Followers

Search Here...

Showing posts with label தரிசனம். Show all posts
Showing posts with label தரிசனம். Show all posts

Tuesday 12 January 2021

ஹனுமானின் முதல் ராம தரிசனம்.. சிறந்த பேச்சாளனின் அடையாளம் என்ன? ஹனுமான் என்ன பேசினார்? நீங்கள் தெய்வமா? என்று ஹனுமான் கேட்க, ராமபிரான் எப்படி சமாளித்தார்? தெரிந்து கொள்வோமே..வால்மீகி ராமாயணம்

வில்லுடன் வந்து நின்று கொண்டிருக்கும், அந்த இருவரை பார்த்ததுமே, சுக்ரீவன் பயந்தான்.

'இதோ பாருங்கள்' என்று ஹநுமானிடம் சொல்ல, ஹநுமான், ராம லக்ஷ்மணர்களை முதன் முறையாக தரிசிக்கிறார்.

ஹனுமான் பூர்ண ஞானி. சுக்ரீவன் அஞானி.

மஹாத்மா 'ஹனுமான்' அங்கு நின்று கொண்டிருந்த ராமபிரானை பார்த்ததுமே மனதை பறிகொடுத்து விட்டார்.

சுக்ரீவன் 'வாலி அனுப்பித்து இவர்கள் வந்து இருக்கிறார்களோ?!' என்றே பார்த்து பார்த்து பயந்தான்.

ஹனுமான் "வந்து இருக்கும் இருவரும், வாலி அனுப்பித்து வந்து இருக்கிறார்களோ! என்று நீங்கள் நினைக்கிறீர்கள். ஏன் அப்படி விபரீதமாக பார்க்க வேண்டும்? வந்திருக்கும் இவர்களை சிநேகம் கொண்டு, வாலியை நாம் ஒழித்து கட்டலாமே என்று நான் நினைக்கிறன்" என்றார்.  

வில்லுடன் வந்து இருக்கும் இவர்களை பற்றி, தெரிந்து கொண்டு வருமாறு ஹனிமானிடம் சுக்ரீவன் சொல்ல,   





वचो विज्ञाय हनुमान्सुग्रीवस्य महात्मनः |

पर्वताद् रुश्य मूकात्तु पुप्लुवे यत्र राघवौ ||

- वाल्मीकी रामायण

வசோ விஞாய ஹனுமான் 

சுக்ரீவஸ்ய மஹாத்மன: |

பர்வதாத் ருஷ்ய மூகாத்து 

புப்லுவே யத்ர ராகவௌ ||

- வால்மீகி ராமாயணம்

அவர் சொல்லுக்கு மதிப்பு கொடுத்து, மஹாத்மா 'ஹனுமான்' ருஷ்யமுக மலையிலிருந்து குதித்து, ராம லக்ஷ்மணர்கள் நின்று கொண்டு இருக்கும் இடத்துக்கு விரைந்தார்.

कपिरूपम परित्यज्य हनुमान् मारूतात्मज: |

भिक्षु रूपं ततो भजे सठ बुद्धितया कपिः ||

- वाल्मीकी रामायण

கபிரூபம் பரித்யஜ்ய 

ஹனுமான் மாருதாத்மஜ: |

பிக்ஷு ரூபம் ததோ பஜே 

சட புத்திதயா கபி: ||

- வால்மீகி ராமாயணம்

வந்திருக்கும் இருவர் யார்? என்று பரிக்ஷை செய்யும் எண்ணத்துடனேயே, ஸ்வயம் பிரம்மச்சாரியான யோகேஸ்வரரான ஹனுமான் தன் வானர ரூபத்தை மறைத்துக்கொண்டு, 'ஒரு பிக்ஷு (சந்யாசி) போல' ரூபமெடுத்து கொண்டார்.

ततः स हनुमान् वाचा लक्ष्णया सु-मनोज नया |

विनीत वद् उपागस्य राघवौ प्रणिपत्य च |

आबभाषे तदा वीरौ यथावत् प्रशशंस च ||

सम्पूज्य विधिवद् वीरौ हनुमान् वानरोत्तमः |

उवाच कामतो वाक्यम् मृदु सत्य पराक्रमौ ||

- वाल्मीकी रामायण

தத: ச ஹனுமான் வாசா

லக்ஷ்மணயா சு-மனோஜ நயா |

வினீத வத் உபாகஸ்ய

ராகவௌ ப்ரணிபத்ய ச |

ஆபபாஷே ததா வீரௌ

யதாவத் ப்ரஸசம்ச ச |

ஸ்ம்பூஜ்ய விதிவத் வீரௌ 

ஹனுமான் வானரோத்தம: |

உவாச காமதொள வாக்யம்

ம்ருது சத்ய பராக்ரமௌ ||

- வால்மீகி ராமாயணம்

முதல் முறையாக ஹனுமான் ராமலக்ஷ்மணர்களை நேர் எதிரே இப்பொழுது தான் தரிசிக்கிறார். சந்நியாச ரூபத்தில் தான் வந்து இருக்கிறார். சந்நியாசி யாரையும் நமஸ்கரிக்க கூடாது. தன்னை மற்றவர்கள் நமஸ்கரித்தால் 'நாராயண நாராயண்..' என்று ஹரி ஸ்மரனை செய்யலாம் என்று சந்யாச தர்மம் உள்ளது. இது ஹநுமானுக்கும் தெரியும். ராமபிரானை நேரில் பார்த்தவுடனேயே, ஆசாரம், நியமம் எல்லாம் மறந்து, மரியாதை கலந்த பக்தியுடன், சந்யாச ரூபத்துடனேயே சாஷ்டாங்கமாக ராமபிரான் திருவடியில் விழுந்து விட்டார். மிகவும் பணிவுடன், கை குவித்து கொண்டு, ராமபிரான் அருகில் வந்து, தன் எண்ணத்தில் என்ன சத்தியமாக நினைத்தாரோ, அதையே மிருதுவாக பேசலானார்.

राज ऋषि देव प्रतिमौ तापसौ संशित व्रतौ |

देशं कथमिमं प्राप्तौ भवन्तौ वर वर्णिनौ || 1

- वाल्मीकी रामायण

ராஜ ரிஷி தேவ ப்ரதிமௌ

தாபசௌ சம்ஸித வ்ரதொள |

தேசம் கதமிமம் ப்ராப்தொள

பவன்தொள வர வர்ணிநௌ |

- வால்மீகி ராமாயணம்

நீங்கள் ராஜ ரிஷி போல காட்சி தருகிறீர்கள். உங்கள் பொலிவை கண்டால், தேவனோ! என்று தோன்றுகிறது. ராஜாவாக இருந்தும், சங்கல்பித்து கொண்டு தபஸ்வி வேஷத்தில் இருப்பது போலவும் இருக்கிறது. இந்த இடத்துக்கு எப்படி வந்தீர்கள்? உங்களுடைய உடல் வர்ணம் பொலிவுடன் காணப்படுகிறதே!

त्रासयन्तौ मृग गणान् अन्यांश्च वनचारिणः |

पम्पा तीर रुहान् वृक्षान् वीक्षमाणौ समन्ततः || 2

- वाल्मीकी रामायण

த்ராசயந்தொள ம்ருக கனான்

அன்யாஸ்ச வனசாரின: |

பம்பா தீர ருஹான் வ்ருஷான்

வீக்ஷமாநௌ சமந்தத: ||

- வால்மீகி ராமாயணம்

உங்களை பார்த்ததிலேயே இந்த வனத்தில் இருக்கும் மிருகங்கள், வாழும் மக்கள் அனைவருக்கும் ஒருவித சிலிர்ப்பு ஏற்பட்டு இருக்கிறது. நீங்கள் இருவரும் இங்கு இருக்கும் மரம், நதிகளை பார்த்து கொண்டு இருக்கிறீர்கள்.

इमां नदीं शुभ जलां शोभयन्तौ तरस्विनौ |

धैर्यवन्तौ सुवर्ण आभौ कौ युवां चीर वाससौ || 3

- वाल्मीकी रामायण

இமாம் நதீம் சுப ஜலாம்

ஷோபயந்தொள தரஸ்விநௌ |

தைர்ய வந்தொள சுவர்ண ஆபௌ

கௌ யுவாம் சீர வாசசௌ ||

- வால்மீகி ராமாயணம்

உங்கள் அருகில் இருக்கும் இந்த குளம் உங்கள் வருகையால் ஷோபித்து காணப்படுகிறது. நீங்கள் பலவானாகவும், தைரியசாலியாகவும் இருக்கிறீர்கள். மர பட்டையையே ஆடையாக அணிந்து இருக்கும் நீங்கள் இருவரும் யார்?

निःश्वसन्तौ वर भुजौ पीडयन्तौ इमाः प्रजाः |

सिंह वि-प्रेक्षितौ वीरौ महाबल पराक्रमौ || 4

- वाल्मीकी रामायण

நிஷ்வசந்தொள வர பூஜௌ

பீடயந்தொள இமா: ப்ரஜா: |

சிம்ஹ விப்ரேக்ஷிதொள வீரௌ

மஹாபல பராக்ரமௌ ||

- வால்மீகி ராமாயணம்

நீங்கள் பெருமூச்சு விடுகிறீர்கள். உங்கள் புஜங்கள் அற்புதமாக உள்ளது. நீங்கள் ப்ரகாசிக்கிறீர்கள். துணிச்சலும் தைரியமும் உள்ள நீங்கள் சிங்கங்கத்தின் கூர்மையான பார்வையுடன் இருக்கிறீர்கள்.

शक्र चाप निभे चापे गृहीत्वा शत्रु सूदनौ |

श्रीमन्तौ रूप सम्पन्नौ वृषभ श्रेष्ठ विक्रमौ || 5

- वाल्मीकी रामायण

சக்ர சாப நிபே சாப

 க்ருஹீத்வா சத்ரு சூதநௌ |

ஸ்ரீமந்தொள ரூப சம்பந்நௌ

வ்ருஷப ஸ்ரேஷ்ட விக்ரமௌ || 

- வால்மீகி ராமாயணம்

நீங்கள் பிடித்து இருக்கும் வில், வானவில் போல வளைந்து இருக்கிறது. இளம் காளை போல காணப்படும் நீங்கள் உன்னதமாகவும், சத்தியுள்ளவராகவும்  இருக்கிறீர்கள்

हस्ति हस्त उपम भुजौ द्युतिमन्तौ नरर्षभौ || 6

- वाल्मीकी रामायण

ஹஸ்தி ஹஸ்த உபம புஜௌ

த்யுதிமன்தொள நரர்ஷபௌ || 

- வால்மீகி ராமாயணம்

யானையின் துதிக்கை போல, உங்கள் கைகள்  இருக்கிறது.




प्रभया पर्वत इन्द्रोऽयं युवयोः अवभासितः || 7

- वाल्मीकी रामायण

ப்ரபயா பர்வத இந்த்ரோயம்

யுவயோ: அவபாசித: ||  

- வால்மீகி ராமாயணம்

உங்கள் வருகையால் இந்த மலையே ப்ரகாசிக்கிறது..

राज्य अर्हाव् अमर प्रख्यौ कथं देशमिह आगतौ |

पद्म पत्र ईक्षणौ वीरौ जटा मण्डल धारिणौ || 8

- वाल्मीकी रामायण

ராஜ்ய அர்ஹாவ் அமர பரக்யௌ

கதம் தேசமிஹ ஆகதொள |

பத்ம பத்ர ஈக்ஷநௌ வீரௌ

ஜடா மண்டல தாரிநௌ ||

- வால்மீகி ராமாயணம்

நீங்கள் ராஜ்யத்தை ஆளும் பண்போடு இருக்கிறீர்கள். இந்த பிரதேசத்துக்கு எப்படி வந்தீர்கள்? உங்கள் கண்கள் தாமரை இதழ்கள் போல இருக்கிறது. அதே சமயம் ஜடா முடியுடன் காணப்படுகிறீர்கள்.

अन्योन्य सदृशौ वीरौ देव लोकादिह आगतौ |

यदृच्छयेव सम्प्राप्तौ चन्द्र सूर्यौ वसुन्धराम् || 9

- वाल्मीकी रामायण

அன்யோன்ய சத்ருசௌ வீரௌ

தேவ லோகாதிஹ ஆகதொள |

யத்தருச்ச ஏவ ஸம்ப்ராப்தொள

சந்த்ர சூர்யௌ வசுந்தராம் ||

- வால்மீகி ராமாயணம்

உங்கள் இருவருடைய ஜாடையும் ஒன்றாக இருக்கிறது. வானத்தில் உள்ள சூரியனும் சந்திரனும் தான், இங்கு வந்து இருப்பது போல காணப்படுகிறீர்கள். நீங்கள் தாமரை கண்ணன். அணுகிரஹம் செய்ய தான், இங்கு வந்து இருக்கிறீர்கள். 

विशाल वक्षसौ वीरौ मानुषौ देव रूपिणौ |

सिंह स्कन्धौ महा उत्साहौ समदौ इव गोवृषौ || 10

- वाल्मीकी रामायण

விசால வக்ஷசௌ வீரௌ

மானுஷௌ தேவ ரூபிணௌ |

சிம்ஹ ஸ்கந்தொள மஹா உத்ஸாஹௌ

சமதொள இவ கோவ்ருஷௌ ||

- வால்மீகி ராமாயணம்

நீண்ட தோள்பட்டை, பரந்த மார்பு கொண்ட வீரர்களான நீங்கள், மனித ரூபத்தில் வந்துள்ள தெய்வம் என்றே அறிகிறேன். உறுதியான தோள் கொண்ட சிங்கம் போலவும், பலமும், வீரியமும் கொண்ட காளை போலவும் இருக்கிறீர்கள். 

आयताश्च सुवृत्ताश्च बाहवः परिघोत्तमाः |

सर्व भूषण भूषार्हाः किमर्थं न विभूषितः || 11

- वाल्मीकी रामायण

ஆயதாஸ் ச சுவ்ருத்தாஸ் ச

பாஹ்வ: பரிகோத்தமா: |

சர்வ பூஷண பூஷார்ஹா:

கிமர்தம் ந விபூஷித: ||

- வால்மீகி ராமாயணம்

உங்களுடைய நீண்ட, உறுதியான கைகள் ராஜ ஆபரணங்கள் அணிய தகுதியுடன் இருக்கிறது. இருந்தும், இந்த கைகளில் ஒரு ஆபரணமும் காணப்படவில்லையே.

उभौ योग्यौ अहं मन्ये रक्षितुं पृथिवीम् इमाम् |

स-सागर वनां कृत्स्नां विन्ध्य मेरु विभूषिताम् || 12

- वाल्मीकी रामायण

உபௌ யோக்யௌ அஹம் மன்யே

ரக்ஷிதும் ப்ருதிவீம் இமாம் |

ஸ-சாகர வனாம் க்ருத்ஸ்னாம்

விந்த்ய மேரு விபூஷிதாம் ||

- வால்மீகி ராமாயணம்

விந்திய மலை, மேரு மலை போன்ற மலைகளால் அலங்கரிக்கப்பட்ட இந்த உலகத்தையே காக்க தகுதி உள்ளவர் நீங்கள் என்று அறிகிறேன்.  

इमे च धनुषी चित्रे श्लक्ष्णे चित्र अनुलेपने |

प्रकाशेते यथा इन्द्रस्य वज्रे हेम विभूषिते || 13

- वाल्मीकी रामायण

இமே ச தனுஷீ சித்ரே

ஸ்லக்ஷ்ணே சித்ர அனுலேபனே |

ப்ரகாசேதே யதா இந்த்ரஸ்ய

வ்ஜ்ரே ஹேம விபூஷிதே ||

- வால்மீகி ராமாயணம்

உங்களுடைய கையில் உள்ள வில்லை காணும்போது, இந்திரனின் வஜ்ராயுதம் போல ப்ரகாசிக்கிறது. 

सम्पूर्णा निशितैः बाणैः तूणाः च शुभ दर्शनाः |

जीवित अन्तकरै र्घोरैः र्ज्वलद्भिः इव पन्नगैः || 14

- वाल्मीकी रामायण

சம்பூர்ணா நிஷிதை: பாணை:

தூணா: ச சுப தர்சனா: |

ஜீவிதா அந்தகரை கோரை: 

ஜ்வலத்பி: இவ பன்னகை: ||

- வால்மீகி ராமாயணம்

உங்களுடைய அம்புரா-துணியில் காணப்படும் கூர்மையான அம்புகள் அனைத்தும், பார்ப்பதற்கு அபாயகரமானதாகவும், உயிரை பறிப்பதாகவும், விஷத்தை உமிழும் பாம்புகள் பெரும் மூச்சு விட்டு கொண்டு இருப்பது போலவும் காணப்படுகிறது.

महा प्रमाणौ विपुलौ तप्त हाटक भूषितौ |

खड्गौ एतौ विराजेते निर्मुक्त भुजगौ इव || 15

- वाल्मीकी रामायण

மஹா ப்ரமாணௌ விபுலௌ

தப்த ஹாடக பூஷிதொள |

கங்கௌ ஏதொள விராஜிதே

நிர்முக்த புஜகௌ இவ்||

- வால்மீகி ராமாயணம்

உங்கள் இடுப்பில் மறைத்து வைக்கப்பட்டு இருக்கும் ஒரு கத்திகள், இப்பொழுது தான் தன் பழைய தோலை கழட்டி விட்டு பளபளக்கும் பாம்பு போல காணப்படுகிறது. 

एवं मां परिभाषन्तं कस्माद् वै न अभि भाषथः || 16

- वाल्मीकी रामायण

ஏவம் மாம் பரிபாஷந்தம்

கஸ்மாத் வை ந அபி பாஷாத: ||

- வால்மீகி ராமாயணம்

நீங்கள் ஏன் மௌனமாக இருக்கிறீர்கள்? எனக்கு ஏன் நீங்கள் இன்னும் பதில் அளிக்கவில்லை?

सुग्रीवो नाम धर्मात्मा कश्चिद् वानर यूथपः |

वीरो विनिकृतो भ्रात्रा जगद् भ्रमति दुःखितः || 17

- वाल्मीकी रामायण

சுக்ரீவோ நாம தர்மாத்மா

கஸ்சித் வானர யூதப: |

வீரோ விநிக்ருதோ ப்ராத்ரா

ஜகத் ப்ரமதி துக்கித: ||

- வால்மீகி ராமாயணம்

சுக்ரீவன் என்ற பெயரில் ஒரு மகாத்மா, வானர தலைவனாக இருக்கிறார். அந்த வீரரை அவர் சகோதரன் விரட்டி அடித்ததால், வாழ வழி இல்லாமல், இங்கும் அங்கும் அலைந்து கொண்டு இருக்கிறார்.

प्राप्तोऽहं प्रेषितः तेन सुग्रीवेण महात्मना |

राज्ञा वानर मुख्यानां हनुमान् नाम वानरः || 18

- वाल्मीकी रामायण

ப்ராப்தோஹம் ப்ரேஷித: தேன

சுக்ரீவேன மஹாத்மான |

ராஞா வானர முக்யானம்

ஹனுமான் நாம வானர: ||

- வால்மீகி ராமாயணம்

அவர் தான் என்னை இங்கு அனுப்பினார். என் பெயர் ஹனுமான். 

युवाभ्यां सह धर्मात्मा सुग्रीवः सख्यम् इच्छति |

तस्य मां सचिवं वित्तं वानरं पवनात्मजम् || 19

- वाल्मीकी रामायण

யுவாப்யாம் சஹ தர்மாத்மா

சுக்ரீவ: சக்யம் இச்சதி |

தஸ்ய மாம் சசிவம் வித்தம்

வானரம் பவனாத்மஜம் ||

- வால்மீகி ராமாயணம்

சுக்ரீவன் ஒரு தர்மாத்மா. அவர் உங்கள் நட்பை எதிர்பார்க்கிறார். 

भिक्षु रूप प्रति च्छन्नं सुग्रीव प्रिय काम्यया |

ऋश्यमूकाद् इह प्राप्तं कामगं काम रूपिणम् || 20

- वाल्मीकी रामायण

பிக்ஷு ரூப ப்ரதி ச்சன்னம்

சுக்ரீவ ப்ரிய காம்யயா |

ருஷ்ய-முகாத் இஹ ப்ராப்தம்

காமகம் காம ரூபினம் ||

- வால்மீகி ராமாயணம்

நான் நிஜத்தில் சுக்ரீவனின் மந்திரி. சுக்ரீவன் எனக்கு கொடுத்த காரியத்தை நிறைவேற்றவே, நான் பிக்ஷு ரூபத்தில் வந்தேன்."

एवमुक्त्वा तु हनुमांस्तौ वीरौ राम लक्ष्मणौ |

वाक्यज्ञौ वाक्य कुशलः पुनः न उवाच किंचन ||

- वाल्मीकी रामायण

ஏவமுக்த்வா து ஹனுமாம்ஸ்தோ

வீரௌ ராம லக்ஷ்மணௌ |

வாக்யஞௌ வாக்ய குசல:

புன: ந உவாச கிஞ்சன ||

- வால்மீகி ராமாயணம்

முதன்முதலாக ராமபிரானை தரிசனம் பெற்ற ஹனுமான், அழகாக யாரிடமும் பேசுவதில் வல்லவரான ஹனுமான், இப்படி பேசி விட்டு, ராமபிரான் பதிலுக்காக அமைதி காத்தார்.   

சூரிய தேவனிடமே நேரிடையாக வேதங்கள் அனைத்தும் கற்ற ஹனுமான், இதயப்பூர்வமாக, முதல் சந்திப்பிலேயே "நீங்கள் மனித ரூபத்தில் வந்துள்ள தெய்வம் என்றே அறிகிறேன்.' (मानुषौ देवरूपिणौ) என்று சொல்லி, ராமபிரானின் பதிலுக்கு காத்து இருக்க, அவதாரத்தில் தன்னை மனிதன் என்றே காட்டி கொள்ள, சங்கல்பம் செய்து கொண்டு வந்த ஸ்ரீமந் நாராயணன், 

"தான் மனிதன்" என்று இவரிடம் சொன்னால் சத்தியத்தை மறுத்ததாகும் என்பதாலும்,

"தான் விஷ்ணுவே' என்று இவரிடம் சத்தியத்தை சொன்னால், அவதாரம் செய்த நோக்கம் வீணாகும் என்பதாலும், சாமர்த்தியமாக இந்த தர்ம சங்கடத்தை கையாண்டார். 

தான் பதில் சொன்னால், "நான் தான் பரமாத்மா" என்று ஹநுமானுக்கு உண்மையை சொல்லியாக வேண்டும். இதை தவிர்க்க, லக்ஷ்மணரை பேச வைக்க தீர்மானித்தார்.


एतत् श्रुत्वा वचस्तस्य रामो लक्ष्मणम् अब्रवीत् |

प्रहृष्ट वदनः श्रीमान्भ्रातरं पार्श्वतः स्थितम् ||

- वाल्मीकी रामायण

ஏதத் ஸ்ருத்வா வசஸ்தஸ்ய

ராமோ லக்ஷ்மணம் அப்ரவீத் |

ப்ரஹ்ருஷ்ட வதன: ஸ்ரீமான்

ப்ராதரம் பார்ஷ்வத: ஸ்திதம் ||

- வால்மீகி ராமாயணம்

உள்ளொன்று வைத்து புறமொன்று பேசாத ஹனுமானின் பேச்சை கேட்ட ராமபிரான், மந்தஹாசம் செய்து கொண்டே, அருகில் நின்று கொண்டிருந்த லக்ஷ்மணரை பார்த்து பேசலானார். 




सचिवो अयं कपीन्द्रस्य सुग्रीवस्य महात्मनः |

तमेव काङ्क्षमाणस्य मम अन्तिकम् उपागतः || 1

- वाल्मीकी रामायण

சசிவோ அயம் கபீந்த்ரஸ்ய

சுக்ரீவஸ்ய மஹாத்மன: |

தமேவ காங்க்ஷ-மானஸ்ய

மம அந்திகம் உபாகத: ||

- வால்மீகி ராமாயணம்

லக்ஷ்மணா! இவர் மஹாத்மா சுக்ரீவனின் மந்திரி. நானும் இவரை தான் எதிர்பார்த்து கொண்டிருந்தேன். அவரே இங்கு வந்து விட்டார்.

तम् अभ्यभाष सौमित्रे सुग्रीव सचिवम् कपिम् |

वाक्यज्ञम् मधुरैः वाक्यैः स्नेह युक्तम् अरिन्दम || 2

- वाल्मीकी रामायण

தம் அப்யபாஷ சௌமித்ரே

சுக்ரீவ சசிவம் கபிம் |

வாக்யஞம் மதுரை: வாக்யை:

ஸ்னேஹ யுக்தம் அரிந்தம் ||

- வால்மீகி ராமாயணம்

அழகான சொற்களால், நட்போடு இவரிடம் நீயே பேசு.

न अन् ऋग्वेद विनीतस्य ना यजुर्वेद धारिणः |

ना साम वेद विदुषः शक्यम् एवम् विभाषितुम् || 3

- वाल्मीकी रामायण

ந அந் ருக்வேத வினீதஸ்ய

நா யஜுர்வேத தாரிண: |

நா சாம வேத விதுஷ:

சக்யம் எவம் விபாஷிதும் ||

- வால்மீகி ராமாயணம்

ரிக் வேதம், யஜுர் வேதம், சாம வேதம் மூன்றிலும் அர்த்தம் புரிந்து தேர்ச்சி அடையாதவர்களால், இப்படி பேச இயலாது. இவருடைய பேச்சில் ஒரு பிழை கூட காணப்படவில்லை. 

नूनम् व्यकरणम् कृत्स्नम् अनेन बहुधा श्रुतम् |

बहु व्याहरता अनेन न किंचित् अप शब्दितम् || 4

- वाल्मीकी रामायण

நூனம் வ்யாகரணம் க்ருத்ஸ்னம்

அனேந பஹுதா ஸ்ருதம் |

பஹு வ்யாஹரதா அனேந

ந கிஞ்சித் அப சப்திதம் ||

- வால்மீகி ராமாயணம்

நிச்சயமாக இவர் இலக்கணமும் நன்கு அறிந்தவர் என்று தெரிகிறது. 

न मुखे नेत्रयोः च अपि ललाटे च भ्रुवोः तथा |

अन्येषु अपि च सर्वेषु दोषः संविदितः क्वचित् || 5

- वाल्मीकी रामायण

ந முகே நேத்ரயோ: ச

அபி லலாடே ச ப்ருவோ: ததா |

அந்யேஷு அபி ச சர்வேஷு

தோஷ: சம்விதித: க்வசித் ||

- வால்மீகி ராமாயணம்

இவர் பேசும் போதுந முகே நேத்ரயோ: ச அபி லலாடே ச ப்ருவோ: ததா |

அந்யேஷு அபி ச சர்வேஷு தோஷ: சம்விதித: க்வசித் ||

- வால்மீகி ராமாயணம் இவர் முகத்தில், கண்களில், நெற்றியில், புருவத்தில், மேலும் மற்ற அங்கங்களில் ஒரு இடத்தில் கூட எனக்கு குறை காணப்படவில்லை. 

अविस्तरम् असंदिग्धम् अविलम्बितम् अव्यथम् |

उरःस्थम् कण्ठगम् वाक्यम् वर्तते मध्यमे स्वरम् || 6

- वाल्मीकी रामायण

அவிஸ்தரம் அஸன்திக்தம்

அவிலம்பிதம் அவ்யதம் |

உர: ஸ்தம் கண்டகம் வாக்யம்

வர்ததே மத்யமே ஸ்வரம் ||

- வால்மீகி ராமாயணம்

இவர் சுருக்கமாக பேசினார். அதே சமயம் குழப்பாமல் பேசினார். மிகவும் வேகமாகவும் பேசவில்லை, மிகவும் மெதுவாகவும் பேசவில்லை. இவர் பேச்சின் வேகம் சீராக மிதமாக இரண்டுக்கும் நடுவிலேயே இருந்தது.

संस्कार क्रम संपन्नाम् अद्भुताम् अविलम्बिताम् |

उच्चारयति कल्याणीम् वाचम् हृदय हर्षिणीम् || 7

- वाल्मीकी रामायण

சம்ஸ்கார க்ரம சம்பன்னாம்

அத்புதாம் அவிலம்பிதாம் |

உச்சாராயதி கல்யாணீம்

வாசம் ஹ்ருதய ஹர்ஷிணீம் ||

- வால்மீகி ராமாயணம்

இவர் பேசும் போது எந்த இடத்திலும் கத்தவும் இல்லை, முனகவும் இல்லை. இவர் பேச்சிலேயே பண்பு தெரிகிறது. இவர் பேச பேச கேட்க ஆசை இதயத்தில் ஏற்படுகிறது. இனிமையான குரல், இடத்துக்கு தகுந்த சரியான சொற்களை பயன்படுத்தும் புத்திசாலித்தனம், சொற்களை சரியாகப் பிரித்தல், சுருக்கமாக மற்றும் நம்பிக்கையுடன் பேசுதல், தாளம் தப்பாமல் பேசுதல் ஆகிய 6 லக்ஷணங்கள் ஒரு பேச்சாளனுக்கு இருக்க வேண்டும். இவரை அனைத்தும் ஒரு குறை இல்லாமல் ஹநுமானிடம் இருப்பதை கண்டு ப்ரஸன்னமானார் ராமபிரான்.

अनया चित्रया वाचा त्रिस्थान व्यंजनस्थयाः |

कस्य न आराध्यते चित्तम् उद्यत् असे अरेः अपि || 8

- वाल्मीकी रामायण

அனயா சித்ரயா வாசா

த்ரிஸ்தான வ்யஜனஸ்தயா: |

கஸ்ய ந ஆராத்யதே சித்தம்

உத்யத் அசே அரே: அபி ||

- வால்மீகி ராமாயணம்

கையில் வாளுடன் கொலை செய்ய வரும் எதிரி கூட, இவர் பேச்சுக்கு கட்டுப்பட்டு விடுவான்.

एवम् विधो यस्य दूतो न भवेत् पार्थिवस्य तु |

सिद्ध्यन्ति हि कथम् तस्य कार्याणाम् गतयोऽनघ || 9

- वाल्मीकी रामायण

ஏவம் விதோ யஸ்ய தூதோ

ந பவேத் பார்திவஸ்ய து |

சித்த்யந்தி ஹி கதம் தஸ்ய

கார்யாணாம் கதயோ அனக ||

- வால்மீகி ராமாயணம்

இது போன்று சாமர்த்தியமாக பேச தெரிந்தவர்கள் இல்லாது போனால், பெரிய பெரிய காரியங்களை எப்படி சாதிக்க முடியும்?

एवम् गुण गणैर् युक्ता यस्य स्युः कार्य साधकाः |

तस्य सिद्ध्यन्ति सर्वेऽर्था दूत वाक्य प्रचोदिताः || 10

- वाल्मीकी रामायण

ஏவம் குண கநைர் யுக்தா

யஸ்ய ஸ்யு: கார்ய சாதகா: |

தஸ்ய சித்த்யந்தி சர்வே அர்தா

தூத வாக்ய ப்ரசோதிதா: ||

- வால்மீகி ராமாயணம்

இப்படி அற்புதமாக பேச திறன் படைத்த ஒருவரை யார் தன்னிடம் வைத்து கொண்டு இருக்கிறாரோ, அவர் எந்த காரியத்தையும் சாதித்து விடலாமே!"

एवम् उक्तः तु सौमित्रिः सुग्रीव सचिवम् कपिम् |

अभ्यभाषत वाक्यज्ञो वाक्यज्ञम् पवनात्मजम् ||

- वाल्मीकी रामायण

ஏவம் உக்த: து சௌமித்ரி: 

சுக்ரீவ சசிவம் கபிம் |

அப்ய பாஷத வாக்யஞோ 

வாக்யஞம் பவனாத்மஜம் ||

- வால்மீகி ராமாயணம்

இப்படி ஹனுமானை ராமபிரானே புகழ, லக்ஷ்மணன், சுக்ரீவனின் மந்திரியான ஹனுமானை பார்த்து பேசலானார். 

विदिता नौ गुणा विद्वन् सुग्रीवस्य महात्मनः |

तम् एव च अवाम् मार्गावः सुग्रीवम् प्लवगेश्वरम् || 1

- वाल्मीकी रामायण

விதிதா நௌ குணா வித்வன்

சுக்ரீவஸ்ய மஹாத்மன: |

தம் ஏவ ச அவாம் மார்காவ:

சுக்ரீவம் ப்லவக ஈஸ்வரம் ||

- வால்மீகி ராமாயணம்

"ஹே புத்திமான்! நாங்கள் சுக்ரீவனை பற்றி தெரிந்து கொள்ளவே இங்கு வந்தோம். அவரை தேடி தான் வந்தோம்.

यथा ब्रवीषि हनुमान् सुग्रीव वचनाद् इह |

तत् तथा हि करिष्यावो वचनात् तव सत्तम || 2

- वाल्मीकी रामायण

யதா ப்ரவீஷி ஹனுமான்

சுக்ரீவ வசநாத் இஹ |

தத் ததா ஹி கரிஷ்யாவோ

வசநாத் தவ சத்தம ||

- வால்மீகி ராமாயணம்

சுக்ரீவன் உங்களுக்கு சொன்னபடியே, நீங்கள் சொன்னபடி அவரை சந்தித்து ஒரு சம்பந்தம் ஏற்படுத்தி கொள்ளலாம்.

तत् तस्य वाक्यम् निपुणम् निशम्य

प्रहृष्ट रूपः पवनात्मजः कपिः |

मनः समाधाय जय उपपत्तौ

सख्यम् तदा कर्तुम् इयेष ताभ्याम् ||

- वाल्मीकी रामायण

தத் தஸ்ய வாக்யம்

நிபுணம் நிசம்ய

ப்ரஹ்ருஷ்ட ரூப:

பவனாத்மஜ: கபி: |

மன: சமாதாய

ஜய உபபத்தொள

சக்யம் ததா கர்தும்

இயேஷ தாப்யாம் ||

- வால்மீகி ராமாயணம்

இதை கேட்ட ஹனுமான் பெரு மகிழ்ச்சி அடைந்தார். இவர்களின் நட்பால், சுக்ரீவனின் வாழ்வு மலரப்போவது நிச்சயம் என்று மகிழ்ந்தார்.