Followers

Search Here...

Showing posts with label உண்மை என்ன. Show all posts
Showing posts with label உண்மை என்ன. Show all posts

Friday 1 February 2019

தூக்கத்தில் என்ன நடக்கிறது? கனவை பற்றி ... ஒரு அலசல்

கனவை பற்றிய அறிவியல் ஆராய்ச்சிகள் பல நடந்து கொண்டே இருக்கிறது..
நம் ஹிந்து தர்மத்தில் தூக்கத்தில் என்ன நடக்கிறது?
என்று சாஸ்திரத்தை அறிந்தவர்கள் சொல்லும் போது,
ஆழ்ந்த தூக்கத்தில் ஆத்மாவாகிய நாம், யோக நித்திரையில் இருக்கும் பரவாசுதேவன் 'நாராயணன்' இதயத்தில் சென்று ஒடுங்குகிறோம் என்கிறது.
(ஸ்ரீ ரங்கத்தில், இந்த யோக நித்திரையில் தான் எம்பெருமான் இருக்கிறார்)


ஆனந்த ஸ்வரூபமான பகவானின் இதயத்தில் ஒடுங்குவதால், ஆழ்ந்த தூக்கம் பெற்றவர்கள் மறுநாள் எழுந்திருக்கும் போது, சுறு சுறுப்பாகவும், "நன்றாக தூங்கினேன்" என்ற திருப்தியும் அடைகிறார்கள்.

இது நமக்கு தெரியாமலேயே தினமும் அனைத்து ஜீவனுக்கும், ஆழ்ந்த தூக்கத்தில் நடக்கிறது.

ஆழ்ந்த உறக்கம் கிடைத்தால், நாம் இன்று நன்றாக தூங்கினோம் என்ற அனுபவம் மட்டுமே ஏற்படுகிறது.

தூக்க சமயத்தில் என்ன நடந்தது? என்று அறியாத இருட்டடிக்கப்பட்ட நிலையை "தமஸ்" என்று சொல்கிறோம்.

தமஸ் என்று அறியாமை என்ற இருட்டினால், 'நாம் தூக்கத்திலும் உயிரோடு இருந்தோம்' என்று எழுந்த பின் உணர்ந்தாலும்,
தூக்க சமயத்தில் எங்கு இருந்தோம்? என்ன செய்தோம்? என்ற அறியாமையிலேயே (தமஸ் என்ற நிலையில்) தூங்குகிறோம்.

இந்த அறிவை பெறுவதற்கு பல ஆராய்ச்சிகள் நவீன அறிவியல் செய்து கொண்டிருக்கிறது.

வராஹ மூர்த்தியாக பகவான் அவதரித்து, உருண்டையான பூமியை பிரளய ஜலத்தில் இருந்து காப்பாற்றினார் என்று சொன்ன ஹிந்துக்களின் அறிவை ஒத்துக்கொள்ளாத பொய் மதங்கள், "உலகம் தட்டை" என்று பிதற்றியது..
அறிவியல் ரீதியாக 'உலகம் உருண்டை தான்' என்று சொன்ன கலிலியோவை பாவ மன்னிப்பு கேட்க சொல்லி, அடித்து துன்புறுத்தி மன்னிப்பு கேட்க வைத்தது பொய் மதங்கள்.
"மனிதனால் கற்பனையாக உருவாக்கப்பட்ட" பொய் மதங்கள்
2012ல் உலகம் அழியும்,
உலகம் தட்டை,
மறு பிறவி கிடையாது,
எல்லாம் வல்ல இறைவனாக இருந்தாலும், மனிதனாக அவரால் வர முடியாது
என்று தான் தோன்றி தனமாக எழுதி முட்டாள்களை சேர்த்து கொண்டு மதமாக்கியது.
மஹா அறிவாளியாக இருக்கும் பாரத மக்கள், 1000 வருடங்கள் பொய் மதங்கள் ஆக்ரமித்தும், உருட்டியும், மிரட்டியும் பொய்களை சொல்லி ஏமாற்ற முயற்சி செய்தும்,
ஹிந்துக்கள் இவர்கள் பொய் மதத்தில் போகவில்லை.

"நான் நாதீகனாக கூட இருந்து விட்டு போகிறேன், ஆனால் உன் பொய் மதத்துக்கு வர மாட்டேன்"
என்று விதண்டாவாத புத்தி கொண்ட சில பாரத மக்கள் கூட விலகி இருக்கிறார்கள். ஹிந்துவாகவே இருக்கிறார்கள்.


இன்றும் இந்தியாவில் 90 கோடி ஹிந்துக்கள் உள்ளனர்.
வெளி நாடுகளிலும் பல கோடி ஹிந்துக்கள் உள்ளனர்.
மஹா பிரளயம் ஏற்பட்டு, பிரம்மாவும் அழியும் சமயத்தில், மோக்ஷம் அடையாத அனைத்து ஜீவனும், பல லட்ச காலங்கள் பரவாசுதேவன் இதயத்தில் இதே போன்று சென்று ஒடுங்குகிறது.

இந்த பல லட்ச காலமும் நாம் அனைவரும் இருக்கிறோம் என்ற அறிவை தவிர, எங்கு இருக்கிறோம்? என்ன செய்கிறோம்?
என்று தெரியாத தமஸ் என்ற அறியாமையிலேயே பகவானின் இதயத்தில் இருந்து, மீண்டும் பகவான் ஸ்ருஷ்டி செய்த பின், உலகங்களில் பிறக்கிறோம்.

எந்த நொடியில் நாம் தூங்கி போனோம்?
தூக்கத்தில் நான் என்ன செய்தேன்?
எங்கு இருந்தேன்?
என்று அஞானியான நம்மால் உணர முடிவதில்லை.

ஆனால், பாரத தேசத்தில், இருந்த ரிஷிகள், அவர்களின் தவ, யோக பயிற்சியியால் யோகஸித்தி பெற்றவர்களாக இருந்தனர்.

புத்தி அடங்கிய பின் வருவது தூக்கம்.
புத்தியை கொண்டு, தூக்கத்தில் என்ன நடக்கிறது? என்று நாம் முயற்சிக்கும் போது, தூக்கம் வந்தவுடன் புத்தி அடங்கிபோனதால், அஞானியான நம்மால் அதற்கு மேல் என்ன நடக்கிறது? என்று கவனிக்க முடியவில்லை. தூங்கி விடுகிறோம்.
யோக ஸித்தி பெற்ற ரிஷிகள், ஆத்மாவின் சக்தியை கொண்டு, புத்தி அடங்கிய பின்னும், தூக்க நிலையில் என்ன நடக்கிறது? என்று கண்டுபிடிக்கிறார்கள்.

கலியில், ஒரு நாள் ஏகாதேசி விரதம் இருக்க கூட சக்தி இல்லாத நாம், யோக ஸித்தி அடைவது நினைக்க முடியாத முயற்சி.
இரண்டு வேளை சாப்பிடாமல் இருந்தாலேயே நமக்கு தலை சுற்றி விடும்.

துவாபர, த்ரேதா, க்ருத யுகங்களில் யோகிகள் ரிஷிகள் மட்டுமல்ல, அசுரன், ராக்ஷஸன் கூட பல மாதங்கள் சாப்பிடாமல், தவம், யோகம் செய்யும் வலிமை கொண்டிருந்தனர்.

கலியில் "தெய்வம் இல்லை" என்று நாத்தீகம் பேசும் மடையர்களை காண்கிறோம்.
போன யுகங்கள் வரை பொதுவாக பார்த்தால், ராக்ஷஸர்கள் கூட கடும் முயற்சி செய்து, சிவபெருமானையும், ப்ரம்மாவையும் பார்த்தனர் என்று பார்க்கிறோம்.

அசுரர்கள், ராக்ஷஸர்கள் "தெய்வம் இல்லை" என்று கலியில் உள்ள நாத்தீகனை போல சொன்னதில்லை.
அளவுக்கு மீறிய பலம் தனக்கே இருந்ததால், தெய்வங்களையே மிரட்ட பார்த்தனர் என்று பார்க்கிறோம்.
அப்படி சக்தி உள்ள எதிரிகளை, தெய்வங்கள் அவதாரம் செய்து வதம் செய்து ஒடுக்கினார்கள் என்று புராணங்களில் பார்க்கிறோம்.


கலியில் கடும் தவம் செய்து தெய்வத்தை பார்த்து, மிரட்டும் சக்தி இல்லாத மடையர்கள்,
"தெய்வம் இல்லை. இருந்தால் வர சொல்" என்று சொல்லும் போது, தெய்வங்கள் இவர்களை மதிப்பது கூட இல்லை.

தனக்கு ஏற்ற எதிரியும் இல்லை,
தன்னை அடைய நினைக்கும் பக்தனும் இல்லை
என்கிற போது, தெய்வங்கள் இந்த நாத்தீக மடையர்களை பார்த்து, "அல்ப ஆயுசு" என்று சிரிக்கும்.




போன யுகம் வரை, கனவில் என்ன நடக்கிறது? என்பது,  அனுபவத்திலேயே பலருக்கு இருந்துள்ளது.
கலியில் படித்து மட்டுமே தெரிந்து கொள்ள முடியும்.

ஆழ்ந்த தூக்கத்திற்கு பின் எழும்போது ஆரோக்கியத்தையும் சுறு சுறுப்பையும் அடைகிறோம்.

ஆத்மா ஆழ்ந்த தூக்கம் அடையும் முன்னர், புத்தி, மன சஞ்சலத்தால் இடையுறும் போது, பல மணி நேரம் தூங்கியும், தூங்காதது போல உணர்கிறோம்.
ஆழ்ந்த தூக்கம், அதாவது பரவாசுதேவன் இதயத்தை அடையும் முன்,
மனம் சஞ்சலம் ஏற்படும் போது, நமக்கு கனவுகள் உண்டாகிறது.
 
நம் திறமைக்கு ஏற்ப கதாபாத்திரங்கள் படைக்கிறோம்.
முடிந்தால் நாமே கூட ஒரு கதாபாத்திரம் ஏற்று கனவில் வாழ்கிறோம், அழுகிறோம், பயப்படுகிறோம்.
கனவு காணும் சமயத்தில் "உண்மை" என்றே நினைத்து அனுபவிக்கிறோம்.
விழித்த பின், "பொய்" என்று உணர்கிறோம்.

ஆத்மா ஆழ்ந்த தூக்கம் (அதாவது பரமாத்மாவை அடையும் முன்) அடையும் முன், மன சஞ்சலத்தால் உருவாக்கப்படும் படைப்பே கனவு.
பரமாத்மா "இந்த உலகை தன் மனதால் படைக்கிறார்" என்று சொல்வதை,
நாம் மனதில் படைக்கும் "கனவை" உதாரணமாக கொண்டு புரிந்து கொள்ளலாம்.

நாம் படைக்கும் கனவில்,
பல கதாபாத்திரம் படைக்கும் திறன் நமக்கு ஏற்படுகிறது.

அது போதாது என்று,
நாம் படைக்கும் கனவில் நாமே அவதாரம் செய்யவும் முடிகிறது.
அதுவும் போதாது என்று,
உண்மையிலேயே நாம் அந்த கனவில் கஷ்டங்கள், சந்தோஷங்கள் அனுபவிப்பதாகவும் நம்மை நாமே நம்பவும் முடிகிறது.

"கனவு பொய், இது நான் படைத்த பொய் கதை" 
என்று தூக்கத்தில் இருந்து எழுந்த பின் நம்பும் நாம்,
தூக்கத்தின் போது, கனவுலகில் நிஜம் என்று நம்புகிறோம்.

இந்த அஞான (அறிவு இல்லாத) நிலை கனவில் நமக்கு ஏற்படுகிறது.
தூக்கம் கலைந்த பின்,
"கனவில் நாம் நிஜம் என்று நினைத்து அனுபவித்தது பொய்" என்று ஞானம் (அறிவு) தானாகவே ஏற்படுகிறது.


நாம் காணும் இந்த உலகங்கள், பரமாத்மாவின் மனதில் இருந்து வெளிப்பட்ட படைப்பு, 
என்று பார்க்கும் போது, அவரை பொறுத்தவரை, அவர் திறமையால் படைக்கப்பட்ட ஒரு கனவு உலகம் இது.
(World is a stage. We are just actors doing specific roles for short period)

ஜீவாத்மாவாகிய நாம் படைக்கும் கனவில் நாமும் அவதாரம் செய்வது போல,
பரமாத்மாவும் தன் மனதால் படைக்கப்பட்ட இந்த உலகங்களில் அவதாரம் செய்கிறார்.

நாம் ஜீவாத்மாவாக இருப்பதால், 
நம் அஞானத்தால் (மெய் அறிவு இல்லாததால்) கனவை படைத்து, அவதாரம் செய்து, மாட்டிக்கொண்டு கனவில் வேதனை, துக்கம் அடைகிறோம்.
பரமாத்மா தன்னுடைய கனவான இந்த உலகங்களை படைத்து,
கனவிலும் விழிப்பு நிலையில் இருப்பதால் (யோக நித்திரை),
பல கோடி ஜீவன்களை உருவாக்கி, உலகங்களை படைத்து,
அதில் ஆச்சர்யமான நிர்வாகமும் செய்து,
தானும் தேவைப்படும் போது அவதாரம் செய்து,
தான் அவதாரம் செய்து உள்ளோம் என்று அறிவுடன்,
தான் படைத்த உலகத்தில், தான் படைத்த ஜீவன்களுடன் உறவாடி,
மீண்டும் தன்னை மறைத்து கொண்டு,
உலகம் தொடர்ந்து நடக்க செய்து,
யோக நித்திரையில் இருந்து கொண்டே, தான் படைத்த இந்த உலகத்தில் நடக்கும் அனைத்தையும் நிதானத்துடன் பார்த்து கொண்டே இருக்கிறார் பெருமாள்.

மஹா பிரளயம் என்ற சமயத்தில், 14 உலகங்களும் அழிந்து, பிரம்மாவும் இறந்த பின்,
மோக்ஷம் அடையாத அனைத்து ஜீவனையும், தன் இதயத்தில் வைத்து கொண்டே, உறங்குகிறார்.

மீண்டும் உலகை படைக்கலாம் என்று சங்கல்பித்து, மீண்டும் யோக நித்திரையில் ஆழ்ந்து மீண்டும் ப்ரம்மா முதல் படைக்க ஆரம்பிக்கிறார். மோக்ஷம் அடையாத ஜீவன்களை மீண்டும் உலகங்களில் படைத்து லீலை செய்கிறார்.

நம்மை பொறுத்தவரை உலகம் அமைப்பாக தெரிந்தாலும், அவர் படைப்பை பார்த்தால், பல விஷயங்கள் நம்மால் புரிந்து கொள்ளவே முடியாது.

உலகத்தை விட்டு வெளியே இருந்து பார்த்தால்,
தரையில் ஸ்திரமாக நின்று கொண்டு இருக்கிறோம் என்று நினைக்கும் நாம் அனைவரும் உண்மையில், ஒரு பெரிய கல் உருண்டையில் (பூமியில்) ஒட்டிக் கொண்டு இருக்கிறோம்.
அதுவாவது பரவாயில்லை...
ஒரு சிறிய கல்லை கூட அந்தரத்தில் ஒரு துணை இல்லாமல், நாம் தொங்க வைக்க முடியாது.
ஆனால் அத்தனை பெரிய கல் உருண்டை ஆகாயத்தில் தொங்கி கொண்டு இருக்கிறது.

அதுவாவது பரவாயில்லை...
தொங்கி கொண்டிருக்கும் இந்த உலகம் கால நேரம் தவறாமல், ஒரே பாதையில் உருண்டு கொண்டே உள்ளது.
அதில் ஒட்டி கொண்டுள்ள நாம் விழவும் இல்லை.
அதுவாவது பரவாயில்லை...


இது போன்று பல பெரும் பெரும் கல் உலகங்கள் அது அது ஒரு பாதையில் போய் கொண்டிருக்கிறது.

வானத்தை பார்த்தால், பல லட்சம் நக்ஷத்திரம் தெரிகிறது.

இவை எல்லாம் என்ன? எதற்காக இவை எல்லாம் இருக்கிறது? என்று நாம் சிந்தித்தால், தலை சுற்றுவது நிச்சயம்.

உலகை விட்டு வெளியே சென்ற ஒருவன், ஒரு வேளை இந்தியாவில் இருந்து அனுப்பப்பட்ட சாட்டிலைட்டை பார்த்தால் என்ன நினைப்பான்?

சாட்டிலைட் உள்ளே சென்று பார்த்தால், யாருமே இல்லை.
ஆனால் தானாக சுற்றுகிறது.

தானாக சாட்டிலைட் சுற்றுவதால், உலகமும் தானாக தான் சுற்றுகிறது என்று நினைத்தால் எத்தனை முட்டாள் தனம் அது?
யாரும் இல்லாத சாட்டிலைட்டை எங்கிருந்தோ ஒருவன் அனுப்பினான். அவனே எங்கோ இருந்து கொண்டு இயக்குகிறான் என்று அறிந்தவன், இயற்க்கையாக ஆத்மா இல்லாத பொருட்கள் தானாக இயங்குவதில்லை என்று அறிவை கொண்டு உணர்கிறான்.

தானாக சுற்றி கொண்டிருக்கும்  சாட்டிலைட்டை பூமியில் ஒருவன் இயக்குவது போல, 
அதை விட பல மடங்கு பலம் உள்ள பல உலகங்களை, நக்ஷத்திரங்களை ஒரே பாதையில் ஓடிக்கொண்டு இருக்க செய்பவனும் இருக்க வேண்டும்

என்று கொஞ்சம் அறிவு உள்ள மனிதன் கூட அறிந்து கொள்கிறான்.

அதனால் தான், 6 அறிவு உள்ள மக்கள் கூட்டத்தில்,
உலகங்களில் உள்ள 97% மக்கள் கடவுள் உண்டு என்பதை தனக்கு கொடுக்கப்பட்ட அறிவை கொண்டு உணர்கின்றனர்.
ஒரு 3% சதவீத மடையர்கள் கடவுள் இல்லை என்று, பகுத்து அறிய தெரியாமல் உளறுகின்றனர்.
கடவுள் இல்லை என்று சொல்லும் இந்த முட்டாள் கூட்டத்துக்கு ஆதரவு செய்வது, "தெய்வம் உண்டு" என்று சொல்லும் மனித அறிவு கொண்ட எவருக்குமே அவமானம்.

கடவுள் உண்டு, அவர் தான் உலகங்களை படைத்தார் என்று பொதுவாக ஒரு மனிதன் சொன்ன சித்தாந்தத்தை வைத்து பல பொய் மதங்கள் உருவாகின.
ஆனால் பொய் மதங்கள் தானாகவே மக்கள் வரவேற்பை பெறாமல் அழிந்து போகும்.

யோகத்தாலும், தவத்தாலும் ரிஷிகள் உண்மைகளை கண்டுபிடித்ததால், ஹிந்துக்கள் மட்டும் அழிக்க முடியாதவர்களாக இருக்கின்றனர்.

அந்த பகவான் "நாராயணனே" என்றும், அவர் யார்? எப்படி இருக்கிறார்? உலகம் உருண்டையா தட்டையா? என்று பல கேள்விகளுக்கு பதில் சொல்கிறது.

ஹிந்து மதத்தின் பதிலை, ஆராய்ச்சிகளை பார்க்கும் வெளி நாட்டவர்கள் ஹிந்து மதத்தை தன் வாழ்க்கை முறையாக ஆக்கி கொண்டு, வாழ்கிறார்கள்.

பொய் மதங்கள் தானாகவே அழிந்து விடும்.
மக்களின் பல கேள்விகளுக்கு பொய் மதங்களில் பதில் கிடையாது.
"கலிலியோ"வை உலகம் உருண்டை என்று சொன்னதற்கு தண்டனை வழங்கியவர்கள் பொய் மதத்தவர்கள்.

ஹிந்துக்கள் பெறுக, இருக்கும் பல சந்தேகங்களை தெளிவு படுத்தி கொண்டாலே, தெரிய படுத்தினாலே, மனித அறிவு உள்ள எவனும் ஹிந்துவாக மாற ஆசைப்படுவான்.

உலகம் தட்டை என்று உளறி, கலிலியோவை சித்திரவதை செய்த பொய் மதங்கள், தன்னிடம் ஓட்டை பாத்திரம் மட்டுமே உள்ளது என்று அறிந்து, இன்று திருட்டு வேலைகள் செய்கிறது.

கோவிலில் உள்ள ஸ்தூபம் போல தனக்கும் செய்து கொள்கிறார்கள்.
வேதம், ஜெயம், ஜபம் போன்ற சமஸ்கரித வாக்கியங்களை சொந்த சரக்கு இல்லாமல் திருடுகிறார்கள்.
தூய்மைக்கு வெண்மை உடை, சந்நியாசிக்கு காவி உடை என்பதை திருடி வெட்கமில்லாமல் தனக்கு பயன்படுத்துகிறார்கள்.

அடுத்தவன் புத்தகத்தில் காப்பி அடித்து, ஓட்டை பாத்திரம் கொண்ட பொய் மதங்களை, கொஞ்சம் அறிவு பெற்ற மக்கள் கூட நிராகரிப்பார்கள்.

ஹிந்துவாக இருப்பவன் "தங்க கிண்ணத்தில்" பால் குடிப்பவன்.
அந்த பாலை கொஞ்சம் திருடி, நாய் தோலால் செய்யப்பட கிண்ணத்தில் ஊற்றி குடிக்க சொன்னால், மானமுள்ள ஹிந்து மதம் மாறுவானா? 

வெளி நாட்டினர் பலர் ஹிந்துக்களாக ஆகி வருகின்றனர்.
பாரத நாட்டில் விழிப்புணர்வு செய்தாலே, பொய் மதங்களை விட்டு பாரத மக்கள் விலகி விடுவார்கள்.
2000 வருடங்களாக தலையில் தூக்கி வைத்து இருந்த பௌத்த மதத்தை, தூக்கி எறிந்து விட்டனர் பாரத மக்கள் என்று சரித்திரத்தில் பார்க்கிறோம்.

தனி மனிதனால் உருவாக்கப்பட்ட,
அடுத்தவன் புத்தகங்களை காப்பி அடித்து வாழ நினைக்கும் எந்த பொய் மதத்தையும்
அறிவுள்ள பாரத மக்கள் சில காலம் ஏற்று கொள்வது போல இருந்தாலும், கடைசியில் தூக்கி எறிந்து விட்டு, அருமையான ஹிந்து மதமான வேதம் சொன்ன சனாதன தர்மத்தையே மீண்டும் எடுத்து கொள்கிறார்கள்.
ஹிந்துக்களை விழிப்புடன் இருக்க செய்து, பொய் மதங்களில் போன நம் பாரத மக்களையும் தன் பெருமையை உணர செய்தாலேயே, பாரத நாடு மட்டுமல்ல, உலகமே ஹிந்து மதமாகும்.

முயற்சி திருவினையாக்கும்.
ஹிந்துக்கள் ஒன்றுபடுவோம்.

பாரத மக்கள் அனைவரும் அறிவாளிகளே. அனைவரும் ஹிந்துக்களே.

HARE RAMA HARE KRISHNA - BHAJAN

sandhyavandanam Evening - Yajur - Hear and understand meaning of each sloka 

sandhyavandanam Afternoon - Yajur - Hear and understand meaning of each sloka 




sandhyavandanam Morning - Yajur - Hear and understand meaning of each sloka