Followers

Search Here...

Showing posts with label பஜ கோவிந்தம். Show all posts
Showing posts with label பஜ கோவிந்தம். Show all posts

Wednesday 16 October 2019

பஜ கோவிந்தம் - Bhaja Govindham (भज गोविन्दं with meaning) - ஆதி சங்கரர் அருளிய பாடலின் அர்த்தம் தெரிந்து கொள்வோம்...


भज गोविन्दं भज गोविन्दं
गोविन्दं भज मूढमते ।

பஜ கோவிந்தம் பஜ கோவிந்தம்
கோவிந்தம் பஜ மூடமதே

Worship Govinda, worship Govinda
Let govindan be the objective of your worship, Oh foolish mind |


கோவிந்தனை பாடிடு, கோவிந்தனை பாடிடு
கோவிந்தனை பாடிடு, மூட மதியே!!




सम्प्राप्ते सन्निहिते काले
नहि नहि रक्षति डुकृङ्करणे ॥

சம்ப்ராப்தே சந்நிஹிதே காலே
நஹி நஹி ரக்ஷதி டுக்ருங் கரனே

Regain real knowledge atleast at your end of death.
Your knowledge of grammar will not save you.

மரணம் உன்னை நெருங்கி வரும் முன்பே மெய் ஞானத்தை (உண்மையான அறிவை) பெற்று விடு.
நீ சம்பாதித்த உலக இலக்கண அறிவு எதுவும், உன்னை மரண காலத்தில் காப்பாற்றாது.

भज = Worship;
गोविन्दं = Govindan;
मूढमते = O, foolish mind;
सम्प्राप्ते = Regain real knowledge;
सन्निहिते = near
काले = Time (here: Death);
नहि = Not; never;
रक्षति = protects;
डुकृङ्करणे = the grammatical formula (knowledge)

मूढ जहीहि धनागम तृष्णां
कुरु सद्बुद्धिं मनसि वि तृष्णाम् ।

மூட ஜஹீஹி தன ஆகம த்ருஷ்ணாம்
குரு ஸத்புத்திம் மனஸி வித்ருஷ்ணாம்

Oh foolish mind!
Give up your thirst to earn wealth.
Always Act With good thought without desirelessness in your heart.

செல்வம் சேர்க்க வேண்டும் என்ற தாகத்தை விட்டு விடு, மூட மதியே..
நல்ல எண்ணத்துடன், பலனில் ஆசை இல்லாமல் எந்த செயலையும் செய்.

यल्लभसे निज कर्मो पात्तं
वित्तं तेन विनोदय चित्तम् ॥

யல்லபஸே நிஜ கர்மோபாத்தம்
வித்தம் தேன வினோதய சித்தம்
 
Whatever the wealth you obtained by your duty
Be content with that earning

நீ செய்த செயல்களுக்கு, பலனாக எத்தகைய செல்வம் (குறையோ, நிறையோ) கிடைத்து இருந்தாலும், அதை கொண்டே நிம்மதி/திருப்தி கொள்.

मूढ = Oh foolish mind
जहीहि = Give up
धन = Wealth;
आगम = earn;
तृष्णां = thirst;
कुरु = Do/act;
सद्बुद्धिं = good thought;
मनसि = in the mind;
वितृष्णां = desirelessness;
यल्लभसे = whatever you obtain;
निजकर्म = one's assigned duty
उपात्त = obtained;
वित्तं = wealth;
तेन = by that; with that;
विनोदय = divert/recreate(be happy);
चित्तं = mind;





नारी स्तन भरनाभी देशं
दृष्ट्वा मा गा मोहा वेशम् ।

நாரீ ஸ்தன பரநாபீ தேசம்
த்ருஷ்ட்வா மா கா மோஹா வேசம்

Do not get infatuated in delusion by going wild with passions and lust by seeing a woman's navel and breast.

பெண்ணின் தொப்புளையும், மார்பையும் கண்டு மோஹித்து காமத்தில் விழாதே.

एतन्मांस वसा दिविकारं
मनसि विचिन्तय वारं वारम् ॥

ஏதத் மாம்ஸ வசா திவிகாரம்
மனஸி விசிந்தய வாரம் வாரம்

These bodies are nothing but a appearance of flesh,fat, blood, skeleton etc. Fail not to remember this again and again in your mind.

இந்த உடல் அவயவங்கள் எல்லாம் உண்மையில் வெறும் மாமிச, ரத்த, எலும்பின் சேர்கை தானே... என்ற இந்த ஞானத்தை எப்பொழுதுமே உன் மனதில் திரும்ப திரும்ப ஞாபகப்படுத்தி கொண்டே இரு.

नारी = woman;
स्तनभर = breast
नाभीदेशं = navel part of body;
दृष्ट्वा = having seen;
मा गा = Don't go;
मोहावेशं = infatuated state
एतत् = this;
मांसवसादि = flesh, fat etc
विकारं = appearance
मनसि = in the mind;
विचिन्तय = think well;
वारं = again;
वारं = and again;



नलिनी दलगत जलमतितरलं
तद्वत् जीवितं अतिशय चपलम् ।

நளினீ தலகத் ஜலமதி தரலம்
தத் வத் ஜீவிதம் அதிசய சபலம்

Just like a rain drop trembling on a lotus leaf, life is just an unstable wonder.

தாமரை இலையில் உள்ள நீர் துளி நிலைகொள்ளாமல் இருக்கும்.
மனித வாழ்க்கையும் தாமரை இலையில் உள்ள நீர் போன்ற நிலையில்லாத அதிசயமே..

विद्धि व्याधि अभिमान ग्रस्तं
लोकं शोकहतं च समस्तम् ॥

வித்தி வ்யாதி அபிமான் க்ரஸ்தம்
லோகம் சோக ஹதம் ச சமஸ்தம்

Know that the entire people in this world have been caught to disease, ego (self importance) and grief.

உலகத்தில் உள்ள அனைத்து மக்களும் நோயாலும், துக்கத்தாலும், அகங்காரத்தாலும் சிறைபிடிக்கப்பட்டவர்கள் என்ற உண்மையை மறவாதே


नलिनीदलगत = lotus petal;
जलं = water(drop);
अतितरलं = trembling;
तद्वत् = like that;
जीवितं = life;
अतिशय = wonderful;
चपलं = unstable;
विद्धि = know for sure;
व्याधि = disease;
अभिमान = self-importance;
ग्रस्तं = having been caught/seized;
लोकं = world;people;
शोकहतं = grief;
च = and;
समस्तं = entire;





यावद्वित्तो पार्जन सक्त
स्तावन्निज परिवारो रक्तः ।

யாவத் வித்தோ பார்ஜன ஸக்த:
தாவன்னிஜ பரிவாரோ ரக்த:

As long as you are earning and healthy
Till then really, family will have attachment with you.

ஆரோக்கியத்தோடு,
எது நாள் வரை நீ பொருள் ஈட்டுகிறாயே,
அது நாள் வரை நிஜமாகவே சொந்தங்கள் உன்னிடம் ஒட்டிக்கொண்டிருக்கும்.

पश्चाज्जीवति जर्जर देहे
वार्तां कोऽपि न पृच्छति गेहे ॥

பஸ்சாத் ஜீவதி ஜர்ஜர தேஹே
வார்த்தாம் கோபின ப்ருச்சதி கேஹே

But later when one became old, then there may be none at home to even enquire.

பிற்கால வாழ்க்கையில், உன் உடல் முதுமையை அடையும் போது, உன்னிடம் நலம் விசாரித்து பேசுவதற்கு கூட யாரும் வரப்போவதில்லை.

यावत् = so long as;
वित्त = wealth;
उपार्जन = earning/acquiring;
सक्तः = capable of;
तावन्निज = really till then;
परिवारः = family;
रक्तः = attached;
पश्चात् = later;
जीवति = while living(without earning);
जर्जर = old/digested (by disease etc);
देहे = in the body;
वार्तां = word (here enquiry/inquiry);
कोऽपि = even one;
न = not;
पृच्छति = inquire;
गेहे = in the house;






यावत्पवनो निवसति देहे
तावत्पृच्छति कुशलं गेहे ।

யாவத் பவனோ நிவசதி தேஹே
தாவத் ப்ருச்சதி குசலம் கேஹே

As long as your body breath (alive), others will enquire kindly about your welfare.

எது நாள் வரை உன் உடலில் சுவாசம் ஓடுகிறதோ, அது நாள் வரை மற்றவர்கள் உன் நலன் குறித்து விசாரிப்பார்கள்.

गतवति वायौ देहापाये
भार्या बिभ्यति तस्मिन्काये ॥

கதவதி வாயோ தேஹாபாயே
பார்யா பிப்யதி தஸ்மின் காயே

But when the soul departs from the body, even the wife will fear of the corpse (dead body).

எந்த நாளில் உன் உடலை விட்டு சுவாசம் பிரியுமோ, அன்று உன் மனைவி கூட உன் பிண தேகத்தை பார்த்து பயப்படுவாள்.

यावत् = so long as;
पवनः = air/breath;
निवसति = lives/dwells;
देहे = in the body;
तावत् = till then;
पृच्छति = asks/inquires;
कुशलं = welfare;
गेहे = in the house;
गतवति = while gone;
वायौ = air(life-breath/soul);
देहापाये = when life departs the body;
भार्या = wife;
बिभ्यति = is afraid/fears;
तस्मिन्काये = in that body;




बालस्तावत् क्रीडा सक्तः
तरुणस्तावत् तरुणी सक्तः ।


பால தாவத் க்ரீடா சக்த:
தருண தாவத் தருணீ சக்த:

The childhood is lost by attachment to playfulness.
Youth is lost by attachment to woman.

பால்ய பருவத்தை விளையாட்டில் தொலைத்து விடுகிறாய்,
இளமை காலத்தை காமத்தில் தொலைத்து விடுகிறாய்.

वृद्धस्तावत् चिन्तासक्तः
परमे ब्रह्मणि कोऽपि न सक्तः ॥

வ்ருத்த தாவத் சிந்தா சக்த:
பரமே ப்ரஹ்மணி கோ அபி ந சக்த:

Old age is lost by worries.
But there is hardly anyone who wants to be lost in parabrahman.

முதுமை காலத்தை மனதில் துக்கத்தை வளர்த்து கொண்டு தொலைத்து விடுகிறாய்.
பரப்ரம்மத்திடம் தன்னை தொலைத்து கொள்பவர்கள் இல்லையே!!

बालः = young boy;
तावत् = till then (till he is young);
क्रीडा = play;
सक्तः = attached/absorbed/lost;
तरुणः = young man;
तावत् = till then;
तरुणी = young woman;
सक्तः = attached/absorbed/lost;
वृद्धः = old man;
तावत् = till then;
चिन्ता = worry;
सक्तः = attached/absorbed/lost
परमे = in the high;supreme;
ब्रह्मणि = Brahman ;God;
कोऽपि = even one;
न = not;
सक्तः = attached/absorbed/lost


का ते कान्ता कस्ते पुत्रः
संसारोऽयमतीव विचित्रः ।

கா தே காந்தா க: தே புத்ர:
சம்சாரோ அயம் அதீவ விசித்ர:

Who is your wife ?
Who is your son ?
This samsaara, the world life is just a great mystery.

மனைவி யார்? புத்ரன் யார்? பல விதமான விசித்திரங்கள் தானே இந்த உலக வாழ்க்கை.

कस्य त्वं कः कुत आयात:
तत्त्वं चिन्तय तदिह भ्रातः ॥

கஸ்ய த்வம் க: குத ஆயாத:
தத்வம் சிந்தய ததிஹ ப்ராத:

From where have you come ? Brother, think over that truth here.

நீ எங்கிருந்து இந்த உலகத்துக்கு வந்துள்ளாய்? சகோதரா.. கொஞ்சம் உண்மையை இங்கேயே உணர்ந்து பார்.

का ते = who is your;
कान्ता = wife;
कस्ते = who is your;
पुत्रः = son;
संसारः = world/family;
अयं = this;
अतीव = great/very much;
विचित्रः = mysterious;
कस्य = whose;
त्वं = you;
कः = who;
कुतः = from where;
आयातः = have come;
तत्त्वं = truth;
चिन्तय = think well/consider;
तदिह = that here;
भ्रातः = brother;




सत्सङ्गत्वे निस्सङ्गत्वं
निस्सङ्गत्वे निर्मोहत्वम् ।

ஸத்ஸங்கத்வே நிஸ்-ஸங்கத்வம்
நிஸ்-ஸங்கத்வே நிர்-மோஹத்வம்

From satsanga, company of spiritually inclined good people, comes non-attachment.
From non-attachment comes freedom from delusion.

மெய்ஞானத்தில் உயர்ந்த மகாத்மாக்களின் சத்சங்கம், உலக விஷயங்களில் உனக்கு உள்ள ஆசையை அழித்து தனிமையை நாட வைக்கும்.
அந்த ஆசை அழிந்த தனிமை, உன்னை உலக மாயையிலிருந்து விலக செய்யும்.

निर्मोहत्वे निश्चलतत्त्वं
निश्चलतत्त्वे जीवन्मुक्तिः ॥

நிர்-மோஹாத்வே நிஸ்சல தத்வம்
நிஸ்சல தத்வே ஜீவன் முக்தி:

From freedom from delusion, comes tranquillity/self-settledness.
From self-settledness comes Jeevan mukti (moksha).

உலக மாயை உன்னிடமிருந்து விலகும் போது, சத்தியமான சுத்தமான ப்ரம்ம தத்துவம் புரியும்.
சுத்தமான ப்ரம்ம தத்துவம் புரிந்தவன், மோக்ஷத்தை பெற்று மீண்டும் பிறவா நிலையை அடைந்து விடுகிறான்.

सत्सङ्गत्वे = in good company;
निस्सङ्गत्वं = aloneness/non-attachment/detachment;
निर्मोहत्वं = freedom from delusion;
निश्चलतत्त्वं = tranquillity/self-settledness
जीवन्मुक्तिः = salvation from bondage of birth;



वयसि गते कः कामविकारः
शुष्के नीरे कः कासारः ।

வயஸி கதே க: காம விகார:
சுஸ்கே நீரே க: கா சார:

What good is lust when youth has fled ?
What use is a lake which has no water ?

இளமை காலம் போன பின், காமம் இருந்தும் பயனில்லையே.
தண்ணீர் இல்லாது போன பின், ஏரி இருந்து பயனில்லையே.

क्षीणे वित्ते कः परिवारः
ज्ञाते तत्त्वे कः संसारः ॥

க்ஷீணே வித்தே க: பரிவார:
ஞாதே தத்வே க: சம்சார:

Where are the relatives when wealth is gone ?
Where is samsAra, the world, when the Truth is known ?

செல்வத்தை செலவழித்தவனுக்கு சொந்தங்கள் இருந்தும் பயனில்லையே..
ப்ரம்ம தத்துவத்தை அறிந்தவனுக்கு இந்த சம்சார உலகம் இருந்தும் அவனுக்கு  பயனில்லையே..

वयसि गते = when age has gone;
कः = what( use) is the;
कामविकारः = sensual/sexual attraction;
शुष्के = in the drying up of;
नीरे = water;
कः = what( use) is the;
कासारः = lake;
क्षीणे = spent-up;
वित्ते = wealth;
कः = what( use) for;
परिवारः = family(is there?);
ज्ञाते = in the realised state;
तत्त्वे = truth;
कः = what (use) is;
संसारः = world/family bond;



मा कुरु धन जन यौवन गर्वं
हरति निमेषात्कालः सर्वम् ।

மா குரு தன ஜன யௌவன கர்வம்
ஹரதி நிமேஷாத் கால: ஸர்வம்

Do not boast of wealth, friends, and youth.
Each one of these are destroyed within a minute by time.

உன்னிடம் உள்ள செல்வத்தையும், சொந்தங்களையும், இளமையையும் கண்டு எப்பொழுதும் கர்வம் கொள்ளாதே..
இவை அனைத்தும் கால வெள்ளத்தில் நொடியில் அழிந்து போகும்.





माया मयमिदं अखिलं हित्वा
ब्रह्मपदं त्वं प्रविश विदित्वा ॥

மாயாமயம் இதம் அகிலம் ஹித்வா
ப்ரஹ்ம பதம் த்வம் ப்ரவிச விதித்வா

Free yourself from the illusion of the world of Maya (filled with delusion)
You have the prime duty to enter the place of paramabrahma.

மாயையால் நிரம்பி இருக்கும் இந்த உலகத்தை தள்ளி விடு.
நீ பரமாத்மாவின் வைகுண்டத்திற்கு செல்ல வேண்டியவனல்லவா

मा = do not;
कुरु = do/act;
धन = wealth;
जन = people;
यौवन = youth;
गर्वं = arrogance/haughtiness;
हरति = takes away/steals away;
निमेषात् = in the twinkling of the eye;
कालः = Master Time;
सर्वं = all;
माया = delusion;
मयं = completely filled;
इदं = this;
अखिलं = whole/entire;
हित्वा = free/Give up/abandoned;
ब्रह्मपदं = god-place (vaikunda);
त्वं = you;
प्रविश = enter;
विदित्वा = as a duty;


दिनयामिन्यौ सायं प्रातः
शिशिरवसन्तौ पुनरायातः ।

தினயாமின்யோ சாயம் ப்ராத:
சிசிர வசந்தோ புனராயாத:

Daylight and darkness, dusk and dawn, winter and springtime come and go.

இரவும், பகலும்; காலையும், மாலையும்; குளிரும், வசந்தமும் போனாலும் மீண்டும் மீண்டும் வருகிறது.


कालः क्रीडति गच्छत्यायु:
तदपि न मुञ्चत्याशावायुः ॥

கால: க்ரீடதி கச்சதி ஆயு:
ததபி ந முஜ்சதி ஆசா வாயு:

Time plays and life goes away. But the smell of desire never leaves us (and come again in next birth if you don't give up now)

காலத்தின் விளையாட்டில் ஆயுசு கரைகிறது..
உன் ஆயுசு கரைந்தாலும், உலகத்தின் மீது உனக்கு உள்ள வாசனைகள் (ஆசை) கரையாமல் மீண்டும் மீண்டும் வருகிறது, மறுபிறவி ஏற்படுகிறது.

दिनयामिन्यौ = day night;
सायं = evening;
प्रातः = morning;
शिशिर = frosty season;
वसन्तौ = Spring season;
पुनः = again;
आयातः = have arrived;
कालः = Master Time;
क्रीडति = plays;
गच्छति = goes (away);
आयुः = life/age;
तदपि = even then;
न = not;
मुञ्चति = releases;
आशा = desire;
वायुः = smell of sense (the wind of desire does not let off its hold);




का ते कान्ता धनगतचिन्ता
वातुल किं तव नास्ति नियन्ता ।

கா தே காந்தா தன கத சிந்தா
வாதுல கிம் தவ நாஸ்தி நியந்தா

Oh mad man ! Why are you spending your thoughts of wealth and woman ? Is there no one to guide you ?

எதற்காக பெண்ணை பற்றியும், செல்வத்தை பற்றியுமே, சிந்தித்து கொண்டிருக்கிறாய்?
ஓ மூட மதியே!! உனக்கு வழி காட்ட யாரும் இல்லையோ?

त्रिजगति सज्जन सङ्गतिरेका
भवति भवार्णवतरणे नौका ॥

த்ரிஜகதி சஜ்ஜன் சங்கதிரேகா
பவதி பவார்னவதரனே நௌகா

There is only one thing in three worlds that can save you from the ocean of samsAra.
Get into the boat of satsanga, company of good people, quickly who can help you cross the ocean of birth and rebirth (samsaara)

மூவுலகிலும் உன்னை சம்சார (பிறவி) கடலில் இருந்து மீட்கவல்லது 'சத்சங்கம்' ஒன்றே.
சாதுக்கள் மகான்கள் இருக்கும் சத்சங்கம் என்ற படகில் ஏறி சம்சார (பிறவி) கடலை கடந்து விடு.

का ते = why you
कान्ता = wife;
धन = wealth;
गतचिन्ता = thinking of;
वातुल = O mad one!;
किं = what?;
तव = your;
नास्ति = is not there;
नियन्ता = guide;
त्रिजगति = in the three worlds;
सज्जन = good people;
संगतिरेका = company only way;
भवति = becomes;
भवार्णव = birth and death ocean;
तरणे = in crossing;
नौका = boat/ship;



अङ्गं गलितं पलितं मुण्डं
दशनविहीनं जातं तुण्डम् ।

அங்கம் கலிதம் பலிதம் முண்டம்
தசன விஹீனம் ஜாதம் துண்டம்

Body gets weakened, head gets grey hair. Mouth loses all its teeth.

வயது ஆக ஆக, உடல் தன் பலத்தை இழக்கிறது. தலை நரை ஆகிறது. பற்கள் விழுந்து பொக்கை வாய் ஆகிறது.

वृद्धो याति गृहीत्वा दण्डं
तदपि न मुञ्चत्याशापिण्डम् ॥

வ்ருத்தோ யாதி க்ருஹீத்வா தண்டம்
ததபி ந முஜ்சதி ஆசா பிண்டம்

With such state, old man holds a walking stick. Yet, not interested to give up his worldly desires.

நடக்க முடியாமல் குச்சி வைத்து நடக்கும் நிலை வந்தும், உள்ளிருக்கும் ஆசைகள் விடவில்லையே!!

अङ्गं = body;
गलितं = weakened;
पलितं = ripened(grey);
मुण्डं = head;
दशनविहीनं = teeth+bereft;
जातं = having become;
तुण्डं = jaws/mouth;
वृद्धः = the old man;
याति = goes;
गृहीत्वा = holding the;
दण्डं = stick(walking);
तदपि = then even;
न = not;
मुञ्चति = lets go/releases/gives up;
आशापिण्डं = desire




कुरुते गङ्गासागर गमनं
व्रत परिपालनं अथवा दानम् ।

குருதே கங்கா சாகர கமனம்
வ்ரத பரிபாலனம் அதவா தானம்

One may go to Gangasagar, observe fasts, and give away riches in charity !

கங்கை கரையிலேயே வசிக்கலாம். அங்கே விரதம் இருக்கலாம்.. தன் செல்வத்தை எல்லாம் கூட தானம் செய்து விடலாம்..


ज्ञान विहीनः सर्वमतेन
मुक्तिं न भजति जन्मशतेन ॥

ஞான விஹீன: ஸர்வமதேன
முக்திம் ந பஜதி ஜன்மஸ தேன

Yet, devoid of jnana, nothing can give mukti even if they born hundred times.

என்ன செய்தாலும், மெய்ஞானம் ஏற்படாதவரை நூறு ஜன்மமானாலும் மோக்ஷம் கிடைக்காது..

कुरुते = one takes resort to;
गङ्गासागर = the sea of Ganga (banks of the Ganges);
गमनं = going;
व्रत = austerities;
परिपालनं = observance/governance;
अथवा = or/else;
दानं = charity;
ज्ञानविहीनः = (but)bereft of knowledge of the Self;
सर्वमतेन = according to all schools of thought/unanimously;
मुक्तिं = salvation/freedom;
न = not;
भजति = attains;
जन्म = birth(s);
शतेन = hundred;

सुरमंदिर तरु मूल निवासः
शय्या भूतलं अजिनं वासः ।

ஸுரமந்திர தருமூல நிவாஸ:
சய்யா பூதலம் அசினம் வாஸ:

You can have a residence in a temple or below a tree and sleep on mother earth as your bed.

நீ கோவில் வாசலிலேயே கூட குடி இருக்கலாம். மரத்தின் அடியிலேயே கூட வாழலாம். எதுவும் தேவை இல்லை என்று தாய் மண்ணையே படுக்கையாக கூட நினைத்து படுக்கலாம்.

सर्व परिग्रह भोगत्यागः
कस्य सुखं न करोति विरागः ॥

ஸர்வ பரிக்ரஹ போக த்யாக:
கஸ்ய ஸுகம் நகரோதி விராக:

You can also Give up all attachments and comforts.
But still, only those Blessed souls will get that real happiness who has  such vairgya, in his heart.

உன்னுடைய பற்றுதலை சுகங்களை கூட விட்டு விடலாம். 
எது செய்தாலும், மனதில் வைராக்யம் இல்லாமல் எது செய்தாலும் சுகம் தராது. 
உண்மையான வைராக்யம் உள்ளவர்களை தவிர யாருக்கு உண்மையான சுகம் கிடைக்கப்போகிறது?


सुरमन्दिर = temple of god;
तरु = tree;
मूल = root;
निवासः = living;
शय्या = bed;
भूतलं = on the surface of the earth;
अजिनं = skin (of Antelope);
वासः = living;
सर्वपरिग्रह = all attachments;
भोगत्यागः = sacrificing/abandonment of enjoyable things/worldly pleasures;
कस्य = whose;
सुखं = happiness;
न = not;
करोति = does;
विरागः = Non-attachment/desirelessness;



योगरतो वा भोगरतो वा
सङ्गरतो वा सङ्गविहीनः ।

யோகரதோ வா போகரதோ வா
சங்கரதோ வா சங்க விஹீன:

One may take delight in yoga or bhoga.
One may have attachment to worldly things or detachment to worldly things.

சிலர் யோகத்தில் ரமிக்கிறார்கள்.
சிலர் போகத்தில் ரமிக்கிறார்கள்.
சிலர் உலக ஆசையுடன் இருக்கிறார்கள்.
சிலர் உலக ஆசையில்லாமல் இருக்கிறார்கள்.


यस्य ब्रह्मणि रमते चित्तं
नन्दति नन्दति नन्दत्येव ॥

யஸ்ய ப்ரஹ்மணி ரமதே சித்தம்
நந்ததி நந்ததி நந்தத்யேவ

But only he whose mind steadily gets immersed in Brahman enjoys bliss, only him, no one else.

ஆனால், யாருடைய சித்தம் பரப்ரம்மத்தை பற்றியே நினைத்து ரமிக்கிறதோ, அவர்களே ஆனந்தத்தை அனுபவிக்கிறார்கள். அவர்கள் மட்டுமே உண்மையான ஆனந்தம் அனுபவிக்கிறார்கள்.

योगरतः = indulging in yoga;
वा = or;
भोगरतः = indulging in worldly pleasures;
वा = or;
सङ्गरतः = indulging in good company;
वा = or;
सङ्गविहीनः = bereft of company;
यस्य = whose;
ब्रह्मणि = in Brahman(God);
रमते = gets immersed;
चित्तं = mind (here soul);
नन्दति = bliss;
नन्दत्येव = bliss alone;


भगवद्गीता किञ्चिद धीता
गङ्गा जललव कणिका पीता ।

பகவத் கீதா கிஞ்சிததீதா
கங்காஜல லவ கணிகா பீதா

Study a portion of bhagavath gita at least.
Drink atleast a drop of ganga water.

உன்னுடைய வாழ்க்கையில், பகவத் கீதையில் உள்ள ஒரு சில ஸ்லோகங்களையாவது நீ படித்து இருந்தால்,
கங்கை ஜலத்தில் ஒரு துளியாவது நீ குடித்து இருந்தால்,

सकृदपि येन मुरारिसमर्चा
क्रियते तस्य यमेन न चर्चा ॥

ஸக்ருதபி யேன முராரி ஸமர்சா
க்ரியதே தஸ்ய யமேன ந சர்சா

Worship atleast once lord krishna who holds his flute
then yama will not have  any discussion about you.

கையில் புல்லாங்குழலுடன் இருக்கும் பரப்ரம்மமான கண்ணனை ஒரு முறையேனும் நீ வழிபட்டு இருந்தால்,
யம தர்மன், உன்னை பற்றி விஜாரிக்க கூட மாட்டாரே.

भगवद् = god's;
गीता = song (here the scripture `bhagavatgItA');
किञ्चित् = a little;
अधीता = studied;
गङ्गा = river Ganga;
जललव = water drop;
कणिका पीता = a little droplet, drunk;
गङ्गाजललव कणिका पीता = Even a little drop of Ganga water;
सकृदपि = once even;
येन = by whom;
मुरारि = the enemy of `MurA' (Lord Krishna);
समर्चा = well worshipped;
क्रियते = is done;
तस्य = his;
यमेन = by Yama, the lord of Death;
न = not;
चर्चा = discussion;


पुनरपि जननं पुनरपि मरणं
पुनरपि जननीजठरे शयनम् ।

புனரபி ஜனனம் புனரபி மரணம்
புனரபி ஜனனீ ஜடரே சயனம்

There is birth again and again.
There is death again and again.
One has to lay in mother's womb every time again and again.

பல முறை பிறந்து ஆயிற்று..
பல முறை இறந்து ஆயிற்று..
பல முறை தாயின் கருவில் இருந்து ஆயிற்று..

इह संसारे बहुदुस्तारे
कृपयाऽपारे पाहि मुरारे ॥

இஹ ஸம்ஸாரே பஹு துஸ்தாரே
க்ருபயா பாரே பாஹி முராரே

It is indeed hard to cross this boundless ocean of samsAra. Oh Murari ! Save me through your ocean of mercy.

இந்த சம்சாரம் என்ற பிறவி கடலை கடப்பது என்பது கடினமானது. ஓ முராரி (கண்ணா), உன் கருணையால் என்னை இந்த சம்சார கடலில் இருந்து கரை ஏற்று. 


पुनरपि = again again;
जननं = birth;
पुनरपि = again again;
मरणं = death;
पुनरपि = again again;
जननी = mother;
जठरे = in the stomach;
शयनं = sleep;
इह = in this world/here;
संसारे = family/world;
बहुदुस्तारे = fordable with great difficulty;
कृपयाऽपारे = out of boundless compassion;
पाहि = protect;
मुरारे = Oh MurA's enemy!(KriShNa);




कस्त्वं कोऽहं कुत आयातः
का मे जननी को मे तातः ।

கஸ்த்வம் கோ அஹம் குத ஆயாத:
கா மே ஜனனீ கோ மே தாத:

Who are you ? Who am I ? From where do I come ? Who is my mother, who is my father ?

நீ யார்? நான் யார்? நாம் எங்கிருந்து வந்தோம்? நமக்கு யார் தாய்? யார் தந்தை?


इति परिभावय सर्वमसारम्
विश्वं त्यक्त्वा स्वप्नविचारम् ॥

இதி பரிபாவ்ய சர்வம் அசாரம்
விஸ்வம் த்யக்த்வா ஸ்வப்ன விசாரம்

Thus, look at everything as essence-less and give up the world which is just as an  dream imagination.

உண்மையை உன் மனோபாவத்தால் புரிந்து கொண்டு, இங்குள்ள அனைத்துமே ரசிக்கத்தக்கதல்ல, இது ஒரு மாய உலகம் என்பதை அறிந்து கொள்.


कः = who (are);
त्वं = you;
कः = who(am);
अहं = I;
कुतः = whence;
आयातः = has come;
का = who;
मे = my;
जननी = mother;
कः = who;
मे = my;
तातः = father;
इति = thus;
परिभावय = visualize;
सर्वं = the entire;
असारं = worthless/without essence;
विश्वं = world;
त्यक्त्वा = give up/sacrifice;
स्वप्न = dream;
विचारं = thinking/imagination;


त्वयि मयि चान्यत्रैको विष्णु:
र्व्यर्थं कुप्यसि मय्यसहिष्णुः ।

த்வயீ மயி ச அன்யத்ரேகோ விஷ்ணு:
வ்யர்தம் குப்யஸி மய்ய ஸஹிஷ்ணு:

In me, in you and in everything, none but the same Vishnu dwells. Your anger and impatience is meaningless.

உன்னிடத்திலும், என்னிடத்திலும், எங்கும் விஷ்ணுவே இருக்கிறார். 
நீயும், உலகமும் விஷ்ணுவின் அங்கம் என்ற போது, உனக்கு (உன் மீதோ, பிறர் மீதோ) ஏற்படும் கோபமும், பொறுமையின்மையும் அர்த்தமில்லாதது.

भव समचित्तः सर्वत्र त्वं
वाञ्छस्यचिराद्यदि विष्णुत्वम् ॥

பவ ஸமசித்த: ஸர்வத்ர த்வம்
வாச்சஸி அசிராத் யதி விஷ்ணுத்வம்

Keep inform your mind and thought that vishnu only is everywhere including you.
If you wish to the presence of Vishnu everywhere including you, start seeing everything as you by now, without any difference.

நீ அந்த விஷ்ணுவை உன் அனுபவத்தில் கொண்டு வர ஆசைப்பட்டால், நீயும், பிறரும், உலகமும் 'விஷ்ணுவே' என்ற சம நோக்கு பார்வையை இன்றிலிருந்தே கடைபிடி.

त्वयि = in yourself;
मयि = in myself;
चान्यत्रैक = and+everywhere+only one;
विष्णुः = the Lord MahAviShNu;
व्यर्थं = in vain ; for nothing;purposeless;
कुप्यसि = you get angry;
मय्यसहिष्णु = in me+intolerant;
भव = become;
समचित्तः = equal-minded/equanimity;
सर्वत्र = everywhere;
त्वं = you;
वाञ्छसि = you desire;
अचिराद् = without delay/in no time;
यदि = if;
विष्णुत्वं = the quality/state of Brahman/god-realisation;


शत्रौ मित्रे पुत्रे बन्धौ
मा कुरु यत्नं विग्रहसन्धौ ।

சத்ரோ மித்ரே புத்ரே பந்தோ
மா குரு யத்னம் விக்ரஹ சந்தொள

Do not waste your efforts to expand your existence by hating someone to create enemy and winning love over friend, children and relatives.

நீ இருப்பதை மற்றவர்களுக்கு காட்டுவதாக நினைத்து கொண்டு, எதிரிகளை எதிர்த்து கொண்டும், நண்பர்கள், பிள்ளைகள், உறவினர்களுக்காக நேரத்தை செலவு செய்தும் கொண்டும், உன் காலத்தை (ஆயுளை) வீண் செய்யாதே.

सर्वस्मिन्नपि पश्यात्मानं
सर्वत्रोत्सृज भेदाज्ञानम् ||

ஸர்வஸ்மின் அபி பஸ்ய ஆத்மானம்
ஸர்வத்ரோ ஸ்ருஜ பேதா ஞானம்

See yourself in everyone and give up all all feelings of duality completely.

மற்றவர்கள் வேறு, நீ வேறு என்று நீ பேதமாக பார்ப்பதால் தானே இந்த வீண் முயற்சிகள் செய்கிறாய். 
அனைத்தும் விஷ்ணுமயம் என்று நீ உணர, வேறுபாடுகளை உன் மனதிலிருந்து களைந்து விடு.

शत्रौ = in (towards)the enemy;
मित्रे = in (towards) the friend;
पुत्रे = in(towards) the son;
बन्धौ = in (towards) relatives;
मा = don't;
कुरु = do;
यत्नं = effort;
विग्रहसन्धौ = expanding existence;
सर्वस्मिन्नपि = in all beings;
पश्यात्मानं = see your own self;
सर्वत्र = everywhere;
उत्सृज = give up;
भेदाज्ञानं = difference/otherness/duality;



कामं क्रोधं लोभं मोहं
त्यक्त्वाऽऽत्मानं भावय कोऽहम् ।

காமம் க்ரோதம் லோபம் மோஹம்
த்யக்த்வா ஆத்மானம் பாவ்ய கோ அஹம்

Give up lust, anger, infatuation, and greed. Ponder over your real nature.

காமத்தை (ஆசை), கோபத்தை, லோபத்தை (பண பேராசை), மோகத்தை (விருப்பம்) விடு. நீ யார்? என்ற ஆத்ம சிந்தனை செய்.

आत्मज्ञान विहीना मूढा
स्ते पच्यन्ते नरकनिगूढाः ॥

ஆத்ம ஞான விஹீனா மூடா:
தே பச்யந்தே நரக நிகூடா:

Fools are those who don't have awareness of who they are (self knowledge of Athma). These fools will get cooked in the hell (and return back to Samsara to reborn).

தான் யார் என்று ஆத்ம சிந்தனை கூட செய்யாதவன் மூடன். ஆத்ம சிந்தனை செய்யாமல் வாழ்பவன் நரகத்தில் கஷ்டங்களை அனுபவித்து விட்டு மீண்டும் பிறப்பான்.

कामं = desire;
क्रोधं = anger;
लोभं = greed;
मोहं = infatuation;
त्यक्त्वाऽत्मानं = having abandoned see as one's own self;
भावय = deem/consider/visualise/imagine;
कोऽहं = who am I;
आत्मज्ञान = knowledge of self;
विहीना = bereft;
मूढा = fools;
ते = they;
पच्यन्ते = are cooked?;
नरक = in the hell;
निगूढा = cast in;


गेयं गीता नाम सहस्रं
ध्येयं श्रीपति रूपम जस्रम् ।

கேயம் கீதா நாம ஸஹஸ்ரம்
த்யேயம் ஸ்ரீபதி ரூபமஜஸ்ரம்

Read Bhagavath Gita and chant Lord Krishna name 1000 times.
Meditate the image of Mahalakshmi's Husband Vishnu who is unborn and forever exist in your heart.

பகவத்கீதையை படித்து கொண்டு, ஹரியின் நாமத்தை 1000 முறை சொல்லிக்கொண்டு இரு.
உன் இதயத்தில் யாருக்கும் பிறக்காத சுயம் பிரகாசமான விஷ்ணுவை (மஹாலக்ஷ்மியின் கணவரை) எப்பொழுதும் தியானித்து கொண்டே இரு.

नेयं सज्जन सङ्गे चित्तं
देयं दीनजनाय च वित्तम् ॥

நேயம் ஸஜ்ஜன ஸங்கே சித்தம்
தேயம் தீனஜனாய ச வித்தம்

Take steps to accompany yourself to be with good people. 
Distribute your wealth in charity to the poor and the needy.

உன் மனதை சாதுக்கள் இருக்கும் சங்கத்துடனேயே சேர்த்துக்கொள்.
உன் செல்வத்தை தர்ம வழியில் ஏழைகளுக்கு தர்மம் செய்.

गेयं = is to be sung;
गीता = bhagavatgItA;
नाम = name of the lord;
सहस्रं = 1000 times;
ध्येयं = is to be meditated;
श्रीपति = LakShmi's consort MahAviShNu's;
रूपं = form/image;
अजस्रं = the unborn one;
नेयं = is to be lead/taken;
सज्जन = good people;
सङ्गे = in the company;
चित्तं = mind;
देयं = is to be given;
दीनजनाय = to the poor people;
च = and;
वित्तं = wealth;

सुखतः क्रियते रामाभोगः
पश्चाद्धन्त शरीरे रोगः ।

சுகத: க்ரியதே ராமா போக:
பஸ்சாத் தந்த சரீரே ரோக:

He who yields to lust for pleasure, leaves his body a prey to disease.

யார் ஒருவன் தன் உடலை காமத்தை அனுபவிக்க செலவழிக்கிறானோ, அவன் கடைசி காலத்தை நோயில் அனுபவிக்கிறான்.

यद्यपि लोके मरणं शरणं
तदपि न मुञ्चति पापाचरणम् ॥

யத்யபி லோகே மரணம் சரணம்
தத் அபி ந முஜ்சதி பாபா சரணம்

Though death brings an end to everything, man does not give-up the smell of doing sin (which results in rebirth).

அப்படிப்பட்டவனுக்கு மரணம் இந்த பிறவிக்கு ஒரு முடிவை தந்தாலும், அந்த பாப ஜீவன் தன்னுடன் இந்த பாப வாசனையை தன்கூடவே எடுத்து செல்கிறான். (இதனால் மறுஜென்மம் ஏற்படுகிறது)

सुखतः = for happiness;
क्रियते = is done;
रामाभोग = sexual pleasures?;
पश्चाद्धन्त = later on in the end;
शरीरे = in the body;
रोग = disease;
यद्यपि = even though;
लोके = in the world;
मरण = death;
शरणं = resort/surrender;
तदपि = even then;
न = not;
मुञ्चति = releases/gives up;
पापाचरणं = sin-practicing;




अर्थमनर्थं भावय नित्यं
नास्तिततः सुखलेशः सत्यम् ।

அர்த்தம் அனர்த்தம் பாவய நித்யம்
நாஸ்தி தத: ஸுகலேச: ஸத்யம்

Remember everyday that wealth is always meaningless.
The truth is that one cannot get sustained happiness from the wealth alone.

செல்வம் என்பது அர்த்தமில்லாத விஷயம் என்று எப்பொழுதும் மனதில் நினைவில் கொள். 
செல்வத்தால் சத்யமாக ஒரு துளி கூட சுகம் கிடைக்காது. 

पुत्रादपि धनभाजां भीतिः
सर्वत्रैषा विहिता रीतिः ॥

புத்ராதபி தனபாஜாம் பீதி:
ஸர்வத்ரைஷா விஹிதா ரீதி:

Those who are after money even fear their own son 
That is the way of wealth always.

செல்வம் வைத்து இருப்பவன், தன் பிள்ளைகள் பிடுங்கி கொள்வார்களோ என்று கூட பயப்படுவான்..
இப்படி தான் செல்வத்தின் இயல்பு எப்பொழுதுமே உள்ளது.

अर्थं = wealth;
अनर्थं = purposeless/in vain/danger
भावय = deem/consider/visualise;
नित्यं = daily/always;
न = not;
अस्ति = is;
ततः = from that;
सुखलेशः = (even a little) happiness;
सत्यं = Truth;
पुत्रादपि = even from the the son;
धन = wealth;
भाजां = acquiring people;
भीतिः = fear;
सर्वत्र = everywhere;
एषा = this;
विहिता = understood;
रीतिः = procedure/practice/custom;


प्राणायामं प्रत्याहारं
नित्यानित्य विवेकविचारम् ।

ப்ராணாயாமம் ப்ரத்யாஹாரம்
நித்யா நித்ய விவேக விசாரம்

Regulate the Prana (breathing),
Regulate the food intake,
Use your mind to distinguish permanent and temporary things to remain unaffected.

பிராணனின் (மூச்சு) போக்கை சீர்படுத்து.
உணவில் கட்டுப்பாடு கொள்.
அறிவை கொண்டு எது நிலையானது, எது நிரந்தரமற்றது என்று பார்.

जाप्यसमेत समाधिविधानं
कुर्ववधानं महदवधानम् ॥

ஜாப்யசமேத சமாதி விதானம்
குர்வ வதானம் மஹத் அவதானம்

Chant the holy name of God with peaceful mind. Perform these with care, with extreme care.

பர-ப்ரஹ்மமான கோவிந்தனின் நாமத்தை சொல்லி கொண்டே இரு. இந்த பயிற்சியை கவனுத்துடன், மனதை அலையவிடாமல் மிக கவனுத்துடன் செய்து கொண்டே இரு.

प्राणायाम = breath-control;
प्रत्याहार = diet-control;
नित्यं = always/daily/certain;
अनित्य = uncertain/temporary/ephemeral/transient;
विवेक = awareness after reasoning;
विचार = thought/considered conclusion/opinion;
जाप्यसमेत = with chanting of the names of the lord;
समाधिविधान = in the state of silence;
कुर्ववधानं = pay attention;
महदवधानं = great care attention;



गुरुचरणाम्बुज निर्भरभक्तः
संसारा दचिराद्भव मुक्तः ।

குரு சரணாம்புஜ நிர்பர பக்த:
ஸம்ஸாராத சிராத்பவ முக்த:

One who is a devotee of the lotus feet of the Guru ! May be soon free from Samsara.

மகாத்மாவான குருவின் சரணத்தை நீ பற்றினால் மட்டுமே, உன்னால் இந்த சம்சார பிறவி கடலை கடக்க முடியும்.

सेन्द्रिय मानस नियमादेवं
द्रक्ष्यसि निज हृदयस्थं देवम् ॥

ஸேந்த்ரியமானஸ நியமாதேவம்
த்ருக்ஷ்யஸி நிஜ ஹ்ருதயஸ்தம் தேவம்

Through disciplined senses and controlled mind, you will experience the indwelling Lord in your heart !

குருவின் சரணத்தை பற்றி, எண்ணங்களை உலக விஷயங்களில் சிதறவிடாமல், புலன்களை அடக்கி வாழ ஆரம்பிக்கும் போது, பரப்ரம்மமாகிய கோவிந்தன் இதயத்தில் இருப்பதை நீ உணருவாய்.


गुरुचरणाम्बुज = the lotus feet of the teacher/guru;
निर्भर = dependent;
भक्तः = devotee;
संसारात् = from the world;
अचिराद्भव = in no time from the cycle of birth and death;
मुक्तः = released;
सेन्द्रियमानस = sa+indriya+mAnasa, with senses and mind;
नियमादेव = control alone(niyamAt eva);
द्रक्ष्यसि = you will see;
निज = one's own;
हृदयस्थं = heart-stationed;
देवं = God;

भज गोविन्दं भज गोविन्दं
गोविन्दं भज मूढमते ।

பஜ கோவிந்தம் பஜ கோவிந்தம்
கோவிந்தம் பஜ மூடமதே

Worship Govinda, worship Govinda, worship Govinda, Oh fool !

கோவிந்தனை பாடிடு, கோவிந்தனை பாடிடு
கோவிந்தனை பாடிடு, மூட மதியே!!


नामस्मरणात् अन्य उपाय
नहि पश्यामो भवाब्धितरणे ॥

நாம ஸ்மரணாத் அன்ய உபாய
நஹி பஸ்யாமோ பவாப்தி தரனே

Other than chanting the Lord's names, there is no other way to cross the life's ocean.

சம்சார பிறவி கடலை கடக்க, கோவிந்தனின் நாமத்தை பாடுவதை தவிர, வேறு வழியே இல்லை..


भज = worship;
गोविन्दं = lord Govinda;
मूढमते = Oh foolish mind!;
नामस्मरणात् = (except) through/from remembrance of the Lord's name; अन्य = other;
उपाय = plan/method/means;
नहि = not;
पश्याम = we see;
भवतरणे = for crossing the ocean of births deaths;


श्री भगवत्पाद शंकराचार्य
Shankara Bhagavatpaada
சங்கர பகவத்பாதர்

Interested to Read More? Click Here -> How Great People handle death of their beloved people?