Followers

Showing posts with label என்ன. Show all posts
Showing posts with label என்ன. Show all posts

Thursday, 17 December 2020

பெண்ணை மணம் செய்து கொடுப்பவர்கள் கவனிக்க வேண்டியது என்ன? ஆபஸ்தம்ப ரிஷி சொல்கிறார். தெரிந்து கொள்வோமே..

 பெண்ணை மணம் செய்து கொடுப்பவர்கள் கவனிக்க வேண்டியது என்ன? ஆபஸ்தம்ப ரிஷி சொல்கிறார். தெரிந்து கொள்வோமே..

யானஸ்ய பாரா அபினிஹிதஸ்ய 

அதுரஸ்ய ஸ்திரியா இதி சர்வை: தாதவ்ய: |

-  ஆபஸ்தம்ப சூத்திரம்

வாகனத்திற்கு, சுமையை தூக்கி வருபவர்களுக்கு, நோயாளிக்கு, பெண்களுக்கு, மற்றும் முதியவர்கள், குழந்தைகளுக்கு, வழி விட்டு நடக்க வேண்டும். அவர்களை நடக்கும் பாதையில் தடையாக இருக்க கூடாது.


அஷிஸ்ட பதித மத்த உன்மத்தானாம் ஆத்மா 

ஸ்வஸ்தி அயன அர்த்தேன சர்வை: இவ தாதவ்ய: |

-  ஆபஸ்தம்ப சூத்திரம்

தன் நலனை கருத்தில் கொண்டு, முட்டாள்களுக்கும், வர்ணத்துக்கு அப்பாற்பட்டு இருப்பவனுக்கும், குடிகாரனுக்கும், பைத்தியத்துக்கும் வழி விட வேண்டும். 

சகோத்ராய துஹிதரம் ந ப்ரயச்சேத் |

-  ஆபஸ்தம்ப சூத்திரம்

தன் பெண்ணை, சகோதர உறவு கொண்ட ஒரே ரிஷி கோத்திர பையனுக்கு மணம் செய்து கொடுக்க கூடாது.


ப்ராஹ்மே விவாஹே பந்து ஷீல ஸ்ருத அரோஞானி புத்வா ப்ரஜா சஹத்வ கர்மபய பிரதிபாதயேத் சக்தி விஷயேன அலம்க்ருதே |

-  ஆபஸ்தம்ப சூத்திரம்

தன் மகள், அவள் கணவனோடு புகுந்த வீட்டில் சேர்ந்து தன் கடமையை ஒழுங்காக செய்ய, திருமணம் ஆகும் முன்பேயே அந்த குடும்பத்தை பற்றியும், பழக்க வழக்கம் பற்றியும், விஷய ஞானத்தை பற்றியும், ஆரோக்கியத்தை பற்றியும் அறிந்து கொண்டு, பிறகு தன்னால் முடிந்த அளவுக்கு தன் பெண்ணுக்கு நகை போட்டு, மணம் செய்து கொடுக்க வேண்டும்.


ந சம்சயே ப்ரத்யக்சவத் ப்ரூயாத் |

-  ஆபஸ்தம்ப சூத்திரம்

நன்றாக புரிந்து கொள்ளாத விஷயத்தை பற்றி, தெளிவாக புரிந்தது போல பேச கூடாது.Tuesday, 15 December 2020

ஆத்மாவை (நம்மை ) தெரிந்து கொள்ள விடாமல் தடுப்பது எது? மனிதனின் நோக்கம் என்ன? ஆபஸ்த்மப ரிஷி சொல்கிறார்.. தெரிந்து கொள்வோமே..

ஆத்மாவை (நம்மை ) தெரிந்து கொள்ள விடாமல் தடுப்பது எது? மனிதனின் நோக்கம் என்ன? ஆபஸ்த்மப ரிஷி சொல்கிறார்.. தெரிந்து கொள்வோமே..

பானி சம்க்சுப்தேன உதகேன ஏக பானி ஆவர்ஜிதேன ச ந ஆசாமேத் |

ஆபஸ்தம்ப சூத்திரம் 

கலக்கப்பட்ட வெறும் தண்ணீரை குடிக்க கூடாது. இரு கைகளால் எடுத்து தராமல், ஒரு கையால் தரும் தண்ணீரை குடிக்க கூடாது.


ந அசௌ மே சபத்ன இதி ப்ரூயாத் | 

யதி  அசௌ மே சபத்ன இதி ப்ரூயாத் | 

த்விசந்தம் ப்ராத்ரவ்யம் ஜனயேத் |

- ஆபஸ்தம்ப சூத்திரம்

யாரை பார்த்தும் "இவன் என் எதிரி" என்று சொல்ல கூடாது. அப்படி சொல்ல ஆரம்பிக்கும் போது, அவனே உண்மையாகவே எதிரி ஆகி விடுவான்.
திஸ்டான் ஆசாமேத் ப்ரஹவோ வா |

ஆஸீனஸ் த்ரிர் ஆசாமேத் ஹ்ருதய அங்கம அபிர் அத்பி: |   

ஆபஸ்தம்ப சூத்திரம் 

நின்று கொண்டோ அல்லது முன்னோக்கி வளைந்து கொண்டோ, தண்ணீர் குடிக்க கூடாது. 

அமர்ந்து குடிக்க வேண்டும், மூன்று முறை தண்ணீர் நெஞ்சில் செல்லுமாறு தலைதூக்கி குடிக்க வேண்டும்.


குரு-தல்பகாமி ச வ்ருசனம் சிஷ்னம் பரிவாஸ்ய அஞ்சலாவ் ஆதாய தக்ஷிணம் திசம் அநாவ்ருத்திம் வ்ரஜேத் |

ஜ்வாலிதாம் வா சூர்மிம் பரிஸ்வஜ்ய சமாப்னுயாத் |

சுரா ஆபோ அக்னி ஸ்பர்ச சுராம் பிபேத் |

- ஆபஸ்தம்ப சூத்திரம் 

யார் ஒருவன் தன் குருவின் மனைவியிடம் தகாது உறவு கொள்கிறானோ, அவன் செய்த பாவத்துக்கு, தன்னுடைய ஆண் உறுப்பை தானே முழுவதுமாக வெட்டி இரு கையில் எடுத்துக்கொண்டு, தெற்கு திசை நோக்கி, மரணம் வரும் வரை நடந்து கொண்டே இருக்க வேண்டும்..

அல்லது, பெண் உருவத்தை வடித்த இரும்பு சிலையை பழுக்க காய்ச்சி அதை கட்டி பிடித்து கொண்டே உயிர் விட வேண்டும்.

அல்லது, மயக்கம் தரும் மதுவை சுட சுட காய்ச்சி, அளவுக்கு மீறி கொதிக்க கொதிக்க வாயில் விட்டு குடித்து, உயிர் விட வேண்டும்.


புருஷன் ச உபயோர் தேவதானாம் ராஜனஸ் ச |

- ஆபஸ்தம்ப சூத்திரம் 

தெய்வத்தையோ, அரசனையோ கீழ்த்தரமாக பேச கூடாது.


அனஸூயுர் துஷ்ப்ரளம்ப ஸ்யாத் குஹக சத நாஸ்திக பாலவாதேசு |

ஆபஸ்த்மப ரிஷி (சூத்ரம்)

நயவஞ்சகர்கள், முரட்டுத்தனமானவர்கள், நாத்தீகர்கள் மற்றும் முட்டாள்களின் பேச்சுக்களால் ஒருவர் எரிச்சல் அடைய கூடாது. ஏமாறவும் கூடாது..
சர்வஜனபதேஸ்வ் ஏகாந்த சமாஹிதம் ஆர்யானாம் வ்ருத்தானாம் சம்யக் விநீதானாம் வ்ருத்தானாம் ஆத்மாவதாம் அலொலுபானாம் அதாம்பிகாணாம் வ்ருத்த ஸாத்ருஷ்யம் பாஜேத |

ஆபஸ்த்மப ரிஷி (சூத்ரம்)

நம்முடைய செயல்களை, நம் நடத்தையின் மூலம் கட்டுப்படுத்த வேண்டும்.

பண்பு உள்ளவர்கள் நன்னடத்தை கொண்டவர்கள். 

அவர்களை பார்த்து, நம்முடைய செயல்களை கட்டுப்படுத்தி, நடத்தையை சரி செய்து கொள்ள வேண்டும்.

யார் பண்பு உள்ளவன் (ஆரியன்)?

நன்கு படித்த, முதிர்ச்சி உடைய, சுய கட்டுப்பாடு கொண்ட, பேராசையிலிருந்து விடுபட்ட, மற்றவர்களுக்காக பாசாங்கு செய்யாதவர்களே 'ஆரியன்' என்று அழைக்கப்படுகிறார்கள்.

அத்யாத்மிகான் யோகான் அனுதிஷ்தேன் ந்யாய சம்ஹிதான் அனைஸ்சாரிகான் |

ஆத்ம லாபான் ந பரம் வித்யதே |

ஆபஸ்த்மப ரிஷி (சூத்ரம்)

ஒவ்வொரு மனிதனின் நோக்கமும் 'ஆத்மா'வை (தன்னை) அறிந்து கொள்வதே.

ஆத்மாவை (உன்னை), நீ அறிந்து கொள்வதை விட பெரிய கல்வி கிடையாது.

அத பூத தாஹீயான் தோஷான் உதாஹரிஸ்யாம: |

க்ரோதோ ஹர்ஷோ ரோஷா லோபோ மோஹோ தம்போ த்ரோஹோ ம்ருசோத்யம் அத்யாசா, பரீவாத அவசூயா காம மன்யு அநாத்ம்யம் அயோகஸ் தேஷாம் யோக மூலோ நிர்காத: |

ஆபஸ்த்மப ரிஷி (சூத்ரம்)

ஆத்மாவை (நம்மை ) தெரிந்து கொள்ள விடாமல் தடுப்பது எது?

கோபம், மகிழ்ச்சி, ரோஷம், பேராசை, ஒட்டுதல், தற்பெருமை, துரோகம், பாசாங்கு, பொய், பெருந்தீனி, பொறாமை, சுயநல ஆசை, ரகசியமான வெறுப்பு, புலன்களை அடக்கி வைப்பதில் அலட்சியம், மனதை அடக்குவதில் அலட்சியம் ஆகியவை, ஆத்மாவை (தன்னையே) அறியவிடாமல் தடுக்கிறது. 

இந்த ஆத்மா ஆனந்த ஸ்வரூபமானது. 

தான் ஆனந்தமயமானவன் என்பதை உணர விடாமல் இவை தடுக்கிறது.

இந்த தடையை போக்க வழி சொல்வதே 'யோகம்'.

Monday, 14 December 2020

மிச்சமாகிய எச்சில் உணவை என்ன செய்ய வேண்டும்? ஆபஸ்தம்ப ரிஷி சொல்கிறார்... தெரிந்து கொள்வோமே..

மிச்சமாகிய எச்சில் உணவை என்ன செய்ய வேண்டும்?  ஆபஸ்தம்ப ரிஷி சொல்கிறார்... தெரிந்து கொள்வோமே..

அசக்தொள பூமௌ நிகனேத் |

  - ஆபஸ்த்மப சூத்திரம்

மிச்சமாகிய எச்சில் உணவை மண்ணில் புதைக்க வேண்டும்.


அப்சு வா பிரவேசயேத் |

  - ஆபஸ்த்மப சூத்திரம்

அல்லது, மிச்சமாகிய எச்சில் உணவை நீரில் விட்டு விடலாம்.


ஆர்யாய வா பர்யவதத்யாத் |

  - ஆபஸ்த்மப சூத்திரம்

பண்பு உள்ள (ஆர்யா) வேதம் இன்னும் கற்று கொள்ளாத (8 வயது குறைந்த) குழந்தைக்கு உச்சிஷ்டமாக கொடுக்கலாம். அந்த குழந்தை, அந்த இலையில் தனக்கு இஷ்டப்பட்ட பழமோ, இனிப்போ எது வேண்டுமானாலும் எடுத்து சாப்பிடலாம்.


அந்தர்தினே வா சூத்ராய |

  - ஆபஸ்த்மப சூத்திரம்

அல்லது, 'தன் வீட்டுக்கு வேலை செய்யும் வேலையாட்களுக்கு' (employee) கொடுக்கலாம்.

நாரதர் பிரம்மாவுக்கு புத்திரனாக தோன்றிய காரணம், அவர் பூர்வ ஜென்மத்தில் சாப்பிட்ட இந்த உச்சிஷ்டம் தான். 

குருவுக்கு முன் அவரை குருவாக ஏற்ற அனைவருமே வேலையாட்கள் தான். குரு சாப்பிட்ட உச்சிஷ்டம் பவித்ரமானது என்று சொல்லப்படுகிறது. அவரது ஞானம் நமக்கு சேரும். அவர் வைகுண்டம் சென்றால், நமக்கும் வைகுண்டம் தானே கிடைக்கும்..

கணவனுக்கு மனைவி வேலை செய்கிறாள். ஆதலால், அவளும் கணவன் இலையில் சாப்பிடுகிறாள். அவன் புண்ணியத்தை தானும் எடுத்து கொள்கிறாள்.


இது எதுவுமே முடியாது என்ற பட்சத்தில், மிச்சம் வைக்காமல் சாப்பிடுவது நல்லது.. 

மிச்சப்பட்ட உணவை ரிஷி சொன்னது போல செய்து, மாடும் இல்லாத பட்சத்தில், இலையை நீரில் கழுவி விட்டு, இலையை குப்பை தொட்டியில் போட்டு விடலாம்..

Wednesday, 11 November 2020

உத்தராயண காலத்தை எதிர்பார்த்து காத்திருந்த, பீஷமரின் ஹ்ருதயம் என்ன? பீஷ்மர் என்ன ஆசைப்பட்டார்?

உத்தராயண காலத்தை எதிர்பார்த்து காத்திருந்தார், பீஷ்மர்.

மற்றவர்களுக்கு இப்படி ஒரு காரணத்தை காட்டினாலும், மனதில் வேறு ஒரு ஆசையுடன் காத்து இருந்தார்.
கோடியில் ஒரு சில மகாத்மாக்களுக்கு தான், 'பிராணன் போகும் சமயத்தில், பகவானின் நினைவு' வரும்.

பிராணன் போகும் சமயத்தில், 'பகவத் தரிசனம் கிடைப்பது' என்பது அதை விட மஹா பாக்கியம்.

ப்ரம்மச்சர்யத்துடன் வாழ்ந்த பீஷ்மருக்கு, போர் சமயத்திலேயே இந்த பாக்கியம் கிடைத்தும், கை நழுவி போனது


'பீஷ்மர் பெண்ணுடன் போர் புரியவதில்லை' என்று கொள்கை கொண்டவர். 

அதே சமயம், 

ஸ்ரீ கிருஷ்ணர், 'பாரத போரில் ஆயுதம் எடுக்க மாட்டேன்' என்று சத்தியம் செய்து இருந்தார்.

9 நாட்கள் பாரத போரில், இரு பக்கமும் பேரிழப்பு ஏற்பட்டது. இருந்தாலும், "பாண்டவர்களில் ஒருவர் கூட கொல்லப்படாமல் இருப்பதற்கு காரணம் பீஷ்மரே" என்று குறை கூறினான், துரியோதனன்.


பீஷ்மர் துரியோதனனிடம் 'நாளைய போரில் பாண்டவர்களை கொல்வேன், என் போர் தடைப்படாமல் இருக்குமானால்!" என்று சபதம் செய்தார்.


அதே சமயம், 'பாண்டவர்கள் ஐவரை காப்பேன்' என்று வாக்கு கொடுத்து இருந்தார் ஸ்ரீ கிருஷ்ணர்.


ஸ்ரீகிருஷ்ணர் 'பாண்டவர்களை காப்பாற்ற "சிகண்டியை" முன் நிறுத்தி பீஷ்மரின் போரை பங்கம் செய்வேன்' என்றார்.


இப்படி சாமர்த்தியம் செய்யும் ஸ்ரீ கிருஷ்ணர், 'எப்படி இருந்தாலும் 10வது நாள் போரில் தன்னை வீழ்த்தி விடுவார்' என்று புரிந்து கொண்டார் பீஷ்மர்.


ஆனால், 'சிகண்டி போன்றவர்கள் கையால் தான் வீழ்த்தப்பட கூடாது' என்று நினைத்தார். 

'நாளை வீழ போவது நிச்சயம் என்கிற போது, ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவின் கையால் சாக வேண்டும். அவர் நினைவோடு, அவர் தரிசனத்தோடு உயிர் விட்டு விட வேண்டும்' என்று நினைத்து கொண்டார்.


உடனே பீஷ்மர், "கிருஷ்ணனை நாளைய போரில் ஆயுதம் எடுக்க வைப்பேன்" என்று சபதம் செய்தார்.


10வது நாள் போரில், பீஷ்மர் கிருஷ்ணனை ஆயுதம் எடுக்க வைத்து உயிரை விடுவதற்கு, படு பயங்கரமாக போர் புரிந்தார்.

10வது நாள் போரில், பாண்டவர்கள் பக்கம் பெரும் நாசம் ஏற்பட்டது..

ஆயிரக்கணக்கான போர் வீரர்கள், யானை படை, குதிரை படை நாசமானது.


பாண்டவர்கள் பக்கம் நடக்கும் பெரு நாசத்தை கண்டு, ஸ்ரீ கிருஷ்ணர் தன் ரதத்தை பீஷ்மரை நோக்கி செலுத்தினார்.

உத்வேகத்துடன் இருந்த பீஷ்மரை எதிர்க்க முடியாமல், அர்ஜுனனே திணறி போனான். 

சாரதியாக அமர்ந்து இருந்த கிருஷ்ணரை நோக்கி, சரமாரியாக அம்புகளை செலுத்தினார் பீஷ்மர்.

'அன்று பீஷ்மர் செய்த போரில், பார்த்தசாரதியின் மேல் பட்ட காயங்களை தான், திருவல்லிக்கேணியில் உள்ள பார்த்தசாரதி காட்டுகிறாரோ!' என்பது போல, அவர் திருமேனி உள்ளது.


அம்புகள் பட்டு ஸ்ரீ கிருஷ்ணர் திருமேனியில் ரத்தம் வழிய, அர்ஜுனன் 'ரதத்தை திருப்பு' என்று சொல்ல, 

'பீஷ்மரை இனியும் உயிரோடு விட்டால் பேராபத்து' என்று கடும் கோபம் கொண்டு, தன் சுருள் சுருளான முடிந்த கேசம் அவிழ்ந்தது கூட கவனிக்காமல், 'இனியும் பொறுக்க முடியாது' என்ற கடும் கோபத்துடன், சத்தியமே ஸ்வரூபமான, சத்தியத்தை மீறாத பரமாத்மா, தன் பக்தனாக இருக்கும் பீஷ்மர் செய்த சபதத்தை காக்க, தன் சத்தியத்தை மீறினார்.


தன் மேல்-அங்கவஸ்திரத்தை தான் சாரதியாக அமர்ந்து இருந்த இடத்தில் போட்டு விட்டு, நீல ஜோதியாக, கையில் சக்கரத்தை ஏந்தி, தேரிலிருந்து குதித்து பீஷ்மரை நோக்கி கடும் கோபத்துடன் ஓடி வந்தார். 

பீஷ்மரான தன் சபதத்தை காக்க, தன் சபதத்தை விட்டு கொடுத்த ஸ்ரீ கிருஷ்ணரை பார்த்தார். 

"நீல ஜோதியாக தன்னை நோக்கி வரும் ஸ்ரீ கிருஷ்ணரின் கையால் இன்று உயிரை விடும் பாக்கியம் கிடைத்ததே!" 

என்று பேரானந்தம் அடைந்த பீஷ்மர், தன் ஆயுதங்களை கீழே வைத்து, தன்னை ஸ்ரீ கிருஷ்ணர் வீழ்த்தட்டும் என்று நின்றார்.


அதற்குள், அர்ஜுனன் ஓடி வந்து ஸ்ரீ கிருஷ்ணரின் காலை பிடித்து கொண்டு, "கிருஷ்ணா! நீ இப்படி செய்ய கூடாது. ஆயுதம் எந்த மாட்டேன் என்று சபதம் செய்து இருக்கிறாய். பீஷ்ம தாத்தாவை கொல்லாதே! வா.. என்னுடன்.  தேரில் ஏறு.. நானே போர் செய்கிறேன்

என்று கட்டி பிடித்து இழுத்துக்கொண்டு தேரில் போய் அமர செய்தான்.


'தன் சத்தியத்தை காக்க, சத்ய ஸ்வரூபியான பரமாத்மா, தன் சத்தியத்தை கூட விட்டு விட துணிந்தாரே!!' என்று கண்ணீர் விட்டார் பீஷ்மர்.


அதே சமயம், "உயிர் போகும் சமயத்தில் பகவத் தரிசனம் என்ற வாய்ப்பை இழந்தோமே!" என்று ஒரு பக்கம் வருந்தினார்.

அன்றே, சிகண்டியை முன் நிறுத்தி, பீஷ்மரின் போரை பங்கம் செய்ய, அர்ஜுனன் பீஷ்மரை கீழே சாய்த்தான்.

அம்பு படுக்கையில் வீழ்ந்து கிடந்த பீஷ்மர், உயிரை விட சமயம் எதிர்பார்த்து காத்து இருந்தார்.

'ஸ்ரீ கிருஷ்ணர் கையால் வீழ்த்தப்பட்டு, கடைசி மூச்சு விடும் பாக்கியம் கிடைக்காமல் போனதே!! 

விரும்பிய போது மரணம் என்ற வரம் கொண்ட எனக்கு, மீண்டும் ஸ்ரீ கிருஷ்ண தரிசனம் கிடைக்குமா?

என்று எதிர்பார்த்து காத்து இருந்தார்.


18 நாள் போர் முடிந்து, பங்காளிகள் அனைவருக்கும் தர்மபுத்ரரரே காரியங்கள் செய்து முடித்தார்.


தர்மபுத்ரர் பெரும் சோகத்தில் மூழ்கி, "ஐயோ! இந்த உடலால் மற்றவர்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று சொல்லி இருக்க, இப்படி லக்ஷகணக்கான வீரர்களை கொல்ல காரணமாகி விட்டேனே! இந்த பாவத்துக்கு மீள முடியாத நரகம் தானே எனக்கு கிடைக்கும்" என்று புலம்ப ஆரம்பித்தார்.


'ராஜ தர்மம், ஸ்திரீ தர்மம், வைஸ்ய தர்மம், ப்ராம்மண தர்மம் என்று பல தர்மங்களை பீஷம தாத்தாவிடம் கேட்டு தெரிந்து வேண்டும்' என்று தர்மபுத்ரர் கிளம்ப, அவர் கூடவே ரிஷிகள், சகோதரர்கள் கிளம்ப, அர்ஜுனன் தேரில் தானும் ஏறி அமர்ந்து கொண்டார் கிருஷ்ண பரமாத்மா.

பீஷ்மர், தர்மபுத்ரருக்கு பல வித தர்மங்களை உபதேசித்தார்.

கூடவே வந்து இருக்கும் ஸ்ரீ கிருஷ்ணரை பார்த்தவுடனேயே, இந்த பக்வத் தரிசனத்தை பார்த்துக்கொண்டே உயிர் விட தயாராகி விட்டார்.
சஹஸ்ர நாமத்தால் ஸ்ரீ கிருஷ்ணரை ஸ்தோத்திரம் செய்து, 'இனியும் கிடைத்த வாய்ப்பை விட கூடாது', என்று முடிவு செய்து, கிருஷ்ண பரமாத்மாவை தரிசித்து கொண்டே உடலை விட்டு பிரிந்தார் பீஷ்மர்.


உத்தராயணத்துக்காக காத்து இருந்தார் பீஷ்மர் என்பது போல வெளி உலகுக்கு காட்டினாலும், 

பீஷ்மருக்கு "தன் பிராணன் விடும் சமயத்தில் கிருஷ்ண பரமாத்மா வேண்டும்" என்று ஆசைப்பட்டார்.

பக்தனின் அந்தரங்க ஆசையையும், ஸ்ரீ கிருஷ்ணர் நிறைவேற்றி கொடுத்தார்.

Thursday, 30 January 2020

தெய்வ பக்தியின் மூன்று நிலைகள் என்ன?... தெய்வத்திடம் காதல் கொண்டு ஆழ்வார்கள் பாடுகிறார்கள் என்று பார்க்கிறோம்... ஆழ்வார்கள் நிலை என்ன? தெரிந்து கொள்ள வேண்டாமா... ஹிந்துக்கள்.

தெய்வ பக்தியின் மூன்று நிலைகள் என்ன? 
தெரிந்து கொள்வோமே !!

1. காம்யார்த்தமான பக்தி:

 • உலக ஆசை உடையவர்கள். 
 • தெய்வம் தனக்கு அணுகிரஹம் செய்யும் என்று உணர்நதவர்கள். 
 • தெய்வத்திடம் பக்தி செய்து, விரதம் இருந்து, தெய்வ அணுகிரஹத்தால் தன் உலக ஆசைகளை பூர்த்தி செய்து கொள்பவர்கள்.
கோவிலுக்கு செல்வது, 
தெய்வ விக்ரஹங்களை சிலையாக பார்க்காமல் பெருமாளாக பார்ப்பது, 
விரதம் இருப்பது, 
மந்திரங்கள் ஜபிப்பது போன்றவை செய்கிறார்கள்

2. சாதனா பக்தி:

 • உலக ஆசை குறைந்து இருப்பவர்கள்.
 • தெய்வத்தின் அருளை அனுபவத்தில் உணர்நதவர்கள்.
 • உலக ஆசைகளை தெய்வத்திடம் பிரார்த்திப்பதை விட, அந்த தெய்வத்தை பற்றி, நன்கு புரிந்து கொள்ளவே ஆர்வம் மிக்கவர்கள். 
 • அதற்கு தேவையான சாதனைகளை செய்பவர்கள்.
கோவிலின் தத்துவத்தை அறிய முயல்பவர்கள்,
மந்திரங்களின் ஆழ்ந்த அர்த்தத்தை அறிந்து கொள்ள முயல்பபவர்கள்,
தெய்வத்தின் புராண சரித்திரங்கள், குணங்கள் போன்றவற்றில் ஆழ்ந்து உணருபவர்கள்,
தெய்வத்தை பற்றி அறிய தனி மனித ஒழுக்கம் என்று உணர்நதவர்கள்,
தியானம் யோகம் செய்து புலன்களை கட்டுப்படுத்தி வைத்து இருப்பவர்கள்.

ராமானுஜர் "திருவஷ்டாக்ஷர மந்திரத்தின் பொருள் அறிய", தான் யதிராஜராக இருந்த போதும்,
'ஸ்ரீரங்கத்தில் இருந்து திருக்கோஷ்டியூர் வரை' நடந்து சென்றும், 'திருக்கோஷ்டியூர் நம்பி' அதன் அர்த்தத்தை தகுதி இல்லாதவர்க்கு சொல்லி விட கூடாதே என்று தயங்கி மறுத்தார்.
ஸ்ரீரங்கம் திரும்பிய ராமானுஜர் சற்றும் மனம் தளரவில்லை.
17 முறை தொடர்ந்து ஸ்ரீரங்கத்திற்கும் திருக்கோஷ்டியூருக்கும் நடையாய் நடந்தார்.
இவ்வாறு தொடர்ந்து 17 முறை ராமானுஜர் வந்தபோதும், நம்பி அர்த்தத்தை சொல்ல தயங்கி மறுத்தார்.

அந்த பாதயாத்திரையின் பலன் 18வது சந்திப்பில் கிடைத்தது. 
உண்மையான ஆர்வமும்,
அலுப்பு அடையாமல்,
தன் மீது கோபமும் இல்லாமல் இருக்கும் ராமனுஜரே, மந்திரத்தின் பொருளை அறிய தகுதி ஆனவர்,
என்று அறிந்து, அர்த்த விஷேஷத்தை போதித்தார்.

சாதனா பக்தியில், எப்படி ஒரு பக்தன் இருப்பான்? என்று தன் சரித்திரத்திலேயே காண்பித்தார் ஸ்ரீ ராமானுஜர்.
ஞானத்தில் பூர்ணரான ராமானுஜர், 'நாதீகனும், காம்யார்த்த பக்தி செய்பவனும் கூட, பரமபதம் இதே ஜென்மத்தில் அடைந்து விட வேண்டும்' என்ற பரந்த நோக்கில், தான் கஷ்டப்பட்டு பெற்ற உபதேசத்தை இலவசமாக அனைவருக்கும் கிடைக்கும் படியாக கொடுத்து விட்டார்.

3. ஞான பக்தி :

 • உலக வாழ்க்கையை மதிக்காதவர்கள். 
 • செல்வம் சேர்ந்தாலும், ஏழையானாலும் குறைபட்டு கொள்ளாதவர்கள்.
 • இந்த ஆத்மா எப்பொழுது இந்த உடலை விட்டு, பரந்தாமனை அடையுமோ என்று தவிப்பவர்கள்.
ஜீவனாகிய தன்னை பெண்ணாகவும்,
பரமாத்மா நாராயணனே தன் புருஷனாகவும்,
"தன் கணவனிடம் சேரும் காலம் எப்பொழுதோ!!"
என்று பரமபதத்தையே எதிர்பார்த்து, தெய்வத்திடம் விரக தாபத்தில் இருப்பவர்கள்.
(ஆழ்வார்கள் இந்த நிலையிலேயே இருந்தனர்) 
ஆழ்வார்கள் தன்னை காதலியாகவும், பெருமாளை காதலானாகவும் கதறி அழுது பாடும் பாசுரங்கள், இவர்களின் ஞான பக்தி நிலையை நமக்கு காட்டுகிறது.

இந்த அனுபவத்தில் ஆழ்வார்கள் பாடிய பாசுரங்களை, நாத்தீகன் மட்டுமல்ல, காம்யார்த்தமான பக்தி செய்பவனும், சாதனா பக்தி செய்பவன் கூட படித்தாலும், "ஆழ்வார்கள் எந்த நிலையில் இப்படி பாடினார்கள்!!" என்று புரிந்து கொள்ள முடியாமல், "இது ஏதோ உலகத்தில் காணும் காதல் பாடல்" என்றே நினைப்பார்கள்.


இதன் காரணமாகவோ என்னவோ!! வைஷ்ணவ சம்ப்ரதாயத்தில், ஆழ்வார்கள் பாசுரங்களை, அதன் அர்த்தத்தை விஷ்ணு சஹஸ்ரநாமம் போல, அனைவருக்கும் தராமல், ஞானத்தின் தகுதி பார்த்தே பகிர்ந்துள்ளனர் என்று தெரிகிறது..

நமக்கு ஞான பக்தி இல்லாமல் போனாலும், ஆழ்வார்கள் நிலை வராது போனாலும்,
குறைந்தபட்சம் நாதீகர்களாகவாவது வாழாமல், காம்யார்த்த பக்தியாவது செய்து கொண்டு, தெய்வ அணுகிரஹத்தால், குருவின் துணையால், மேலும் மேலும் ஆன்மீக வளர்ச்சி நோக்கி செல்வோம்.

வாழ்க ஹிந்துக்கள்..
வாழ்க ஹிந்து தர்மம்.


Saturday, 21 December 2019

நமக்கு மந்திர ஸித்தி ஆக என்ன செய்ய வேண்டும்? ஹிந்துக்கள் தெரிந்து கொள்வோமே..

புரஸ்சரணம் என்றால் என்ன?
நாம் குருவிடம் உபதேசமாக பெற்ற மந்திரங்கள் நமக்கு ஸித்தி ஆவதற்கு "புரஸ்சரணம் (புரச்சரம்) என்கிற முறையை கடைபிடிக்க வேண்டும்" என்று சாஸ்திரம் வழி காட்டுகிறது.
உதாரணத்திற்கு, திருவஷ்டாக்ஷர மந்திரத்தையோ, தாரக மந்திரமான "ராம" நாமத்தையோ, அதில் ஸித்தி பெற்ற குருவிடம் நாம் உபதேசம் பெற்ற பின்,
அந்த மந்திரத்தை அக்ஷரத்திற்கு லக்ஷம் ஜபம் செய்ய வேண்டும். 
உதாரணத்திற்கு,
தாரக மந்திர (ராம) ஜபம் லட்சம் தடவை சொல்லும் போது, 2 எழுத்துள்ள தாரக மந்திரம், மொத்தம் சேர்த்து 2 லட்சம் ஆகிறது..

ஜபம் செய்த பின்,
2,00,000/10= 20,000 தடவை, தாரக மந்திரம் சொல்லி அக்னியில் "ஹோமம்" செய்ய வேண்டும்.

ஹோமம் செய்த பின்,
20,000/10 = 2,000 தடவை தாரக மந்திரம் சொல்லி தீர்த்தம் விட்டு "தர்ப்பணம்" செய்ய வேண்டும்.

தர்ப்பணம் செய்த பின்,
2,000/10 = 200 தடவை தாரக மந்திரம் சொல்லி தீர்த்தத்தை தன் தலை மேல் தெளித்து "மார்ஜனம்" செய்ய வேண்டும்.
மார்ஜனம் செய்த பின்,
200/10 = 20 "வேத பிராம்மணர்களுக்கு" அல்லது நாம் சொல்லும் "வேத மந்திரத்தில் ஸித்தி ஆன" 20 பேருக்கு போஜனம் செய்ய வேண்டும்.

இப்படி செய்யும் முறையே "புரஸ்சரணம்" என்று சொல்லப்படுகிறது...
இந்த முறையில் உபதேசம் பெற்ற மந்திரம் சொல்லப்படும் போது, நமக்கு அந்த மந்திர ஸித்தி உண்டாகும்.. அதன் சம்பந்தமான தெய்வ காட்சிகள் கூட கிடைக்கும்.

இந்த சாதனைகள் செய்யும் நேரத்தில்,
அதிகம் பேச கூடாது..
கோபம், காமம் கூடவே கூடாது.. பொறுமை அவசியம்.
புளிப்பு, இனிப்பு, காரம் உணவில் சேர்க்க கூடாது..
ஒரே இடத்தில் இருந்தே செய்ய வேண்டும்..
கோவில், தன் வீட்டில், புண்ய க்ஷேத்ரத்தில் செய்யலாம்.
மந்திர ஸித்தி அடைய லட்சியவாதியாக இருக்க வேண்டும்.

"தெய்வம் கருணையே வடிவானவர், சுலபமானவர்" என்று ஒரு புறம் சொல்கிறது வேதம்...
மற்றொரு இடத்தில்,
"தெய்வ அணுகிரஹம் கிடைக்க, அக்ஷரத்திற்கு லக்ஷம் ஜபம் செய்ய வேண்டும், பிறகு புரஸ்சரணம் முறையில் ஹோமம், செய்ய வேண்டும்" என்றும் சொல்கிறதே!!..
"இப்படி செய்தால் தான் பகவான் நமக்கு அருள் புரிவாரா?..." என்ற கேள்வி நமக்கு எழலாம்..

நம் முயற்சியே இல்லாமல் பகவான் கருணையை வர்ஷித்து கொண்டு தான் இருக்கிறார்..
நாத்தீகனுக்கு கூட, காமம், கோபம், பேராசை கொண்டவனுக்கு கூட, கோவிலில் அர்ச்ச அவதாரமாக உள்ள பெருமாள் வீதி உலா என்று தானே புறப்பட்டு, மதியாதார் வீட்டுக்கு முன் கூட வந்து நிற்கிறார்.. தரிசனத்தை தகுதி பாராட்டாமல் தருகிறார்..
அர்ச்ச அவதாரமாக இருக்கும் போது, பெருமாள் தன் பெருமை அறியாமல், சுலபமாக தான் இருக்கிறார். அனைவரும் பார்த்து விடுகின்றனர்.


14 வருடம் ராம தரிசனத்துக்காக காத்து இருந்தார், பரதன்...
பல துன்பங்களை சகித்து கொண்டு, கடைசியில் நரசிம்மமாக தரிசனம் பெற்றான் பிரகலாதன்.
பல வருடங்கள் காத்து இருந்து, ராம தரிசனம் பெற்றாள் சபரி.
80 கோடி ராம ஜெபம் செய்து, ராமபிரானை நேரில் தரிசித்தார் தியாகராஜர்.
எல்லையில்லா பெருமை உடைய பெருமாளை தரிசிக்க, எத்தனை முயற்சி செய்தாலும் தகுமே...

இந்த உலகில், அல்ப விஷயத்தை அடைவதற்கே, எத்தனை முயற்சி செய்கிறோம்..
மோக்ஷமே கொடுத்து விடும் பகவானை தரிசிக்க, இந்த சாதனைகள் ஒன்றும் கஷ்டமில்லையே... 

அக்ஷரத்திற்கு லட்சம் ஜபித்து, முறையாக புரஸ்சரண ஹோமம் செய்தால் தான் பகவான் கருணை செய்வார் என்று இல்லை..

மந்திர ஸித்தி பெற்ற குரு, நமக்கு உபதேசம் செய்ததற்கே, அந்த மந்திரத்தின் அதிபதியான தேவதை நம் மீது கருணை காட்டி விடுகிறார்கள் என்பது உண்மைதான்.
குருவின் மகத்துவமே, நமக்கும் தெய்வ அருள் கிடைக்க செய்து விடும்.

உதாரணத்திற்கு, ராம தரிசனம் பெற்ற, ராம நாமத்தில் ஸித்தி ஆன ஒரு குரு, நமக்கு தாரக மந்திரத்தை உபதேசம் செய்த போதே, குருவின் சிபாரிசு பெற்ற நமக்கு மறு ஜென்மம் கிடையாது என்று நிச்சயிக்கப்பட்டு விடுகிறது.
மோக்ஷ வாசலை திறந்து விட்டு விடுகிறார் பரமாத்மா நாராயணன்..

"குருவின் உபதேசமே தனக்கு மோக்ஷத்தை நிச்சயம் கொடுத்து விடும்" என்ற ஆன பிறகு,
எதற்காக அக்ஷரத்திற்கு லக்ஷம் ஜபம் செய்ய வேண்டும்? 
பிறகு எதற்கு புரஸ்சரணம் ஹோமம், செய்ய வேண்டும்? 
என்று கேட்க தோன்றலாம்...
ஒரு தந்தை (குரு), தன் பெண்ணை (நாம்) ஒரு நல்ல வரனுக்கு (பரமாத்மா) மணம் செய்து கொடுக்கிறார்.
கணவன், இவளை தன் மனைவி என்ற காரணத்துக்காகவே, கட்டாயம் தன் வீட்டுக்கு கூட்டி கொண்டு தான் செல்ல போகிறான்.

இருந்தாலும்,
அந்த பெண் தன்னை பார்த்து அவன் ஆசைப்படும் விதமாக தன்னை அழகாக அலங்கரித்து கொள்கிறாள்.
அவள் "தன்னை தான் அலங்கரித்து கொள்கிறாள்" என்றாலும், இதைப்பார்த்து கணவன் சந்தோஷப்படுவான் என்பதால் தானே அப்படி செய்து கொள்கிறாள்.
அது போல,
குருவின் கருணைக்கு பாத்திரமாகி, குரு மூலம் மந்திர உபதேசமும் பெற்று விட்டால், பெருமாளின் வீடான மோக்ஷம் நமக்கும் சொந்தம் ஆகி விடும்..  பெருமாள் நம்மையும் கேள்வி இல்லாமல் ஏற்றுக்கொண்டு விடுகிறார்.. சந்தேகமே இல்லை.
பிறப்பு இறப்பு என்ற சூழலில் இருந்து மீட்க பட்டு விடுவோம் என்பதில் ஐயமே இல்லை...
குருவின் கருணையால், குரு செய்த மந்திர உபதேசத்தால், நமக்கு மோக்ஷம் நிச்சயம் என்பதற்காக,
மீதி நாட்களை சும்மா இருந்து, தினமும் மற்றவர்களை போலவே நாமும் சாப்பிட்டு, தூங்கி பொழுதை போக்கி இந்த ஜென்மத்தை முடித்து கொண்டால், குரு கிருபையால் மோக்ஷம் கிடைத்து விடும்... ஆனாலும் நமக்கே பெருமாள் முன் நிற்க கூசுமே.. நம்மையே நமக்கு பிடிக்காமல் போகுமே..

ஒரு பெண் தன் கணவனை காணும் முன், அவன் ஆசையோடு தன்னை பார்க்க வேண்டுமே என்று தன்னை அலங்கரித்து கொள்வது போல,
மோக்ஷம் என்ற வீட்டுக்கு குருவின் கருணையால் போகப்போகும் நாமும், அந்த பரமாத்மா நம்மையும் ஆசையாக காண வேண்டுமே!! என்ற ஆவலில் நம்மை அலங்கரித்து கொள்ளும் முறையே புரஸ்சரணம்.
நெற்றியில் திருமண், வாயில் எப்பொழுதும் குரு உபதேசித்த பகவானின் நாமம், மனதில் எப்பொழுதும் பகவானின் சிந்தனை, தினமும் நாம் செய்யும் காரியங்களை பார்த்து பகவான் "சபாஷ்" போடும் படியாக வாழ்ந்து, கடைசியில் இந்த உடலை இந்த மண்ணில் விட்டு விட்டு சென்றால்,
மோக்ஷ வாசலில் நம் வருகைக்காக பெருமாள் காத்து இருந்து, ஆசையோடு அழைத்து செல்கிறார்..
இவ்வாறு அக்ஷரத்திற்கு லட்சம் மந்திர ஜபம் செய்யப்பட்டு, புரஸ்சரண ஹோமம் செய்யும் போது, குருவின் கருணையால், பகவான் ப்ரீதி அடைந்து, அந்த மந்திரம் நமக்கு ஸித்தி அகும்படி செய்கிறார்.

மந்திர ஸித்தி அடைந்தவன், மற்றவர்களுக்கு செய்கிற ஹோமம் ஒரு சில ஆவர்த்தி ஆனாலும் நல்ல பலன் கொடுக்கும்..
அந்த மந்திரத்தின் தேவதை தன் சக்திக்கு உட்பட்ட அனைத்து அணுகிரஹத்தையும், ஸித்தி பெற்றவனுக்கு தரும்..

உப தேவதைகளை விட்டு, பரமாத்மா நாராயணன் ப்ரீதி அடையும் மந்திரங்களில் ஸித்தி ஆனவர்கள், மோக்ஷத்துக்கே தகுதி பெறுகிறார்கள். அவர்களே மகான்கள்..

வாழ்க ஹிந்து தர்மம்..
ஹிந்துவாக பிறக்க வாய்ப்பு கிடைத்ததே மகா பாக்கியம்...

போலி மதங்களில் உள்ளவர்களும், ஹிந்து தர்மத்தில் ஈர்க்கப்படுகிறார்கள்...

Tuesday, 26 November 2019

பூணூல் அணிவதன் உள் அர்த்தங்கங்கள் என்ன?...பூணூல் அனைவரும் ஏன் அணியவேண்டும்?. பூணூலில் உள்ள இந்த 3 நூல்கள், ஒரு ப்ரம்ம முடிச்சும் எதை உணர்த்துகிறது? .....புரிந்து கொள்வோமேபூணூல் ஏன் இடது தோளில் அணிகிறோம்?

பூணூல் இடது தோளில் அணிவதை "உபவீதம்" என்று அழைக்கிறோம்.

தேவர்களுக்கு செய்யும் காரியங்களுக்கு பூணூல் இடது தோளில் (உபவீதமாக) இருக்க வேண்டும்.

நம் முன்னோர்களுக்கு செய்யும் காரியங்களுக்கு பூணூல் வலது தோளில் இருக்க வேண்டும்.

நம் ரிஷிகளுக்கு செய்யும் காரியங்களுக்கு பூணூல் மாலையாக இரு தோளில் இருக்க வேண்டும்.

முன்னோர்கள் பித்ரு லோகம் தென் திசையில் உள்ளது.
அதுபோல, தேவ லோகம் வட திசையில் உள்ளது.

பொதுவாகவே, எந்த வேத சம்பந்தமான பூஜையோ, யாகமோ கிழக்கு திசை பார்த்து தான் செய்ய வேண்டும்.


ஒருவருக்கு நமஸ்காரம் செய்தால் கூட, பொதுவாக கிழக்கு திசைபார்த்து தான் செய்கிறோம்.

கிழக்கு திசை பார்த்தே பெரும்பாலும் வேத காரியங்கள், நல்ல காரியங்கள் செய்வதால், நமக்கு இடப்பக்கம் வடக்காக இருப்பதால், பூணூல் இடமாகவே போட்டு கொள்கிறோம்.

நமக்கு வலப்பக்கம் தெற்கு திசை இருப்பதால், முன்னோர்களுக்கு தர்ப்பணம், திவச காரியங்கள் செய்யும் போது, பூணூல் வலமாக போட்டு கொள்கிறோம். 

ரிஷிகள் எங்கும் இருப்பதால், இரண்டு தோளும் படுமாறு மாலையாக போட்டு ரிஷி கடனை அடைகிறோம்.

பூணூல் நாம் அனைவரும் ஆவணி அவிட்டம் அன்று வேதமறிந்த வேதியரிடம் பக்தியுடன் வாங்கி போட்டு கொள்ள வேண்டும். 

இது ஒரு கவசம்.
மதம் மாற்ற வருபவர்கள், நெற்றியில் திலகம், பூணூல் அணிந்தவனை நெருங்கி அவன் போலி தெய்வங்களை பற்றி பேசுவதில்லை...

ஜாதி பேதம் இல்லாமல் அணியலாம்.
வேதமறிந்த வேதியரிடம் பக்தியுடன் வாங்கி போட்டு கொள்ள வேண்டும்.

ப்ராம்மணர்கள் மட்டுமின்றி, பாரத தேசத்தில் அனைவரும் பூணூல் அணிந்து இருந்தனர்..
"க்ஷத்ரிய அரசர்கள், வியாபாரிகள், சுய தொழில் செய்பவர்கள்" என்று அனைவரும் பூணூல் அணிந்து இருந்தனர்.
நம் தெய்வங்களும் பூணூல் அணிந்து இருப்பதை பார்க்கிறோம்.

இன்று ப்ராம்மணர்களில் கூட, சிலர் பூணூல் அணியாமல் திரிகின்றனர்.
மாமிசம் கூட சாப்பிடுகின்றனர்.
1200 வருட இஸ்லாமிய, கிறிஸ்தவ ஆக்ரமிப்பால், கோவில்கள், பாரத பெண்கள், செல்வங்களை மட்டும் இழக்கவில்லை நாம், இது போன்ற பழக்கத்தின் "ரகசியங்களையும்" தொலைத்தோம்..

'பூணூல் எதற்காக அணிந்தோம்?' என்ற காரணம் இன்று மறைந்து போனதால்,
'எதற்கு பூணூல் அணிய வேண்டும்?' என்று பாரத மண்ணில் பிறந்த நாமே நம்மை கேட்டு கொள்கிறோம்..

பூணூல் அணிந்து இருப்பவர்களை பார்த்து, காரணமே இல்லாமல் பொறாமையும் படுகிறோம்..

பூணூல் அணிவதன் உள் அர்த்தங்கங்கள் என்ன?...புரிந்து கொள்வோமே..

பூணூல் 'மூன்று நூல்களை' கொண்டதாக இருக்கிறது..
பூணூலில் ஒரு 'முடிச்சும்' காணப்படுகிறது.
அதை "ப்ரம்ம முடிச்சு" என்று சொல்லி கேள்வி பட்டு இருப்போம்..

மூன்று நூல்கள் எதை உணர்த்துகிறது?
"மனிதனாக பிறந்த நாம் அனைவருமே,
"மூன்று பேருக்கு கடன் பட்டு" இருக்கிறோம்" 
என்பதை பூணூலில் உள்ள இந்த 3 நூல்கள் உணர்த்துகிறது..

 1. ஒன்று பித்ரு கடன்,
 2. இரண்டு, ரிஷி கடன்,
 3. மூன்றாவது, தேவ கடன்.

1. பித்ரு கடன்
இன்று வரை மோக்ஷம் அடையாத கோடிக்கணக்கான ஜீவாத்மாவில், நாமும் இருக்கிறோம்.
இன்று வரை மோக்ஷம் அடையாததாலேயே நாம் உலகத்தில் இன்று வரை பிறந்து இருக்கிறோம்.
ஜீவனான நமக்கு, "மனித உடல் கொடுத்து" இந்த உலகில் வாழ வழி செய்தவர்கள் "நம் பெற்றோர்கள்".

நமக்கு கொடுக்கப்பட்ட இந்த உடலை வைத்து கொண்டு,
நாராயணனிடம் பக்தி செய்து மோக்ஷம் அடைந்து விட முடியும்...
இந்த உடலை வைத்து கொண்டு,
உலக விஷயங்களில் ஈடுபடவும் முடியும்..

"உடலை கொடுத்த நம் பெற்றோர்களுக்கு, நாம் நன்றி செய்ய கடன் பட்டுள்ளோம்".

இதை நமக்கு எப்பொழுதும் "நினைவுபடுத்தவே", பூணூல் அணிகிறோம்.

பூணூலில் உள்ள ஒரு நூல் "பித்ரு கடன் உனக்கு உள்ளது" 
என்று நம்மை நினைவுபடுத்திக்கொண்டே இருக்கிறது.

தாய், தந்தை, பாட்டி, தாத்தா, பாட்டனார்கள் அனைவருக்கும் இந்த உடல் கடன் பட்டுள்ளது.

அவர்கள் உயிருடன் இருக்கும் வரை, அவர்களை அனாதையாக விட்டு விடாமல், அவர்களுக்கு சேவை செய்து இந்த கடனுக்கு பதில் செய்ய வேண்டும்.

அவர்கள் உயிர் பிரிந்து "பித்ரு லோகம்" சென்றாலும்,
அவர்கள் வேறு பிறவியே எடுத்தாலும்,
அவர்கள் எங்கு இருந்தாலும் நன்றாக இருக்க வேண்டும் என்று  பித்ரு தேவதைகளிடம் வேண்டி, அவர்கள் உயிர் பிரிந்த நாட்களில் திதி (திவசம்/சிரார்த்தம்) செய்து பித்ரு கடனை அடைக்க வேண்டும்.
"திவசம்" போன்ற காரியங்கள் செய்யும் போது, ஹிந்துக்கள் அனைவருமே பூணூல் அணிந்து கொள்கிறார்கள்..

காரணம் புரியாததால்!! பெற்றோருக்கு திதி கொடுத்த பிறகு, பூணூலை கழட்டி எறிந்து விடுகிறார்கள்...
பூணூலை அணிந்து கொண்டே இருக்கலாமே.

ஒரு நூலை உடம்பில் போட்டுக்கொள்வது என்ன சிரமமான காரியமா?
ஹிந்துக்கள் அனைவரும் சிந்திக்க வேண்டும்..

அமாவாசை தர்ப்பணம், திதி கொடுப்பதும்,
பெற்றோருக்கு நாம் செய்யும் நன்றி கடனே, நன்றி உணர்ச்சியே..
இது நம்முடைய ஒரு கடமையே.
"உனக்கு மனித உடல் கொடுத்த  பெற்றோருக்கு நன்றி செய்ய என்றுமே மறந்து விடாதே"
என்று நம்மை நினைவு படுத்துவதற்கே நமக்கு பூணூல் அணிவிக்கப்பட்டது.
 
தாய் தந்தையை தெய்வமாக மதிப்பவன்,
அவர்கள் மனம் கோணாமல் வாழ ஆசைப்படுபவன், 
அவர்களுக்கு நன்றியுடன் வாழ ஆசைப்படுபவன், 
இந்த உயர்ந்த நோக்கத்தை நமக்கு நினைவுபடுத்தும் பூணூலை அவமதிப்பானா?..

"பூணூல் அறுப்பேன்" என்று சொல்பவன், "தாய் தந்தைக்கு நன்றி காட்டாதே.. அவர்களுக்கு நீ கடன் படவில்லை.." என்று தானே சொல்கிறான்..
பெற்றோரை மதிக்காத அப்படிப்பட்ட கீழ்த்தரமான மனிதர்கள் மனித குணம் உள்ளவர்களா?..
சிந்திக்க வேண்டும்...

2. தேவ கடன்
சூரிய தேவன், "கண்" என்ற உறுப்பிற்கு "பார்க்கும்" சக்தியை கொடுக்கிறார்..
அக்னி தேவன், மனித உடலுக்கு ஏற்ற சூட்டை கொடுத்து, உறுப்புகளை வேலை செய்ய உதவுகிறார்.
வாயு தேவன், 5 வாயுவாக உடல் முழுவதும் இருந்து, உடல் உறுப்புகள் அசைந்து வேலை செய்ய உதவுகிறார்.
இப்படி முப்பத்து முக்கோடி தேவர்களும், நம் உடலை இயங்க செய்ய உதவுவதால், உடலை அழுகி விடாமல் காக்கும் தேவர்களுக்கும் நாம் "கடன்" பட்டு இருக்கிறோம்.

ஸந்தியா வந்தனத்தில், "பிரணவ ஜபம், காயத்ரி ஜபம்" தவிர, மற்றவவைகள் மந்திரங்கள் அல்ல, ஸ்தோத்திரங்களாகவே இருக்கின்றன.

ஆரம்பம் முதல் கடைசி வரை, பல தேவதைகளின் பெயரை சொல்லி துதிப்பதாகவே சந்தியா வந்தனம் உள்ளது.. தேவதைகளின் ஸ்தோத்திரங்களாகவே இருக்கின்றன.

தினமும் மூன்று வேளை சந்தியா வந்தனம் செய்வதன் மூலமாகவே "தேவ கடனுக்கு" நாம் நன்றி செய்ய முடிகிறது..
சந்தியா வந்தனத்தில்,
நவ க்ரஹங்களை திருப்தி செய்கிறோம்..
எமனுக்கு கூட வந்தனம் செய்கிறோம்..
"யோவ: சிவதமோ ரஸ:" என்று சிவபெருமானை தியானித்து கொண்டே நம்மை சுத்தி செய்து கொள்கிறோம்..
"சர்வாப்யோ தேவதாப்யோ நமோ நம:" என்று அனைத்து தேவதைகளுக்கும் சேர்த்து நமஸ்காரம் செய்கிறோம்..

சந்தியா வந்தனம் ஒழுங்காக செய்தாலே, நாம் "தேவ கடனை" அடைத்து விடலாம்.

"சிவாய நம:, நமோ நாராயணா, முருகா போற்றி" என்று சொல்வதும்,
ஆழ்வார்களின் திவ்ய பிரபந்தங்கள், நாயன்மார் பதிகங்கள் போன்றவை பாடுவதும் கூட,
நாம் செய்யும் ஸ்தோத்திரங்களே (துதிகள்).

"வேத மந்திரங்கள் வேறு, ஸ்தோத்திரங்கள் வேறு" என்று புரிந்து கொள்ள வேண்டும்.

இரண்டுமே பக்தியை கொடுக்கும், தெய்வத்திடம் அழைத்து செல்லும் என்றாலும், இரண்டும் ஒன்றல்ல..

வேதத்துக்கு நிகராக 4000 திவ்ய பிரபந்தங்கள் இருக்கிறது என்று சொல்கிறார்கள்..
4000 திவ்ய பிரபந்தங்களை "தமிழ் மறை" என்றே சொல்கிறார்கள்..
"வேதத்துக்கு நிகரான திவ்ய பிரபந்தத்தை, கோவிலில் பெருமாளுக்கு முன் பாட செய்தார்" ஸ்ரீ ராமானுஜர் (1017AD)..

'திவ்ய பிரபந்தம் படிக்கும் போது, தெளியாத வேத மந்திரங்களின் அர்த்தங்கள் கூட புரிந்து விடுகிறது' என்கிறார் ஸ்வாமி தேசிகர்.

திவ்ய பிரபந்தம் "வேதத்துக்கு நிகரானது" என்று மதிக்கப்பட்டாலும்,
கோவில்களில் திவ்ய ப்ரபந்தத்தை பெருமாள் முன் பாட வேண்டும் என்று சீர்த்திருத்தமே செய்தாலும்,
ஸ்ரீ ராமானுஜர், "திவ்ய பிரபந்தம் போதுமே என்று வேத மந்திரங்களை ஒதுக்கி விட வில்லை" என்று பார்க்கிறோம்..

"ஸ்தோத்திரம் வேறு, வேத மந்திரங்கள் வேறு" என்பதை அறிந்தவர் ராமானுஜர்.

பெருமாள் முன் பாடப்படும் திவ்ய பிரபந்தங்கள், பகவானை பற்றி பாடுகிறது.. இது ஸ்துதி.
ஆனால் "புருஷ சூக்தம்" போன்ற வேத மந்திரங்களை ஓதும் போது, அது பகவானை பற்றிய ஸ்துதி அல்ல, அது பகவானையே குறிக்கிறது..
"ஓம் நம சிவாய" என்று சொல்வதும்,
"பதிகங்கள்" பாடுவதும்,
சிவபெருமானை பற்றிய ஸ்துதிகளே..
ஆனால்,
"ருத்ரம்" போன்ற வேத மந்திரங்களை ஓதும் போது, அது சிவபெருமானின் 11 ருத்ர ரூபத்தையே குறிக்கிறது..

மந்திரங்கள் ஸித்தி ஆகும் போது, தெய்வங்கள் நேரிடையாக பேச ஆரம்பித்து விடுகிறார்கள்..

நம் உடல் உறுப்புகளை பாதுகாக்கும் தேவர்களுக்கு, 
காலத்தில் மழை கொடுக்கும் தேவர்களுக்கு, 
நாம் அனைவருமே "தேவ கடன்" பட்டு இருக்கிறோம்.

மூன்று வேளையும் சந்தியா வந்தனம் செய்து "தேவ கடனை" அடைக்கிறோம்.
அது தவிர,
தினமும் பூஜை அறையில் உள்ள அனைத்து தெய்வங்களுக்கும் நன்றியுடன் பூஜை செய்வது மூலமாகவும்,
குல தெய்வத்தை மறந்து விடாமல் வழிபடுவதின் மூலமாகவும், 
கோவில் திருப்பணிகளில் உடல் ரீதியாகவும், பொருள் ரீதியாகவும் முடிந்த உதவி செய்வதாலும், 
கோவிலில் உள்ள தெய்வங்களின் சொத்தை கொள்ளை அடிக்காமல் இருப்பது போன்றவை மூலமாகவும்,
"தேவ கடனை" அடைக்கிறோம்..
பூணூலில் உள்ள இரண்டாவது நூல் "தேவ கடன் உனக்கு உள்ளது" என்று நம்மை நினைவுபடுத்திக்கொண்டே இருக்கிறது.

3. ரிஷி கடன்
"ஓம்" என்ற மந்திரத்தை முதலில் க்ரஹித்து உலகுக்கு வெளிப்படுத்தியவர் ப்ரம்ம தேவன்.
"ப்ரணவஸ்ய ரிஷி ப்ரம்மா"
என்று சந்தியா வந்தனம் காட்டுகிறது.
ப்ரம்மாவே ரிஷி தான்.
"ஓம் என்ற பிரணவம்" ஸித்தி ஆகும் போது, நம்மை படைத்த ஈஸ்வரன் நம்மை காப்பாற்றுகிறார் என்ற தெளிவான அறிவு ஏற்பட்டு விடும். உலகமே எதிர்த்தாலும், கலங்காத உள்ளம் ஏற்பட்டு விடும்.

"காயத்ரி மந்திரத்துக்கு" ரிஷி விஸ்வாமித்திரர்.
இப்படி வேத மந்திரங்களுக்கு ரிஷிகள் பலர்..
சக்தி வாய்ந்த வேத மந்திரங்களை நமக்கு கொடுத்த ரிஷிகள், நமக்கு "ஆயுர்வேதம், யோகா, சித்த மருத்துவம்" என்று பல சாஸ்திரங்களையும் அள்ளி கொடுத்தனர்..

அவர்கள் எங்கெல்லாம் "சிவ பெருமானையும், பெருமாளையும், முருகனையும், விநாயகரையும், அம்பாளையும், தேவதைகளையும்" பூலோகத்தில் தன் பக்தியால் தரிசித்தார்களோ, 
அங்கெல்லாம் அந்த தெய்வங்கள் சாநித்யத்துடன் என்றுமே இருக்க செய்து, நமக்கு தெய்வங்கள் அருள் செய்ய, கோவில் அமைய காரணமாக அமைந்தனர்.

வாழ்க்கைக்கு வழிகாட்ட, ராமாயணம், மஹாபாரதம் போன்ற இதிஹாசங்களை நமக்கு கொடுத்தனர்..

மோக்ஷத்துக்கு வழிகாட்ட வராஹ புராணம், பாகவதம் போன்றவைகளையும் கொடுத்தனர்..

நாம் அனைவருமே ப்ரம்ம தேவன் என்ற ரிஷியால் படைக்கப்பட்டவர்கள் தான்..
ரிஷிகளின் பரம்பரையில் வந்தவர்கள் நாம் அனைவருமே..

ரிஷிகள் விஞ்ஞானிகளுக்கும் மேலானவர்கள்..
இதே சமயம் அடுத்த வருடம் எத்தனை மணிக்கு சூரியன் உதயமாகும்? சந்திர க்ரஹனம் எப்போது ஏற்படும்? 
என்று இவர்கள் சொல்லி கொடுத்த முறையை கொண்டு, 
இன்று கூட ஒரு வருட கால நிலையை பஞ்சாங்கம் என்று எழுதி விடுகின்றனர்..
பூணூலில் உள்ள மூன்றாவது நூல் "ரிஷி கடன் உனக்கு உள்ளது" என்று நம்மை நினைவுபடுத்திக்கொண்டே இருக்கிறது.

சந்தியா வந்தனத்தில் பிராணாயாம ஜபம் செய்து,
ஓங்காரத்திற்கு ரிஷியான ப்ரம்ம தேவனுக்கு நன்றி செலுத்துகிறோம்.

காயத்ரி ஜபம் செய்து, விஸ்வாமித்ர ரிஷியின் அணுகிரஹத்தை பெறுகிறோம்.
வால்மீகி, வியாசர் போன்ற ரிஷிகள் நமக்கு அளித்த "புராணங்கள், ராமாயணம், பாகவதம், பாரதம்" போன்றவைகளை கொஞ்சம் படித்தாலும், நம்மை பார்த்து ரிஷிகள் சந்தோஷப்படுகின்றனர்.
மூன்று வேளையும் ,
ஸந்தியா வந்தனம் செய்து வந்தாலே "தேவ கடனும் தீருகிறது, ரிஷி கடனும் தீருகிறது".

ரிஷிகளுக்கு நிகரான ஞானிகள், மகாத்மாக்கள், சந்நியாசிகளை கண்டால், அவர்களுக்கு முடிந்த சேவைகள் செய்து ரிஷி கடனை அடைக்கலாம்.
குருவிடம் உபதேசமாக மந்திர உபதேசங்கள் பெற்றுக்கொண்டு ஜெபிக்கும் போது, ரிஷி கடன் தீருகிறது.
அவர்கள் மடங்களில் சுத்தம் செய்வது, அன்னதானம் செய்வது, போன்ற சேவைகள் செய்யலாம்.
மகான்களின் அறிவுரை படி வாழ முயற்சிப்பது..
ரிஷிகள் நமக்கு கொடுத்த புராணங்களை படித்து உணர்வது,
ரிஷிகள் வழிபட்ட தெய்வங்களுக்கு சேவை செய்வது
போன்றவை மூலம் "ரிஷிகளின் கடனை" நாம் அடைக்கிறோம்..

இந்த "மூன்று கடனையும்" எந்த காரணம் கொண்டும் நாம் மறந்து விட கூடாது, என்பதற்காக, பூணூல் அனைவருக்குமே அணிவிக்கப்பட்டது..

இன்று ப்ராம்மணன் மட்டும் அணிவது வேதனைக்குரியது..
அனைவருமே அணிய வேண்டும்.
"ஓம் நம சிவாய" என்று நாம் செய்யும் ஸ்துதி சீக்கிரம் பலித்து, சிவபெருமான் பிரசன்னமாக, 
வேதம் கற்ற ப்ராம்மணர்கள் கையால் "ஆவணி அவிட்டம்" என்ற நாளில் பூணூல் வாங்கி போட்டு கொள்ள வேண்டும்.
அனைவரும் பூணூல் வாங்கி அணிய வேண்டும்..

நம் பிரார்த்தனைகள் பலிக்க, 
நாம் செய்யும் மந்திர ஜபங்கள் சீக்கிரம் பலிக்க, 
நினைத்த காரியங்கள் நிறைவேற, 
வேதம் கற்ற ப்ராம்மணர்கள் கையால் "ஆவணி அவிட்டம்" என்ற நாளில், 
பூணூல் வாங்கி போட்டு கொள்ள வேண்டும்.
யாதவ குலத்தில் அவதரித்த கிருஷ்ணரும் சந்தியா வந்தனம் செய்தார்.  பூணூல் அணிந்து இருந்தாரே!!

ஆசாரியும், பொற்கொல்லனும், வியாபாரியும் பூணூல் அணிந்து இருந்தனரே!!..
நாம் அனைவருமே
நம் "பெற்றோருக்கு" கடன் பட்டு இருக்கிறோம்..
ப்ரம்ம தேவன் வழி வந்த நாம் அனைவரும்,
"ரிஷிகளுக்கு' கடன் பட்டு இருக்கிறோம்.
நம் உடல் ஒழுங்காக வேலை செய்வதும், உலகில் மழை பெய்வதும், காற்று மெல்ல வீசுவதும் தேவர்களால் என்பதால், நாம் அனைவரும்
"தேவர்களுக்கு" கடன் பட்டு இருக்கிறோம்..

ஆதலால் பூணூல் அனைவரும் அணிந்து இருக்க வேண்டும்..
நாம் செய்யும் தெய்வ பிரார்த்தனைகள் பலிக்கவாவது,
அனைவரும் பூணூல் அணிந்து இருக்க வேண்டும்..
மனிதனாக பிறந்த யாருமே "இந்த மூன்று கடனை அடைக்காமல் வாழ்ந்தால்" பாவத்தை சேர்த்து கொள்கிறான்..

இந்த "மூன்று கடன் நம் தலையில் இருப்பதை உணர்த்தவே" பூணூல் அணிகிறோம்..

பூணூல் அணிந்து கொண்டே இருக்கும் போது,

 • தவறான காரியங்கள்,
 • ஒழுக்ககேடான செயல்கள்,
 • கோவில் சொத்தை திருட வாய்ப்பு கிடைத்தாலும், 

நம்மை செய்ய விடாமல், நம் மனசாட்சியே தடுத்து விடும்..
ஒரு CCTV கேமராவை வைக்கும் போது, அந்த இடத்தில் யாரும் இல்லாமல் போனாலும், தவறான செயல்கள் செய்ய அது தடுப்பது போல,
பூணூல் என்ற CCTV கேமரா, ஆண்களுக்கு அணிவிக்கப்பட்டது..
சில சமயங்களில் தெரிந்தே சில தவறுகள் செய்தாலும்,
பெரும்பாலும், "பூணூல் அணிந்தவர்கள் தவறு செய்ய அஞ்சுவதை காணலாம்".
சிறையில் பெரும் குற்றத்தை செய்து விட்டு இருப்பவர்களில்,
99% மக்கள் மாமிசம் உண்பவர்களாகவும், பூணூல் அணியாதவர்களாகவும் தான் உள்ளனர்..

குற்றத்தை குறைக்க வல்லது பூணூல்..
இதன் அர்த்தங்கள் புரிந்து,
பாரத மண்ணில் ஒவ்வொரு மனிதனும் பூணூல் அணிய ஆரம்பித்தால், தானாகவே தனி மனித ஒழுக்கங்கள் சீர்பட்டு விடும்.

பூணூல் எதற்கு? அது என்ன உணர்த்துகிறது? என்று புரியாதவரை, 
இது வெறும் நூலாக தான் தோன்றும்..
பாரத மக்கள் விழிப்படைய வேண்டும்..
எதையும் ஆராய்ச்சி இல்லாமல் நம் முன்னோர்கள் செய்யவில்லை என்று புரிந்து கொள்ள வேண்டும்..

பெரும்பாலான ஹிந்துக்கள்
மகான்களிடம் பக்தி,
தெய்வ பக்தி,
பித்ரு பக்தி
கொண்டவர்களாக இருப்பதால்,
அனைவருக்கும் பூணூல் அணிவிக்கப்பட்டது.

ரிஷி கடனும் இல்லாத,
தேவ கடனும் இல்லாத,
பித்ரு கடனும் இல்லாத
பரவாசுதேவன் நாராயணன், "நாம் அணிந்தால் அவர்களும் அணிவார்கள்" என்று தானும் பூணூல் போட்டு கொள்கிறார்.
"நாம் நெற்றியில் திலகம் இட்டு கொள்ள வேண்டும்" என்று காண்பிக்க, தானும் இட்டு கொள்கிறார்.

கருணையே வடிவான தெய்வங்கள் அல்லவா! நம் தெய்வங்கள்.

பெற்றோரை மதிக்காதவன்,
நமக்கு மேல் தேவதைகள் உண்டு என்று உணராதவன்,
ரிஷிகளின் யோக சாஸ்திரம், வான சாஸ்திரம், ஆயுர்வேதம் என்று எதையும் மதிக்காதவன்
மட்டுமே, "பூணூல் அணிவதை தவிர்க்க நினைப்பான்"..
அப்படிப்பட்டவனை மனிதன் என்று மதிப்பதே வீண்.


 • பெற்றவனுக்கு நன்றி காட்ட நினைக்கும் அனைவரும்,
 • தேவதைகளுக்கு நன்றி காட்ட நினைக்கும் அனைவரும்,
 • ரிஷிகளுக்கு நன்றி காட்ட நினைக்கும் அனைவரும்,

கட்டாயம் பூணூல் அணிந்து கொள்ள வேண்டும்..
இது "ஒரு ரக்ஷை" என்று நாம் அனைவரும் உணர வேண்டும்.

ஒரு CCTV கேமராவை போல, 
நம் உடம்பில் இந்த பூணூல் இருக்கும் போது,

 1. பெற்றோர் விரும்பாத செயல்களை செய்ய, நாம் தயங்குவோம்.
 2. தேவர்கள் வெறுக்கும் உடல் ரீதியான காரியங்களை செய்ய தயங்குவோம்.
 3. ரிஷிகள் வெறுக்கும் வாழ்க்கை முறையை வாழ தயங்குவோம்.

இனி,
பூணூலில் போடப்பட்டு இருக்கும் "ப்ரம்ம முடிச்சை" பற்றி அறிந்து கொள்ள முயற்சிப்போம்..
ஓம் என்ற பிரணவத்தின் ரிஷி "ப்ரம்ம தேவன்" என்று அறிகிறோம்.
(ப்ரணவஸ்ய ரிஷி: ப்ரம்மா)

"பிராணாயாமம்" என்ற இந்த மூச்சு பயிற்சிக்கும், இந்த "ப்ரம்ம முடிச்சுக்கும்" சம்பந்தம் உள்ளது...
பிராணாயாமம் செய்யும் போது,
8 மாத்திரைகள், "ராம ராம.." என்று நிதானமாய் மனதில் உச்சரித்துக்கொண்டு, இடது மூக்கு வழியாக பூரகம் செய்து (மூச்சை இழுத்து),
16 மாத்திரைகள், "ராம ராம.." என்று நிதானமாய் மனதில் உச்சரித்துக்கொண்டு, வலது மூக்கு வழியாக ரேசகம் (மூச்சை விட்டு) செய்ய வேண்டும்.
பின்னர்,
8 மாத்திரைகள், ராம ராம என்று நிதானமாய் மனதில் உச்சரித்துக்கொண்டு, வலது மூக்கு வழியாக பூரகம் செய்து (மூச்சை இழுத்து),
16 மாத்திரைகள், "ராம ராம.." என்று நிதானமாய் மனதில் உச்சரித்துக்கொண்டு, இடது மூக்கு வழியாக ரேசகம் (மூச்சை விட்டு) செய்ய வேண்டும்.
இது "ஒரு எண்ணிக்கை".
இந்த எண்ணிக்கையை, 64 வரை எண்ணிக்கையை ஏற்றிக் கொண்டு போகலாம்.
இவ்வாறு 6 மாதம் செய்தால்,
இடது மூக்கில் ஆரம்பித்து, முதுகு தண்டை பாம்பு போல சுற்றி வந்து, "மூலாதார சக்கரம்" வரை செல்லும், 'இடா என்ற பெண் குணங்களை கொண்ட நாடி' சுத்தி ஆகி விடும்..
அதே போல,
வலது மூக்கில் ஆரம்பித்து, முதுகு தண்டை பாம்பு போல சுற்றி வந்து, "மூலாதார சக்கரம்" வரை செல்லும், 'பிங்களா என்ற ஆண் குணங்களை கொண்ட நாடியும்' சுத்தி ஆகி விடும்..
நாடி சுத்தி பிராணாயாமத்தை,
6 மாதம் செய்து வந்தால் - இரண்டு நாடியும் (இடா, பிங்களா) சுத்தி ஆகி, "மூலாதார சக்கரம்" தூண்டப்பட்ட நிலையில், உடலில் ஆரோக்கியம், மனதில் அமைதி, புத்தியில் விவேகம் இவைகள் உண்டாகும்.
ஒருக்கால் "ஓங்கார நாதம்" கேட்கவும் கூடும்.

6 மாதத்தில் இரு நாடிகளும் சுத்தி ஏற்பட்டதும், இந்த இரு நாடிகளுக்கும் நடுவே, முதுகு தண்டின் நடுவில், மூலாதார சக்கரம் ஆரம்பித்து, மேல் நோக்கி சக்தியை செலுத்தும் குணமுடைய "சுஷும்னா" என்ற நாடி விழித்து விடும்.

இடா என்ற நாடியும், பிங்களா என்ற நாடியும் கீழ் நோக்கி சக்தியை செலுத்தும் குணம் கொண்டவை..

இந்த இரு நாடிகள் மட்டுமே, நமக்கு வேலை செய்கிறது..
நம் பிராண சக்திகள் காமத்துக்கும், கோபத்துக்கும் விரயம் ஆகிறது..

இந்த இரண்டு நாடிகள் தடையில்லாமல் சஞ்சரிக்கும் போது,
இந்த இரண்டு நாடிகள் சுத்தி ஆகும் போது,
மேல் நோக்கி செல்லும் சுஷும்னா என்ற நாடி விழித்து, இடா, மற்றும் பிங்களா என்ற நாடிகளிலிருந்து கீழ் நோக்கி வரும் சக்தியை, அப்படியே திசை மாற்றி முதுகு தண்டின் நடுவே மேல் நோக்கி பாய்ச்சுகிறது..
இந்த அனுபவம் பேரானந்தத்தை பயிற்சி செய்பவருக்கு கொடுத்து விடும்.

'இடா பிங்களா' நாடிகள் கீழ் நோக்கி சக்தியை எடுத்து செல்கிறது. 
இது உலக விஷயங்களில் நம்மை இழுத்து செல்கிறது.

'சுஷும்னா' என்ற நாடி விழித்தெழும் போது, நம் ப்ராண சக்தி, மேல் எழும்பி செல்லும் போது, இது வரை அனுபவிக்காத நிலை ஏற்படும்.
சுஷும்னா நாடி தெய்வீக விஷயங்களில் நம்மை இழுத்து செல்லும். 

ஒரு சாரை பாம்பு எப்படி நெளிந்து நெளிந்து வேகமாக செல்லுமோ, அது போல, குண்டலினி சக்தி சுஷும்னா நாடியில் உயரே செல்லும்.

தெய்வ தரிசங்கள் ஏற்படுவதற்கு முன், ஸித்திகள் கை கூடும்.
இந்த ஸித்திகளில் மயங்கி விழுந்தால், பெற்ற சக்திகள் அந்த ஸித்திகளை அனுபவிப்பதில் செலவாகி, தெய்வ தரிசனம் கிடைக்காமல் போக செய்யும்.

எந்த ஞானி, இந்த ஸித்திகளை புறந்தள்ளி மேலும் முயற்சிக்கிறானோ, அவனுடைய பிராண சக்தி, சஹஸ்ரார சக்கரம் வரை சென்று, மோக்ஷத்தை நேரிடையாக பெற்று விடுகிறான்.
அந்த ஜென்மத்தோடு பிறப்பு இறப்பு என்ற சூழலில் இருந்து மீண்டு, வைகுண்டம் சென்று விடுகிறான்.

7 சக்கரங்களில், 'மூலாதார சக்கரத்தில்' உள்ள இந்த சுஷும்னா நாடி, மேல் எழும்பி 'சுவாதிஸ்டான சக்கரத்தை' தொட்டு விட்டால், உடல் ஆரோக்கியம் தானாகவே ஏற்பட்டு விடும்.. களைப்பே இல்லாத தேகத்தை பெற்று விடுவான்..
'சுவாதிஸ்டான சக்கரம்' நன்கு தூண்டப்பட்டுள்ள மனிதன், தனக்கும் இந்த உடலுக்கும் இடைவெளியை உணர்வான்..

இந்த இரு சக்கரத்தின் நடுவே ஒரு முடிச்சு உள்ளது.
இந்த முடிச்சுக்கே "ப்ரம்ம முடிச்சு" என்று பெயர்.
இதே ப்ரம்ம முடிச்சை தான் பூணூலில் வைத்து, "இந்த ப்ரம்ம முடிச்சை அவிழ்க்க முயற்சி செய்" என்று நமக்கு நினைவுபடுத்துகிறது..
பிராணாயாமம் செய்து, மூலாதார சக்கரத்தில் இருக்கும் சுஷும்னா நாடியை மேலே எழும்பி விட முடியும்..
ஆனால் வெறும் ப்ராணாயாமத்தால் மட்டுமே இந்த ப்ரம்ம முடிச்சை தாண்டி, அடுத்த சக்கரமான சுவாதிஸ்டான சக்கரத்தை அடைய முடியாது..

நம் மீது உள்ள பித்ரு கடனை, தேவ கடனை, ரிஷி கடனை உணர்ந்து, அதற்கான நன்றியை விடாமல் செய்து கொண்டிருந்தால்,
ரிஷிகளில் முதன்மையான ப்ரம்ம தேவன் கருணையால்,
அவர் படைத்த உலகை கண்டு, எதிர்கால பயம் ஏற்படாத நிலையை கொடுக்கிறார்.
தெய்வ பலம் தனக்கு இருப்பதை உணர்வதால், தானாகவே உலக பயம் விலக, ப்ரம்ம முடிச்சு தானாக அவிழ்கிறது..
ஸந்யாஸத்தை ஏற்றவர்கள், பூணூலை அவிழ்த்து விடுகிறார்கள். 
அவர்கள் குடும்பத்தை, சுகத்தை விட்டு சன்யாசம் ஏற்கிறார்கள்.
தெய்வ பலத்தை கையில் எடுக்கும் இவர்கள், எதிர்கால பயத்தை விட்டு விடுகிறார்கள். ப்ரம்ம முடிச்சு தானாக அவிழ்கிறது. 
ஆதலால் பூணூல் இவர்கள் அணிவதில்லை.
மறுபிறவி எடுத்த சந்யாசமானாலும், தேவ கடனை, ரிஷி கடனை இவர்கள் விடுவதில்லை. தாயை விட்டுவிடுவதில்லை. 
ஆதி சங்கரர், சன்யாசம் ஏற்ற பின், தன் தாய் கடைசி காலத்தில் இருப்பதை அறிந்து, தாயை பார்க்க வந்து விட்டார். 
அவருடைய தாய், பரவாசுதேவனை எப்படியெல்லாம் பார்க்க ஆசைப்படுகிறாளோ, அப்படி எல்லாம் பார்க்க பரவாசுதேவன் நாராயணனை பிரார்த்திக்க,  கிருஷ்ணராகவும்,  ராமராகவும், விஷ்ணுவாகவும், சிவபெருமானாகவும் தரிசனம் பெற்று, நற்கதி அடைந்தாள். 
ப்ரம்ம முடிச்சு அவிழ, தடைபட்ட ஓட்டம் விலகுகிறது...

நாடி சுத்தியால், எழுப்பப்பட்ட சுஷும்னா நாடி, மூலாதார சக்கரத்தை தாண்டி, மேலே உள்ள சுவாதிஸ்டான சக்கரத்தை அடைகிறது...

மேலும் பிராணாயாமம் கும்பத்தோடு (மூச்சை அடக்கி) செய்ய, செய்ய, சுஷும்னா நாடி மேலும் எழும்பி மணிப்பூரக சக்கரத்தை தூண்டுகிறது .

தொப்புளுக்கு நேரான முதுகு தண்டில் மணிப்பூரகம் சக்கரம் உள்ளது.
மணிப்பூரகம் சக்கரம் தூண்டப்பட்ட மனிதன், கடும் உழைப்பாளியாக வாழ்வில் சிறந்து விளங்குவான்.

இந்த இடத்தில் தான் நினைப்பது எல்லாம் தானாக நடக்க ஆரம்பிக்கும்.. மனிதர்கள் தானாக வந்து விழுவார்கள்...

மேலும் பிராணாயாமம் செய்ய, செய்ய, சுஷும்னா நாடி மேலும் எழும்பி இதயத்துக்கு நேராக உள்ள அனாகதம் சக்கரத்தை அடைய முயல்கிறது.
இந்த சக்கரத்தை அடைய விடாமல், ப்ரம்ம முடிச்சு இருந்ததை போன்று, இங்கு விஷ்ணு முடிச்சு தடுக்கும்...

இதையும் ப்ராணாயாமத்தால் மட்டும் அவிழ்க்க முடியாது...
விஷ்ணு பகவானை தியானித்து பக்தி செய்ய செய்ய, நம் புத்தியில் உள்ள சுயநலம் கரைந்து விடும்.. அவர் அணுகிரஹத்தால் தான் தன் முயற்சிகளுக்கு பலன் கிடைத்தது என்று தெளிவு ஏற்படுகிறது..

சுயநல எண்ணம் கரைய, விஷ்ணு முடிச்சு அவிழ, சுஷும்னா நாடி மேலும் எழும்பி இதயத்துக்கு நேராக உள்ள 'அனாகதம் சக்கரத்தை' அடைகிறது.

இந்த சக்கரம் தூண்ட படும்போது, உலகத்தில் யாரை பார்த்தாலும் ப்ரம்ம ஸ்வரூபமாகவே தோன்றும்...
பிரகலாதன் எதை பார்த்தாலும் அதில் நாராயணன் இருப்பதை பார்த்தது போல, யாரை பார்த்தாலும் தோன்றும்.. எதை பார்த்தாலும் தோன்றும்.. மனதில் அன்பு பெருகும்.. அன்பே உருவாக ஆகி விடுவார்கள்..
சில சமயங்களில் படைக்கும் சக்தியும் பெற்று விடுவார்கள்..

மேலும் முயற்சி செய்ய, சுஷும்னா நாடி மேலும் எழும்பி, கழுத்துக்கு நேராக உள்ள விசுக்தி என்ற சக்கரத்தை அடையும்.
இந்த சக்கரம் தூண்டப்படும் போது, வரும்
தீமைகளை தடுத்து நிறுத்தும் சக்தி ஏற்படும்.

மேலும் பிராணாயாமம் செய்ய, செய்ய, சுஷும்னா நாடி மேலும் எழும்பி நெற்றியின் நடுவில் உள்ள ஆக்கினை சக்கரத்தை அடைய முயல்கிறது.

இந்த சக்கரத்தை அடைய விடாமல், ப்ரம்ம முடிச்சு, விஷ்ணு முடுச்சு இருந்ததை போன்று, இங்கு ருத்ர முடிச்சு தடுக்கும்...

தான் எப்படி ஒரு ஆன்மீக முன்னேற்றத்தை பெற்று விட்டோம் என்ற கர்வம் இருக்கும் வரை, ஆக்கினை சக்கரத்தை அடைய முடியாது.

கர்வத்தை ஈஸ்வரனிடம் தொலைத்து, சரணாகதி செய்தால், ருத்ர முடிச்சு தானாக அவிழ்ந்து, ஆக்கினை சக்கரத்தை தூண்டுகிறது...
மூன்றாவது நெற்றி கண் போல, ஞானம், பேரறிவு போன்றவை உண்டாகும்.

கடைசியாக குண்டலினியாகிய மின்னல் கொடி (பிராண சக்தி), ஆறு விதமான ஜோதிகளை (சக்கரம்) தாண்டி, பரஞ்ஜோதியை (சஹஸ்ரார சக்ரம்) அடைந்து, இரண்டற கலந்து விடும்.
இதுவே முக்தி நிலை.

ப்ராணயாமத்தில் ஸித்தி பெற்றவனுக்கு, சமாதி தானே கை கூடும். 

ப்ராணயாமத்தில் ஸித்தி பெறாதவன், ப்ரத்யாஹாரம், தாரணை, தியானம் போன்ற வழியில் சென்றும் "சமாதி" நிலையை அடையலாம்.

நம் ஹிந்து தர்மத்தில் எதற்கும் காரணம் உண்டு. 

"ஓம் நம சிவாய", "நமோ நாராயண" என்று நாம் சொல்லும் ஸ்தோத்திரங்கள் பலிக்க,  
தெய்வ அனுக்கிரஹம் நமக்கு பலிக்க, 
நம் மீது உள்ள தேவ கடனை, ரிஷி கடனை, பித்ரு கடனை கழிக்க, 
பூணூல் தேவை.நாம் அனைவருமே பூணூல் அணிந்து கொள்ள வேண்டும். 

இதை வேதம் கற்ற வேதியர்களிடம், "ஆவணி அவிட்டம்" அன்று அனைவரும் மிகுந்த மதிப்புடன், மரியாதையுடன் வாங்கி பெற்று போட்டு கொள்ள வேண்டும். 

ஆவணி அவிடத்தில் வேதியர்கள் வேத மந்திரங்கள் சொல்லி புது பூணூலை கொடுப்பதால், நாம் சொல்லும் பிரார்த்தனைகள் உடனே பலிக்கும்.

ஆவணி அவிட்டத்தின் போது, பூணூல் அணிவதில் காரணத்தை அறிய இங்கு படிக்கவும்... 

இப்படி மூன்று நூல் கொண்ட ஒரு பூணூலை, 
திருமணம் ஆகும் வரை ஒரு ஆண் போட்டு கொண்டு, தன் மீது உள்ள பித்ரு கடனை, தேவ கடனை,  ரிஷி கடனை அடைகிறான்.
திருமணம் ஆன பின், மேலும் ஒரு பூணலை போட்டுக்கொள்கிறான். இங்கு, தன் மனைவிக்கு இருக்கும் இந்த மூன்று கடனையும் தான் ஏற்று கொண்டு, மேலும் பொறுப்பை ஏற்கிறான். 
அவளின் தெய்வீக பாதைக்கும், தான் உழைக்கிறான். பத்னி இதனால், கணவனுக்கு நன்றியுடன், தர்மத்தில் இருந்து, அவனை தாயாக, துணைவியாக பார்த்து கொள்கிறாள்.

மூன்றாவது பூணூல் கிடையாது.  ஆனால் பிராம்மணர்கள் அங்க வஸ்திரம் இன்று அணியாமல் இருப்பதால், மூன்றாவது பூணூலை அங்கவஸ்திரமாக போட்டு விடுகிறார்கள். 
சட்டை அணியாத, அங்க வஸ்திரம் அணிந்தே இருக்கும் வேதியர்கள், இந்த மூன்றாவது பூணூலை அணிவதில்லை. 


வாழ்க ஹிந்துக்கள்.