Followers

Search Here...

Showing posts with label ராமர். Show all posts
Showing posts with label ராமர். Show all posts

Wednesday, 12 May 2021

குல தெய்வமான ரங்கநாதரை வழிபட்ட ராமபிரான்... தெரிந்து கொள்வோம்.. வால்மீகி ராமாயணம்

குல தெய்வமான ரங்கநாதரை வழிபட்ட ராமபிரான்

गते पुरोहिते रामः 

स्नातो नियतमानसः |

सह पत्न्या विशालाक्ष्या 

नारायणमुपागमत् ||

- वाल्मीकि रामायण

கதே புரோஹிதே ராம:

ஸ்நாதோ நியத மானஸ: |

சஹ பத்ன்யா விசாலாக்ஷ்யா

நாராயணம் உபாகமத் ||

- வால்மீகி ராமாயணம்


நாளை பட்டாபிஷேகத்துக்கு தயாராக இருக்க, அன்றைய இரவு விரதத்தில் இருந்து தர்ப்பைபுல் படுக்குமாறு சொல்லி விட்டு புரோஹிதரான வசிஷ்டர் சென்றார். ராமபிரான் ஸ்நானம் செய்து விட்டு, விசாலமான கண்களை உடைய சீதா தேவியுடன் ஒருநிலைப்பாடுடன் தன் குலதெய்வமான நாராயணனை தியானித்தார்.


After Vasistha left, Rama took bath and meditated on Lord Narayana with undistracted mind along with his wide-eyed wife, Seetha.


प्रगृह्य शिरसा पात्रं

हविषो विधिवत्तदा |

महते दैवतायाज्यं

जुहाव ज्वलितानले ||

- वाल्मीकि रामायण


ப்ரக்ருஹ்ய சிரஸா பாத்ரம்

ஹவிஷோ விதிவத் ததா |

மஹதே தைவதா யாஜ்யம்

ஜூஹாவ ஜ்வலிதானலே ||

- வால்மீகி ராமாயணம்


பிறகு, ஹோமம் வளர்த்து, யாக பாத்திரத்தில் பசும் நெய்யை தலைக்கு மேல் தூக்கி, அதை நாராயணனுக்கு காட்டி சங்கல்பித்து, யாக அக்னியில் ஆஹுதி செய்தார்.


Taking the vessel with clarified butter on his head as per scriptures, he offered to Lord Vishnu the clarified butter, by dropping it into the blazing fire.



शेषं च हविषस्तस्य

 प्राश्याशास्यात्मनः प्रियम् |

ध्यायन्नारायणं देवं

 स्वास्तीर्णे कुशसंस्तरे ||

वाग्यतः सह वैदेह्या

 भूत्वा नियतमानसः |

श्रीमत्यायतने विष्णोः

 शिश्ये नरवरात्मजः ||

- वाल्मीकि रामायण


சேஷம் ச ஹவிஷ: தஸ்ய

ப்ராஸ்ய ஆசாஸ்ய ஆத்மன: ப்ரியம் |

த்யாயன் நாராயணம் தேவம்

ஸ்வாஸ்தீர்னே குச சம்ஸ்தரே ||

வாக்யத: சஹ வைதேஹ்யா

பூத்வா நியத மானஸ: |

ஸ்ரீமத்யாயதனே விஷ்ணோ:

சிஷ்யே நரவர ஆத்மஜ: ||

- வால்மீகி ராமாயணம்


பக்தியுடன் நாராயணனுக்கு ஆஹுதி கொடுத்த பிறகு, மிச்சமிருந்த ஹவிஸை பிரசாதமாக ராமபிரானும், சீதாதேவியும் எடுத்து கொண்டனர். பிறகு, அந்த விஷ்ணுவின் சன்னதியிலேயே தர்ப்பை புல் பரப்பி, அதில் சீதா தேவியும், ராமபிரானும் படுத்துக்கொண்டனர்.


Rama ate the remainder of clarified butter after finishing the sacrifice, which he performed for his own good, silently meditated on Lord Narayana with controlled mind and slept along with Seetha on a properly laid bed of Kusa grass in a splendid temple of Lord Vishnu.

एकयामावशिष्टायां 

रात्र्यां प्रतिविबुध्य सः |

अलञ्कारविधिं कृत्स्नं

कारयामास वेश्मनः ||

- वाल्मीकि रामायण


ஏகயாம அவசிஷ்டாயாம்

ராத்ரயாம் ப்ரதி-விபூத்ய ச: |

அலங்கார விதிம் க்ருத்ஸ்னம்

காரயாமாச வேஸ்மன: ||

- வால்மீகி ராமாயணம்


விடிவதற்கு ஒரு ஜாமம் முன்னதாகவே (சுமார் 1:12AM) ராமபிரான் எழுந்து விட்டார். அயோத்யா மாளிகையில் செய்ய வேண்டிய அலங்கார காரியங்களை முடிக்க ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தார்.


Rama woke up three hours before dawn and caused to complete the entire decoration of the house.


तत्र शृण्वन् सुखा वाचः 

सूतमागधवन्दिनाम् |

पूर्वां सन्ध्यामुपासीनो 

जजाप यतमानसः ||

- वाल्मीकि रामायण


தத்ர ஸ்ருண்வன் சுகா வாச:

சூதமாகத வந்தினாம் |

பூர்வாம் சந்த்யாம் உபாஸீனோ

ஜஜாப யத மானஸ: ||

- வால்மீகி ராமாயணம்


ப்ரம்ம முகூர்தத்தில், சந்தியா காலம் நெருங்கிய போது, வேதியர்கள் ஓதும் சுகமான வேத சந்தங்கள் காதில் விழுந்தது. 

ராமபிரானும், சூரியன் உதிக்கும் சமயத்தில், ஒருநிலைப்பாடுடன் காயத்ரீ மந்திரத்தை ஜபித்து கொண்டிருந்தார்.


Listening to the pleasing verses of professional reciters, he worshipped the early sunrise and meditated on Gayatri* with an undistracted mind.


तुष्टाव प्रणतश्चैव

शिरसा मधुसूदनम् |

विमलक्षौमसंवीतो

वाचयामास च द्विजान् ||

- वाल्मीकि रामायण


துஷ்டாவ ப்ரணதஸ்ச ஏவ

சிரஸா மதுசூதனம் |

விமலஷௌம சம்விதோ

வாசயாமாச ச த்விஜாம் ||

- வால்மீகி ராமாயணம்


ராமபிரான் தலைக்கு மேல் கை உயர்த்தி விஷ்ணுவை வழிபட்டார். தூய பட்டு ஆடை அணிந்து இருந்தார் ராமபிரான். கோவிலில் பிராமணர்கள் வேத பாராயணம் செய்தனர்.


He praised Lord Vishnu by bowing his head before Him. By wearing pure silk clothes, he got valedictory text recited by Brahmans.

Monday, 3 May 2021

சிவ தனுஸை எத்தனை பேர் இழுத்து வந்தனர்? தெரிந்து கொள்வோம். வால்மீகி ராமாயணம்

சிவதனுஸை எத்தனை பேர் இழுத்து வந்தனர்?

"நிமி சக்கரவர்த்தியின் 6வது தலைமுறையில் வந்த தேவவ்ரதனிடம் சிவதனுஷை சாக்ஷாத் சிவபெருமான் கொடுத்து வைத்தார்.

நான் யாகசாலையில் உழுத போது, பூமியிலிருந்து தானாக கிடைத்த பெண் சீதை.

அவளை என் பெண்ணாக பாவித்து வளர்த்து வருகிறேன்.




அவள் வளர்ந்து மணம் செய்து கொள்ள வேண்டிய பருவம் வந்தவுடனேயே, அவளை மணக்க அரசர்கள் அனைவரும் மிதிலையை முற்றுகை இட்டு விட்டனர்.

'எனக்கு வரதக்ஷிணையாக யார் இந்த சிவதனுஸை எடுத்து நாண் ஏற்றுகிறார்களோ! அவர்களே சீதையை மணம் செய்து தகுதி படைத்தவர்" என்று க்ஷத்ரியர்களான இவர்களுக்கு சொல்ல, அனைவரும் முயற்சி செய்தனர்.

சிவதனுஸை தூக்க முடியாமல், பலர் அசைக்க கூட முடியாமல் தோற்றனர்.

அவமானம் அடைந்த இவர்கள், மிதிலையை முற்றுகை இட்டனர். ஒரு வருடம் இவர்களால் மிதிலாபுரி அவதிப்பட்டது.

என்னுடைய பிரார்த்தனையை ஏற்று, தேவகணங்கள் மிதிலையை நாற்புறமும் சுற்றி கொண்டு, அனைவரையும் அடக்கி விரட்டினர்.

அந்த தனுஸை நான் உங்களுக்கும், கூடவே நின்று கொண்டிருக்கும் ராம, லக்ஷ்மணருக்கும் காட்டுகிறேன்"

என்று சொல்லி, தன் அமைச்சர்களிடம் எடுத்து வர சொன்னார் ஜனகர்.


ஜனகேன சமாதிஷ்டா:

ஸசிவா: ப்ராவிஸன் புரம் |

தத் தனு: புரத: க்ருத்வா

நிர்ஜக்மு அமிதொளஜச: ||

ந்ருனாம் சதானி பஞ்சாஸத்

வ்யாயதானாம் மஹாத்மநாம் |

மஞ்சுஷாம் அஷ்ட சக்ராம்

தாம் சமுஹு: தே கதன்சன ||

- வால்மீகி ராமாயணம்


जनकेन समादिष्ठाः सचिवाः प्राविशन् पुरम् |

तद् धनुः पुरतः कृत्वा निर्जग्मु अमितौजसः ||

नृणां शतानि पंचाशद् व्यायतानां महात्मनाम् |

मंजूषाम् अष्ट चक्रां तां समूहुस्ते कथंचन ||

- वाल्मीकि रामायण

ஜனகரின் ஆணைக்கு இணங்கி, அவருடைய அமைச்சர்கள் சென்று, சிவதனுஸை எட்டு சக்கரங்கள் பூட்டிய பெரிய தேரில் வைத்து, அரச மஹாமண்டபத்துக்குள் வந்தனர்.

பலம் பொருந்திய உயரமான ஆண்கள் 5000 பேர் சேர்ந்து கொண்டு, சிரமப்பட்டு சிவதனுஸை இழுத்து கொண்டு வந்தனர்.

As clearly instructed by Janaka those high souled ministers have gone out and entered the palace-chambers, and they came out with an eight-wheeled coffer in which the bow of Shiva is ensconced, and those ministers got it tugged by five thousand (शतानि पंचाशद्) tall men of illimitable energy who somehow tugged it very difficultly, and thus the ministers have re-entered there keeping that bow afore of them





சிவ தனுஸை காண்பித்த ஜனகர், 

"இதோ இந்த சிவதனுஸை மனிதர்கள் மட்டுமல்ல, தேவர்கள், அசுரர்கள், கந்தர்வர்கள், மஹோரகர்கள், யக்ஷர்கள் போன்ற பலம் பொருந்தியவர்கள் கூட முயற்சி செய்தும், அசைக்க கூட முடியாமல் திரும்பினர்." என்று காண்பித்தார்.


விஸ்வாமித்திரர், 16 வயது கூட நிரம்பாத ராமபிரானை பார்த்து, "அந்த தனுஸை சென்று பார்" என்றார்.


அருகில் சென்று பார்த்த ராமர், விஸ்வாமித்ரரிடம் "ப்ரம்ம ரிஷி! நான் இந்த தனுஸை தொட்டு பார்க்கலாமா? இந்த அழகான தனுஸை எடுத்து நாண் ஏற்றி பார்க்க ஆசைப்படுகிறேன்" என்றார்.

பாடம் இத்யேவ தம் ராஜா

முனி: ச சம பாஷத |

லீலயா ச தனுர் மத்யே

ஜக்ராஹ வசனான் முனே ||

- வால்மீகி ராமாயணம்


बाढमित्येव तं राजा मुनिश्च समभाषत |

लीलया स धनुर्मध्ये जग्राह वचनान्मुनेः ||

- वाल्मीकि रामायण

ஜனகரும், விச்வாமித்ரரும் சம்மதம் தெரிவிக்க, சிவதனுஸின் நடுவே கை வைத்து தூக்கி, விளையாட்டாக எடுத்து விட்டார்.

ஆயிரக்கணக்கானவர்கள் இந்த காட்சியை பார்க்க, ராமர் சர்வ சாதாரணமாக சிவதனுஸை நாண் ஏற்ற ஆரம்பித்தார்.

நாண் ஏற்றுவதற்கு ஒரு முடிச்சை இழுத்து மேலே கட்ட ராமர் முயற்சிக்க, சிவதனுஸ் முறிந்து விழுந்தது.

மலை சுக்கு நூறாக வெடிக்கும் போது ஏற்படும் சத்தத்தை, முறிந்த சிவதனுஸ் ஏற்படுத்தியது.


விஸ்வாமித்திரர், ஜனகர், ராம லக்ஷ்மணர்களை தவிர, நொடி பொழுதில் நடந்து விட்ட இந்த நிகழ்வை பார்த்த அனைவரும், திகைத்து நின்றனர்.

भगवन् दृष्टवीर्यो मे रामो दशरथात्मजः |

अत्यद्भुतमचिन्त्यं चातर्कितमिदं मया ||

- वाल्मीकि रामायण


பகவன் த்ருஷ்ட வீர்யோ

மே ராமோ தசரதாத்மஜ: |

அதி அத்புதம் அசிந்த்யம்

ச அதர்கிதம் இதம் மயா ||

- வால்மீகி ராமாயணம்

ஜனகர் விஸ்வாமித்ரரை பார்த்து, "ப்ரம்ம ரிஷி!  தசரத மைந்தன் ராமரின் வீரம் இன்று கண்கூடாக கண்டேன்.

ஆச்சரியத்துக்கும் ஆச்சர்யம் இது.  அனுமானம் செய்து பார்க்க முடியாத நிகழ்வு. இது நடக்கவே நடக்காது என்றே நான் நினைத்திருந்தேன்.

என் மகள் சீதை, தசரத மைந்தன் ராமனை கணவனாக அடைவதால், ஜனக குலம் பெரும் பெருமை அடைய போகிறது என்று அறிகிறேன்.."

என்று கூறி ஆனந்தப்பட்டார் ஜனக மஹாராஜன்.

Sunday, 25 April 2021

முருக பக்தி செய்பவர்களுக்கு என்ன கிடைக்கும்? விஸ்வாமித்திரர் ராமபிரானிடம் சொல்கிறார். தெரிந்து கொள்வோமே வால்மீகி ராமாயணம்

'முருக பக்தி' செய்பவர்களுக்கு என்ன கிடைக்கும்? - விஸ்வாமித்திரர் ராமபிரானிடம் சொல்கிறார்.

இக்ஷ்வாகு குலத்தில் தோன்றிய 'பகீரதன்' தேவலோகத்தில் இருந்த கங்கையை பூமிக்கு கொண்டு வந்தார்.

பகீரதனின் மகன் காகுத்ஸன்.

இந்த குலத்தில் பரவாசுதேவன் நாராயணனே ராமபிரானாக அவதரித்தார்.

தேவர்களுக்கு சேனாதிபதியாக, சிவபெருமான் அம்சத்துடன் கூடிய ஒரு குழந்தை அவதரிக்க செய்ய, கங்கையிடம் தேவர்கள் பிரார்தித்தனர். 

அக்னி தேவனே சிவபெருமானின் அம்சத்தை கங்கையிடம் செலுத்த, கங்காதேவி கர்ப்பம் தரித்தாள்.

தெய்வாம்சம் கொண்ட இந்த புத்ரன் (ஸ்கந்தன்) கங்கையில் குழந்தையாக தோன்றினான்.




இந்த குழந்தையை, 6 கார்த்திகை நக்ஷத்திர தேவதைகள் தாயாக இருந்து வளர்க்க ஆசைப்பட்டனர். 

உடனேயே, அவர்கள் மார்பில் பால் ஊறியது. 

6 தலைகளால் (ஆறுமுகம்) ஆறு தேவதைகள் கொடுத்த பாலை குடித்தது அந்த குழந்தை.

கார்த்திகையின் பிள்ளையாக இருந்த இந்த பிள்ளை (கார்த்திகேயன்), மறுநாளே வாலிபனாக வளர்ந்து, தேவர்களுக்கு படை தளபதியாக ஆகி விட்டார்.

भक्तश्च यः कार्तिकेये 

काकुत्स्थ भुवि मानवः |

आयुष्मान् पुत्र पौत्रश्च 

स्कन्दसा लोक्यतां व्रजेत् || 

- वाल्मीकि रामायण


பக்தஸ்ச ய: கார்த்திகேய

காகுத்ஸ்த புவி மானவ: |

ஆயுஷமான் புத்ர பௌத்ரஸ்ச

ஸ்கந்தஸா லோக்யதாம் வ்ரஜேத் ||

- வால்மீகி ராமாயணம்




ராமபிரானை பார்த்து, விஸ்வாமித்திரர்,

"காகுத்ஸன் வம்சத்தில் உதித்தவனே! கார்த்திகேயனிடம் யார் பக்தி செய்கிறார்களோ! அவர்களுக்கு நீண்ட ஆயுளும், அவர் பிள்ளைக்கும், கொள்ளுப்பேரனுக்கும் சேர்த்து நீண்ட ஆயுளும் கிடைக்கும். உலக வாழ்வு முடிந்த பிறகு, இவர்கள் ஸ்கந்தன் வழி சென்று ஸ்கந்த லோகம் அடைவார்கள்."

என்று ராமபிரானிடம் சொன்னார்.


Viswamithra said

"Rama of Kakutstha! He who is a devotee of Kartikeyaa, he thrives with longevity, also with sons, grandsons on this humanly earth in his mortal life, and on its conclusion he becomes one with Skanda on journeying to Skanda's abode"

Friday, 13 October 2017

அன்புக்கும், பாசத்துக்கும் என்ன வித்தியாசம்?

அன்பை விட பாசம் தாழ்ந்தது.

அன்புக்கும், பாசத்துக்கும் என்ன  வித்தியாசம்?


ஸ்ரீராமர், தன் தந்தைக்கு செய்து கொடுத்த சத்தியத்துக்கு கட்டுப்பட்டு, 14 வருடம் காட்டுக்கு சென்றார்.

தன்னால் தான், இந்த நிலை ராமருக்கு வந்தது என்று மனம் வருந்தி, தம்பி பரதன் அழுதார்.

காட்டுக்கு சென்று, ராமரை அயோத்தி வந்து நாட்டை ஆளுமாறு கேட்டு கொண்டார். பிடிவாதம் செய்தார். தனக்கு இந்த பழி வேண்டாம் என்று பாவத்திற்கு அஞ்சினார்.
வேண்டுமென்றால் ராமர் நாட்டை ஆளும் போது, தான் 14 வருடம் காட்டில் வாழவும் தயாராக இருந்தார். வராவிட்டால் உயிர் தியாகம் செய்வேன் என்று பிடிவாதமும் செய்தார்.

கடைசியாக ஜனகர் அங்கு வந்து, பிரேமை (அன்பு) என்பதன் உண்மையான அர்த்தம் என்ன? என்று விளக்கி,
ப்ரேமைக்கும், பாசத்திற்கும் உள்ள வித்தியாசத்தை பரதனுக்கு உணர்த்தி,
அவருக்கு பிரேமையின் உண்மையை புரிய வைத்தார்.

பிரேமையை விட பாசம் தாழ்ந்தது என்றும் உணர வைத்தார்.

ஜனகர் : பரதா, நீ ராமரிடம் வைத்துள்ள அன்புக்காக எதை தியாகம் செய்ய துணிவாய்?

பரதன் : மிகவும் உயர்ந்தது உயிர். என் உயிரையே கூட ராமருக்காக தியாகம் செய்வேன்.

ஜனகர் : உயிரை தியாகம் செய்வது எளிது. ஆனால் உயிரை இழக்காமல், அவருக்காக வாழ்வதே நிஜமான அன்பு (பிரேமை).
பரதா, ராமருக்காக நீ செய்யும் தியாகம் மிக உயர்ந்தது.
ஆனால், இப்போது நீ செய்யும் இந்த தியாகத்தை விட, நீ அன்பு செய்யும் ராமருக்கு உன் தியாகம் மகிழ்ச்சி ஏற்படுத்துமா? என்று யோசித்துப் பார்.

அவர் விருப்பம் இல்லாமல் நீ செய்யும் எந்த செயலும், தியாகம் ஆகாது. உண்மையான அன்பு இல்லை.

உண்மையான அன்பு என்பது, நீ அன்பு வைத்து இருப்பவரின் விருப்பப்படி வாழ தூண்டும்.
நீ இப்பொழுது செய்யும் தியாகம் பாசத்தினால் வந்தது.
பாசத்தில் சுய நலம் மட்டுமே இருக்கும்.

அன்பில் (ப்ரேமையில்) மற்றவருக்காக வாழ தோன்றும்.




நீ உண்மையான அன்பு ராமரிடம் கொண்டுள்ளதால், ராமரிடமே சென்று 'நான் என்ன செய்ய வேண்டும்?' என்று கேள்.
அவர் விருப்பம் என்னவோ அப்படியே செய்.
அவர் எதை விரும்பவில்லையோ அதை செய்யாதே !
இது தான் நீ ராமருக்கு காட்டும் உண்மையான அன்பு.
என்று சொல்லி முடித்தார் சீதையின் தந்தை ஜனகர்.

அது வரை தான், 'தன் தியாகம்' என்று பாச வலையில் இருந்த பரதர், அன்பின் உயர்வை உணர்ந்தார்.
ராமர் என்ன சொல்கிறாரோ, அதை பின் தொடர்வதே உண்மையான அன்பு என்று உணர்ந்து, ராமரின் சொல் படி 14 ஆண்டு அயோத்தியை ஆள ஒப்புக் கொண்டு, உயிர் தியாகம் செய்வேன் என்ற பிடிவாதத்தை கைவிட்டார்.
பாசத்திலிருந்து விடுபட்டு, பரதர் அன்புக்கு அடிமையானார்.
ராமர் விருப்பப்படி வாழ்ந்தார்.
ராமர் பரதனை கண்டு மகிழ்ச்சி அடைந்தார்.

நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்:
யாரிடத்திலும் அன்பு செய்ய வேண்டும்.
பாசம் கூடாது.

பாசம், சுயநலமாக செயல்கள் செய்ய தூண்டும்.
அன்பு, தான் துயரப்பட்டாலும், மற்றவனுக்காக உழைக்க தூண்டும்.

சுயநலம் இல்லாதது அன்பு.

sandhyavandanam Evening - Yajur - Hear and understand meaning of each sloka 

sandhyavandanam Afternoon - Yajur - Hear and understand meaning of each sloka 




sandhyavandanam Morning - Yajur - Hear and understand meaning of each sloka