Followers

Search Here...

Showing posts with label 100. Show all posts
Showing posts with label 100. Show all posts

Wednesday 31 July 2019

100 வயது அனைவரும் வாழ, ப்ராம்மணன் தினமும் செய்யும் அற்புதமான பிரார்த்தனை...

அற்புதமான பிரார்த்தனை...
100 வயது வாழ ஒரு சிறு பிரார்த்தனை.
மதியம் சந்தியாவந்தனம் செய்ய கசக்குமா ப்ராம்மணனுக்கு?



அர்த்தம் தெரிந்து கொள்ளும் போது, ஆசை வரும்...


பஸ்யேம (கண்டு வணங்குவோம்) சரத: சதம் (நூறாண்டு),

ஜீவேம (உயிரோடு வாழ்வோம்) சரத: சதம் (நூறாண்டு),

நந்தாம (உற்றார் உறவினருடன் கூடிக் குலவுவோம்) சரத: சதம் (நூறாண்டு),

மோதாம (மகிழ்வோம்) சரத: சதம் (நூறாண்டு),

பவாம (கீர்த்தியுடன் விளங்குவோம்) சரத: சத: (நூறாண்டு),

ச்ருணவாம (இனியதை கேட்போம்) சரத: சதம் (நூறாண்டு),

ப்ரப்ரவாம (இனியதையே பேசுவோம்) சரத: சதம் (நூறாண்டு)

அஜீதாஸ்யாம (தீமைகள் அண்டாமல் வாழ்வோம்) சரத: சதம் (நூறாண்டு),

ஜ்யோக்ச (இங்கனம் நீண்ட காலம்) ஸூர்யந் (சூரியதேவனை) த்ருசே (பார்த்து அனுபவிக்க ஆசைப்படுகின்றோம்)!




மேலும் தெரிந்து கொள்ள....
https://youtu.be/q3gr3oWadqs

"தெய்வத்திடம் சரணாகதி செய். தெய்வத்திடம் எதுவும் கேட்காதே... 
அவர் எப்படி உன்னை வைத்து இருக்கிறாரோ, அது அவர் இஷடம் என்று இரு.
நாயாக, பன்றியாக பிறக்காமல், உனக்கு மனித  உடல் கொடுத்துள்ளாரே. இந்த கருணையை நினைத்து பக்தி செய். 
பெருமாளின் அருளை பாடு" என்று சொல்லும் நம் வேத சாஸ்திரமே, "இப்படி ஒரு பிரார்த்தனையும் செய்!" என்று நமக்கு சொல்கிறது.

100 வயது வாழ வேண்டும் என்று அனைவருக்கும் ஆசை.
சும்மா 100 வருடம் வாழ்ந்தால் போதுமா?

100 வயது கிழவன் ஆகி, கண் தெரியாது வாழ்ந்து விட கூடாது.
சினிமா, ஆட்டம் பார்க்கவா 100 வயது வாழ வேண்டும்? அப்படி வாழ்ந்து என்ன பயன்?
ஆதலால், "100 வயதிலும் கண் தெரிந்து வாழ வேண்டும். அந்த கண்  தெரிந்தால் தெரிந்தால் தானே கோவிலில் உள்ள பெருமாளை பார்த்து ரசிக்க முடியும்." என்று சூரிய நாராயணனை பிரார்த்தனை செய் என்று சொல்லிக்கொடுக்கிறது.

100 வயது நான் மட்டும் வாழ்ந்து, என் உற்றார் உறவினர் எல்லாம் இறந்து விட கூடாது. அப்படி வாழ்ந்து என்ன பயன்?
ஆதலால், "100 வயதிலும், என்  உற்றார் உறவினர்கள் கூடிக் குலவ நான் வாழ வேண்டும்" என்று சூரிய நாராயணனை பிரார்த்தனை செய் என்று சொல்லிக்கொடுக்கிறது.


100 வயது துக்கமாக வாழ்ந்து என்ன பிரயோஜனம்? அப்படி வாழ்ந்து என்ன பயன்?
ஆதலால், "100 வயதிலும், மகிழ்ச்சியோடு வாழ வேண்டும்" என்று சூரிய நாராயணனை பிரார்த்தனை செய் என்று சொல்லிக்கொடுக்கிறது.

100 வயது ஆகி, இவன் எதற்காக இன்னும் உயிருடன் இருக்கிறான்? என்று பேரன் பேத்திகள் கேட்கும் படிவாழ்ந்து விட கூடாது.. அப்படி வாழ்ந்து என்ன பயன்?
ஆதலால், "100 வயதிலும், புகழுடன் வாழ வேண்டும்." என்று சூரிய நாராயணனை பிரார்த்தனை செய் என்று சொல்லிக்கொடுக்கிறது.


சினிமா, ஆட்டம் பார்க்கவா 100 வயது வாழ வேண்டும்? அப்படி வாழ்ந்து என்ன பயன்?
ஆதலால், "100 வயதிலும், இனிமையான ஸத் ப்ரவசனங்களை என் காது கேட்க வேண்டும்" என்று சூரிய நாராயணனை பிரார்த்தனை செய் என்று சொல்லிக்கொடுக்கிறது.

100 வயது வரை வாழ்ந்தும், கோபம் பொறாமை உடையவானாகவா வாழ வேண்டும்? அப்படி வாழ்ந்து என்ன பயன்?
ஆதலால், "100 வயதிலும், இனிமையாக பேசுபவனாக என் வாய் இழுத்து விடாமல், பேசி கொண்டு இருக்க வேண்டும்" என்று சூரிய நாராயணனை பிரார்த்தனை செய் என்று சொல்லிக்கொடுக்கிறது.

100 வயது வரை வாழ்ந்தும், பல கஷ்டங்கள் வந்து துன்பப்படும் படியாக வாழ்ந்து என்ன பயன்?
ஆதலால், "100 வயதிலும், ஒரு கஷ்டமும் வராமல், தீமைகளே அண்டாமல் இருக்க வேண்டும்." என்று சூரிய நாராயணனை பிரார்த்தனை செய் என்று சொல்லிக்கொடுக்கிறது.

"தெய்வத்திடம் எதையும் பிரார்த்தனை செய்யாதே ! 
தெய்வம் பார்த்து என்ன செய்ய நினைக்கிறதோ நடக்கட்டும்" என்று சொல்லும் வேதம், இப்படி ஒரு சுயநலமான பிரார்த்தனையும் செய்ய சொல்கிறது.

இதற்கு காரணம், வேதம் நம்மிடம் வைத்து இருக்கும் பிரியமே !!

"நாராயணனே கதி, அவர் பார்த்து என்ன செய்கிறாரோ செய்யட்டும்!!"  என்று பக்தன் நினைத்தாலும், வேதம் நமக்கா பரிந்து பேசுகிறது...

இப்படி ஒரு பக்தனுக்கு கர்ம வினையை காட்டி, பெருமாள் கஷ்டம் கொடுத்து விட கூடாதே !! என்று கவலை படுகிறது வேதம்.
 
"இப்படி வேளை தவறாமல் சந்தியா வந்தனம் செய்யும் இவனுக்கு, இவன் குடும்பத்துக்கு, இவன் சம்பந்தப்பட்ட யாருக்கும் கஷ்டம் வர கூடாதே!!" என்று கவலை படுகிறது வேதம்.

"இவனாக பெருமாளிடம் கேட்க மாட்டான்" என்று நினைத்து, வேதமே "இப்படி ஒரு பிரார்த்தனை பெருமாளிடம் செய்" என்று சொல்லி, நமக்கும், பெருமாளுக்கும் உறவை வலுப்படுத்துகிறது.

வேதத்திற்கு "சப்த ப்ரம்மம்" என்று பெயர் உண்டு.
ப்ரம்மம் என்றாலே பரமாத்மா நாராயணன் தான்.
அந்த பரமாத்மாவே சப்த ரூபத்தில் வேதமாக இருக்கிறார்.
பக்தன் "பெருமாள் இஷ்டம் என்று இருப்பானே" என்று பெருமாள் கவலைப்பட்டு, தன்னிடம் இவன் வாயாலேயே வேதத்தை கொண்டு பிரார்த்திக்க வைத்து, நீண்ட ஆயுளும், சுகமான வாழ்க்கையும் தானே அமைத்து கொடுக்கிறார். 

Afternoon சந்தியாவந்தனம் with meaning

மதியம் சந்தியாவந்தனம் செய்ய கசக்குமா ப்ராம்மணனுக்கு?  
அர்த்தம் தெரிந்து கொள்ளும் போது, ஆசை வரும்...