Followers

Search Here...

Friday 20 January 2023

பிராம்மணனுக்கு பேச்சும், க்ஷத்ரியனுக்கு இதயமும் கடுமையாக இருக்கும். மஹாபாரதத்தில் உள்ள அழகான உரையாடல்..

பிராம்மணனுக்கு பேச்சும், க்ஷத்ரியனுக்கு இதயமும் கடுமையாக இருக்கும். மஹாபாரதத்தில் உள்ள அழகான உரையாடல்.

பௌஷ்ய ராஜன், உதங்கரை பார்த்து, "பகவன் ! உங்களை போன்ற தகுந்தவர்கள் (யோக்கியதை உள்ளவர்) எளிதில் கிடைக்க மாட்டார்கள். நீங்கள் சிறந்த அதிதியாக இருப்பதால், உங்களுக்கு என் ஸ்ரத்தையை செய்ய விரும்புகிறேன். அதற்கு சிறிது நேரம் எனக்காக ஒதுக்க வேண்டும்" என்றார்

भगवंश्चिरेण पात्रम् आसाद्यते भवाश्च गुणवानतिथि:

तदिच्छे श्राद्धं कर्तुं क्रियतां क्षण इति।।

- மஹாபாரதம் (வியாசர்)


உதங்கர், "உனக்காக அவகாசம் கொடுக்கிறேன். உன் சக்திக்கு ஏற்ப சீக்கிரமாக அன்னத்தை தயார் செய்து கொடு" என்றார். "இதோ! தயார் ஆகி விடும்" என்று பௌஷ்ய ராஜன் சொல்லி தன் சக்திக்கு ஏற்ற அன்னத்தை கொடுத்து உதங்கருக்கு உணவு பரிமாறினார்.

तम् उत्तङ्कः प्रत्युवाच कृतक्षण एवास्मि

शीघ्रम् इच्छामि यथोप पन्नम् 

अन्नम् उपस्कृतं भवतेति

स तथेत्युक्त्वा यथोप

पन्नेनान्नेनैनं भोजयामास।।

- மஹாபாரதம் (வியாசர்)

தனக்கு பரிமாறப்பட்ட அன்னம், ஆறி போனதாகவும், அதில் தலைமுடி இருப்பதையும் கண்டு, "இது அசுத்தமான உணவாக உள்ளது" என்று நினைத்து "எனக்கு அசுத்தமான உணவை நீ கொடுத்ததால் நீ குருடனாக போவாய்" என்று அரசனை சபித்து விட்டார்.

अथ: उत्तङ्कः सकेशं शीतमन्नं दृष्ट्वा 

अशुचि एतदिति मत्वा तं पौष्यम् उवाच।

यस्मान्मे अशुच्यन्नं ददासि 

तस्माद् अन्धो भविष्यसीति।।

- மஹாபாரதம் (வியாசர்)


இப்படி உதங்கர் சபித்ததும், பௌஷ்ய ராஜன் பதிலுக்கு "நீர் குறையில்லாத அன்னத்தை குறை சொல்லியதால் சந்ததி இல்லாமல் போவீர்" என்று பதிலுக்கு சபித்தார்.

तं पौष्यः प्रत्युवाच।

यस्मात् त्वम् अदुष्टम् अन्नं 

दूषयसि तस्माद् अनपत्यो

भविष्यसीति तम् उत्तङ्कः प्रत्युवाच।।

- மஹாபாரதம் (வியாசர்)


உடனே உதங்கர், "நீ அசுத்தமான அன்னத்தையும் கொடுத்து விட்டு, எனக்கு ப்ரதி-சாபம் கொடுத்தது சரியல்ல. அன்னத்தை கண்ணால் பார்" என்றார். அப்போது அவருக்கு கொடுக்கப்பட்ட அசுத்தமான உணவு உண்மையிலேயே அசுத்தமாக இருந்ததை கவனித்தார் அரசர்.

न युक्तं भवता अन्नम् अशुचि 

दत्त्वा प्रतिशापं दातुं तस्माद् 

अन्नम् एव प्रत्यक्षी कुरु।

ततः पौष्यस्तद् अन्नम् अशुचि दृष्ट्वा 

तस्या शुचिभावम् अपरोक्षयामास।।

- மஹாபாரதம் (வியாசர்)


அந்த அன்னத்தில் பெண்ணின் கேசமும், ஆறிப்போனதாகவும் இருந்ததை கண்டு உதங்கரை பார்த்து, "பகவன், தெரியாமல் உங்களுக்கு ஆறிப்போன, கேசம் விழுந்த அன்னம் பரிமாறப்பட்டுள்ளது. நான் குருடனாக இல்லாமல் இருக்க வேண்டும். என்னை மன்னிக்கும் படி வேண்டுகிறேன்" என்றார்.

अथ तदन्नं मुक्त केश्या स्त्रियोपहृतमनुष्णं सकेशं

चाशुच्येतदिति मत्वा तम् ऋषिम् उत्तङ्कं प्रसादयामास।।

भघवन्नेतद् अज्ञानादन्नं सकेशम् उपाहृतं शीतं च।

तत्क्षामये भवन्तं न भवेयमन्ध इति।।

- மஹாபாரதம் (வியாசர்)


உடனே உதங்கர், "நான் சொன்னது பொய் போகாது. இருந்தாலும், நீ சிலகாலம் கண் தெரியாமல் இருந்து, பிறகு சீக்கிரத்தில் மீண்டும் கண் பெறுவாய்" என்றார். மேலும் "நீ எனக்கு கொடுத்த சாபம் தொடராமல் இருக்க வேண்டும்" என்றார்.

तम् उत्तङ्कः प्रत्युवाच।।

न मृषा ब्रवीमि भूत्वा त्वम् अन्धो 

नचिरादनन्धो भविष्यसीति।

ममापि शापो भवता दत्तो न भवेदिति।।

- மஹாபாரதம் (வியாசர்)


அதற்கு பௌஷ்ய ராஜன் "நான் சாபத்திலிருந்து உங்களை விடுவிக்க மாட்டேன். எனக்கு கோபம் இன்னும் அடங்கவில்லை. ப்ராம்மணனுக்கு இதயம் வெண்ணெய் போன்றது. ப்ராம்மணனுக்கு வாக்கு கூரான கத்தி போன்றது. க்ஷத்ரியர்களான எங்களுக்கு இது மாற்றி வைக்கப்பட்டு இருக்கிறது. எங்களுக்கு வாக்கு வெண்ணை போலவும், உள்ளம் கூர்மையான கத்தி போன்றதாகவும் இருக்கும் என்று உங்களுக்கு தெரியாதா? ஆதலால் என் இதயம் கொடியதாக இருப்பதால், சாபத்தை நான் மாற்ற முடியாது. நீர் போகலாம்" என்றார்.

तं पौष्यः प्रत्युवाच न चाहं शक्तः शापं प्रत्यादातुं

न हि मे मन्यु: अद्याप्युपशमं गच्छति

किं चैतद्भवता न ज्ञायते यथा।।

नवनीतं हृदयं ब्राह्मणस्य

वाचि क्षुरो निहित: तीक्ष्णधारः।

तद् उभयम् एतद् विपरीतं क्षत्रियस्य

वाङ् नवनीतं हृदयं तीक्ष्ण-धारम् इति।।

तदेवंगते न शक्तोऽहं तीक्ष्ण हृदयत्वात्तं 

शापम् अन्यथा-कर्तुं गम्यतामिति।

- மஹாபாரதம் (வியாசர்)


இதை கேட்ட உதங்கர், "நீ கொடுத்த உணவு அசுத்தமாக இருந்ததை நீயே பார்த்து என்னிடம் மன்னிப்பு கேட்டாய். 'குற்றமில்லாத அன்னத்தை தூஷித்ததால் உனக்கு சந்ததி இல்லாமல் போகும் என்று சபித்தாய்'. ஆனால் இந்த அன்னம் அசுத்தமானது தான் என்பதால், உன் சாபம் என்னிடம் பலிக்காது. நான் போகிறேன்" என்று சொல்லிவிட்டு குண்டலங்களை எடுத்து கொண்டு புறப்பட்டார் உதங்கர்.

तम् उत्तङ्कः प्रत्युवाच।।

भवता अहम् अन्नस्या शुचि

भावम् आलक्ष्य प्रत्यनुनीतः।

प्राक् च तेऽभिहितं यस्माद् अदुष्टम् अन्नं 

दूषयसि तस्माद् अनपत्यो भविष्यसीति।

दुष्टे चान्ने नैष मम शापो भविष्यतीति।।

- மஹாபாரதம் (வியாசர்)

Friday 13 January 2023

மகாபாரதம் என்ற சொல்லுக்கு அர்த்தம் என்ன? அறிவோம்...

"மகாபாரதம்" என்ற சொல்லுக்கு அர்த்தம் என்ன?

ஸுத பௌராணிகரான உக்கிரஸ்ரவஸ், சௌனகர் மற்றும் குழுமி இருந்த ரிஷிகளுக்கும் வியாசர் கொடுத்த மஹாபாரத சரித்திரத்தை விவரித்தார்.


சுருக்கமாக மஹாபாரத நிகழ்வை சொல்லி விட்டு, எதற்காக "மகாபாரதம்" என்று பெயர் வைத்தார் வியாசர் என்று சொல்கிறார்.


पुर: अकिल सुरैः सर्वैः समेत्य तुलया धृतम्।

चतुर्भ्यः सरहस्येभ्यो वेदेभ्यो हि अधिकं यदा।।

तदाप्रभृति लोकेऽस्मिन् महाभारतम् उच्यते।

महत्त्वे च गुरुत्वे च ध्रियमाणं यत: अधिकम्।।

महत्त्वाद्भारवत्त्वाच्च महाभारतम् उच्यते।।

निरुक्तम् अस्य यो वेद सर्वपापैः प्रमुच्यते।।

- மகாபாரதம் (வியாசர்)

தேவர்கள் அனைவரும் சேர்ந்து கொண்டு, வியாசரின் மகாபாரதம் கனமானதா? இல்லை நான்கு வேதங்கள் கனமானதா? என்று சோதித்தனர்.

நான்கு வேதங்களை காட்டிலும் பாரதம் கனமாக (விஷயங்களில், பலனில்) இருந்தது என்று நிர்ணயம் செய்தார்கள் 

அது முதல், இந்த உலகத்தில் இதற்கு "மஹாபாரதம்" என்று பெயர் கிடைத்தது 

இந்த பெயர் காரணத்தை அறிபவன் கூட, தான் செய்த அனைத்து பாவங்களில் இருந்தும் விடுபடுவான்.

तपो नकल्क: अध्ययनं नकल्कः

स्वाभाविको वेद विधि: नकल्कः।

प्रसह्य वित्ताहरणं नकल्क:

त: अन्येव भावोपहतानि कल्कः।।

- மகாபாரதம் (வியாசர்)

இதில் சொல்லப்பட்ட படி தவம் செய்தாலும் பாவம் போய் விடும்.

இதை படித்தாலும் பாவம் போய் விடும்.

இதில் சொல்லப்பட்ட படி அவரவர் ஆஸ்ரம தர்மத்தில் வாழ்ந்தாலும் பாபங்கள் அழியும்.

இந்த மஹாபாரதத்தை சொல்வதால் செல்வம் கிடைத்தாலும் அது பாவத்தை தராது.

ஆனால்,

மஹாபாரதத்தில் சொல்லப்பட்டதை கெட்ட எண்ணத்தோடு செய்தால், அனைத்துமே பாவ காரியங்கள் ஆகி விடும்.

Wednesday 11 January 2023

கீழடி ரகசியம்: பாண்டிய மன்னனால் கொல்லப்பட்ட அர்ஜுனன். 5000 வருடம் முன் அன்ன கொடி கொண்டிருந்த பாண்டிய தேசத்துக்கும், அர்ஜுனனுக்கும் உள்ள உறவை அறிவோம்... மஹாபாரதம் அறிவோம்.

பாரத போர் முடிந்தது. யுதிஷ்டிரர் அஸ்வமேத யாகம் செய்ய ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தது. அஸ்வமேத பர்வம், அத்தியாயம் 79

அர்ஜுனன், அஸ்வமேத யாக குதிரை எங்கெல்லாம் செல்கிறதோ, அதை பின் தொடர்ந்து ஒவ்வொரு தேசத்து அரசர்களிடமும் சம்மதத்தை பெற்று பட்டாபிஷேகத்துக்கு அழைத்தார்.


புருஷ ஸ்ரேஷ்டரே, ஜனமேஜயா ! அஸ்வமேத குதிரை தன் இஷ்டத்துக்கு அங்குமிங்கும் சஞ்சரித்து, பாண்டவனான அர்ஜுனன் பின் தொடர, மணலூருக்கு (மேலும் படிக்க -> பாண்டியதேசம்) வந்து சேர்ந்தது.

क्रमेण स हयस्त्वेवं विचरन् पुरुषर्षभ।

मणलूरपते: देशम् उपायात्सह पाण्डवः।।

- மஹாபாரதம் (வியாசர்)

மணலூர் - இன்றைய மதுரைக்கு அருகில் 13கிமி தொலைவில் தான் உள்ளது. அருகில் கீழடி உள்ளது.

5000 வருடம் முன்பு, (மேலும் படிக்க ->) பாண்டிய தேசத்துக்கும் அர்ஜுனனுக்கும் உள்ள உறவை நாம் காண்கிறோம். பாண்டிய தேசத்தை 'அர்ஜுனன் மகன் ஆண்டான்' என்பதையும் அறிகிறோம்.

பாண்டிய தேச அரசனான பப்ருவாகனன் தன்னுடைய தந்தை தன் தேசத்து பக்கம் வந்திருப்பதை கேள்விப்பட்டு, பெரியோர்களை, பிராம்மணர்களை  முன்னிட்டு கொண்டு, தன் நகரத்திலிருந்து கை கூப்பி கொண்டு வெளியில் வந்தான்.

श्रुत्वा तु नृपतिः प्राप्तं पितरं बभ्रु-वाहनः।

निर्ययौ विनयेनाथ ब्राह्मणार्यपुरःसरः।।

- மஹாபாரதம் (வியாசர்)


மணலூர் அரசனான பப்ருவாகனன் க்ஷத்ரியனாக இருந்து கொண்டு, இப்படி தன்னை வரவேற்றதை அர்ஜுனன் (தனஞ்செயன்) வெறுத்தார்.

मणलूरेश्वरं त्वेवमुपयातं धनंजयः।

नाभ्य नन्दत्स मेधावी क्षत्र धर्म म् अनुस्मरन्।।

- மஹாபாரதம் (வியாசர்)


உடனே அர்ஜுனன் அவனை பார்த்து, "நீ செய்வது உனக்கு தகுதியா? க்ஷத்ரிய தர்மத்தை விட்டு நிற்கிறாயே!!.   மகனே ! யுதிஷ்டிரருடைய யாக குதிரையை நான் காத்து கொண்டு வந்து இருக்கிறேன். உன்னுடைய தேசத்தின் எல்லையில் வந்திருக்கும் என்னிடம் ஏன் நீ போர் செய்யவில்லை?

க்ஷத்ரிய தர்மத்தை அறிந்தும், இப்படி புத்தி கெட்டு போனாயே! இதற்காக உன்னை நிந்திக்கிறேன்.

யுத்தத்திற்கு வந்திருக்கும் என்னிடம் நல்ல வார்த்தை சொல்லி வரவேற்க வந்துள்ளாயே? இப்படியும் நீ வாழ வேண்டுமா? இதனால் உனக்கு என்ன பலன் கிடைக்கப்போகிறது?

தீயகுணம் உள்ளவனே ! நான் ஒருவேளை ஆயுதம் இல்லாமல் வந்திருந்தால் நீ செய்த காரியத்தை ஏற்று இருக்கலாம்."என்று கடிந்து கொண்டார் அர்ஜுனன்.

यद् अहं न्यस्त शस्त्र: त्वां आगच्छेयं सुदुर्मते।

प्रक्रियेयं भवेद् युक्ता तावतव नराधम।।

- மஹாபாரதம் (வியாசர்)


இப்படி சொல்லிக்கொண்டிருக்கும் போதே! அர்ஜுனன் பேச்சை பொறுக்க முடியாமல், நாக கன்னிகையான உலூபி பூமியை பிளந்து கொண்டு வந்தாள்.

तमेवम् उक्तं भर्त्रा तु विदित्वा पन्नग आत्मजा।

अमृष्यमाणा भित्त्वोर्वीम् उलूपी समुपागमत्।।

- மஹாபாரதம் (வியாசர்)

யுத்தத்தை விரும்பும் தகப்பன் ஒருபுறம் நிற்க, மறுபுறம் தலை குனிந்து செய்வதறியாது யோசித்து கொண்டிருக்கும் பிள்ளையை கண்டாள்.

அந்த உலூபி, புத்ரனை நோக்கி, "க்ஷத்ரிய தர்மத்தை அறிந்தவனே! நீ என்னையும் உன் தாய் என்றும், பன்னகனின் மகளுமான உலூபி என்று தெரிந்து கொள்.

மகனே! நான் சொல்வதை கேள். உனக்கு மேலான தர்மத்தை சொல்கிறேன்.

उलूपीं मां निबोध त्वं मातरं पन्नग आत्मजाम्।

कुरुष्व वचनं पुत्र धर्मस्ते भविता परः।।

- மஹாபாரதம் (வியாசர்)

நீ கௌரவ ஸ்ரேஷ்டரும் பகைவரை அடக்குபவரான தனஞ்ஜெயரிடம் போர் செய்.

நீ போர் செய்வதையே அவர் பெரிதும் விரும்புவார். உன்னிடம் பிரியம் காட்டுவார். சந்தேகப்படாதே!என்றாள்.

युध्यस्वैनं कुरुश्रेष्ठं धनंजयम् अरिन्दमम्।।

एवम् एष हि ते प्रीतो भविष्यति न संशयः।।

- மஹாபாரதம் (வியாசர்)

இப்படி சொன்னதும், பப்ருவாகனன் யுத்தம் செய்ய மனம் கொண்டான்.

உடனே தங்க மயமான கவசம், தலை கவசம் அணிந்து கொண்டு, பற்பல பாணங்களுடன் தங்க மயமான அன்ன கொடி பறக்கும் தேரில் ஏறினான்.

परम अर्चितमु उच्छ्रित्य ध्वजं हंसं हिरण्मयम्।

प्रययौ पार्थम् उद्दिश्य स राजा बभ्रुवाहनः।।

- மஹாபாரதம் (வியாசர்)

உடனேயே, தேர்ச்சி உள்ள தன் சேவகர்களை கொண்டு, யாக குதிரையை அடக்கி பிடித்து விட்டான்.

அஸ்வமேத யாக குதிரையை பிடித்து, கம்பீரமாக தேரில் நிற்கும் தன் மகனை கண்டு, அர்ஜுனன் மனம் மகிழ்ந்தார்.

உடனே தரையில் நின்று கொண்டு போரிடும் அர்ஜுனன், பாம்பின் விஷத்தை போன்று கக்கும் பாணங்களை தொடுத்தார்.

தகப்பனும், மைந்தனும் போர் செய்வது, தேவர்களும் அசுரர்களும் போர் செய்வது போல இருந்தது.

பப்ருவாகனன் சிரித்து கொண்டே, கூர்மையான பானங்களை கொண்டு, அர்ஜுனன் தோளில் அடித்தான்.

அந்த பாணம் எப்படி பாம்பு புற்றுக்குள் நுழையுமோ அது போல அர்ஜுனன் தோளை கிழித்து கொண்டு, பூமிக்கும் நுழைந்தது.


இதனால் நிலை குலைந்த அர்ஜுனன் ஒரு சில நிமிடம் தன் வில்லை பிடித்து கொண்டே மயங்கினார். உடனே தன்னை சுதாரித்து கொண்டு எழுந்து, பப்ருவாகனனை பார்த்து,

"சிறந்த கைகள் உடையவனே! குழந்தாய் ! சித்ராங்கதையின் மகனே!   அருமை. அருமை. மகனே! நீ உன் தர்மத்தில் இருப்பதை கண்டு மிகவும் சந்தோஷம் அடைந்தேன். மகனே ! நான் இப்பொழுது உன் மீது பாணங்களை பிரயோகிக்க போகிறேன். யுத்தத்தில் கலங்காமல் போர் செய்" என்றார்.

साधुसाधु महाबाहो वत्स चित्राङ्गदात्मज।

सदृशं कर्म ते दृष्ट्वा प्रीतिमानस्मि पुत्रक।

विमुञ्चाम्येष ते बाणान्पुत्र युद्धे स्थिरो भव।।

- மஹாபாரதம் (வியாசர்)


உடனே, அர்ஜுனன் வஜ்ராயுதத்துக்கும் ஈடாக, பெரும் இடி போன்ற பாணங்களை வர்ஷித்தார். அது அனைத்தையும் பப்ருவாகனன் தன் பாணங்களால் அடித்து இரண்டு மூன்று துண்டாக உடைத்து எறிந்தான்.

உடனே, அர்ஜுனன் தன் பாணங்களால் தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டு பனை மரம் போன்று உயர்ந்து இருந்த பப்ருவாகனன் தேர் கொடியை அறுத்து சாய்த்தார்.

तस्य पार्थः शरै: दिव्यै र्ध्वजं हेम परिष्कृतम्।

सुवर्णताल प्रतिमं क्षुरेणापाहरद्रथात्।।

- மஹாபாரதம் (வியாசர்)

மேலும், சிரித்து கொண்டே, மிகவும் வேகமுள்ளதும், பெரிய உடல் கொண்ட தேர் குதிரைகளை உயிரற்றதாக ஆக்கினார்.

हयां च अस्य महाकायान् महावेगान् अरिंदम।

चकार राजन् निर्जावान् प्रहसन्निव पाण्डवः।।

- மஹாபாரதம் (வியாசர்)

இதனால் பெரும் கோபம் கொண்ட அரசன் (பப்ருவாகனன்) தேரிலிருந்து கீழ் இறங்கி கடுமையான போர் புரிய தொடங்கினான்.

தன் மகனுடைய வீரத்தை கண்டு ஆனந்தம் அடைந்த இந்திர குமாரனும், பாண்டவனுமான  அர்ஜுனன் தன் மகனை கடுமையாக  தாக்காமல் போர் செய்தார்.

தன் மீது அர்ஜுனன் போடும் பாணங்களால் பெரும் கோபத்துடன் சர்ப்பம் போல பாயும் பானங்களை அர்ஜுனன் மேல் தொடுத்தான்.

இப்படி போர் செய்து கொண்டிருக்கும் போதே, சிறுபிள்ளைத்தனமாக மிகவும் கூர்மையான பாணத்தால் பிதாவான அர்ஜுனனின் மார்பில் பலமாக பப்ருவாகனன் அடித்து விட்டான்.

ततः स बाल्यात् पितरं विव्याध हृदि पत्रिणा।

निशेतेन सुपुङ्खेन बलवद् बभ्रुवाहनः।।

- மஹாபாரதம் (வியாசர்)


மார்பில் பட்ட பாணத்தால், அர்ஜுனன் உயிர் பிரிந்து, பூமியில் விழுந்தார்.

स तेनातिभृशं विद्धः पुत्रेण कुरुनन्दनः।

महीं जगाम मोहार्त: ततो राजन् धनंजयः।।

- மஹாபாரதம் (வியாசர்)

கௌரவர்களில் சிறந்தவனான அந்த வீரன் விழுந்ததை பார்த்த சித்ராங்கதையின் மகனான பப்ருவாகனனும் மயங்கி விழுந்து விட்டான்.

तस्मिन् निपतिते वीरे कौरवाणां धुरंधरे।

सोपि मोहं जगामाथ तत: चित्राङ्गद: सुतः।।

- மஹாபாரதம் (வியாசர்)

சித்ராங்கதை தன்  கணவர் கொல்லப்பட்டும், தன் மகன் விழுந்து கிடப்பதையும் கேள்விப்பட்டு, பெரும் நடுக்கத்துடன் போர்க்களம் ஓடி வந்தாள்

भर्तारं निहतं दृष्ट्वा पुत्रं च पतितं भुवि।

चित्राङ्गदा परित्रस्ता प्रविवेश रणाजिरे।।

- மஹாபாரதம் (வியாசர்)

சோகத்தால் மூழ்கி இருந்த மணலூர் அரசனின் தாயானவள், கொல்லப்பட்டு இருக்கும் தன் கணவனை கண்டாள்

शोक संतप्त हृदया रुदती वेपती भृशम्।

मणलूरपते: माता ददर्श निहतं पतिम्।।

- மஹாபாரதம் (வியாசர்)

தாமரை போன்ற கண்களுடைய சித்ராங்கதை பயத்துடனும், அதிகமாக புலம்பி அழுது மூர்ச்சை அடைந்து மயங்கி விழுந்தாள்.

சிறிது நேரம் கழித்து, எழுந்த சித்ராங்கதை, திவ்யமான தேகம் கொண்ட நாககன்னிகையான உலூபியை பார்த்து பேசலானாள்.

प्रतिलभ्य च सा संज्ञां देवी दिव्य वपुर्धरा।

उलूपीं पन्नग-सुतां दृष्ट्वेदं वाक्यमब्रवीत्।।

- மஹாபாரதம் (வியாசர்)

"உலூபி, உன்னால் ஏவப்பட்ட என் பிள்ளையால், யுத்தத்தில் பாணங்களால் அடிபட்டு கிடக்கும் கணவனை பார்.

उलूपि पश्य भर्तारं शयानं नितं रणे।

त्वत्कृते मम पुत्रेण बाणेन समितिंजयम्।।

- மஹாபாரதம் (வியாசர்)

நீ தர்மம் அறிந்தவள் தானே! பதிவ்ரதை தானே! உன்னால் உன்னுடைய கணவன் இப்படி போரில் கொல்லப்பட்டு விழுந்து கிடக்கிறாரே !

ननु त्वम् आर्य धर्मज्ञा ननु चासि पतिव्रता।

यत्त्वत्कृतेऽयं पतितः पतिस्ते निहतो रणे।।

- மஹாபாரதம் (வியாசர்)

அறிவு கெட்டவளே! அர்ஜுனர் உனக்கு என்ன தீங்கு செய்தார்? ஒருவேளை தீங்கு செய்து இருந்தால் நான் மன்னிப்பு கேட்கிறேன். அவருடைய உயிரை பெற்று கொடு.

किंनु मन्दे अपकराद्धोऽयं यदि तेऽद्य धनंजयः।

क्षमस्व याच्यमाना वै जीवयस्व धनंजयम्।।

- மஹாபாரதம் (வியாசர்)

உன்னை பூஜிக்கிறேன்! தர்மம் அறிந்தவளே! நீ மூவுலங்களிலும் ப்ரஸித்தமானவளாயிற்றே! நல்லவளே! பிள்ளையால் கணவனை கொன்று விட்டு, கவலைப்படாமல் இருக்கிறாயே!

ननु त्वम् आर्ये धर्मज्ञे त्रैलोक्य विदिता शुभे।

यद्धातयित्वा पुत्रेण भर्तारं नानु शोचसि।।

- மஹாபாரதம் (வியாசர்)

பன்னகனின் மகளே! என் மகன் இப்படி கிடப்பதை பார்த்து கூட நான் கவலையடவில்லை. ஆனால், அதிதியாக திடீரென்று வந்த கணவருக்கு இப்படி அதிதி பூஜை செய்யப்பட்டு விட்டதே என்று துக்கப்படுகிறேன்." என்று அழுதாள்.

இப்படி உலூபியிடம் புலம்பி அழுது விட்டு, கீழே விழுந்து கிடக்கும் தன் கணவனான அர்ஜுனன் அருகில் வந்து புலம்பினாள்.

"யுதிஷ்டிரருக்கு மிக்க ப்ரியமானவரே! எனக்கு ப்ரியமானவரே! எழுந்திருங்கள். நீண்ட கைகள் உடையவரே! உந்த குதிரையை நான் உமக்காக விட்டு விட்டேன்.

उत्तिष्ठ कुरु-मुख्यस्य प्रियमुख्य मम प्रिय।

अयम् अश्वो महाबाहो मयो ते परिमोक्षितः।।

- மஹாபாரதம் (வியாசர்)

பிரபுவே! நீங்கள் தர்மராஜருடைய யாக குதிரை பின்னால் செல்ல வேண்டாமா? ஏன் பூமியில் படுத்து இருக்கிறீர்கள்?

குரு நந்தனா! என்னுடைய உயிரும், கௌரவர்கள் உயிரும் உங்களை நம்பி அல்லவா இருக்கிறது! மற்றவர்களுக்கு உயிரை கொடுப்பவரான நீங்கள் எந்த காரணத்தினால் உயிரை விட்டீர்கள்?

உலூபி ! பூமியில் கிடக்கும் கணவரையும், இந்த புத்திரனையும் பார்! இவர்களை கொன்று விட்டு, கொல்ல காரணமாகி விட்டு, நீ துயரம் அடையாமல் இருக்கிறாயே!

उलूपि साधु पश्येमं पतिं निपतितं भुवि।

पुत्रं चेमं समुत्साद्य घातयित्वा न शोचसि।।

- மஹாபாரதம் (வியாசர்)

என் குழந்தை மரணத்தின் பிடியில் அகப்பட்டு பூமியில் கிடக்கட்டும். சிவந்த கண்களும் குடாகேசனுமான விஜயர் வாழ வேண்டும்.

कामं स्वपितु बालोऽयं भूमौ मृत्युवशं गतः।

लोहिताक्षो गुडाकेशो विजयः साधु जीवतु।।

- மஹாபாரதம் (வியாசர்)

பாக்கியவதியே!  ஆண்களுக்கு பல பத்னிகள் இருந்தால் தோஷமில்லை. உனக்கு இதனால் ஏற்பட்ட புத்தி மாற்றம் குற்றமாகும்.

न अपराध अस्ति सुभगे नराणां बहु-भार्यता।

प्रमदानां भवत्येष मा ते भूद्बुद्धि: ईदृशी।।

- மஹாபாரதம் (வியாசர்)

ப்ரம்மாவின் படைப்பில் ஆணுக்கும் பெண்ணுக்கும் அழிவற்ற ஸ்நேகம் படைக்கப்பட்டது.

இந்த ஸ்நேகத்தை நீ புரிந்து கொள். உன்னுடைய ஸ்நேகம் உண்மையாக இருக்க வேண்டாமா?

सख्यं चैतत्कृतं धात्रा शश्वदव्ययमेव तु।

सख्यं समभिजानीहि सत्यं सङ्गतमस्तु ते।।

- மஹாபாரதம் (வியாசர்)

நீ புத்திரனால் கொல்லப்பட்ட இவரை பிழைக்க செய்து எனக்கு காட்டாமல் இருந்தால், நான் இப்பொழுதே உயிரை விடுவேன்.

पुत्रेम घातयित्वैनं पतिं यदि न मेऽद्य वै।

जीवन्तं दर्शयस्यद्य परित्यक्ष्यामि जीवितम्।।

- மஹாபாரதம் (வியாசர்)

தேவீ! கணவனையும், பிள்ளையையும் இழந்த சோகத்தில் இருக்கும் நான், நீ பார்க்கும் பொழுதே இங்கேயே உயிரை விட போகிறேன்" என்று அழுதாள்.

साऽहं दुःखान्विता देवि पतिपुत्रविनाकृता।

इहैव प्रायमाशिष्ये प्रेक्षन्त्यास्ते न संशयः।।

- மஹாபாரதம் (வியாசர்)

இப்படி புலம்பி கொண்டு, தன் கணவருடைய கால்களை பிடித்து கொண்டு, புத்திரனை பார்த்து பெருமூச்சு விட்டு கொண்டும் செய்வதறியாது உட்கார்ந்து இருந்தாள்.

इत्युक्त्वा पन्नग-सुतां सपत्नी चैत्रवाहनी।

ततः प्रायम् उपासीना तूष्णीमासीज्जनाधिप।।

ततो विलप्य विरता भर्तुः पादौ प्रगृह्य सा।

उपविष्टा भवद्दीना सोच्छ्वासं पुत्रम् ईक्षती।।

- மஹாபாரதம் (வியாசர்)

சிறிது நேரத்தில், பப்ருவாகனன் நினைவு வந்து எழுந்தான். அப்போது தன் தாய் வந்திருப்பதை பார்த்து, "சுகமாகவே வளர்ந்தவளான என் தாயார், பூமியில் உயிரற்று கிடக்கும் தன் கணவன் அருகில் படுத்து இருக்கிறாளே! இதை விட பெரிய துக்கம் எனக்கு ஏது?

इतो दुःखतरं किंनु यन्मे माता सुखैधिता।

भूमौ निपतितं वीरमनुशेते मृतं पतिम्।।

- மஹாபாரதம் (வியாசர்)

ஆ! சஸ்திரங்களில் சிறந்தவரான, பகைவரை ஒழிப்பவரான, யாராலும் கொல்லப்படாதவரான  இவர் என்னால் கொல்லப்பட்டு அதை என் தாய் பார்க்கும் படியாக ஆகி விட்டதே!

निहन्तारं रणेऽरीणां सर्वशस्त्रभृतां वरम्।

मया विनिहतं सङ्ख्ये प्रेक्षते दुर्मरं बत।।

- மஹாபாரதம் (வியாசர்)

ஐயோ! பரந்த மார்பும், நீண்ட கைகளும் உடைய தன் பர்த்தா பூமியில் கிடப்பதை பார்த்தும் என் தாயார் நெஞ்சம் உடையாமல் உறுதியாக இருக்கிறாளே! 

अहोऽस्या हृदयं देव्या दृढं यन्न विदीर्यते।

व्यूढोरस्कं महाबाहुं प्रेक्षन्त्या निहतं पतिम्।।

- மஹாபாரதம் (வியாசர்)

மரண காலம் வராமல் யாருக்கும் மரணம் ஏற்படாது என்று உணர்கிறேன்.

எங்களுக்கு அந்த காலம் வராததால் தானே, நானும் என் தாயும் இதை கண்டும் உயிரோடு இருக்கிறோம் !

दुर्मरं पुरुषेणेह मन्ये काले ह्यनागते।

यत्र नाहं न मे माता न वियुक्तौ स्वजीवितात्।।

- மஹாபாரதம் (வியாசர்)

ஆ! ஆ! என்னை நான் வெறுக்கிறேன்! பெற்ற பிள்ளையால் கொல்லப்பட்டு கிடக்கும் அர்ஜுனருடைய கிரீடமானது மண்ணில் கிடக்கிறதே!

हाहा धिक्-कुरुवीरस्य किरीटं काञ्चनं भुवि।

अपविद्धं हतस्येह मया पुत्रेम पश्यत।।

- மஹாபாரதம் (வியாசர்)

ஓ! ஓ! ப்ராம்மணர்களே! பெற்ற பிள்ளையால் கொல்லப்பட்டு கிடக்கும் அர்ஜுனருடைய கிரீடமானது மண்ணில் கிடப்பதை பாருங்கள்.

भोभो पश्यत मे वीरं पितरं ब्राह्मणा भुवि।

शयानं वीरशयने मया पुत्रेण पातितम्।।

- மஹாபாரதம் (வியாசர்)

யுதிஷ்டிரரால் அனுப்பப்பட்ட யாக குதிரையுடன் கூடவே வந்த ப்ரம்மம்மணர்கள் என்ன சாந்தியை சொல்வீர்கள்? கொடியவனும், பாபியும், போர்க்களத்தில் பெற்ற தகப்பனை கொன்ற எனக்கு பிராமணர்களே எனக்கு என்ன பிராயச்சித்தம் சொல்வீர்கள்?

பெற்ற தந்தையை கொன்ற எனக்கு, இவருடைய தோலையே ஆடையாக, இவரது கபாலத்தை கொண்டே பிச்சை எடுத்து போஜனம் செய்து கொண்டு, 12 வருட காலம் கடுமையாக அலைந்து கொண்டிருப்பதே எனக்கு பிராயச்சித்தமாக படுகிறது.

दुश्चरा द्वादश समा हत्वा पितरमद्य वै।

ममेह सुनृशंसस्य संवीतस्यास्य चर्मणा।।

शिरःकपाले चास्यैव भुञ्जतः पितुरद्य मे।

प्रायश्चित्तं हि नास्त्यन्यद्धत्वाऽद्य पितरं मम।।

- மஹாபாரதம் (வியாசர்)

நாகராஜனின் பெண்ணே! என்னால் கொல்லப்பட்ட உன் கணவரை பார்.

நான் உன் சொல்படி என் தகப்பனோடு போர் செய்து அர்ஜுனரை கொன்று, உனக்கு ப்ரீதி செய்தேன்!

மங்களமானவளே ! நானும் என் தந்தை இருக்கும் இடத்திற்கு செல்ல போகிறேன்.

இனி என்னால் தைரியமாக வாழ முடியாது. உயிரை தரிக்க முடியாது.

सोऽहम् अद्य गमिष्यामि गतिं पितृ निषेविताम्।

न शक्नोम्य आत्मना आत्मानम् अहं दारयितुं शुभे।।

- மஹாபாரதம் (வியாசர்)

தாயே! தேவீ! உன் மீது ஆணை. நானும் காண்டீவம் தரித்த அர்ஜுனரும் மரணித்த பின், சந்தோஷமாக இருஎன்று கதறினான்.

सा त्वं मयि मृते मातस्तथा गाण्डीव धन्वनि।

भव प्रीतिमती देवि सत्येन आत्मानमालभे।।

- மஹாபாரதம் (வியாசர்)

இப்படி துக்கத்தால் பேசி, ஆசமனம் செய்து பிறகு மீண்டும் உலூபியை பார்த்து,

"நாக கன்னிகையே! நன்றாக கேளுங்கள். என்னுடைய தந்தை இந்த போர் களத்தில் இருந்து எழுந்திருக்காத வரை, இந்த இடத்திலேயே கிடந்து என் உடலை வருத்தி கொள்வேன்.

शृण्वन्तु सर्व भूतानि स्थावराणि चराणि च।

त्वं च मातर्यथा सत्यं ब्रवीमि भुजगोत्तमे।।

यदि न: उत्तिष्ठति जयः पिता मे नर-सत्तमः।

अस्मिन् एव रणो-द्देशे शोषयिष्ये कलेवरम्।।

- மஹாபாரதம் (வியாசர்)

தந்தையை கொன்ற எனக்கு வேறு பிராயச்சித்தம் தெரியவில்லை. நான் நரகத்தை அடைய போகிறேன்.

नहि मे पितरं हत्वा निष्कृतिर्विद्यते क्वचित्।

नरकं प्रतिपत्स्यामि ध्रुवं गुरु वधार्दितः।।

- மஹாபாரதம் (வியாசர்)

வீரனான க்ஷத்திரியனை ஒருவன் கொன்றால், 100 பசு தானம் செய்து பாபத்தை கழித்து கொள்ளலாம்.

ஆனால், பிதாவாகவும் உள்ள இவரை கொன்றதால், எனக்கு ப்ராயச்சித்தமே கிடையாது.

वीरं हि क्षत्रियं हत्वा गोशतेन प्रमुच्यते।

पितरं तु निहत्यैवं दुर्लभा निष्कृतिर्मम।।

- மஹாபாரதம் (வியாசர்)

யாருக்கும் நிகரில்லாதவர் ஆயிற்றே இவர்! சிறந்த பொலிவு உடையவராயிற்றே இவர்! என்னுடைய பிதாவாயிற்றே! தர்ம சிந்தனை உடையவராயிற்றே! இவரை கொன்ற எனக்கு ஏது பிராயச்சித்தம்?என்று கதறி அழுதான்.

இவ்வாறு மணலூர் அரசன் (மதுரை மஹாபாரத காலத்தில் மணிபூரம் என்றும் அழைக்கப்பட்டு இருக்கிறது. பிற்காலத்தில் பெரியாழ்வார் இங்கு வந்து வசித்த போது, கள்ளழகர் இருக்கும் இடத்தை பார்த்தால் கோகுலம் போலவும், அங்குள்ள மலையை பார்த்தால் பிருந்தாவனம் போலவும், இந்த தலைநகரை பார்த்தால் மதுரை போலவும் தெரிய, அங்கேயே வசித்தார். மணிபூரம் மதுரை போல இருக்க, பல இடங்களில் உத்திர பிரதேசத்தில் இருக்கும் நிஜமான மதுராவை வடமதுரை என்று குறிப்பிட்டு பாடுகிறார்) பித்ரு சோகத்தால் அகப்பட்டு, தாயுடன் சேர்ந்து உயிரை போர்க்களத்திலேயே விட்டு விட அமர்ந்து இருக்க, உலூபியானவள், "சஞ்ஜீவனம்" என்ற மணியை நினைத்தாள்.

प्रायोपविष्टे नृपतौ मणिपूर ईश्वरे तदा।

पितृ-शोक समाविष्टे सह मात्रा परंतप।।

उलूपी चिन्तयामास तदा संजीवनं मणिम्।

स चोपातिष्ठत तदा पन्नगानां परायणम्।।

- மஹாபாரதம் (வியாசர்)

பன்னகர்களிடமே இருக்கும் அந்த திவ்யமான மணியானது, தோன்றியது.

கௌரவரே! ஜனமேஜயா! நாகராஜ பெண்ணான உலூபி அதை எடுத்து கொண்டு, மனம் மகிழும்படியான வார்த்தையை சொன்னாள்.

"மகனே! எழுந்திரு! துக்கப்படாதே! அர்ஜுனர் உன்னால் கொல்லப்படவில்லை. அர்ஜுனர் மனிதர்களாலும், தேவர்களாலும் ஜெயிக்க முடியாதவர்.

उत्तिष्ठ मा शुचः पुत्र नैव जिष्णुस्त्वया हतः।

अजेयः पुरुषै: एष तथा देवैः सवासवैः।।

- மஹாபாரதம் (வியாசர்)

புகழ் பெற்ற புருஷரான உன் பிதாவுக்கு நல்லது நடக்க வேண்டும் என்பதற்காகவே இப்படி ஒரு மாயை செய்தேன்.

मया तु मोहनी नाम मायैषा सम्प्रदर्शिता।

प्रियार्थं पुरुषेन्द्रस्य पितुस्तेऽद्य यशस्विनः।।

- மஹாபாரதம் (வியாசர்)

கௌரவா! அரசே! எதிரிகளை கொல்பவரான இவர், போரில் உன்னுடைய பலத்தை பார்க்க விரும்பினார்.

புத்ரா! அதனால் தான் உன்னை யுத்தம் செய்ய தூண்டினேன்.

जिज्ञासुर्ह्येष पुत्रस्य बलस्य तव कौरव।

सङ्ग्रामे युद्ध्यतो राजन् आगतः परवीरहा।।

- மஹாபாரதம் (வியாசர்)


புத்ரா! ராஜன்! உன் மீது சிறிது கூட பாபம் உண்டானதாக எண்ணாதே! உனது தந்தை, மஹாத்மா, புராணமானவர், சாஸ்வதமானவர், அழிவற்றவர், ரிஷி போன்றவர்.

மகனே! இவரை இந்திரனே வந்தாலும் போரில் ஜெயிக்க முடியாது.

ऋषिरेष महानात्मा पुराणः शाश्वतोऽक्षरः।

नैनं शक्तो हि सङ्ग्रामे जेतुं शक्रोऽपि पुत्रक।।

- மஹாபாரதம் (வியாசர்)

வேந்தே! நான் திவ்யமான ஒரு மணியை வரவழைத்து இருக்கிறேன்.

இது பன்னகர்களாகிய எங்களை மரித்தாலும் மீண்டும் மீண்டும் பிழைக்க செய்யும்.

अयं तु मे मणिर्दिव्यः समानीतो विशांपते।

मृतान्मृतान् पन्नगेन्द्रान्यो जीवयति नित्यदा।।

- மஹாபாரதம் (வியாசர்)

ப்ரபுவே! நீ இந்த மணியை உன் தந்தையின் மார்பில் வை. அப்பொழுதே, நீ குந்தி புத்திரரான பாண்டவரை உயிரோடு பார்ப்பாய்என்றாள்.

एनमस्योरसि त्वं च स्थापयस्व पितुः प्रभो।

संजीवितं तदा पार्थं स त्वं द्रष्टासि पाण्डवम्।।

- மஹாபாரதம் (வியாசர்)

இவ்விதம் கேட்டதும், பராக்ரமமும், பாவமற்றவனுமான பப்ருவாகனன், அந்த மணியை எடுத்து அர்ஜுனன் மார்பில் வைத்தான்.

इत्युक्तः स्थापयामास तस्योरसि मणिं तदा।

पार्थस्यामिततेजाः स पितुः स्नेहादपापकृत्।।

- மஹாபாரதம் (வியாசர்)

அந்த மணியை வைத்த உடனேயே, வீரனான அர்ஜுனன் உயிர் பெற்று, நீண்ட நேரம் தூங்கி எழுந்தவனை  போல, தன் சிவந்த கண்களை துடைத்து கொண்டு எழுந்தார்.

तस्मिन्न्यस्ते मणौ वीरो जिष्णु: उज्जीवितः प्रभुः।

चिरसुप्त हवोत्तस्थौ मृष्ट लोहित-लोचनः।।

- மஹாபாரதம் (வியாசர்)

சுயநினைவு பெற்று எழுந்திருந்த அர்ஜுனனை கண்ட பப்ருவாகனன் நமஸ்காரம் செய்தான்.

तमुत्थितं महात्मानं लब्धसंज्ञं मनस्विनम्।

समीक्ष्य पितरं स्वस्थं ववन्दे बभ्रुवाहनः।।

- மஹாபாரதம் (வியாசர்)

ப்ரபுவே! ஜனமேஜயா! இப்படி அர்ஜுனன் எழுந்ததும், இந்திரன் தேவலோக புஷ்பங்களை பொழிந்தான்துந்துபிகள் அடிக்கப்படாமலேயே, மேகங்கள் மோதி சப்தம் கொடுத்தது. ஆகாயத்தில், "நல்லது.. நல்லது" என்று மிகப்பெரிய ஒலி கேட்டது.

உறுதியான கைகளை உடைய அர்ஜுனன் எழுந்திருந்து களைப்பாறி, தன் பிள்ளையான பப்ருவாகனனை உச்சி முகர்ந்து கொஞ்சினார்.

उत्थाय च महाबाहुः पर्याश्वस्तो धनंजयः।।

बभ्रुवाहनम् आलिङ्ग्य समाजिघ्रत मूर्धनि।।

- மஹாபாரதம் (வியாசர்)

பிறகு, தனஞ்சயன் சோகத்தால் இளைத்த உலூபியுடன் தூரத்தில் நிற்கும் சித்ராங்கதையை பார்த்தார்.

ददर्श च अपि दूर अस्य मातरं शोक-कर्शिताम्।

उलूप्या सह तिष्ठन्तीं ततोऽपृच्छद् धनंजयः।।

- மஹாபாரதம் (வியாசர்)


அப்பொழுது தன் மகனை நோக்கி, "போர்க்களம் முழுவதும் சோகமும், ஆச்சர்யமும், சந்தோஷமும் கலந்து காணப்படுகிறதே! இது என்ன? உனக்கு தெரியுமானால் எனக்கு சொல்.

உன்னுடைய தாயான சித்ராங்கதை இந்த போர்க்களத்துக்கு ஏன் வந்தாள்? நாகராஜனின் புத்ரியான உலூபியும் ஏன் இங்கு வந்தாள்? என்னுடைய உத்தரவால் நீ என்னிடம் போர் செய்தாய் என்பது எனக்கு தெரியும்.

ஆனால் இந்த பெண்கள் போர்க்களத்துக்கு வந்ததற்கான காரணம் என்ன? என்று அறிய விரும்புகிறேன்!என்று கேட்டான்.

இதை கேட்ட மணலூர் அரசன், தலை வணங்கி நமஸ்கரித்து விட்டு, "உலூபியை கேளுங்கள்" என்றான்.

तम् उवाच तथा पृष्टो मणिपूरपति: तदा।

प्रसाद्य शिरसा विद्वान् उलूपी पृच्छ्यताम् इति।।

- மஹாபாரதம் (வியாசர்)


அர்ஜுனன் உலூபியை பார்த்து, "கௌரவ குலத்தை ஆனந்தப்படுத்துபவளே!  நீயும் மணலூர் அரசனுடைய தாயும் இந்த போர் களத்திற்கு வந்த காரணம் என்ன? 

किमागमनकृत्यं ते कौरव्य-कुलनन्दिनि।

मणलूरपते: मातुस्तथैव च रणाजिरे।।

- மஹாபாரதம் (வியாசர்)

நாக பெண்ணே! இந்த அரசனுடைய க்ஷேமத்துக்காக இங்கு வந்தாயா? மான் போன்ற விழி கொண்டவளே! அல்லது நீ என்னுடைய க்ஷேமத்திற்காக வந்தாயா?

அழகிய இடை கொண்டவளே! மங்களமாக இருப்பவளே! நானோ, பப்ருவாகனனோ அறியாமல் உனக்கு ஏதாவது அபசாரம் ஏதாவது செய்து விட்டோமா?

कच्चित्ते पृथुलश्रोणि नाप्रियं प्रियदर्शने।

अकार्षमहमज्ञानादयं वा बभ्रुवाहनः।।     

- மஹாபாரதம் (வியாசர்)

ராஜகுமாரியும், சித்ரவாகனனுடைய மகளும், உத்தமியுமான, உன்னுடைய ஸபத்னியுமான சித்ராங்கதை ஏதாவது தீங்கு செய்து விட்டாளா?" என்று வினவினான்.

कच्चिन्नु राजपूत्री ते सपत्नी चैत्रवाहनी।

चित्राङ्गदा वरारोहा नापराध्यति किञ्चन।।

- மஹாபாரதம் (வியாசர்)

இப்படி கேட்டதும், சிரித்து கொண்டே, உரகராஜனின் பெண்ணான உலூபி, "நீங்கள் எனக்கு எந்த தீங்கும் செய்யவில்லை. பப்ருவாகனனும் தீங்கு செய்யவில்லை. நான் கேட்கும் உதவிகளை கேட்டு செய்யும் சித்ராங்கதையும் எனக்கு எந்த தீமையும் செய்யவில்லை.

तमुवाचोरगपतेर्दुहिता प्रहसन्त्यथ।

न मे त्वमपराद्धोसि न हि मे बभ्रुवाहनः।

न जनित्री तथाऽस्येयं मम यो प्रेष्य वत्थिता।।

- மஹாபாரதம் (வியாசர்)

நான் செய்ததை உள்ளபடி உங்களுக்கு சொல்கிறேன். கேளுங்கள்.

நீங்கள் என்னை கோபித்து கொள்ள கூடாது. இதற்காக உங்களை தலைவணங்கி பிரார்த்திக்கிறேன்.

श्रूयतां यद्यथा चेदं मया सर्वं विचेष्टितम्।

न मे कोपस्त्वया कार्यः शिरसा त्वां प्रसादये।।

- மஹாபாரதம் (வியாசர்)

பிரபுவே! தனஞ்சயரே! உங்களுடைய ப்ரியத்துக்காகவே இதனை நான் செய்தேன்!  முழுமையாக கேளுங்கள்.

பார்த்தரே ! நீங்கள் மஹாபாரத யுத்தத்தில் சந்தனுவின் பிள்ளையான பீஷ்மரை அதர்மமாக கொன்றீர்கள். அதற்கு பிராயச்சித்தமாக இந்த காரியத்தை நான் செய்தேன்.

महाभारत-युद्धे यत्त्वया शान्तनवो नृपः।

अधर्मेण हतः पार्थ तस्यैषा निष्कृतिः कृता।।

- மஹாபாரதம் (வியாசர்)

வீரரே! யுத்தத்தில் பீஷ்மர் யுத்தம் செய்த போது, நீங்கள் அவரை கொல்லவில்லை.

நீங்கள் சிகண்டியுடன் சேர்ந்து, அவனை முன்னிட்டு, பீஷ்மரை கொன்றீர்கள். 

न हि भीष्मस्त्वया वीर युद्ध्यमानो हि पातितः।

शिखण्डिना तु संयुक्तस्तमाश्रित्य हतस्त्वया।।

- மஹாபாரதம் (வியாசர்)

இந்த காரியத்துக்கு பிராயச்சித்தம் செய்து கொள்ளாமல் உயிரை விட்டால், நிச்சயமாக நரகத்தில் விழுவீர்கள். நீங்கள் உங்கள் புத்ரனிடம் தோல்வி அடைவது ப்ராயச்சித்தமாக ஏற்படுத்தப்பட்டது.

तस्य शान्तिमकृत्वा त्वं त्यजेथा यदि जीवितम्।

कर्मणा तेन पापेन पतेथा निरये ध्रुवम्।

एषा तु विहिता शान्तिः पुत्राद्यां प्राप्तवानसि।।

- மஹாபாரதம் (வியாசர்)

உலகை காப்பவரே ! சிறந்த புத்திமானே !

நான் வஸுக்களையும் கங்கையையும் சந்தித்த போது, உங்களை பற்றி வஸுக்கள் பேசிக்கொண்டதை சொல்கிறேன், கேளுங்கள்.

वसुभि: वसुधापाल गङ्गया च महामते।

पुरा हि श्रुतमेतत्ते वसुभिः कथितं मया।।

- மஹாபாரதம் (வியாசர்)

அரசரே! பீஷமர் கொல்லப்பட்ட போது, வஸுக்கள் என்ற தேவர்கள்,  ஒன்று சேர்ந்து, கங்கையில் ஸ்நானம் செய்து விட்டு, கங்கா தேவியிடம் கடுமையான வார்த்தைகளை கூறினர்.

गङ्गाया: तीरम् आश्रित्य हते शान्तनवे नृप।

आप्लुत्य देवा वसवः समेत्य च महानदीम्।

इदमूचुर्वचो घोरं भागीरथ्या मते तदा।।

- மஹாபாரதம் (வியாசர்)

அவர்கள் கங்கையிடம், "அம்மா! அர்ஜுனன் சந்தனு மஹாராஜனின் மகனான பீஷ்மரிடம் நேருக்கு நேர் யுத்தம் செய்யாமல், வேறொருவருடன் யுத்தம் செய்யும் போது கொன்றான். ஆகையால், நாங்கள் அர்ஜுனனை சபிக்க நினைக்கிறோம்" என்றனர். அந்த கங்கையும், "அப்படியே செய்யுங்கள்" என்று சம்மதித்து விட்டாள்.

एष शान्तनवो भीष्मो निहतः सव्यसाचिना।

अयुद्ध्यमानः सङ्ग्रामे संसक्त: अन्येन भामिनि।।

तदनेनानुषङ्गेण वयमद्य धनञ्जयम्।

शापेन योजयामेति तथाऽस्त्विति च सा अब्रवीत्।।

- மஹாபாரதம் (வியாசர்)


இதை கேட்ட நான், பெரிதும் துக்கப்பட்டு, என் தகப்பனாரிடம் சென்று தெரிவித்தேன். இதை கேட்டு அவரும் பெரிதும் துக்கப்பட்டார்.

என் தகப்பனார் இதற்காக பல முறை அந்த வஸுக்களிடம் சென்று, அருள் புரியும் படி பிரார்த்தித்தார்.

पिता तु मे वसून्गत्वा त्वदर्थे समयाचत।

पुनः पुनः प्रसाद्यैतांस्त एनमिदमब्रुवन्।।

- மஹாபாரதம் (வியாசர்)

கடைசியாக, அவர்கள், "பாக்கியவானே! அர்ஜுனனுக்கு மணலூர்புரத்தில் வாலிபனான ஒரு பிள்ளை இருக்கிறான்.

पुत्रस्तस्य महाभाग मणलूर् ईश्वरो युवा।

स एनं रणमध्यस्थः शरैः पातयिता भुवि।।

- மஹாபாரதம் (வியாசர்)

அவன், அர்ஜுனனை போர்க்களத்தில் நின்று தன் பாணங்களால் அடித்து பூமியில் தள்ளுவான்இப்படி நடக்கும் போது, அர்ஜுனனுக்கு ஏற்பட்ட சாபம் நீங்கும். நீ கிளம்பலாம்" என்றனர்.

एवं कृते स नागेन्द्र मुक्तशापो भविष्यति।

गच्छेति वसुभिश्चोक्तो मम चेदं शशंस सः।।

- மஹாபாரதம் (வியாசர்)

வஸுக்கள் சொன்னதை, என் தந்தை எனக்கும் சொன்னார்.

அதை கேட்ட நான், உங்களை இந்த சாபத்தில் இருந்து விடுவித்தேன். உங்களை தேவர்களே நினைத்தாலும் தோற்கடிக்க முடியாது.

तच्छ्रुत्वा त्वं मया तस्माच्छापादसि विमोक्षितः।

न हि त्वां देवराजोऽपि समरेषु पराजयेत्।।

- மஹாபாரதம் (வியாசர்)

சாஸ்திரம் "புத்திரனும் நீயே" என்று சொல்கிறது. அப்படி  இருப்பதால், நீங்கள் உங்கள் புத்திரனால் வெற்றி கொள்ளப்பட்டதால் உங்களுக்கு எந்த தோஷமும் ஏற்படாது. பிரபுவே! நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?என்று கேட்டாள்.

आत्मा पुत्रः स्मृतस्तस्मात्तेनेहासि पराजितः।

न हि दोषो मम मतः कथं वा मन्यसे विभो।।

- மஹாபாரதம் (வியாசர்)

நடந்த விஷயங்களை தெளிவாக அறிந்து கொண்ட அர்ஜுனன், "தேவீ! நீ செய்த காரியங்கள் அனைத்தும் என் ப்ரியத்துக்காகவே செய்யப்பட்டது" என்றான்.

इत्येवमुक्तो विजयः प्रसन्नात्माऽब्रवीदिदम्।

सर्वं मे सुप्रियं देवि यदेतत्कृतवत्यसि।।

- மஹாபாரதம் (வியாசர்)

இப்படி  சொல்லி கொண்டே, தன் மகனான மணலூர் அரசனை பார்த்து, "அரசனே! வரும் சித்ராபூர்ணிமாவில் யுதிஷ்டிரருக்கு அஸ்வமேதம் நடக்க போகிறது. அதற்கு நீ, உன் மந்திரிகளோடும், இரண்டு தாயாருடனும் வர வேண்டும்" என்றார்.

इत्युक्त्वा सोऽब्रवीत्पुत्रं मणलूरपतिं जयः।

चित्राङ्गदायाः शृण्वन्त्याः कौरव्यदुहितुस्तदा।।

युधिष्ठिरस्य अश्वमेधः परिचैत्रीं भविष्यति।

तत्रागच्छेः सहामात्यो मातृभ्यां सहितो नृप।।

- மஹாபாரதம் (வியாசர்)

பார்த்தன் இப்படி சொன்னதும், கண்களில் கண்ணீருடன், தன் தகப்பனாரை பார்த்து,

"தர்மம் அறிந்தவரே! உம்முடைய உத்தரவை ஏற்று வருகிறேன். அஸ்வமேதம் என்னும் மஹாயாகத்தில், இரட்டை பிறப்பாளர்களுக்கு பரிமாறும் சேவையை நானே செய்கிறேன்.

उपयास्यामि धर्मज्ञ भवतः सासनादहम्।

अश्वमेधे महायज्ञे द्विजाति परिवेषकः।।

- மஹாபாரதம் (வியாசர்)

தர்மம் அறிந்தவரே! நீங்கள் உங்கள் இரண்டு மனைவியோடு சேர்ந்து உங்களுடையதான இந்த நகருக்குள் வர வேண்டும். நீங்கள் இதில் ஆலோசிக்க அவசியமே இல்லை.

मम त्वनुग्रहार्थाय प्रविशस्व पुरं स्वकम्।

भार्याभ्यां सह धर्मज्ञ माभूत्तेऽत्र विचारणा।।

- மஹாபாரதம் (வியாசர்)

பிரபுவே! இங்கு ஒரு இரவு உங்கள் மாளிகையில் சுகமாக வஸிக்க வேண்டும். பிறகு மீண்டும் யாக குதிரையை பின் தொடர்ந்து செல்லுங்கள்என்று பிரார்த்தித்தான்.

उषित्वेह निशामेकां सुखं स्वभवने प्रभो।

पुनरश्वानुगमनं कर्तासि जयतांवर।।

- மஹாபாரதம் (வியாசர்)

வானர கொடி உடைய அர்ஜுனன் தன் பிள்ளையை பார்த்து சிரித்து கொண்டே, "உறுதியான புஜங்களை உடையவனே! நான் அஸ்வமேத யாகத்தில்  தீக்ஷை பெற்று வந்திருக்கிறேன் என்பது உனக்கு தெரியும்.

इत्युक्ताः स तु प्रत्रेण तदा वानर केतनः।

स्मयन्प्रोवाच कौन्तेयस्तदा चित्राङ्गदा-सुतम्।।

विदितं ते महाबाहो यथा दीक्षां चराम्यहम्।

न स तावत् प्रवेक्ष्यामि पुरं ते पृथुलोचन।।

- மஹாபாரதம் (வியாசர்)

தாமரை போன்ற கண்கள் உடையவனே! இப்போது உன்னுடைய நகரத்துக்குள் நான் வர கூடாது.

இந்த யாக குதிரை தன் இஷ்டத்துக்கு சென்று கொண்டிருக்கிறது. உனக்கு க்ஷேமம் உண்டாகட்டும். நான் செல்கிறேன். நான் இப்பொழுதே போக வேண்டும்" என்றார்

यथाकामं व्रजत्येष यज्ञिय अश्वो नरर्षभ।

स्वस्ति तेऽस्तु गमिष्यामि न स्थानं विद्यते मम।।

- மஹாபாரதம் (வியாசர்)

அப்பொழுது அர்ஜுனன் பப்ருவாகனனாலும், அவனது இரண்டு மனைவிகளாலும் விதிப்படி பூஜிக்கப்பட்டு, அவர்கள் அனுமதியோடு மேலும் தன் பயணத்தை பின் தொடர்ந்தார்

स तत्र विधिवत्तेन पूजितः पाकशासनिः।

भार्याभ्यामभ्यनुज्ञातः प्रायाद्भरतसत्तमः।।

- மஹாபாரதம் (வியாசர்)

Tuesday 10 January 2023

ஜெய்ஶ்ரீராம் என்று ஏன் சொல்கிறோம்? 'ஸ்ரீ ராம சந்திர கீ ஜெய்', 'ஸாது சங்க கீ ஜெய்', 'ஸத் குரு மஹராஜ் கீ ஜெய் என்று ஏன் சொல்கிறோம்.?

ஜெய்ஶ்ரீராம் என்று ஏன் சொல்கிறோம்?  

 • 'ஸ்ரீ ராம சந்திர கீ ஜெய்', 
 • 'ஸாது சங்க கீ ஜெய்', 
 • 'ஸத் குரு மஹராஜ் கீ ஜெய்' 
என்று ஏன் சொல்கிறோம்.?

பொதுவாக, ஒருவர் வெற்றி பெற்றால் தானே 'ஜெய்' என்று கோஷம் போடுவார்கள்? 

கடவுளுக்கு எதற்கு வெற்றி கோஷம்? அவர் அப்படி என்ன வெற்றி பெற்றார்?


பகவானுக்கும், நமக்கும் ஒரு போட்டி பல யுகங்களாக நடந்து கொண்டே இருக்கிறது. 

இது பகவானே இஷ்டப்பட்டு செய்யும் ஒரு லீலை (விளையாட்டு). 


அப்படி என்ன லீலை இது?

நம்மை படைத்து

நாம் வாழ அழகான இந்த பூமியையும் கொடுத்து,

உடம்பையும் கொடுத்து, 

மனம், புத்தியையும் கொடுத்து, 

"இவன் இதையெல்லாம் கொடுத்த என்னை பார்க்கிறானா? அல்லது, நான் கொடுத்த இந்த ஆச்சர்யங்களில் மூழ்கி இருக்கிறானா?

என்று பார்க்கிறார்.

இன்று வரை, 

உலக விஷயங்களில் மூழ்கி தான் இருக்கிறோம். 

இப்பொழுது இருக்கும் ப்ரம்மாவுக்கே அவர் கணக்கு படி, 50 வயது முடிந்து விட்டது

நாமும் பல ஜென்மங்களாக பிறந்து கொண்டே இருக்கிறோம். 

இன்று வரை முக்தி அடையாமல் நாம் இருப்பதை கவனித்தாலேயே, உலக ஆசைகளை விட்டு வெளியே நாம் வரவில்லை என்று அறிகிறோம். 


பகவானை தியானிப்பதை விட, நமக்கு அவர் படைத்த இந்த உலகத்திலேயே நமக்கு நாட்டம் உள்ளது. 


"பகவானால் படைக்கப்பட்ட உலகமே இவ்வளவு ஈர்க்கிறதே, இதை படைத்த பகவான் எப்படிப்பட்டவனாக இருப்பார்?"  

என்று எப்பொழுதாவது இவன் தன்னை பார்ப்பானா என்று பெருமாளும்,  பார்த்துக்கொண்டிருக்கிறார். 


பல யுகங்கள் ஆனாலும், பல ஊர்களில் பிறந்தாலும், ஒவ்வொரு ஊரிலும் கோவில் கொண்டு, "இந்த ஜென்மத்திலாவது நம் கவனம் இவனுக்கு வருமா?" என்று காத்துக் கொண்டு இருக்கிறார் பெருமாள்.


நமக்கோ, அவர் படைத்த உலகம் அலுத்தபாடில்லை. பகவான் நினைப்பு இன்று வரை இல்லை.  

அவரும் நம்மை விடுவதாக இல்லை


கஷ்டம் வரும் பொழுது பெருமாளை நோக்கி வருகிறோம். 

அது சரியானவுடன், மீண்டும் உலக விஷயங்களில் போகிறோம். 


"சரி, விளையாடட்டும்" என்று பெருமாளும்,  பார்த்துக்கொண்டிருக்கிறார். 


இது யுகம் யுகமாக நடந்து கொண்டே இருக்கிறது. 


"தான் படைத்த உலகம் தானே. ரசிக்கட்டும்", என்று அவரும் பொறுமையாக காத்துக் கொண்டு இருக்கிறார். 


"சம்பாதிப்பது, உண்ணுவது, ஆடம்பரமாக ட்ரெஸ் பண்ணுவது" என்ற எண்ணங்களுக்கு மத்தியில், நமக்கும் ஒரு 'ஸத் சங்கம் தேவை' என்ற எண்ணம் லட்சத்தில் ஒருவனுக்கு உண்டாகிறது. 


இப்படி ஆசைப்படும் ஒருவனுக்காக, பகவானே, அவனுக்கு 'ஸத் சங்கத்தை' ஏற்படுத்தி தருகிறார்.


ஸத் சங்கத்தினால் மட்டுமே, உலக நாட்டம் குறைந்து, நம் கவனம் பகவானிடம் மெல்ல திரும்புகிறது. 

ஸத் சங்கத்தினால் மட்டுமே ஒருவனுக்கு பக்தி வருகிறது.


பல யுகங்கள் கடந்து, இது நாள் வரை, 

 • எப்படி சம்பாதிப்பது? 
 • எதையெல்லாம் உண்ணுவது? 
 • எப்படி ஆடம்பரமாக ட்ரெஸ் பண்ணுவது? 

என்று மட்டுமே எண்ணிய இந்த மனது, ஸத் சங்கத்தால் திடீரென்று, 

 • எப்படி பகவான் இருப்பார்? 
 • முக்தி என்றால் என்ன? 
 • எங்கு இருக்கிறார்? 
 • நாம் எங்கிருந்து வந்தோம்? 

என்ற பல கேள்விகளை கேட்க வைத்து, கவனத்தை பகவானிடம் மெல்ல திருப்புகிறது. 


இப்படி உலகத்தை மட்டுமே இது நாள் வரை பார்த்து கொண்டிருந்த நம்மையும், பகவான் பக்கம் திருப்பிய 'ஸத் சங்கத்திற்கு, ஸத் குருவிற்கு' நாம் சொல்லும் வெற்றி கோஷமே 

'ஸாது சங்க கீ ஜெய்', 'ஸத் குரு மஹராஜ் கீ ஜெய்'. 


பல யுகங்களாக பகவானின் நினைவு இல்லாமல், தப்பித்து கொண்டே இருந்த ஒரு ஜீவன் ஸத் சங்கத்தால், ஸத் குருவால், பகவானிடம் மாட்டிக்கொண்டு விடுகிறான். 


இறுதியில், தன் தோல்வியை ஒப்புக்கொண்டு, நம்மை பகவானிடம் பிடித்து கட்டிபோட்ட 'ஸத் சங்கத்திற்கும், ஸத் குருவுக்கும், பகவானுக்கும் வெற்றி' என்று தன் வாயால் சொல்லி சரணடைகிறான்.


பகவான் தன்னை ஜெயித்ததில் ஆனந்தம் கொள்கிறான். 

தன் தோல்வியை ஒப்புக்கொண்டு, குருவின் வெற்றியை, பகவானின் வெற்றியை 

 1. 'பகவான் ஸ்ரீ ராம சந்திர கீ ஜெய்', 
 2. ஜெய் ஶ்ரீராம்,
 3. 'ஸாது சங்க கீ ஜெய்', 
 4. 'ஸத் குரு மஹராஜ் கீ ஜெய்' 

என்று கொண்டாடுகிறான்.

Wednesday 4 January 2023

மகாபாரதம் முதல் ஸ்லோகம். நாராயண தியான ஸ்லோகம்... அறிவோம் மகாபாரதம்

நாராயண தியான ஸ்லோகம்

श्रीवेद व्यासाय नमः।। 1

नारायणं नमस्कृत्य 

नरं चैव नरोत्तमम्।

देवीं सरस्वतीं व्यासं 

ततो जयम् उदीरयेत् ।। 2

नारायणं सुरगुरुं जगदेक-नाथं 

भक्त-प्रियं सकल-लोक-नमस्कृतं च।

त्रैगुण्य-वर्जितम् अजं विभुम् आद्यम् ईशं 

वन्दे भवघ्नम् अमर-असुर सिद्ध वन्द्यम्'।। 3

- மஹாபாரதம் (முதல் தியான ஸ்லோகம்) - வியாசர்

வேத வியாசரை வணங்குகிறேன் (1)

நாராயணனை நமஸ்கரிக்கிறேன். நரர்களில் உத்தமரான நரனையும் (அர்ஜுனனையும்) நமஸ்கரிக்கிறேன். நர-நாராயணனை நமஸ்கரிக்கிறேன். வாக்குக்கு தேவதையான சரஸ்வதியையும், வ்யாஸ பகவானையும் பல்லாண்டு பாடுகிறேன். (2)

தேவர்களுக்கு (சுரர்கள்) குருவும், உலகங்களுக்கு ஒரே நாதனும், பக்தர்களுக்கு ப்ரியமானவரும், அனைத்து உலகத்து மக்களும் நமஸ்கரிப்படுபவரும், முக்குணங்களுக்கு அப்பாற்பட்டு நிர்குணமாக இருப்பவரும், எப்பொழுதும் இருப்பவரும் ஜனனமில்லாதவரும், எங்கும் வ்யாபித்து இருப்பவரும், முதல்வரும், தலைவனும் (ஈசன்), தேவர்களாலும் அசுரர்களாலும் ஸித்தர்களாலும் வந்தனம் செய்யப்படுகின்ற நாராயணனை நான் வந்தனம் செய்கிறேன். (3)


सौति: उवाच। (உக்கிரஸரவஸ் என்ற ஸூத பௌராணிகர் சொல்கிறார்)

आद्यं पुरुषम् ईशानं 

पुरुहूतं पुरुष्टुतम्।

ऋतम् एकाक्षरं ब्रह्म 

व्यक्त-अव्यक्तं सनातनम्।।

- மஹாபாரதம் - வியாசர்

ஆதி புருஷரும், தலைவரும் (ஈசனும்), அனைவராலும் யாகத்தில் அழைக்கப்பட்டவரும், அனைவராலும் ஸ்துதிக்கப்பட்டவரும், சத்யமே வடிவானவரும், அழிவில்லாத ஒரே பரப்ரம்மமாக இருப்பவரும், உலகமாக (ஸ்தூலமாக) தெரிபவரும் சூக்ஷ்மமாக (ஆத்மாவாக) இருப்பவரும், எப்பொழுதும் இருப்பவரும் (சனாதனம்), 

असच्च सच्च एव च 

यद् विश्वं सदसतः-परम्

पर आवराणां स्रष्टारं 

पुराणं परम् अव्ययम्।।

- மஹாபாரதம் - வியாசர்

அஸத்யமாக இருப்பவரும் (இல்லை என்பவருக்கு தன்னை காட்டாமலும்), ஸத்யமாகவும் இருப்பவரும் (உண்டு என்பவருக்கு தன்னை காட்டுபவரும்), உலகமாக இருப்பவரும், உலகங்களுக்கு அப்பாற்பட்டவரும், மேலானவைகளையும் கீழானவைகளையும் படைத்தவரும், எப்பொழுதுமே புதிதாகவே இருப்பவரும், பரதத்துவமாக இருப்பவரும், மாறுதல் இல்லாதவரும், 

मङ्गल्यं मङ्गलं विष्णुं 

वरेण्यम् अनघं शुचिम्।

नमस्कृत्य हृषीकेशं 

चराचर गुरुं हरिम्।।

- மஹாபாரதம் - வியாசர்

என்றும் மங்களமானவரும், மங்களத்தை தருபவரும், எங்கும் வ்யாபித்து இருப்பவரும், ப்ரார்த்திக்க தக்கவரும், பாபத்தை போக்குபவரும், பரிசுத்தமானவரும், 5 புலன்களை ஆள்பவரும், அசைகின்ற அசையாத உயிர்கள் அனைத்துக்கும் பிதாவாக இருக்கும் ஹரியை நான் நமஸ்கரிக்கிறேன்.

Tuesday 3 January 2023

துரியோதனின் சகோதரன் 'யுயுத்ஸு' யார் பக்கம் நின்று போரிட்டான்? அறிவோம் மகாபாரதம் (வியாசர்)

பகவத்கீதை உபதேசித்து, பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அர்ஜுனனை சோகத்தில் இருந்து விடுவித்தார்.

யுதிஷ்டிரர் போர்க்களத்தில் கௌரவ சேனைக்கு நடுவே சென்று, பீஷ்மர், துரோணர், கிருபர், மாத்ரியின் சகோதரரும் (மாதுலரும்/மாமா) மத்ர தேச அரசருமான சல்யன் போன்றவர்களிடம் போருக்கான அனுமதியும், அவர்களின் ஆசீர்வாதத்தையும் பெற்றார்.


सञ्जय उवाच। (சஞ்சயன் ஞான திருஷ்டியால் மேலும் சொல்கிறார்)

அப்பொழுது,

वासुदेवस्तु राधेयमाहवे अभिजगाम वै।

तत एनम् उवाचेदं पाण्डवार्थे गदाग्रजः ।।             

श्रुतं मे कर्ण भीष्मस्य द्वोषात्किल न योत्स्यसे।

अस्मान्वरय राधेय यावद्भीष्मो न हन्यते ।।

- மஹாபாரதம் (வியாசர்)

வாசுதேவ கிருஷ்ணர், கர்ணனை நோக்கி சென்றார். பாண்டவர்களுக்காக கர்ணனிடம் இவ்வாறு பேசலானார். "ராதையின் புதல்வனே! ராதேயா ! பீஷ்மரிடம் உனக்கு இருக்கும் த்வேஷத்தால், நீ யுத்தம் செய்யப்போவதில்லை என்று கேள்விப்பட்டேன். பீஷமர் இருக்கும் வரை நீ எங்களுடன் சேர்ந்து யுத்தம் செய்யலாமே!"

हते तु भीष्मे राधेय पुनरेष्यसि संयुगम् ।

धार्तराष्ट्रस्य साहाय्यं यदि पश्यसि चेत्समम् ।।

- மஹாபாரதம் (வியாசர்)

"ராதேயா ! பீஷமர் ஒருவேளை கொல்லப்பட்டால், அப்போது நீ தார்த்தராஷ்டிரனான துரியோதனனுக்கு உதவி செய்ய விரும்பினால் மறுபடியும் அவர்கள் பக்கம் இருந்து யுத்தம் செய்யலாமே!" என்று கேட்டார்.

कर्ण उवाच। (கர்ணன் சொன்னான்)

न विप्रियं करिष्यामि धार्तराष्ट्रस्य केशव ।

त्यक्तप्राणं हि मां विद्धि दुर्योधन हितैषिणम् ।।

- மஹாபாரதம் (வியாசர்)

"கேசவா! துரியோதனனுக்கு பிடிக்காத காரியத்தை நான் செய்ய  மாட்டேன். நான் துரியோதனுக்கு நன்மை செய்வதிலும், அவனுக்காக என் உயிரை கொடுப்பதிலும் விருப்பம் உள்ளவன் என்று நீங்கள் அறிவீர்கள்" என்று கூறினான்.


सञ्जय उवाच। (சஞ்சயன் ஞான திருஷ்டியால் மேலும் சொல்கிறார்)

तच्छ्रुत्वा वचनं कृष्णः संन्यवर्तत भारत ।

युधिष्ठिरपुरोगैश्च पाण्डवैः सह संगतः ।।            

- மஹாபாரதம் (வியாசர்)

கர்ணன் பதிலுரைத்த பிறகு, ஸ்ரீ கிருஷ்ணர் யுதிஷ்டிரரும் பாண்டவர்களும் இருக்கும் பாண்டவ சேனை பக்கம் சென்றார்.


अथ सैन्यस्य मध्ये तु प्राक्रोशत् पाण्डवाग्रजः ।

योऽस्मान्वृणोति तमहं वरये साह्यकारणात् ।। 

- மஹாபாரதம் (வியாசர்)

பாண்டவ சேனையின் மத்தியில் இருந்த யுதிஷ்டிரர், "எங்களை எவர்கள் விரும்புகின்றார்களோ, அவர்களை நான் உதவிக்கு அழைக்கிறேன்" என்று இரைந்து கூறினார்.

अथ तान्समभिप्रेक्ष्य युयुत्सु:  इदमब्रवीत् ।

प्रीतात्मा धर्मराजानं कुन्तीपुत्रं युधिष्ठिरम् ।।

- மஹாபாரதம் (வியாசர்)

இப்படி யுதிஷ்டிரர் கூறியதை கேட்ட துரியோதனின் சகோதரனும், த்ருதராஷ்டிரனுக்கும் அவன் தாதிக்கும் பிறந்தவனான நல்ல மனமுடைய யுயுத்ஸு, தர்மராஜனும் குந்தி புத்ரனுமான யுதிஷ்டிரரை பார்த்து இவ்வாறு பேசலானான்.


अहं योत्स्यामि भवतः संयुगे धृतराष्ट्र-जान् ।

युष्मदर्थं महाराज यदि मां वृणुषेऽनघ ।।

- மஹாபாரதம் (வியாசர்)

"மஹாராஜரே! குற்றமற்றவரே! நீர் விரும்பினால் நான் உம்முடைய சேனையோடு இருந்து கொண்டு, த்ருதராஷ்டிர புத்ரர்களோடு போர் புரிவேன்." என்றான்.


युधिष्ठिर उवाच। (இதை கேட்ட யுதிஷ்டிரர் பதில் சொல்ல ஆரம்பித்தார்)

एह्येहि सर्वे योत्स्यामस्तव भ्रातॄनपण्डितान्।

युयुत्सो वासुदेवश्च वयं च ब्रूम सर्वशः ।।            

वृणोमि त्वां महाबाहो युध्यस्व मम कारणात्।

त्वयि पिण्डश्च तन्तुश्च धृतराष्ट्रस्य दृश्यते ।।

भजस्वास्मान्राजपुत्र भजमानान् महाद्युते ।

न भविष्यति दुर्बुद्धि: धार्तराष्ट्रोऽत्यमर्षणः ।।

- மஹாபாரதம் (வியாசர்)

"யுயுத்ஸு..  வா..  வா..  நாம் அனைவரும் உன்னுடைய சகோதர்களுடன் போர் புரிவோம். வாசுதேவ கிருஷ்ணரும் நாங்களும் சேர்ந்து சொல்கிறோம். உறுதியான புஜங்கள் கொண்டவனே! நான் உன்னை ஏற்கிறேன். எனக்காக நீ யுத்தம் செய். உன்னால் திருதராஷ்டிரரின் சந்ததியும், பித்ருகளுக்கு பிண்டமும் கிடைக்க போகிறது என்று பார்க்கிறேன். கெட்ட புத்தியுள்ளவனும், பொறாமை குணமுள்ளவனுமான துரியோதனன் இனி இருக்க போவதில்லை" என்றார்.


सञ्जय उवाच।  (சஞ்சயன் ஞான திருஷ்டியால் த்ருதராஷ்ட்ரிடம் மேலும் சொல்கிறார்)

ततो युयुत्सुः कौरव्यान् परित्यज्य सुतांस्तव।

जगाम पाण्डु पुत्राणां सेनां विश्राव्य दुन्दुभिं ।।

- மஹாபாரதம் (வியாசர்)

அரசே! இதற்கு பிறகு, யுயுத்சு கௌரவ சேனையுள்ள உன் புத்திரர்களை விட்டு விட்டு, துந்துபி வாத்யத்தை முழங்கி கொண்டே, பாண்டு புத்திரர்களின் சேனையை அடைந்தான்.


அதன் பிறகு,

மிகவும் உற்சாகத்துடன்  யுதிஷ்டிரர், தங்கத்தால் பிரகாசமாக இருக்கும் கவசத்தை மறுபடியும் அணிந்து கொண்டார்.


பாண்டவர்கள் அனைவரும் அவரவர்கள் தேரில் ஏறிக்கொண்டார்கள்.