Followers

Search Here...

Showing posts with label பிற மதங்கள். Show all posts
Showing posts with label பிற மதங்கள். Show all posts

Wednesday 6 March 2019

பிற மதங்கள் "ஒரே கடவுள்" தான் என்று சொல்கிறது. ஹிந்துக்கள்? தெரிந்து கொள்வோமே...

உங்கள் கடவுள் பெயர் என்ன?
இப்படி ஒரு கேள்வியை, பிற மதத்தவர்களிடம் கேட்டால், தெளிவாக ஒரே தெய்வத்தை தான் சொல்வார்கள்.

இந்த கேள்விக்கான பதிலை பிற மதங்களில் உள்ளவர்கள் போல,
உலகம் முழுவதும் பரவியுள்ள சனாதன தர்மத்தில் உள்ள  ஹிந்துக்களால் "ஒரே பதிலாக" சொல்ல முடியாது.


"பல தெய்வங்கள் உண்டு" என்று சனாதன வேதமே காட்டுகிறது.

விஷ்ணு, ருத்ரன், வருணன், இந்திரன், ப்ரம்மா, அக்னி" என்று பெயர் சொல்லி அழைக்கிறது.
இதனால்,
ஒரு ஹிந்துவை பார்த்து "உன்னுடைய கடவுள் யார்?" என்று கேட்டால்,
அவன் "முருகன்" என்பான்.
இன்னொரு ஹிந்துவை கேட்டால், "விஷ்ணு" என்பான்.
இன்னொரு ஹிந்துவை கேட்டால், "காளி" என்பான்.
இன்னொரு ஹிந்துவை கேட்டால், "சிவன்" என்பான்.
இன்னொரு ஹிந்துவை கேட்டால், எந்த பெயரையும் சொல்லாமல் "பரஞ்ஜோதி" என்பான்.
இன்னொரு ஹிந்துவை கேட்டால், எந்த பெயரையும் சொல்லாமல் "ப்ரம்மம்" என்பான்.
இன்னொரு ஹிந்துவை கேட்டால், எந்த பெயரையும் சொல்லாமல் "பரமாத்மா" என்பான்.
இன்னொரு ஹிந்துவை கேட்டால்,  பரமாத்மா எங்கும் இருப்பதால், எனக்குள்ளும் இருப்பதால், "நானும் கடவுள், நீயும் கடவுள், அனைத்துமே கடவுள்" என்பான்.

தெய்வத்தை பற்றிய போதிய அறிவோ, ஆராய்ச்சியோ இல்லாததால், பிற மதங்களில் "ஒரே தெய்வம்" தான், என்று சொல்லி முடித்து விடுகிறது.

இப்படி சொல்லி விடுவதால், சந்தேக கேள்வி எழுந்தாலும், 'தெய்வத்தை பற்றி ஆராய்ச்சி செய்யாதே, எதிர் கேள்வி கேட்காதே' என்று கட்டளை இட்டு தடுக்கிறது.

'நான் சொல்லும் தெய்வத்தை நம்பு, இல்லையென்றால் நிரந்தரமாக நரகம் தான் கிடைக்கும்'
என்று பயமுறுத்துகிறது.

500BCல், கௌதம புத்தராலும், மஹாவீரராலும் உருவாக்கப்பட்ட பௌத்த, சமண (ஜைன) மதங்களும் "ஒரே தெய்வம்" என்று தான் சொல்கிறது.

33AD சமயத்தில் உருவாக்கப்பட்ட கிறிஸ்துவ மதமும் "ஒரே கடவுள்" தான் என்று சொல்கிறது.

அதற்கு பின் வந்த,
இஸ்லாம் (surrender to god) மதமும் "ஒரே கடவுள்" தான் என்று சொல்கிறது.

இந்த இரு மதங்களும், யூத மதத்தை உருவாக்கிய "ஆப்ரஹாம் என்ற இப்ராகிம்" அவர்களின் அடிப்படை கொள்கையான "ஒரே கடவுள்" என்பதை கொண்டு உருவாக்கப்பட்டது.
இரு மதங்களும் இவரை மதிக்கிறார்கள்.

யூத மதமும் "ஒரே கடவுள்" தான் என்று சொல்கிறது.
மூன்று மதங்களும் "ஒரே தெய்வம்" என்ற கொள்கை கொண்டது என்றாலும், ஒவ்வொருவரும் ஒவ்வொரு "மார்க்கங்களை" பின்பற்றுகிறார்கள்.


மார்க்கம் மாறுபடுவதால், இவர்களுக்குள் பகையும் உண்டு.

"இஸ்ரேல் பாலஸ்தீன" சண்டை உலகம் அறிந்தது.
அமெரிக்காவுக்கும் இஸ்லாமிய நாடுகளுக்கும் ஏற்படும் சண்டை உலகம் அறிந்தது.

ஹிந்துக்களின் தர்மத்தில் மேல், வழிபாட்டு முறையின் மேல் இவர்களுக்கு உண்டான வெறுப்பால்,
இந்தியாவுக்குள் 1200 வருடங்கள் நுழைந்த பிற மதங்கள், செய்த அட்டகாசம் கொஞ்சம் நஞ்சம் அல்ல. இதுவும் உலகம் அறிந்ததே

1200 வருடங்களில்,  பாகிஸ்தான் முதல், மஹாராஷ்டிரா வரை கோவில்கள் அனைத்தும் இடிக்கப்பட்டன.
கோவிலுக்குள் உள்ள விக்ரகங்களை உடைத்து, பூஜை செய்ய முடியாதபடி செய்து தன் மத நம்பிக்கையை நிலைநாட்ட 1200 வருடங்கள் கடும் முயற்சி செய்தனர். 
உடைந்த கோவில் விக்ரஹங்களை என்ன செய்வதென்று? என்று தெரியாமல், உடைந்த விக்ரஹங்களை கட்டிக்கொண்டு அழுதனர் ஹிந்துக்கள்.
மீண்டும் கோவிலை கட்டினால், இடித்து விடுவார்களே!! என்ற அச்சத்தில், ஆகம விதிப்படி பூஜைகள் இனி நடத்த முடியாது என்ற நிலையில்,
ஊரில் உள்ள பொது ஜனங்களே தன் வீட்டில் இருந்து பால், துளசி, வில்வம் என்று எடுத்து வந்து, இடிந்து போன அந்த கோவிலிலேயே, மூல விக்ரஹங்களை வைத்து, தன் கையாலேயே அபிஷேகம், நெய்வேத்யங்கள் செய்ய ஆரம்பித்தனர்.
ஹிந்துக்களுக்கு விடிவு பிறக்குமா? என்று அந்த தெய்வத்திடமே பிரார்த்தனை செய்து கொண்டு, 1200 வருடங்கள் பொது மக்கள், ஆத்திரத்தை மனதில் தேக்கி கொண்டு, காத்து கிடந்தனர்.

கோவிலை தரை மட்டம் ஆக்கி, விக்ரஹங்களை எடுத்து கொண்டு சென்ற போது, தாங்களே ஒரு சிலையை வடிவமைத்து, தன்னால் முடிந்த கோவிலை கட்டி, தாங்களே பூஜை செய்ய ஆரம்பித்தனர்.

தமிழ்நாட்டில், மூல விக்ரஹங்களை ப்ராம்மணன் கூட சென்று தொட முடியாது.
ஆகம விதிப்படி நிர்மாணிக்கப்பட்ட இந்த விக்ரஹங்களை ஒரு பரம்பரையில் வந்த அரச்சர்கள் மட்டுமே தொட அனுமதிக்கபட்டனர்.
"மற்ற பிராம்மணன் கூட" தொட முடியாது.


கோவிலே இடிக்கப்பட்டு,
விக்ரஹங்கள் கொள்ளை அடிக்கப்பட்டு போன வட இந்தியாவில்,
பொது மக்களே மீண்டும் சிலைகள் செய்து வழிபட நேர்ந்ததால்,
அங்கு ஆகம பூஜைகள் காண முடிவதில்லை. 

பல கோவில்களில் அங்கு அனைவரும் அபிஷேகம் செய்ய அனுமதிப்பதை பார்க்கிறோம்.
ஹிந்துக்கள் "ஹிந்து" என்று சொல்லிக்கொள்ளவும், பொதுவாக அதிக உத்வேகத்துடன், வீரத்துடன், வட இந்தியாவில் இருப்பதற்கு காரணம் இது தான்.
வட இந்தியர்கள் இழந்தது, தென் இந்தியர்களை விட மிக அதிகம்.
1200 வருடங்கள் அனுபவித்த துயரங்கள் மனதில் இருந்து மீள முடியாத துயரங்கள்.

1200 வருட இழப்புகளுக்கு, சுதந்திரம் பெற்றும் நீதி கிடைக்காமல் இருப்பது, பொதுவாக வட இந்தியாவில் இருக்கும் ஹிந்துக்களை உறுத்தி கொண்டே இருக்கிறது என்பது கசப்பான உண்மை.

புராதன கோவில்கள் அனைத்தும் அழிக்கப்பட்டு, கோடிக்கணக்கான ஹிந்துக்கள் கொல்லப்பட்டு, முழுவதும் பாதிக்கப்பட்டவர்கள் "வட இந்தியர்கள்".

1200 வருடங்களும் கோவில்கள் இடிக்கப்பட்டு, பாதிக்கப்பட்டவர்கள் "மத்திய இந்தியர்கள்" (கர்நாடக, ஆந்திர). 
ஆனால், மீண்டும் மீண்டும் விஜயநகர அரசால், ஓரளவு கோவில்கள் மீண்டும் கட்டப்பட்டது. 

80 வருடங்கள் மட்டுமே தாக்கப்பட்டு, பின்னர் பெரும்பாலும் விஜயநகர அரசாட்சி நிழலில் தப்பித்தது "தமிழகம்".

இப்படி வட இந்தியா முழுவதும், அனைத்து கோவிலும் இடிக்கப்பட்டு, பூஜை செய்த ப்ராம்மணர்கள் அனைவரும் கொல்லப்பட்டு,
எதிர்த்த க்ஷத்ரிய அரசர்களிடம் தோற்கும் சமயத்தில் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டு, பிறகு அவர்களை திடீரென்று தாக்கி கொன்று, பெரும் நாசத்தை உண்டு செய்தனர்.
இந்த காரணத்தால், இன்று தெற்கு இந்தியாவில் உள்ள கோவில்களை போல, பூஜை விதிகள் போல, வட இந்தியாவில் பூஜைகளோ, கோவிலின் அமைப்போ இல்லை.

கர்நாடக தேசமும், ஆந்திர தேசமும் விஜயநகர பேரரசால் முடிந்த அளவுக்கு காப்பாற்றப்பட்டது. 
இருந்தாலும்,
கர்நாடகாவில் பல கோவில்கள் பாதி இடிக்கப்பட்டு, சிலைகள் உடைக்கப்பட்டு, இருப்பதை பல இடங்களில் இன்றுவரை காணலாம்.

தமிழகம் ஆரம்ப காலத்தில் "கில்ஜி மற்றும் துக்ளக்" ஆட்சியின் போது, தாக்கப்பட்டது.
மதுரை மீனாட்சி கோவிலை பிடித்தே விட்டனர் பிற மதத்தினர்.


உள்ளே இருக்கும் சிவ லிங்கத்தை உடைக்க சென்ற போது, கோவில் பட்டர்கள் சுவர் எழுப்பி, ஒரு பெரிய மற்றொரு சிவ லிங்கத்தை வைத்து விட்டனர்.
உள்ளே நுழைந்த கில்ஜி படையினர், ஈட்டி போன்ற ஆயுதங்கள் கொண்டு இடித்து தள்ளினர்.
80 வருடங்கள் பாண்டிய நாடு "மதுரை முதல் ஸ்ரீ ரங்கம் வரை" சிக்கி தவித்தது.
கர்நாடகத்தில் இருந்து, விஜயநகர இளவரசன் கம்பண்ணா படையெடுத்து வந்து, அனைவரையும் துரத்தி, மீண்டும் ஹிந்துக்களை வாழ வைத்தார்.

அந்த இடிக்கப்பட்ட சிவலிங்கம் இன்றும் கோவிலில் வைக்கப்பட்டு நமக்கு நடந்த விபரீதத்தை சொல்கிறது.
ஸ்ரீ ரங்கத்தில் கோவிலை இடிக்க முயற்சித்த போது 13000 வைஷ்ணவர்கள் கொலை செய்யப்பட்டனர். 

ஸ்ரீரங்கநாதர் 80 வருடங்கள் கேரளா, திருப்பதி என்று பல இடங்களில் இருந்து, மீண்டும் ஹிந்துக்கள் ராஜ்யம் அமைந்த பின்னர் ஸ்ரீ ரங்கம் திரும்பினார்.
தஞ்சாவூர், கும்பகோணம் போன்ற ஊர்களில் இவர்கள் அடி எடுத்து வைக்கும் முன்னரே, விஜயநகர அரசர்கள் தமிழர்களை காப்பாற்றி விட்டனர்.
அதனால் தான் இன்று வரை தமிழகம் மட்டும் பெரும் பாதிப்பில் இருந்து தப்பித்தது.
பீகாரில் உள்ள நாளந்தா (Nalanda University) என்ற கல்விக்காக இருந்த இடத்தை நாசமாக்கி, அங்கு படித்துக்கொண்டிருந்த பௌத்த, மற்றும் ஹிந்துக்களை கொன்று குவித்தனர்.
இதற்கு தலைமை ஏற்ற பக்தியார் (Bhakthiyar) என்ற இஸ்லாமிய படை தளபதி அங்கேயே தங்கி பிஹார் மற்றும் வங்காள தேசங்களை தாக்கினான்.




அவன் பெயரில் ஏற்பட்ட ஒரு ஊர் இன்றும் பக்தியார்பூர் (Bhakthiyarpur) என்ற பெயரிலேயே உள்ளது.
இன்றைய பிஹார் முதல் அமைச்சர் "நிதிஷ் குமார்" இந்த ஊரில் தான் பிறந்தவர்.
பாரத மக்களை கொன்றவன் பெயரிலேயே, இன்று வரை இந்த ஊரின் பெயர் இருப்பது, பிஹார் மாநிலத்துக்கு அவமானம்.
அன்று உயிருக்கு பயந்து திபெத் போன்ற தேசங்களுக்கு ஓடினார்கள் அங்கிருந்த பௌத்தர்கள்.



"நான் சொல்லும் முறையில் தெய்வத்தை வணங்கினால் தான், உனக்கு சொர்க்கம், இல்லையென்றால் நிரந்தர நரகம் தான் கிடைக்கும்"
என்று அவரவர் மார்க்கங்கள் தீர்மானமாக சொல்வதால்,
'ஒரே கடவுள்' என்ற கொள்கை அனைவருக்கும் இருந்தாலும், 'தன் மார்க்கம் தான் சரியானது' என்று சொல்லி மத சண்டைகள் கிளம்பின.
இஸ்லாம் "ஒரே கடவுள்" என்ற கொள்கை கொண்டதாக இருந்தாலும், அதற்குள்ளும் பல மார்க்கங்களை கொண்டு பிரிந்துள்ளது.
முகம்மது நபி இறந்த பின், ஷியா, சுன்னி என்றும், அதற்குள் பல உட்பிரிவுகளாகவும் பிரிந்து உள்ளனர்.

ஈரான் நாட்டு ஷியா இஸ்லாமியர்களை கண்டால், அரேபிய சுன்னி முஸ்லிமுக்கு ஆகாது.
ஷியா, சுன்னி முஸ்லிம்கள் உண்மையான முஸ்லீம்கள் இல்லை, அவர்கள் மெக்காவில் ஒரு கல்லை நோக்கி ப்ரார்த்தனை செய்கிறார்கள் என்று, உருவ வழிபாடு எந்த வகையிலும் செய்ய கூடாது என்று மெக்காவையே இடித்து தள்ளவும் முயன்றனர் ஒரு இஸ்லாமிய பிரிவினர் 1979ADல்.
கிறிஸ்தவமும் "ஒரே கடவுள்" என்ற கொள்கை கொண்டதாக இருந்தாலும், அதுவும் பல மார்க்கங்களை கொண்டு பிரிந்துள்ளது.
Protestant, Catholic என்றும், அதற்குள் பல உட்பிரிவுகளாகவும் பிரிந்து உள்ளனர்.

"ஒரே கடவுள்" தான் என்று சொல்லி 33AD,  570ADகளில் உருவான மதங்களில் கூட பல மார்க்கங்கள் உண்டாகி விட்டன. 

"உருவ வழிபாடு கூடாது" என்று சொல்லும் இவர்களும்,
சிலுவை, ஏசுவின் சிலை, தேர் இழுப்பது, வழிபாடு செய்ய ஏதுவாக மசூதி, சர்ச், அதற்கான ஒழுக்கமான  உடைகள் என்று வைத்து உள்ளனர்.

"ஒரே கடவுள்" என்று சொல்லும் பிற மதங்களில், பல மார்க்கங்கள் உண்டாகி உள்ள போது,
"பல தெய்வங்கள் உண்டு" என்று சொல்லும் சனாதன வேதம், பல மார்க்கங்களை கொண்டிருப்பது ஆச்சர்யம் இல்லையே!!.

சனாதன வேதம் "பல தெய்வங்களை காட்டி, அந்த தெய்வங்களை பூஜிக்கலாம்" என்று சொல்லும் போது, பல மார்க்கங்கள் இருப்பது ஆச்சர்யம் ஒன்றும் இல்லையே !

சனாதன தர்மமான நம் ஹிந்து மதத்தை (வேத மதத்தை) ஆர்வத்தோடு அறிந்து கொள்ள ஆசைப்பட வேண்டும்.
அறிவை வளர்த்து கொள்ள வேண்டும்.

பிற மதங்கள் "ஒரே கடவுள்" தான் என்று சொல்கிறது.

"ஒரே கடவுள்" என்பது உண்மையா? 
என்று ஹிந்துவிடம் கேட்டாலும் "ஆமாம்" என்று தான் சொல்லுவான்.
அது தான் உண்மையாகவும் இருக்க முடியும், அல்லவா?

"'ஒரே கடவுள்' இந்த உலகை ஆளவில்லை, 'பல கடவுள்கள்' உள்ளார்கள்" என்று சொன்னால், அதை விட மடத்தனம் இருக்கவே இருக்காது.

அப்படி பல கடவுள்கள் இருந்தால்,
கடவுளுக்கு இடையில் 'யார் பெரியவன்?' என்ற சண்டை வருமே? 

சனாதன வேதம்,
16 லட்ச வருடங்கள் கொண்ட க்ருத யுகம்,
12 லட்ச வருடங்கள் கொண்ட த்ரேதா யுகம்,
8 லட்ச வருடங்கள் கொண்ட துவாபர யுகம் தாண்டி,
3102BCEல் கலியுகம் ஆரம்பித்து,
இன்று வரை உள்ளது.
இன்று வரை ஹிந்துக்களாக இருக்கும் உலகத்தில் உள்ள அணைத்து மக்களும், லட்சக்கணக்கான வருடங்களாக பரம்பரை பரம்பரையாக ஹிந்துக்களாக உள்ளனர்.

இன்றைய தேதியில் இந்தியாவில் மட்டுமே 80 கோடி ஹிந்துக்கள் உள்ளோம்.
மேலும்,
ஒவ்வொரு அயல் நாட்டிலும் லட்ச கணக்கான ஹிந்துக்கள், ஒவ்வொரு நாட்டிலும் இன்றும் ஹிந்துவாக உள்ளனர்

கொஞ்சம் கவனித்தால் சனாதன வேதம்
உண்மையில் ஒரே கடவுளை சொல்கிறதா? இல்லை, பல கடவுளை சொல்கிறதா? என்று புரியும்.

"ஒரே ஈஸ்வரன் தான்" என்று வேதமே சொல்கிறது.

"பல தெய்வங்கள் இருக்கிறார்கள்" என்று நினைப்பதே, விஷயம் தெரியாத குழந்தையின் புத்தியை போன்றது.
வெளியோட்டமாக பார்த்து விட்டு, தப்பு தப்பாக அனுமானம் செய்ய கூடாது ஹிந்துக்கள்.

பல தெய்வங்கள் முதலில் எப்படி இருக்க முடியும்?
ஒரே அந்தஸ்து உடைய, ஒரே பலம் பொருந்தியவர்களாக பல தெய்வங்கள் உண்மையில் இருந்தால்,
ஒரு தெய்வம் படைத்த உலகத்தை, இன்னொரு தெய்வம் அழித்து விடுமே!!

தெய்வங்களுக்குள் சண்டை அல்லவா வந்து விடும்?!!.

மேலும்,
ஒரு தெய்வம், இன்னொரு தெய்வத்தை பற்றி பொறாமை படும் என்றல்லவா சொல்ல வேண்டி இருக்கும்.

"வேதத்தில் சொல்லியுள்ள தெய்வங்களுக்குள் சண்டை இல்லை" என்பது நம் கோவில்களை பார்த்தாலே தெரியும்.
சிதம்பரம் "நடராஜர்" கோவிலில் "கோவிந்தராஜ பெருமாளாக" தானும் உள்ளேயே இருக்கிறார்.

பெருமாள் கோவிலில் "சிவபெருமான், விநாயகர்" என்று இருக்கிறார்கள்.
அழகர் கோவிலில், அழகர் பெருமாளும், அழகர் மலையில், முருக பெருமானும் உள்ளனர்.
தன் பக்தன் ஹநுமானுக்கு ஏற்பட்ட கோவிலில் கூட, பகையே இல்லாமல் ராமர் தனக்கு ஒரு சிறு சந்நிதியில் இருக்கிறார்.

ஆக,
ஒரு தெய்வம் பெரிய தெய்வமாக நின்று, மற்ற தெய்வங்கள் அந்த தெய்வத்துக்கு அடங்கி நடக்கிறது என்று புரிந்து கொண்டாலே, ஹிந்து மதம் ஒரே கடவுளை தான் சொல்கிறது என்று புரியும்
ஒரு அலுவலகத்தில், பல வேலையாட்கள் சேர்ந்து பணி செய்கிறார்கள்.

இவர்கள் யாவருக்கும் "ஒரு முதலாளி" இருந்து கொண்டு, இவர்களை கண்காணித்து, அவர்களுக்கு சம்பளமும் கொடுத்து, அலுவலகத்தை ஒழுங்காக நடத்தி செல்கிறார்.
அதே போல, பல தெய்வங்கள் வேதத்தில் சொல்லப்பட்டாலும்,
முதலாளி ஒருவனே. 
ஒரே கடவுளே. ஒரே பரமாத்மாவே என்று வேதத்தை கற்று உணர்ந்தவர்கள் அறிகிறார்கள்.

வேதத்தில் பரமாத்மாவின் பெயர் என்ன? என்று கேட்கும் போது,
"பரப்ரம்மம்" என்று சொல்கிறது.

ப்ரம்மமாகிய அந்த பரமாத்மா "பரஞ்ஜோதி" ரூபமானவர் என்றும் ஜோதி ஸ்வரூபன் என்று சொல்கிறது.

ஆக, யார் கடவுள்? என்று ஹிந்துவை கேட்டால்,
'"பரமாத்மா" என்றும் "ப்ரம்மம்" என்றும், 
"பரஞ்ஜோதி"யாக இருப்பவரே என் கடவுள்' என்று சொல்லலாம்.

"ஒரே கடவுள் தான்" என்று சனாதன வேதம் சொல்கிறது.
விஷயம் தெரியாத குழந்தையின் புத்தியை போல, வெளியோட்டமாக பார்த்து விட்டு, தவறாக அனுமானம் செய்ய கூடாது ஹிந்துக்கள்.
அந்த ப்ரம்மம் யார்? என்ற கேள்விக்கு, அவர் "மகாலக்ஷ்மியின் கணவர்" என்று தெளிவாக வேதமே சொல்லி காட்டுகிறது.  Click Here

நாராயணனே பரப்ரம்மம் என்று வேதமே காட்டி விடுகிறது.
அந்தர்யாமியாக அனைவரிடத்திலும் விஷ்ணுவாக வியாபித்து உள்ள பரப்ரம்மம், என்று பார்க்கும்போது அவரே ருத்ரனாக தோன்றினார்.
அவரே பிரம்மாவை படைத்தார்.
தேவர்களை படைத்தார்.
நம்மையும் படைத்தார்.

அனைவருக்குள்ளும் ப்ரம்மமே இருப்பதால், யாரை பூஜித்தாலும், அது நாராயணனை தான் போய்  சேருகிறது.
இதையே ஸ்ரீ கிருஷ்ணர் பகவத் கீதையிலும் சொல்கிறார்.
ஆகாஸாத் பதிதம் தோயம் யதா கச்சதி சாகரம்,
சர்வ தேவா நமஸ்கார: கேசவன் ப்ரதி கச்சதி.

"எப்படி ஆகாயத்தில் இருந்து விழுந்து, பல நதிகளாக ஓடி வரும் நீர், கடைசியில் ஒரே இடமான கடலை போய்  சேருமோ,
அதுபோல,
எந்த தேவதைகளை நாம் வணங்கினாலும், அந்த தேவதைகள் நம் வணக்கத்தை முதலாளியான நாராயணன் பாதத்தில் சமர்ப்பித்து, பலனை அவரிடம் பெற்று, தான் தருவது போல, நமக்கு தந்து விடுகிறார்கள்."

இந்த தர்மம் யுக யுகங்களாக உலகம் எங்கும் எப்பொழுதும் உள்ளது.

ஹிந்து தர்மத்தின் பல கோட்பாடுகள், புதிதாக மனிதர்களால் உருவாக்கப்பட்ட மதங்களில் பயன்படுத்தபடுகிறது.

ஒரே கடவுள் தான். அவரே ப்ரம்மம் என்று சனாதன தர்மம் சொல்வதை தான், பிறமதங்கள் சொல்கிறது.

அத்வைத மார்க்கம் ஒரே கடவுள் என்று தானே சொல்கிறது.
குகைகளில், மலைகளில் தனியாக அமர்ந்து ரிஷிகள் அந்த பரமாத்மாவை தியானித்து தவம் செய்தனர், என்று ஹிந்துக்கள் கேள்விப்பட்டது இல்லையா?
அவர்கள் கோவில் கோவிலாக அலைந்தார்களா?
கையில் விக்கிரகம் வைத்து பூஜித்தார்களா? இல்லையே!!
இந்த மார்க்கத்தை தானே "அத்வைத" மார்க்கம் என்று காட்டினார் ஆதி சங்கரர்.
ஹிந்துக்கள் சற்று சுய சிந்தனையோடு யோசிக்க வேண்டும்.


சனாதன வேதத்தில் இல்லாத மார்க்கத்தை யாரும் புதிதாக காட்டிவிடவில்லை.
அன்பு காட்டு, இரக்கம் காட்டு, உதவி செய், என்று சில உருவாக்கப்பட்ட மதங்கள் சொல்கின்றன.
இந்த அறிவுரையை நம் தாய், தந்தை, குருவே சொல்கிறார்களே!!

"சந்நியாசிகள், துறவு கொண்டு வாழ்பவர்கள்" இந்த மார்க்கத்தை தானே கடைப்பிடிக்கிறார்கள்!!.

கடவுளை அடைய இதுவும் ஒரு மார்க்கம் என்று சொல்கிறது நம் சனாதன தர்மம்.
உருவாக்கப்பட்ட மதங்களோ, "கடவுளை அடைய இது ஒன்றே மார்க்கம்" என்று சொல்லி மக்களை கஷ்டப்படுத்துகிறது.

சந்யாசியாக வாழ நினைப்பவன், "சந்யாஸ மார்க்கத்தை" எடுத்து கொண்டு, தெய்வத்தை அடையலாம் என்று சொல்கிறது நம் சனாதன தர்மம்..

ஒரே கடவுள், அவரே பரமாத்மா, அவரே பரஞ்சோதி, அவரே எல்லாமுமாக இருக்கிறார் என்று வாழ நினைப்பவன்,
"அத்வைத மார்க்கத்தை" எடுத்து கொண்டு, தெய்வத்தை அடையலாம் என்று சொல்கிறது நம் சனாதன தர்மம்...

ஒரே கடவுள், அவரே பரமாத்மா, அவரே பரஞ்சோதி, அவரே நாராயணன், அவரே சிவன், அவரே முருகன், அவரே காளி, அவரே விநாயகன். நாமெல்லாம் சாதாரண ஜீவன் தான். அந்த பரமாத்மா தான் இந்த உலகையும், என்னையும் படைத்தார், என்று வாழ நினைப்பவன்,
"த்வைத மார்க்கத்தை" எடுத்து கொண்டு, தெய்வத்தை அடையலாம் என்று சொல்கிறது நம் சனாதன தர்மம்..

ஒரே கடவுள் தான். அவரே நாராயணன். எல்லாம் வல்லவனாக இருப்பதால், அந்த பரமாத்மாவே ஜீவாத்மாவாகவும் கண்ணாடியில் தெரியும் பிம்பம் போல, சிவனாகவும், இந்திரனாகவும், முருகனாகவும், உலகில் இருக்கும் சாதாரண ஜீவனாகவும் உள்ளது. பிரித்து பார்த்தால் தனி தனி போல தெரிந்தாலும், உண்மையில் ஒரே பரமாத்மா தன் சக்தியால் இப்படி வெவ்வேறாக தெரிகிறார் என்று வாழ நினைப்பவன், விஷிஷ்ட அத்வைத மார்க்கத்தை எடுத்து கொண்டு, தெய்வத்தை அடையலாம் என்று சொல்கிறது நம் சனாதன தர்மம்...

பிற மதங்கள் சொல்லும் "ஒரே கடவுள்" சித்தாந்தம் நமக்கு புதிதல்ல.

ஒரே கடவுள் என்று சொல்லும் அத்வைத மார்க்கத்தை போல தான் இஸ்லாமிய மார்க்கமும் சொல்கிறது.
கடவுள் அரூபமானவர் என்று இருவருமே சொல்கிறார்கள்.

அன்பு காட்டு, இரக்கம் காட்டு, உதவி செய் என்று சொல்லும் சந்யாஸ மார்க்கத்தை போல பௌத்த, ஜைன, கிறிஸ்தவ மார்க்கமும் சொல்கிறது.

"தெய்வ சிந்தனை உள்ள மனிதனாக தான் வாழ வேண்டும்" என்பது தான் வேதத்தின் நோக்கம்.

"தெய்வ சிந்தனை உனக்கு, ப்ரம்மமாக, அரூபமா வழிபட்டால் தான்  பிடிக்கும் என்றால், அப்படியே வழிபடு" என்று அனுமதிக்கிறது ஹிந்து மதம்..

"தெய்வ சிந்தனை உனக்கு, முருகனாக வழிபட்டால் தான் பிடிக்கும் என்றால், அப்படியே வழிபடு" என்று அனுமதிக்கிறது ஹிந்து மதம்.

"தெய்வ சிந்தனை உனக்கு, சிவனாக வழிபட்டால் தான்  பிடிக்கும் என்றால், அப்படியே வழிபடு" என்று அனுமதிக்கிறது ஹிந்து மதம்.

"தெய்வ சிந்தனை உனக்கு, யாரை பார்த்தாலும் வருகிறது என்றால், அப்படியே வழிபடு" என்று அனுமதிக்கிறது ஹிந்து மதம்.

"தெய்வ சிந்தனை தான் முக்கியமே" தவிர, மார்க்கங்கள் எப்படி இருந்தாலும், அந்த ப்ரம்மமாகிய நாராயணன், நாம் வழிபடும் தெய்வங்கள் மூலம் பலன் தந்து, மெதுவாக தன் பக்கம் இழுத்துவிடுகிறார்.

நாராயணனை நேரிடையாக வழிபடுபவன், மகா பாக்கியசாலி.
பிரம்மத்தை நேரிடையாக உபாசிக்கும் புண்ணியம் செய்தவர்கள் அவர்கள். இவர்கள் மோக்ஷத்திற்கு அருகில் நிற்பவர்கள்.
"இறப்பு பிறப்பு என்ற சம்சார சூழலில் இருந்து தப்பிக்க" வாய்ப்பு உள்ளவர்கள்.

"வேதம்" என்ற சொல் அழகாக இருப்பதால் அதை பிற மதத்தவர்கள் தான் எழுதிய புத்தகங்களுக்கு வைத்து கொள்கின்றனர் என்று பார்க்கிறோம்.

"மனுவில் இருந்து மனித படைப்புகள் உருவானது" என்று நம் மதம் சொன்னால், அதை கொண்டே, ஆங்கிலத்தில் "Man" என்றே பயன்படுத்துகின்றனர். மனிதனை "Man"  என்று சொல்லாமல், "Adam" என்று சொல்லி இருக்கலாமே பிற மதத்தவர்கள்.

பரஞ்சோதி என்று ப்ரம்மத்தை குறிப்பிடும் வார்த்தையை, ஆங்கிலத்தில் "holy spirit" என்று சொல்லி கடவுளை குறிப்பிடுகின்றனர்.
ஹிந்து மாதத்தில் இருந்து தானே அனைத்தும் திருடப்பட்டு உள்ளது.


சனாதன தர்மத்தில் 12 மாதங்கள் என்று சொன்னால், அதையே அறிவியல் பூர்வமாக உண்மை என்று ஒப்புக்கொண்டு ஆங்கில மாதங்களும் 12 என்று ஆக்கி விட்டனர்.
"உலகம் உருண்டை" என்று வராஹ அவதாரத்தில் காட்டி உள்ளார் என்று சொல்லியும், தான் தோன்றி தனமாக "உலகம் தட்டை" என்று பிடிவாதம் செய்து, கலிலியோவை சர்ச்சில் மன்னிப்பு கேட்க வைத்து, சித்ரவதை செய்தனர்.
அறிவியல் மூலம், உலகம் உருண்டை தான் என்றதும் அமைதி ஆகினர்.
நவ க்ரஹங்கள் உண்டு, ஒவ்வொன்றுக்கும் ஒரு குணம் உண்டு, என்று சொல்லி, "செவ்வாய் கிரகம் சிவப்பானது என்று சிவப்பு துணி கட்டி வழிப்பட்டதை" ஒப்புக்கொள்ளாமல் இருந்து, கடைசியில் செவ்வாய் கிரகம் (mars) உண்மையில் சிவப்பு கிரஹம் (red planet) என்று இன்று ஒப்புக்கொள்கிறது.
ஒரே கடவுள் என்று சொல்லியும் பல விதமாக பிரிந்து உள்ளனர் பிற மதத்தினர்...

இயற்கை கூட ஒரே மாதிரி இல்லாத போது, மனிதனுக்கு மட்டும் ஒரே மார்க்கம் என்று சொல்வதே அபத்தம்.

இந்த விசாலமான புத்தி, சனாதன தர்மத்தில் உள்ள நமக்கு உள்ளது..

"மனிதனின் தெய்வ சிந்தனை வளர்ப்பதே" நம் சனாதன தர்மத்தின் நோக்கம்.

"எல்லாம்வல்ல கடவுள்" என்று சொல்லிவிட்டு,
  • அவரால் இப்படி வர முடியாது, அப்படி வர முடியாது,
  • இந்த மார்க்கம் வழி வந்தால் தெய்வ சிந்தனை ஏற்படும், 
  • இன்னொரு மார்க்கம் வழி வந்தால் தெய்வ சிந்தனை ஏற்படாது 

என்று சொல்வதே, எல்லாம் வல்ல இறைவனுக்கு அவமானம்.

இந்த விசால புத்தி, ஹிந்துக்களிடம் இருப்பதால் தான் மற்ற மதங்கள் "யாரையோ தெய்வம்" என்று சொன்னாலும் மதிக்கின்றனர்.
உனக்கு தெய்வம் எப்படி இருந்தால் பிடிக்கும்?
"எனக்கு கம்பீரமான ஒரு வீரன் போல இருந்தால் தான் பிடிக்கும்."
பரமாத்மா ஸ்ரீ ராமராக வந்தார். அவரை பார்த்தால் மிகவும்  பிடிக்கிறது.
அப்படியென்றால், ஸ்ரீ ராமரையே வணங்கு என்று அனுமதிக்கிறது ஹிந்து மதம்.
"எனக்கு குழந்தையாக இருக்க வேண்டும், நான் குண்டு, அதனால் என் தெய்வமும் குண்டாக இருக்க வேண்டும்."
அப்படியென்றால், பிள்ளையாரை வணங்கு என்று அனுமதிக்கிறது ஹிந்து மதம்.
"எனக்கு தெய்வத்தை உருவமாக வழிபட ஆசையில்லை.."
அப்படியென்றால், நீ தியானம், யோகம் செய்து, வணங்கு என்று அனுமதிக்கிறது ஹிந்து மதம்..

பரமாத்மா எந்த வழிபாட்டையும் ஏற்கும் பலம் உள்ளவர் என்பதால், நாராயணனை வணங்கினால் தான் உனக்கு சுவர்க்கம், இல்லையென்றால் நரகம் என்று சொல்வதே இல்லை.
சுவர்க்கம், நரகம் உன் பாவ புண்ணியத்தை பொறுத்தது என்று சொல்கிறது ஹிந்து மதம்.

ஹிந்துக்களின் பெருமை அளவிட முடியாதது.
வெளிநாட்டவர்கள் கூட ஹிந்துவாக வாழ ஆசைப்படுகிறார்கள்.

HARE RAMA HARE KRISHNA  - BHAJAN

sandhyavandanam Evening - Yajur - Hear and understand meaning of each sloka 


sandhyavandanam Afternoon - Yajur - Hear and understand meaning of each sloka 







sandhyavandanam Morning - Yajur - Hear and understand meaning of each sloka