Followers

Search Here...

Showing posts with label ராக்ஷஸன். Show all posts
Showing posts with label ராக்ஷஸன். Show all posts

Monday 6 January 2020

ராக்ஷஸர்கள் வானரர்கள் யார்?...மனிதர்களை விட பலசாலிகளான இவர்கள் எப்படி அழிந்தார்கள்? அறிவியல் கண்டுபிடிப்புகள் இது போன்ற மனிதர் வர்கம் இருந்தது என்று கண்டுபிடித்து சொல்கிறதே! அறிவியல் சொல்வதை ஹிந்துக்களை பார்க்க வேண்டாமா?ராமாயணம் நிரூபிக்க படுகிறதே!

"ராக்ஷஸர்கள்" என்று அழைக்கப்பட்ட ஜாதி இன்று இல்லை.
அதே போல,
"வானரர்கள்" என்று அழைக்கப்பட்ட ஜாதியும் இன்று இல்லை.
ஆனால் "மனிதர்கள்" என்ற ஜாதி அன்றும் இருந்துள்ளது.. இன்றும் இருக்கிறோம்.




வானரர்கள், ராக்ஷஸர்கள் 'இருவருமே மனிதர்களை போல தான் இருந்தார்கள்..'
ஆனால்,
'மனிதர்களை விட பன்மடங்கு பலம் பொருந்தியவர்களாக இருந்தார்கள்' என்று நம் ராமாயணத்தில் காட்டப்படுகிறது.
வானத்தில் பறக்கும் சக்தியுடன், 
குரங்கு போலவும் மனிதன் போலவும் தேவைக்கு ஏற்றவாறு உருமாறி கொள்ளும் மாய சக்தி கொண்ட, 
மிகவும் பலசாலிகளாக இருந்த மனிதர்களை (நரர்கள்) - 
"வானரர்கள்" என்று அழைத்தனர்.

நர (மனித) மாமிசத்தை அப்படியே பச்சையாக சாப்பிடும், 
உருவத்தை சாதாரண மனிதனை போன்று மாற்றி கொள்ளும் சக்தி கொண்ட, 
ராக்ஷஸ ரூபத்தில் உயிர் நடுங்கும் உருவத்துடன், மாய சக்தி உடையவர்களாக, 
தனக்கு தேவைப்படும் போது எந்த அதர்மமும் செய்ய துணிந்தவர்களாக, 
எதையும் செய்ய துணிந்தவர்களாக, 
மனிதர்கள் நல்ல காரியங்கள் செய்தால் அவர்களை கொலை செய்து அப்படியே விழுங்கவும் துணிந்தவர்களாக, 
படித்தவர்களாகவும், தவம் செய்து பாவங்களை போக்கி கொள்ளும் சக்தி உள்ளவர்களாகவும், 
மஹா பலசாலிகளாகவும் இருந்த மனிதர்களை -
"ராக்ஷஸர்கள்" என்று அழைத்தனர்.

12 லட்சம் வருடம் முன், த்ரேதா யுகத்தில் நடந்த ராமாயண சமயத்தில்,
மனிதர்களை விட பலசாலியான, வானில் பறக்கும் சக்தி கொண்ட "வானரர்கள்" என்ற ஜாதி இருந்தது தெளிவாக சொல்லப்படுகிறது.
அதே போல,
மனிதர்களை விட பலசாலியான, நர மாமிசம் சாப்பிடும், தனக்காக எதையும் செய்ய கூடியவர்களான, மாய சக்தி உடையவர்களான, "ராக்ஷஸர்கள்" என்ற ஜாதி இருந்தது பற்றியும் தெளிவாக சொல்லப்படுகிறது.
மனிதர்களில் உயர்ந்த "விஸ்ரவஸ்" என்ற ரிஷிக்கும், த்ருணபந்து என்ற ராஜாவின் (ராஜரிஷி ஆனவர்) பெண்ணான "இடவிடா" என்பவளுக்கும் "குபேரன்' பிறந்தான்.
அவன் தேவர்களில், யக்ஷர்களின் தலைவனானான்.
பூலோகத்தில், இலங்கையில் ஆட்சி புரிந்து வந்தான்.

"விஸ்ரவஸ்", ராக்ஷஸ குலத்தில் பிறந்த "கேகசி" என்பவளையும் மணந்தார்.
இவர்களுக்கு நேபாளத்தில் உள்ள சாலிக்ராம என்ற தேசத்தில், ராக்ஷஸனாக பிறந்தார்கள்  "ராவணன், கும்பகர்ணன், விபீஷணன், சூர்ப்பனகை" போன்றவர்கள்.
குறிப்பாக "ராவணன், சூர்ப்பனகை" இருவரும் 100 சதவீதம் "ராக்ஷஸ சக்தியுடன், ராக்ஷஸ குணத்துடன்" இருந்தனர்.
விபீஷணன் ராக்ஷஸ சக்தியுடன் இருந்தாலும், குணத்தில் மனித குணத்துடன் ஒத்து இருந்தான். தர்மமாதர்மம் பேசுவான்.

ராவணன் தன் தந்தையிடம் பூரணமாக வேதம் கற்றவன்.
ராவணன், குபேரன் சகோதர முறை.
புலஸ்திய ரிஷி இவர்களுக்கு தாத்தா முறை.
ராவணன் 'புலஸ்திய கோத்திரம்'.

தனக்கு தேவை என்றால், எந்த காரியமும் செய்ய துணிபவர்கள் ராக்ஷஸர்கள்.
யாருக்கும் அடங்காதவர்கள்.
ராவணன் தன் தம்பி என்று கூட பார்க்காமல், குபேரனை அடித்து துரத்தி, அவன் வைத்து இருந்த இலங்கையை பிடித்தான். அவன் வைத்து இருந்த குபேர சொத்தை பிடுங்கி, புஷ்பக விமானத்தையும் (flight) பிடுங்கி கொண்டான்.
மேலும்,
நர மாமிசம் பச்சையாக சாப்பிடுபவன் ராவணன்..
மாய சக்தி கொண்டவன்.
பொதுவாகவே ஒரு தலை, 2 கைகளுடன் இருக்கும் ராவணன், மஹா பலசாலிகளான, யாருக்கும் அடங்காத ராக்ஷஸர்கள் கூட்டத்துக்கு "தலைவன்" என்று காட்டி கொள்ள, சபைக்கு மட்டும், 10 தலைகளுடன், 20 கைகளுடன் வருவான்.
ராக்ஷஸ கூட்டமே ராவணனை பார்த்து நடுநடுங்கும்.
மேலும்
'போர் சமயத்தில் எதிரிகளை பயமுறுத்த, 10 தலைகளுடன், 20 கைகளுடன் வருவான்' என்று வால்மீகி ராமாயணம் தெளிவாக காட்டுகிறது.




ஹனுமான் கடலை தாண்டி, இலங்கையில் சீதையை தேடிய போது, ராவணன் அவன் அரண்மனையில் ஒரு தலையுடன், 2 கைகளுடன் தான் படுத்து இருந்தான் என்று காட்டப்படுகிறது.
இதே ராவணன்,
சீதை அபகரித்து, ஜடாயுவுடன் போர் செய்யும் போதும், 
ராமபிரானிடம் போர் புரியும் போதும், 
10 தலைகளுடன், 20 கைகளுடன் தன்னை காட்டினான்.
மாய சக்தி நிறைந்தவன்.
செய்யும் பாவங்களுக்கு கடுமையான தவம் செய்து, பாவத்தை போக்கி கொள்ளும் சக்தியும் உடையவன் ராவணன்.

சீதையை இலங்கை இழுத்து வந்து, "10 மாதத்தில் தன்னை ஏற்று கொள்ள மறுத்தால், இவளை தனக்கு இரவு உணவாக வெட்டி சாப்பிட ஏற்பாடு செய்" என்று அவளை சுற்றியுள்ள ராக்ஷஸ பெண்களிடம் சொல்லி செல்கிறான்.

கும்பகர்ணன் தூக்கத்திலிருந்து எழுப்படும் போது, 100 பன்றிகளை விழுங்கி மேலும் பல மாமிசங்களை விழுங்கினான் என்று சொல்லப்படுகிறது.
இவனுடைய சாதாரண உடலே 100 அடிக்கு மேல் இருந்தது என்று காட்டப்படுகிறது. இதை தவிர மாய சக்தியும் கொண்டவன் கும்பகர்ணன்.

இரவிலிலும் கண் தெரியும் சக்தி உள்ளவர்கள் ராக்ஷஸர்கள். 
மனிதர்களை வெறுப்பவர்கள். 
முக்கியமாக மனிதர்களில் நல்ல காரியங்கள் செய்தால், அனைவரையும் நர மாமிசமாக சாப்பிட்டு விடுபவர்கள் ராக்ஷஸர்கள்.
வானரர்களில் "ஹனுமான்" மிகவும் பலசாலி, பாரத மண்ணிலிருந்து இலங்கை வரை தாண்டும் பலசாலி. மாய சக்தி கொண்டவர். ஆனால், சாத்வீகர்.
வானரர்களில் "வாலி" மஹா சக்தி வாய்ந்தவன். அறிவு குறைந்தவன். அதர்மம் செய்பவன். 
ஆனால் ராக்ஷஸர்களை போல மனிதர்களை ஹிம்சிப்பவர்கள் அல்ல. மனிதர்களை போலவே இரவில் கண் தெரியாதவர்கள்.

ராக்ஷஸர்கள் பலத்துக்கு வானரர்கள் தூசுக்கு சமானமானவர்கள்.
ராக்ஷஸர்கள் மனிதர்களை மதிக்கும் அளவில் கூட வைக்கவில்லை.

'தன் 10 தலைகளையும் அறுத்து, ராஜசமான கோரமான யாகம் செய்து, ப்ரம்ம தேவனை அழைத்தான்' ராவணன்.
ப்ரம்ம தேவன் இவன் தவ வலிமைக்கு பணிந்து காட்சி கொடுக்க, "தேவர்கள், யக்ஷர்கள், கிண்ணரர்கள் என்று யாராலும் தான் சாக கூடாது" என்று அடுக்கி கொண்டே போன ராவணன், வானரர்களையும், மனிதர்களையும் சொல்லவில்லை.

மனிதனால், ராக்ஷஸ குலத்தில் உள்ள கடைசி ராக்ஷஸனை கூட எதிர்க்க முடியாது என்பதால், மனிதனை பற்றி அவன் நினைவில் கூட இல்லை.
பரமாத்மா நாராயணன் மனிதனாக பிறந்து, ப்ரம்ம தேவன் கேட்டு கொண்ட பிரார்த்தனைக்காக ராவணனை மனிதனாகவே இருந்து ஒழித்தார்.
ராவணன் அழிந்தாலும், ராக்ஷஸர்கள் பிறகும் இருந்தார்கள்.
இலங்கையில் மிச்சப்பட்ட ராக்ஷஸர்களுக்கு விபீஷணன் அரசனாகி, இலங்கையை ஆண்டான்.

12 லட்சம் வருடம் முன் நடந்த இந்த ராமாயண நிகழ்வில் சொல்லப்படும் இந்த மூன்று பேரை, இன்றைய ஆராய்ச்சி மூலம்

  1. Homo-erectus,
  2. Homo-neanderthal,
  3. Homo-sapiens (human)

என்று 3 வித மனிதர்கள் இருந்தார்கள் என்று கண்டுபிடிக்கிறார்கள்.
'Homo-erectus என்று சொல்லப்பட்ட இவர்களின் மண்டை ஓடு ஆப்ரிக்கா போன்ற தேசங்களில் ஆரம்பித்து பாரத தேசம் வரை இருந்தது'
என்று கண்டுபிடித்த இவர்கள், ஆப்ரிக்கா கலாச்சாரத்தை மட்டுமே கொண்டு இவர்கள் பலசாலிகளாகவும், கொஞ்சம் நல்லவர்களாகவும் இருந்தனர் என்று மேலோட்டமாக சொல்கிறார்கள்.
Homo-erectus என்று சொல்லப்பட்டவர்கள், ஆப்பிரிக்க முதல் இந்திய தேசம் வரை பரவி இருந்தார்கள் என்று மட்டும் இவர்கள் கண்டுபிடிப்பு நின்று விட்டது. இவர்கள் 6 லட்சம் வருடங்கள் முன்பு வரை இருந்தார்கள் என்று சொல்கிறது இன்றைய ஆராய்ச்சி.




Homo-neanderthal என்று சொல்லப்பட்டவர்கள் தான் "ராக்ஷஸர்கள் " என்று நாம் சிறிது நம் ராமாயண சரித்திரத்தை படித்தாலேயே புரிகிறது. 
இன்றைய ஆராய்ச்சியின் மேலோட்டமான அனுமானத்தின் படி "இப்படி தான் இவர்கள் இருந்தார்கள்" என்று காட்டுகிறது இன்றைய விஞ்ஞானம்.




இந்த உருவங்களைஇவர்கள் பலத்தை பார்த்தால், ராமாயணம் சொல்லும்  சூர்ப்பனகை, ராக்ஷர்கள் குணத்துடன் ஒத்து போகிறது. 
இந்த ஆராய்ச்சிகள் ஐரோப்பா கண்டத்தில் மட்டுமே செய்யப்பட்டதால், Homo-neanderthal என்று சொல்லப்பட்ட இவர்களை போன்றே வர்ணிக்கப்பட்ட்ட ராக்ஷஸர்களை பற்றி ராமாயணத்தில் சொல்லி உள்ளதை இவர்கள் ஆராய்ச்சி செய்யவில்லை என்று தெரிகிறது.

"Homo-erectus" என்று சொல்லப்பட்டவர்கள் தான் "வானரர்கள்" என்று நாம் சிறிது நம் ராமாயண சரித்திரத்தை படித்தாலேயே புரிகிறது.

12 லக்ஷம் முன் த்ரேதா யுகத்தில் நடந்ததாக சொல்லப்படும் இந்த நிகழ்வில் இவர்கள் இந்திய மண்ணில் யார்? எப்படி இருந்தார்கள்? என்று அறிய முடிகிறது.

ஆப்பிரிக்காவில் இந்த Homo-erectus மனிதர்களின் எலும்புகள் கிடைத்ததால், இவர்கள் காட்டு மிராண்டிகளாக வாழ்ந்தனர் என்று சொல்லி, நின்று விட்டனர் நவீன ஆராய்ச்சியாளர்கள்.

இந்தியாவில் Homo-erectus  இருந்தார்கள் என்று சொல்லும் இவர்கள், இங்கு எப்படி இருந்தார்கள் என்று ஏன் ஆராய்ச்சி செய்யவில்லை?
காரணம்,
பாரத தேசத்தின் சரித்திரத்தை கோரி, கஜினி போன்ற இஸ்லாமியர்கள் நுழைவதற்கு முன் சென்று ஆராய வெளிநாட்டினர் தயார் இல்லை. 

உலகமே பிச்சைக்கார நாடாக இருந்த போது, 
பாரத மக்கள் சுயசார்புள்ளவர்களாக, மிகவும் வலிமையுள்ள, செல்வ செழிப்புள்ள, கலாச்சாரம் மிக்க மனிதர்களை கொண்ட நாடாக இருந்தது.
பாரத நாட்டை ஆராய்ச்சி செய்வது,
பாரத மண்ணின் கலாச்சார பெருமையை, ராமாயணம், மஹாபாரதம் போன்ற இதிஹாசங்களை உண்மை என்று சொல்ல வேண்டி வரும் என்பதால் இந்தியாவில் Homo-erectus  இருந்தார்கள் என்று சொல்லும் இவர்கள், இங்கு எப்படி இருந்தார்கள் என்று ஆராய்ச்சி செய்யவில்லை.

"பாரத மக்களை ஹிந்துக்களாக வாழ விடக்கூடாது" என்று இருக்கும் மேலைநாடுகளிடம், பாரத மண்ணில் நடந்த சரித்திரங்களை பிரபலப்படுத்துமா!! என்று எதிர்பார்ப்பதே அறிவீனம்.

பாரத மண்ணில் பிறந்த நாமாவது, நம் தேசத்தின் உண்மையை, பெருமையை அறிந்து கொள்ளலாமே, நாம் உலகுக்கு சொல்லலாமே!

12 லட்சம் வருடம் முன் இந்த மூவரும் யார்?
பாரத மண்ணில் இருந்து இவர்கள் என்ன செய்தார்கள்?
என்று ராமாயணத்தில், நம் கண் முன்னே காட்டி விடுகிறார், தமிழன் வால்மீகி.

  1. Homo-erectus (வானரர்கள்)
  2. Homo-neanderthal (ராக்ஷஸர்கள்)
  3. Homo-sapiens (human) (மனிதர்கள்)

என்று 3 வித மனித உருவம் கொண்டவர்கள் இருந்தார்கள். இவர்கள் இப்படி பட்டவர்கள்.. இப்படிப்பட்ட குணம் கொண்டவர்கள்.
அனைவரும் பொது மொழியான சம்ஸ்க்ரிதம் அறிந்தவர்கள் என்று காட்டி, இன்றைய ஆராய்ச்சியின் கண்டுபிடிப்பை, அன்றே எழுதி வைத்த்தார் வால்மீகி என்ற தமிழன். 

பாரத மக்களுக்கு காலம் காலமாகவே இந்த ஆராய்ச்சிகளின் உண்மை தெரிகிறது.
மனிதர்கள் பெரும்பாலும் சாதுக்கள். சக்தி குறைந்தவர்கள். தர்மத்தில் இருக்க ஆசைப்படுபவர்கள். மனிதர்களிலும் பொறமைக்காரர்கள் உண்டு.
இன்று இருக்கும் நாம் அனைவருமே மனிதர்கள் தான்.

ராக்ஷஸர்கள் பெரும்பாலும் பயங்கரமானவர்கள்.. நர மாமிசம் சாப்பிடுபவர்கள். எதையும் செய்ய துணிந்து விடுவார்கள். மாய சக்தி கொண்டவர்கள்.
தர்மத்தில் மட்டுமே வாழ வேண்டும் என்று நினைக்கும் சில நல்லவர்களும் இருப்பார்கள். ஆனால் இவர்கள் மிக குறைவே.

"இல்வலா, வாதாபி" என்ற இரு மாயாவி ராக்ஷஸர்கள், "அகத்தியர்" போன்ற தமிழ் முனியை நர மாமிசமாக சாப்பிட நினைத்து, தமிழ் முனி அகத்தியரின் தவ வலிமையால் அழிந்தனர். 

மாய சக்தி நிறைந்த ராக்ஷஸர்களும், மனிதர்களும் எந்த விதத்திலும் சமம் இல்லை.
மனிதர்களையே மதிக்காதவர்கள் ராக்ஷஸர்கள். 
இன்று இருக்கும் சில வேடிக்கை மனிதர்கள், தங்களை ராவணன் பரம்பரை என்று கூறிக்கொள்கிறார்கள். இது வேடிக்கையிலும் வேடிக்கை.

வானரர்களும் குணத்தில் எல்லை மீற கூடியவர்கள்.. வெகுளிகள்.. 
அதே சமயம், ஹனுமானை போன்ற சில வானரர்கள் அதி புத்திசாலியாகவும், இருந்தார்கள்.

இது வரை,
யார் Homo-erectus (வானரர்கள்)?
யார் Homo-neanderthal (ராக்ஷஸர்கள்)?
யார் Homo-sapiens (human) (மனிதர்கள்)?
இவர்கள் உண்மையில் எப்படி இருந்தார்கள்? என்று ராமாயணம் காட்டியதை பார்த்தோம்.

இனி,
"பொதுவாக பலசாலிகள் தான் நிலைப்பார்கள்" என்று இந்த இன்றைய அறிவியல் சொல்கிறது.
"Survival of fittest" என்று சொல்கிறது.

"உலகில் வாழ வேண்டுமென்றால், எப்படியாவது போட்டி போட்டு ஜெயித்து காட்டு" என்று பயமுறுத்துகிறது..

இதன் அடிப்படையில் பார்த்தால்,
Homo-sapiens (human) என்ற மனிதர்களை விட பலமடங்கு பலசாலியாக இருந்த Homo-erectus (வானரர்கள்) ஜாதியும், Homo-neanderthal (ராக்ஷஸர்கள்) ஜாதியும், எப்படி இன்று இல்லாமல் போனார்கள்?





பலசாலிகளான ராக்ஷஸர்கள், பலசாலிகளான வானரர்கள்எப்படி அழிந்து இருக்க வாய்ப்பு உண்டு?
பலம் குறைந்த "மனிதர்கள்" இன்றுவரை எப்படி இருக்கிறார்கள்?

உலகத்தில் பலம் வாய்ந்தவர்கள் தான் அழிவார்கள் என்பதே உண்மை.
சாதுக்கள், தன் சாது குணத்தாலேயே அழிவில்லாமல் இருப்பார்கள் என்பதே உலக உண்மை.

பலம் வாய்ந்த யாழி, டைனோசர் போன்ற பலம்வாய்ந்த மிருங்கங்கள் இன்று இல்லை.

புலி சிங்கம் போன்ற பலம்வாய்ந்த மிருங்கங்கள், இன்று குறைந்து விட்டது.

ஆச்சர்யம் என்னவென்றால், புலி, சிங்கம் குறைந்து விட்டது.. மான்கள் இன்றும் இருக்கிறது..

எப்படி பலம் பொருந்திய ராக்ஷஸர்கள், வானரர்கள் காணாமல் போனார்கள்? காணாமல் போயிருப்பார்கள்?
இன்று அழிந்து வரும் புலி இனத்தை கவனித்தாலேயே, நாம் காரணத்தை புரிந்து கொள்ளலாம்.

புலியின் எண்ணிக்கை மனிதர்கள் வேட்டை ஆடுவதால் உண்மையில் குறைவதில்லை..
மாறாக, புலிகளுக்குள்ளேயே பொறாமை உண்டு, புலிகளுக்கு உள்ளேயே சண்டைகள் ஏற்பட்டு விடும். 
சம பலத்தில் உள்ள சிங்கமும் தங்களுக்குள் சண்டையிட்டு கொள்ளும் 
தங்கள் இனத்தை தாங்களே அழித்து கொள்ளும் குணம் கொண்டவை.

மான்களுக்கு மனிதனாலும் ஆபத்து, மிருகங்களாலும் ஆபத்து.
ஆனால் அவைகளுக்குள் சண்டை செய்து சாவது கிடையாது. கூடி வாழ கூடியவை. சாது மிருகங்கள். 

பலம் வாய்ந்த ராக்ஷஸர்கள், வானரர்கள், பலம் குறைந்த மனிதர்களால் அழிக்கப்பட்டு இருக்கவே முடியாது. 
வாலியும் சுக்ரீவனும் சகோதர்கள். இருந்தாலும் கொலை செய்யும் அளவுக்கு தங்களுக்குள் சண்டை இட்டு கொண்டனர்.

ராவணன், தன் சொந்த மாமன் "மாரீசனை" மாய மான் போல சென்று, ராமரை சீதையை விட்டு வெகு தூரம் இழுத்து செல்ல சொன்னான்.

"ராமபிரான் தன்னை நிச்சயம் கொன்று விடுவார்" என்று பயந்த மாரிசன் மறுக்க,  சீதையை அபகரிக்க திட்டமிட்ட ராவணன், "மறுத்தால் மாமன் என்று கூட பார்க்காமல் கொன்று விடுவேன்" என்று மிரட்டி அனுப்புகிறான்.
மாரீசன் ராமபிரானால் இறந்தும், துளியும் அதை பற்றி கவலைப்படவில்லை ராவணன்.
அதேபோல,
"பிறர் மனைவியை பேடி தனமாக கொண்டு வந்ததை கண்டித்த தன் சொந்த தம்பியை, சபையில் அனைவரும் பார்க்க எட்டி மிதித்தான்" ராவணன். 

இந்த உதாரணங்களே பலம் பொருந்திய இவர்கள், ஏன் காலப்போக்கில் அழிந்தார்கள் என்பதை விளக்குகிறது. 

எத்தனை பூகம்பம் வந்தாலும், மான்களை போன்ற, பலம் குறைந்த மனிதர்கள் இன்று வரை வாழ்கின்றனர்.

மனிதர்களில் கூட, ராக்ஷஸ குணம் கொண்ட மனிதர்களை  போலி மதங்கள் உருவாக்குகிறது. 
ஹிந்து மதத்தை அழிக்க, 
ஹிந்து தர்மத்தை அழிக்க, 
சாதுக்களான ஹிந்துக்களை மதம் மாற்ற 1000 வருடங்களாக முயற்சி செய்தும், 
ஹிந்துக்கள் அழியாமல், இன்று கூட 80 கோடி ஹிந்துக்கள் பாரத மண்ணில் இருக்கின்றனர். 
உலகம் முழுவதும் பார்த்தால், இன்னும் பல கோடி ஹிந்துக்கள் பரவி கிடக்கின்றனர். 

அழிக்க வந்த போலி மதங்கள், அழிக்க முடியாத ஹிந்து தர்மத்தை பார்த்து மலைத்து நிற்கின்றன. 

"நரமாமிசம் உண்ணும்" "மாய சக்திகள் கொண்ட" ராக்ஷஸர்கள் அழிந்தாலும், 
"ஆகாயத்தில் பறக்கும்", "மாய சக்திகள் கொண்ட" வானரங்கள் அழிந்தாலும், 
மனிதர்களாகிய நாம் அழியவில்லை. 
மனிதர்களில், பிற மதங்களை பார்த்து பொறாமைப்படாத சாதுக்களான,  ஹிந்துக்கள் என்றுமே அழிவதில்லை.




உருவாக்கப்பட்ட போலி மதங்கள், பொறாமை குணத்தாலேயே அழிந்து போகும். 

அறிவுள்ள மனிதர்கள், பொறாமையை தூண்டும், பிற வழிபாடுகளை இகழும், ஊருக்கு உதவாத அறிவுரையை கூறும்  போலி மதங்களை, பௌத்த மதம் பரவி, பிறகு பாரத மண்ணை விட்டு விரட்டப்பட்டது போல, அழிந்து போகும்.

ஹிந்துக்கள் அழிவதே இல்லை.
12 லக்ஷம் வருடம் முன்பு இருந்த அகத்தியரும், ராமரும் வாழ்ந்த சனாதன தர்மம் வாழ்க்கை முறையையே, இன்றும் ஹிந்து என்று அடையாளப்படுத்திக் கொண்டு வாழ்கிறோம் நாம்.

ஹிந்துவாக வாழ்வதில் பெருமை கொள்வோம்.   
வாழ்க ஹிந்துக்கள்.