Followers

Search Here...

Showing posts with label பிரேதம். Show all posts
Showing posts with label பிரேதம். Show all posts

Friday 11 May 2018

பிரேத சரீரம் எப்படி உருவாகிறது. 12 நாள் அபர காரியம்

ஒருவர் இறந்து போன பிறகு அவருக்கு செய்ய வேண்டிய கர்மா 'அபர காரியம்' என்று சொல்லப்படுகிறது.


ஸ்தூல (மாமிச உடம்பை) சரீரத்தை விட்டு, "ஜீவன்" ஸூக்ஷ்ம சரீரத்துடன் மரண காலத்தில் வெளியேறுகிறான்.

ஸூக்ஷ்ம சரீரத்துடன் உடலை விட்டு சென்ற ஜீவன், கொஞ்ச நாட்கள் பிரேத சரீரத்தை பெறுகிறான்.
இந்த பிரேத சரீரத்துடன் ஆகாசத்தில் ஸஞ்சாரம் செய்கிறான்.

அதன் உடலானது தகனம் செய்யப்பட்டு விட்டதால், அந்த பிரேதத்துக்கும் பசி,தாகம் முதலியவை உண்டாகி விடுகிறது.

அந்த பசி, தாகம் தீருவதற்காக, இறந்த முதல் நாள் கொண்டு 11 நாள் வரை வாஸோ தகம், திலோ தகம், பிண்ட தானம் செய்யப் படுகிறது.

ஒரு பாஷாணத்தில் பிரேதத்தை ஆவாஹனம் செய்து பூஜை செய்யப்படுகிறது.


பிரேத சரீரம் எப்படி உருவாகிறது?
என்று ருஷ்யசிருங்கர் கூறுகிறார்.

முதல் நாள், பிண்ட தானம் செய்யும் போது தலையும்,

2வது நாள் பிண்ட தானம் செய்யும் போது, கண், காது, மூக்கும்

3வது நாள் பிண்ட தானம் செய்யும் போது கைகள், மார்பு, கழுத்தும்

4வது நாள் பிண்ட தானம் செய்யும் போது, நாபி, குதம், குறியும்

5வது நாள் பிண்ட தானம் செய்யும் போது, தொடைகளும்

6வது நாள் பிண்ட தானம் செய்யும் போது, தோலும்

7வது நாள் பிண்ட தானம் செய்யும் போது, நரம்புகளும்,

8வது நாள் பிண்ட தானம் செய்யும் போது, ரோமங்களும்,

9வது நாள் பிண்ட தானம் செய்யும் போது வீரியமும்,

10வது நாள் பிண்ட தானம் செய்யும் போது பசி நிவிருத்தியும் ஆகிறது. இந்த நாளில் தான் பூத பலி போடப்படுகிறது.

11வது நாள் ஏகோத்திஷ்டம் செய்ய வேண்டும். இதனால் ஜீவன் பிசாசத்துவத்தை அடைகிறான்.


12வது நாள் இப்படியே பிசாசாகவே விட்டு விடாத படி பித்ரு லோகத்தை அடைய செய்வதே 'ஸபிண்டீகரணம்'.

ஸபிண்டீகரணம் செய்வதால், ஜீவன் பிரேத சரீரத்தை விட்டு, பித்ரு லோகத்தை அடைகிறான்

இப்படி செய்யப்படாமல் இருக்கும் போது, ஜீவன் உடலை விட்டு விலகிய பின், பிரேத சரீரத்துக்குள் இருக்கும் ஜீவன் பிரேதங்களாகவே (ஆவி) அலைகின்றனர்.

பிரேதங்களுக்கு தன் குடும்பம், ஆசை இருப்பதால், தங்கள் வாசனையை தீர்த்துக் கொள்ள வேண்டி பிற சரீரங்களில் ஆவேசித்து விடுகின்றனர்.

பிரேதங்களுக்கு தன் சொந்தங்களை தெரியும்.
எப்படியாவது மீண்டும் இவர்களோடு முன்பு போல வாழ வேண்டும் , உறவு கொள்ள வேண்டும் என்று ஆசை படுகின்றன.

பிரேதங்களுக்கு குரல் மட்டும் கொடுத்து பேசவோ, கனவில் தரிசனம் தரவோ முடியும்.

பகவானின் நாம சங்கீர்த்தனம்,
பூஜை ஸமயத்தில் அடிக்கும் மணி, சங்கம் இவைகளின் ஓசை,
தூபம்,
தீபம்,
துளசி, வில்வம்
முதலியவை பிரேதங்களை தடுத்து விடுகின்றன.


இன்றும் பிரேதங்களுடன் பேசக்கூடிய சில மந்திரவாதிகள் இருக்கின்றனர்.

மனித வர்க்கத்துக்கு தான் இந்த நியமம்.

பசு, பக்ஷிகள், பூச்சிகள் இவைகள் யாவும் பிரேத சரீரத்தையோ, மற்ற லோகங்களான பித்ரு, தேவ, எம, ப்ரஹ்ம லோகங்களையோ அடைவதில்லை.

இவ்வுலகில் செத்து, இவ்வுலகிலேயே வேறு வேறு ஜென்மங்களை அடைந்து விடுகின்றன.

எனவே, ஒருவர் இறந்த நாள் முதல், 12வது நாள் சபிண்டீகரணம் வரை அவசியம் சாஸ்த்திரப் விதிப்படி யாவரும் செய்ய வேண்டும்.

இறந்து போனவர்களுக்கு நாம் செய்ய வேண்டிய கடமை அது.

இந்திய பூமி கர்ம பூமி.
இங்கு செய்யாது விட்டால், பித்ருக்கள் நமக்கு சாபம் விடுகின்றனர்.