Followers

Search Here...

Showing posts with label அவதாரம். Show all posts
Showing posts with label அவதாரம். Show all posts

Wednesday 22 April 2020

யமன் செய்த அவதாரம்... பற்றி தெரிந்து கொள்வோமே

'ஆணிமாண்டவ்ய ரிஷி' ஒரு சமயம் ஆழ்ந்த தியானத்திலிருந்த பொழுது,  அவருடைய ஆஸ்ரமத்துக்குள், திருடர்கள் நுழைந்து அவர்கள் திருடிய பொருட்களை போட்டு விட்டு ஓடி விட்டனர்.
இவர்களை துரத்தி வந்த காவலர்கள், இவருடைய ஆஸ்ரமத்தில் நுழைந்தனர்.
மகரிஷியின் அருகில் அரண்மனையில் திருடிய நகைகள்  கிடப்பதைக் கண்டு இவரை சந்தேகப்பட்டு சிறைப்படுத்தி விட்டனர்.




அந்த காலங்களில், திருடுவதற்கு மக்கள் பயப்படுவார்கள்.
திருட்டுக்கு தண்டனையாக கழுவேற்றி விடுவார்கள். 
கழுவேற்றம் (impalement) என்பது ஒரு மரணதண்டனை. கூர்மைப்படுத்தப்பட்ட மரம் ஒன்றினில் குற்றவாளியை ஆசன வாய் வழியாக ஏற்றி விடுவார்கள்.
அரச தண்டனை மிக கடுமையாக இருந்த காலம் அது.
எதிர்பாராவிதமாக, இவர் திருடவில்லை என்று நிரூபணம் ஆகாமல் போக, அரசன், தண்டனை யாருக்கும் பொது என்ற காரணத்தால், மாண்டவ்ய ரிஷியை ஊசி போல இருக்கும் கழுவில் ஏற்றி  விட்டான். 

தியானம் கலையாமலேயே இருந்த ரிஷி, உடல் நாசமானதால், 
தன் சூக்ஷ்ம ரூபத்துடன் யமலோகம் சென்று விட்டார்.

கழுவேற்றிய மரத்தில் தன் உடல் கிடப்பதை பார்த்த ரிஷி, எம தர்மமனிடமே நியாயம் கேட்டார்.

"தான் செய்யாத குற்றத்துக்கு இத்தனை பெரிய தண்டனையா?"
என்று யமதர்மனை கேட்டார்.

ரிஷியான மாண்டவ்யரை பார்த்து எம தர்மராஜன்,
"ரிஷி ! நீங்கள் சிறு வயதாக இருக்கும் போது, ஒரு தும்பியின் வாலைக் [பட்டாம்பூச்சி] கயிற்றால் கட்டி அதன் அடிப்பகுதியை முள்ளால் குத்தி கொடுமை படுத்தினீர்கள். அதற்கான தண்டனையே இது” என்று சொன்னார்.
இதை கேட்ட மாண்டவ்ய ரிஷி,
“என்ன அநியாயமான சட்டம் இது!! 
அறியாப் பருவத்தில் செய்த சிறு தவறுக்கு இத்தகைய பெரிய தண்டனையா? 
16 வயது வரை நல்லது எது? கெட்டது எது? என்று தெரியாதே !  
குழந்தை பருவத்தில் செய்யும் பாவங்களுக்கு இப்படி ஒரு சட்டம் இருக்குமானால், நான் செய்த தவத்தை நீங்கள் பலனாக ஏற்றுக்கொண்டு, 16 வயது வரை செய்த பாவங்களுக்கு தண்டனை கிடையாது என்று சட்டத்தை மாற்றுங்கள்" 
என்று சொல்லிவிட்டார்.

அவர் செய்த தவத்துக்கு பலனாக, யமதர்மன் "சரி! மாற்றினேன்" என்று உடனேயே சட்டத்தை மாற்றினார்..
உடனே மாண்டவ்ய ரிஷி, யமதர்மனை பார்த்து,
"அறியாப் பருவத்தில் செய்த சிறு தவறுக்கு தண்டனை இல்லை என்று சட்டத்தை மாற்றி விட்டீர்கள். 
இருந்தாலும், அதோ பாருங்கள்..  என் உடல் இன்னும் அதே கழுவில் உள்ளது. 
சட்டம் மாற்றிய பிறகும், நடைமுறையில் இல்லாத சட்டத்தால், தண்டிக்கப்பட்டு இந்த உடல் இன்னும் பூமியில் கிடப்பதால், அதற்கு பிராயச்சித்தமாக, நீங்களும் பூமியில் அவதரிக்குமாறு, நான் சாபமிடுகிறேன்."
என்று சொல்லிவிட்டார்.

"ஸ்ரீ கிருஷ்ணராக அவதாரம் செய்ய போகிறார், நாராயணன்"
என்று தெரிந்ததும், அவருக்கு முன்பாகவே முப்பத்து முக்கோடி தேவர்களும் பிருந்தாவனத்தில் இடையர்களாக அவதாரம் செய்து விட்டனர்..

ரிஷிகள் கோபிகைகளாக வந்து விட்டனர். 

எம தர்மனுக்கு மட்டும் ஓய்வே கிடையாது. 
நரகத்தில் இவருக்கு எப்பொழுதும் வேலை. 

"தானும் கிருஷ்ண  அவதாரத்தில் கலந்து கொள்வோமா? 
தன்  வீட்டுக்கும் கண்ணன் ஒரு முறையாவது வருவாரா?" 
என்று காத்து இருந்த யமதர்மன், ஆணி மாண்டவ்யர் கொடுத்த சாபத்தை அனுகிரஹமாக ஏற்றுக்கொண்டு, தன் சார்பாக சித்ரகுப்தனை சிறிது காலம் பார்க்க சொல்லிவிட்டு,  விதுரராக அவதரித்தார்.
மஹாபாரதத்தில் விதுரர் சொல்லும் தர்மங்கள் "விதுர நீதி" என்று புகழ் பெற்றது. 
தர்மத்தை பற்றி தெரிந்து கொள்ள ஆசைப்பட்டால், "விதுர நீதி" படித்தாலேயே போதும்.




யமதர்மனுக்கு "ஸ்ரீ கிருஷ்ணரை" பஜிப்பவர்களை கண்டால் பேரானந்தம் உண்டாகும்.  
யமதர்மனே கிருஷ்ண பக்தர் தான், என்கிற போது "யமனை கண்டு நாம் ஏன் அச்சம் கொள்ளவேண்டும்?".

வாழ்க ஸ்ரீ கிருஷ்ணர் புகழ்.
வாழ்க ஹிந்து தர்மம்.
வாழ்க நம் புராணங்கள்.

Friday 14 June 2019

ருத்ர அவதாரம், ப்ரம்மா அவதாரம் , வராஹ அவதாரம் பற்றி.. தெரிந்து கொள்வோமே.

"வராஹ" அவதாரம் - உலக ஸ்ருஷ்டி ஆரம்பிக்கும் போது, ஸ்வாயம்பு மனு (1st Manu) காலத்தில் நடந்தது.
அனைத்து அவதாரங்களுக்கும் முற்பட்ட அவதாரம், "வராஹ" அவதாரம்.


அதை தொடர்ந்து, "நரசிம்ம" அவதாரம் நடந்தது.
ப்ரகலாதனின் பேரன் "பலி சக்ரவர்த்தி" ஆண்ட போது, 
"கூர்ம" அவதாரமும், "வாமன" அவதாரமும் செய்தார்.
"மத்ஸ்ய" அவதாரம் - இப்பொழுது நடக்கும் வைவஸ்வத மன்வந்திர (7th Manu) ஆரம்பத்தில் நடந்தது.

'பாகவதத்தில்' முதல் அவதாரமாக "வராஹ" அவதாரமே சொல்லப்படுகிறது.

ஸ்வாயம்பு மனு (1st Manu), ப்ரம்ம தேவனின் மானஸ புத்திரர்.

இப்பொழுது சத்ய லோகத்தில் உள்ள பிரம்மாவுக்கு வயது என்ன?
மனு அரசர்கள் யார் யார்? என்று தெரிந்து கொள்ள... Click செய்யுங்கள்..
முதன் முதலாக,
தாமரை மேல் ப்ரம்ம தேவனை சத்ய லோகத்தில் தன் நாபியில் இருந்து படைத்தார் பரவாசுதேவன் நாராயணன்.
பூலோகங்கள் படைக்கப்பட்டதற்கு முன்பேயே, ப்ரம்மாவுக்கும் முன், தாமரை படைக்கப்பட்டது என்று பார்க்கும் போது தாமரைக்கே (கமலம்) அது ஒரு ஏற்றம், பெருமை.

சத்ய லோகத்தில், படைக்கப்பட்ட ப்ரம்ம தேவன், ஞானியாக இருப்பதால்,
'இயற்கையாக பிறந்தோம்' என்று நினைக்காமல்,
'தன்னை படைத்தவர் இருக்க வேண்டுமே.. அவர் யார்?' என்று தியானம் செய்ய,
பகவான் நாராயணன் தியானத்திலேயே திவ்ய காட்சி கொடுத்து,
"உலக ஸ்ருஷ்டி என்ற கர்மாவை  செய்வதற்காக உன்னை நியமித்தேன்" என்று சொல்லி,
"வேதத்தை கொண்டு உலக ஸ்ருஷ்டி செய்" என்று பிரம்மாவிடம் வேதங்களை உபதேசித்தார்.
பரவாசுதேவன் கட்டளைக்கு கட்டுப்பட்டு, வேதத்தை கொண்டு, ப்ரம்மா உலக ஸ்ருஷ்டியை ஆரம்பித்தார்.

முதன் முதலில், சனகர், சனந்தனர், சனாதனர், சனத் குமாரர் என்ற 4 பாகவத உத்தமர்களை, தன் மனதால் ஸ்ருஷ்டி செய்தார் ப்ரம்ம தேவன்.
"நீங்கள் உலக ஸ்ருஷ்டியை செய்யுங்கள்"
என்று ப்ரம்ம தேவனே நியமித்தும்,
இவர்கள் நால்வருமே உலக விஷயமான ஸ்ருஷ்டியில் நாட்டமில்லாமல் இருந்தனர்.
ஞான மார்க்கத்திலேயே இருந்து மோக்ஷத்தை அடையவே விரும்பினார்கள்.


தன் முதன் ஸ்ருஷ்டியான, தன் 4 பிள்ளைகளும் இப்படி நிவ்ருத்தி என்ற ஞான மார்க்கம் சென்று விட்டார்களே!!... 
தான் சொன்னதை இவர்கள்  கேட்கவில்லை!! என்றதும், பிரம்மாவுக்கு கோபம் வந்தது.
ஞானியான ப்ரம்மா, கோபப்பட கூடாது என்று கோபத்தை அடக்கி கொள்ள,
பிரம்மாவின் நெற்றி புருவ மத்தியில் (ललाट) இருந்து சம்ஹார மூர்த்தியாக, ஒரு சிறு குழந்தை வெளிப்பட்டது.
धिया निगृह्यमाण: अपि भ्रुवो: मध्यात् प्राजापते: ।
सद्य: अजायत तत् मन्यु: कुमारो नील लोहित: || bhagavatham
திவ்யமான இந்த குழந்தை அழுது கொண்டே, பிரம்மாவை பார்த்து
"எனக்கு ஒரு பெயர் வை" என்று சொல்ல,
यद् अरोदी: सुर-श्रेष्ठ स-उद्वेग इव बालक: ।
तत: त्वाम् अभिधास्यन्ति नाम्ना रुद्र इति प्रजा: ॥ Bhagavatham
ப்ரம்ம தேவன் "நீ குழந்தை ரூபத்தில் அழுது (ரோதன) கொண்டே கேட்டதால், உனக்கு 'ருத்ரன்' என்று பெயர்" 
என்று சொல்ல,
அந்த குழந்தை, உடனே 11 ருத்ரர்களாக ஆகி காட்சி கொடுக்க,
அந்த 11 ருத்ரர்களுக்கும் ப்ரம்மா பெயர் கொடுத்தார்.
1. மன்யு
2. மனு
3. மஹினச
4. மஹான்
5. சிவன்
6. ருதத்வஜன்
7. உக்ரரேதா
8. பவன்
9. காலன்
10. வாமதேவன்
11. த்ருடவ்ரதா
யஜுர் வேதத்தில், ருத்ர ஸ்துதி செய்யும் போது,
'மன்யு' என்ற ருத்ரனின் பெயரை சொல்லி ஆரம்பிக்கிறது என்று பார்க்கிறோம்.

"நமஸ்தே ருத்ர மன்யவ உதோத இஷவே நம:"
- ருத்ரம் (யஜுர் வேதம்)

मृगव्याधश्च सर्पश्च निर्ऋतिश्च महायशाः।
अजैकपादहिर्बिध्न्यः पिनाकी च परन्तपः।। 
दहनोऽथेश्वरश्चैव कपाली च महाद्युतिः।
स्थाणुर्भगश्च भगवान् रुद्रा एकादश स्मृताः।।
- Adi Parva (Vyasa Mahabharata)
11 ருத்ரர்களுக்கு வேறு காரண பெயர்களும் சொல்லப்படுகிறது. மஹாபாரதத்தில் வ்யாஸர் அந்த பெயர்களை சொல்கிறார்.

1. ம்ருக-வியாதர்
2. சர்ப்பஸ்
3. நிர்ருதி
4. அஜைகபாத்
5. அஹிர்பித்ன்யர்
6. பினாகீ
7. தஹனர்
8. ஈஸ்வரர்
9. கபாலீ
10. ஸ்தாணு
11. பகன்
- 11 ருத்ரர்கள் 


'தன்னுடைய முதல் 4 பிள்ளைகள் ஞான மார்க்கத்தில் சென்று விட்டார்களே'
என்று கோபத்தில் இருக்கும் போது வெளிப்பட்ட ருத்ரன்,
தன்னையே 11 ருத்ரர்களாக ஆக்கி கொண்டு,
ஒவ்வொரு ருத்ரனும், ஆயிரக்கணக்கான கணங்களை ஸ்ருஷ்டி செய்ய ஆரம்பித்து விட்டார்கள்.
ஏகாதச (11) ருத்ரர்களால் படைக்கப்பட்ட கணங்கள் யாவும் "பூத கனங்களாக" இருந்தார்கள்.


இந்த பூத கனங்கள், "பிரேதமாகவும், பிசாசாகவும், பூதமாகவும்"  அலையும் ஜீவன்களை கட்டுப்படுத்தும் அதிபதிகள் ஆகினர்.
வைகுண்டத்தில் உள்ள பரவாசுதேவன், தானே க்ஷீராப்தி என்ற பாற்கடலை ஸ்ருஷ்டி செய்து, ஆதிஷேஷன், ஜெய விஜயர்களுடன், தானே விஷ்ணுவாக வ்யூஹ அவதாரமும் செய்து விட்டார்.

அதற்கு பிறகு, ப்ரம்ம தேவன்,
ஒன்பது ப்ரஜாபதிகளை சத்ய, ஜன, தப லோகங்களில் ஸ்ருஷ்டி செய்தார்.
1. மரீச்சி (இவர் மகன் கஷ்யபர்)
2. அத்ரி (மனைவி அனசுயா)
3. ஆங்கிரசர் (இவர் பரம்பரையில் குத்ஸ ரிஷி, கௌதம ரிஷி, பரத்வாஜ ரிஷி வந்தார்கள்)
4. புலத்ஸ்யர்
5. புலகர்
6. க்ரது
7. வசிஷ்டர்
8. ப்ருகு (இவர் பரம்பரையில் வந்த ரிஷிகள் ச்யாவன, ஆப்னவான, ஔர்வ, ஜாமதக்ன்ய)
9. தக்ஷன்

இவர்களில் 7 ப்ரஜாபதிகள், சப்த ரிஷிகளாக முதல் மனுவான 'ஸ்வாயம்பு மனு'வின் காலத்தில் உலக படைப்புகளில் ஈடுபட்டனர்.
1. மரீச்சி
2. அத்ரி
3. ஆங்கிரசர்
4. புலத்ஸ்யர்
5. புலகர்
6. க்ரது
7. வசிஷ்டர்

ப்ரஜாபதிகள் ஞான மார்க்கத்தை விரும்பினாலும், பரவாசுதேவனின் ஆணையை மறுக்காமல்,
ப்ரம்ம தேவனுக்காக உலக ஸ்ருஷ்டி செய்ய சம்மதித்து, உலகமெங்கும் மக்களை ஸ்ருஷ்டி செய்ய ஆரம்பித்தனர்.

முக்கியமாக, 'மரீச்சி' - கஷ்யப ரிஷியை ஸ்ருஷ்டி செய்தார்.
கஷ்யபர் - தேவர்களை, அசுரர்களை ஸ்ருஷ்டி செய்தார்.
இப்படி ஒன்பது ப்ரஜாபதிகளும்.
தேவ, அசுர, விலங்குகள், மனிதர்கள் என்று படைக்க ஆரம்பித்து விட்டனர்.



11 ருத்ரர்களால் ஸ்ருஷ்டி செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான பூத கணங்கள், ப்ரஜாபதிகளால் ஸ்ருஷ்டி செய்யப்பட்டவர்களை சம்ஹாரம் செய்ய ஆரம்பித்து விட்டனர்.
"பிரளய காலத்தில் சம்ஹாரம் செய்தால் தகும்.. இப்பொழுது தான் மனித ஸ்ருஷ்டியே ஆரம்பிக்கிறது, அதற்குள் சம்ஹாரம் நடக்கிறதே" என்றதும்,
ப்ரம்ம தேவன், 11 ருத்ரர்களிடமும்
"நீங்கள் இப்போது உங்கள் சம்ஹார லீலையை ஆரம்பிக்காதீர்கள்..
ஸ்ருஷ்டியே இப்போது தான் நடக்க ஆரம்பித்து உள்ளது. நீங்கள் சம்ஹாரம் செய்வதை நிறுத்தி விடுங்கள்.
உங்களுக்கு 'உக்ரன் என்றும் காலன்' என்றும் பெயர் உண்டு என்றாலும்,
இப்போது நீங்கள் யாவரும் சங்கரனாக (நல்லதை செய்பவர்) இருங்கள்.
சம் (நல்லதை) கரோதி (செய்பவர்) இதி(=) சங்கர:
ஹிம்சையை செய்யாதீர்கள். 
உலக ஸ்ருஷ்டியை தடுக்காதீர்கள்."
என்று சமாதானம் செய்ய,
பிரளய காலம் வரை சம்ஹார வேலை செய்ய வேண்டிய அவசியமில்லை என்பதால்,
11 ருத்ரர்களும், தன் ஆயிரக்கணக்கான பூத கணங்களுடன், கைலாய லோகத்திற்கு சென்று தியான யோகத்தில் அமர்ந்தனர்.

அவ்வப்போது பூலோகத்தில் அவதாரம் செய்து, தன்னை பஜிக்கும் யோகிகளுக்கும், பக்தனுக்கும் காட்சி கொடுத்து, ஞானத்தை தருகிறார்கள்.




'ஓம்' என்ற ஓங்காரத்துக்கு ஈடான,
'ராம' என்ற தாரக மந்திரத்தையே எப்பொழுதும் ஜபம் செய்து கொண்டிருக்கும் ருத்ரர்கள், 
பூலோகத்தில் காசியில் விஸ்வநாதனாக, சிவபெருமானாக தானே இருந்து கொண்டு, 
காசியில் உயிர் பிரியும் பாக்கியம் பெற்ற அனைத்து ஜீவனுக்கும் (மனிதன், மிருகம், பறவை என்று அனைத்தும்), கடைசி மூச்சு போகும் சமயத்தில் அவர்கள் காதில் "ராம ராம ராம.." என்று தாரக மந்திரத்தை சொல்லி, தன் அணுகிரஹதால் எது சத்தியமான உண்மை என்ற  ஞானத்தை கொடுத்து,
ஞானம் அடைந்த ஜீவனுக்கு நாராயணன் மோக்ஷ வாசலை திறந்து விட வழி செய்து விடுகிறார்.

க்ஷீராப்தி என்ற பாற்கடலில், வ்யூஹ அவதாரத்துடன் இருக்கும் மஹாவிஷ்ணுவை தரிசிக்க, ஒரு சமயம் 4 குமாரர்களும் (சனகர், சனந்தனர், சனாதனர், சனத் குமாரர்) வந்த போது, ஜெய விஜயர்கள் தடுத்து விட, 
'பூலோகத்தில் பிறக்குமாறு' சபித்து விட்டனர்.
பிரம்மாவின் பிள்ளைகள் கொடுத்த சாபம், பொய் போக கூடாது என்பதற்காகவும்,
தானே விபவ அவதாரங்கள் செய்ய சங்கல்பித்ததால்,
'ஜெய விஜயர்கள்' முதலில் பிறக்கட்டும் என்று இப்படி ஒரு லீலையை செய்தார் பெருமாள்.


ஜெய விஜயர்களை பார்த்து,
'100 பிறவிகள் எடுத்து, விஷ்ணு பக்தி செய்து மீண்டும் க்ஷீராப்தி வருகிறீர்களா?
அல்லது
3 பிறவிகள் மட்டுமே எடுத்து, எனக்கு பரம எதிரியாக இருந்து, என் கையால் அழிக்கப்பட்டு, மீண்டும் வருகிறீர்களா?'
என்று மஹாவிஷ்ணு கேட்க,
100 ஜென்மங்கள் பெருமாளை பிரிந்து இருப்பதை விட, 3 ஜென்மங்கள் விஷ்ணுவுக்கு பகைவனாக இருந்து, அவர் கையாலேயே கொல்லப்பட்டு, வேகமாக பாற்கடல் அடைகிறோம் என்று சொல்ல,
முதல் பிறவியில் "ஹிரண்யாக்ஷன், ஹிரண்யகசிபு" என்று மகாபலம் கொண்ட அசுரர்களாக, அசுரர் குலத்தில் பிறந்தனர் ஜெய விஜயர்கள்.

ஹிரண்யாக்ஷன், ஹிரண்யகசிபு அவதரித்த பின், அசுரர்கள் பலம் கூடியது.
தேவர்களை அடக்கி, சொர்க்க லோகத்தில் அடிமைகள் ஆக்கினார்கள் அசுரர்கள்.

ப்ரம்ம லோகத்தையும் சேர்த்து 14 லோகங்களையும் கைப்பற்றினார்கள் அசுரர்கள்.

சொர்க்க லோகத்தில் இருந்து கொண்டு அட்டகாசம் செய்தனர் அசுரர்கள்.

மஹா விஷ்ணுவாகிய நாராயணன், தன் துவார பாலகர்கள் (gate keepers) கொஞ்ச காலம் 14 லோகங்களையும் ஆளட்டுமே என்று இருந்து விட்டார்.

அதர்மத்தின் கை ஓங்கியது.
இவர்களை எதிர்க்க தேவர்கள், ப்ரஜாபதிகள், மகரிஷிகள், ப்ரம்மா உட்பட எவராலும் முடியவில்லை.

தர்மம் அழிந்து, அதர்மம் ஓங்கி விட்டதால், பூமா தேவி வேதனையுற்றாள்.
ஹிரண்யாக்ஷன் ஒரு படி மேலே போய், 14 லோகங்களில் மனிதர்கள் வாழும் லோகமான பூலோகத்தை (earth) அதன் கதியில் இருந்தே அகற்றி,
கர்போதகம் என்ற மஹா பிரளய ஜலத்தில் எடுத்து கொண்டு போய், மூழ்கடித்து மறைத்து விட்டான்.

பூலோகத்தையே (earth) அதன் சுழற்சியில் இருந்து எடுத்து, 
வெளி மண்டலத்தில் சொல்லப்படும் கர்போதகம் என்ற மஹா பிரளய ஜலத்தில் மறைத்து விட்டான் என்றால், 
அசுரர்களை, சாதாரண மனிதர்கள், என்று நாம் நினைத்து விட கூடாது..

பூமியே மறைந்து கிடந்த காலம் அது என்று கவனிக்க வேண்டும்.

ப்ரஜாபதிகளால் படைக்கப்படும் மக்களை, ஒரு அரசனாக இருந்து காப்பதற்காக, ப்ரம்ம தேவன் "ஸ்வாயம்பு" என்ற மனுவை ஸ்ருஷ்டி செய்தார்.

தேவர்கள், அசுரர்கள் என்று ஸ்ருஷ்டி செய்த ப்ரஜாபதிகள்,
மனிதர்களை படைக்க ஆரம்பிக்க, "இந்த மனிதர்களை தரிக்க (தாங்க) இடம் வேண்டுமே?"
என்று ஸ்வாயம்பு மனு, சத்ய லோகத்தில் உள்ள ப்ரம்ம தேவனை சரண் அடைந்தார்.

நம் அனைவரையும் பூமி தரிப்பதால் (தாங்குவதால்), பூமியின் தேவதையான பூமாதேவிக்கு "தரா" (Dhara) என்று பெயர்.

நாம் அனைவரும் மனிதனாகவோ, விலங்காகவோ, பறவையாகவோ இந்த பூமியிலேயே பிறக்கிறோம், நடக்கிறோம், வாழ்கிறோம், மடிகிறோம்.

இந்த பூமியிலேயே வாழ்ந்து கொண்டு, 
பூமியையே சில சமயம் உடைக்கிறோம், உதைக்கிறோம்,  தோண்டுகிறோம், எச்சில் துப்புகிறோம், ஒடுகிறோம், குதிக்கிறோம்.
பூமியிலேயே பிறந்து, வாழ்ந்து, மடியும் நாம் செய்யும் அபச்சாரங்களை, ஹிம்சையை பூமாதேவி 'தன் குழந்தைகள் தானே' என்ற தாய் பாசத்தில் மன்னிக்கிறாள்.
மஹா பொறுமை கொண்டு பூமாதேவி இருப்பதால் அவளுக்கு "க்ஷமா" (மன்னிப்பவள்) என்றும் பெயர் உண்டு.

ஹிரண்யாக்ஷன் பூலோகத்தையே எடுத்து ஒளித்து விட்டான், என்றதும் ஸ்வாயம்பு மனு, ப்ரம்ம தேவனிடம் பூலோகத்தை மீட்டு கொடுக்க பிரார்த்திக்க,
ப்ரம்ம தேவன், ஸ்ரீ மந் நாராயணனை மனதில் தியானிக்க,
நாராயணனே, ஒரு கட்டை விரல் (அங்குஷ்ட) அளவுள்ள வராஹ மூர்த்தியாக வெளிப்பட்டார்.

பரவாசுதேவனே, தர்மமே வடிவான, 'யஞ்ய வராஹ'னாக வெளிப்பட்டார்.

பரவாசுதேவன் நாராயணனை இதயத்தில் தரிசனம் செய்து இருந்த ப்ரம்ம தேவன்,
இப்படி வராஹ மூர்த்தியாக சிறு ரூபம் எடுத்து கொண்டு தன்னிடம் இருந்தே வெளிபட்டதை கண்டு,
"இந்த குட்டி வராஹ மூர்த்தி என்ன செய்து விட போகிறது?"
என்று மனதுக்குள் ஒரு க்ஷணம் நினைக்க,
சத்ய லோகத்தை காட்டிலும் பெரிதாக வளர்ந்து, விஸ்வரூபனாக வளர்ந்து விட்டார் வராஹ பெருமான்.
கட்டை விரல் அளவுக்கு (அங்குஷ்ட மாத்ரத்தில்) காட்சி கொடுத்தாலும், உலகையே ரக்ஷிக்க கூடியவன் என்று காட்டுவது போலவும்,
"தான் அணுவுக்குள்ளும் அணுவாக இருக்கிறேன்" என்று காட்டவும்,
ப்ரம்ம தேவனிடமிருந்தே தன்னை வெளிப்படுத்தி, "சர்வ ஜீவனுக்குள்ளும், நானே அந்தர்யாமியாக இருக்கிறேன்" என்று காட்டவும்,
ப்ரம்ம தேவனுக்கு ஏற்பட்ட சந்தேகத்தை போக்க, மிகப்பெரிய  வராஹ ரூபத்துடன் வளர்ந்து காட்சி கொடுத்தார்.

ப்ரம்ம தேவனுக்கு தன்னை சின்ன கட்டை விரல் அளவுக்கு வராஹ மூர்த்தியாக காட்டி கொண்ட பரவாசுதேவன்,
தேவைப்பட்டால் எத்தனை பெரிய விஸ்வரூபத்தையும் எடுத்து தர்மத்தை காப்பேன் என்று உணர்த்தினார்.

நம் வீட்டிலும் சின்ன சிவபெருமான் விக்ரஹமோ, குட்டி கிருஷ்ணரோ, குட்டி விஷ்ணுவோ பூஜைக்காக வைத்து இருக்கிறோம்.
நம் வீட்டில் உள்ள கிருஷ்ணர் விக்ரஹம் சின்னதாக இருப்பதால், "இந்த குட்டி கிருஷ்ணரா என்னை காக்க போகிறார்? காக்கிறார்?" 
என்று நாம் நினைக்க கூடாது என்பதற்காக தான், 
பிரம்மாவுக்கும் அது போன்ற மனநிலையை உருவாக்கி, குட்டி வராஹனாக வந்த அவதார ரூபத்தை பார்த்து, அளவை பார்த்து "இந்த குட்டி வராஹ மூர்த்தியா பூலோகத்தை மீட்க போகிறது? என்று கேள்வி எழ, 
அளவிடமுடியாத, எந்த ரூபமாகவும் ஆக சக்தி பெற்ற நாராயணன், கிடு கிடுவென வளர்ந்து பெரிய வராஹமாக ஆகி விட்டார். 
அவருக்கு முன்னால் பெரும் மலைகள் கால் தண்டையில் போட்டு கொள்ளும் சிறு மணிகள் போல காட்சி அளித்தன என்றால், எத்தனை பெரிய விஸ்வரூபம் வராஹ அவதாரம் என்று புரிந்து கொள்ளலாம்.

"வந்திருப்பது சர்வேஸ்வரன்" என்று அறிந்த ப்ரம்மதேவன் வராஹ பகவானை நமஸ்கரித்தார்.

"தன்னை பூஜிக்க சுலபமாக இருக்குமே" என்பதற்காக
'தன்னையே சுலபமாக்கி கொண்டு, குட்டி விக்ரஹமாக உள்ளார் பெருமாள்' என்று அறிந்து கொள்ளும் போது தான், நமக்கும் பக்தி வரும்.
நம் வீட்டில் உள்ள சிவ பெருமானும், கிருஷ்ணரும், ராமரும் வெறும் பொம்மை அல்ல,  அளவில் சிறிதாக தோன்றினாலும், உண்மையான பக்தி நமக்கு இருக்குமானால்,
"நம்மை காக்க வல்லவர், எதிலும் அந்தர்யாமியாக இருப்பவர், நமக்காக இந்த விக்ரஹத்தில் புகுந்து இருக்கிறார் என்று புரிந்து விடும்". நமக்கும் இறை பக்தி செய்ய தோன்றும்.

என் வீட்டின் பூஜை அறையில் உள்ள இந்த குட்டி கிருஷ்ணனா, குட்டி சிவனா என்னை காப்பாற்ற போகிறார்? என்று சந்தேகம் நமக்கு வரக்கூடாது என்பதற்காக தான்,
ப்ரம்ம தேவனுக்கே இது போன்ற எண்ணத்தை வர வழைத்து, தன் முதல் அவதாரத்திலேயே நமக்கு வரப்போகும் இது போன்ற சந்தேகங்களுக்கு பதில் சொன்னார் நாராயணன்.

தான் அணுவுக்குள் அணுவாக (அனைத்து உயிருக்கும் உயிராக) இருப்பவன் என்று காட்ட, சிறு ரூபத்தை காட்டினாரேவொழிய,
அவர் ஐஸ்வரயம் எல்லை இல்லாதது என்று புரிந்து கொள்ள, எதுவாகவும் வருவார், எவ்வளவு பெரிய ரூபத்தையும் எடுப்பார் என்று காட்ட,
மிக பெரிய விஸ்வரூபத்தை காட்டினார் பரவாசுதேவன்.
பூலோகமே இல்லாத போதே, வராஹ மூர்த்தியாக வந்ததால், வராஹம் என்றால் என்ன? என்று பார்த்திராத, ப்ரம்ம லோகத்தில் உள்ள ரிஷிகள் அனைவரும் நடு நடுங்கி போனார்கள்.

நாம் பூலோகத்தில் காணும் பன்றியையோ, சிங்கத்தையோ, மீனையோ, மனிதர்களையோ, பெருமாள் செய்த அவதாரத்தோடு ஒப்பிட்டு பார்த்து விட கூடாது...

இப்படி ஒப்பீடு செய்து பார்க்க தோன்றினாலேயே,
அவர் எதற்காக அந்த அவதாரத்தை செய்தார்?
என்ன காரியத்தை செய்ய அப்படி ஒரு அவதாரம் செயதார்?
என்ற ஆலோசனை தோன்றாமல், பக்தி இல்லாமல் போய், நாம் காணும் மனிதனை போலவும், மீனை போலவும், பன்றியை போலவும் நினைத்து கொண்டு, பகவானின் கருணையை புரிந்து கொள்ளாமல், வெறும் கதையாகவும், நாதீகனாக இருந்தால் "உங்கள் பகவான் பன்றியா? மீனா?" என்ற அளவுக்கு கீழ்தர பேச்சுக்கள் சம்பவித்து விடும்.


"இது என்னவென்றே தெரியவில்லையே.. பெரிய ரூபத்தில் வளர்ந்து கொண்டே போகிறதே.   இது தேவனா, அசுரனா என்று தெரியவில்லையே" என்று ரிஷிகள் பயந்து நடுங்க...
"அபயம்.. அபயம்" என்று வராஹ மூர்த்தியாகவே இருந்து கொண்டு கர் கர் என்று கர்ஜிக்க, வந்திருப்பது பரவாசுதேவன் தான், ப்ரம்ம தேவனுக்கு அணுகிரஹம் செய்ய காட்சி கொடுக்கிறார் என்று பயம் தெளிந்தனர் ரிஷிகள்.

உலகத்தில் யஞ்யம் (வேத முறைப்படி இறை வழிபாடு) இருக்கும் வரையில்,
நல்ல காரியங்கள் நடக்கும் வரையில்,
தர்மம் (நியாயம்) உலகில் நிலைத்து இருக்கும் வரை,
உலகில் ஒரு பதிவ்ரதையாவது இருக்கும் வரை,
ஒரு வைஷ்ணவனாவது உலகில் இருக்கும் வரை,
அக்னிஹோத்ரம் செய்யும் ஒரு ப்ராம்மணனாவது இருக்கும் வரை,
உலகம் நிலைத்து இருக்கும்.

உலகம் சத்தியத்தாலும், தர்மத்தாலும் (நியாயம்) நிலைத்து இருக்கிறது.
உலக மக்களிடையே பொய் (அசத்யம்), நியாயத்துக்கு எதிரான செயல்கள் அதிகரிக்கும் போது, ஜனங்கள் ஒருவருக்கு ஒருவர் சண்டை இட்டு, அழிவார்கள்.

அதர்மத்தாலும், அநியாயத்தாலும் சூழப்பட்டதால், பூமியே பிரளய ஜலத்தில் மூழ்கி கிடக்க,
மீண்டும் சத்தியத்தை நிலைநாட்டி, தர்மத்தை (நியாயத்தை) நிலைநாட்ட,
பிரளய ஜலத்தில் இருந்து மீட்டு, மீண்டும் பூமியை அதனுடைய ஸ்தானத்தில் வைக்க,
பெருமாள் "தர்மமே ரூபமாக, சத்தியமே ரூபமாக" கொண்ட 'யஞ்ய வராஹ' அவதாரம் எடுத்தார்.

பெருமாள் எடுத்த இந்த வராஹ அவதாரம் என்பதே தர்ம ஸ்வரூபமானது.

பூலோகமே இல்லாத சமயத்தில், தன்னை தானே வராஹனாக ஸ்ருஷ்டி செய்து கொண்டார் என்று பார்க்க வேண்டுமே தவிர, வராஹ ஸ்வரூபம் நாம் உலகில் காணும் சாதாரண பன்றி என்று நினைக்கக்கூடாது..

வராஹ மூர்த்தியை "தர்மத்தின் ஸ்வரூபமாக பார்" என்று நமக்கு காட்டுகிறது நம் புராணங்கள்.

உலகில் அலையும் சாதாரண பன்றியை போன்று தான், வராஹ அவதாரம் என்று நாம் பார்த்து விட கூடாது என்பதற்காகவே,
வராஹ மூர்த்தியின் ஸ்வரூபத்தை, சத்ய, ஜன, தப லோகத்தில் உள்ள ரிஷிகளே விளக்குகின்றனர்.

வராஹ மூர்த்தியாக அவதாரம் செய்து, பூலோகத்தை மீட்டு,
மனிதர்களை பிறக்க வைத்து, அவர்களால் மீண்டும் உலகில் தர்ம காரியங்கள், வேத முறையில் இறை வழிபாடுகள் இனி நடக்க போகிறது என்று அறிந்த ரிஷிகள், வராஹ பகவானையே யஞ்ய வராஹனாக பார்த்தனர்.

யாக குண்டத்தை சுற்றி, 4 பேர் உட்கார்ந்து கொண்டு யாகத்தை (யஞ்யம்) செய்வார்கள்.
1. ஹோதா (ரிக்வேதத்தில் உள்ள வேத ஸ்துதிகளை சொல்லி, தேவர்களை, ப்ரம்மா, ருத்ரன், பரவாசுதேவனை அழைத்து, தாங்கள் கொடுக்க ஆசைப்படும் ஆஹுதிகளை ஏற்றுக்கொள்ள அழைப்பவர். யாகம் செய்பவர்களில் மிகவும் மதிப்புக்கு உரியவர்)
2. அத்வர்யு (யஜுர் வேதத்தில் உள்ள வேத மந்திரப்படி யாகத்தினை முறைபடி சரியாக  நடத்துபவர் ,செய்பவர்)
3. உத்காதா (சாம வேதத்தில் உள்ள வேத மந்திரங்களை கானமாக பாடி, ஹோதாவால் அழைக்கப்படும் தேவதைகளை விசேஷமாக மகிழ்விப்பவர்)
4. ப்ரம்மா (யாகம் ஒழுங்காக நடக்கிறதா! என்று மேற்பார்வை செய்பவர். கர்மாக்கள் செய்கையில், அவ்வப்போது அத்வர்யுவாக இருப்பவர், பிரம்மாவை அனுமதி கேட்பார். அதற்கு பிரம்மா ‘ஓம்’ என்று சொல்லி அனுமதி தருவார்.
அவ்வப்போது யக்ஞத்தில் ஏற்படக்கூடிய தவறுகளுக்கான பிராயச்சித்தத்தைக் கூறுவதும், பிரம்மாவின் பொறுப்பே)
பொதுவாக யக்ஞம் என்ற சமஸ்கரித சொல்லுக்கு 'வழிபடுதல்' என்று பொருள்.


யாகத்தை செய்யும் இந்த நான்கு பேரும், வராஹ பகவானின் நான்கு 'கால்கள்' போலவும்,
யாகத்துக்கு இரண்டு இலை போன்ற தருவி வைத்து இருப்பார்கள்.
இந்த தருவியே, வராஹ பகவானின் இரண்டு 'காதுகள்' போலவும்,
யாகத்தில் கடைசியாக ஒரு நீண்ட பாத்திரம் வைத்து பூரண ஆஹுதி கொடுப்பார்கள்.
அந்த நீண்ட பாத்திரமே, வராஹ பகவானின் நீண்ட 'முகம்' போலவும்,
யாகத்துக்கு பயன்படுத்தப்படும் தர்ப்பைகளே, வராஹ பகவானின் 'ரோமங்களாக' இருக்க...

ஹோமத்துக்கு விடப்படும் நெய் (ஆஜ்யம்) ப்ரகாசத்திற்கு காரணமாக இருப்பதால், அவருடைய 'கண்கள்' போலவும் இருக்க,

வராஹ ஸ்வரூபமே, ரிஷிகளுக்கு  யக்ஞ ரூபமாக தெரிந்தது.
ரிஷிகள் "யக்ஞ வராஹனாக" தரிசனம் செய்தார்கள்.

யக்ஞ வராஹனாக காட்சி கொடுத்த பெருமாள், பிரளய ஜலத்தில் மூழ்கி பூமியை தூக்க, ஹிரண்யாக்ஷனுடன் போரிட்டு அவனை கொன்று,
ஒரு யானை ஒரு தாமரை பூவை தூக்கி கொள்வது போல, தந்தங்களினால் மிக எளிதாக தூக்கிக் கொண்டு மேலே வந்தார்.
பூலோகத்தை அதன் கதியில் மீண்டும் வைத்து, மனிதர்களை படைக்குமாறு அணுகிரஹம் செய்தார்.

பரவாசுதேவன் நாராயணனுக்கு, பூமா தேவியும், மஹா லட்சுமியும் பத்னிகள்.
தன்னை காப்பாற்றி, பூலோகத்தில் மீண்டும் ஜனங்களை ஸ்ருஷ்டிக்க அணுகிரஹம் செய்த 'வராஹ பெருமானை', நாராயணன் என்று உணர்ந்தாள், பூமி தாயார்.
பூலோகத்தில் பிறக்கும் நமக்கெல்லாம் தாய் "பூமா தேவி", தந்தை "நாராயணன்".
யாரும் 'அனாதை'கள் இல்லை இந்த உலகில்.

நாம் இந்த தாய் தந்தையிடம் பக்தியுடன் இருக்க வேண்டும். 

"நாம் மோக்ஷம் பெற வேண்டும்" என்பதற்காகவே எடுத்த அவதாரம் 'வராஹ அவதாரம்'.

பூமா தேவியுடன், வராஹ பெருமாள், தமிழ் நாட்டில் ஸ்ரீ முஷ்ணம் என்ற திவ்ய தேசத்தில் இருக்கிறார்கள்.
நம்மை பெற்ற பூமி தாயையும், பூமியையே மீட்டு கொடுத்த தந்தையான பெருமாளையும், நாமும் ஸ்ரீ முஷ்ணம் சென்று தரிசிக்க வேண்டும்.


"வராஹ புராணம், பாகவதம்" போன்ற புராணங்கள் "சாத்வீக புராணங்கள்" என்று புகழப்படுகிறது.

நாராயணனே கிருஷ்ணராக அவதாரம் செய்த போதும், மகாபாரதம் போன்ற இதிகாசங்கள் "ராஜஸ புராணங்கள்" என்று சொல்லப்படுகிறது.
மகாபாரதத்தில் தான் பகவத் கீதை இருக்கிறது என்றாலும், பிற கதைகளை படிக்கும் போது பொறாமை, சூது, பழிக்கு பழி போன்ற ராஜஸ குணங்களும் காணப்படுகிறது.

ஆனால், பாகவதம், வராஹ புராணம் போன்ற சில புராணங்கள், மோக்ஷத்தை விரும்ப கூடியவர்கள் படிப்பதற்காகவே ஆரம்பம் முதல் கடைசி வரை சாத்வீகமாகவே உள்ளவை என்று சொல்லப்படுகிறது.

வராஹ புராணத்தில், ஹிரண்யாக்ஷனை ஒழித்து, பூமியை அதன் கதியில் நிறுத்தி விட்ட பின், வராஹ மூர்த்தியாக உள்ள நாராயணருக்கும், பூமா தேவிக்கும் இடையே நடந்த உரையாடல் உள்ளது.

"பூலோகத்தில் இப்படி ஜீவ கோடிகள் பிறந்து, வாழ்ந்து, இறந்து.. மீண்டும் பிறந்து, வாழ்ந்து, இறந்து கொண்டே இருக்கிறார்களே....
இவர்கள் இந்த சம்சார சூழலில் இருந்து விடு பட்டு, பரமபதம் என்ற மோக்ஷத்தை அடைய என்ன வழி?" என்று பூமா தேவி கேட்க,
வராஹ பகவான் 'நம்மை போன்ற ஜீவன்கள் மோக்ஷம் அடைய வழி என்ன" என்று சொல்கிறார்.
ஆரம்பம் முதல், கடைசி வரை,
ஒரு தாயும் தந்தையும், "தன் குழந்தைகள் நன்றாக இருக்க வேண்டுமே" என்று கவலைப்பட்டு தங்களுக்குள் உரையாடி கொள்ளும் சாத்வீக புராணம் வராஹ புராணம்.

நம் மோக்ஷத்திற்காக, பெருமாளும், பூமி பிராட்டியும் பேசிக்கொள்ளும் அற்புதமான வராஹ புராணத்தை ஒருவன் படித்தாலே, அவனுக்கு மோக்ஷம் நிச்சயம்.

வாழ்க ஹிந்துக்கள்.
வாழ்க நம் வேதங்கள்.
வாழ்க நம் தெய்வங்கள்.

வளர்க நம் இறை பக்தி.

Hare Rama Hare Krishna - Listen to Bhajan

Sandhya Vandanam - Morning (With meaning)

Sandhya Vandanam - Afternoon (With meaning)



Sandhya Vandanam - Evening (With meaning)




Wednesday 29 August 2018

காலம் கடந்து அனாதி காலமாக இருக்கும் நான்கு விஷயங்கள் என்ன?

நான்கு விஷயங்கள் கால அளவுக்கு உட்படாமல், காலத்தால் கணிக்க முடியாமல், அனாதியாக முடிவே இல்லாமல் இருந்து கொண்டே இருக்கிறது.
அது என்ன?



1. 'உலகம் என்ற ப்ரக்ருதி' அனாதி காலமாக இருக்கிறது.
2. 'ஆத்மா' (நம் உயிர்) அனாதி காலமாக இருக்கிறது.
3. 'பெருமாள்' அனாதி காலமாக இருக்கிறார்.
4. 'வேதம்' அனாதி காலமாக இருக்கிறது.
அனாதி காலமாக இருக்கும் இந்த நான்குக்கும், பிறப்பும் தெரியவில்லை, இறப்பும்/அழிவும் தெரியவில்லை.
ஆனால் இந்த நான்குக்கும் ஆவிற்பாவம் உண்டு.

ஆவிற்பாவம் என்றால், தோற்றம் என்று அர்த்தம் கொள்ளலாம்.

பிறப்பும், தோற்றமும் ஒரே அர்த்தம் இல்லை.
அதே போல,
இறப்பும், மறைவும் ஒரே சொல் அல்ல.

பிறப்புக்கு முன் இறப்பு வராது.
இறப்புக்கு பின், பிறப்பு வராது.

ஆனால்,
தோற்றத்துக்கு முன், மறைவு இருக்க முடியும்.
மறைவுக்கு பின், தோற்றம் இருக்க முடியும்.

பிறப்புக்கும், இறப்புக்கும் உள்ள பொருள்:
ஒரு லைட் பல்ப் உருவாக்கும் (பிறப்பு) முன், லைட் பல்ப் இருந்து இருக்க வாய்ப்பில்லை.
அது போல,
ஒரு லைட் பல்ப் உடைந்த பின் (இறப்பு), அதே லைட் பல்ப் மீண்டும் உருவாக வாய்ப்பில்லை.
நம் உடல், இந்த லைட் பல்ப் போன்றது.
உடலுக்கு பிறப்பு உண்டு. இறப்பு உண்டு. இறந்த பின், மீண்டும் அதே உடல் பிறக்காது.






தோற்றத்துக்கும், மறைவுக்கும் உள்ள பொருள்:
ஒரு லைட் பல்பில் உருவாகும் வெளிச்சத்துக்கு(தோற்றம்) முன், வெளிச்சம் இல்லாமல் அணைந்து (மறைவு) இருக்க முடியும்.
அது போல,
ஒரு லைட் பல்ப் அணைந்து இருந்த (மறைவு) சமயத்துக்கு முன், வெளிச்சமும் கொடுத்து இருக்க முடியும்.
நம் உயிர் என்ற ஆத்மா, இந்த வெளிச்சம் போன்றது.
இது உடலில் புகுந்து இருக்கும் போது தோற்றம் அளிக்கிறது. உடலை விட்டு வெளியே செல்லும் போது, இல்லாதது போல மறைந்து விடுகிறது. ஆனால் மீண்டும் வேறொரு உடலில் புகுந்து தன்னை வெளிப்படுத்துகிறது.

ஆத்மாவை புரிந்து கொள்ளாதவர்கள், "உடலே நான்" என்று சொல்லிக்கொள்ளும் மடையர்கள், ஒருவனுடைய ஆத்மா உடலை விட்டு வெளியேறிய பின், அவனே 'இறந்து விட்டான்/மரித்து விட்டான்' என்று சொல்லிக்கொள்வர்.

'ஆத்மா ஒன்று உள்ளே இருப்பதால் தான் இந்த உடம்பு இதுநாள் வரை வேலை செய்தது' என்று உணர்ந்திருந்த ஹிந்துக்கள், பொதுவாகவே, உடலை விட்டு பிரிந்த ஆத்மாவை, "இறந்து விட்டார், மரித்து விட்டார்" என்று மடத்தனமாக சொல்லாமல், 'ஆத்மா மறைந்து விட்டது, இறைவனடி சேர்ந்தார். ஆத்மா வைகுண்டம் அடைந்தது, சிவபதம் அடைந்தது' என்று உண்மை அறிந்து சொல்லும் பழக்கம் கொண்டிருந்தனர். உண்மை அறிவு கொண்டிருக்கும் நம் ஹிந்துக்கள்.

1. அனாதி காலமாக உள்ள உலகம், மறைக்கப்பட்டு, மீண்டும் ஆவிர்பவிக்கும் (தோற்றம் அளிக்கும்) போது, அதற்கு "ஸ்ருஷ்டி" என்று பெயர்.

2. அனாதி காலமாக உள்ள நாம் (ஜீவ ஆத்மா / உயிர்), ஒரு உடலுக்குள் புகுந்து, ஆவிர்பவிக்கும் (தோற்றம் அளிக்கும்) போது, அதற்கு "ஜன்மம்" என்று பெயர்.

3.  அனாதி காலமாக உள்ள பெருமாள் (பரம் ஆத்மா), ஒரு உடலுக்குள் புகுந்து, ஆவிர்பவிக்கும் (தோற்றம் அளிக்கும்) போது, அதற்கு "அவதாரம்" என்று பெயர்.

4. அனாதி காலமாக உள்ள வேதம் (பரமாத்மாவின் அறிவு), ஒரு ரிஷியின் காதில் புகுந்து, ஆவிர்பவிக்கும் (கேட்கப்படும்) போது, அதற்கு "ஸ்ருதி" என்று பெயர்.
காதில் கேட்ட வேதத்தை, வாயால் ஆவிர்பவிக்கும் (சொல்லாக வெளிப்படும்) போது, அதற்கு "ஆம்நாயம்" என்று பெயர்.
வாயால் சொன்னதை, காலப்போக்கில் கேட்டது ஒன்று, சொல்வது ஒன்று என்று ஆகி விடாமல், கேட்ட அதே வேத சொற்களை ஒரு காவல்காரனை போல காத்து, பரம்பரை பரம்பரையாக வேத சொற்கள் மாறிவிடாமல், விட்டுப்போகாமல் எடுத்து செல்வதற்கு, "சந்தஸ்" என்று பெயர்.

ஹிந்துக்கள் கொண்டிருந்த இந்த அடிப்படை அறிவு கூட இல்லாத பிற பொய் மதங்களில், நம்பிக்கைகளில், ஹிந்துக்கள் வீழ்வதே அவமானம்.
ஹிந்துவாக பிறந்து, பின் மதம் மாறுபவர்கள் அவமானப்படவேண்டும்.

ஆராய்ச்சியின்றி, காரணமின்றி எதுவும் செய்யாத ஹிந்துக்களின் பழக்கம், பேச்சு எல்லாம் உயர்ந்தவை.

ஹிந்துக்களாக பிறந்ததே புண்ணியம்.
வேற்று மதங்கள் கூட, மத மாற்றம் என்ற போர்வையில்,
*ஹிந்துக்களின் காவி உடை அணிந்து பாத யாத்திரை செல்கின்றனர்.
*வெள்ளை உடை அணிந்து தான் தன் கோவிலில் ஆராதனை செய்கின்றனர்.
*சமஸ்கரித மொழியை வெட்கமே இல்லாமல் பயன்படுத்துகின்றனர்.
*தமிழை கொலை செய்கின்றனர்.
*ஹிந்துக்களின் தெய்வீக கர்நாடக இசையை திருட முயற்சிக்கின்றனர்.
*வெட்கமே இல்லாமல் கொலு வைக்கின்றனர்.
*தேர் இழுக்கின்றனர்.
*கோவில் ஸ்தூபம் இருப்பதை பார்த்து, மானம் இல்லாமல் தாங்களும் ஸ்தூபம் வைக்கின்றனர்.
*சுய சிந்தனை இல்லாமல், நம்மிடம் காபி அடித்து, வெட்கமில்லாமல், ஹிந்துக்களை மதம் மாற்றுகின்றனர்.
*மனு என்ற அரசன் முதல் மனிதன் என்று சொன்னதையும் காப்பி அடித்து "Man" என்றனர்.
*நவ க்ரஹங்கள் என்று சொன்ன என்றோ சொல்லி வைத்ததை வைத்து "9 planets" உண்டு என்கின்றனர்.
*செவ்வாய் கிரஹம் சிவப்பு என்று அறிந்து, நவ க்ரஹத்தில் செவ்வாய் தேவதைக்கு இடுப்பில் சிவப்பு துணி கட்டுவதை அடிப்படையாக கொண்டு, "Mars is Red planet" என்றனர்.



*பஜனை செய்வதை பார்த்து, காப்பி அடிக்கிறோம் பேர்வழி என்று பைத்தியம் வராத குறையாக ஆடுகின்றனர்.
*நான்கு மறை வேதம் என்ற சப்த ப்ரம்மத்தின் பெயரை ஒரே ஒரு புத்தகம் எழுதி அதை வெட்கமே இல்லாமல் இதுவும் "வேதம்" என்று ஹிந்துக்களின் வேதம் என்ற பெயரை திருடுகின்றனர்.
*திருட்டு செயலே பழக்கம் ஆகி போனதால், திருட்டு புத்தியுடன், திருட்டு தனமாக, புரியாத ஹிந்துக்களை மதம் மாற்றுக்கின்றனர்.
*இஸ்லாமியன் திருடனை உதைப்பான் என்று இன்று வரை நெருங்க பயப்படுகின்றனர்.
ஹிந்துக்கள் திருடனை அடிக்க வேண்டாம், நம் வீட்டில் உள்ள பொருளை திருடி, நமக்கே காட்டும் திருடன் இவன் என்று தெரிந்து கொண்டாலே போதும்.
*கிருஷ்ணன் மாடு மேய்த்தான், என்றால், பெயரையும் ஏறத்தாழ அதையும் காப்பி செய்து, மாட்டுக்கு பதில் ஆடு மேய்த்தான் என்றனர்.
*உலகம் உருண்டை என்று வராஹ அவதாரத்திலேயே சொன்னதை மறுக்க நினைத்து, கடைசியில் உலகம் உருண்டை தான் என்று அறிவியல் சொல்ல, தன்னுடைய ஒரே கொள்கையில் மரண அடி வாங்கினர்.

இப்படி ஹிந்துக்களை, ஹிந்துக்களின் சின்னங்களை, ஹிந்துக்களின் தத்துவங்களை திருடி பிழைப்பு நடத்தும் பொய் மதத்தில், ஹிந்துவாக பிறந்தவன், இருப்பவன் மாறுவதே அவமானம். மாறியவன் ஹிந்துவாக மாறுவதே புத்திசாலித்தனம்.

இப்படி தறிகெட்டு காசுக்காகவோ, நம் krishணனை கிறிஸ்ஆக பெயர் மாற்றி இந்திய மண்ணிலேயே, ஹிந்துக்களை ஏமாற்றி பிழைப்பு நடத்தும் திருடர்களிடம் இருந்து, சுய புத்தியுடன் ஹிந்துக்களாக மீண்டும் திரும்புவதே சிறந்தது.



காப்பி அடித்து பாஸாக துடிக்கும் பொய் மதங்களில் ஹிந்துக்கள் வீழாமல் இருக்க வேண்டும்.
இதற்கு ஒரே வழி.. ஹிந்துக்கள் தன் மதத்தை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். ஹிந்துக்களுக்கு பகிர வேண்டும்.

வாழ்க ஹிந்துக்கள். வாழ்க நாம்.

 நன்றி: எந்தரோ மஹாநுபாபு(...லு) அந்தரிகி வந்தநமு (Salutations to all those great men in this world)