Followers

Search Here...

Showing posts with label திருக்கண்ணமங்கை. Show all posts
Showing posts with label திருக்கண்ணமங்கை. Show all posts

Monday 2 March 2020

பாசுரம் (அர்த்தம்) - ஏற்றினை இமயத்துள் எம் ஈசனை - திருமங்கையாழ்வார் திருக்கண்ணமங்கை பெருமாளுடன், திருநின்றவூர் பெருமாளை சேர்த்து பாடிய அழகான பாசுரம். தமிழன் அர்த்தம் தெரிந்து கொள்ள வேண்டாமா?

திருமங்கை ஆழ்வார், திருக்கண்ணமங்கையில் உள்ள பக்தவத்சல பெருமாளை மங்களாசாசனம் செய்யும் போது,
அதே பெயரில் திருநின்றவூரில் இருக்கும் பக்தஜீவன பெருமாளின் நினைவு வர, அவரையும் சேர்த்து இங்கு மங்களாசாசனம் செய்தார்.




இரண்டு திவ்ய தேசங்களை சேர்த்து கொண்டு மங்களாசாசனம் செய்கிறார்.

பாசுரம்:
ஏற்றினை இமயத்துள் எம் ஈசனை!
இம்மையை மறுமைக்கு மருந்தினை!
ஆற்றலை அண்டத் அப்புறம் உய்த்திடும் ஐயனை!
கையில் ஆழி ஒன்று ஏந்திய கூற்றினை!
குரு மாமணிக் குன்றினை!
நின்றவூர் நின்ற நித்திலத் தொத்தினை!
காற்றினை!
புனலை!
சென்று நாடிக் கண்ணமங்கையுள் 
கண்டு கொண்டேனே!
- (பெரிய திருமொழி)
என்று திருக்கண்ணமங்கையில் உள்ள பக்தவத்சல பெருமாளை பார்க்கும் போது பாடுகிறார் திருமங்கை ஆழ்வார்.




திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருக்கண்ணமங்கையில் எழுந்தருளி இருக்கும் பக்தவத்சல பெருமாளை பார்க்கும் போது, திருநின்றவூரில் எழுந்தருளி இருக்கும் பக்தஜீவனன் என்ற பெயருடைய பெருமாள் ஆழ்வாருக்கு வலுவில் வந்து தரிசனம் தர,
'நின்றவூர் நின்ற நித்திலத் தொத்தினை'
என்று இந்த திவ்ய தேச பெருமாளை கொஞ்சி மங்களாசாசனம் செய்கிறார்.

பரமபதத்தில் (வைகுண்டம்) எம்பெருமான் எழுந்தருளி இருக்கிறார்.
க்ஷீராப்தியிலும் (பாற்கடல்) எம்பெருமான்  எழுந்தருளி இருக்கிறார்.
யாரும் எளிதில் போக முடியாத இமயமலையில் பதரிநாத் போன்ற திவ்ய தேசங்களிலும் எம்பெருமான் எழுந்தருளி இருக்கிறார்.
நம்மால் அத்தனை தூரம் வர முடியுமோ!! என்று கருணை கொண்டு, அதே எம்பெருமான், மஹாலக்ஷ்மி ஸ்திரமாக நிற்கும் திருநின்றவூருக்கு நமக்காக வந்து நிற்கிறாரே!!
என்று பகத்ஜீவனனாக இருக்கும் எம்பெருமானை கொஞ்சி மகிழ்கிறார், திருமங்கை ஆழ்வார்.
திருநின்றவூரில் நிற்கும் எம்பெருமான், 'ஒரு முத்து குவியல் போல' பேரழகுடன், குளிர்ந்த திருமேனியுடன் கண் எதிரே தரிசனம் தர, "குரு மாமணிக் குன்றினை" என்று கொஞ்சுகிறார்.




இங்கு "நித்தில தொத்தினை" என்று திருநின்றவூர் எம்பெருமானை என்று அழைக்கிறார்.
"நித்தில தொத்து" என்றால் "பவள கொத்து" என்று அர்த்தம்..
பவளத்திற்கு இயற்கையாகவே ஒரு குளிர்ச்சி உண்டு.
பவள மணியை, மாலையாக கழுத்தில் போட்டு கொண்டால், உடல் குளிர்ச்சியாகும்.

இங்கு, "பவள கொத்து" என்று திருநின்றவூர் எம்பெருமானையே சொல்லி கொஞ்சுகிறார் திருமங்கை ஆழ்வார்.

ஒரு முத்து குவியல் போல பேரழகுடன், குளிர்ந்த திருமேனியுடன் இருக்கும் திருநின்றவூர் பெருமாளை பார்த்ததுமே, 'பெருமாளையே ஒரு பவள மாலையாக ஆக்கிக்கொண்டு, தன் கழுத்தில் போட்டு கொண்டு விட வேண்டும்' என்று ஆசை உண்டாகி விட்டது ஆழ்வாருக்கு.

வெயிலில் வாடி, வியர்த்து போன ஒருவனுக்கு, தென்றல் காற்று வீசினால் எப்படி சுகமாக இருக்குமோ!  அது போல, உலகத்தில் ஏற்படும் பலவித சிரமங்களால் துக்கப்பட்டு துவண்டு போகும் நமக்கு, இவர் தரிசனமே குளிர்ந்த காற்று வீசுவது போல சுகத்தை தருகிறதே!! என்றதும் "காற்றினை" என்று கொஞ்சுகிறார்.

வெயிலில் வாடி, உடம்பில் தண்ணீர் வற்றி, உயிர் போய் விடும்!! இனி தாளாது!! என்று தாகத்தால் தவிக்கும் ஒருவனுக்கு, சுவையான நீர் கிடைத்தால் எத்தனை சுகம் அடைவானோ, அது போல, தாபத்தோடு வரும் பக்தனுக்கு, தாபத்தை போக்கும் புனல் (தண்ணீர்) போல திருநின்றவூர் எம்பெருமான் தரிசனம் தருகிறாரே!! என்றதும் "புனலை" என்று கொஞ்சுகிறார்.

திருக்கண்ணமங்கையில் பக்தவத்சல பெருமாளை மங்களாசாசனம் செய்யும் போது,
திருநின்றவூர் பக்தஜீவனன்  (பக்தவத்சல என்றும் சொல்கிறார்கள்) என்ற எம்பெருமான், வலிய இடையில் புகுந்து கொண்டு, திருமங்கை ஆழ்வாரிடம் தனக்கும் ஒரு மங்களாசாசனம் வாங்கி கொண்டு விட்டார்.


Saturday 16 February 2019

சரணாகதி செய்து விட்டால் மட்டும், பகவான் காப்பாற்றி விடுவாரா?... ஹிந்துக்கள் தெரிந்து கொள்ள வேண்டியது...

குருவே துணை

"பகவானை நாம் சரணம் அடைந்தால், பகவான் நம்மை நிச்சயம் காப்பாற்றுகிறார்".


திருக்கண்ணமங்கை ஆண்டான் என்ற ஒரு மகான் சேங்கனூர் என்ற ஊரில் பிறந்தார்.
பெரியவாச்சான் பிள்ளை, அவரது குரு நம்பிள்ளை
இதே ஊரில் தான் 4000 திவ்ய பிரபந்ததுக்கும் விளக்க உரை எழுதிய ரோகினி நக்ஷத்திரத்தில், அவதரித்த பெரியவாச்சான் பிள்ளை என்ற கிருஷ்ணசூரியும் தோன்றினார் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.

தமிழ்நாட்டில், கும்பகோணம் அருகில் உள்ளது "சேங்கனூர்" என்ற இந்த க்ஷேத்ரம்.

சேங்கனூர் அருகில் உள்ள திருக்கண்ணமங்கை கோவிலில் உள்ள பக்தவத்சல பெருமாளிடம் இவருக்கு இருந்த பக்தியின் காரணமாக திருக்கண்ணமங்கை ஆண்டான் எனறே பெயர் அமைந்தது.

கோவிலில் தானே, பூ கைங்கர்யம் செய்து கொண்டு, கோவிலை சுத்தப்படுத்தி கொண்டு, பகவானிடம் சரணாகதி செய்து, வாழ்ந்து வந்தார்.
ஒரு சமயம், "பகவான் சரணாகதி செய்பவர்களை காப்பாற்றுவார் என்று எப்படி நம்புவது?" என்ற சந்தேகத்துடன் இருந்த ஒருவர், திருக்கண்ணமங்கை ஆண்டானிடத்தில், அவர்கள் வந்து,
"சரணாகதி.. சரணாகதி.. என்று சொல்கிறீரே. 
நாம் சரணாகதி செய்து விட்டால் மட்டும் பெருமாள் காப்பாற்றி விடுவாரா?" 
என்று அவரிடம் சாஸ்திரத்தின் மேல் நம்பிக்கை இல்லாததால், விதண்டாவாதம் செய்தார்.


திருக்கண்ணமங்கை ஆண்டான், இவருக்கு சாஸ்திரத்தை கொண்டு பதில் சொல்லவில்லை. மௌனமாகவே உடகார்ந்து இருந்தார்.

'சாஸ்திரம் இப்படி சொல்லி இருக்கிறது' என்று சொன்னால், சாஸ்திரத்தை நம்ப இவர் தயாரில்லை.
இவரிடம், சாஸ்திரத்தை கொண்டு நிரூபிக்க முயற்சி செய்வது வீண்.

சாஸ்திரத்தை நம்பாத ஜனங்களிடம், சகஜமாக உலகத்தில் நடக்கும் விஷயங்களை காட்டி நிரூபிக்கலாம்.

'சாஸ்திரம் இப்படி சொல்லி இருக்கிறது' என்று சொல்லி புரியவைக்க முடியாத ஜனங்களுக்கு, ஹித உபதேசங்கள் செய்து ஆசாரியர்கள் நல்வழி படுத்திவிடுவார்கள்.

அந்த சமயம்,
எதிர் வீட்டில் ஒருவன் நாய் வளர்த்து கொண்டு இருந்தான்.
அன்று, அவனோடு அந்த நாய் தெருவோடு நடந்து கொண்டிருக்கும் போது,
அந்த தெருவிலேயே இருக்கும் இன்னொரு நாய், இதை பார்த்தவுடன், அங்கிருந்து வேகமாக ஓடி வந்து, இவனின் நாயை பார்த்து கோபத்துடன் "லொள் லொள்.." என்று ஹிம்சை பண்ண ஆரம்பித்தது.


யாரிடமோ பேசி கொண்டிருந்த அந்த வீட்டு நாயின் எஜமானன், தான் வளர்க்கும் நாய் ஹிம்சிக்கப்படுகிறது என்று பார்த்த அடுத்த நொடி, 'குபீர்' என்று பாய்ந்து, தன் நாயை தாக்க வந்த அந்த நாயை கல்லால் அடித்து துரத்தி விட்டு, தன் சொந்த நாயை அணைத்து கொண்டு, தன் வீட்டுக்கு கூட்டி சென்றான்.
இந்த நிகழ்வை பார்த்து கொண்டிருந்த திருக்கண்ணமங்கை ஆண்டான், தன்னிடம் விதண்டாவாதம் செய்தவரை பார்த்து,
"இந்த எஜமானனுக்கு ஏன் இந்த நாயின் மேல் அபிமானம் ஏற்பட்டது?
இந்த எஜமானனும் நாயும் ஒரே ஜாதியா? ரத்த சம்பந்த உறவா?"
என்று கேட்க,




"இது இவன் சொந்த நாய். அதனால் அபிமானம் இவனுக்கு ஏற்பட்டது" என்றார்.

"சொந்த நாயாக இது ஆவதற்கு காரணம் என்ன?" என்று திருக்கண்ணமங்கை ஆண்டான் கேட்க,

"இந்த நாய் அவன் வீட்டோடு எப்பொழுதும் இருக்கிறது. 
அவன் கொடுக்கும் உணவை சாப்பிட்டு, அவன் காலையே சுற்றி சுற்றி வருகிறது. 

இந்த அன்பு, அந்த எஜமானனுக்கு ஜாதியில் இது நாயாக இருந்தாலும், தன் சொந்தம் என்று நினைக்க வைக்கிறது. இதை காப்பாற்ற வேண்டியது தன் பொறுப்பு என்று நினைக்கிறான்" என்றார்.

"தனக்கு பிரியமான இந்த நாய் மேலே, இன்னொரு நாய் வந்து ஹிம்சை செய்தால் அதை தான் விலக்கி, அணைத்து காப்பாற்றுவது ஒரு அல்ப மனிதனுக்கே ஸ்வபாவமாக இருக்குமென்றால்,
பக்தவத்சலனான திருக்கண்ணமங்கை எம்பெருமான் அப்படி செய்ய மாட்டாரா?
எம்பெருமானே கதி என்று அவர் அடியிலேயே கிடக்கும் அடியார்களை, அணைத்து கொள்ளாமல் இருந்து விடுவாரா?


அந்த தெரு நாய் போன்று, மோக்ஷத்திற்கு எதிரான பாதையில் திருப்பி, மீண்டும் உலக விஷயங்களில் திருப்ப நினைப்பவர்களை, தன் அடியார்களோடு சேரவிடாமல் விலக்கி, அணைத்து கொண்டு காப்பாற்ற மாட்டாரா, எம்பெருமான்?.
"சரணாகதி செய்தால், சத்தியமாக எஜமானன் காப்பாற்றுகிறான்" என்று உலக வாழ்க்கையிலேயே தெரியும் பொழுது,
கருணையே வடிவான எம்பெருமான், சரணாகதி செய்தவர்களை காப்பாற்றுவாரா என்று சந்தேகமும் ஒருவனுக்கு எழும்புமா?"

சரணாகதி செய்த அடியார்களுக்கு எம்பெருமானுக்கு கைங்கர்யம் செய்வதே லட்சியம்.

அந்த கைங்கர்யம் செய்து கொண்டிருப்பது மட்டுமே சரணாகதி செய்தவன், தன் எஜமானனான எம்பெருமானுக்கு செய்ய வேண்டியது"
என்று திருக்கண்ணமங்கை ஆண்டான் ஹித உபதேசமாக உலக விஷயத்தை வைத்தே விளக்கி சொல்ல,
சந்தேகம் தெளிந்து விடைபெற்றார் அந்த நபர்.

சரணாகதி செய்தவன் வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும்?

காலை 4 மணிக்கு எழுந்து, 6 மணிக்குள்,
பல் துலக்கி,
கை கால்களை அலம்பிக்கொண்டு,
விஷ்ணு சஹஸ்ரநாமம்,
கஜேந்திர மோக்ஷம்,
ருத்ர கீதம்,
ப்ராத ஸ்மரணம் ,
சுப்ரபாதம்,
ஆத்ம நிவேதனம்,
திருப்பள்ளி எழுச்சி,
திருப்பாவை
முதலியவைகளை சொல்லி,
ராமானுஜர், மாத்வர், ஆதிசங்கரர் போன்ற ஆசார்யர்களும்,
ஸ்ரீ கிருஷ்ண சைதன்யர் போன்ற அவதார புருஷர்களும்,
மேலும் பல மகான்களும் இயற்றிய ஸ்தோத்திரங்களை பாராயணம் செய்து கொண்டு,

காலை 6 மணி முதல், 8 மணிக்குள், 
ஸ்நானம், அனுஷ்டானம் செய்து,
ஸ்ரீமத் பாகவதமோ,
ஸ்ரீமத் ராமாயணமோ,
ஸ்ரீமத் பகவத் கீதையோ,
ஒரு வேளை, தேவர்களின் பாஷையான சம்ஸ்க்ரிதம் தெரியாதவர்கள் என்றால்,
4000 திவ்ய ப்ரபந்தமோ பாராயணம் செய்ய வேண்டும்.
பாராயணம் முடித்து விட்டு, பூஜை செய்ய வேண்டும்.

மாலை 6 மணியிலிருந்து 7 மணி வரை, தனிமையான இடத்தில் மௌனமாக அமர்ந்து கொண்டு பகவானின் மூர்த்தியை தியானம் செய்து கொண்டோ,
ஹரே ராமா சொல்லிக்கொண்டோ,
குருவிடம் உபதேசம் ஆகி இருந்தால், அவர் உபதேசம் செய்த பகவன் நாமாவை குருவின் திருவடியை தியானம் செய்து கொண்டே சொல்லிக்கொண்டோ, இருக்க வேண்டும்.


தினசரி குடும்ப காரியங்களுக்கு இடையில் ஒழிவு/நேரம் கிடைக்கும் போதும், விடுமுறை நாட்களிலும்
கிருஷ்ண சைதன்யர் சரித்திரமமோ,
ஸ்ரீ ராமகிருஷ்ணர் சரித்திரமோ,
பாரத மண்ணில் தோன்றிய மீரா, துளசிதாஸ், துக்காராம், ஏகநாதர், பத்ராசல ராமதாசர், சமர்த்த ராமதாசர் போன்ற பக்தர்களின் சரித்திரமமோ,
ஆழ்வார்கள், நாயன்மார்கள் சரித்திரமோ,
அல்லது
இந்த மகான்கள் நமக்கு சொன்ன உபதேங்களை தனியாக படித்துக்கொண்டோ, பலபேர் கூடியோ படிக்க வேண்டும்.

பகல் தூக்கம் கூடாது.
பகல் தூக்கம் ஆரோக்கியத்துக்கும் கெடுதல்.
பகல் தூக்கத்தினால், நேரம்  வீணாகி, பாரமார்கத்துக்கும் விரோதமாகிறது.

இந்த விதியை மனிதனாக பிறந்த அனைவரும் கடைபிடிக்க வேண்டும்.

பெரியவர்கள் மட்டுமில்லாது,
குடும்பத்தில் உள்ள குழந்தைகள், பெண்கள் என்று அனைவரும் அனுசரித்து கொண்டு, உற்சாகத்துடன் செய்ய வேண்டும்.
பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளை இந்த வரிசைப்படி செய்ய சொல்லி தர வேண்டும்.

இப்படி ஒரு நியமப்படி, தானும் வாழ உண்மையாக ஆசைப்படுபவர்களுக்கு பகவான் அவர்கள் வாழ்க்கையை அனுகூலம் ஆக்கி கொடுப்பான்.

இப்படி வாழ்ந்தால் பகவான் நம்மை கண்டு மகிழ்ச்சி அடைகிறார். அவரே நம்மை காண வருவார்.
மகான்கள் நம்மை கண்டு மகிழ்ச்சி அடைகிறார்கள்.

இது ஒவ்வொரு ஹிந்துவின் வாழ்க்கை முறை.

ஹிந்துவாக பிறந்த நாம், இந்த முறையில் வாழ முயற்சிப்போம்.

"பகவானை நாம் சரணம் அடைந்தால், பகவான் நம்மை நிச்சயம் காப்பாற்றுகிறார்".

HARE RAMA HARE KRISHNA - BHAJAN

sandhyavandanam Evening - Yajur - Hear and understand meaning of each sloka
sandhyavandanam Afternoon - Yajur - Hear and understand meaning of each sloka


sandhyavandanam Morning - Yajur - Hear and understand meaning of each sloka