற கிறிஸ்துவ நாடுகள் பாரத நாட்டை ஆக்கிரமித்து விட்டனர்.

1000 வருடங்களாக இஸ்லாமியனாக மாறி இருந்த ஹிந்துக்கள், கோடிக்கணக்கான ஹிந்துக்களுடன் சேர்ந்து, கிறிஸ்தவர்களை எதிர்த்து சுதந்திர போராட்டம் செய்தனர்.

1947ல் இரண்டு உலக போர் நடந்து முடிந்த சமயத்தில்,
பிரிட்டிஷ் அரசால், பாரத நாட்டில் ஏற்படும் எதிர்ப்பையும் சமாளிக்க முடியாமல், சுதந்திரம் தர முடிவு செய்தனர்.

இந்த சமயத்தில் இந்தியாவில் சிந்து தேச பகுதியிலும், வங்காள பகுதியிலும் லட்சக்கணக்கான ஹிந்துக்கள் இஸ்லாமியார்களாக வாழ்ந்து கொண்டிருந்தனர்.
ஆங்காங்கு கன்யாகுமரி முதல் பாரதம் முழுவதும் இஸ்லாமியர்கள் பரவி இருந்தனர்.
மதம் மாறி போன இஸ்லாமியர்கள், இனி ஹிந்துக்களோடு சேர்ந்து வாழ முடியாது என்று ஹிந்துக்களிடம் சண்டை செய்தனர்.

40 தலைமுறைகளாக இஸ்லாமியனாக வாழும் இவர்கள், மீண்டும் ஹிந்துக்களாக மாறுவதும் இனி இயலாத காரியம். 
40 தலைமுறைகள் இஸ்லாமியனாக வளர்ந்த இவர்களும்,  ஹிந்துக்களின் தெய்வ வழிபாட்டில் விரோத போக்கை காண்பித்தனர்.
"ஜின்னா" தலைமையில்,
இஸ்லாமியர்கள் அதிகமாக இருந்த இன்றைய பாகிஸ்தான் (சிந்து தேசம்), மற்றும் வங்காள தேசத்தில் (bangladesh), "ஹிந்துக்கள் இருக்கக்கூடாது" என்று படுகொலைகள் ஆயிரக்கணக்கில் நடக்க ஆரம்பித்தது.

விடுதலை பெறும் சமயத்தில் பாரத நாடு ரத்த காடானது.
"ஜின்னா" - "இஸ்லாமியர்களுக்கு தனி இடம் கொடுத்து பிரித்து விடுங்கள்" என்று காந்தியிடம் கேட்க,
பங்களாதேஷ் மற்றும் சிந்து தேசத்தில் உள்ள ஹிந்துக்கள் அனைவரையும் கிளம்பி வர சம்மதித்தார் காந்தி.

முக்கால்வாசி இஸ்லாமியர்கள் "பங்களாதேஷ் மற்றும் சிந்து தேசத்திற்கு" சென்றனர்.
"தமிழகம், தெலுங்கு தேசம்" என்று ஆங்காங்கு இருந்த இஸ்லாமியர்கள் "பங்களாதேஷ் செல்ல தூரம் அதிகம் நாங்கள் இங்கேயே வாழ்கிறோம்" என்று மறுத்தனர்.
இப்படி பல இடங்களில் இடம் பெயர மறுத்தனர்.


ஜின்னா 1947ல் aug 14ல் சிந்து தேசத்தை "பாகிஸ்தான்" என்ற பெயரிலும், கிழக்கு பங்களாதேஷ் என்ற "கிழக்கு பாகிஸ்தான்" என்ற பெயரிலும் மாற்றி, "இஸ்லாமிய தேசம்" என்று சட்டத்தில் மாற்றி, ஆட்சியில் அமர்ந்தார்.
அங்கு இருந்த கோவில்கள் எல்லாம் இடிக்கப்பட்டு,
நாளடைவில் இருந்த கொஞ்சம் ஹிந்துக்கள் அழிக்கப்பட்டு
இன்று வரை "இஸ்லாமிய நாடாக"
இந்த பாரத தேச பகுதிகள் மாறி உள்ளது.

ஸ்ரீராமரின் தம்பி "பரதன்" உருவாக்கிய "தக்ஷசிலா" (பாம்புகள் அதிகம் இருந்த பிரதேசம்) என்ற தேசம், இன்று இஸ்லாமிய நாடாக "Taxila" என்று ஹிந்துக்களை விட்டு போய் விட்டது.

பரதன் உருவாக்கிய "புருஷபுரா" என்ற மற்றொரு தேசம், இன்று இஸ்லாமிய ஊராக "Peshavar" என்று ஆகி, ஹிந்துக்களை விட்டு போய் விட்டது.

ஸ்ரீ ராமரின் மகன் 'லவன்" உருவாக்கிய "லவபுரம்", இன்று இஸ்லாமிய ஊராக "Lahore" என்று ஆகி, ஹிந்துக்களை விட்டு போய் விட்டது.

சிந்து தேசத்தில் இருந்த கோவில்கள் இன்று அழிக்கப்பட்டு விட்டது.
பங்களாதேஷில் இருந்த கோவில்கள் இன்று அழிக்கப்பட்டு விட்டது.

இஸ்லாமிய நாடாக, இந்த பிரிக்கப்பட்ட  பிரதேசங்களை ஜின்னா சொன்ன பொழுது,
போக மறுத்த இஸ்லாமியர்கள் "இங்கேயே இருக்கட்டும்"
என்று நேரு அமைதி காத்து, பாரத தேசத்திற்கு "இந்தியா" என்று (சிந்து என்ற சொல்லை இந்தியா என்று உளறிய கிறிஸ்தவர்கள் பயன்படுத்திய சொல்லை) பெயர் வைத்து,
லட்சக்கணக்கான இஸ்லாமியர்களும் இங்கேயே தங்கி விட்டதால்,
"இந்தியா ஹிந்து தேசம்" என்று சொல்லாமல் இருந்தார் நேரு.
"நேருவின் மகள் இந்திரா ஒரு இஸ்லாமியனை மணம் செய்து இருந்தார்" என்ற காரணமாகவும் இருக்கலாம்.

பாகிஸ்தான் "இஸ்லாமிய நாடு" என்று அறிவித்த பின், அங்கு இருந்த கோவில்கள் அழிந்தன.

தன் குடும்பமே கலப்பு திருமணம் செய்த காரணத்தால்,
இந்தியா "ஹிந்து தேசம்" என்று அறிவிக்காமல்,
கோடிக்கணக்கான ஹிந்துக்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ் அரசாங்கம்.

பாபர் என்ற முதல் ஈரான் தேசத்தவன், இடித்த அயோத்தி ராமர் கோவிலை, 
பின் வந்த ஔரங்கசீப் இடித்த கண்ணன் பிறந்த மதுரா கோவிலை,
ஔரங்கசீப் இடித்த சிவ பெருமானின் காசி விஸ்வநாத் கோவில்கள் 
இன்று வரை மீட்கப்படாமல் சட்ட சிக்கலில் உள்ளது.

"ஹிந்து தேசம்" என்று அறிவிக்காமல், சுய லாபத்திற்காக அமைதி காத்து, பாகிஸ்தானுக்கும், இந்தியாவுக்கும் இது தான் "எல்லை கோடு" என்பதையும் தீர்மானமாக சொல்லாமல் விட்டனர் காங்கிரஸ் அரசாங்கம்.

1. "போராட்டம் வேண்டாம். சமாதானமாக இருங்கள்." என்று மகாத்மா காந்தி  என்று சொல்லி பார்த்தார். ஜின்னா ஒப்புக்கொள்ளவில்லை.
"சமாதானம்" தோற்றது.

2. சரி, சிந்து தேசத்தையும், வங்காள தேசத்தையும் தானமாக தருகிறோம் என்று சொல்ல,  ஜின்னா ஒப்புக்கொண்டார்.
"தான" நீதி ஜெயித்தது.

"தான" நீதியை பின்பற்றிய காங்கிரஸ் அரசு, அதை ஒழுங்காக அமுல்படுத்தாமல் கோட்டை விட்டது.

பாரத தேசத்தின் தலையையும், இடது கையையும் வெட்டி தானம் கொடுக்க துணிந்த காங்கிரஸ் அரசாங்கம், 
"பாகிஸ்தான் "இஸ்லாமிய தேசம்" என்றால், இந்தியா "ஹிந்து தேசம்" என்று அறிவிக்க மறந்தது."
"இரண்டு நாட்டுக்கும் எல்லை எது என்பதையும் தெளிவாக சொல்ல மறந்தது".

இன்று வரை காஷ்மீர் கலவரம் ஓயவில்லை.
ஸ்ரீராமரின் தம்பி பரதன் உருவாக்கிய தேசங்கள்,
லவன் உருவாக்கிய தேசங்கள் இஸ்லாமிய தேசங்களாக ஆனது மட்டுமில்லாமல்,
ஸ்ரீராமர் அவதரித்த அயோத்தியில், ராமருக்கு கோவில் கட்டமுடியாமல், இன்று வரை கலவர பூமியாக உள்ளது.

காங்கிரஸ் ஆட்சியாளர்கள் முதுகு எலும்பு இல்லாமல் செய்த தவறுகளுக்கு இன்று வரை சுதந்திரம் அடைந்தும், ஹிந்துக்களால் ஒரு கோவில் கட்ட கூட முடியாத நிலை ஏற்பட்டு விட்டது. 

"ஹிந்து தேசம்" என்று அறிவிக்காத காங்கிரஸ் அரசால்,
பின்னாளில் இஸ்லாமியர்கள் அதிகமாகி போன தேசங்களில் ஹிந்துக்கள் கொலை செய்யப்பட்டனர்.
"காஷ்மீர் தேசம்" முழுவதும் இஸ்லாமிய ஆக்கிரமிப்பு ஏற்பட்டு, அருகிலேயே பாகிஸ்தான் தேசமும் இருப்பதால், ஆயிரக்கணக்கான காஷ்மீர் ஹிந்துக்கள் கொல்லப்பட்டனர்.
ஆதி சங்கரர் காஷ்மீர் வரை சென்று போது, அவருடன் தர்கத்திற்கு காஷ்மீரை சேர்ந்த வேத பண்டிதர்கள் வந்தனர் என்று பார்க்கிறோம்.


இன்று காஷ்மீரை சேர்ந்த வேத பண்டிதர்கள் உயிருடன் இல்லை.
தப்பி ஓடி வந்த பலர் இந்தியாவுக்குள் தஞ்சம் அடைந்தனர்.
அநுபம்கேர் போன்ற பாலிவுட் நடிகர்கள் உட்பட, இந்த இஸ்லாமிய பயங்கரவாதத்தால் ஓடி வந்தவர்கள் தான்.

சுதந்திரம் அடைந்தும் ஹிந்துக்களை ஹிந்துக்களாக வாழ விடாமல் செய்தவர்கள் காங்கிரஸ் அரசாங்கம்.

காஷ்மீர் ஹிந்துக்கள் கொலை செய்யப்பட்ட போதும், 
காங்கிரஸ் குடும்பத்திலேயே கலப்பு மணங்கள் நிகழ்ந்ததால் ஹிந்துக்கள் அழிவை வேடிக்கை பார்த்தனர். 

தற்போதைய நிலைக்கு காரணம், தான நீதி ஜெயித்த போதும், அதை முழுவதுமாக கடைபிடிக்காமல் விட்டதே காரணம்.

காங்கிரஸ் அரசால்,
இந்திய தேசம் "ஹிந்து தேசம்" என்று அறிவிக்கப்படாததால்,
காஷ்மீர் எல்லையும் இவர்களால் சரியாக நிர்ணயிக்கப்படாததால்,
சிந்து (பாகிஸ்தான்) தேசத்துக்கு பிரிந்து சென்ற பல பாகிஸ்தானியர்களின், இஸ்லாமிய உறவினர்கள் இன்னும் இந்தியாவுக்குள் இருப்பதால், இந்திய தேசத்திடம் தீராத பகை கொண்டுள்ளனர்.
தானம் கொடுத்து பாரத தேசத்தை பிரித்தும்,
இந்தியாவில் உள்ள ஹிந்துக்கள் மீது பாகிஸ்தான் இஸ்லாமியர்கள் வெறுப்பை உமிழ்ந்தனர்.
விளையாட்டில் கூட இவர்கள் வெறுப்பு காணப்பட்டது.

ஆஸ்திரேலியாவுக்கும், இங்கிலாந்துக்கும் நடக்கும் விளையாட்டில் பரபரப்பு அதிகமாக காணப்படும். ஆனால் பகை இருக்காது
ஆனால்,
பாகிஸ்தான், இந்தியா விளையாட்டில் வீரர்களுக்கு மட்டுமல்ல, பார்க்கும் இரு தேசத்தவர்களுக்கும் பகை காணப்பட்டது.
இது விளையாட்டினால் ஏற்பட்ட பரபரப்பு அல்ல, பாகிஸ்தான் தேசத்தில் உள்ள ஹிந்துக்களாக 40 தலைமுறை முன் வாழ்ந்த இன்றைய இஸ்லாமியர்களின் பகை உணர்வே.
இது போன்ற நாடுகளுடன் உறவு வைத்து கொள்வதே தவறான முயற்சி.

தான நீதியை பின்பற்றி, பிரித்து கொடுத்த பின்பும், 
இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்களை தூண்டிவிட்டு, ஹிந்துக்களிடம் பகை உணர்வை தூண்டி, இந்தியாவுக்குள்ளும், எல்லையிலும் இன்று வரை அட்டகாசம் செய்து வருகின்றனர் பாகிஸ்தானியர்கள்.

தன் தேசம் இந்தியாவை விட சிறியது என்பதால், இந்தியாவை விட பெரிய அண்டை நாடான சீனாவுடன் வர்த்தகங்கள் செய்து, நட்பு நாடாக்கி கொண்டு, அமெரிக்கா போன்ற நாட்டிலும் தீவிரவாதிகளை அழிக்க உதவி செய்வதாக சொல்லி கோடிக்கணக்கில் பணம் வாங்கி நாட்டை ஓட்டுகிறது பாகிஸ்தான்.

இந்தியாவுக்குள் தாக்குதல்,
இஸ்லாமியர்களை ஹிந்துக்களுக்கு எதிராக திருப்ப தீவிரவாத அமைப்புகள்
என்று பல வேலைகள் செய்து, சீனா போன்ற பலம் வாய்ந்த நாடுகள் துணை நிற்பதால், இந்திய நாட்டை நிலைகுலைய செய்ய 1947ல் இருந்து இன்றுவரை முயற்சி செய்கிறது.

"தான" நீதிக்கு பின்னும் திருந்தாத பாகிஸ்தானியர்களை, அடக்க, இன்றைய அரசாங்கம் இவர்கள் பலமென்று வைத்து இருக்கும் சீனா மற்றும் அமெரிக்க நாடுகளிடம் நட்பு கரம் நீட்டி, பேத நீதியை கையாளுகிறது.

அமெரிக்கா போன்ற கிறிஸ்துவ நாடுகள், இஸ்லாமியர்களால் பெரும் பாதிப்புக்கு உள்ளாயினர். இது இந்தியாவுக்கு பலன் தந்தது.
ஆனாலும் சீனா போன்ற தேசங்கள் இன்னும் முழுவதும் பாகிஸ்தான் போன்ற தேசங்களுடன் ஓரளவு நட்பு கரம் நீடிக்கிக்கொண்டு தான் உள்ளது.


சீனாவை அடக்க, அவர்கள் அண்டை நாடான ரஷ்யா, ஜப்பான் போன்ற நாடுகளுடன் இன்றைய அரசாங்கம் நட்பு கரம் நீட்ட, சீனாவுக்கு இந்தியாவை எதிர்க்க சிக்கலானது.

பேத நீதி ஓரளவு ஜெயித்தாலும்,
மீண்டும் இந்தியாவில் கலவரங்கள் உருவாக்க நினைத்தால், எல்லையில் கலவரம் செய்தால், முதுகெலும்பு இல்லாத காங்கிரஸ் அரசாங்கம் போல இல்லாமல், தண்ட நீதியை எடுப்பதே சரியான முடிவு.
தண்ட நீதியை எடுத்த பின், பின்வாங்குவது தோல்வியை தரும்.
பாகிஸ்தான் போன்ற நாட்டுடன் கைகோர்க்கும் எந்த நாடாக இருந்தாலும் அவர்களையும் சேர்த்து எதிர்த்து போரிடுவது ஒன்றே,
இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி தரும்.

எப்பொழுதுமே அதர்மம் செய்பவர்கள் கொஞ்சம் அதிகமாக தான் சேர்ந்து கொள்வார்கள்.
தர்மத்தின் பக்கம் கொஞ்சம் தான் சேருவார்கள்.
ஆனால் தர்ம பக்கமே என்றும் ஜெயிக்கும்.
இரு மடங்கு அதிகம் சேனை கொண்ட துரியோதனன் அடியோடு அழிந்தான்.
பல மடங்கு அதிக சேனை கொண்ட ராவணன் கூண்டோடு அழிந்தான்.

சாம, தான, பேத நீதிக்கு பின்னும் பாகிஸ்தானியர்கள் இந்தியாவில் கலவரம் செய்தால்,
தண்ட நீதியை எடுத்து முற்று புள்ளி வைக்க வேண்டியது தான் சரியான முடிவாக இருக்க முடியும்.

பொதுவாக, இரண்டு நல்லவர்கள் சண்டை போட்டால், மூன்றாவது நபராக இருக்கும் நாம், முதலில் இருவருக்கும் இடையே சமாதானம் செய்ய முயற்சிக்க வேண்டும். சண்டை நிகழ விட கூடாது.

ஒரு நல்லவனை இரண்டு தீயவர்கள் சேர்ந்து எதிர்த்தால், நாம்,
அந்த இரு தீயவர்கள் சேர விடாமல், இருவருக்கும் இடையே வெறுப்பை கலகம் செய்து மூட்டி விட வேண்டும்.
எதிரிகள் கூட்டணி சேர விடாமல் அவர்களுக்குள் பகையை உண்டு பண்ண வேண்டும்.

ஹிந்துக்களிடம் யோகா, ஆன்மீகம் மட்டுமா இருந்தது?
அரசியல் தர்மங்கள், நுணுக்கங்கள், ஆயுர்வேதம், என்று கடலாக அனைத்து விஷயங்களும் சொல்லப்பட்டு உள்ளது.

ஹிந்துவாக பிறப்பதே புண்ணியம்.
ஹிந்துவாக பிறந்தும், மதம் மாறி போனவர்களும் மீண்டும் ஹிந்துக்களாக ஆகும் காலம் வெகு தொலைவில் இல்லை.

பாரத மக்கள் போலி மதங்களை சில ஆயிரம் வருடங்கள் மதிப்பது போல தோன்றினாலும், கடைசியில் விட்டு விட்டு தாய் மதத்திற்கு திரும்பி விடுகிறார்கள்.

புத்த மதம் 500BCல் ஆரம்பித்து, சுமார் 1500 வருடங்கள் இந்தியாவில் கால் ஊன்றி, நிலை பெற்று விட்டோம் என்று நினைத்த சமயத்தில்,
ஒட்டு மொத்த பாரத மக்களும் பௌத்த மதத்தை தூக்கி எறிந்து விட்டு, ஹிந்துவாக மாறினார்கள்.

பாரத மக்கள் அறிவுள்ளவர்கள். என்றுமே அறிவுள்ளவர்கள்.


பொய் மதங்கள் நிலை பெறுவது போல தோன்றினாலும், தானாகவே பொய் மதங்கள் அழிந்து விடும்.
மக்களிடம் மதிப்பை இழக்கும், செல்வாக்கை இழக்கும். 

பிற மதங்களை "மனிதர்கள்" காக்கின்றனர்.
ஹிந்து தர்மத்தை, வேதத்தில் குறிப்பிடப்பட்ட தேவர்களும், அவர்களுக்கும் மேல் உள்ள ப்ரம்மா, விஷ்ணு, சிவன் போன்ற தெய்வங்களாலும், அவர்களுக்கும் மேல் உள்ள பரப்ரம்மம் என்ற பரவாசுதேவன் என்ற நாராயணனாலும் காக்கப்படுகிறது.

வாழ்க ஹிந்துக்கள்.

Hare Rama, Hare Krishna - Bhajan

Sandhyavandanam - Afternoon Prayer with meaning

Sandhyavandanam - Evening Prayer with meaning




Sandhyavandanam - Morning Prayer with meaning