Followers

Search Here...

Showing posts with label காலம். Show all posts
Showing posts with label காலம். Show all posts

Thursday 29 December 2022

பரீக்ஷித் எத்தனை வருடங்கள் வாழ்நதார்? How long king parikshit lived?

How long king parikshit lived? ரீக்ஷித் எத்தனை வருடங்கள் வாழ்நதார்?

அஸ்வத்தாமா தூங்கிக்கொண்டிருந்த பாண்டவர்களின் பிள்ளைகளை மற்றும் திரௌபதியின் சகோதரன், சிகண்டி போன்றவர்களை கொன்று, கர்ப்பமாக இருக்கும் உத்திரையின் மீதும் அஸ்திரம் செலுத்தினான்.

அதை கிருஷ்ணர் தடுத்தார்.


இவனின் காரியங்களை பார்த்து ஸ்ரீகிருஷ்னர், "3000 வருடங்கள் உயிரோடு இருந்து, காட்டில் தனி ஆளாக அலைந்து கொண்டிருப்பாய்" என்று சபித்தார்.


அதே சமயம், தன்னால் காப்பாற்றப்பட்ட பிள்ளை, கர்ப்பத்தில் வளர்ந்து, பரீக்ஷித் என்ற பெயருடன் புகழ் பெறுவான் என்றார்.

மேலும்,

"சூரனான பரீக்ஷித் நீண்ட ஆயுளை அடைந்து சிறந்த விரதத்தை கடைபிடித்து கொண்டு, சரத்வானுடைய பிள்ளையான இந்த க்ருபரிடம் அனைத்து அஸ்திரங்களையும் கற்பான். தர்மாத்மாவான பரீக்ஷித், உத்தமான சாஸ்திரங்களை படித்து, க்ஷத்ரிய தர்மத்தில் இருந்து, 60 வருட காலங்கள் பூமியை ஆள போகிறான்." என்று பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் சொன்னார்.

वयः प्राप्य परिक्षित्तुं देवव्रतमवाप्य च।

कृपाच्छारद्वताच्छूरः सर्वास्त्राण्युपपत्स्यते।।

विदित्वा परमास्त्राणि क्षत्रधर्मव्रते स्थितः।

षष्टिं वर्षामि धर्मात्मा वसुधां पालयिष्यति।।

इतश्चोर्ध्वं महाबाहुः कुरुराजो भविष्यति।          

परिक्षिन्नाम नृपतिर्मिषतस्ते सुदुर्मते।।

- மஹாபாரதம் (வியாசர்)

Wednesday 11 November 2020

உத்தராயண காலத்தை எதிர்பார்த்து காத்திருந்த, பீஷமரின் ஹ்ருதயம் என்ன? பீஷ்மர் என்ன ஆசைப்பட்டார்?

உத்தராயண காலத்தை எதிர்பார்த்து காத்திருந்தார், பீஷ்மர்.

மற்றவர்களுக்கு இப்படி ஒரு காரணத்தை காட்டினாலும், மனதில் வேறு ஒரு ஆசையுடன் காத்து இருந்தார்.
கோடியில் ஒரு சில மகாத்மாக்களுக்கு தான், 'பிராணன் போகும் சமயத்தில், பகவானின் நினைவு' வரும்.

பிராணன் போகும் சமயத்தில், 'பகவத் தரிசனம் கிடைப்பது' என்பது அதை விட மஹா பாக்கியம்.

ப்ரம்மச்சர்யத்துடன் வாழ்ந்த பீஷ்மருக்கு, போர் சமயத்திலேயே இந்த பாக்கியம் கிடைத்தும், கை நழுவி போனது


'பீஷ்மர் பெண்ணுடன் போர் புரியவதில்லை' என்று கொள்கை கொண்டவர். 

அதே சமயம், 

ஸ்ரீ கிருஷ்ணர், 'பாரத போரில் ஆயுதம் எடுக்க மாட்டேன்' என்று சத்தியம் செய்து இருந்தார்.

9 நாட்கள் பாரத போரில், இரு பக்கமும் பேரிழப்பு ஏற்பட்டது. இருந்தாலும், "பாண்டவர்களில் ஒருவர் கூட கொல்லப்படாமல் இருப்பதற்கு காரணம் பீஷ்மரே" என்று குறை கூறினான், துரியோதனன்.


பீஷ்மர் துரியோதனனிடம் 'நாளைய போரில் பாண்டவர்களை கொல்வேன், என் போர் தடைப்படாமல் இருக்குமானால்!" என்று சபதம் செய்தார்.


அதே சமயம், 'பாண்டவர்கள் ஐவரை காப்பேன்' என்று வாக்கு கொடுத்து இருந்தார் ஸ்ரீ கிருஷ்ணர்.


ஸ்ரீகிருஷ்ணர் 'பாண்டவர்களை காப்பாற்ற "சிகண்டியை" முன் நிறுத்தி பீஷ்மரின் போரை பங்கம் செய்வேன்' என்றார்.


இப்படி சாமர்த்தியம் செய்யும் ஸ்ரீ கிருஷ்ணர், 'எப்படி இருந்தாலும் 10வது நாள் போரில் தன்னை வீழ்த்தி விடுவார்' என்று புரிந்து கொண்டார் பீஷ்மர்.


ஆனால், 'சிகண்டி போன்றவர்கள் கையால் தான் வீழ்த்தப்பட கூடாது' என்று நினைத்தார். 

'நாளை வீழ போவது நிச்சயம் என்கிற போது, ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவின் கையால் சாக வேண்டும். அவர் நினைவோடு, அவர் தரிசனத்தோடு உயிர் விட்டு விட வேண்டும்' என்று நினைத்து கொண்டார்.


உடனே பீஷ்மர், "கிருஷ்ணனை நாளைய போரில் ஆயுதம் எடுக்க வைப்பேன்" என்று சபதம் செய்தார்.


10வது நாள் போரில், பீஷ்மர் கிருஷ்ணனை ஆயுதம் எடுக்க வைத்து உயிரை விடுவதற்கு, படு பயங்கரமாக போர் புரிந்தார்.

10வது நாள் போரில், பாண்டவர்கள் பக்கம் பெரும் நாசம் ஏற்பட்டது..

ஆயிரக்கணக்கான போர் வீரர்கள், யானை படை, குதிரை படை நாசமானது.


பாண்டவர்கள் பக்கம் நடக்கும் பெரு நாசத்தை கண்டு, ஸ்ரீ கிருஷ்ணர் தன் ரதத்தை பீஷ்மரை நோக்கி செலுத்தினார்.

உத்வேகத்துடன் இருந்த பீஷ்மரை எதிர்க்க முடியாமல், அர்ஜுனனே திணறி போனான். 

சாரதியாக அமர்ந்து இருந்த கிருஷ்ணரை நோக்கி, சரமாரியாக அம்புகளை செலுத்தினார் பீஷ்மர்.

'அன்று பீஷ்மர் செய்த போரில், பார்த்தசாரதியின் மேல் பட்ட காயங்களை தான், திருவல்லிக்கேணியில் உள்ள பார்த்தசாரதி காட்டுகிறாரோ!' என்பது போல, அவர் திருமேனி உள்ளது.


அம்புகள் பட்டு ஸ்ரீ கிருஷ்ணர் திருமேனியில் ரத்தம் வழிய, அர்ஜுனன் 'ரதத்தை திருப்பு' என்று சொல்ல, 

'பீஷ்மரை இனியும் உயிரோடு விட்டால் பேராபத்து' என்று கடும் கோபம் கொண்டு, தன் சுருள் சுருளான முடிந்த கேசம் அவிழ்ந்தது கூட கவனிக்காமல், 'இனியும் பொறுக்க முடியாது' என்ற கடும் கோபத்துடன், சத்தியமே ஸ்வரூபமான, சத்தியத்தை மீறாத பரமாத்மா, தன் பக்தனாக இருக்கும் பீஷ்மர் செய்த சபதத்தை காக்க, தன் சத்தியத்தை மீறினார்.


தன் மேல்-அங்கவஸ்திரத்தை தான் சாரதியாக அமர்ந்து இருந்த இடத்தில் போட்டு விட்டு, நீல ஜோதியாக, கையில் சக்கரத்தை ஏந்தி, தேரிலிருந்து குதித்து பீஷ்மரை நோக்கி கடும் கோபத்துடன் ஓடி வந்தார். 

பீஷ்மரான தன் சபதத்தை காக்க, தன் சபதத்தை விட்டு கொடுத்த ஸ்ரீ கிருஷ்ணரை பார்த்தார். 

"நீல ஜோதியாக தன்னை நோக்கி வரும் ஸ்ரீ கிருஷ்ணரின் கையால் இன்று உயிரை விடும் பாக்கியம் கிடைத்ததே!" 

என்று பேரானந்தம் அடைந்த பீஷ்மர், தன் ஆயுதங்களை கீழே வைத்து, தன்னை ஸ்ரீ கிருஷ்ணர் வீழ்த்தட்டும் என்று நின்றார்.


அதற்குள், அர்ஜுனன் ஓடி வந்து ஸ்ரீ கிருஷ்ணரின் காலை பிடித்து கொண்டு, "கிருஷ்ணா! நீ இப்படி செய்ய கூடாது. ஆயுதம் எந்த மாட்டேன் என்று சபதம் செய்து இருக்கிறாய். பீஷ்ம தாத்தாவை கொல்லாதே! வா.. என்னுடன்.  தேரில் ஏறு.. நானே போர் செய்கிறேன்

என்று கட்டி பிடித்து இழுத்துக்கொண்டு தேரில் போய் அமர செய்தான்.


'தன் சத்தியத்தை காக்க, சத்ய ஸ்வரூபியான பரமாத்மா, தன் சத்தியத்தை கூட விட்டு விட துணிந்தாரே!!' என்று கண்ணீர் விட்டார் பீஷ்மர்.


அதே சமயம், "உயிர் போகும் சமயத்தில் பகவத் தரிசனம் என்ற வாய்ப்பை இழந்தோமே!" என்று ஒரு பக்கம் வருந்தினார்.

அன்றே, சிகண்டியை முன் நிறுத்தி, பீஷ்மரின் போரை பங்கம் செய்ய, அர்ஜுனன் பீஷ்மரை கீழே சாய்த்தான்.

அம்பு படுக்கையில் வீழ்ந்து கிடந்த பீஷ்மர், உயிரை விட சமயம் எதிர்பார்த்து காத்து இருந்தார்.

'ஸ்ரீ கிருஷ்ணர் கையால் வீழ்த்தப்பட்டு, கடைசி மூச்சு விடும் பாக்கியம் கிடைக்காமல் போனதே!! 

விரும்பிய போது மரணம் என்ற வரம் கொண்ட எனக்கு, மீண்டும் ஸ்ரீ கிருஷ்ண தரிசனம் கிடைக்குமா?

என்று எதிர்பார்த்து காத்து இருந்தார்.


18 நாள் போர் முடிந்து, பங்காளிகள் அனைவருக்கும் தர்மபுத்ரரரே காரியங்கள் செய்து முடித்தார்.


தர்மபுத்ரர் பெரும் சோகத்தில் மூழ்கி, "ஐயோ! இந்த உடலால் மற்றவர்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று சொல்லி இருக்க, இப்படி லக்ஷகணக்கான வீரர்களை கொல்ல காரணமாகி விட்டேனே! இந்த பாவத்துக்கு மீள முடியாத நரகம் தானே எனக்கு கிடைக்கும்" என்று புலம்ப ஆரம்பித்தார்.


'ராஜ தர்மம், ஸ்திரீ தர்மம், வைஸ்ய தர்மம், ப்ராம்மண தர்மம் என்று பல தர்மங்களை பீஷம தாத்தாவிடம் கேட்டு தெரிந்து வேண்டும்' என்று தர்மபுத்ரர் கிளம்ப, அவர் கூடவே ரிஷிகள், சகோதரர்கள் கிளம்ப, அர்ஜுனன் தேரில் தானும் ஏறி அமர்ந்து கொண்டார் கிருஷ்ண பரமாத்மா.

பீஷ்மர், தர்மபுத்ரருக்கு பல வித தர்மங்களை உபதேசித்தார்.

கூடவே வந்து இருக்கும் ஸ்ரீ கிருஷ்ணரை பார்த்தவுடனேயே, இந்த பக்வத் தரிசனத்தை பார்த்துக்கொண்டே உயிர் விட தயாராகி விட்டார்.
சஹஸ்ர நாமத்தால் ஸ்ரீ கிருஷ்ணரை ஸ்தோத்திரம் செய்து, 'இனியும் கிடைத்த வாய்ப்பை விட கூடாது', என்று முடிவு செய்து, கிருஷ்ண பரமாத்மாவை தரிசித்து கொண்டே உடலை விட்டு பிரிந்தார் பீஷ்மர்.


உத்தராயணத்துக்காக காத்து இருந்தார் பீஷ்மர் என்பது போல வெளி உலகுக்கு காட்டினாலும், 

பீஷ்மருக்கு "தன் பிராணன் விடும் சமயத்தில் கிருஷ்ண பரமாத்மா வேண்டும்" என்று ஆசைப்பட்டார்.

பக்தனின் அந்தரங்க ஆசையையும், ஸ்ரீ கிருஷ்ணர் நிறைவேற்றி கொடுத்தார்.

Saturday 10 February 2018

திதி, அதிதி என்றால் உண்மையான அர்த்தம் என்ன? தெரிந்து கொள்வோமே

ஒரு sanskrit வார்த்தையின் அர்த்தம்.

அதிதி (Aditi) -

"திதி" என்றால் நேரம், தேதியை குறிக்கிறது.
"அதிதி" என்றால் காலம், நேரம் சொல்லாமல் என்று அர்த்தம்.

இந்தியாவில் மட்டும் தான் "அதிதி தேவோ பவ" என்று சொல்லும் பழக்கம் உண்டு.
வெளிநாட்டவன் அதிதி என்றால் "Guest" என்று அர்த்தம் புரிந்து கொள்கிறான்.  அவன் புத்திக்கு எட்டியது அவ்வளவு தான்.

வீட்டுக்கு இத்தனை மணிக்கு வருகிறேன், இந்த தேதிக்கு வருகிறேன் என்று சொன்னால் தான், வெளிநாட்டவன் வீட்டில்  வரும் விருந்தாளிக்கு மரியாதை கிடைக்கும்.
நேரம் காலம் சொல்லி வீட்டுக்கு வருபவனை தான் guest என்று சொல்கிறான் வெளிநாட்டவன்.

நம் பாரத நாட்டில், நேரம் காலம் சொல்லாமல் வரும் அதிதியையும் வணங்கி உபசரிக்கும் உயர்ந்த குணம் உண்டு என்பதால் தான் வெளிநாட்டவன் நினைத்து கூட பார்க்காத உயர்ந்த குணத்தை சர்வ சாதாரணமாக "அதிதி தேவோ பவ" என்கிறான்.

நேரம் காலம் சொல்லாமல் திடீரென்று வரும் விருந்தினனை, நான் தெய்வத்துக்கு சமமாக நினைத்து உபசரிப்பேன்
என்கிறான் ஹிந்து.

இந்த உயர்ந்த குணம் நம்மிடையே மீண்டும் துளிர்க்க வேண்டும்.
அதிதி தேவோ பவ என்ற சொல்லுக்கு சொந்தக்காரர்கள் நாம் என்பதை உணர வேண்டும்.
வீட்டிற்கு வரும் அதிதியையும் உபசரிக்க வேண்டும். இது ஹிந்துக்களின் உயரிய பண்பு.

ஒவ்வொரு நாட்டுக்கும் ஒரு சிறப்பு சொல்லும் போது, நம் இந்தியர்களை பார்த்து "Indians are known for hospitality" என்று சொல்கின்றனர்.

இந்த பெருமை "guest" வந்தால் இந்தியன் உபசரிப்பான் என்ற காரணத்தால் கொடுக்கப்படவில்லை. அதிதியாக வந்தாலும், ஹிந்து உபசரிப்பான் என்ற காரணத்தால் கிடைத்தது.

திடீரென்று வந்த சுதாமாவை, ஸ்ரீகிருஷ்ணர் எப்படி வரவேற்றார். கொஞ்சம் நினைத்து பார்க்க வேண்டும். ஸ்ரீகிருஷ்ணர் நாம் எப்படி உபசரிக்க வேண்டும் என்று காட்டினார்.இந்த குணம், மேலை நாட்டு மதங்களின் மோகத்தால், அழிந்து, அதிதியாக ஒருவர் நம் வீட்டுக்கு வந்தால் கோபமும், நேரம் காலம் சொல்லி அனுமதி பெற்று வந்தால் தான் உபசரிப்பு என்ற நிலைக்கு வந்து விட்டோம்.
உயர்ந்த குணத்தை போலி மதங்களின் ஊடுருவளால் விட்டு விட்டோம். மீண்டும் நல்ல குணங்களை வளர்த்து கொள்ள ஹிந்துவாகிய நாம் ஆசையாவது பட வேண்டும்.

சுய நலத்தில் உருவான போலி மதங்கள், சுய நலத்தையே போதிக்கிறது.
ரிஷிகளால் காட்டப்பட்ட ஹிந்து தர்மத்திலோ, ஒவ்வொரு சொல்லிலும் பரந்த குணமும், உயர்ந்த எண்ணமும் வெளிப்படுகிறது.

ஹிந்து தர்மம் பல பொக்கிஷங்கள் கொண்டது. எடுக்க எடுக்க குறையாதது.

போலி மதங்களில் விழுந்து சுயநல போதனைகள் கேட்டு வீணாகி போன ஹிந்துக்களை, மீண்டும் புனித படுத்தி ஹிந்துக்கள் ஆக்க, முதலில் நாம் ஹிந்து தர்மத்தை புரிந்து கொள்ள ஆராய்ச்சிகள் செய்து, உண்மையான ஞானம்(அறிவு) பெறுவோம்.