Followers

Search Here...

Showing posts with label மஹ ரிஷி. Show all posts
Showing posts with label மஹ ரிஷி. Show all posts

Wednesday 9 October 2019

ரிஷிகளின் பரம்பரை என்று சொல்லி கொள்ளும் நாம், ரிஷிகளை பற்றி தெரிந்து கொள்வோமே..மஹ ரிஷி யார்? ப்ரம்ம ரிஷி யார்? சூத ரிஷி யார்?..

ரிஷிகள் மனிதர்கள் அல்ல, தேவர்களும் அல்ல.
தேவர்களுக்கும் மேலானவர்கள் ரிஷிகள்.

ரிஷிகள் தேவர்களையும், அசுரர்களையும், ராஷசர்களையும், மனிதர்களையும் படைத்தவர்கள்.



பரப்ரம்மான வாசுதேவனே ரிஷி தான்.
அவரே மும்மூர்த்திகளாக வ்யூஹ அவதாரம் செய்தார்.
மும்மூர்த்திகளும் ரிஷிகள் தான்.

பரவாசுதேவன் மனித அவதாரம் செய்த போது கூட, தன்னை ரிஷியின் பரம்பரையை சேர்ந்தவன் என்று சொல்லிக்கொள்ள பெருமைப்பட்டார்.
ஸ்ரீ ராமர் - வசிஷ்ட கோத்திரம் (பரம்பரை)
சீதை - அவதரித்தது கௌதம கோத்திரம், ஸ்ரீ ராமரை மணம் செய்து கொண்ட பின், வசிஷ்ட கோத்திரம் (பரம்பரை)
ஸ்ரீ கிருஷ்ணா - கர்க கோத்திரம் (பரம்பரை)
தர்மபுத்திரர் - வியாக்ரபாதர் கோத்திரம் (பரம்பரை)

கௌதம கோத்திரம் (பரம்பரை) கௌதம ரிஷியால் உருவானது.
ஜாபாலி என்ற சிறுவன் தன் கோத்திரம் (பரம்பரை) தெரியாமல் இருந்தான்.  கௌதம ரிஷி அவனை ஏற்றுக்கொண்டு, தனது கோத்திரத்தை (பரம்பரை) கொடுத்து, உபநயனம் செய்து, "ஸத்யகாம ஜாபாலி" என்று பெயர் கொடுத்தார்.
கௌதம ரிஷியின் ஆசியால், பெரும் தபோதனராக ஆகி விட்டார் ஜாபாலி.
பிற்காலத்தில், ஜாபாலி கோத்திரம் (பரம்பரை) உருவாகி, இந்த பரம்பரையில் வருபவர்களுக்கு ஜாபாலியே ரிஷியாக ஆனார்.
கௌதம ரிஷியை குருவாக ஏற்ற ஜாபாலி, பெரும்பேர் பெற்றார்.



காஷ்யப கோத்திரம் (பரம்பரை) காஷ்யப ரிஷியால் ஏற்பட்டது.
ப்ரம்மாவின் மானஸ புத்திரர் காஷ்யபர். சப்த ரிஷிகளில் ஒருவர்.
பெரும்பாலான உலக ஸ்ருஷ்டி காஷ்யபரால் தான் உண்டானது.
ஜாம்பவான் அவதரித்த இடம் இன்று 'ஜம்மு' (Jammu) என்று அழைக்கப்படுவது போல,
காஷ்யப ரிஷி பூலோகத்தில் தவம் செய்த இடம் இன்று காஷ்மீர் (kashmir) என்று அழைக்கப்படுகிறது.

வேதம் தழைத்த தேசம் காஷ்மீரம். ஆதி சங்கரர் காஷ்மீரம் வந்து மண்டல மிஸ்ரரிடம் வேதத்தை பற்றி விவாதித்தார் என்று பார்க்கிறோம்.

ஒருவேளை யாருக்காவது தான் எந்த கோத்திரத்தை (பரம்பரை) சேர்ந்தவன்?
என்று தெரியாத பட்சத்தில், தாங்கள் காஷ்யப கோத்திரம் என்று சொல்லி கொள்ள சாஸ்திரம் இடம் கொடுக்கிறது.

அதேபோல,
தர்மத்தை சொல்லும் "சூத்ரம்" (Formula to lead life) பல உண்டு. ரிஷிகள் பலர் தர்ம சூத்ரங்கள் இயற்றி உள்ளனர்.

'ஆபஸ்தம்ப சூத்ரம், போதாயன சூத்ரம், வசிஷ்ட சூத்ரம், விஷ்ணு சூத்ரம், கௌதம சூத்ரம்' என்று பல தர்ம சூத்ரங்கள்,
அந்தந்த ரிஷிகளின் பெயராலேயே உள்ளது.

மற்ற சூத்ரத்தில் சொல்லப்பட்ட அனைத்து தர்மங்களும் 'போதாயன' சூத்திரத்தில் அடக்கம்.
அதனால்,
ஒருவேளை யாருக்காவது தான் எந்த சூத்ரத்தை (formula) சேர்ந்தவன்? 
என்று தெரியாத பட்சத்தில், 'போதாயன சூத்திர' படி வாழ்க்கை முறைகளை கடைபிடிக்கலாம் என்று சாஸ்திரம் இடம் கொடுக்கிறது.
ரிஷிகள் அனைவரும் ஒரே தகுதி உள்ளவர்கள் அல்ல.
ரிஷிகள் ஞானிகள் (மெய் அறிவு கொண்டவர்கள்).
ரிஷிகள் தவவலிமையால் வேத மந்திரங்களை கண்டுபிடிப்பதால் இவர்களுக்கு ரிஷி என்று பெயர்.



ரிஷிகள் பலவிதமாக உள்ளனர். ரிஷிகள் அனைவரும் ஒரே பலம் கொண்டவர்கள் என்று நினைக்க கூடாது.
  • மஹ ரிஷி
  • ப்ரம்ம ரிஷி
  • ராஜ ரிஷி
  • வைஸ்ய ரிஷி
  • ஜன ரிஷி
  • தப ரிஷி
  • ஸத்ய  ரிஷி
  • காண்ட ரிஷி
  • தேவ ரிஷி
  • சூத ரிஷி

ரிஷிகளின் மனைவிகள் "ரிஷிகை" என்று சொல்வோம்.

பொதுவாக அனைத்து ரிஷிகளும் தவவலிமையால், சப்த பிரபஞ்சத்தில் (sound energy) மறைந்து இருக்கும் "வேத மந்திரங்களை" கண்டுபிடிக்கும் சக்தி உள்ளவர்கள்..




பிரபஞ்சத்தில் இருக்கும் வேதத்தை கண்டுபிடிக்கும் திறன் கொண்டவர்கள், "ரிஷி" என்று போற்றப்பட்டனர்.
வேதத்திற்கே "சப்த ப்ரம்மம்" என்று தான் பெயர்.
மறைந்து இருக்கும் இந்த சப்த பிரம்மத்தை, தியானத்தால் கண்டுபிடித்து நமக்கு தந்து விட்டனர் ரிஷிகள்.
மறைந்து இருப்பதால், தமிழில் வேதத்தை "மறை" என்ற சொல் கொண்டு பொருத்தமாக அழைக்கின்றனர்.
சப்த ரிஷிகளில் ஒருவரான அகத்தியரே "தமிழ் முனி"யாக தானே போற்றப்படுகிறார்.
ரிஷியை விட உயர்ந்தவர்கள் முனிகள்.
ரிஷியான நாரதர் முனியாகவும் போற்றப்படுகிறார். தெரிந்து கொள்ள இங்கே படிக்கவும்..
தவவலிமை அதிகமாக உள்ள ரிஷிகளுக்கு,
8 மஹா ஸித்திகளும் கைகூடி, 
அனுகிரஹமும் செய்ய முடியும், 
நிக்ராஹமும் (அழிக்கவும்) முடியும் 
என்ற சக்தி பெரும் போது,
அந்த ரிஷிகள் "மஹ ரிஷி" என்ற அந்தஸ்த்தை பெறுகிறார்.
துர்வாசரை மஹ ரிஷி என்று சொல்வார்கள்.



அழிக்கும் சக்தியும் உள்ளதால், "மஹ ரிஷிகளை" கண்டு க்ஷத்ரியனும், தேவர்கள் கூட, அவர்கள் சாபத்துக்கு பயப்படுவார்கள்.

ப்ராம்மண (Spiritual) பரம்பரையில் பிறந்து, பேராசை கோபம் அற்று, தவவலிமையால், "வேத மந்திரங்களை" கண்டுபிடித்தவர்கள் "ப்ரம்ம ரிஷி" என்ற அந்தஸ்தை பெறுகிறார்.
பிராம்மண குணம் உள்ளவன் ரிஷியாக உயரும் போது "ப்ரம்ம ரிஷி" ஆகிறான்.
க்ஷத்ரிய குணம் கொண்ட கௌசிகன் என்ற அரசன், ப்ரம்ம ரிஷியான "வசிஷ்டரிடம்" உள்ள காமதேனுவை கைப்பற்ற நினைத்தான்.
தன் படைவீரர்களை கொண்டு காமதேனுவை இழுத்து வர   சொன்னான்.
"ப்ரம்ம ரிஷி" வசிஷ்டர், தன் தவவலிமையால் ஆயிரக்கணக்கான படைவீரர்களை மாயையால் உருவாக்கி, அனைவரையும் ஒழித்தார். 

இத்தனை பலம் ஒரு ப்ரம்ம ரிஷிக்கு இருக்குமானால், க்ஷத்ரிய அரசனாக இருப்பதை விட, ப்ரம்ம ரிஷியாகலாம் என்று நினைத்தார் கௌசிகன்.
அரச பதவியை தன் மகன்களிடம், மந்திரிகளிடம் கொடுத்து விட்டு, தவம் செய்ய புறப்பட்டு விட்டார்.
கோபத்தை விட்டு, காமத்தை விட்டு, பொருள் ஆசையை விட்டு, பிராம்மண குணங்களை கடும் தடைகளுக்கு பிறகு பெற்று, க்ஷத்ரியனாக பிறந்தும், ப்ரம்ம ரிஷியாக ஆசைப்பட்ட கௌசிகன், வசிஷ்டர் வாயால் "ப்ரம்ம ரிஷி" என்று பெயர் பெற்றார். விஸ்வாமித்திரர் என்று உலக புகழ் பெற்றார் என்று பார்க்கிறோம்.

க்ஷத்ரியனாக (Protector) பிறந்து, தவவலிமையால், சப்த பிரம்மத்தில் உள்ள வேதத்தை அறியும் சக்தி உள்ளவர்கள் "ராஜ ரிஷி" என்ற அந்தஸ்தை பெறுகிறார்.
ஸ்வாயம்பு மனுவே "ராஜ ரிஷி". 
தசரதர் ஒரு ராஜ ரிஷி. 
ஜனகன் ஒரு ராஜ ரிஷி.
பொதுவாக ராஜரிஷிகள், தன் மகன்கள் ஆட்சிக்கு அமர்த்திய பின், வயோதிக காலத்தை வனத்தில் தவம் செய்து கழிக்க சென்று விடுவார்கள்.



வைஸ்யனாக (Business) பிறந்து, தவவலிமையால்,  சப்த பிரம்மத்தில் உள்ள வேதத்தை அறியும் சக்தி உள்ளவர்கள் "வைஸ்ய ரிஷி" என்ற அந்தஸ்தை பெறுகிறார்.
துலாதரன் என்ற ரிஷி - வைஸ்ய ரிஷி.

"ஜாதி பேதம்" பார்ப்பது காமம், க்ரோதம் உள்ள நமக்கு தான் உண்டு.
ரிஷிகளுக்கு இல்லை.
யார் மெய் அறிவில் (ஞானத்தில்) உயர்ந்து இருக்கிறார்களோ, அவர்களே பெரியவர்.
மஹாபாரதத்தில், ப்ரம்ம ரிஷியான "ஜாஜலி" என்பவர், துலாதரன் என்ற வைஸ்ய ரிஷியிடம் தர்ம உபதேசங்கள் கேட்டதாக உள்ளது.

சூத்ர குலத்தில் பிறந்து இருந்தாலும்,  தவவலிமையால், சப்த பிரம்மத்தில் உள்ள வேதத்தை அறியும் சக்தி உள்ளவர்கள் "சூத ரிஷி" என்ற அந்தஸ்தை பெறுகிறார்.
சூத ரிஷியை, சௌனகாதி ப்ரம்ம ரிஷிகள் பூஜை செய்து, அவரை வ்யாஸ பீடத்தில் அமர்த்தி, அவரிடம் புராணங்களை சொல்ல சொல்லி கேட்டனர்.
ரோம ஹர்ஷனர் என்ற ரிஷியும் சூத ரிஷி.

தேவனாக பிறந்து, தவவலிமையால், சப்த பிரம்மத்தில் உள்ள வேதத்தை அறியும் சக்தி உள்ளவர்கள் "தேவ ரிஷி" என்ற அந்தஸ்தை பெறுகிறார்.
நாரதர் - தேவ ரிஷி
தேவலர் - தேவ ரிஷி
தேவர்கள் திவ்யமான சரீரம் உடையவர்கள்.
அக்னி ஸ்வரூபமானவர்கள்.
இவர்கள் எந்த லோகத்துக்கும் சஞ்சரிக்க இயலும். 
மண்ணால் ஆனா மனிதர்கள் அல்ல இவர்கள்.
பொதுவாக இவர்கள் பூலோகத்து மேல் உள்ள சொர்க்க லோகத்திலோ, ஜன  லோகத்திலோ, தப லோகத்திலோ, ப்ரம்மா இருக்கும் சத்ய லோகத்திலோ வசிக்க கூடியவர்கள்.


ப்ரம்ம (ஸத்ய) லோகத்தில் வசிக்கும் தேவ ரிஷிகள், "ஸத்ய ரிஷி" என்றும்  அழைக்கப்படுகிறார்கள்.

ப்ரம்மாவின் முதல் படைப்பான சனத்குமாரர்கள் - ப்ரம்ம ரிஷிகள். 
எப்பொழுதுமே 5 வயது பாலகனாகவே இருப்பவர்கள்.
ப்ரம்ம லோகம் அழியும் வரை, ப்ரம்மா அழியும் வரை இருப்பவர்கள்.

ப்ரம்ம இருக்கும் ஸத்ய லோகத்துக்கு கீழே உள்ள தப லோகத்தில் வசிக்கும் தேவ ரிஷிகள், "தப ரிஷிகள்" என்று அழைக்கப்படுகிறார்கள்.

தப லோகத்துக்கு கீழே உள்ள ஜன லோகத்தில் வசிக்கும் தேவ ரிஷிகள், "ஜன ரிஷிகள்" என்று அழைக்கப்படுகிறார்கள்.

வேதத்தில் 4 காண்டங்கள் உள்ளன.
  1. ஆக்னேயம்
  2. ஸோமம்
  3. வைச்வ தைவத்யம்
  4. ப்ராஜா பத்யம்
வேதத்தில் உள்ள ஒவ்வொரு காண்டத்துக்கும் (Chapter) அதற்கான ரிஷிகள் உள்ளனர்.  "காண்ட ரிஷிகள்" என்று இவர்கள் அழைக்கப்படுகிறார்கள்.
பெண்களில் கூட ரிஷிகள் உண்டு.
"கார்கி"  என்ற பெண் ரிஷி உண்டு.

ரிஷிகளால் மனிதர்கள் படைக்கப்பட்டனர். 
தேவர்களும் வழிபடும் ரிஷிகளின் பரம்பரையில் வந்தவர்கள் நாம்.


வாழ்க ரிஷிகள்.
வாழ்க ஹிந்துக்கள்.