Followers

Search Here...

Showing posts with label பரதன். Show all posts
Showing posts with label பரதன். Show all posts

Sunday 6 June 2021

51 பாபங்கள் பற்றி பரதன் சொல்கிறார்… பாப காரியங்கள் என்னென்ன? தெரிந்து கொள்வோம் வால்மீகி ராமாயணம்

எந்தெந்த காரியங்கள் பாபத்தை கொடுக்கும்?  51 பாப காரியங்கள் என்னென்ன?

பரதன் பலவித பாபங்களை அடுக்கி, தன் சோகத்தை கௌசல்யா தேவியிடம் வெளிப்படுத்துகிறார். தெரிந்து கொள்வோம் வால்மீகி ராமாயணம்

कृता शास्त्र अनुगा बुद्धिर् 

मा भूत् तस्य कदाचन |

सत्य संधः सताम् श्रेष्ठो 

यस्य आर्यो अनुमते गतः ||

- वाल्मीकि रामयाण

க்ருதா சாஸ்த்ர அனுகா புத்தி: 

மா பூத் தஸ்ய கதாசன |

சத்யசந்த: சதாம் ஸ்ரேஷ்ட

யஸ்ய ஆர்யோ அனுமதே கத: ||

- வால்மீகி ராமாயணம்

By any chance, if I had intention to banish of my noble brother "Ram" to forest, 

let the same hell reach me, which is received by those, who do not have resolve to follow the vedic texts.

ஒருவேளை, என் அண்ணா "ராமனின்"  வனவாசத்துக்கு நான் உடந்தையாக இருந்திருந்தால், 

வேத சாஸ்திரம் வழிகாட்டும் தர்மத்தை கடைபிடிக்காதவன் எந்த நரகத்தை அடைவானோ! அந்த நரகத்தை நான் அடைவேனாக !

प्रेष्यम् पापीयसाम् यातु 

सूर्यम् च प्रति मेहतु |

हन्तु पादेन गाम् सुप्ताम् 

यस्य आर्यो अनुमते गतः ||

- वाल्मीकि रामयाण 

ப்ரேஸ்யம் பாபியசாம் யாது

ஸூர்யம் ச ப்ரதி மேஹது |

ஹந்து பாதேன காம் சுப்தாம்

யஸ்ய ஆர்யோ அனுமதே கத: ||

- வால்மீகி ராமாயணம் 

By any chance, if I had intention to banish of my noble brother "Ram" to forest, 

let be myself become the slave of the evils.  

let the same hell reach me, which is received by those, who urinate in the direction of the sun.

let the same hell reach me, which is received by those, who kicks a sleeping cow with his foot.

ஒருவேளை, என் அண்ணா "ராமனின்"  வனவாசத்துக்கு நான் உடந்தையாக இருந்திருந்தால்,

பாபிகள் சொல்லும் வேலையை செய்யும் அடிமையாக நான் போவேனாக !

சூரியன் இருக்கும் திசை பார்த்து மலம் மூத்திரம் செய்பவன் எந்த நரகத்தை அடைவானோ! அந்த நரகத்தை நான் அடைவேனாக !

தூங்கி கொண்டு இருக்கும் பசு மாட்டை காலால் எட்டி உதைப்பவன் எந்த நரகத்தை அடைவானோ! அந்த நரகத்தை நான் அடைவேனாக !

कारयित्वा महत् कर्म 

भर्ता भृत्यम् अनर्थकम् |

अधर्मः यो अस्य सो अस्याः तु 

यस्य आर्यो अनुमते गतः ||

- वाल्मीकि रामयाण 

காரயித்வா மஹத் கர்ம

பர்தா ப்ருத்யம் அனர்தகம் |

அதர்ம: யோ அஸ்ய ஸோ அஸ்யா: து 

யஸ்ய ஆர்யோ அனுமதே கத: ||

- வால்மீகி ராமாயணம் 

By any chance, if I had intention to banish of my noble brother "Ram" to forest, 

let the same hell reach me, which is received by those, who compels his employees in evil deeds.

ஒருவேளை, என் அண்ணா "ராமனின்"  வனவாசத்துக்கு நான் உடந்தையாக இருந்திருந்தால், 

தனக்கு கீழே வேலை பார்ப்பவர்களை பாவ காரியங்கள் செய்ய தூண்டுபவன், எந்த நரகத்தை அடைவானோ! அந்த நரகத்தை நான் அடைவேனாக !

परिपालय मानस्य 

राज्ञो भूतानि पुत्रवत् |

ततः तु द्रुह्यताम् पापम् 

यस्य आर्यो अनुमते गतः ||

- वाल्मीकि रामयाण 

பரிபாலய மானஸ்ய 

ராஞோ பூதானி புத்ரவத் |

தத: து த்ருஹ்யதாம் பாபம்

யஸ்ய ஆர்யோ அனுமதே கத: ||

- வால்மீகி ராமாயணம் 

By any chance, if I had intention to banish of my noble brother "Ram" to forest, 

let the same hell reach me, which is received by those, who seek to harm a king who protects his people as if they are his own children.

ஒருவேளை, என் அண்ணா "ராமனின்"  வனவாசத்துக்கு நான் உடந்தையாக இருந்திருந்தால்,

தன் மக்களை தன் பிள்ளைகள் போல காக்கும் அரசனை கொலை செய்பவன், எந்த நரகத்தை அடைவானோ! அந்த நரகத்தை நான் அடைவேனாக !

बलि षड् भागम् उद्धृत्य 

नृपस्य अरक्षतः प्रजाः |

अधर्मः यो अस्य सो अस्य अस्तु 

यस्य आर्यो अनुमते गतः ||

- वाल्मीकि रामयाण 

பலி ஷட் பாகம் உத்-த்ருத்ய

ந்ரூபஸ்ய அரக்ஷத: ப்ரஜா: |

அதர்ம: யோ அஸ்ய ஸோ அஸ்ய அஸ்து

யஸ்ய ஆர்யோ அனுமதே கத: ||

- வால்மீகி ராமாயணம் 

By any chance, if I had intention to banish of my noble brother "Ram" to forest, 

let the same hell reach me, which is received by those, who takes the sixth part of the revenue of his people, but fails to protect them.

ஒருவேளை, என் அண்ணா "ராமனின்"  வனவாசத்துக்கு நான் உடந்தையாக இருந்திருந்தால்,

பொது மக்களின் வருமானத்தில் 6ல் ஒரு பங்கை தனக்கு வாங்கிக்கொண்டு, அவர்களை காக்காமல் இருக்கும் அரசன் எந்த நரகத்தை அடைவானோ! அந்த நரகத்தை நான் அடைவேனாக !

संश्रुत्य च तपस्विभ्यः 

सत्रे वै यज्ञ दक्षिणाम् |

ताम् विप्रलपताम् पापम् 

यस्य आर्यो अनुमते गतः ||

- वाल्मीकि रामयाण 

ஸம்ஸ்ருத்ய ச தபஸ்விப்ய:

சத்ரே வை யஞ தக்ஷிணாம் |

தாம் விப்ரலபதாம் பாபம்

யஸ்ய ஆர்யோ அனுமதே கத: ||

- வால்மீகி ராமாயணம் 

By any chance, if I had intention to banish of my noble brother "Ram" to forest,  

let the same hell reach me, which is received by those, who do not offer the promised donation to vedic pandits in vedic rituals.

ஒருவேளை, என் அண்ணா "ராமனின்"  வனவாசத்துக்கு நான் உடந்தையாக இருந்திருந்தால்,

வைதீகனுக்கு கொடுக்க ஒப்புக்கொண்ட தானத்தை கொடுக்காமல் ஏமாற்றுபவன் எந்த நரகத்தை அடைவானோ! அந்த நரகத்தை நான் அடைவேனாக !

हस्ति अश्व रथ सम्बाधे 

युद्धे शस्त्र समाकुले |

मा स्म कार्षीत् सताम् धर्मम् 

यस्य आर्यो अनुमते गतः ||

- वाल्मीकि रामयाण 

ஹஸ்தி அஸ்வ ரத ஸம்பாதே

யுத்தே சஸ்த்ர ஸமாகுலே |

மா ஸ்ம கார்ஷீத் ஸதாம் தர்மம்

யஸ்ய ஆர்யோ அனுமதே கத: ||

- வால்மீகி ராமாயணம் 

By any chance, if I had intention to banish of my noble brother "Ram" to forest, 

let the same hell reach me, which is received by those, who fails to observe the code of warfare followed by the virtuous in a battle abundantly provided with elephants horses chariots weapons and men.

ஒருவேளை, என் அண்ணா "ராமனின்"  வனவாசத்துக்கு நான் உடந்தையாக இருந்திருந்தால்,

பெரிய யானை படை, குதிரை படை, போர் வீரர்கள் இருந்தாலும் தர்மப்படி போர் செய்யாமல், அதர்ம போர் செய்பவன் எந்த நரகத்தை அடைவானோ! அந்த நரகத்தை நான் அடைவேனாக !

उपदिष्टम् सुसूक्ष्म अर्थम् 

शास्त्रम् यत्नेन धीमता |

स नाशयतु दुष्ट आत्मा 

यस्य आर्यो अनुमते गतः ||

- वाल्मीकि रामयाण 

உபதிஷ்டம் சுஸூக்ஷ்ம அர்தம்

சாஸ்த்ரம் யத்னேன தீமதா |

ஸ நாசயது துஷ்ட ஆத்மா

யஸ்ய ஆர்யோ அனுமதே கத: ||

- வால்மீகி ராமாயணம் 

By any chance, if I had intention to banish of my noble brother "Ram" to forest,  

let the same hell reach me, which is received by those, who forget the subtle meanings of the scriptures taught with care by a wise teacher.

ஒருவேளை, என் அண்ணா "ராமனின்"  வனவாசத்துக்கு நான் உடந்தையாக இருந்திருந்தால்,

குருநாதர் கவனத்தோடு, அர்த்தத்துடன் சொல்லி கொடுத்த உபதேசத்தை மறப்பவன், எந்த நரகத்தை அடைவானோ! அந்த நரகத்தை நான் அடைவேனாக !

मा च तम् व्यूढबाह्वंसम् 

चन्द्रार्कसम्तेजनम् |

द्राक्षीद्राज्यस्थमासीनम् 

यस्य आर्यो अनुमते गतः ||

- वाल्मीकि रामयाण 

மா ச தம் வ்யூட பாஹ்வம்சம்

சந்த்ரார்க சம்-தேஜனம் |

த்ராக்ஷீத் ராஜ்யஸ்தம் ஆஸீனம்

யஸ்ய ஆர்யோ அனுமதே கத: ||

- வால்மீகி ராமாயணம் 

By any chance, if I had intention to banish of my noble brother "Ram" to forest, 

let me not get the fortune of seeing that Rama having large arms and broad shoulders radiant as the sun and the moon and seated on a throne.

ஒருவேளை, என் அண்ணா "ராமனின்"  வனவாசத்துக்கு நான் உடந்தையாக இருந்திருந்தால்,

சூரிய சந்திரன் போல நீண்ட புஜங்கள் உடைய ராமபிரான் பட்டாபிஷேகம் செய்து கொண்டு அரசாளும் காட்சியை பார்க்கும் பாக்கியம் அற்றவனாக நான் போவேனாக!

पायसम् कृसरम् चागम् 

वृथा सो अश्नातु निर्घृणः |

गुरूमः च अपि अवजानातु 

यस्य आर्यो अनुमते गतः ||

- वाल्मीकि रामयाण 

பாயஸம் க்ருஸரம் ஸாகம்

வ்ருதா ஸோ அஸ்னாது நிர்க்ருண: |

குரூம: ச அபி அவஜானாது

யஸ்ய ஆர்யோ அனுமதே கத: ||

- வால்மீகி ராமாயணம் 

By any chance, if I had intention to banish of my noble brother "Ram" to forest, 

let the same hell reach me, which is received by those, who excessively, unnecessarily consumes milk and meat,

let the same hell reach me, which is received by those, who insult his guru.

ஒருவேளை, என் அண்ணா "ராமனின்"  வனவாசத்துக்கு நான் உடந்தையாக இருந்திருந்தால், 

அதிகமாகவோ, அநாவசியமாகவோ பசும்பாலை, மாமிசத்தை உண்பவன் எந்த நரகத்தை அடைவானோ, அந்த நரகத்தை நான் அடைவேனாக!

தன் குருநாதரை அவமானம் செய்பவன் எந்த நரகத்தை அடைவானோ, அந்த நரகத்தை நான் அடைவேனாக!

गाश्च स्पृशतु पादेन 

गुरून् परिवदेत्स्वयम् |

मित्रे द्रुह्येत सोऽत्यन्तम् 

यस्यार्योऽनुमते गतः ||

- वाल्मीकि रामयाण 

கா: ச ஸ்ப்ருஸது பாதேன

குரூன் பரிவதேத் ஸ்வயம் |

மித்ரேத் ருஹ்யேத ஸோ அந்யதாம்

யஸ்ய ஆர்யோ அனுமதே கத: ||

- வால்மீகி ராமாயணம் 

By any chance, if I had intention to banish of my noble brother "Ram" to forest, 

let the same hell reach me, which is received by those, who kick the cows, 

let the same hell reach me, which is received by those, who defame/abuse his guru, 

let the same hell reach me, which is received by those, who cheats his own friend.

ஒருவேளை, என் அண்ணா "ராமனின்"  வனவாசத்துக்கு நான் உடந்தையாக இருந்திருந்தால்,

தன் குருநாதரை தாழ்த்தி பேசுபவன், மாட்டை காலால் உதைப்பவன், நண்பனை ஏமாற்றுபவன், எந்த நரகங்களை அடைவானோ, அந்த நரகத்தை நான் அடைவேனாக !

विश्वासात्कथितम् किंचित्

परिवादम् मिथः क्वचित् |

विवृणोतु स दुष्टात्मा 

यस्यार्योओऽनुमते गतः ||

- वाल्मीकि रामयाण 

விச்வாஸத் கதிதம் கிஞ்சித்

பரிவாதம் மித: க்வசித் |

விவ்ருணோது ஸ துஷ்டாத்மா

யஸ்ய ஆர்யோ ஓ அனுமதே கத: ||

- வால்மீகி ராமாயணம்

By any chance, if I had intention to banish of my noble brother "Ram" to forest, 

let the same hell reach me, which is received by those, who reveals little abusing words about others spoken occasionally in secret trusting him.

ஒருவேளை, என் அண்ணா "ராமனின்"  வனவாசத்துக்கு நான் உடந்தையாக இருந்திருந்தால்,

தனிமையில் மற்றொருவரின் தவறை பற்றி சொன்னதை கேட்டு, வெளியே சொல்பவன், எந்த நரகத்தை அடைவானோ, அந்த நரகத்தை நான் அடைவேனாக !

अकर्ता ह्यकृतज्ञश्च 

त्यक्तात्मा निरपत्रपः |

लोके भवतु विद्वेष्यो 

यस्यार्योऽनुमते गतः ||

- वाल्मीकि रामयाण 

அகர்தா ஹி அக்ருதஞ: ச

த்யக்த ஆத்மா நிரபத்ரப: |

லோகே பவது வித்வேஷ்யோ

யஸ்ய ஆர்யோ அனுமதே கத: ||

- வால்மீகி ராமாயணம் 

By any chance, if I had intention to banish of my noble brother "Ram" to forest,  

let the same hell reach me, which is received by those, who is a non doer for his/her own duty, an ungrateful person; a desperate man, the one who has abandoned shame and the one who is worthy of hate

ஒருவேளை, என் அண்ணா "ராமனின்"  வனவாசத்துக்கு நான் உடந்தையாக இருந்திருந்தால்,, 

தனக்கு விதிக்கப்பட்ட காரியத்தை செய்யாதவன், நன்றியற்றவன், அவநம்பிக்கையான மனிதன், அவமானத்தை கைவிட்டவன், வெறுக்கத் தகுதியானவன் எந்த நரகத்தை அடைவானோ, அந்த நரகத்தை நான் அடைவேனாக !

पुत्रैः दारैः च भृत्यैः च 

स्व गृहे परिवारितः |

स एको मृष्टम् अश्नातु 

यस्य आर्यो अनुमते गतः ||

- वाल्मीकि रामयाण 

புத்ரை: தாரை: ச ப்ருத்யை: ச 

ஸ்வ க்ருஹே பரிவாரித: |

ஸ ஏகோ ம்ருஷ்டம் அஸ்னாது

யஸ்ய ஆர்யோ அனுமதே கத: ||

- வால்மீகி ராமாயணம்

By any chance, if I had intention to banish of my noble brother "Ram" to forest, 

let the same hell reach me, which is received by those, who consumes delicious food for himself alone when he is surrounded by his sons, wife and servants in his house.

ஒருவேளை, என் அண்ணா "ராமனின்"  வனவாசத்துக்கு நான் உடந்தையாக இருந்திருந்தால்,

வீட்டில் பிள்ளைகள், மனைவி, வேலைக்காரர்கள் இருந்தும், இருக்கும் உணவை தான் மட்டுமே சாப்பிடுபவன் எந்த நரகத்தை அடைவானோ, அந்த நரகத்தை நான் அடைவேனாக !

अप्राप्य सदृशान् दारान्

अनपत्यः प्रमीयताम् |

अनवाप्य क्रियाम् धर्म्याम् 

यस्य आर्यो अनुमते गतः ||

- वाल्मीकि रामयाण 

அப்ராப்ய ஸத்ருசான் தாரான்

அனபத்ய: ப்ரமீயதாம் |

அனவாப்ய க்ரியாம் தர்ம்யாம்

யஸ்ய ஆர்யோ அனுமதே கத: ||

- வால்மீகி ராமாயணம் 

By any chance, if I had intention to banish of my noble brother "Ram" to forest, 

let the same hell reach me, which is received by those, who die without having a child, or child who do not fulfilling his religious duties.

ஒருவேளை, என் அண்ணா "ராமனின்"  வனவாசத்துக்கு நான் உடந்தையாக இருந்திருந்தால்,

தனக்கு ஈம காரியங்கள் செய்ய ஆளில்லாமல் மரணிப்பவர்கள், எந்த நரகத்தை அடைவார்களோ, அந்த நரகத்தை நான் அடைவேனாக !

मात्मनः सम्ततिम् द्राक्षीत्

स्वेषु दारेषु दुःखितः |

आयुः समग्रमप्राप्य 

यस्यार्योऽनुमते गतः ||

- वाल्मीकि रामयाण 

மாத்மன: சம்ததிம் த்ராக்ஷீத்

ஸ்வேஷு தாரேஷு துஃகித: |

ஆயு: சமக்ரம் அப்ராப்ய

யஸ்ய ஆர்யோ அனுமதே கத: ||

- வால்மீகி ராமாயணம் 

By any chance, if I had intention to banish of my noble brother "Ram" to forest, 

let myself be not blessed with a child, and in distress, may not get a full long life to live.

ஒருவேளை, என் அண்ணா "ராமனின்"  வனவாசத்துக்கு நான் உடந்தையாக இருந்திருந்தால், 

எனக்கு பிள்ளைகள் பிறக்காமல் போகட்டும். மேலும், கஷ்ட காலங்களை தாங்கும் சக்தி இல்லாமல், நீண்ட காலம் வாழ ஆயுசு இருந்தும், அல்ப ஆயுசாக என் உயிர் போகட்டும்.

राज स्त्री बाल वृद्धानाम् 

वधे यत् पापम् उच्यते |

भृत्य त्यागे च यत् पापम् 

तत् पापम् प्रतिपद्यताम् ||

- वाल्मीकि रामयाण 

ராஜ ஸ்திரீ பால வ்ருத்தானாம்

வதே யத் பாபம் உச்யதே |

ப்ருத்ய த்யாகே ச யத் பாபம்

தத் பாபம் ப்ரதி பத்யதாம் ||

- வால்மீகி ராமாயணம் 

By any chance, if I had intention to banish of my noble brother "Ram" to forest, 

let the same hell reach me, which is received by those, who killed a king or a women or his child or an aged person or abandon his dependents.

ஒருவேளை, என் அண்ணா "ராமனின்"  வனவாசத்துக்கு நான் உடந்தையாக இருந்திருந்தால்,

அரசனை கொலை செய்தவன், தன் பிள்ளையை கொலை செய்தவன், பெண்ணை கொலை செய்தவன், வயதானவர்களை கொலை செய்தவன், தன்னை நம்பி வாழ்பவர்களை கை விட்டவன் எந்த நரகங்களை அடைவார்களோ, அந்த நரகங்களை நான் அடைவேனாக !

लाक्षया मधुमांसेन 

लोहेन च विषेण च |

सदैव बिभृयाद्भृत्यान् 

यस्य आर्यो अनुमते गतः ||

- वाल्मीकि रामयाण 

லாக்ஷ்யா மது மாம்சேன

லொஹேன ச விசேண ச |

சதைவ பிப்ருயாத் ப்ருத்யான்

யஸ்ய ஆர்யோ அனுமதே கத: ||

- வால்மீகி ராமாயணம் 

By any chance, if I had intention to banish of my noble brother "Ram" to forest, 

let the same hell reach me, which is received by those, who encourages meat, liquor, drug or poisonous materials to his wife, children and other dependents/employees.

ஒருவேளை, என் அண்ணா "ராமனின்"  வனவாசத்துக்கு நான் உடந்தையாக இருந்திருந்தால்,

தன் பிள்ளைகளுக்கோ, மனைவிக்கோ, தனக்கு கீழ் வேலை பார்ப்பவனுக்கோ மது மாமிசம் மற்றும் விஷ போதை பொருட்கள் கொடுத்து உற்சாகப்படுத்துபவன், எந்த நரகத்தை அடைவானோ, அந்த நரகத்தை நான் அடைவேனாக !

सम्ग्रामे समुपोढे स 

शत्रुपक्ष्भयम्करे |

पलायामानो वध्येत 

यस्यार्योऽनुमे गतः ||

- वाल्मीकि रामयाण 

சம்கிராமே சமுபோடே ஸ

சத்ரு பக்ஷ பயம் கரே |

பலாயாமானோ வத்யேத

யஸ்ய ஆர்யோ அனுமதே கத: ||

- வால்மீகி ராமாயணம் 

By any chance, if I had intention to banish of my noble brother "Ram" to forest, 

let the same hell reach me, which is received by those, who gets killed in the battle field while he tries to escape from the battle in a cowardice way.

ஒருவேளை, என் அண்ணா "ராமனின்"  வனவாசத்துக்கு நான் உடந்தையாக இருந்திருந்தால்,

போர் களத்தில் எதிரியை கண்டு பயந்து ஓடி மரணத்தை சந்தித்தவன், எந்த நரகத்தை அடைவானோ, அந்த நரகத்தை நான் அடைவேனாக !

कपालपाणिः पृथिवीम् 

अटताम् चीरसम्वृतः |

भिक्समाणो यथोन्मत्तो 

यस्यार्योऽनुमते गतह् ||

- वाल्मीकि रामयाण 

கபால பாணி: ப்ருத்வீம்

அடதாம் சீர சம்வ்ருத: |

பிக்ஷ மாணோ யதோன் மத்தோ

யஸ்ய ஆர்யோ அனுமதே கத: ||

- வால்மீகி ராமாயணம் 

By any chance, if I had intention to banish of my noble brother "Ram" to forest, 

let be myself wander like a mad man with a skull begging bowl in the hand, wearing tree bark.

ஒருவேளை, என் அண்ணா "ராமனின்"  வனவாசத்துக்கு நான் உடந்தையாக இருந்திருந்தால்,

பைத்தியகாரனை போல, மரவுரி அணிந்து கொண்டு, கையில் மண்டை ஓட்டையையே பாத்திரமாக எடுத்து கொண்டு பிச்சை எடுக்கும் படி, நான் வாழ்வேனாக!

पाने प्रसक्तो भवतु 

स्त्रीष्वक्षेषु च नित्यशः |

काम्क्रोधाभिभूतस्तु 

यस्य आर्यो अनुमते गतः ||

- वाल्मीकि रामयाण 

பானே ப்ரஸக்தோ பவது

ஸ்திரீஷு அக்ஷேஸு ச நித்யஸ: |

காம க்ரோத அபி பூதஸ்து

யஸ்ய ஆர்யோ அனுமதே கத: ||

- வால்மீகி ராமாயணம் 

By any chance, if I had intention to banish of my noble brother "Ram" to forest, 

let the same hell reach me, which is received by those, who are drug addict, womanizer and a gambler and who don't have control over infatuation and anger.

ஒருவேளை, என் அண்ணா "ராமனின்"  வனவாசத்துக்கு நான் உடந்தையாக இருந்திருந்தால்,

பெண் மோகத்தில் விழுந்தவன், மதுவுக்கு அடிமையானவன், சூதாடி, கோபத்தை கட்டுப்படுத்தாதவன் எந்த நரகங்களை அடைவானோ, அந்த நரகங்களை நான் அடைவேனாக !

यस्य धर्मे मनो भूयाद्

अधर्मम् स निषेवताम् |

अपात्रवर्षी भवतु 

यस्यार्योऽनुमते गतः ||

- वाल्मीकि रामयाण

யஸ்ய தர்மே மனோ பூயாத்

அதர்மம் ச நிஷேவதாம் |

அபாத்ர வர்ஷீ பவது

யஸ்ய ஆர்யோ அனுமதே கத: ||

- வால்மீகி ராமாயணம்

By any chance, if I had intention to banish of my noble brother "Ram" to forest, 

let the same hell reach me, which is received by those, who is not interested to know about dharma, but interested in doing adharma and who distributes gifts for the undeserving people.

ஒருவேளை, என் அண்ணா "ராமனின்"  வனவாசத்துக்கு நான் உடந்தையாக இருந்திருந்தால்,

தர்மம் எது என்று தெரியாமல், அதர்மத்தில் நாட்டம் மிகுந்து, தானம் வாங்க தகுதி இல்லாதவர்களுக்கு தானம் செய்பவன் எந்த நரகங்களை அடைவானோ, அந்த நரகங்களை நான் அடைவேனாக !

संचितान्यस्य वित्तानि 

विविधानि सहस्रशः |

दस्युभिर्विप्रलुप्यन्ताम् 

यश्यार्योऽनुमते गतः ||

- वाल्मीकि रामयाण 

சஞ்சிதானி அஸ்ய வித்தானி

விவிதானி சஹஸ்ரஸ: |

தஸ்யுபி: விப்ர லுப்யன்தாம்

யஸ்ய ஆர்யோ அனுமதே கத: ||

- வால்மீகி ராமாயணம் 

By any chance, if I had intention to banish of my noble brother "Ram" to forest, 

let the same situation reach me, of those whose accumulated huge wealth in thousand but snatched away by robbers.

ஒருவேளை, என் அண்ணா "ராமனின்"  வனவாசத்துக்கு நான் உடந்தையாக இருந்திருந்தால்,

செல்வத்தை கோடி கோடியாக சேர்த்தவன் கடைசியில் அதை திருடனிடம் இழப்பது போல, நான் ஆவேனாக !

उभे संध्ये शयानस्य 

यत् पापम् परिकल्प्यते |

तच् च पापम् भवेत् तस्य 

यस्य आर्यो अनुमते गतः ||

- वाल्मीकि रामयाण 

உபே சந்த்யே சயானஸ்ய

யத் பாபம் பரிகல்பதே |

தச் ச பாபம் பவேத் தஸ்ய

யஸ்ய ஆர்யோ அனுமதே கத: ||

- வால்மீகி ராமாயணம்

By any chance, if I had intention to banish of my noble brother "Ram" to forest, 

let the same hell reach me, which is received by those, who sleeps at the sandhya time (at sun rise and at sun set).

ஒருவேளை, என் அண்ணா "ராமனின்"  வனவாசத்துக்கு நான் உடந்தையாக இருந்திருந்தால், 

சந்தியா காலத்தில் தூங்குபவன் எந்த நரகத்தை அடைவானோ, அந்த நரகத்தை நான் அடைவேனாக !

यद् अग्नि दायके पापम् 

यत् पापम् गुरु तल्पगे |

मित्र द्रोहे च यत् पापम् 

तत् पापम् प्रतिपद्यताम् ||

- वाल्मीकि रामयाण 

யத் அக்னி தாயகே பாபம்

யத் பாபம் குரு தல்பகே |

மித்ர த்ரோஹே ச யத் பாபம்

தத் பாபம் ப்ரதி பத்யதாம் ||

- வால்மீகி ராமாயணம் 

By any chance, if I had intention to banish of my noble brother "Ram" to forest, 

let the same hell reach me, which is received by those, who burns the houses unnecessarily and who violates his boundary to rape elderly women or violates his guru's bed.

ஒருவேளை, என் அண்ணா "ராமனின்"  வனவாசத்துக்கு நான் உடந்தையாக இருந்திருந்தால்,

வீட்டுக்கு தீ வைப்பவன், தன்னை விட வயதில் மூத்த பெண்ணையோ/குரு பத்னியையோ கெடுப்பவன், எந்த நரகத்துக்கு அடைவானோ, அந்த நரகத்தை நான் அடைவேனாக !

देवतानाम् पितृऋणाम् च 

माता पित्रोस् तथैव च |

मा स्म कार्षीत् स शुश्रूषाम् 

यस्य आर्यो अनुमते गतः ||

- वाल्मीकि रामयाण 

தேவதானாம் பித்ரு ருணாம் ச

மாதா பித்ரோஸ் ததைவ ச |

மா ஸ்ம கார்ஷீத் ச ஸுஷ்ரூஷாம்

யஸ்ய ஆர்யோ அனுமதே கத: ||

- வால்மீகி ராமாயணம்

By any chance, if I had intention to banish of my noble brother "Ram" to forest, 

let the same hell reach me, which is received by those, who have not done his obligations to his parents and sires.

ஒருவேளை, என் அண்ணா "ராமனின்"  வனவாசத்துக்கு நான் உடந்தையாக இருந்திருந்தால்,

தேவ கடனையும், திவசம் போன்ற பித்ரு கடனையும் அடைக்காதவன், எந்த நரகத்தை அடைவானோ, அந்த நரகத்தை நான் அடைவேனாக !

सताम् लोकात् सताम् कीर्त्याः

सज् जुष्टात् कर्मणः तथा |

भ्रश्यतु क्षिप्रम् अद्य एव

यस्य आर्यो अनुमते गतः ||

- वाल्मीकि रामयाण 

சதாம் லோகாத் சதாம் கீர்த்யா:

சாஜ் ஜுஸ்டாத் கர்மண: ததா |

ப்ரஸ்யது க்ஷிப்ரம் அத்ய ஏவ

யஸ்ய ஆர்யோ அனுமதே கத: ||

- வால்மீகி ராமாயணம் 

By any chance, if I had intention to banish of my noble brother "Ram" to forest, 

let the same situation reach me, who have fall from the glory and deeds of the cultured people.

ஒருவேளை, என் அண்ணா "ராமனின்"  வனவாசத்துக்கு நான் உடந்தையாக இருந்திருந்தால்,

பெரும் புகழோடு வாழ்ந்தவன், நல்லொழுக்கம் விட்டு, அவமானத்தை சந்தித்து அவமானப்படுவது போல, நான் ஆவேனாக !

अपास्य मातृशुश्रूषाम्

अनर्थे सोऽवतिष्ठताम् |

दीर्घबाहुर्महावक्षा 

यस्यार्योऽसुमते गतः ||

- वाल्मीकि रामयाण 

அபாஸ்ய மாத்ரு சுஸ்ரூஷாம்

அனர்த்தே ஸோ அவதிஷ்டதாம் |

தீர்க பாஹு: மஹா வக்ஷா

யஸ்ய ஆர்யோ அனுமதே கத: ||

- வால்மீகி ராமாயணம் 

By any chance, if I had intention to banish of my noble brother "Ram" to forest,  

let the same hell reach me, who have failed to give his service to his mother.

ஒருவேளை, என் அண்ணா "ராமனின்"  வனவாசத்துக்கு நான் உடந்தையாக இருந்திருந்தால்,

பெற்ற தாய்க்கு பணிவிடை செய்யாமல் இருப்பவன், எந்த நரகத்தை அடைவானோ அந்த நரகத்தை நான் அடைவேனாக !

बहुपुत्रो दरिद्रश्च 

ज्वररोगसमन्वितः |

स भूयात्सततक्लेशी 

यस्यार्योऽनुमते गतः ||

- वाल्मीकि रामयाण 

பஹு புத்ரோ தரித்ர: ச

ஜ்வர ரோக சமன்வித: |

ஸ பூயாத் சதத க்லேசீ

யஸ்ய ஆர்யோ அனுமதே கத: ||

- வால்மீகி ராமாயணம் 

By any chance, if I had intention to banish of my noble brother "Ram" to forest, 

let the same situation reach me, who possess many dependents (children) but without food or wealth resources, affected with fever and disease and be forever in distress 

ஒருவேளை, என் அண்ணா "ராமனின்"  வனவாசத்துக்கு நான் உடந்தையாக இருந்திருந்தால்,

அதிக பிள்ளைகள் பெற்று, தரித்திரத்தால் துன்பப்பட்டு, நோய்களால் அவதிப்படுபவன்  எந்த துன்பத்தை அனுபவிப்பானோ, அதை அனுபவிப்பேனாக !

आशामाशम् समानानाम् 

दीनानामूर्ध्वचक्षुषाम् |

आर्थिनाम् वितथाम् कुर्याद् 

यस्य आर्यो अनुमते गतः ||

- वाल्मीकि रामयाण

ஆசாமாசம் சமானானாம்

தீனானாம் ஊர்த்வ சக்ஷுஷாம் |

ஆர்தினாம் விததாம் குர்யாத்

யஸ்ய ஆர்யோ அனுமதே கத: || 

- வால்மீகி ராமாயணம் 

By any chance, if I had intention to banish of my noble brother "Ram" to forest, 

let the same hell reach me, which is received by those, who stops the donations offered to those who seek lifting their eyes towards the giver with great expectation.

ஒருவேளை, என் அண்ணா "ராமனின்"  வனவாசத்துக்கு நான் உடந்தையாக இருந்திருந்தால்,

கொடுக்கும் நிலையில் இருந்தும், தனக்கு உதவி செய்வாரா? என்று எதிர்பார்ப்பவனுக்கு உதவி செய்யாமல் இருப்பவன், எந்த நரகத்துக்கு செல்வானோ ! அந்த நரகத்தை நான் அடைவேனாக !

मायया रमताम् नित्यम् 

परुषः पिशुनोऽशुचिः |

राज्ज़्नो भीत स्त्वधर्मात्मा

यस्य आर्यो अनुमते गतः ||

- वाल्मीकि रामयाण

மாயயா ரமதாம் நித்யம்

பருஷ: பிசுனோ அஸுசி: |

ராஜ்ஜ்னோ பீதஸ்த்வ தர்மாத்மா    

யஸ்ய ஆர்யோ அனுமதே கத: || 

- வால்மீகி ராமாயணம் 

By any chance, if I had intention to banish of my noble brother "Ram" to forest, 

let the same hell reach me, which is received by those, who is cruel, conspires and do back bite the king.

ஒருவேளை, என் அண்ணா "ராமனின்"  வனவாசத்துக்கு நான் உடந்தையாக இருந்திருந்தால்,

அரசனுக்கு எதிராக சதி வேலை செய்பவன், எந்த நரகத்துக்கு செல்வானோ ! அந்த நரகத்தை நான் அடைவேனாக !

ऋतुस्नाताम् सतीम् भार्याम्

ऋतुकालानुरोधिनीम् |

अतिवर्तेत दुष्टात्मा 

यस्य आर्यो अनुमते गतः ||

- वाल्मीकि रामयाण

ருதுஸ்நாதாம் ஸதீம் பார்யாம்

ருது கால: அனுரோதினீம் | 

அதிவர்ததே துஷ்டாத்மா 

யஸ்ய ஆர்யோ அனுமதே கத: ||

- வால்மீகி ராமாயணம் 

By any chance, if I had intention to banish of my noble brother "Ram" to forest, 

let the same hell reach me, which is received by those, who incur the sin of ignoring his chaste wife, who having bathed after her course of menstruation. approaches him for union having regard for the season favorable for procreation.

ஒருவேளை, என் அண்ணா "ராமனின்"  வனவாசத்துக்கு நான் உடந்தையாக இருந்திருந்தால்,

மாதவிடாய் காலம் முடிந்து, தன் கணவன் மூலமாக பிள்ளை பெற்று கொள்ள வேண்டும் என்று வரும் மனைவியை புறக்கணிப்பவன், எந்த நரகத்துக்கு செல்வானோ ! அந்த நரகத்தை நான் அடைவேனாக !

धर्मदारान् परित्यज्य 

परदारान्नि षेवताम् |

त्यक्तधर्मरतिर्मूढो

यस्य आर्यो अनुमते गतः ||

- वाल्मीकि रामयाण

தர்ம தாரான் பரித்யஜ்ய 

பரி தாரானி ஷேவதாம் | 

த்யக்த தர்ம ரதி: மூடோ 

யஸ்ய ஆர்யோ அனுமதே கத: ||

- வால்மீகி ராமாயணம் 

By any chance, if I had intention to banish of my noble brother "Ram" to forest, 

let the same hell reach me, which is received by those, who has sex with other men's wife and forsaken his own wife.

ஒருவேளை, என் அண்ணா "ராமனின்"  வனவாசத்துக்கு நான் உடந்தையாக இருந்திருந்தால்,

பிறர் மனைவியிடம் உறவு கொண்டு, தன் மனைவியை புறக்கணிப்பவன், எந்த நரகத்துக்கு செல்வானோ ! அந்த நரகத்தை நான் அடைவேனாக !

विप्रलुप्त प्रजातस्य 

दुष्कृतम् ब्राह्मणस्य यत् |

तदेव प्रतिपद्येत

यस्य आर्यो अनुमते गतः ||

- वाल्मीकि रामयाण

விப்ரலுப்த ப்ரஜாதஸ்ய    

துஷ்க்ருதம் ப்ராஹ்மணஸ்ய யத் | 

ததேவ ப்ரதிபத்யேத 

யஸ்ய ஆர்யோ அனுமதே கத: ||

- வால்மீகி ராமாயணம் 

By any chance, if I had intention to banish of my noble brother "Ram" to forest, 

let the same hell reach me, which is received by those priest, who is considered childless even though he gets children who is not brought up by him in righteous and cultured way.

ஒருவேளை, என் அண்ணா "ராமனின்"  வனவாசத்துக்கு நான் உடந்தையாக இருந்திருந்தால்,

ஒரு பிராம்மணன் தன் பிள்ளையை ஒழுக்கமுள்ளவனாகவும் தர்மத்தில் இருப்பவனாகவும் வளர்க்காமல் இருந்தால், எந்த நரகத்துக்கு செல்வானோ ! அந்த நரகத்தை நான் அடைவேனாக !

पानीयदूषके पापम् 

तथैव विषदायके |

यत्तदेकः स लभताम्

यस्य आर्यो अनुमते गतः ||

- वाल्मीकि रामयाण

பானீய தூஷகே பாபம்

ததைவ விஷ தாயகே |

யத்தத் ஏக: ஸ லபாதாம்    

யஸ்ய ஆர்யோ அனுமதே கத: ||

- வால்மீகி ராமாயணம் 

By any chance, if I had intention to banish of my noble brother "Ram" to forest, 

let the same hell reach me, which is received by those, who pollutes the drinking water and those who administers poison to others.

ஒருவேளை, என் அண்ணா "ராமனின்"  வனவாசத்துக்கு நான் உடந்தையாக இருந்திருந்தால்,

குடிக்கும் ஜலத்தை மாசு படுத்துபவன், அடுத்தவனுக்கு விஷம் கொடுப்பவன், எந்த நரகத்துக்கு செல்வானோ ! அந்த நரகத்தை நான் அடைவேனாக !

ब्राह्मणायोद्यताम् पूजाम् 

विहन्तु कलुषेन्द्रियः |

बालवत्साम् च गाम् दोग्दु

यस्य आर्यो अनुमते गतः ||

- वाल्मीकि रामयाण

ப்ராஹ்மணா யோத்யதாம் பூஜாம்

விஹந்து கலுஷ இந்த்ரிய: |

பால வத்ஸாம் ச காம் தோக்து 

யஸ்ய ஆர்யோ அனுமதே கத: ||

- வால்மீகி ராமாயணம் 

By any chance, if I had intention to banish of my noble brother "Ram" to forest, 

let the same hell reach me, which is received by those, who spoil the homage of a priest, and those who milk a cow having a young calf (new calf born < 10 days)

ஒருவேளை, என் அண்ணா "ராமனின்"  வனவாசத்துக்கு நான் உடந்தையாக இருந்திருந்தால்,

ப்ராம்மணனுக்கு கிடைக்க வேண்டியதை கெடுப்பவன், 10 நாள் கூட ஆகாத கன்றுவுக்கு கொடுக்காமல், தாய் பசுவின் பாலை கறப்பவன், எந்த நரகத்துக்கு செல்வானோ ! அந்த நரகத்தை நான் அடைவேனாக !

तृष्णार्तम् सति पानीये 

विप्रलम्भेन योजयेत् |

लभेत तस्य यत्पापम्

यस्य आर्यो अनुमते गतः ||

- वाल्मीकि रामयाण

த்ருஷ்ணார்தம் ஸதி பானீயே  

விப்ர லம்பேன யோஜயேத் |

லபேத தஸ்ய யத் பாபம் 

யஸ்ய ஆர்யோ அனுமதே கத: ||

By any chance, if I had intention to banish of my noble brother "Ram" to forest, 

let the same hell reach me, which is received by those, who disappoints a person oppressed with thirst, even though water was available.

ஒருவேளை, என் அண்ணா "ராமனின்"  வனவாசத்துக்கு நான் உடந்தையாக இருந்திருந்தால்,

தாகம் என்று வந்தவனுக்கு, தண்ணீர் இருந்தும் கொடுக்க மறுத்தவனுக்கு, எந்த நரகம் கிடைக்குமோ! அந்த நரகத்தை நான் அடைவேனாக !

भक्त्या विवदमानेषु 

मार्गमाश्रित्य पश्यतः |

तस्य पापेन युज्येत

यस्य आर्यो अनुमते गतः ||

- वाल्मीकि रामयाण

பக்த்யா விவத மானேஷு

மார்கம் ஆஸ்ரித்ய பஸ்யத: |

தஸ்ய பாபேன யுஜ்யேத

யஸ்ய ஆர்யோ அனுமதே கத: ||

- வால்மீகி ராமாயணம் 

By any chance, if I had intention to banish of my noble brother "Ram" to forest, 

let the same hell reach me, which is received by those, who while standing on the road, merely witnesses a dispute between two divided groups without trying to make peace between them.

ஒருவேளை, என் அண்ணா "ராமனின்"  வனவாசத்துக்கு நான் உடந்தையாக இருந்திருந்தால்,

இரு தரப்புகள் சண்டை போடுவதை பார்த்தும், சண்டையை விலக்கி சமாதானம் செய்யாமல் பார்த்து கொண்டே இருப்பவன், எந்த நரகத்தை அடைவானோ! அந்த நரகத்தை நான் அடைவேனாக !

विहीनाम् पति पुत्राभ्याम्

कौसल्याम् पार्थिव आत्मजः |

एवम् आश्वसयन्न् एव 

दुह्ख आर्तः निपपात ह ||

- वाल्मीकि रामयाण

விஹீனாம் பதி புத்ராப்யாம்

கௌசல்யாம் பார்திவ ஆத்மஜ: |

ஏவம் ஆஸ்வசயன் ந ஏவ 

துஹ்க ஆர்த: நிபபாத ஹ ||

- வால்மீகி ராமாயணம் 

Thus counseling Kausalya, who was devoid of her husband and son, the prince Bharata fell down finally unconscious, depressed with anguish.

தனது கணவரையும், மகனையும் இழந்து சோகத்தில் தவிக்கும்  கௌசல்யா மாதாவிடம், வேதனையுடன் மன உளைச்சலுக்கு உள்ளாகி இருந்த பரதன் இவ்வாறு பேசி விட்டு, இறுதியாக மூர்ச்சையாகிவிட்டார்.

ஒருவேளை, என் அண்ணா "ராமனின்"  வனவாசத்துக்கு நான் உடந்தையாக இருந்திருந்தால், 

1 வேத சாஸ்திரம் வழிகாட்டும் தர்மத்தை கடைபிடிக்காதவன் எந்த நரகத்தை அடைவானோ! அந்த நரகத்தை நான் அடைவேனாக !

2 பாபிகள் சொல்லும் வேலையை செய்யும் அடிமையாக நான் போவேனாக !

3 சூரியன் இருக்கும் திசை பார்த்து மலம் மூத்திரம் செய்பவன் எந்த நரகத்தை அடைவானோ! அந்த நரகத்தை நான் அடைவேனாக !

4 தூங்கி கொண்டு இருக்கும் பசு மாட்டை காலால் எட்டி உதைப்பவன் எந்த நரகத்தை அடைவானோ! அந்த நரகத்தை நான் அடைவேனாக !

5 தனக்கு கீழே வேலை பார்ப்பவர்களை பாவ காரியங்கள் செய்ய தூண்டுபவன், எந்த நரகத்தை அடைவானோ! அந்த நரகத்தை நான் அடைவேனாக !

6 தன் மக்களை தன் பிள்ளைகள் போல காக்கும் அரசனை கொலை செய்பவன், எந்த நரகத்தை அடைவானோ! அந்த நரகத்தை நான் அடைவேனாக !

7 பொது மக்களின் வருமானத்தில் 6ல் ஒரு பங்கை தனக்கு வாங்கிக்கொண்டு, அவர்களை காக்காமல் இருக்கும் அரசன் எந்த நரகத்தை அடைவானோ! அந்த நரகத்தை நான் அடைவேனாக !

8 வைதீகனுக்கு கொடுக்க ஒப்புக்கொண்ட தானத்தை கொடுக்காமல் ஏமாற்றுபவன் எந்த நரகத்தை அடைவானோ! அந்த நரகத்தை நான் அடைவேனாக !

9 பெரிய யானை படை, குதிரை படை, போர் வீரர்கள் இருந்தாலும் தர்மப்படி போர் செய்யாமல், அதர்ம போர் செய்பவன் எந்த நரகத்தை அடைவானோ! அந்த நரகத்தை நான் அடைவேனாக !

10 குருநாதர் கவனத்தோடு, அர்த்தத்துடன் சொல்லி கொடுத்த உபதேசத்தை மறப்பவன், எந்த நரகத்தை அடைவானோ! அந்த நரகத்தை நான் அடைவேனாக !

11 சூரிய சந்திரன் போல நீண்ட புஜங்கள் உடைய ராமபிரான் பட்டாபிஷேகம் செய்து கொண்டு அரசாளும் காட்சியை பார்க்கும் பாக்கியம் அற்றவனாக நான் போவேனாக!

12 அதிகமாகவோ, அநாவசியமாகவோ பசும்பாலை, மாமிசத்தை உண்பவன் எந்த நரகத்தை அடைவானோ, அந்த நரகத்தை நான் அடைவேனாக!

13 தன் குருநாதரை அவமானம் செய்பவன் எந்த நரகத்தை அடைவானோ, அந்த நரகத்தை நான் அடைவேனாக!

14 தன் குருநாதரை தாழ்த்தி பேசுபவன், எந்த நரகத்தை அடைவானோ, அந்த நரகத்தை நான் அடைவேனாக!

15 மாட்டை காலால் உதைப்பவன், எந்த நரகத்தை அடைவானோ, அந்த நரகத்தை நான் அடைவேனாக!

16 நண்பனை ஏமாற்றுபவன், எந்த நரகத்தை அடைவானோ, அந்த நரகத்தை நான் அடைவேனாக!

17 தனிமையில் மற்றொருவரின் தவறை பற்றி சொன்னதை கேட்டு, வெளியே சொல்பவன், எந்த நரகத்தை அடைவானோ, அந்த நரகத்தை நான் அடைவேனாக !

18 தனக்கு விதிக்கப்பட்ட காரியத்தை செய்யாதவன், எந்த நரகத்தை அடைவானோ, அந்த நரகத்தை நான் அடைவேனாக!

19 நன்றியற்றவன், எந்த நரகத்தை அடைவானோ, அந்த நரகத்தை நான் அடைவேனாக!

20 அவநம்பிக்கையான மனிதன், எந்த நரகத்தை அடைவானோ, அந்த நரகத்தை நான் அடைவேனாக!

21 அவமானத்தை கைவிட்டவன், எந்த நரகத்தை அடைவானோ, அந்த நரகத்தை நான் அடைவேனாக!

22 வெறுக்கத் தகுதியானவன் எந்த நரகத்தை அடைவானோ, அந்த நரகத்தை நான் அடைவேனாக !

23 வீட்டில் பிள்ளைகள், மனைவி, வேலைக்காரர்கள் இருந்தும், இருக்கும் உணவை தான் மட்டுமே சாப்பிடுபவன் எந்த நரகத்தை அடைவானோ, அந்த நரகத்தை நான் அடைவேனாக !

24 தனக்கு ஈம காரியங்கள் செய்ய ஆளில்லாமல் மரணிப்பவர்கள், எந்த நரகத்தை அடைவார்களோ, அந்த நரகத்தை நான் அடைவேனாக !

25 எனக்கு பிள்ளைகள் பிறக்காமல் போகட்டும். மேலும், கஷ்ட காலங்களை தாங்கும் சக்தி இல்லாமல், நீண்ட காலம் வாழ ஆயுசு இருந்தும், அல்ப ஆயுசாக என் உயிர் போகட்டும்.

26 அரசனை கொலை செய்தவன், தன் பிள்ளையை கொலை செய்தவன், பெண்ணை கொலை செய்தவன், வயதானவர்களை கொலை செய்தவன், தன்னை நம்பி வாழ்பவர்களை கை விட்டவன் எந்த நரகங்களை அடைவார்களோ, அந்த நரகங்களை நான் அடைவேனாக !

27 தன் பிள்ளைகளுக்கோ, மனைவிக்கோ, தனக்கு கீழ் வேலை பார்ப்பவனுக்கோ மது மாமிசம் மற்றும் விஷ போதை பொருட்கள் கொடுத்து உற்சாகப்படுத்துபவன், எந்த நரகத்தை அடைவானோ, அந்த நரகத்தை நான் அடைவேனாக !

28 போர் களத்தில் எதிரியை கண்டு பயந்து ஓடி மரணத்தை சந்தித்தவன், எந்த நரகத்தை அடைவானோ, அந்த நரகத்தை நான் அடைவேனாக !

பைத்தியகாரனை போல, மரவுரி அணிந்து கொண்டு, கையில் மண்டை ஓட்டையையே பாத்திரமாக எடுத்து கொண்டு பிச்சை எடுக்கும் படி, நான் வாழ்வேனாக!

29 பெண் மோகத்தில் விழுந்தவன், எந்த நரகத்தை அடைவானோ, அந்த நரகத்தை நான் அடைவேனாக!

30 மதுவுக்கு அடிமையானவன், எந்த நரகத்தை அடைவானோ, அந்த நரகத்தை நான் அடைவேனாக!

31 சூதாடி, எந்த நரகத்தை அடைவானோ, அந்த நரகத்தை நான் அடைவேனாக!

32 கோபத்தை கட்டுப்படுத்தாதவன் எந்த நரகத்தை அடைவானோ, அந்த நரகத்தை நான் அடைவேனாக!

33 தர்மம் எது என்று தெரியாமல், அதர்மத்தில் நாட்டம் மிகுந்து, தானம் வாங்க தகுதி இல்லாதவர்களுக்கு தானம் செய்பவன் எந்த நரகங்களை அடைவானோ, அந்த நரகங்களை நான் அடைவேனாக !

34 செல்வத்தை கோடி கோடியாக சேர்த்தவன் கடைசியில் அதை திருடனிடம் இழப்பது போல, நான் ஆவேனாக !

35 சந்தியா காலத்தில் தூங்குபவன் எந்த நரகத்தை அடைவானோ, அந்த நரகத்தை நான் அடைவேனாக !

36 வீட்டுக்கு தீ வைப்பவன், தன்னை விட வயதில் மூத்த பெண்ணையோ/குரு பத்னியையோ கெடுப்பவன், எந்த நரகத்துக்கு அடைவானோ, அந்த நரகத்தை நான் அடைவேனாக !

37 தேவ கடனையும், திவசம் போன்ற பித்ரு கடனையும் அடைக்காதவன், எந்த நரகத்தை அடைவானோ, அந்த நரகத்தை நான் அடைவேனாக !

38 பெரும் புகழோடு வாழ்ந்தவன், நல்லொழுக்கம் விட்டு, அவமானத்தை சந்தித்து அவமானப்படுவது போல, நான் ஆவேனாக !

39 பெற்ற தாய்க்கு பணிவிடை செய்யாமல் இருப்பவன், எந்த நரகத்தை அடைவானோ அந்த நரகத்தை நான் அடைவேனாக !

40 அதிக பிள்ளைகள் பெற்று, தரித்திரத்தால் துன்பப்பட்டு, நோய்களால் அவதிப்படுபவன்  எந்த துன்பத்தை அனுபவிப்பானோ, அதை அனுபவிப்பேனாக !

41 கொடுக்கும் நிலையில் இருந்தும், தனக்கு உதவி செய்வாரா என்று எதிர்பார்ப்பவனுக்கு உதவி செய்யாமல் இருப்பவன், எந்த நரகத்துக்கு செல்வானோ ! அந்த நரகத்தை நான் அடைவேனாக !

42 அரசனுக்கு எதிராக சதி வேலை செய்பவன், எந்த நரகத்துக்கு செல்வானோ ! அந்த நரகத்தை நான் அடைவேனாக !

43 மாதவிடாய் காலம் முடிந்து, தன் கணவன் மூலமாக பிள்ளை பெற்று கொள்ள வேண்டும் என்று வரும் மனைவியை புறக்கணிப்பவன், எந்த நரகத்துக்கு செல்வானோ ! அந்த நரகத்தை நான் அடைவேனாக !

44 பிறர் மனைவியிடம் உறவு கொண்டு, தன் மனைவியை புறக்கணிப்பவன், எந்த நரகத்துக்கு செல்வானோ ! அந்த நரகத்தை நான் அடைவேனாக !

45 ஒரு பிராம்மணன் தன் பிள்ளையை ஒழுக்கமுள்ளவனாகவும் தர்மத்தில் இருப்பவனாகவும் வளர்க்காமல் இருந்தால், எந்த நரகத்துக்கு செல்வானோ ! அந்த நரகத்தை நான் அடைவேனாக !

46 குடிக்கும் ஜலத்தை மாசு படுத்துபவன், எந்த நரகத்துக்கு செல்வானோ ! அந்த நரகத்தை நான் அடைவேனாக !

47 அடுத்தவனுக்கு விஷம் கொடுப்பவன், எந்த நரகத்துக்கு செல்வானோ ! அந்த நரகத்தை நான் அடைவேனாக !

48 ப்ராம்மணனுக்கு கிடைக்க வேண்டியதை கெடுப்பவன், எந்த நரகத்துக்கு செல்வானோ ! அந்த நரகத்தை நான் அடைவேனாக !

49 10 நாள் கூட ஆகாத கன்றுவுக்கு கொடுக்காமல், தாய் பசுவின் பாலை கறப்பவன், எந்த நரகத்துக்கு செல்வானோ ! அந்த நரகத்தை நான் அடைவேனாக !

50 தாகம் என்று வந்தவனுக்கு, தண்ணீர் இருந்தும் கொடுக்க மறுத்தவனுக்கு, எந்த நரகம் கிடைக்குமோ! அந்த நரகத்தை நான் அடைவேனாக !

51 இரு தரப்புகள் சண்டை போடுவதை பார்த்தும், சண்டையை விலக்கி சமாதானம் செய்யாமல் பார்த்து கொண்டே இருப்பவன், எந்த நரகத்தை அடைவானோ! அந்த நரகத்தை நான் அடைவேனாக !

தனது கணவரையும், மகனையும் இழந்து சோகத்தில் தவிக்கும்  கௌசல்யா மாதாவிடம், வேதனையுடன் மன உளைச்சலுக்கு உள்ளாகி இருந்த பரதன் இவ்வாறு பேசி விட்டு, இறுதியாக மூர்ச்சையாகிவிட்டார்.

Friday 13 October 2017

அன்புக்கும், பாசத்துக்கும் என்ன வித்தியாசம்?

அன்பை விட பாசம் தாழ்ந்தது.

அன்புக்கும், பாசத்துக்கும் என்ன  வித்தியாசம்?

ஸ்ரீராமர், தன் தந்தைக்கு செய்து கொடுத்த சத்தியத்துக்கு கட்டுப்பட்டு, 14 வருடம் காட்டுக்கு சென்றார்.

தன்னால் தான், இந்த நிலை ராமருக்கு வந்தது என்று மனம் வருந்தி, தம்பி பரதன் அழுதார்.

காட்டுக்கு சென்று, ராமரை அயோத்தி வந்து நாட்டை ஆளுமாறு கேட்டு கொண்டார். பிடிவாதம் செய்தார். தனக்கு இந்த பழி வேண்டாம் என்று பாவத்திற்கு அஞ்சினார்.
வேண்டுமென்றால் ராமர் நாட்டை ஆளும் போது, தான் 14 வருடம் காட்டில் வாழவும் தயாராக இருந்தார். வராவிட்டால் உயிர் தியாகம் செய்வேன் என்று பிடிவாதமும் செய்தார்.

கடைசியாக ஜனகர் அங்கு வந்து, பிரேமை (அன்பு) என்பதன் உண்மையான அர்த்தம் என்ன? என்று விளக்கி,
ப்ரேமைக்கும், பாசத்திற்கும் உள்ள வித்தியாசத்தை பரதனுக்கு உணர்த்தி,
அவருக்கு பிரேமையின் உண்மையை புரிய வைத்தார்.

பிரேமையை விட பாசம் தாழ்ந்தது என்றும் உணர வைத்தார்.

ஜனகர் : பரதா, நீ ராமரிடம் வைத்துள்ள அன்புக்காக எதை தியாகம் செய்ய துணிவாய்?

பரதன் : மிகவும் உயர்ந்தது உயிர். என் உயிரையே கூட ராமருக்காக தியாகம் செய்வேன்.

ஜனகர் : உயிரை தியாகம் செய்வது எளிது. ஆனால் உயிரை இழக்காமல், அவருக்காக வாழ்வதே நிஜமான அன்பு (பிரேமை).
பரதா, ராமருக்காக நீ செய்யும் தியாகம் மிக உயர்ந்தது.
ஆனால், இப்போது நீ செய்யும் இந்த தியாகத்தை விட, நீ அன்பு செய்யும் ராமருக்கு உன் தியாகம் மகிழ்ச்சி ஏற்படுத்துமா? என்று யோசித்துப் பார்.

அவர் விருப்பம் இல்லாமல் நீ செய்யும் எந்த செயலும், தியாகம் ஆகாது. உண்மையான அன்பு இல்லை.

உண்மையான அன்பு என்பது, நீ அன்பு வைத்து இருப்பவரின் விருப்பப்படி வாழ தூண்டும்.
நீ இப்பொழுது செய்யும் தியாகம் பாசத்தினால் வந்தது.
பாசத்தில் சுய நலம் மட்டுமே இருக்கும்.

அன்பில் (ப்ரேமையில்) மற்றவருக்காக வாழ தோன்றும்.

நீ உண்மையான அன்பு ராமரிடம் கொண்டுள்ளதால், ராமரிடமே சென்று 'நான் என்ன செய்ய வேண்டும்?' என்று கேள்.
அவர் விருப்பம் என்னவோ அப்படியே செய்.
அவர் எதை விரும்பவில்லையோ அதை செய்யாதே !
இது தான் நீ ராமருக்கு காட்டும் உண்மையான அன்பு.
என்று சொல்லி முடித்தார் சீதையின் தந்தை ஜனகர்.

அது வரை தான், 'தன் தியாகம்' என்று பாச வலையில் இருந்த பரதர், அன்பின் உயர்வை உணர்ந்தார்.
ராமர் என்ன சொல்கிறாரோ, அதை பின் தொடர்வதே உண்மையான அன்பு என்று உணர்ந்து, ராமரின் சொல் படி 14 ஆண்டு அயோத்தியை ஆள ஒப்புக் கொண்டு, உயிர் தியாகம் செய்வேன் என்ற பிடிவாதத்தை கைவிட்டார்.
பாசத்திலிருந்து விடுபட்டு, பரதர் அன்புக்கு அடிமையானார்.
ராமர் விருப்பப்படி வாழ்ந்தார்.
ராமர் பரதனை கண்டு மகிழ்ச்சி அடைந்தார்.

நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்:
யாரிடத்திலும் அன்பு செய்ய வேண்டும்.
பாசம் கூடாது.

பாசம், சுயநலமாக செயல்கள் செய்ய தூண்டும்.
அன்பு, தான் துயரப்பட்டாலும், மற்றவனுக்காக உழைக்க தூண்டும்.

சுயநலம் இல்லாதது அன்பு.

sandhyavandanam Evening - Yajur - Hear and understand meaning of each sloka 

sandhyavandanam Afternoon - Yajur - Hear and understand meaning of each sloka 

sandhyavandanam Morning - Yajur - Hear and understand meaning of each sloka