Followers

Search Here...

Showing posts with label earth. Show all posts
Showing posts with label earth. Show all posts

Saturday 23 November 2019

உலகம் எப்படி உருவானது? நெருப்பு முதலில் உருவானதா, இல்லை காற்று முதலில் உண்டானதா? எந்த வரிசையில் உருவாக்கப்பட்டது என்று ஹிந்து சாஸ்திரம் சொல்கிறது? ஹிந்துக்கள் தெரிந்து கொள்ள வேண்டாமா?

பரவாசுதேவன் "மோக்ஷம் அடையாத கோடிக்கணக்கான ஜீவன்களை, 'தமஸ்' என்ற அஞான நிலையில் இருந்து எழுப்பி, 
மீண்டும் பிறக்க செய்து, தன்னிடம் பக்தி செய்யும் ஜீவனுக்கு மோக்ஷத்தை (வைகுண்டம்) கொடுக்க, உலகத்தை மீண்டும் ஸ்ருஷ்டி செய்ய சங்கல்பித்தார்".




'தமஸ்' என்றால் என்ன என்று தெரிந்து கொள்ள இங்கு படிக்கவும்.

பரவாசுதேவனிடமிருந்து (அ) "ஓம் (அஉம)" என்ற தாரக மந்திரம் வெளிப்பட்டது.
"ஓம்" என்ற தாரக மந்திரத்தில் "வேத மந்திரங்கள்" வெளிப்பட்டது.
"வேத மந்திரங்களை" கொண்டு "ஆகாயம், காற்று, நெருப்பு, நீர், மண் (உலகம்/நிலம்)" என்ற பஞ்ச பூதங்கள் வெளிப்பட்டது.


"பஞ்ச பூதங்களின்" தன்மையுடன்,
மனித, விலங்கு, பறவைகள் போன்றவை நிலத்திலிருந்து உண்டானது..

வேத மந்திரங்களே,
'ஆகாயத்தை' ஸ்ருஷ்டி செய்தது.
அதை தொடர்ந்து,
'காற்று' ஸ்ருஷ்டிக்கப்பட்டது.
அதை தொடர்ந்து,
'நெருப்பு' ஸ்ருஷ்டியானது.
அதை தொடர்ந்து,
'நீர்' ஸ்ருஷ்டிக்கப்பட்டது.
அதை தொடர்ந்து,
'நிலம்' ஸ்ருஷ்டிக்கப்பட்டது.

வேத மந்திரங்களே, இப்படி பஞ்ச (5) பூதங்களை, இந்த "குறிப்பிட்ட வரிசையில் உருவாக்கியது" என்று உலக ஸ்ருஷ்டியை பற்றி வேதம் சொல்கிறது.
பரவாசுதேவன் வேத மந்திரங்களை கொண்டு, எதற்காக இந்த வரிசையில் உலகை ஸ்ருஷ்டி செய்ய ஆரம்பித்தார்?
இதற்கு ஏதாவது அறிவுபூர்ணமான காரணம் உண்டா?
என்ற கேள்வி நமக்கு எழலாம்..

வேதம் ஒலி ரூபமானது..
"ஒலியில் (sound) இருந்து உலகம் (matter) உருவானது" என்று நம் வேதம் சொல்கிறது..

வேதத்தில் "கௌ:" (cow) என்ற சப்தத்தை (ஒலி) கேட்ட பின் தான், ப்ரம்ம தேவன், பசுமாடு என்ற உடலை ஸ்ருஷ்டி செய்தார் என்கிறது..

"ஒலியில் (sound) இருந்து உலகம் (matter) உருவானது" என்று நம் வேதம் சொல்கிறது..

வேத மந்திரங்களே இதிலிருந்து தான் வெளிப்பட்டது என்று உணரும் போது தான் இந்த "ஓங்கார நாதத்தின் சக்தியை" நம்மால் புரிந்து கொள்ள முடியும்.

வேதத்துக்கும் மூலமாக இருப்பதால், இந்த மந்திரத்தின் சக்தி எல்லை அற்றது...மோக்ஷத்தை தரவல்லது..

"ஓம்" என்ற பிரணவத்தின் விளக்கத்தை தெரிந்து கொள்ள இங்கு படிக்கவும்
இதன் அர்த்தத்தை (அஉம). ப்ரம்மத்தில் லயிக்கும் ஞானியான குருவிடம் மட்டுமே உபதேசம் பெற்று, இந்த ஓங்காரத்தை ஜபிக்க வேண்டும் என்று பல கட்டுப்பாடுகள் உள்ளது...

வேதம் அனைவரும் படிக்க இயலாது.. 
மிகவும் கடினம்.. புரிந்து கொள்வது அதை விட கடினம்...

"வேதம் அனைத்தும்" ஓம் என்ற ஓங்காரத்தில் அடங்கிவிடுகிறது.
ஆதலால் ஓம் என்ற மந்திரம் ஸித்தி ஆனால், வேதம் கொடுக்கும் பலன்களை அடைந்து விட முடியும். 
ஆனாலும் பிரணவ மந்திரத்தை நாமாக சொன்னால் பலிக்காது. அனைவரும் சொல்ல கூடாது.. 
குரு மூலமாக தான் உபதேசம் பெற்று சொல்ல வேண்டும். 
இந்த நேரத்தில், இந்த காலத்தில், தான் சொல்ல வேண்டும் 
என்று பல கட்டுப்பாடுகள் விதிக்கிறது..




பரவாசுதேவனின் கருணையால், ஓம் என்ற ஓங்காரமே உருமாறி "ராம" என்ற தாரக மந்திரமாக வெளிப்பட்டது...

சிவபெருமான் ஜெபிப்பதும் "ராம" நாமமே...
ஹனுமான் ஜெபிப்பதும் "ராம" நாமமே...

"ராம" என்ற தாரக மந்திரம், ராமர் அவதரிக்கும் முன்பேயே இருந்தது ஒலி ரூபமாக...
அந்த ராம என்ற ஒலிக்கு உருவம் கொடுக்க, பரவாசுதேவனே "ஸ்ரீ ராமராக" அவதரித்தார்...

ஒலியில் இருந்து தான் ஆகாயம் வந்தது,
ஒலியில் இருந்து தான் காற்று வந்தது,
ஒலியில் இருந்து தான் நெருப்பு வந்தது,
ஒலியில் இருந்து தான் நீர் வந்தது,
ஒலியில் இருந்து தான் மண் (நிலம்) வந்தது.
வேதம் கூறும் இந்த அறிவியலை,
sound theory என்ற இந்த அறிவியலை இன்று விஞ்ஞானிகள் ஆராய்ச்சிகள் செய்து கொண்டு இருக்கின்றனர்..

வேத மந்திரங்கள் "ஏன் ஆகாயம், காற்று, நெருப்பு, நீர், நிலம் என்ற இந்த வரிசையில் உலகத்தை உருவாக்கியது?
வரிசையை மாற்றி உலகத்தை உருவாக்கி இருக்கலாமே? 
என்று ஒரு கேள்வியை, பிற போலியான கற்பனை மதத்தில் கேட்டு இருந்தால்
"எதிர் கேள்வி கேட்க கூடாது" என்று சொல்லி வாயை மூடி இருப்பார்கள்,
அல்லது
கலிலியோ போன்றவர்கள் "உலகம் உருண்டை, தட்டை அல்ல" என்று சொன்னதற்கு அடித்து மன்னிப்பு கேட்க வைத்து இருப்பார்கள்..

நம் வேதம் கற்பனையும் அல்ல..
பரவாசுதேவன் நாராயணனும் கற்பனையும் அல்லவே..  
நிஜமான தெய்வங்கள்.. 
நிஜமான அறிவியல் ஆயிற்றே நம் வேதம்.

வேதம் "ஒலி" ரூபமானது..
தவறான உச்சரிப்பு கொண்டு வேத மந்திரங்கள் சொன்னால், தவறான விளைவுகளை தர வல்லது.
சரியான உச்சரிப்பு கொண்டு வேத மந்திரங்கள் சொன்னால், அந்த மந்திரத்துக்கான பலனை தானே தர வல்லது.

சரியான முறையில் இன்று கூட வருண ஜபம் செய்து, மழை வர வைக்கிறார்கள்..

கும்பகர்ணன் "நித்ய" என்று சொல்வதற்கு பதில் "நித்ரா" என்று தவறாக உச்சரித்து,
"என்றும் அழியாத நிலை வேண்டும்" என்று கேட்பதற்கு பதில்
"தூங்கி கொண்டே இருக்க வேண்டும்" என்று ப்ரம்ம தேவனிடம் கேட்டு, கடும் தவம் செய்தும், நினைத்த பலனை அடைய முடியாமல் அழிந்தான்.

பொதுவாகவே நாம் நல்ல வார்த்தைகளே பேசினால், இறுக்கமான சூழ்நிலையை கூட மாற்றி கொள்ளலாம்.
வாக்குக்கு (ஒலிக்கு) "அழிக்கவும், ஆக்கவும் சக்தி உண்டு".

ஆனந்தமாகவும், உற்சாகமாகவும், அருமையாக பேசும் பேச்சாளர்கள் அனைவருமே 'உலகில் பிரகாசிக்கின்றனர்'.

அரசியலில், 'பேசியே' தமிழ்நாட்டை பிடித்தவர்கள் கூட உண்டு..

இவை அனைத்துமே, நம் வேத சொல்லும் "sound theory"ல் அடங்கி விடுகிறது..

பேச்சாளர்கள் அனைவருமே, ஹிந்து மதத்தின் அற்புதத்தை கவனிக்க வேண்டும்.. போற்ற வேண்டும்.

வேதமே "ஒலி" (sound) வடிவமாக இருப்பதால்,
வேதத்துக்கே "சப்த பிரம்மம்" என்று இன்னொரு பெயரும் உண்டு.
முதலாவதாக,
"சப்த ரூபமான 'வேத ஒலியே' (Vedic Sound), சப்த ரூபமான (sound waves) 'ஆகாயத்தை' (space) உருவாக்கியது"
என்று வேதம் உலக ஸ்ருஷ்டி வரிசையை சொல்ல ஆரம்பிக்கிறது.

நம் உலகை தாண்டி பல மைல் சென்று பார்த்தால், பறந்து விரிந்த  ஆகாயம் (Space) இருப்பது தெரியும்.
அங்கு காற்றும் இல்லாமல் இருக்கிறது, சப்தம் உள்ளது..
இந்த சப்தங்களை, வேத சப்தங்கள் என்று தியானத்தால் அறிய முடிந்தது யோகிகளால்.

இன்று நவீன கருவிகளால், பல அலைவரிசையில் பல விதமான சப்தங்கள் இருப்பதை அறிகிறார்கள்..
இரண்டாவதாக,
"சப்தம் (sound waves) என்ற குணத்தை கொண்ட ஆகாயமே (space), 
'ஸ்பரிசம்' (தொடுதல் touch) என்ற குணத்தை வெளிப்படுத்தி,  காற்றை (air) உருவாக்கியது" 
என்று வேதம் உலக ஸ்ருஷ்டி வரிசையை தொடர்கிறது.




இங்கு நாம் கவனித்துடன் உணர வேண்டியது...
ஆகாயத்தில் - "சப்தம்" (Sound) என்ற ஒரே குணம் தான் உண்டு.
ஆகாயத்திற்கு அடுத்து உருவான, காற்றில் (Air) - "சப்தம், ஸ்பரிசம்" என்ற இரண்டு குணங்கள் இருப்பதை அறியலாம்.

காற்றுக்கு, "ஸ்பரிசம்" (தொடுதல் touch) என்ற தனித்த குணமும்,
ஆகாயத்தின் "சப்தம்" (sound) என்ற குணமும் சேர்ந்து உள்ளது...
மூன்றாவதாக,
"சப்தம் (sound), ஸ்பரிசம் (தொடுதல் touch) என்ற 2 குணங்களை கொண்ட காற்று (air),  
'வடிவம்' (see) என்ற குணத்தை வெளிப்படுத்தி,  நெருப்பை (fire) உருவாக்கியது" 
என்று வேதம் உலக ஸ்ருஷ்டி வரிசையை தொடர்கிறது.



இங்கு நாம் கவனித்துடன் உணர வேண்டியது...
ஆகாயத்தில் - "சப்தம்" (Sound) என்ற ஒரே குணம் தான் உண்டு.
ஆகாயத்திற்கு அடுத்து உருவான, காற்றில் (Air), - "சப்தம், ஸ்பரிசம்" என்ற இரண்டு குணங்கள் இருப்பதை அறியலாம்.
காற்றுக்கு பின் உருவான நெருப்பில் (fire) - "சப்தம், ஸ்பரிசம், வடிவம்" என்ற மூன்று குணங்கள் இருப்பதை அறியலாம்.

நெருப்புக்கு, "வடிவம்" (see) என்ற தனித்த குணமும்,
காற்றின் குணமான "சப்தம், ஸ்பரிசம்" (sound) என்ற இரு குணங்களும் சேர்ந்து உள்ளது...
நான்காவதாக,
"சப்தம் (sound), ஸ்பரிசம் (தொடுதல் touch), வடிவம் (see) என்ற 3 குணங்களை கொண்ட நெருப்பு (fire), 
'சுவை' (taste) என்ற குணத்தை வெளிப்படுத்தி, நீரை (water) உருவாக்கியது" 
என்று வேதம் உலக ஸ்ருஷ்டி வரிசையை தொடர்கிறது.

இங்கு நாம் கவனித்துடன் உணர வேண்டியது...
ஆகாயத்தில் - "சப்தம்" (Sound) என்ற ஒரே குணம் தான் உண்டு.
ஆகாயத்திற்கு அடுத்து உருவான, காற்றில் (Air), - "சப்தம், ஸ்பரிசம்" என்ற இரண்டு குணங்கள் இருப்பதை அறியலாம்.
காற்றுக்கு அடுத்து உருவான, நெருப்பில் (fire), - "சப்தம், ஸ்பரிசம், வடிவம்" என்ற மூன்று குணங்கள் இருப்பதை அறியலாம்.
நெருப்புக்கு பின் உருவான நீரில் (fire) - "சப்தம், ஸ்பரிசம், வடிவம், சுவை" என்ற நான்கு குணங்கள் இருப்பதை அறியலாம்.

நீருக்கு, "சுவை" (taste) என்ற தனித்த குணமும்,
நெருப்பின் குணமான "சப்தம், ஸ்பரிசம், வடிவம்" என்ற மூன்று குணங்களும் சேர்ந்து உள்ளது...

ஐந்தாவதாக,
"சப்தம் (sound), ஸ்பரிசம் (தொடுதல் touch), வடிவம் (see), சுவை (taste) என்ற 4 குணங்களை கொண்ட நீர் (water), 
'மணம்' (smell) என்ற குணத்தை வெளிப்படுத்தி, நிலத்தை (earth) உருவாக்கியது" 
என்று வேதம் உலக ஸ்ருஷ்டி வரிசையை தொடர்கிறது.

இங்கு நாம் கவனித்துடன் உணர வேண்டியது...
ஆகாயத்தில் - "சப்தம்" (Sound) என்ற ஒரே குணம் தான் உண்டு.
ஆகாயத்திற்கு அடுத்து உருவான, காற்றில் (Air), - "சப்தம், ஸ்பரிசம்" என்ற இரண்டு குணங்கள் இருப்பதை அறியலாம்.
காற்றுக்கு அடுத்து உருவான, நெருப்பில் (fire), - "சப்தம், ஸ்பரிசம், வடிவம்" என்ற மூன்று குணங்கள் இருப்பதை அறியலாம்.
நெருப்புக்கு அடுத்து உருவான, நீரில் (water), - "சப்தம், ஸ்பரிசம், வடிவம், சுவை" என்ற நான்கு குணங்கள் இருப்பதை அறியலாம்.
நீருக்கு பின் உருவான நிலத்தில் (earth) - "சப்தம், ஸ்பரிசம், வடிவம், சுவை, மணம்" என்ற ஐந்து குணங்கள் இருப்பதை அறியலாம்.

நிலத்துக்கு (பூமிக்கு), "மணம்" (smell) என்ற தனித்த குணமும்,
நீரின் குணமான "சப்தம், ஸ்பரிசம், வடிவம், சுவை" என்ற நான்கு குணங்களும் சேர்ந்து உள்ளது...
இப்படி "பரவாசுதேவன் நாராயணன் மூலமாக, வெளிப்பட்ட ஓங்காரம், 
வேத ஒலிகளாக பிரிந்து, 
வேதத்திலிருந்து ஆகாயம் வெளிப்பட்டு,
ஆகாயத்திலிருந்து காற்று வெளிப்பட்டு,
காற்றிலிருந்து நெருப்பு வெளிப்பட்டு,
நெருப்பிலிருந்து நீர் வெளிப்பட்டு,
நீரிலிருந்து நிலம் என்ற உலகம் வெளிப்பட்டது" 
என்று வேதம் உலக ஸ்ருஷ்டியை விளக்குகிறது..

இப்படி உலக சிருஷ்டியை சொல்லும் வேதம், ப்ரம்ம தேவன் காலம் முடிந்த பிறகு, உலக அழிவை பற்றியும் சொல்கிறது.




"மண்ணால் ஆன இந்த உலகங்கள் பிரளய ஜலத்தில் கரைந்து, 
பிரளய ஜலம் அக்னியால் பொசுக்கப்பட்டு, 
அக்னி, காற்றினால் அணைக்கப்பட்டு, 
காற்று ஆகாயத்தில் ஒடுங்கி, 
ஆகாயம் வேதத்தில் ஒடுங்கி,
வேதம் ஓங்காரத்தில் ஒடுங்கி,
ஓங்காரம், பரவாசுதேவனிடம் ஒடுங்கி விடும்"
என்று உலக அழிவின் வரிசையையும் வேதமே சொல்கிறது.
பரவாசுதேவன் நாராயணன், மோக்ஷம் அடையாத ஜீவ கோடிகளை மீண்டும் தமஸ் என்ற அஞான நிலையில் வைத்து, பிறகு, மீண்டும் ஒரு புதிய ப்ரம்ம தேவனை நியமித்து, உலக ஸ்ருஷ்டி செய்ய சங்கல்பிக்கிறார்.

மனிதர்கள் உருவாக்கிய பிற போலி மதங்களை போல, நம் ஹிந்து தர்மம் கற்பனையான மதம் அல்ல..
வேதமே "ஒரு அறிவியல்" என்பது சிறிது கவனித்தாலும் புரிந்து விடும்.

உலக ஸ்ருஷ்டி எப்படி நடந்தது?
என்ற இந்த அறிவியலை நம் முன்னோர்கள் அறிந்து வைத்து இருந்ததால்,

  • ஆகாயத்தில் ஏற்படும் தாறுமாறுகளை,
  • காற்றில் ஏற்படும் தாறுமாறுகளை,
  • தீயினால் ஏற்படும் தாறுமாறுகளை,
  • நீரினால் ஏற்படும் தாறுமாறுகளை,
  • நிலங்களில் ஏற்படும் தாறுமாறுகளை,

அது சம்பந்தமான வேத மந்திரங்களை ஜபித்தே சரி செய்தனர்.

"மழை ஏற்படாமல் போகும் போது", வருண தேவனை குறித்த வேத மந்திரங்களை தவறாக உச்சரிக்காமல் ஜபித்து, 
வேண்டிய மழையை பெற்றுக்கொண்டனர்.

"பூகம்பம் ஏற்படாமல்" இருக்க அதற்கான வேத மந்திரங்களை ஜபித்தனர்.
"தீ பற்றி காடுகள், நகரங்கள் எரிந்தால்" அதையும் வேத மந்திரங்கள் கொண்டே அடக்கினர்.
விஷ பாம்பு கடித்தாலும், அதற்கான வேத மந்திரங்களை ஜபித்து சரி செய்தனர்.

வேத மந்திரங்கள் ஆயிரகணக்கானவை...  அதை தவறாகவும் உச்சரிக்க கூடாது..

ப்ரம்மத்தை குறிக்கும் ஒலி அலைகளாக வேத மந்திரங்கள் உள்ளதால், 
இதை சரியாக உச்சரிக்க, 
மனித சமுதாயத்தில் பிறந்தது முதல், உலக ஆசைகளே இல்லாத, உச்சரிப்பு சரியாக உள்ள மனிதர்கள் இந்த வேத மந்திரங்களை உச்சரிப்பு மாறாமல், மனப்பாடம் செய்ய, ரிஷிகள் தனக்கு சிஷ்யனாக அதற்கு தகுதியானவர்களை தன் ஆசிரமத்தில் வைத்து கொண்டு, வேத மந்திரங்களை அவர்களுக்கு சொல்லி கொடுத்து, உணவில் கட்டுப்பாடும், ஒழுக்கமும், உலக ஆசைகள் குறைந்தும் உள்ள மனித சமுதாயம் உருவாக்கப்பட்டது..
இவர்களே "ப்ராம்மணர்கள்.."

இவர்கள் (ப்ராம்மணர்கள்), தான் கற்ற வேத மந்திரங்களை கொண்டு, உலக சூழ்நிலை சரியாக இருக்க எப்பொழுதும் ஜபித்து கொண்டு இருந்தனர்..

தேவைப்படும் போது, வசிஷ்டர் முதல் துரோணர் வரை,
தான் கற்ற வேத மந்திரங்களை, அரசர்களுக்கு சொல்லி கொடுத்து, அவர்கள் சாதாரண அம்பை, 
இந்த வேத மந்திரங்களை ஜபித்து, அஸ்திரமாகவும் (atom bomb), சஸ்திரமாகவும் (nuclear bomb) செய்து போரிட உதவி புரிந்தனர்..
இந்த அறிவியல் கலை துவாபர யுகம் முடிந்து பௌத்த மதம் ஆரம்பிக்கும் வரை கூட நாம் காப்பாற்றி வந்தோம்..
1200 வருட இஸ்லாமிய, கிறிஸ்தவ ஆக்கிரமிப்பில்,
பாரத தேசத்தில் செல்வங்கள் குவிந்து இருந்த கோவில்களை குறிவைத்து தாக்குதல் நடந்ததால், 
கோவிலில் அதை சுற்றியுமே இருந்த வேத ப்ராம்மணர்கள் பெரும்பாலும் கொலை செய்யப்பட்டனர்..
வேத மந்திரங்களின் பொருள், ரகசியங்கள் சொல்லும் வேத ப்ராம்மணர்கள் லட்சக்கணக்கில் 1200 வருடத்தில் இந்த பாரத தேசம் இழந்தது..
பொது மக்களையும், கோவிலையும் இடித்தே, ஹிந்து அரசர்களை வீழ்த்தினர் பெரும்பாலான அரேபிய இஸ்லாமியர்கள்.

இன்று வேதத்தின் ரகசியங்கள் அழிந்து விட்டது.
இதன் ரகசியங்கள் தெரிந்தவர்கள் மிகவும் குறைவு...
வேதத்தை குறைந்த பட்சம் மனப்பாடம் செய்து, எப்படி சரியாக உச்சரிப்பது என்று சொல்வதற்கு கூட, இன்று ப்ராம்மணர்கள் அதிக எண்ணிக்கையில் இல்லை.

வேத மந்திரங்கள் தான், ஆகாயத்தை ஸ்ருஷ்டி செய்தது..
வேத மந்திரங்கள் தான், காற்றை ஸ்ருஷ்டி செய்தது..
வேத மந்திரங்கள் தான், நெருப்பை ஸ்ருஷ்டி செய்தது..
வேத மந்திரங்கள் தான், நீரை ஸ்ருஷ்டி செய்தது..
வேத மந்திரங்கள் தான், பூமியை ஸ்ருஷ்டி செய்தது..
என்று பாரத மக்கள் அறிந்து இருந்தவரை, 
உலக ஆசைகளை புறக்கணித்து, வேத மந்திரங்களை காப்பாற்றி வந்த ப்ராம்மணர்கள் காப்பாற்றப்பட்டார்கள்..
ப்ராம்மணர்கள் அதற்கு பதிலாக, வேத மந்திரங்களை கொண்டே,
பஞ்ச பூதங்களில் உண்டாகும் தாறுமாறுகளை சரி செய்ய யாகங்கள், ஜபங்கள் செய்து கொண்டே இருந்தனர்..
1200 வருடங்களில் வேத ரகசியங்கள் தெரிந்து லட்சக்கணக்கான வேதியர்கள் இஸ்லாமிய ஆக்ரமிப்பால் கொலை செய்யப்பட, வேத ரகசியங்கள் மறைந்தன..
அரசர்களும் அழிந்து போனதால்,
பாரத மக்கள் வேத மந்திரங்களின் மகத்துவத்தை மறந்தனர்.




"வேத மந்திரங்களே, உலக சூழ்நிலையை மாற்ற சக்தி கொண்டது, உடல் பிரச்சனைகளை கூட மந்திரித்து சரி செய்ய வல்லது என்ற ரகசியங்கள் மறைந்ததால், இந்த 1200 வருட இஸ்லாமிய, கிறிஸ்தவ ஆக்கிரமிப்பில், எஞ்சிய ப்ராம்மணர்கள், 'வேதத்தின் மகத்துவம் புரிந்தாலும், 
ஒரு வேளை உணவுக்கு கூட தன் குழந்தைகளுக்கு கொடுக்க முடியாமல்', "ஏழை ப்ராம்மணன்" என்ற பட்டத்தை சுமந்து, காப்பாற்றுவார் இன்றி வாழ ஆரம்பித்தனர்..

வேத ரகசியங்கள் மெதுவாக மறைய ஆரம்பிக்க, 
வேத ரகசியங்கள் புரியாமல் போக, 
வேத மந்திரங்களை மட்டும் ஜபித்து கொண்டிருந்த ப்ராம்மணர்கள், கிறிஸ்தவ ஆட்சியின் போது, வேதத்தை விட்டு, குமாஸ்தா, கணக்காளர், பள்ளி வாத்தியார் என்று வேலைக்கு சென்றனர்..

விடுதலை அடைந்த பிறகு, சில பிராம்மணர்கள் வேதத்தை விட்டு விடாமல்,  வேதம் ஒதப்பட்டாலும், அதன் ரகசியங்கள் தெரியாமலே போனதால், சொல்பவர்கள் குறைந்து கொண்டே போக, இன்று வேதத்தை படிக்கும் ப்ராம்மணர்கள் எண்ணிக்கையில் குறைந்து விட்டனர்.

"5 மஹா பூதங்களை (ஆகாயம், காற்று, தீ, நீர், நிலம்), வேத மந்திரங்கள்,
5 குணங்களுடன் (சப்தம், ஸ்பரிசம், வடிவம், சுவை, மணம்) உருவாக்கியது"
என்று புரிந்து கொண்டோம்.

வேத மந்திரங்கள் உருவாக்கிய இந்த 5 பூதங்களையும், அதன் குணங்களையும், மோக்ஷம் அடையாத ஜீவன் புரிந்து கொள்வதற்காக, ப்ரம்ம தேவன்
5 பூதங்களின் அம்சமாக, 5 கர்ம இந்திரியங்கள் (காது, தோல், கண், நாக்கு, மூக்கு) கொண்ட உடலை படைத்து,
5 பூதங்களின் குணங்களின் அம்சமாக, 5 ஞான இந்திரியங்களையும் (கேட்பது, உணர்வது, பார்ப்பது, சுவைப்பது, நுகர்வது) கொடுத்து, ஜீவனுக்கு மனித உடலை படைத்தார்..
இப்படி மனித உடல் படைக்கப்பட்ட பின், 
மோக்ஷம் அடையாமல் தமஸ் என்ற அஞான இருளில் தூங்கி கொண்டிருந்த ஜீவனை, இந்த உடல்களில் பிரவேசிக்க செய்து, உலகத்தில் ஜீவன் கோடிகளை விழிக்க செய்தார், பரவாசுதேவன்..

எந்த ஜீவன், இந்த படைப்பு அனைத்துக்கும் மூல காரணம் நாராயணனே!! என்று தெரிந்து, 
இந்த மாயா உலகத்தில் பற்று இல்லாமல் இருக்கிறானோ, 
நாராயணனிடம் அன்பு (பக்தி) வைக்கிறானோ, 
அவனை மீண்டும் ப்ரம்ம தேவன் படைத்த உடல்களில் பிறக்க செய்யாமல், தான் எங்கு இருக்கிறோம் என்ற ஞான நிலையிலேயே (விழிப்பு) வைகுண்டம் என்ற தன் இடத்தில் நிரந்தரமாக, எப்பொழுதும் ஆனந்த அனுபவத்துடனேயே தன்னுடன் இருக்க செய்கிறார்..

வேத மந்திரங்களே -> 5 மஹா பஞ்ச பூதங்களை, 5 குணங்களை, 5 கர்ம இந்திரியங்களை, 5 ஞான இந்திரியங்களை உருவாக்கியதால்,
இதில் எது தாறுமாறாக ஆனாலும், 
அதற்கான வேத மந்திரங்களை சரியாக சொன்னாலே உபாதைகள் சரி ஆகி விடும்..

அந்நிய ஆக்ரமிப்புகள் வரும் முன்னர்,
"வேத மந்திரங்களான ஆயுர்வேதமும், மூலிகைகள் பயன்படுத்தும் சித்த மருத்துவமுமே" நம் மக்களின் ஆரோக்கியத்தை பார்த்து கொண்டது...

கை வெட்டுப்பட்டாலும், வேத மந்திரங்களை கொண்டே சரி செய்தனர் நம் வேதியர்கள்..
1200 வருட அந்நியர்களின் அட்டகாசத்தில், இன்று நாம் இழந்தது,
செல்வங்கள் மட்டுமல்ல, 
வேத மந்திரங்களாலேயே நம் ஆரோக்கியம், உலக ஆரோக்கியத்தை சரி செய்த வேதியர்களையும் இழந்து விட்டோம்.

எஞ்சி இருக்கும் வேதியர்கள் சில ஆயிரம் பேரை ஒன்று சேர்த்து, ஆராய்ச்சி கூடங்கள் அமைக்க ஒரு குழு அமைத்து, வேத மந்திரங்களின் பயனை கடுமையான முயற்சியின் மூலம் தோண்டினால், உலகம் இனறு கலங்கி பார்க்கும் தண்ணீர் பிரச்சனை (Water scarcity), அபாயகரமான "சூழ்நிலை மாற்றங்களை" (Climate Change) கூட எளிதில் சரி செய்யலாம்..
"நெருப்பிலிருந்து தான் நீர் வந்தது" என்று பார்க்கும் போது,
நிலத்தில் தண்ணீர் தேடுவதை விட,
நெருப்பில் "நீர் வரவழைக்கும் ஆராய்ச்சிகள் தேவை".
இன்று அறிவியல் ஆராய்ச்சிகள், வெப்பத்தில் இருந்து நீர் உருவாக்க முடியுமா என்று முயற்சிக்கிறது..

ஹிந்து தர்மம் சொன்ன உலக ஸ்ருஷ்டியை தானே, இன்றைய அறிவியல் ஆராய்ச்சி செய்கிறது.. நாம் யோசித்து பார்க்க வேண்டும்..




தண்ணீர் வேண்டுமா? 
'நெருப்பிலிருந்து நீர் வந்தது' என்கிறது நம் வேதம்..
தண்ணீருக்கு மூலமான நெருப்பில் (Solar) ஆராய்ச்சி செய்தால், நமக்கு தண்ணீர் கிடைக்குமே..

நெருப்பு வேண்டுமா? 
'காற்றிலிருந்து நெருப்பு வந்தது' என்கிறது நம் வேதம்..
நெருப்புக்கு (electricity) மூலமான காற்றில் (atom) ஆராய்ச்சி செய்தால், நமக்கு நெருப்பு கிடைக்குமே..
இன்று கிடைக்கிறதே....

காற்று வேண்டுமா?
'ஒலியிலிருந்து (sound) காற்று (atom) வந்தது' என்கிறதே நம் வேதம்..
யோசிக்க வேண்டாமா நாம்?
காற்றுக்கு (atom) மூலமான ஒலியில் (sound) ஆராய்ச்சி செய்தால், நமக்கு தேவையான காற்று கிடைக்குமே..
இந்த ஆராய்ச்சி நமக்கு செய்ய தெரிந்தால்,
புராண கதைகளில் நாம் கேட்ட கல்லை தங்கமாக்கும் கலையை மீட்டு விடலாமே?..
எதுவுமே வேண்டாம் என்றால்,
வேத மந்திரங்கள் கேட்டு கொண்டே பரவாசுதேவனை தியானிக்கலாமே..?

வேத மந்திரங்கள் தெரியாவிட்டாலும், ஓம் என்ற ஓங்காரத்தின் அர்த்தத்தை புரிந்து கொண்டு, அதை ஜபித்தாலும் உலக நன்மையும் கிடைக்கும், மோக்ஷமும் கிடைக்குமே?..

வேதமே "ஓம் என்ற ஓங்காரத்தில் அடக்கம்" என்றால், அதை ஜபித்து ஸித்தி ஆக்கி கொண்டால், பஞ்ச பூதங்களை நாமே சரி செய்து கொள்ளலாமே?..

மோக்ஷம் அடைந்து விடவாவது, மூல காரணமான நாராயணனிடம் பக்தி செய்ய ஆரம்பிக்கலாமே?..

ஹிந்துக்கள் நம் பெருமையை உணர வேண்டும்..

"உலகம் தட்டை" என்று உளறிய போலி மதங்களை, போலி தெய்வங்களை விட்டு விட வேண்டும்..
அந்த தெய்வங்கள் வரப்போவதும் இல்லை.. வரம் தரப்போவதும் இல்லை..
வராக அவதாரம் செய்த போதே "உலகம் உருண்டை" என்று சொன்ன ஹிந்து தர்மத்தில் பிறந்தும், நாம் ஹிந்துவின் பெருமையை உணராமல் வாழ கூடாது...

செவ்வாய் கிரகம் "சிவப்பு" (mars is red planet) என்று இன்று அறிவியல் சொல்வதற்கு முன்பே,
சர்வ சாதாரணமாக நவ க்ரஹங்களை கோவிலில் வைத்து,
அங்கு செவ்வாய் க்ரஹத்தின் அதிபதிக்கு "சிவப்பு ஆடை" கொடுத்த ஹிந்து தர்மத்தில் பிறந்தவர்கள் நாம் என்பதை மறந்து விட கூடாது..
1200 வருட அந்நிய ஆக்ரமிப்பில், நாம் பல ரகசியங்களை, அற்புதங்களை இழந்து விட்டோம்..

இன்று தெரியாது இருப்பதால், "நாம் முட்டாள், அந்நியன் அறிவாளி" என்ற மாயையை நம் மனதில் இருந்து அகற்றுவோம்..

வேதங்களின் ரகசியங்களை தோண்ட,
வேதியர்களை அணி சேர்த்து, அவர்கள் மூலமாக நடக்கும் ஆராய்ச்சி கூடங்களில் அனைவரும் பங்கு கொண்டு,
ஒரு பெரும் ஆராய்ச்சி 120 கோடி மக்களும் சேர்ந்து செய்தால், அந்நிய ஆதரவு எதுவும் தேவைப்படாத, சுய சார்புடைய வலிமையான பாரத தேசத்தை சில வருடங்களிலேயே மீண்டும் உருவாக்க முடியும்..

இருக்கும் சில வேதியர்களும் அழிய விட்டு விட்டால்,
அந்நியர்களின் மழுங்கிய அறிவியல் ஆராய்ச்சியால் உருவாக்கப்படும் இயந்திரங்கள் அனைத்தும், 'இயற்கையை அழிக்கவும், நோய்களை கொடுக்கவுமே செய்யும்'..

அந்நிய மண்ணில் பிறப்பவர்கள், எத்தனை அறிவு உடையவர்களாக இருந்தாலும், உலக ஆசைகளை நிறைவேற்றும் ஆராய்ச்சிகளே செய்வார்கள், செய்கிறார்கள்...

பாரத மண்ணில் பிறப்பவர்கள், மீண்டும் நம் வேத ரகசியங்களை தோண்டி எடுத்து விட்டால், அந்நியர்கள் நம்மை அண்டி வாழவும், நாம் பாரத மண்ணில் சொந்தங்கள் பிரியாமல் சேர்ந்து வாழவும் வழி செய்து கொள்ளலாம்..