Followers

Search Here...

Showing posts with label இன்பம். Show all posts
Showing posts with label இன்பம். Show all posts

Saturday 29 February 2020

செல்வம் யாருக்கு நிலைக்கிறது? செல்வத்தை எதற்காக நமக்கு இறைவன் கொடுக்கிறார்? நம்மிடம் என்ன எதிர்பார்க்கிறார்? தெரிந்து கொள்வோமே....

தனபாலன் என்ற ஒருவன், வியாபாரம் செய்து கொண்டு இருந்தான்.

உலகத்தில் உள்ள கருமிகளை (கஞ்சன்) எல்லாம் கணக்கு எடுத்து வரிசைப்படுத்தினால், இவன் "முதலாவதாக" வருவானாம்.
உலக மகா கஞ்சன்..
தன் வியாபாரம் மூலம் நிறைய செல்வம் சேர்த்து வைத்து இருந்தான்.
ஆனால்,
தப்பித்தவறி கூட, சொப்பனத்தில் கூட, தானம் செய்து விட மாட்டான்.

யாருக்காவது, தன் கையால் ஏதாவது கொடுத்து விட்டதாக சொப்பனத்தில் கனவு கண்டால் கூட, மறுநாள் தன் மனைவியை கூப்பிட்டு 
"இன்று உபவாசம்..." என்று சொல்லிவிடுவானாம்.




அவன் மனைவி "இன்று ஏகாதசி இல்லையே!!.. நீங்கள் ஏன் இன்று உபவாசம் இருக்க வேண்டும்?"  என்று கேட்டால்,
"இல்லை.. நேற்று ஒருவர் இங்கு வந்து சாப்பிட்டு போய் விட்டார்... 
அதற்கான கணக்கு சரி செய்ய இன்று உபவாசம் இருக்க வேண்டும்" என்று சொல்வானாம்.

"எனக்கு தெரியாமல் இங்கு யாரும் சாப்பிட முடியாதே!!... நான் தானே இங்கு யார் வந்தாலும் சாப்பாடு போட்டு ஆக வேண்டும்..." என்று கேட்க,

"அடி போடி... நீதானே சாதம் போட்டாய்!!" என்று இவன் சொல்ல,

"நான் சத்தியமாக யாருக்கும் சாதம் போடவில்லையே" என்று இவள் சொல்ல,

"சொப்பனத்தில் சாதம் போட்டாயே!!" 
என்று சொல்லி, மறுநாள் முழுக்க ஜலம் கூட குடிக்காமல் உபவாசம் இருப்பானாம் இந்த தனபாலன்.

இப்படி 'கருத்தாக' குடும்பம் நடத்தி வந்தான் தனபாலன்.

சந்யாசிக்கு கூட வராத ஒரு விரக்தி,
லோபிகளுக்கு (கருமிகளுக்கு) வந்து விடுமாம்.
சந்யாசிகள் கூட, சிற்சில சமயம் "இன்னிக்கு அடை பலகாரம் செய்கிறாயா?" என்று கேட்டு விடுவார்களாம்.
ஆனால்,
இந்த லோபிகள், தப்பித்தவறி  கூட, தன் சொந்த வீட்டில் "டிபன் செய்கிறாயா?" என்று கேட்டுவிட மாட்டார்களாம்.

லோபிகளுக்கு தன் வீட்டில் மட்டும் இந்த விரக்தி இருக்குமாம்.. அடுத்தவன் வீட்டில் மூக்கு பிடிக்க சாப்பிடுவார்களாம்.

தன் வீட்டில், "வெறும் ரசம் சாதம் போதுமே" என்று இருப்பார்களாம்.

"துணியை சலவைகாரனிடம் கொடுக்கிறாயே!!.. காசு கொடுத்து சோப் வாங்குகிறாயே?... 
நமக்கு கை எதற்கு இருக்கிறது?.. கசக்கி கட்டி கொள்ளலாமே!" என்று இந்த கருமி சொல்வானாம்.

இப்படி கையாலேயே கசக்கி கட்டும் இந்த கருமிகளின் வேஷ்டி அழுக்கு சேர்ந்து காவி போல தெரியுமாம்...

சந்நியாசி உடுத்தும் காவி உடையும்,
கருமி உடுத்தும் காவி ஏறிய துணியும்
பார்ப்பதற்கு ஒன்று போல தெரியுமாம்.

ஞானத்தால் சந்யாசிகளுக்கு ஏற்படும் விரக்தி,
கருமிகளுக்கு சுலபமாக ஏற்பட்டு விடுமாம்.

கருமிகள் தாங்கள் சேர்க்கும் 'பொருளை' கொண்டு

  • 'அறமும்' (தர்மம்) செய்வதில்லை...
  • அறம் மீறாத 'இன்பமும்' அனுபவிப்பதில்லை...

ஒரு சமயம் இவன் வியாபாரம் நஷ்டமாகி போக, வியாபாரத்துக்காக வாங்கிய கடனை கொடுக்க மனமில்லாமல், ஏமாற்ற நினைத்தான்.


தன் சொத்தை காப்பாற்ற தன் மனைவி, மக்கள், உறவுக்காரர்கள் பெயரில் சொத்தை பிரித்து கொடுத்து விட்டான்.

கடன் கொடுத்தவர்கள், இவனிடம் சொத்து இல்லாமல் இருக்க, அடித்து நொறுக்கி விட்டார்கள்..

கருமித்தனமாக இவனுடன் வாழ்ந்த இவன் மனைவியும், மக்களும் தன் இஷ்டத்துக்கு செலவு செய்தனர்... இவனை உதாசீனப்படுத்தினர்..

உறவுக்காரர்கள், இந்த கருமியிடம் மீண்டும் முகத்தை காட்டவே பிரியப்படவில்லை.

கருமியாக வாழ்ந்த தனபாலன், ஏழை ஆனான். மதிப்பு இழந்து போனான்.

செல்வம் அனைவருக்குமே கிடைக்கிறது...
ஆனால் நிலைப்பதில்லை...

சிலருக்கு செல்வம் இருக்கும்... சம்பாதித்தவனுக்கு நோய் வந்து விடும் அல்லது உயிர் போய் விடும்..
அல்லது
இவன் இருப்பான்.. கண் எதிரே சம்பாதித்த செல்வங்கள் தொலைந்து விடும்...

இப்படிப்பட்ட 'கருமிகளிடம்' மஹாலக்ஷ்மி நிரந்தரமாக தங்க  விரும்பமாட்டாள்...
கோடி பணம் சேர்த்தாலும், பசித்தால் பணத்தை வாயில் போட்டு கொள்ள முடியுமா?...






பணம் முக்கியம் தான். ஆனால், பணத்தை (பொருள்) நமக்கு பகவான் எதற்காக கிடைக்க செய்கிறார்? 
என்று நாம் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும்.

"தர்மம் அர்த்தம் காமம் மோக்ஷம்" என்று நான்கு புருஷார்த்தங்கள் சொல்லப்படுகிறது...
இதையே தமிழில்,
"அறம் பொருள் இன்பம் வீடு" என்று சொல்கிறோம்.
வள்ளுவர் "அறம் பொருள் இன்பம்" என்ற 3 புருஷார்த்தங்களை பற்றி மட்டும் சொல்வதற்கே 1330 குறள் எழுதினார்..
'மோக்ஷம் என்ற வீடு, அறம் செய்வதால் கிடைக்கும்' என்று
"அறம் இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை"
என்று மோக்ஷத்தை பற்றி சொல்கிறார்.

"அக்ஷரானாம் 'அ'காரோஸ்மி" 

'எழுத்துக்களில் அ என்ற முதல் எழுத்தாகவும் நானே இருக்கிறேன்'
என்று கிருஷ்ண பரமாத்மா சொல்கிறார்.
ஆதிமூலமான பகவான் ஸ்ரீகிருஷ்ணரை
"அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன்" என்று வணங்கிவிட்டு,
அறம் பொருள் இன்பத்தை பற்றி பாடல் இயற்றுகிறார், வள்ளுவர்.

உலகில் "பொருள்" தானே முக்கியமாக இருக்கிறது!!

பொருளுக்கு(பணத்திற்கு) 'முதல் இடம்' கொடுத்து, 
"பொருள், இன்பம், அறம்" என்று மாற்றி சொல்லி இருக்கலாமே?
மாறாக,
"அறம் பொருள் இன்பம்" என்று பொருளை 'அறத்துக்கும் இன்பத்துக்கும் நடுவில்' ஏன் வைத்து சொன்னார்கள்? 

இதற்கு காரணம் உண்டு.

உனக்கு கிடைக்கும் 'பொருளை' கொண்டு,

  • 'அறம்' செய்! (தர்மம் செய்)..

உனக்கு கிடைக்கும் 'பொருளை' கொண்டு,

  • தர்மத்துக்கு விரோதமில்லாத 'இன்பத்துக்கும்' செலவு செய்து கொள்!

என்று காட்டவே, பொருளை 'அறத்துக்கும் இன்பத்துக்கும் நடுவில்' வைத்தார்கள்.

நம்மிடம் பொருள் இருந்தால், "தர்மத்தை செய்யலாம்!"
நம்மிடம் பொருள் இருந்தால்,
"தர்மத்துக்கு விரோதமில்லாத இன்பத்தையும் அனுபவிக்கலாம்!" 
இதன் காரணத்தால்,
பொருளை 'அறத்துக்கும் இன்பத்துக்கும் நடுவில்' வைத்தார்கள்.

"அறம், பொருள், இன்பம்" என்று இந்த வரிசையில் ஏன் சொன்னார்கள்? என்பதும் இப்போது நமக்கு புரிந்து இருக்கும்.

பொருளை வைத்து 'அறமும் செய்யலாம், இன்பத்தையும் அனுபவிக்கலாம்'

இந்த இரண்டில் எதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்?

பொருளை கொண்டு, எதில் அதிகமாக செலவு செய்ய வேண்டும்? 
அறத்துக்கா? இன்பத்துக்கா?




"அறத்திற்கு முதலில் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்" என்பதற்காக, அறத்தை முதலில் வைத்தார்கள்.

'அறம், பொருள், இன்பம்' என்று சொல்லும் போதே,
உனக்கு கிடைக்கும் பொருளை கொண்டு, முதலில் அறம் (தர்மம்) செய்!
மிச்சப்பட்ட பொருளை கொண்டு, தர்மத்துக்கு விரோதமில்லாத இன்பத்தை அனுபவித்து கொள்! 
என்கிறது..

இப்படி நமக்கு கிடைக்கும் பொருளை கொண்டு ஒரு பங்கையாவது அறம் (தர்மம்) செய்து, மீதியை அறம் மீறாத இன்பத்துக்கு (உணவு, உடை, இடம்...) செலவு செய்தோமானால், மஹாலக்ஷ்மியின் கடாக்ஷம் என்றுமே நமக்கு நிலைக்கும்..

லக்ஷ்மியின் கணவரான நாராயணனை நம் இஷ்ட தெய்வமாக கொண்டு, திருப்பதி, ஸ்ரீ ரங்கம் மற்றும் பல திவ்ய தேசங்களில் நம்மால் முடிந்த பொருள் சேவை செய்தால், கோவில் திருப்பணிகள் செய்தால், லக்ஷ்மியின் கடாக்ஷம் என்றுமே நமக்கு நிலைக்கும்...

ஹிந்து தர்மத்தில் "ஒவ்வொரு சொல்லிலும் ஆழ்ந்த அர்த்தங்கள் உண்டு" என்று தெரிகிறது...

ஹிந்துவாக பிறந்ததற்கு, பெருமை அடைய வேண்டும்.
பாரத மண்ணில் பிறந்ததற்கு, பெருமை அடைய வேண்டும். 

போலி மதங்களில் வீழாமல் இருக்க, ஹிந்து தர்மத்தை அறிந்து கொள்ள வேண்டும்... 
அனைவரையும் அறிவு பெற செய்து, ஹிந்தவாக ஆக்க வேண்டும்.


வாழ்க ஹிந்து தர்மம்...

Friday 10 January 2020

இந்த உலகில் இருக்கும் வரை, நாம் எப்படி வாழ வேண்டும்? நம் லட்சியம் என்ன? அறம் பொருள் இன்பம் வீடு என்றால் என்ன? ... தெரிந்து கொள்ள வேண்டாமா ஹிந்துக்கள்?

சம்ஸ்க்ரிதத்தில்
"தர்ம, அர்த்த, காம, மோக்ஷ" என்று 4 விஷயங்கள் சொல்லப்படுகிறது..
அதையே தமிழில்,
"அறம் பொருள் இன்பம் வீடு" என்று சொல்கிறோம்.

மோக்ஷம் என்ற சம்ஸ்க்ரித சொல்லுக்கு
  1. "விடுதலை" என்றும் அர்த்தம் உண்டு,
  2. "வீடு" என்ற அர்த்தமும் உண்டு.

வீடு:
நாராயணனை பக்தி செய்து, மோக்ஷம் அடைந்த ஜீவன்கள், பரவாசுதேவன் நாராயணனின் இருப்பிடமான வைகுண்டம் அடைந்தால், அந்த ஜீவன் தன்னுடைய சொந்த "வீடு" சேர்ந்தார் என்று அர்த்தம்.
அந்த ஜீவன் நிரந்தர ஆனந்த நிலையிலேயே இருக்கிறான்.




விடுதலை:
"உடம்பு நான் இல்லை, ஆத்மாவே நான்" என்று மட்டும் உணர்ந்து, வைராக்யத்துடன் வாழும் அத்வைதிக்கு, "கைவல்யம்" என்ற "விடுதலை" என்ற மோக்ஷம் மட்டும் கிடைக்கிறது.
அந்த ஜீவனுக்கு "வீடு" என்ற மோக்ஷம் கிடைப்பதில்லை.
இந்த ஜீவன், விடுதலை அடைந்த திருப்தி மட்டுமே பெறுகிறான்.

தமிழன், 
'மோக்ஷம்' என்ற சம்ஸ்க்ரித சொல்லுக்கு இரண்டு அர்த்தங்கள் உண்டு என்று அறிந்து இருந்தால் தானே, 
தமிழில் "விடுதலை" என்ற நேரிடையான அர்த்தத்தை பயன்படுத்தாமல், "வீடு" என்று குறிப்பாக பயன்படுத்தி இருக்க முடியும்.
நாம் சற்று யோசித்து பார்க்கவேண்டும்.

நம் தமிழ் முனிகள்,
"அறம் பொருள் இன்பம் விடுதலை"
என்று சொல்லாமல்,
"அறம் பொருள் இன்பம் வீடு"
என்று சொன்னதிலிருந்தே,
'தமிழ் அறிவும், சம்ஸ்க்ரித அறிவும்' எப்படி ஆழ்ந்து இருந்தது நம் தமிழர்களுக்கு என்று தெரிகிறது.

உலக மொழிகள் தோன்றுவதற்கு முன்,
காலம் கணிக்க முடியாததாக
'சம்ஸ்க்ரிதமும், தமிழும்' இருக்கும் போது,
இரண்டு மொழியுமே தெரிந்து இருந்த தமிழன்,
"தமிழும் காலம் சொல்ல முடியாததாக உள்ளது.. சம்ஸ்க்ரிதமும் காலம் சொல்ல முடியாததாக உள்ளது.. இரண்டும் அறிந்து இருந்தவர்கள் தமிழர்கள்" என்று சொல்லி கொள்ளாமல்,
"பழமையான தமிழ் வாழ வேண்டும், ஆனால் நாம் அறிந்து மற்றொரு பழமையான சம்ஸ்க்ரிதம் அழிய வேண்டும்"
என்று நினைப்பது, அறிவுள்ள பேச்சா? என்று தமிழர்கள் சிந்திக்க வேண்டும்.

இரண்டுமே பழமையான மொழிகள். 
"நாம் பேசிய மொழி" என்ற உணர்ச்சி இல்லாத தமிழன் தமிழனா?...

அறிவில்லாததால், போலி மதங்களை தழுவியதால்,
பழமையான நாம் பேசிய மொழிகளை வெறுக்கும் கேடுகெட்டவர்களை ஒடுக்க வேண்டும், சனாதன தர்மத்தில் இருக்கும் பாரத மக்கள்.
12 லக்ஷம் முன், த்ரேதா யுகத்தில், ராமபிரான் அவதரித்த போது,
திருச்சி அருகில் அன்பில் என்ற ஊரில் பிறந்த ஒரு வேடுவ தமிழன் தான், ராமபிரான் சரித்திரத்தை எழுதி, "வால்மீகி" என்று உலக புகழ் பெற்று, இன்றும் புகழ் குறையாமல் இருக்கிறார்..

போலி தமிழர்களுக்கு, போலி மதங்களில் புகுந்ததால் ஹிந்துக்களை வெறுக்கும் பொறமைக்காரர்களுக்கு, "வால்மீகி தமிழன்" என்று கூட தெரியாதே!!


அது மட்டுமா, ராமபிரான் காலம் வரை உத்திர பிரதேசம் சென்று வாழ்ந்த வால்மீகி, ராமபிரான் அவதாரம் முடிந்த பிறகு,
மீண்டும் தன் தாயகம் திரும்பி, "திருநீர்மலை" (சென்னை அருகே) என்ற ஊரில் முக்தி பெற்றார் என்றாவது தெரியுமா?

அதே ராமபிரானுக்கு சமஸ்க்ரிதத்தில் "ஆதித்ய ஹ்ருதயம்" சொன்ன அகத்தியரும் நம் தமிழ் முனி என்று தெரியுமா?
12 லட்சம் முன் த்ரேதா யுகத்தில் "நம் தமிழர் வால்மீகி, சமஸ்க்ரித மொழியில் ராமபிரானை பற்றி எழுதி உள்ளாரே!!  நாம் தமிழில் எழுதுவோம்"
என்று கலியுகத்தில் கம்பன் என்ற இன்னொரு தமிழன் எழுதினான் என்று கூட புரியாத முட்டாளா இன்றைய தமிழன்?
1000 வருட இஸ்லாமிய, கிறிஸ்தவ அந்நியர்களால் அடிமைப்பட்டு கிடந்த நம்மை,
போலி மதவாத ஊடகங்களாலும்,
நம் சரித்திர பெருமை அறியாத சாக்கடை புத்தி கொண்ட ஏமாற்று தலைவர்களாலும்,
நம் பெருமை நமக்கு மறைக்கப்பட்டதே!!
அந்தோ பரிதாபம்!!
கும்பகோணத்தில் பல கோவில்கள் காணப்பட்டாலும்! 
யார் இதை அமைத்தாரகள்? 
அந்த மூலவர் எப்பொழுது வந்து இருப்பார்?
என்ற ஆராய்ச்சி செய்யும் புத்தி கூட இல்லாத மழுங்கிய தமிழர்கள் ஆனோமே!!
அந்தோ பரிதாபம் !!
மீனாட்சி கோவிலில் 'உடைக்கப்பட்ட சிவலிங்கம்' கண் எதிரே காட்டப்பட்டாலும்!! 
நம் கோவிலுக்கு என்ன நடந்து இருக்கும்? 
யார் செய்தார்கள்? 
என்ற சரித்திர அறிவு இல்லையே இன்றைய தமிழனுக்கு!!
அந்தோ பரிதாபம் !!
'காஞ்சி வரதன் 40 வருடம் ஒரு முறை 48 நாட்கள் காட்சி கொடுக்க போகிறார்' என்று மட்டும் அறிந்து, தனக்கு தெய்வ அருள் கிடைக்குமா? என்று ஓடி வந்து பார்த்த கோடிக்கணக்கான மக்களுக்கு,
இதே ஆதி வரதனை, 
1017ADல் அவதரித்த ராமானுஜர் பார்த்த போதும், 
அதற்கு பின் அவதரித்த வேதாந்த தேசிகர் பார்த்த போதும், 
இந்த விதி இல்லையே என்று ஆராய அறிவில்லையே?..
அந்தோ பரிதாபம் !!




ராமானுஜர் காலத்தில் 'அத்திவரதர் வெளியில் தான் இருந்தார்' என்கிற போது, எந்த இஸ்லாமிய கலவரத்தால், இந்த 1000 வருட காலத்தில் அத்திவரதர் குளத்தில் மறைக்கப்பட்டார்?
என்ற சாதாரண கேள்வி கூட இன்றைய ஹிந்துக்களுக்கு ஏழவில்லையே!!
அந்தோ பரிதாபம் !!
தற்காலிக ஏற்பாட்டை, 
ராமானுஜர், தேசிகர் பார்க்காத சம்பிரதாயத்தை, 
ஆகம விதி என்று நினைத்து மீண்டும் 
ஆதி வரதரை குளத்தில் வைக்க விட்டு விட்டனரே!! இன்றைய ஹிந்துக்கள்!
அந்தோ பரிதாபம் !!

- நம் பெருமை நாம் அறியாதவரை..
- இஸ்லாமிய ஆக்கிரமிப்புக்கு நம் ஊரின் வரலாறு முன் எப்படி இருந்தது? என்று 2000, 3000 வருடம் முன் சென்று பார்த்து தெரிந்து கொள்ளாதவரை...
- நம் ஊரில் உள்ள கோவில் முதன் முதலில் யாரால் அமைக்கப்பட்டது? என்று அறியாதவரை,
- கோவில் உருவாகும் முன் இருந்த இந்த மூலவர் எந்த காலத்தில் இருந்தார் யாருக்கு தரிசனம் கொடுத்தார்? என்று அறியாதவரை,
ஹிந்துக்களை மதம் மாற்றி, 
ஹிந்துக்களை கொண்டே, ஹிந்து கோவில்களை, மொழியை, கலாச்சாரத்தை அழித்து விடுவார்கள் இந்த போலி அந்நியர்கள்..

ஹிந்துவின் பெருமை அறியாது, "மதம் மாறிய ஹிந்துக்களே" ஹிந்துக்களை அழிக்க முற்படுவார்கள்.
இந்த உண்மையை இன்றும் ஹிந்துக்களாக வாழும் பாரத மக்கள் உணர வேண்டும்.
மீனாட்சி கோவிலில் சிவ லிங்கத்தை உடைத்தவன்,
ஸ்ரீ ரங்கத்தில் 10000 வைஷ்ணவர்களை கோவிலேயே கொன்று குவித்து செல்வங்களை எடுத்து சென்றவன்,
ககாத்திய தேசம் என்ற தெலுங்கானாவில் பெரும் கொள்ளை அடித்து, காளி கோவில் கோஹினூர் வைரம் இன்றும் பெருமையுடன் பேசப்படும் வைரம் உட்பட பல விலை உயர்ந்த ரத்தினங்களை கொள்ளை அடுத்து அலாவுதீன் கில்ஜிக்கு சமர்ப்பித்த மாலிக் காபூர் என்ற இஸ்லாமியன், பூர்வீகத்தில் "ஹிந்துவாக பிறந்தவன்" என்பதை மறக்க கூடாது.
அது மட்டுமா,
1200ADல் பாரத நாட்டில் ஹிந்துக்களை கொன்று, கோவில்களை இடித்து, பிருத்விராஜ் சவுஹான் என்ற ஹிந்து அரசனிடம் முதலில் மன்னிக்கப்பட்டு, மீண்டும் திடீர் தாக்குதல் செய்து பிருத்விராஜ் சவுஹான் கண்ணை பிடுங்கி, ஏளனமாக சிரித்து, கண் பிடுங்கிய நிலையிலும் தான் வைத்து இருந்த அம்பினால் அதே இடத்தில் கொலை செய்யப்பட்டவன் கோரி என்ற இஸ்லாமிய வம்சத்தில் வந்த "முகமது கோரி".. 
இந்த கோரி வம்சத்துக்கு விதை போட்டவன் "அமீர் சூரி" என்ற பௌத்த மதத்தை தழுவி இருந்த ஆதி ஹிந்து வம்சம் என்பதை மறக்க கூடாது.

அசோக மன்னர் "பௌத்த மதத்தில்" ஈர்க்கப்பட்டு, ஆப்கான் முதல் தன் ஆட்சியில் இருந்த அனைத்து சிற்றரசர்களையும் பௌத்த மதத்துக்கு இழுத்தார்.
அசோக மன்னனால் அன்று போடப்பட்ட விதை, 947ல் பெளத்த நாடாக இருந்தது ஈரான், ஆப்கான் போன்ற ஹிந்து தேசங்கள்.
பௌத்த மதத்தையும் விட்டு, இவர்கள் இஸ்லாமுக்கு மாறியதான் விளைவு, அவர்கள் வம்சத்தில் மற்ற மதங்களை வெறுக்கும் முஹம்மத் கோரி போன்றவர்கள் கிடைத்தார்கள்.
தங்கள் தாய் மதத்தை, கலாச்சாரத்தையே அழிக்க பெரு முயற்சி செய்தார்கள்.

சரித்திரம் அறிந்து கொள்ளாதவரை, ஹிந்துக்கள் ஏமாற்றப்பட்டு கொண்டே தான் இருப்பார்கள்..

இனி,
கைவல்யம் என்ற விடுதலைக்கும்,
வைகுண்டம் என்ற வீடுக்கும் உள்ள வித்தியாசத்தை அறிய இங்கே படிக்கவும்.
"உயிர் பிரிந்த பிறகு, நாம் போய் சேர வேண்டியது எங்கே?"
என்ற நமக்குள் எழும் கேள்விக்கு,
நமது அற்புதமான ஹிந்து தர்மம் "நீ மோக்ஷத்துக்கு செல்ல வேண்டும்" என்று பாதை காட்டுகிறது.
அதை காட்டவே 4வது பதமாக "மோக்ஷம் (வீடு)" என்று சொல்கிறது.




உலகில் பிறந்த நாம் அனைவருமே, "அடைய வேண்டிய லட்சியம், மோக்ஷமே" (சம்சார உலகில் மீண்டும் பிறந்து விடாமல் இருக்கும் நிலை)
என்று முடிவாக சொல்வதால்,
கடைசியாக "மோக்ஷம்" என்ற பதத்தை வைக்கிறது நம் சனாதன ஹிந்து தர்மம்.

"மோக்ஷம்" - உயிர் பிரிந்த பின் கிடைக்கப்போகும் விஷயம்.

இந்த உலகில் இருக்கும் வரை எப்படி வாழ வேண்டும்?
என்ற கேள்விக்கு விடையாக
"அறம் பொருள் இன்பம்" என்று பதில் சொல்கிறது, நம் சனாதன தர்மம்.

நம் சனாதன தர்மம் சொல்லும் ""தர்ம(அறம்), அர்த்த(பொருள்), காம(இன்பம்)"என்ற அற்புதத்தை, தன்னால் முடிந்த அளவுக்கு விவரிக்க, ஆசைப்பட்ட தமிழ் முனி அல்லவா நம் திருவள்ளுவர்.
'மோக்ஷம் என்ற லட்சியத்தை அடைவதற்கு', இந்த உலகில் நாம் எப்படி வாழ வேண்டும்? என்று சொல்லும் அறம், பொருள், இன்பம் என்ற மூன்றை, 
1330 குறள்களாக நமக்கு தந்து விட்டாரே!! நம் தமிழ் முனி திருவள்ளுவர்.

தான் சொல்ல போகும் அறம், பொருள், இன்பம் வழிகாட்டுதலின் முடிவு யார்?
என்று தன் முதல் குறளிலேயே சொல்கிறார் திருவள்ளுவர்.




"அகர முதல் எழுதெல்லாம் ஆதி பகவன்" என்று "பகவான் என்ற சம்ஸ்க்ரித சொல்லை" பயன்படுத்தி,
"எழுத்துக்களில் நான் 'அ'கரமாக இருக்கிறேன்" என்று பகவத் கீதையில் ஸ்ரீ கிருஷ்ணர் "அக்ஷரானாம் 'அ'காரோஸ்மி" என்று சொல்வதையே "அகர" என்ற சொல்லை கொண்டே ஆரம்பித்து,
தான் எழுதும் 1330 குறளின் லட்சியம், அந்த பரந்தாமனை அடைவதே என்று காட்டி விடுகிறார் திருவள்ளுவர்.

இப்படி,
நம்முடைய லட்சியம் "மோக்ஷம் என்ற வீடு பெறுவதே" என்று காட்டி,
நாம் உலகில் வாழும் வரை "அறம் பொருள் இன்பம்" என்ற பாதையில் செல்ல, 1330 அறிவுரைகளை வழங்கினார் திருவள்ளுவர்.


நாம் உலகில் வாழும் வரை "அறம் பொருள் இன்பம்" என்ற பாதையில் செல்ல வேண்டும் ஏன் சொன்னார்கள்?
எதற்காக "அறம் பொருள் இன்பம்" என்று வரிசையில் சொன்னார்கள்?

உலகில் "பொருள்" தானே மிக முக்கியம்!! 
"பொருள், இன்பம், அருள்" என்று சொல்லி இருக்கலாமே?
ஏன் "அறம் பொருள் இன்பம்" என்று குறிப்பிட்ட வரிசையில் சொன்னார்கள்? 
இந்த கேள்வியே 'உண்மையான ஆன்மீக தேடல் உள்ள ஜீவனுக்கு' தான் தோன்றும்.

எதற்காக "அறம் பொருள் இன்பம்" என்று இந்த வரிசையில் சொன்னார்கள்?

"அறம், பொருள், இன்பம், வீடு என்ற மோக்ஷத்தை" சேர்த்து சொல்லும் அருமையான குறள் ஒன்றை பார்ப்போம்.
அருள் இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை, பொருள் இல்லார்க்கு
இவ்வுலகம் இல்லாகி யாங்கு        

"உலகில் பணம் (செல்வம்/பொருள்) இல்லாமல் வாழ முடியாது" என்று வள்ளுவரே சொல்கிறார் பாருங்கள்.
அதே  சமயம், 
"இந்த உலகில் நாம் வாழும் போது, அருள் என்ற அறம் ('தர்ம') செய்யாது போனால், மனித வாழ்வின் லட்சியமான அவ்வுலகம் (வைகுண்டம்) என்ற வீடு (மோக்ஷம்) என்ற லட்சியத்தை நீ அடைய முடியாது!! 
மீண்டும் மீண்டும் பிறந்து கொண்டே இருப்பாய்!!" 
என்று எச்சரிக்கிறார் திருவள்ளுவர்.

வள்ளுவர் "அறம், பொருள், இன்பத்தை" 1330 குரளால் எழுதியதன் நோக்கமே, நாம் 'நம் வாழ்க்கையின் லட்சியமான வீடு என்ற மோக்ஷத்தை அடைய தான்' என்று அறிய வேண்டும்.

"உலகில் பணம் (செல்வம்/பொருள்) இல்லாமல் வாழ முடியாது" என்று வள்ளுவரே சொல்கிறார் பாருங்கள்.

"இந்த உலகில் நீ வாழ வேண்டுமானால், மற்றவர்களை ஏமாற்றியாவது!! அதர்மம் செய்தாவது!! பொருள் சம்பாதிக்க வேண்டும்" 
என்பதற்காகவா வள்ளுவர் "பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை" என்று சொன்னார்?
சற்று யோசிக்க வேண்டும்.
வள்ளுவர் அதர்மத்தை போதிக்கவா இப்படி சொன்னார்?
சற்று யோசிக்க வேண்டும்.

இதன் ரகசியத்தை கொஞ்சம் ஆராயும் போதே, நமக்கு இதன் அர்த்தம் புரிந்து விடும்.

"அறம், பொருள், இன்பம்" என்று ஏன் இந்த வரிசையில் சொன்னார்கள் என்பதும் புரியும்.

உலகில் வாழும் வரை, நாம் அனைவருக்குமே பொருள் அவசியமாகிறது. 

"பொருள்" இருந்தால் தான், 
நமக்கு உலக இன்பங்கள் கிடைக்கும்
நாம் உணவு உண்ண, உடை உடுத்த, "பொருள்" தேவைப்படுகிறது.

அதே சமயம், 
"பொருள்" இருந்தால் தான், 
"அறம்" என்ற 'தர்ம'த்தை செய்யவும் முடியும். 
பசி என்று வந்தவனுக்கு கொஞ்சம் அன்னம் (தர்மம்) கொடுக்க, "பொருள்" தேவைப்படுகிறது.

நாட்டில் நல்லவர்களை தீயவர்களிடமிருந்து காக்க, 
நாட்டில் தர்மத்தை காக்க, ஆயுதங்கள் வாங்க, "பொருள்" தேவைப்படுகிறது.

தெய்வத்துக்கு கோவில் கட்டி, நாம் ஆசையாக பூஜை என்ற தர்மத்தை செய்து காலத்தை கழிக்கவும் "பொருள்" தேவைப்படுகிறது.

"அறம்  செய்யவும் பொருள் தேவை. இன்பத்தை பெறவும் பொருள் தேவை" என்பதால், 
பொருளை நடுவில் வைத்து, "அறம் பொருள் இன்பம்" என்று சொல்கிறார்கள். 
எத்தனை ஆழ்ந்த அர்த்தம்!!  
எத்தனை அற்புதமான தர்மத்தில் நாம் பிறந்து இருக்கிறோம்!! என்று நினைத்து பார்க்க வேண்டும்.
ஹிந்துவாக பிறந்ததே பாக்கியமல்லவா? 

"பொருள்" இருந்தால் தான், "அறம்" என்ற "தர்மம்" காரியங்களும் செய்ய முடியும், 
"பொருள்" இருந்தால் தான், "இன்பம்" என்ற "காமத்தை" பெற முடியும்,
என்பதால் தான், 
மறை (வேதம்) சொல்லும் ஆழ்ந்த அர்த்தத்தை அறிந்த வள்ளுவர், 
"பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை" என்கிறார்.





இப்பொழுது இன்னொரு கேள்வியும், ஆன்மீக தேடல் உண்மையாக உள்ளவனுக்கு தோன்றும்.. 

"அறம் செய்ய... இன்பம் கிடைக்க... "பொருள் அவசியம்" என்பதால், "பொருள்" இந்த இரண்டுக்கும் நடுவில் வைக்கப்பட்டது என்பது புரிகிறது. 
ஆனால், அந்த பொருளை கொண்டு, 
  1. 'அறம்' - அதிகம் செய்ய வேண்டுமா? 
  2. உலக 'இன்பத்தில்' - அதிகம் செலவு செய்ய வேண்டுமா?" 

என்ற கேள்வி எழுகிறது.

"எது முக்கியம்? அறமா? இன்பமா?..   பொருளை கொண்டு அறம் செய்வதா? உலக இன்பத்தை அடைவதா?" 
என்ற கேள்விக்கு, வள்ளுவரே பதில் சொல்கிறார் என்பதும் கொஞ்சம் ஆழ்ந்து கவனித்தாலே புரியும்.

"அறம் செய்தால் தான் அவ்வுலகம் (வீடு) கிடைக்கும்"  என்று வள்ளுவர் சொல்வதை நன்றாக கவனிக்க வேண்டும். 
(அருள் இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை)

"அறம் செய்ய விரும்பு" என்று ஒளவையும் சொல்கிறாள். 

"பொருளை கொண்டு அதிகமாக "அறம்" மட்டுமே செய்" என்று நமக்கு அழுத்தமாக சொல்லவே, முதலாவதாக "அறம்" என்று ஆரம்பிக்கிறது.

"முடிந்த அளவுக்கு நீ அறம்  மட்டுமே செய்!! 
செய்தது போக, உன்னிடம் பொருள் இருந்தால், உனக்கும் கொஞ்சம் உணவு கொடுத்துக்கொள், உடை வாங்கிக்கொள்!!" 
என்று நமக்கு உணர்த்தவே, 
"அறம் பொருள் இன்பம்" என்று வரிசைப்படுத்தி சொல்கிறது, நம் சனாதன தர்மமாகிய ஹிந்து மதம்.

வள்ளுவர் சொன்னபடி, "அறம் செய்ய, பொருள் அவசியம்" என்று உணர்ந்து, 
தர்மப்படி பொருளை சம்பாதித்து, அறம் செய்தால்,
"இந்த உலகில் நாம் செய்த அறம், உலகை விட்டு சென்ற பின், 
வாழ்க்கையின் லட்சியமான மோக்ஷம் என்ற வீடு (அவ்வுலகம்) கிடைக்க செய்யும்" 
என்கிறார் வள்ளுவர்.





"அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன்" 
என்று வள்ளுவன் சொன்ன 'தர்மத்தின் தலைவனான பரந்தாமனை அடைய, பொருளை கொண்டு அறம் செய்வோம்'.

எத்தனை ஆழ்ந்த அர்த்தம்!!  
எத்தனை அற்புதமான தர்மத்தில் நாம் பிறந்து இருக்கிறோம்!! என்று நினைத்து பார்க்க வேண்டும்.
ஹிந்துவாக பிறந்ததே பாக்கியமல்லவா? 



Saturday 20 October 2018

"அறம், பொருள், இன்பம், விடுதலை" என்று சொல்லாமல் "அறம், பொருள், இன்பம், வீடு" என்று ஏன் சொன்னார்கள்? காரணம் தெரிந்து கொள்ள வேண்டாமா?

"மோக்ஷம்" என்ற சொல்லுக்கு "விடுதலை" என்றும் பொருள் உண்டு, "வீடு" என்ற பொருளும் உண்டு.
தமிழில் "மோக்ஷத்தை" சொல்லும் போது "வீடு" என்ற சொல்கிறார்கள்.

"தர்மம், அர்த்தம், காமம், மோக்ஷம்" என்று வேதம் கூறும் நான்கு விஷயங்களை.
"அறம், பொருள், இன்பம், வீடு" என்று தமிழிலில் சொல்கிறார்கள்.
நன்றாக கவனித்தோமென்றால்,
"அறம், பொருள், இன்பம், விடுதலை" என்று சொல்லவில்லை.
மோக்ஷத்தை, "வீடு" என்ற அர்த்தத்தை கொண்டு ஏன் சொன்னார்கள்? தெரிந்து கொள்ள வேண்டாமா தமிழர்கள்?

1. தர்மம், (धर्म) (rules)
2. அர்த்தம், (अर्थ) (wealth)
3. காமம், (काम) (desire)
4. மோக்ஷம் (मोक्ष) (freedom from rebirth)
என்ற நான்கு விஷயங்களை நோக்கி தான் மனிதர்கள் எப்பொழுதும் பயணிக்கின்றனர் என்கிறது சப்த ப்ரம்மமாகிய வேதம்.

இதை பொதுவாக 4 புருஷார்த்தங்கள் (Purushartha - லட்சியம்) என்று சொல்கிறது.



இதில் "மோக்ஷம்" என்ற விஷயத்தை நோக்கி செல்லும் மனிதர்கள் மட்டும், மீண்டும் பிறவி எடுக்காமல், சம்சார கடலில் இருந்து பகவானால்  விடுவிக்கப்படுகின்றனர்.
பிறவியில் இருந்து விடுதலை பெறுகின்றனர்.
ஆகவே, "மோக்ஷத்தை" தன் லட்சியமாக கொள்ளும் மனிதர்கள் பெரிதும் மதிக்கப்படுகின்றனர்.

தர்மம், அர்த்தம், காமம், மோக்ஷம் என்ற நான்கில், அனைவரும் கட்டாயம் தன் வாழ்க்கையின் லட்சியமாக கொள்ள வேண்டியது "தர்மம்" (Human Rules) என்று சொல்லப்படுகிறது.
தர்மம், அர்த்தம், காமம், மோக்ஷம் என்ற இந்த நான்கு சமஸ்கரித சொல்லுக்கு ஈடாக, தமிழிலில்
1. அறம் (சமஸ்கரித சொல் தர்மம்)
2. பொருள் (சமஸ்கரித சொல் அர்த்தம்)
3. இன்பம் (சமஸ்கரித சொல் காமம்)
4. வீடு (சமஸ்கரித சொல் மோக்ஷம்)
என்று சொல்கிறோம்.

"மோக்ஷம்" என்ற சொல்லுக்கு, "விடுதலை" என்பது தான் நிகரான தமிழ் சொல்.

பின்பு ஏன்?
"அறம், பொருள், இன்பம், விடுதலை"
என்று சொல்லாமல்,
"அறம், பொருள், இன்பம், வீடு"
என்று தமிழிலில் சொன்னார்கள்?

காரணம் தெரிந்து கொள்ள வேண்டாமா?

'மோக்ஷம்' என்ற சொல் இரண்டு மோக்ஷத்தை குறிக்கிறது.
1. 'கைவல்யம்' என்பதும் ஒரு மோக்ஷம்.
2. 'வைகுண்டம்' என்பதும் ஒரு மோக்ஷம்.

கைவல்யம் என்றால் என்ன?
வைகுண்டம் என்றால் என்ன?
என்று புரிந்து கொள்ளும் போது, ஏன் 'மோக்ஷம்' என்ற சொல்லுக்கு 'வீடு' என்று தமிழில் சொன்னார்கள்? என்று புலப்படும்.

செய்த பாவத்திற்கு, இறந்த பின், ஜீவ ஆத்மா நரகம் சென்று தண்டனை அனுபவித்து, பின் மீண்டும் உலகில் பிறக்கிறது.

செய்த புண்ணியத்திற்கு, இறந்த பின், ஆத்மா சொர்க்கம் முதல் பிரம்ம லோகம் வரை, சென்று போகங்களை அனுபவித்து, பின் மீண்டும் உலகில் பிறக்கிறது.

ஆக, பாவம் செய்தாலும் மீண்டும் பிறவி உண்டு. புண்ணியம் செய்தாலும் மீண்டும் பிறவி உண்டு.

பிற மதங்களும், புண்ணியங்கள் செய்தால் சொர்க்கம் என்கிறது.

அந்த சொர்க்கமும் நிரந்தரமல்ல என்று சொல்கிறது நம் சனாதன தர்மம்.




சொர்க்க லோகத்தில் இருப்பவர்கள் தேவர்கள்.
இவர்கள் நம் புண்ணியம் தீர்ந்த பின், கீழ் லோகமாக இருக்கும் பூமிக்கு மீண்டும் பிறக்க அனுப்பி விடுகின்றனர்.

பிற மதங்கள் சொர்க்கத்துக்கு மேல் ஒன்று இருப்பதாக கூட நினைக்கவில்லை. அதுவே நிரந்தரம் என்றும் சொல்லிக்கொள்கின்றனர்.

நாமோ, சொர்க்க லோகத்துக்கும் மேல், இன்னும் 4 லோகங்கள் உள்ளது என்று சொல்கிறோம். அதுவும் நிரந்தரமில்லை என்றும் சொல்கிறோம்.
சொர்க்க லோகத்துக்கும் மேல்,
மகர லோகம் (stars), ஜன லோகம், தப லோகம், கடைசியாக ப்ரம்ம லோகம் என்று சொல்கிறோம்.

ப்ரம்ம லோகத்தையும் படைத்த நாராயணன் இருக்கும் இடம் வைகுண்டம் என்கிறோம். அங்கு செல்பவர்கள் மட்டுமே மீண்டும் பிறப்பதில்லை என்கிறது நம் சனாதன தர்மம்.

சொர்க்க லோகத்தில் நின்று விட்ட மற்ற மத அறிவு எங்கே?, நம் அறிவு எங்கே என்று இதிலேயே புரிந்து கொள்ளலாம்.



மோக்ஷம் என்ற கைவல்யம் :
உலகம் நிலை இல்லாதது (அநித்யம்) என்று உணர்ந்து, உடல் வேறு, ஆத்மா வேறு என்று உணர்ந்து, உலகத்தோடு ஒட்டாமல், பாவம் புண்ணியம் செய்யாமல், யோகியாய் இருந்து, இறந்த பின், அந்த ஆத்மா, கைவல்யம் (விடுதலை) என்ற முக்தியை அடைகிறது.

மோக்ஷம் என்ற வைகுண்டம் :
உலகம் நிலை இல்லாதது (அநித்யம்) என்று உணர்ந்து, உலகத்தோடு இருந்து கொண்டே, பாவம் புண்ணியம் அனைத்தையும் நாராயணன் பாதத்தில் சமர்ப்பித்து, நாராயணனே கதி என்று வாழ்ந்து, இறந்த பின், அந்த ஜீவ ஆத்மாவை, பரதெய்வமான நாராயணன், தன் இடமான வைகுண்டம் (வீடு) என்ற முக்தியை, மோக்ஷத்தை கொடுத்து விடுகிறார்.

கைவல்யம் (விடுதலை) அடைந்த ஜீவனும், மீண்டும் பிறப்பதில்லை.
வைகுண்டம் (வீடு) போய் சேர்ந்த ஜீவனும், மீண்டும் பிறப்பதில்லை.

இரண்டுமே மோக்ஷம் தான் என்றாலும், இதில் நாம் அடைய வேண்டியது விடுதலை மட்டுமல்ல, வீடு போய் சேர வேண்டும் என்று வேதத்தின் உண்மையான அபிப்ராயத்தை தெரிந்த தமிழர்கள்,
"அறம் பொருள் இன்பம் விடுதலை"
என்று சொல்லாமல்,
"அறம், பொருள், இன்பம், வீடு"
என்று சொன்னார்கள்.

ஒரு கைதி, பல ஆண்டுகள் சிறையில் இருந்து வந்தான்.
அவனுக்கு திடீரென்று விரக்தி வந்து விட்டது. இந்த சிறைச்சாலை என்னுடையது அல்ல, எப்படியாவது இதை விட்டு தப்பிக்க வேண்டும் என்று முடிவு செயதான்.
தப்பிக்க பல தடவை முயற்சி செய்தும், காவலாளிகள் பிடித்து விட்டனர்.
இனி முரண்டு செய்யாமல், ஒழுக்கமாக இருந்து, நல்ல பெயர் வாங்கி, விடுதலை அடைவோம் என்று எண்ணினான். அதற்கு பல வருடங்களுக்கு பிறகு பலனும் கிடைத்தது. நன்னடத்தை காரணமாக, ஒரு நாள் விடுதலை ஆகி விட்டான்.
இனி சிறை இல்லை, இனி எங்கு வேண்டுமானாலும் செல்லலாம் என்ற விடுதலை காற்றை அனுபவித்த அவன் பேரானந்தம் அடைந்தான். இது தான் கைவல்யம் என்ற மோக்ஷ நிலை.

கைவல்யம் என்பது, சிறையில் வைக்கப்பட்டு இருந்த ஒருவன் விடுதலை ஆவது போல. பிறப்பு இறப்பு என்ற சிறைச்சாலையில் இருந்து "விடுதலை" ஆவதே இவன் நோக்கம்.

அதே சிறைச்சாலையில் இன்னொருவன் இருந்தான். அவனும் எப்படியாவது தப்பிக்க வேண்டும் என்று நினைத்தான். இவன் தப்பிக்க நினைப்பதற்கு விடுதலை மட்டும் காரணமல்ல, அவன் வரவை எதிர்பார்த்து, அவன் தகப்பன், அவன் வீடு எல்லாம் உள்ளது என்று அறிகிறான்.
ஒரு நாள் இவனும் நன்னடத்தை காரணமாக, விடுதலை ஆகி விட்டான்.
இதற்கு முன்னால் விடுதலை ஆனவன், கூப்பிட ஆள் இல்லாததால், நேராக அங்கு இருக்கும் பார்க்கில் சுகமாக படுத்துக்கொண்டு வருவோர் போவோர்களை பார்த்து கொண்டு அலைந்து கொண்டிருந்தான்.

இவனோ, விடுதலை ஆனவுடன், தன் வீட்டுக்கு சென்று தகப்பன் வரவேற்க, அவன் வீட்டுக்கு போய் நிம்மதியாக தகப்பன் நிழலில் நிம்மதியாக இருந்தான்.
வைகுண்டம் என்பது, சிறையில் வைக்கப்பட்டு இருந்த ஒருவன் விடுதலை ஆன பின், தன் சொந்த தகப்பன் வீட்டுக்கு வந்து, தந்தையான நாராயணன் அரவணைப்பில் வீட்டில் இருப்பதே.

இந்த வேற்றுமையை உணர்ந்த தமிழ் ரிஷிகள், கைவல்யம் (விடுதலை) என்ற மோக்ஷத்தை நம் லட்சியமாக கொள்ளாமல், வைகுண்டம் (வீடு) என்ற மோக்ஷத்தையே நம் லட்சியமாக கொள்ள வேண்டும் என்று, அறம், பொருள், இன்பம், வீடு என்றனர்.



"வீட்டுக்கு" போய் சேர்வதே நம் நோக்கம்.

வைகுண்டம் என்பது கைவல்யத்தை விட உத்தமானது.

வீடு என்பது விடுதலையை விட உத்தமானது.

இதனால் தான் அறம், பொருள், இன்பம், விடுதலை என்று சொல்லாமல், அறம், பொருள், இன்பம், வீடு என்ற சொல்லில் முடிக்கின்றனர்.

திருவள்ளுவர் திருக்குறளில் அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் மூன்றும் மூன்று பகுதிகளில் சொல்லியிருக்கிறார்.
மோக்ஷத்தைப் பற்றித் தனியாக இப்படிப் பெரிய பகுதி இல்லாவிட்டாலும், அறத்துப் பாலிலேயே ‘இல்லற இயல்’ என்பதற்கு அப்புறம் ‘துறவற இயல்’என்று சில அதிகாரங்கள் பண்ணி, அதில் நூற்றுக்கு மேற்பட்ட குறள்களில் மோக்ஷம் ஸித்திப்பதற்கான வழிகளைச் சொல்லியிருக்கிறார்.
(http://www.kamakoti.org/tamil/3dk257.htm)

திருவள்ளுவர், சமஸ்கிருதம் அறிந்த, தமிழ் புலவர் என்பதும் வெளிச்சம் ஆகிறது.

வாழ்க தமிழ். வாழ்க தெய்வ பாஷை.