Followers

Search Here...

Showing posts with label காணாமல். Show all posts
Showing posts with label காணாமல். Show all posts

Tuesday 29 October 2019

சந்தியா வந்தனம் செய்தால், நவ கிரகங்களும், பரமாத்மாவும் அருள் செய்வார்களே!!... "காணாமல் கோணாமல் கண்டு கொடு" என்பதற்கு அர்த்தம் என்ன? தெரிந்து கொள்வோமே...

"காணாமல் கோணாமல் கண்டு கொடு" என்ற சொல்லுக்கு
பொதுவான அர்த்தம் என்ன?
தெரிந்து கொள்ள வேண்டாமா?



அன்னதானம் செய்யும் போது, இதன் பொதுவான அர்த்தம் :
  • பசி என்று வருபவனின் தகுதி என்ன? என்று 'காணாமல்',
  • அன்னதானம் செய்யும் போது, மனம் 'கோணாமல்',
  • அன்னதானம் செய்ய தன்னை தகுதியாக்கிய தெய்வத்துக்கு ஆராதனையாக, தானம் வாங்குபவர்களிடமும் தெய்வத்தை "கண்டு" அன்னதானம் செய் 
என்பது பொதுவான அர்த்தம்.

சந்தியா வந்தனத்தில் "அர்க்யம்" மிக முக்கியமானது..
"மறக்காமல் அர்க்யம் கொடு" என்று
ப்ரம்மணர்களுக்கு  நினைவுபடுத்தவும் இது சொல்லப்படுகிறது...



அதன் அர்த்தம் :
  • சூரியன் உதயமாகும் (சூரியனை காண்பதற்கு) முன் (4-6AM), 
  • சூரியன் உச்சத்தில் (கோணாமல், சூரியன் தலைக்கு மேல்) இருக்கும் போது (12noon),
  • சூரியன் மறையும் முன் (5-6PM), சூரியனை கண்டு கொண்டேதர்ப்பணம் கொடு
என்று நினைவூட்டுகிறது.




நவ க்ரஹங்களுக்கும் (தோஷங்கள் நீங்க),
ஒரு துளி ஜலமாவது உன் கையால் அர்க்யம் செய்து தர்ப்பணம் (திருப்தி) செய்.
பல விபூதி அவதாரங்களாக இருக்கும் பரப்ரம்மத்துக்கு,
ஒரு துளி ஜலமாவது உன் கையால் அர்க்யம் செய்து நன்றியை காட்டி, தெய்வங்களின் அணுகிரஹம் பெற தர்ப்பணம் (திருப்தி) செய்.
மனிதனாக பிறக்க வைத்த அந்த பரப்ரம்மத்துக்கு உன் நன்றியை காட்ட, தேவ தர்ப்பணம் செய் என்கிறது இந்த வாக்கியம்.

சந்தியா வந்தனத்தில் சொல்லப்படும், மிக மிக முக்கியமான தேவ தர்ப்பணம் இதோ:
  1. ஆதித்யம் தர்ப்பயாமி !
    (சூரிய தேவனை திருப்தி  செய்கிறேன்)
  2. ஸோமம்  தர்ப்பயாமி !
    (சந்திர தேவனை திருப்தி செய்கிறேன்)
  3. அங்காரகம்  தர்ப்பயாமி !
    (செவ்வாய் தேவனை திருப்தி செய்கிறேன்)
  4. புதம்  தர்ப்பயாமி !
    (புதன் தேவனை திருப்தி செய்கிறேன்)
  5. ப்ருஹஸ்பதிம்  தர்ப்பயாமி !
    (குரு தேவனை திருப்தி செய்கிறேன்)
  6. சுக்ரம்  தர்ப்பயாமி !
    (சுக்கிர தேவனை திருப்தி செய்கிறேன்)
  7. சனைச்சரம்  தர்ப்பயாமி !
    (சனி தேவனை திருப்தி செய்கிறேன்)
  8. ராஹூம்  தர்ப்பயாமி !
    (ராகு தேவனை திருப்தி செய்கிறேன்)
  9. கேதும்  தர்ப்பயாமி !
    (கேது தேவனை திருப்தி செய்கிறேன்)



  1. கேசவம்  தர்ப்பயாமி !
    (க: - பிரம்மா, ஈச: - ருத்ரன் ஆகிய இரு வடிவங்களாகவும் பேதமாக தன்னை காட்டிக்கொண்டு, மூலப்பொருளான அ: - விஷ்ணுவாகிய பரம்பொருளை திருப்தி செய்கிறேன்)
  2. நாராயணம்  தர்ப்பயாமி !
    (நரர்களுக்கு (மனிதர்களுக்கு) அடைக்கலமாக (அயணமாக) இருக்கும் பரம்பொருளை பரம்பொருளை திருப்தி செய்கிறேன்)
  3. மாதவம்  தர்ப்பயாமி !
    ('மா' - மௌனம், 'த' - தியானம், 'வ' - யோகம் இவை மூன்றாலும் அறியத்தக்க பரம்பொருளை திருப்தி செய்கிறேன்.
    'மா' என்றால் அலைமகளான லட்சுமி. அவளுடைய 'தவ:', அதாவது, லட்சுமியின் கணவனான பரம்பொருளை (மாதவனை) திருப்தி செய்கிறேன்.)
  4. கோவிந்தம்  தர்ப்பயாமி !
    (கோ என்றால் பசு. பசுக்களுக்குத் தலைவனாக இருக்கும் பரம்பொருளை திருப்தி செய்கிறேன்)
  5. விஷ்ணும்  தர்ப்பயாமி !
    (எங்கும் இருக்கும் பரம்பொருளை திருப்தி செய்கிறேன்.)
  6. மதுஸூதனம்  தர்ப்பயாமி !
    (மது என்ற அசுரனை வென்று, வேதத்தை காத்த பரம்பொருளை திருப்தி செய்கிறேன்.)
  7. த்ரிவிக்ரமம் தர்ப்பயாமி !
    (மூன்று உலகங்களையும் இருக்கும் பரம்பொருளை திருப்தி செய்கிறேன்.)
  8. வாமனம்  தர்ப்பயாமி !
    (அளவில்லாத உலகங்களை, ஒரு சிறுவன் (வாமனன்) போல வந்தாலும் அளக்கும் சக்தி பெற்ற பரம்பொருளை திருப்தி செய்கிறேன்.)
  9. ஸ்ரீதரம்   தர்ப்பயாமி !
    (ஸ்ரீ என்ற லட்சுமியை உடைய பரம்பொருளை திருப்தி செய்கிறேன்)
  10. ஹ்ருஷீகேஷம்  தர்ப்பயாமி !
    (இந்திரயங்களின் அதிபதியாக இருக்கும் பரம்பொருளை திருப்தி செய்கிறேன்)
  11. பத்மநாபம்  தர்ப்பயாமி !
    (பத்மம் என்றால் தாமரை...நாபி என்றால் தொப்புள். தாமரையின் உட்புறம்போல் சிவந்ததும் ஆழ்ந்ததும் வட்டவடிவிலிருப்பதுமான தொப்புளையுடைய பரம்பொருளை திருப்தி செய்கிறேன்)
  12. தாமோதரம்  தர்ப்பயாமி !
    (யாருக்கும் கட்டுப்படாத பரப்ரம்மம், அன்பே உருவான யசோதை தாய், தன் வயிற்றில் (உதர) ஒரு சிறு கயிரால் (தாம) கட்ட நினைக்க, தன்னை கட்டி விட செய்து கொண்டதால், தாமோதரன். அன்பிற்கு கட்டுப்படும் பரம்பொருளை திருப்தி செய்கிறேன்)

5 நிமிடம், சந்தியா வந்தனம் செய்ய கசக்குமா?..
சந்தியா வந்தனம் செய்தால் ராகு, கேது, சனி பகவானிடம் பயம் வருமா?.
பரப்ரம்மத்தை மூன்று வேளையும் ஆராதிக்கும் ஒருவனை, தெய்வம் துணை நிற்காமல் போகுமா?



அன்னதானம் செய்வோம்...
மூன்று வேளையும் தேவ தர்ப்பணம் செய்து தெய்வ அணுகிரஹத்தை பெற்று, குறையில்லாமல் வாழ்வோம்.

வாழ்க ஹிந்துக்கள்..
வாழ்க ஹிந்து தர்மம்.