Followers

Search Here...

Showing posts with label ஸஞ்சிதம். Show all posts
Showing posts with label ஸஞ்சிதம். Show all posts

Tuesday 1 May 2018

"ஸஞ்சிதம்", "ப்ராரப்தம்" ,"ஆகாமி" என்றால் என்ன?

"ஸஞ்சிதம்" என்றால் என்ன?
"ப்ராரப்தம்" என்றால் என்ன?
"ஆகாமி" என்றால் என்ன?

ஜீவனுக்கு ஜனனமும், மரணமும் மாறி மாறி சுற்றிக்கொண்டே வருவதால் 'ஸம்சார சக்கரம்' என்று சொல்லப் படுகிறது

உலகில் உள்ள எல்லா துன்பங்களுக்கும் காரணம், பூர்வ கர்மமே (செயல்) ஆகும்.

கர்ம பலன் இல்லாவிடில், உலகில் இவ்வளவு சுக துக்கங்கள் இருக்க காரணமென்ன?

ஒரு பிறவியிலேயே அனுபவிக்க படாத கர்மபலன் மிச்சமிருக்கும் போது, மறு பிறவியை அடைகிறான்.




பூர்வ ஜென்மத்தில் மிச்சப்பட்ட கர்மபலனை இப்பிறவியில் அனுபவித்ததும், இப்பிறவியில் செய்த கர்மபலனை அடுத்த பிறவியில் அனுபவிக்கவும் நேரிடுவதால், ஜீவன் பல ஜென்மங்கள் எடுத்துக் கொண்டே இருக்கிறான்.

இவ்வாறு ஜனனமும், மரணமும் மாறி மாறி சுற்றிக்கொண்டே வருவதால் "ஸம்சார சக்கரம்" என்று சொல்லப் படுகிறது.

பலன் கொடுக்க அவகாசமின்றி மீந்து விட்ட கர்மபலன்களின் மூட்டையை "ஸஞ்சிதம்"  என்றும்,

பலன் கொடுக்க ஆரம்பித்து விட்ட கர்மபலன்களை "ப்ராரப்தம்" என்றும்,

இப்பிறவியில் செய்த கர்மாக்களின் பலன், இனி வரப்போவதால் "ஆகாமி" என்றும் சொல்லப் படுகிறது.

இந்த மூன்று விதமான கர்மபலன்களையும் அனுபவித்து தீர்த்த பிறகு தான், மோக்ஷம் கிடைக்கும் என்ற நியமம் ஏதும் இல்லை.

ஸஞ்சித்தையும், அகாமியையும் ஞான அக்னியால் பொசுக்கி விட்டு, ப்ராரப்தத்தை மட்டும் அனுபவித்தால், இப்பிறவியிலேயே மோக்ஷம் கிடைக்கும்.

யாரும் ஞானத்துக்காக ஆசைப் படவில்லை. முயற்சிக்கவும் இல்லை.

பெரும்பாலும் அஞ்ஞானிகளே இருப்பதால், ஸம்சார சக்கரம் சுழன்று கொண்டே இருக்கிறது.