Followers

Search Here...

Showing posts with label ஞான யோகம். Show all posts
Showing posts with label ஞான யோகம். Show all posts

Friday 7 September 2018

கடவுள் உண்டு என்று சொல்வது "மனித இயல்பு". யோகம் என்றபொருள் என்ன?

யோகம் என்ற இந்த சமஸ்கரித சொல்லுக்கு "சேர்க்கை" என்று தமிழில் பொருள் கொள்ளலாம்.

ஒரு புத்தகத்தை, நாம் மீண்டும் மீண்டும் படிக்கும் போது, அந்த விஷயங்கள் நம் மனதில் கொஞ்சம் கொஞ்சமாக சேருகிறது.
இந்த சேர்க்கையை தான் 'யோகம்' என்று சொல்கிறோம்.

ஒரு விஷயத்தை, தொடர்ந்து செய்யும் போது, ஒரு சமயத்தில் படித்தது எல்லாம் இதயத்தில் சேர்ந்து விடுகிறது.
இந்த சேர்க்கையை தான் 'யோகம்' என்று சொல்கிறோம்.
இதயத்தில் பதிந்துவிட்ட பின், அதுவே - ஸித்தி பெற்ற நிலை.
ஒரு விஷயத்தில் ஸித்தி அடைந்தவனை "ஸித்தன்" என்கிறோம். யோகி என்கிறோம்.

ஸித்தி பெற்ற (மனதில் பதிந்து விட்ட) நிலையில், வெளி புத்தகம் இனி தேவையில்லை என்ற நிலைக்கு வருகிறான்.
தானே புத்தகம் ஆகிறான்.
புத்தகத்தை விட ஆச்சர்யமாக விளக்கி சொல்லும் அளவுக்கு ஆற்றல் பெறுகிறான்.

அவரவர் தகுதி, திறமைக்கு ஏற்ப, ஒவ்வொரு நிலையில் இந்த யோகம் ஏற்படுகிறது.

ஒரு மாணவனுக்கு, ஒரு முறை ஒரு புத்தகத்தை படித்தாலே அது மனதில் சேர்ந்து (யோகம்)  விடுகிறது.
இன்னொரு மாணவனுக்கு பத்து முறை திரும்ப திரும்ப ஒரு புத்தகத்தை படித்த பின், அது மனதில் சேர்ந்து (யோகம்) விடுகிறது.
ஒரு மாணவனுக்கு ஆயிரம் முறை திரும்ப திரும்ப ஒரு புத்தகத்தை படித்த பின், அது மனதில் சேர்ந்து (யோகம்) விடுகிறது.

அவரவர் தகுதி, திறமை அடிப்படையில் அனைவரும் யோகியாக முடியும், ஆனால்  முயற்சியில் தான் வேறுபாடு உள்ளது என்று தெளிவாக சொல்வது சனாதன தர்மம் என்ற இன்றைய ஹிந்து மதம்.

அனைவரும் ஒரு ஜென்மத்தில் மோக்ஷம் அடைவார்கள் என்று சொல்லும் மதமும், ஹிந்து மதம் தான்.
'நிரந்தர நரகம் செல்வான்' என்று உளராத மதம், ஹிந்து மதம்.

மீண்டும் மீண்டும் ஒரே காரியத்தை செய்யும் பொழுது, அந்த விஷயம் மனதில் சேருகிறது (யோகம்).
ஒரு சமயம் ஸித்தி ஆகிறது.
எப்பொழுது யோகம் (இந்த சேர்க்கை) நமக்கு ஸித்தியாகும் என்பது நம் தகுதி, திறனை பொறுத்தது.

இதில் ஆச்சர்யம் என்னவென்றால், நமக்கே நம் திறன், தகுதி என்ன? என்று கண்டுபிடிக்க முடியாது.

எத்தனை தடவை மீண்டும் மீண்டும் முயற்சி செய்யவேண்டும்?
எப்பொழுது ஞானம் (இந்த சேர்க்கை) நமக்கு ஸித்தியாகும்? என்பது நம்மால் கணிக்க முடியாது.

இதன் காரணமாக தான், பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்,
"கர்மன் ஏவ அதிகாரஸ்யே,
மா பலேஷு கதாசன |"
என்று சொல்லும் போது,
"உன் கடமையை செய்து கொண்டே இரு" என்கிறார்.

"பலன் எப்பொழுது கனிய வேண்டுமோ அப்பொழுது தானாக கனிந்து விடும்.
முயற்சி செய்து கொண்டே இரு" என்கிறார் ஸ்ரீ கிருஷ்ணர்.

பகவத் கீதையில் இல்லாத உபதேசங்கள் உண்டா? ஸ்ரீ கிருஷ்ணரை தெய்வம் என்று புரிந்து கொள்ளாதவன், மனித வாழ்க்கையை வீண் செய்கிறான்.

இந்த யோகம் என்ற சேர்க்கை பல உண்டு.
ஒரு புத்தகத்தை திரும்ப திரும்ப படித்து, அதன் விஷயங்களை தனக்குள் சேர்ப்பவன் (யோகம்), கல்வி யோகி ஆகிறான்.

பல வித யோகத்தை(சேர்க்கை) பற்றி பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் கீதையில் சொல்கிறார் என்று அறிகிறோம்.
"பகவானாகிய தன்னை அடைய, பல வழிகளை சொல்கிறார்.
பக்தி யோகம்,
கர்ம யோகம்,
ஞான யோகம் 
என்று பல யோக வழிகள் பற்றி சொல்கிறார்"

பக்தி யோகம் = ஸ்ரீ கிருஷ்ணனிடம் அன்பை (பக்தியை) எப்பொழுதும் நம் மனதில் சேர்ப்பதே பக்தி யோகம்.
செய்த பக்தியை, பகவானிடம் ஒப்படைத்து விடுவது மோக்ஷத்திற்கு வழி வகுக்கும்.

கர்ம யோகம் = ஒழுக்கமான செயலை (கர்மா) எப்பொழுதும்  சேர்ப்பதே கர்மயோகம்.
செய்த கர்மாவை, பகவானிடம் ஒப்படைத்து விடுவது மோக்ஷத்திற்கு வழி வகுக்கும்.

ஞான யோகம் = உலகம் நிரந்தமற்றது, ஆத்மாவே நான் என்ற உண்மையான அறிவை (ஞான) எப்பொழுதும் சேர்ப்பதே ஞானயோகம்.
இந்த ஜீவாத்மா, பரமாத்மாவின் அங்கம் என்று அறிந்து பகவானிடம் தன்னை ஒப்படைத்து விடுவது மோக்ஷத்திற்கு வழி வகுக்கும்.

அதில்,
* கர்ம யோகத்துக்கு 'ஆசாரம்' அடிப்படை தேவை என்று வலியுறுத்தி சொல்கிறார் ஸ்ரீ கிருஷ்ணர்.
உள்ளும் புறமும் ஒழுக்கமாக இருந்தால், கர்ம யோக வழியில் சென்று, பகவானை அடையலாம் என்கிறார்.

* பக்தி யோகத்துக்கு 'திடமான விசுவாசம்' தேவை என்று வலியுறுத்தி சொல்கிறார்.
உலகமே எதிர்த்து நின்றாலும், பகவான் காப்பாற்றுவார் என்ற நம்பிக்கை இருந்தால், பக்தி யோக வழியில் சென்று, பகவானான என்னை அடையலாம் என்கிறார் ஸ்ரீகிருஷ்ணர்.

* ஞான யோகத்துக்கு 'திட  வைராக்கியம்' தேவை என்று வலியுறுத்தி சொல்கிறார்.
உலகம் பொய், நாம் நிச்சயமாக இந்த உடலை விட்டு ஒரு நாள் வெளியேறி விடுவோம். உலகம் நம்மை பொறுத்தவரையாவது  நிரந்தரமற்றது என்று எப்பொழுதும் நினைவில் கொண்டு, சுகம் துக்கம், மானம் அவமானம், வெற்றி தோல்வி, ஆரோக்கியம் ரோகம், எல்லாம் வந்தால் வரட்டும், கவலையில்லை என்று வைராக்கியத்தோடு இருந்தால், ஞான யோக வழியில் சென்று, பகவானை அடையலாம்.

நம் கண்ணுக்கு தெரியாத  தெய்வத்திடம் "திடமான நம்பிக்கையுடன் அன்பு (பக்தி) வை"
என்று பக்தி யோக முறைக்கு அடிப்படையாக சொல்லப்படுகிறது.

கண்ணுக்கு எதிரே தெரியும் ஒருவரிடம் அன்பு காட்டவே, நம்மால் முடியவில்லை.




பக்தி யோகம் என்ற முறையிலோ, 'கண்ணுக்கு இன்னும் புலப்படாத பகவானிடம் அன்பு வை' என்கிறது.

ஒருவனை பார்த்து பழகி கூட, நமக்கு அன்பு வராமல் இருக்கிறது, அது எப்படி பார்க்க முடியாத தெய்வத்திடம் அன்பு வைக்க முடியும்?
ஒருவரை பார்க்காமல், பேசி பழகாமல் அன்பு வைப்பது என்பது சாதாரண விஷயமில்லையே.

பகவானிடம் திடமான நம்பிக்கையுடன் கூடிய பக்தி (அன்பு) இல்லாமல், பக்தி யோகம் செய்வது வீண்.

பகவானிடம் திடமான நம்பிக்கையுடன் கூடிய பக்தியுடன் (அன்பு), பக்தி யோகம் செய்தால், பகவான் நம்மிடம் படிப்படியாக தான் இருப்பதை உணர வைப்பார், பேசுவும் செய்கிறார். நம் பாரதத்தில் பிறந்த எண்ணிலடங்கா மகான்களின் சரித்திரம் இதற்கு சான்று.

பிரகலாதன் என்ற சிறுவனுக்கு அடிப்படையாக இருந்தது இந்த திட நம்பிக்கையே.
கஷ்டம் வந்த காலத்திலும், பகவான் காப்பாற்றுவார் என்ற நம்பிக்கையை துளி கூட விடவில்லை.
இந்த திட நம்பிக்கையை மனதில் சேர்த்து சேர்த்து(யோகம்) வைத்து இருந்தான் பிரகலாதன்.
இதற்கு பலனாக,  நாராயணன் நரசிம்மமாக காட்சி கொடுத்தார்.

பக்தி யோகம் செய்ய, குருவின் அனுக்கிரகம் தேவை. குரு இல்லாமல் நமக்கு இந்த திட நம்பிக்கை பகவானிடம் வரவே வராது.

காட்டுவாசியிடம் போய் கேட்டாலும் கடவுள் உண்டு என்பான்.
நாகரீகம் உள்ள ஒருவனிடம் கேட்டாலும் கடவுள் உண்டு என்பான்.
கடவுள் உண்டு என்று சொல்வது மனிதனுக்கு உள்ள அடிப்படை தகுதி.

மிருகத்திடன் கடவுள் உண்டா? என்று கேட்டால், அதன் மூளைக்கு இது புரியவே புரியாது.
நம்மை ஒருவர் படைத்து, நாம் வாழ உலகத்தையும் படைத்து இருக்கிறார் என்று மிருகத்தினால் உணர முடியாது.
ஆதலால் தின்று, தூங்கி, இன விருத்தி செய்து கொண்டு,  இருக்கும் காலம் வரை வாழ்ந்து சாகிறது.

நம்மை எல்லாம் ஒருவர் படைத்து இருக்கிறார் என்று பகுத்து அறியும் புத்தியுடைய மனிதனால் உணர முடிகிறது.
====
கடவுள் உண்டு என்று சொல்லும் இனமே மனிதர்கள் மட்டும் தான்.

மனிதனுக்கு மட்டுமே, அறிவு இருப்பதால் "கடவுள் உண்டு" என்கிறான்.

கடவுள் உண்டு என்று சொல்வது "மனித இயல்பு".

காட்டுவாசியில் ஆரம்பித்து ஹிந்து, முஸ்லீம், பௌத்தன், ஜைன, யூத என்று எவரும் "கடவுள் உண்டு" என்பதை மறுப்பதில்லை.

உலகத்தில் பெரும்பாலான மனிதர்கள் அறிவு உள்ளவர்கள் என்பதால் தான், 98 சதவீத மனித சமுதாயம் 'கடவுள் உண்டு' என்று சொல்கிறது.

மீதம் உள்ள மனித சமுதாயம், மிருகத்தின் மூளை அளவுள்ள புத்தி கொண்டுள்ளதால், பயன்படுத்த முடியாத நிலையில், கடவுள் உண்டு என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை.

யோசிக்க முடியாத மிருகத்திடம்  "கடவுள் உண்டு" என்றால் புரியாது.
அதுபோல, சில மனித கூட்டத்துக்கும், யோசிக்கும் திறன் இல்லாமல் போவதால், அவர்களுக்கும் புரிவதில்லை.
இவர்களை கண்டு பரிதாபப்படலாம். அவ்வளவு தான்.

"கடவுள் இல்லை" என்று மிருகம் அளவிற்கு மூளை உள்ளவன் சொல்வதை ஆதரிப்பவன் ஹிந்துவாக இருந்தாலும், இஸ்லாமியனாக இருந்தாலும் அவன் 'தன் உள்ளுணர்வை, தன் அறிவை, தன் தெய்வத்தை' அவமானப்படுத்துகிறான் என்று தான் சொல்ல வேண்டும்.

"கடவுள் இல்லை" என்று சொல்பவன் அறிவில்லாதவன். அதாவது முட்டாள் மிருகம்.

மிருகத்திற்கு கடவுள் இருப்பது புரியாமல் இருப்பதற்கு காரணம் அது கடவுளை நேரில் பார்த்ததில்லை. பேசியதில்லை.

ஒரு நாய், தன் எஜமானனிடம் அன்பு செலுத்துவதற்கு காரணம், அவனை அது பார்த்தும், அவன் பேச்சை கேட்டும் இருக்கிறது.
கேட்டதாலும், பார்த்ததாலும் தான் அன்பு வருகிறது மிருகத்திற்கு.
பார்க்க இயலாத விஷயங்களில் மிருகத்திற்கு அன்பு வராது.

இதே போல, "கடவுள் இல்லை" என்று சொல்லும் கூட்டமும் மிருக அளவு கொண்ட புத்தி உடையவர்கள்.

நன்றாக கவனித்தால், இந்த முட்டாள் மிருக அளவு புத்தியுடைய, மனித கூட்டம் மட்டுமே "கடவுளை காட்டு.  காட்டு.. காட்டு" என்று கேட்பார்கள்.

மிருகத்தை போன்று, இவர்களும் பார்த்தால் தான், அன்பு வைக்க முடியும், நம்ப முடியும் என்கிற அளவில் மூளை உள்ளவர்கள்.

மனிதனால் மட்டுமே, கண்ணால் காணமுடியாவிட்டாலும், பேசிக்கொள்ள முடியாவிட்டாலும், அறிவை கொண்டு மட்டும் ஒருவனிடம் அன்பு செலுத்த முடியும்.

ராஜசோழன், திருவள்ளுவர், வீர சிவாஜி, ராமானுஜர், மஹாத்மா காந்தி இன்று இல்லை. நாம் பார்த்ததும் இல்லை.
விவேகானந்தர் இன்று இல்லை.
இன்று இருக்கும், நமக்கு பிடித்த தேச தலைவர்களை கூட நாம் நேரில் கண்டது இல்லை, பேசியதும் இல்லை.
இருந்தாலும் அவர்கள் நாட்டுக்கு செய்த சேவை, நமக்காக இவர்கள் செய்த தியாகம் போன்றவற்றை 'அறிவை' கொண்டு தியானிக்கும் போது, அவர்களிடம் ஒரு அன்பு உண்டாகிறது.
உறவு கொள்ள முடிகிறது.

அறிவு இருந்தால், பார்க்காமல் போனாலும், பேச முடியாமல் இருந்தாலும், ஆராய்ந்து பார்க்கும் போது, சிலர் மீது அன்பு வருகிறதே?

கண்ணால் காட்டினால் தான் எனக்கு புரியும் என்று இருக்கும் மிருக அளவு புத்தியுள்ள முட்டாளை என்ன செய்ய முடியும்? முட்டாள் முட்டாள் தானே.

இந்த உலகை மிக சக்திவாய்ந்த ஒரு கடவுள் உருவாக்கி இயக்கிக்கொண்டு இருக்கிறார் என்பதை கொஞ்சம் அறிவு இருந்தால் கூட புரிந்து கொள்வது எளிதாயிற்றே.

கடவுள் இருக்கிறார் என்பதை பொதுவாக மக்கள் புத்தியை பயன்படுத்தி, ஒத்துக்கொள்கின்றனர்.

98 சதவீத மக்கள், உலகில் 'கடவுள் உண்டு' என்று அறிவு சொல்வதால் நம்புகின்றனர். 'கடவுள் இருக்க வாய்ப்பு உண்டு' என்று அனுமானிக்கின்றனர்.

இன்னும் கொஞ்சம் மேலே போய், எதிர்பாராமல் நடக்கும் சம்பவங்கள், துக்கங்கள், சுகங்கள், அதிர்ஷ்ட வாய்ப்புகள் போன்றவற்றை உணரும் போது, 'கடவுள் இருப்பது மட்டுமல்ல, அவர் நமக்கு உதவியும் செய்கிறார்' என்று அவ்வப்போது உணருகின்றனர்.

கடவுள் இருப்பதை புத்தியால் உணருவதும், கடவுள் நம்மை காக்கிறார் என்று அவ்வப்போது உணருவதும் பொதுவாக எல்லோருடைய வாழ்க்கையிலும் நடக்கிறது.

தான் சில இக்கட்டான காலங்களில் அதிர்ஷ்டவசமாக (கண்ணுக்கு புரியாத) காப்பாற்றப்படுவது இறை செயல் என்று உணரும் போது, 'கடவுள் இருக்கிறார்' என்ற நிலையை விட, ஒரு படி மேலே போய், 'தன்னை இந்த சக்தி (கடவுள்) காக்கிறது' என்றும் உணர்கிறான்.

அதற்கும் ஒரு படி மேலே போய், தனக்கும், அந்த கடவுளுக்கும் சம்பந்தம் உண்டு. அவரிடமிருந்து தான் நாம் வந்துள்ளோம். அதனால் தான், கடவுள் நம்மை  மறைமுகமாக நின்று காக்கும்போது, சில சமயங்களில் நம் புத்திக்கு புரிகிறது.
ஒரு குரு, உபதேசம் செய்து, நமக்கும், பகவான் ஸ்ரீ கிருஷ்ணருக்கும் உள்ள சம்பந்தத்தை சொல்லும் போது, 'நம்மை காப்பவரே இவர் தான்' என்ற தெளிவு பிறக்கிறது.

இதுவே திட நம்பிக்கையாக மாறும் பொழுது,
"கிருஷ்ண பக்தன் நாசமாக மாட்டான்" என்று சந்தேகம் இல்லாமல் நம்பும் போது, அவன் தெய்வத்திடம் அன்பை (பக்தியை) செலுத்த ஆரம்பிக்கிறான்.
உலக பயத்தை விடுகிறான்.

யோகம் என்றால் சேர்க்கை என்று முன்னமே சொன்னது போல, தெய்வத்திடம் அன்பை (பக்தியை) திடமான நம்பிக்கையுடன் மீண்டும் மீண்டும் செய்து கொண்டே இருக்க, இவன் மனதில் கொஞ்சம் கொஞ்சமாக இறை பக்தி சேர ஆரம்பிக்கிறது (யோகம்).
இதுவே, நாளைடைவில், இவன் இதயத்தில் உள்ள காமம், கோபம், பொறாமை போன்ற குணங்கள் அழித்து, இதயம் சுத்தமாகி, அதில், இவன் தினமும் திட நம்பிக்கையுடன் அன்பு செய்த ஸ்ரீ கிருஷ்ணர் தானாகவே வந்து அமர்ந்து விடுகிறார்.
பக்தி யோகத்தில் ஸித்தி பெற்றவன், இதயத்தில் ஸ்ரீ கிருஷ்ணர் இருப்பதால், பேரானந்தத்தை பெறுகிறான். இவர்கள் மோக்ஷம் என்ற பரமபத ஆனந்தத்தை இம்மையிலும் மறுமையிலும் அனுபவிக்கிறார்கள்.
இவர்களே யோகிகள். இவர்களே மகாத்மா. இவர்களை தரிசித்தாலே நமக்கும் பக்தி உண்டாகும்.

கடவுள் தன்னை, மனித சமுதாயத்துக்கு உணர செய்தாலும், மறைந்து இருப்பதற்கு காரணம், நாம் நம் தகுதியை இன்னும் உயர்த்த வேண்டும் என்பதற்காக தான்.

பக்தி யோகத்தில் முயற்சி செய்து, கண்ணால் கடவுளை தரிசித்தவர்கள் உண்டு. புரந்தரதாசர், ஆழ்வார்கள், நாயன்மார்கள் என்று அடுக்கலாம்.

பக்தி யோகத்தில், திட விசுவாசம் (நம்பிக்கை) முக்கியம்.

இன்று பகவானை காண முடியாவிட்டாலும், "இருக்கிறார்" என்பதை அறிவு சொல்வதால்,
நம்முடைய இந்த நிலையில், பகவானை காண முடியவில்லை என்றாலும், அவரை காண முடியும் என்கிற நம்பிக்கையை (விசுவாசம்) வளர்த்துக்கொள்ள வேண்டும்.
பகவான் என்னை காக்கின்றார் என்பதை உணர்கிறேன். அவரின் இந்த அன்பு, எனக்கும் திடமாக உள்ளது என்று நம்பிக்கை வேண்டும்.

கடவுள் உள்ளார் என்று அறிவை கொண்டு எப்படி புரிந்து கொள்ள முடியும்?
சிறிய கல்லை எடுத்து வானத்தை நோக்கி வீசினால், அப்படியே வானத்தில் நிற்காமல் கீழே விழுந்து விடுகிறது.

உலகம் என்ற மிகபெரிய கல் உருண்டை ஆகாயத்தில் சுழன்று கொண்டே உள்ளது. அதுமட்டுமல்ல,
ஒரே மாதிரி சுழற்சியுடன் சுற்றுகிறது.
அந்த கல்லில் நாம் அனைவரும் குத்திட்டு ஒட்டிக்கொண்டு இருக்கிறோம்.
இது ஆச்சர்யமல்லவா?

இந்த பூமியை போல, நாமும் ஒரு சாட்டிலைட் விட்டு பார்க்கும் போது, இன்னும் சில உண்மை புரிகிறது.

வெளியில் பார்க்க சாட்டிலைட்டில் ஒரு ஆள் கூட இல்லாமல், தானாக சுற்றுவது போல தெரிந்தாலும், எங்கிருந்தோ ஒருவன் பூமியில் இருந்து கண்காணித்து இயக்குகிறான் என்று நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.

சாட்டிலைட்டை விட பல மடங்கு பெரிய இந்த உலகங்கள் ஒழுங்காக சுற்றுவதை பார்த்த பின்னும், இவை அனைத்தும் தானாகவே சுற்றுகிறது என்று நினைப்பவனை என்ன சொல்வது?

முற்பிறவி வரை மிருகமாக இருந்து, முதல் முறை, மனித பிறவியை இப்பொழுது தான் அனுபவிக்கிறான் என்று தான் எடுத்துக்கொள்ள வேண்டும்.
மூளை வேலை செய்யாத இவர்களிடம் பரிதாபம் மட்டுமே படலாம்.

ஒரு ரோபோ தானாக வேலை செய்வது போல தோன்றினாலும், மோட்டார் தானாக ஓடினாலும், அதை ஒருவன் ஸ்டார்ட் செய்து இயக்கி உள்ளான் என்று கொஞ்சம் பகுத்தறிவு உள்ள மனிதனுக்கு கூட புரியுமே.

'கடவுள் இல்லை' என்று சொல்பவனை விட, 'எங்கேயோ ஒரு கடவுள் இருக்கிறார், அவருக்கு பயப்பட வேண்டும்' என்று காட்டுமிராண்டி தனமாக சொல்லும் கூட்டம் கூட உயர்ந்தவர்கள் தான்.

நமக்கு ஆசாரம், அல்லது திட விசுவாசம் அல்லது திட வைராக்கியம் என்று ஏதாவது ஒன்று இருக்கும் பட்சத்தில், எந்த யோகத்தின் வழியிலும் சென்று பகவானை உணரலாம், தரிசிக்கலாம், மோக்ஷம் அடையலாம் என்று ஸ்ரீ கிருஷ்ணர் காட்டுகிறார்.

பகவானை தரிசிக்க வேண்டும் என்ற உண்மையான எண்ணம் கொண்டவன், ஆசாரம்(நல்லொழுக்கம்) என்ற தகுதி இருக்குமாகில், கர்மாவை (செயலை) யோகமாக(சேர்க்கையாக) செய்து, அதை பகவானுக்கு அர்ப்பணம் செய்ய வேண்டும் என்று கிருஷ்ணர் சொல்கிறார்.

ஞான யோகம், பக்தி யோகம் குரு இல்லாமல் புரியாது. என்ன செய்ய வேண்டும் என்பதே புரியாத போது, திரும்ப திரும்ப எப்படி செய்ய முடியும்? ஞான மார்க்கத்துக்கும், பக்தி மார்க்கத்துக்கும் குருவே துணை.

ஹிந்துவாக பிறப்பதே புண்ணியம். வாழ்க ஹிந்துக்கள். 


Monday 11 June 2018

பக்தி யோகம் என்றால் என்ன?




  • கர்ம யோகம், 
  • ஞான யோகம், 
  • பக்தி யோகம்
இவற்றில் பக்தி யோகம் அனைவராலும் கடை பிடிக்க கூடிய யோகம்.

கர்ம யோகம், ஞான யோகம் போன்றவை, தன் முயற்சியால் முன்னேற வேண்டியுள்ளது.
இந்த யோகங்கள் ஸாதனை வடிவமானது.
ஸாதனைக்கு மட்டும், பகவான் அவ்வளவு சுலபமாய் கிடைப்பதில்லை.

பக்தி யோகத்திலோ, 
பக்தன் பகவானிடம் பக்தி செய்கிறான்.
பகவான் பக்திக்கு வசமாகிறான்.
பகவான் பக்தனை கரையேற்றுகிறான்.
அதனாலேயே பக்தன் எதிலும் கவலை படமாட்டான்.




"என் பக்தன் நாசமாக மாட்டான்" (நமே பக்த: ப்ரணஸ்யதி) என்று பகவான் ப்ரதிக்ஞை செய்கிறான்.

தன் பக்தன் வழி தவறிப் போனால் கூட, பகவான் அவனை தடுத்து ஆட்கொண்டு, நேர் வழியில் திருப்பி விடுகிறான்.

இங்கு பக்தன் என்பவன் யார்?
பகவானிடம் பக்தி செய்பவன் பக்தன்.

கடினமான தவம் செய்து ராவணன், இரணியன் போன்றோர்கள், தேவர்களை, பிரம்மாவை, சிவனையும் வசம் செய்து வரம் பெற்றனர்.
ஆனால் அவர்களால் இந்த கடின தவத்தின் மூலம், பகவான் - நாராயணனை வசம் செய்ய முடியவில்லை.
ஹரிபக்தி இல்லாத கர்ம யோகம் (தவம், தானம், யாகம், வேதாத்யயனம்) ஞான யோகம் எதற்கும் பகவான் வசமாவதில்லை.

பக்தி என்றால் என்ன?
பகவானிடம் வைக்கும் ப்ரியம் தான் பக்தி.