Followers

Search Here...

Showing posts with label வளர்ச்சி. Show all posts
Showing posts with label வளர்ச்சி. Show all posts

Sunday 28 July 2019

தமிழ் தேசியமொழியாக ஆகவே முடியாது.... தமிழ் மொழி வளராமல் போனதற்கு காரணம் என்ன ?....அலசல்

"தமிழ் மொழி" வளர வேண்டும் என்று தமிழனுக்கு ஆசை.
நியாயமான ஆசை.



"தெலுங்கு மொழி" வளர வேண்டும் என்று தெலுங்கனுக்கு ஆசை.

"கொங்கனி மொழி" வளர வேண்டும் என்று கோவாகாரனுக்கு ஆசை.

"பஞ்சாபி மொழி" வளர வேண்டும் என்று ஹரியானா, பஞ்சாப்காரனுக்கு ஆசை.

"கன்னட மொழி" வளர வேண்டும் என்று கன்னடனுக்கு ஆசை.

"ஹிந்தி மொழி" வளர வேண்டும் என்று பீஹார், உத்திர, மத்திய, இமாச்சல பிரதேசத்தில் உள்ளவர்களுக்கு ஆசை.

"மலையாள மொழி" வளர வேண்டும் என்று மலையாளிக்கு ஆசை.

"குஜராத்தி மொழி" வளர வேண்டும் என்று குஜராத்திக்காரனுக்கு ஆசை.

"அஸ்ஸாமி மொழி" வளர வேண்டும் என்று அஸ்ஸாமிக்காரனுக்கு ஆசை.

"ஒடியா மொழி" வளர வேண்டும் என்று ஒடிசாக்காரனுக்கு ஆசை.

"மிஸோ மொழி" வளர வேண்டும் என்று மிஸோராம்காரனுக்கு ஆசை.

"ஆங்கில மொழி" வளரட்டும் என்று அருணாச்சல பிரதேச, மேகாலய, நாகாலாண்ட், சிக்கிம் ஊர்களில் உள்ளவர்களுக்கு ஆசை.
தன் தாய் மொழியான அஸ்ஸாமி மொழியை இவர்கள் வளர்க்க ஆசைப்படவில்லை.

இதில் ஆச்சர்யம் என்னவென்றால்,
"ஹிந்தி மற்றும் ஆங்கிலம்" வளர்கிறது.
பிற மொழிகள் அதனதன் மாநிலங்களை விட்டு தாண்ட முடியவில்லை.

"ஹிந்தி மொழி" - இந்தியா, பாகிஸ்தான் முழுவதும் பரவி இருக்கிறது...
ஆங்கிலம் - உலகம் முழுவதும் பரவி இருக்கிறது...

ஹிந்தியும், ஆங்கிலமும் வளர்ந்தாலும்,
மற்ற மொழிகள், வளர்வது ஒரு புறம் இருக்க, அவர்கள் மாநிலத்திலேயே கூட அழிந்து வருகிறது.
உலகமெங்கும் ஆங்கிலமும், இந்தியா, பாகிஸ்தான் முழுவதும் ஹிந்தியும் பரவுவது ஏன்?
ஒரு மொழி பிறரால் கற்று கொள்ளப்பட வேண்டுமென்றால்,
1. அந்த மொழியில் பொதுவாக பிற மொழிகளில் உச்சரிக்கப்படும் சொற்கள் பயன்பாட்டில் இருக்க வேண்டும்இடம் இருக்க வேண்டும்
2. அந்த மொழி கட்டுப்பாடு அதிகம் இல்லாததாக, எதிர்பார்ப்புகள் அதிகம் இல்லாத மக்களாக இருக்க வேண்டும்.


ஆங்கிலத்தில் 26 எழுத்துக்கள்,
ஹிந்தியில் தமிழை விட அதிக எழுத்துக்கள் உண்டு.
இருந்தாலும்,
இந்த இரண்டு மொழிகளும் வளர்கிறது.. பேசப்படுகிறது.
இந்த 2 மொழிகளுமே,
பொதுவாக பிற மொழிகளில் பயன்பாட்டில் உள்ள "ஷ ஹ" போன்ற சொற்களை ஏற்கிறது..

ஹிந்தி (Hindi), இங்கிலீஷ் (English) என்று சொல்லும் போதே அதில் "ஷ ஹ" என்ற சொற்கள் வருகிறது...

Hospital என்ற ஆங்கில வார்த்தையை,  ஹாஸ்பிடல் (हॉस्पिटल) என்று அதே உச்சரிப்புடன் ஹிந்தியில் சொல்ல முடியும்.
தமிழ் இலக்கணத்தில் "ஷ ஹ" போன்ற எழுத்துக்கள் இல்லை.
ஆதலால், தமிழில் ஆச்பிடல் என்று தான் சொல்ல வேண்டி இருக்கிறது.

ஆச்பிடல்  என்று சொல்லும் போதே வெளி மாநிலத்தில் சொல்லப்படும் Hospital என்ற ஆங்கில சொற்களை, கூட  சரியாக உச்சரிக்க விடாமல் தடுக்கிறது தமிழ் இலக்கணம்.

"சமஸ்க்ரித" என்ற தேவபாஷை வார்த்தையை கூட "சமற்கிருத" என்று சரியாக உச்சரிக்க விடாமல் செய்கிறது தமிழ் இலக்கணம்.
தமிழ் இலக்கணத்தில் "ஷ ஹ" போன்ற எழுத்துக்கள் இல்லை.

தமிழ் பிறரால் பேசப்படாமல் இருப்பதற்கு, இது ஒரு முக்கிய காரணம்.

உண்மையான தமிழ் ஆர்வலர்கள், August என்று சொல்லப்பட்ட ரோமானிய காலண்டரை "ஆகஸ்ட்" என்று சொல்ல கூடாது என்பதற்காக "ஆகத்து" என்று சொல்வதை பார்த்து இருக்கலாம்.

ஆகஸ்ட் என்ற வார்த்தை தமிழ் மொழி அல்ல.
அது ஒருவனின் பெயராக இருந்தால் கூட, தமிழ் இலக்கணம் "ஆகஸ்ட் என்று சொல்ல கூடாது" என்று தடை விதிக்கிறது.

"கஸ்ட்" என்ற பெயர் கொண்ட ரோமானியன் தமிழ்நாடு வந்தால், அவனை "கத்து" என்று வேறு மாதிரி அழைத்தால், அவனால் எப்படி ஒப்புக்கொள்ள முடியும்? 

அது போல பல கட்டுப்பாடுகள் கொண்ட மொழிகள் யாவும், வளர முடியாமல் தேங்கி விடுகிறது...

சில மொழிகள் அற்புதமான பொக்கிஷங்களை தனக்குள் வைத்து இருந்தும் அழிந்து விடுகிறது...


சமஸ்கரித, ஹிந்தி மொழியில் ராவணன், ராமன் என்ற சொற்களை உச்சரிப்பு குலையாமல் சொல்ல முடியும்...
"Raavan, "Ram" என்று ஆங்கிலத்திலும் சொல்ல முடியும்.

தமிழ் இலக்கணப்படி "ர" என்ற எழுத்து முதலில் வர கூடாது என்று சொல்கிறது...
தமிழ் ஆர்வலர்கள் அதனால் "ர" என்று சொல் முதலில் வரும் வார்த்தைகளில் கூடவே "இ" என்ற சொல்லை சேர்த்து சொல்வார்கள்.
கம்பன் கூட ராமனை "இராமன்" என்று சொல்வது அதனால் தான்.
"ராவணன்" என்ற சொல்லை "இராவணன்" என்று தமிழ் இலக்கணம் சொல்ல சொல்கிறது.
இந்த கட்டுப்பாடுகள், வெறும் "இ" என்ற எழுத்துக்களை மட்டும் சேர்க்கவில்லை, சொற்களையே வேறு மாதிரியாக சொல்ல, கேட்க வைக்கிறது..

இது போன்ற

  • இலக்கண கட்டுப்பாடுகள், 
  • பிற மொழிகளில் பொதுவாக பயன்படுத்தப்படும் "ஷ ஹ" போன்ற எழுத்துக்கள் இல்லாததாலும், 

     தமிழ் பிறரால் பேசப்படாமல் உள்ளது.

மேலும் இரண்டு குறைகள் நம் தமிழ் மொழியில் உண்டு...

பிற மொழிகளில் ஒவ்வொரு சொல்லுக்கும் நான்கு விதமான உச்சரிப்புகள் உண்டு.
தமிழில் இதற்கும் வழி இல்லை.

புதிதாக தமிழை கற்று கொள்ள வேண்டுமென்றால், அவன் படாதாபாடு பட வேண்டும்...

"அச்சு" என்று சொல்லும் போது "ச" என்ற எழுத்தை அழுத்தி உச்சரிக்க வேண்டும்,
"சங்கு" என்று சொல்லும் போது "ச" என்ற எழுத்தை மென்மையாக உச்சரிக்க வேண்டும்.

ஒரே எழுத்தை எந்த வார்த்தைக்கு மென்மையாக பயன்படுத்த வேண்டும்,  எந்த வார்த்தைக்கு அதே சொல்லை, அழுத்தமாக  பயன்படுத்த வேண்டும் என்பது போன்ற  வித்தியாசங்களை, தமிழ் நாட்டில் இருந்து கொண்டே, பேசி பேசி அனுபவத்தில் தான் கொண்டு வர முடியும்..
"வெறும் புத்தகம் மூலமாக தமிழை கற்கவே முடியாது" என்ற பெரும் குறையை தமிழ் கொண்டுள்ளது...

மற்றொரு குறை, இலக்கணம் மீற அனுமதிக்காத மொழி தமிழ்...

ஆங்கிலத்தில் "you, he, she, it, they, we, came" என்ற 7 வார்த்தைகள் தெரிந்தாலே,
"You came, he came, she came, it came, they came, we came" என்று சொன்னால் புரிந்து கொள்வார்கள்.
நன்றாக இங்கிலீஷ் பேசுகிறான் என்று கூட சொல்வார்கள்...



தமிழில் "நீ, அவன், அவள், அது, அவர்கள், நாம், வா" என்று மட்டும் சொல்லி பேச சொன்னால், தமிழ் இலக்கணம் இடம் தராது...
"நீ வா" என்று சொன்னால் ஒப்புக்கொள்ளும் தமிழ் இலக்கணம்,
"அவள் வா, அது வா, அவர்கள் வா, நாம் வா" என்று சொன்னால் ஒருவாறு பொருள் புரிந்தாலும், தமிழ் பேசுபவர்கள் "கொல்..." என்று சிரித்து கேலி செய்வார்கள்...
இந்த அவமானத்திற்கு பயந்தே பலர் தமிழை பேச தயங்குகிறார்கள்..

நாட்டின் பிரதமர் "பொங்கல் வாழ்த்துக்கள்" என்று தமிழில் சொல்ல முயற்சித்தாலும், "சரியாக உச்சரிக்கிறாரா?" என்று பார்க்கும் தமிழர்கள் அதிகம்..

ஆங்கில மொழியில் தவறாக பேசினால் கூட கேலி செய்யாமல் இருப்பார்கள்..

இலக்கணம் மாறி விட்டது என்று தெரிவதால், வெளி மாநிலக்காரன் தமிழில் பேச ஆசைப்பட்டு "அவள் வந்தான்" என்றோ, பெரியவர்களை "நீங்கள்" என்ற சொல்லுக்கு பதில் "நீ" என்று சொல்லி விட்டாலோ, கேலி சிரிப்பும், கோபமும் ஏற்பட்டு விடும்.

இந்த தர்ம சங்கடங்கள் பிற மொழி பேசுபவர்களுக்கு இருப்பதால், தமிழ் நாட்டிலேயே வாணிகம் செய்தாலும், "ஹிந்தியும், ஆங்கிலமும்" பேசியே வாழ நினைக்கிறார்கள்..

அவர்கள் பிள்ளைகள் இங்கேயே வளர்ந்தால், அவர்கள் பிள்ளைகள் தவறாக பேசினாலும் 'குழந்தை' என்று தமிழர்கள் நினைப்பதால், உற்சாகப்படுத்த, தமிழை அவர்கள் பிள்ளைகள் பேச ஆரம்பிக்கிறார்கள்..




ஹிந்தியிலும் சில கட்டுப்பாடுகள் இருப்பதாலேயே உலகம் வரை பரவ முடியாமல் உள்ளது..
உதாரணத்திற்கு,
பெரியவர்களை "ஆப் ஆயியே" (நீங்கள் வாருங்கள்) என்று மரியாதை சொல்லாக "ஆப்" என்ற சொல்லை பயன்படுத்துகிறது.
சிறியவர்களை "தும் ஆவோ" (நீ வா) என்று "தும்" என்ற சொல் கொண்டு அழைக்கிறது..

இந்த இலக்கணம் தமிழனுக்கு புரிவதால், தமிழனுக்கு ஹிந்தி கற்றுக்கொள்வதில் சிரமம் இருப்பதில்லை. ஹிந்தி கற்க முடிகிறது..

ஆங்கிலமோ "அந்த கவலையே வேண்டாம்" என்று சொல்லி பெரியவனோ, சிரியவனோ... "You come" என்று சொல்லி விடு என்று எளிதாக முடித்து விடுகிறது.

மிகவும் எளிதாகக்கப்பட்ட ஆங்கிலத்தை எவரும் படிக்கலாம்.
படிக்கும் போது "இலக்கண கட்டுப்பாடோ, பிறர் கேலி செய்வார்களோ" என்ற பயமோ தேவை இல்லை என்று தன்னை மாற்றி கொள்கிறது..

மனு (manu) என்ற அரசன் மூலமாக மனித குலம் தோன்றியது என்று நம் ஹிந்து சாஸ்திரம் சொல்கிறது.
"Man" என்ற சொல்லை ஆங்கில மொழியில் ஏற்று கொண்டது...

"Thee, thou" என்று பயன்படுத்தப்பட்ட ஆங்கிலம் இன்று அதை மாற்றி கொண்டு "you" என்று காலத்துக்கு ஏற்றவாறு மாற்றிக்கொண்டது..

தமிழ் மொழி அழிந்து விட கூடாது என்பதால், "ஷ, ஹ, ஸ, ஜ, க்ஷ, ஸ்ரீ" போன்ற எழுத்துக்களை இப்பொழுது தமிழில் சேர்த்து உள்ளனர் என்று பார்க்கிறோம்.
இந்த எழுத்துக்கள், வந்த பிறகு,
"சாக்கிறதை" என்று தமிழன் சொல்லாமல், தமிழனையும் பிறரை போல "ஜாக்கிரதை" என்று சொல்ல உதவி செய்தது..


இராமன், இராவணன், இலக்குவன், இரத்தம், என்று சொல்லையே வேறு மாதிரி சொல்லாமல் "ராமன், ராவணன் என்று சொல்லலாம்" என்ற இலக்கணத்தில் சில சலுகைகள் தமிழ் மொழியில் கொண்டு வரப்பட்டது..

இந்த மாறுதல்கள் சில முன்னேறங்கள் கொண்டு வந்தாலும், "நான் வந்தாள்" என்று இலக்கணம் தவறி வெளி மாநிலத்தவன் பேசினால், கேலி செய்து சிரிக்கும் கூட்டமும்,
ஒரு புத்தகத்தை மட்டுமே வைத்து "அச்சு, சங்கு" என்று படித்தும், சரியான உச்சரிப்பை அறியமுடியாத சங்கடங்கள் தொடர்கிறது.
இந்த சங்கடங்கள் தமிழ் மொழியை வளர விடாமல் தடுக்கிறது....

இது போலவே, ஒவ்வொரு மொழிக்கும் சில தடைகள் அதை பிறர் படிக்க விடாமல் செய்கிறது..

இந்திய மொழிகளில் "ஆங்கிலம்" அளவுக்கு வளைந்து கொடுக்காவிட்டாலும், பெருமளவுக்கு வளைந்து கொடுப்பது "ஹிந்தி" மொழியாக உள்ளதால், அதை ஒரு புத்தகம் மூலமாகவே கூட படித்து, சரியாக உச்சரிக்கலாம் என்பதால்,
குஜராத்தி, கன்னடம், தமிழ், மலையாளம், தெலுங்கு, ஒடியா, கொங்கனி போன்ற ஊர்களில் உள்ளவர்கள் கூட ஹிந்தி பேச முனைகிறார்கள்...

ஹிந்தி பெரும்பாலானவர்கள் பேசுவதால், பாரத தேசத்தில்
காஷ்மீரில் என்ன பேசுகிறார்கள்? 
பாகிஸ்தான்காரன் என்ன சொல்கிறான்? 
பீஹார்காரன் என்ன நினைக்கிறான்? 
என்று புரிந்து கொள்ள முடிகிறது..

அதற்கான தீர்வுகள் நடக்க, பேச்சுவார்த்தை பொதுவான ஹிந்தியில் நடக்கும் போது பல சங்கடங்களுக்கு தீர்வு கிடைக்கிறது...
பாகிஸ்தானில் கூட ஹிந்தி தானே பேசுகிறார்கள்..

குஜராத்தில் உருவான "சௌராஷ்டிர மொழி", இன்று பேச்சு அளவில் மட்டும் தான் உள்ளது.
முகம்மது கஜினி என்ற ஆப்கான் நாட்டில் இருந்து வந்த கொள்ளைக்காரன், குஜராத்தில் உள்ள சோம்நாத் கோவிலே தங்கத்தால் ஆனது என்று தெரிந்ததும், கொள்ளை அடிக்க 18 முறை தாக்கினான்.
17 முறை தோற்று ஹிந்து அரசனிடம் காலில் விழுந்து விழுந்து, மன்னிக்கப்பட்ட கொள்ளைக்காரன் இவன்.

இவன் படையெடுப்பால் சிதறி (civil disturbance), நாடோடிகள் ஆன "சௌராஷ்டிர சமூகம்" பாரத தேசம் முழுவதும் பிரிந்து ஹிந்து ராஜ்யங்களில் தஞ்சம் அடைந்தனர்.
தமிழ்நாட்டில் குறிப்பாக பாண்டிய தேசத்தில் அதிகம் இவர்கள் தஞ்சம் அடைந்தனர்.

தன் சுய உழைப்பாலும், நேர்மையாலும் வளரும் இந்த சமூகம், சௌராஷ்டிர மொழியின் எழுத்து வடிவத்தை இழந்து நிற்கிறார்கள் என்பது வேதனையே..

சௌராஷ்டிர மொழியில் ரகசியமான கல்வெட்டுகள், காவியங்கள் கிடைத்தாலும் படித்து புரிந்து சொல்பவர்கள் இல்லை...

அந்நிய படையெடுப்பின் காரணத்தால், சௌராஷ்டிர மொழி அதன் எழுத்துக்களை இழந்தது.

அந்நிய படையெடுப்பு இல்லாத இன்றைய காலத்தில்,
தானாகவே தன் தாய் மொழியை அழிவுக்கு இழுத்து கொண்டு செல்கின்றனர் போலி அரசியல்வாதிகள்.

தங்கள் மொழியை தன் மாநிலத்திலேயே தனியார் பள்ளிகள் என்ற ரூபத்தில், தமிழை ஒதுக்கி, அழித்து கொள்கின்றனர்.

பெரும்பாலான தனியார் பள்ளிகளை நடத்துவது அரசியல்வாதிகளும் அவர்கள் பினாமிகளுமே.

பெரும்பாலான தமிழ் குழந்தைகள், தமிழ்நாட்டிலேயே படித்தாலும்,
இந்த அரசியல்வாதிகள் நடத்தும் தனியார் பள்ளியில் தமிழை எடுத்து படிப்பதில்லை. 
தமிழ் கட்டாய பாடமும் இல்லை. ஆங்கிலமே முக்கியத்துவம் பெறுகிறது.

பிரெஞ்ச் படிக்க கூட ஆரம்பித்து விட்டார்கள்.
தனியார் பள்ளியில் தமிழ் கற்று கொள்வதில்லை.

இன்று தமிழ் பேசுகிறார்களே ஒழிய, தமிழை படிக்க தெரியாத நிலையில் உள்ளனர்.
தன் ஊரில் உள்ள தனியார் பள்ளியை கூட சரி செய்ய திறன் இல்லாத,
இறை பக்தி இல்லாத, போலி அரசியல்வாதிகள்,
"தமிழை படித்து புரிந்து கொள்ள முடியாமல் அழித்து விட்டால், கம்ப ராமாயணம், ஆழ்வார்கள் பாசுரம், நாயன்மார்கள் பதிகங்கள் அழிந்து விடும்" என்று நினைக்கிறார்கள்.

"போலிகளை சில காலம் பாரத மக்கள் ஏற்பது போல இருந்தாலும், மீண்டும் விழித்து கொண்டு போலிகளை அழித்து விடுவார்கள்" என்பதற்கு நம் பாரத சரித்திரமே சான்று...

புத்தர் அவதரித்த பின், அவர் கொள்கை அற்புதமாக உள்ளது என்று பாரத பூமியில் பலர் மொட்டை தலையுடன் "புத்தம் சரணம் கச்சாமி" என்று அலைய ஆரம்பித்து விட்டனர்...
"சமாதானம், அன்பு" என்று சொல்லி, சோம்பேறிகள் ஆகி, இஸ்லாமிய படையெடுப்புகள் நடந்த போது, புத்த மதத்தை ஏற்று இருந்த ஆப்கான், சிந்து தேச அரசர்கள் மரண அடி வாங்கினார்கள்.. இஸ்லாமிய தேசமாக ஆகி விட்டது இந்த தேசங்கள்..

சுதாரித்த பாரத மக்கள், அடியோடு புத்த மதத்தை எட்டி உதைத்தனர்.. அது சீன தேசத்தில் போய் விழுந்தது...
அன்பு, சமாதானம் சந்யாசிக்கு சொன்னது.. 
இதையே ராணுவத்தில் உள்ளவனும், அரசனும் ஏற்றால் தவறு.. ஆபத்தும் கூட...
ஹிந்து மதத்தில், ஸ்ரீ கிருஷ்ணர் "அவனவன் தர்மத்தில் இருந்து இறை உணர்வுடன் இருக்க வேண்டும்" என்று சொல்கிறார்.

நீ க்ஷத்ரியனாக இருந்தால், சந்நியாசி போல வாழாதே... ஒரு கன்னத்தில் எதிரி அடிப்பான் போல தெரிந்தால், அவன் அடிப்பதற்கு முன்பேயே அவன் இரு கன்னத்திலும் அறைந்து விடு என்று க்ஷத்ரியனை, நாட்டை காப்பவனை விழிப்புடன் இருக்க சொல்கிறார்.
ஞானிக்கு ஞான மார்க்கம் சொல்கிறார்.
செயலில் ஆர்வம் உள்ளவனுக்கு கர்ம யோகம் சொல்கிறார்..
பக்தனுக்கு பக்தி யோகம் சொல்கிறார்..
சந்யாசிக்கு சந்யாஸ யோகம் சொல்கிறார்..

"சுதந்திரமாக அவரவர் தர்மத்தில் இருந்து கொண்டே இறை உணர்வில் இருக்கலாம்" என்று காட்டிய ஸ்ரீ கிருஷ்ணரே "பரதெய்வம்" என்று பாரத மக்கள் உணர்ந்து, போலி மதங்களை, குறுகிய கோட்பாடுகள் உள்ள கொள்கைகளை உதறினார்கள்.

வெளி மாநிலத்திலும், வெளி நாட்டிலும் வேலை பார்க்கும் தமிழர்களுக்கு நிலைமை மோசம்.. பெரும்பாலான குழந்தைகளுக்கு தமிழ் எழுத்தே தெரியாது.
தமிழ் பேசுவது கூட அடுத்த தலைமுறையோடு அழிந்தே போய் விடும்.

தன்னுடைய தாய் மொழி காக்கப்பட வேண்டும், அது உலகமெங்கும் உள்ள பலரால் பேசப்பட்டு வளர வேண்டும் என்று ஒவ்வொருவரும் நினைக்கிறோம்.
அதில் தவறு இல்லை.

ஒவ்வொரு மொழியிலும், அதில் எழுதப்பட்ட அற்புதமான இலக்கியங்கள், காவியங்கள், ரகசிய ஆராய்ச்சிகள், கல்வெட்டுகள், உள்ளது.

ஒரு மொழி, பலரால் படிக்கப்பட்டால் தான், அதில் உள்ள காவியங்கள், ஆராய்ச்சி கட்டுரைகள், அந்த மொழி பேசுபவர்களின் பண்பாடு, கலாச்சாரம் தெரிந்து கொள்ள முடியும்.

பிற மொழிகளை கற்றுக்கொண்டால், அந்த தேசத்தில் உள்ளவர்களுடன் பேசி வணிகம் செய்வதற்கான வாய்ப்புகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

உலகில் உள்ளவர்கள் பெரும்பாலும் ஆங்கிலம் கற்று கொள்கிறார்கள் பேசுகிறார்கள்.

இந்தியாவில் ஹிந்தியை பெரும்பாலான மக்கள் கற்று கொள்கிறார்கள், பேசுகிறார்கள்.

சீனா, ரஷ்ய போன்ற தேசங்களில் வர்த்தக கால் பதிக்க கோடிக்கணக்கான வாய்ப்புகள் இருக்கிறது.

வாய்ப்புகள் இருந்தும் சீன மொழியை, ரஷ்ய மொழியை ஆர்வத்துடன் கற்று கொள்பவர்கள் மிக குறைவாகவே உள்ளனர்.

மிகவும் கடினமான மொழியாக, ஆயிரம் வடிவங்கள் கொண்ட எழுத்துக்கள் உள்ள சீனா, ரஷ்ய மொழிகள் அவர்கள் தேசத்தில் பேசப்பட்டாலும், வணிக வாய்ப்புகள் இருந்தாலும், ஆங்கிலம் போல அனைவராலும் பேசப்படவில்லை, கற்றுக்கொள்ளப்படவில்லை.

"தமிழை பிற மொழி பேசுபவர்கள் கற்று கொண்டால், தமிழில் உள்ள அற்புதமான கம்ப ராமாயணத்தில் உள்ள கவித்துவத்தின் அழகை, ஆழ்வார்கள் அருளிய 4000 திவ்ய பிரபந்தங்களை, நாயன்மார்கள் பாடிய பதிகங்களை, பிற மொழி பேசுபவர்களும் அறிந்து கொண்டால், அவர்களும் ரசிப்பார்களே" என்று உண்மையான தமிழன் நினைக்கிறான்.

பாரத தேசம் முழுவதும் பொது மொழியாக பேசப்பட்ட "சமஸ்கரித மொழி" இன்று ஒரு சில இடங்களில் பேசப்பட்டாலும், அர்த்தங்களை சரியாக புரிந்து கொள்ளும் அறிஞர்கள் 120 கோடி மக்களில் எண்ணி விடும் அளவிற்கே உள்ளனர்.

இதனால், சமஸ்கரித மொழியில் இருந்த பல அரிய விஷயங்கள் அதன் உண்மையான அர்த்தங்கள் என்ன என்று தெரியாமல் போய், அழிந்து விடும் நிலைக்கு ஆகிவிட்டது... இது பாரத மக்களுக்கே இழப்பு.


சமஸ்கரித மொழியில் எத்தனை பொக்கிஷங்களை இழந்து விட்டோம் நாம்!! ....

  1. ஆயுர்வேதம் (medicine),
  2. ஸ்தாபத்யம் (engineering),
  3. காந்தர்வ வேதம் (music),
  4. தனுர் வேதம்(weaponry)
  5. 6 தர்ம சாஸ்திரங்கள்,
  6. சிக்ஷை (expert in phonetics, phonology, pronunciation)'
  7. கல்பம் (expert in knowing  procedures for Vedic rituals and rituals associated with major life events such as birth, wedding and death in family, as well as discussing the personal conduct and proper duties of an individual in different stages of his life),
  8. வியாகரணம் (expert in grammers and linguistic analysis),
  9. நிருக்தம் (expert interpretation of words and to help establish the proper meaning of the words),
  10. சந்தஸ் (expert in poetic metres),
  11. ஜோதிஸம் (expert in knowing Auspicious time for rituals and expert in astrology and astronomy),
  12. யோகம் (expert in meditation, contemplation and liberation),
  13. ஸாங்க்யம் (Expert in consciousness and matter),
  14. நியாயம் (Expert in exploring sources of knowledge),
  15. சௌகதம்,
  16. மீமாம்ஸா (expert in correct conduct, both ethical and liturgical),
  17. பாஞ்சராத்ரம் (expert in Agama rules and guiding five observances every day to lord narayana),
  18. 4 வேதங்கள்,
  19. இதிஹாசங்கள்,
  20. புராணங்கள், 
    என்று எதுவுமே தெரியாமல் போய் விட்டது...

ஸ்தாபத்யம் (engineering) என்ற சாஸ்திரத்தை கற்ற ஸ்தபதிகள் என்ன என்ன அற்புதங்கள் செய்தார்களோ... எத்தனை கட்டிடங்கள் இடிக்கப்பட்டதோ 1000 வருட அந்நிய ஆதிக்கத்தில்..

சமஸ்கரித மொழி அனைவருக்கும் பொதுவாக இருந்த மொழி.
ஸ்தாபத்யம் கற்ற இந்த ஸ்தபதிகள் கட்டிய ஆயிரக்கணக்கான கோவில்கள், இன்று சமஸ்கரித மொழியில் இருந்த ஆச்சர்யங்களை நமக்கு காட்டுகிறது..

ஸ்தாபத்யம் கற்ற ஒரு engineer கட்டிய கல்லணை இன்று வரை சாட்சி சொல்கிறது...

சம்ஸ்க்ரிதம் என்ற மொழி தெரிந்து இருந்தவரை,
இந்தியாவை நோக்கி பிச்சை எடுக்கவும், கொள்ளை அடிக்கவும், வர்த்தகம் செய்யவும், வெளிநாட்டில் இருந்து,பாரதம் நோக்கி வந்தார்கள் என்று சரித்திரம் காட்டுகிறது.
அரேபியன் உள்ளே வந்தான்,
சீனா காரன் உள்ளே வந்தான்,
பிரெஞ்ச்காரன் உள்ளே வந்தான்,
ஆங்கிலேயன் உள்ளே வந்தான்,
டட்ச்காரன் உள்ளே வந்தான்,
போர்ச்சுகல்காரன் உள்ளே வந்தான்.
சமஸ்கரித மொழி பேசிய வரை, இந்தியக்காரன் வெளி நாட்டை நோக்கி போகவில்லை. பிச்சை எடுக்கவில்லை.



சம்ஸ்க்ரித மொழியை இழந்தோம், 
இன்று பாரத பூமியே வெளிநாட்டுக்கு சென்று பிச்சை கேட்டு வாணிகம் செய்யும் நிலையில் உள்ளது...

நம் சொத்தை தோண்டி எடுக்க துப்பு இல்லாத நமக்கு, அறிவு மட்டும் இன்னும் இருப்பதால், வெளிநாட்டில் சென்று வாணிக பிச்சை செய்கிறோம்.

சமஸ்கரித மொழியில் வேதம் மட்டும் இல்லை.. பிற படிப்புகளும் இருந்தது..

கோவில் கட்டிய ஸ்தபதி, ஐயர் இல்லையே.
போலி அரசியல்வாதிகள் களைய படவேண்டும்.

நம் பாரத தேச மொழிகளை, அதில் எழுதப்பட்ட இலக்கியங்கள், பக்தி காவியங்கள், பாடல்கள், ஆராய்ச்சி கட்டுரைகள் படித்தாலே, பாரத நாடு மீண்டும் சுய சார்புள்ள நாடாக ஆக முடியும்.

வெளிநாட்டவர்கள் நம் நாட்டை கைப்பற்ற ஏன் அலைந்தார்கள்? என்று யோசித்தாலேயே நமக்கு நம் பெருமை புரிய ஆரம்பிக்கும்..

இந்தியாவுக்குள் நுழையும் முன்னர் தேனும், ரொட்டியும்,மாமிசம் மட்டுமே உணவு என்று அலைந்த வெளிநாட்டினர், இந்தியாவுக்குள் நுழைந்த பின்னர் தானே பல கண்டுபிடிப்புகள் செய்தார்கள்!!

1400AD சமயத்தில் உள்ளே நுழைந்த போர்ச்சுகல் கிறிஸ்தவர்கள்.. இதற்கு முன் உலகத்திற்கு ப்ரயோஜனமாக ஏதாவது கண்டுபிடித்தார்களா?...

"பிற மொழி பேசுபவர்களும், தமிழ் மொழி தெரிந்து இருந்தால்,
அகத்தியரின் சுவடிகளை ஆராய்ச்சி செய்து சித்த மருத்துவம், நாடி ஜோதிடம் போன்றவை உலகம் எங்கும் பரவுமே, 
நம் அகத்திய முனியின் பெருமை உலகம் காணுமே" என்று உண்மையான தமிழன் நினைக்கிறான்.

அவனவன் தாய் மொழியை எங்கும் நிரப்ப, எதிலும் பரப்ப நினைக்கிறான்.
இதில் தவறு இல்லை.

மொழி வளர்வதால், மொழி மட்டும் காக்கப்படுவதில்லை, அதில் உள்ள அற்புதமான தெய்வ காவியங்கள், இலக்கியங்கள், ஆராய்ச்சிகள் என்று அனைத்தும் மக்களுக்கு மன தூய்மைக்கும், புதிய வாய்ப்புகள் ஏற்படுத்தி கொள்வதற்கும் பயன் தருகிறது.

ஒவ்வொரு மொழியிலும் அற்புதமான காவியங்கள், ரகசிய சுவடிகள், ஆராய்ச்சி கட்டுரைகள் அடங்கி உள்ளது..
இவை காப்பாற்றப்பட வேண்டும் என்றால், அந்த மொழி தெரிந்தவர்கள் உலகில் இருக்க வேண்டும்.

தமிழன் தமிழை வளர்க்க ஆசைப்படுகிறான்..

"தமிழ் மொழி தேய்ந்து போகிறது" என்று பார்க்கிறானே தவிர, அவன் ஊரிலேயே பாசுரங்கள், பதிகங்கள் வளர்க்க ஆள் இல்லை.

போலி தமிழனுக்கு பதிகங்கள் கண்ணுக்கு தெரியவில்லை.
தமிழன் என்ற போர்வையில் ஊரை ஏமாற்றி, தமிழை தமிழ் நாட்டிலேயே அழித்து கொண்டு இருக்கிறான்.

தெலுங்குக்காரன் தெலுங்கை வளர்க்க ஆசைப்படுகிறான்..
தெய்வ பக்தியுடன் இருப்பதால் பத்ராசல ராமதாசர், தியாகராஜர் கீர்த்தனைகள், அன்னமாச்சாரியா கீர்த்தனைகள் போன்றவற்றை மதிக்கிறான்..அவன் மொழி அவன் ஊரில் வாழ்கிறது.. 


இதே போல
குஜராத்காரன் குஜராத்தி மொழியை அவனிடத்தில் உள்ள மகான்களின் கீர்த்தனைகளை மதித்து காக்கிறான்.

கன்னடகாரன் கன்னட மொழியை புரந்தர தாசர், கனக தாசர் போன்றவர்கள் கொடுத்த கீர்த்தனைகளை மதிப்பதால், கன்னட மொழியை காக்கிறான்.

இப்படி அவரவர்கள் தங்கள் தாய் மொழியை காப்பாற்றி வந்தாலும், இந்தியாவில் ஹிந்தி வளர்வது போல வளர்க்க முடியவில்லை.
உலக அளவில் இங்கிலீஷ் வளர்வது போல, வளர்க்க முடியவில்லை.

உலகமெங்கும் ஆங்கிலமும், 
இந்தியா, பாகிஸ்தான் முழுவதும் ஹிந்தியும் 
பரவுவதற்கு காரணம்...
1. இந்த மொழிகளில் பொதுவாக பிற மொழிகளில் உச்சரிக்கப்படும் சொற்கள் பயன்பாட்டில் இருக்கிறது.
2. இந்த மொழிகளில் கட்டுப்பாடு அதிகம் இல்லை.  தவறாக பேசினாலும் கேலி செய்வதில்லை. 

இந்த சீர்திருத்தங்களை கொண்டு வந்தால், தமிழ் போன்ற மொழிகளும் பிறரால் கற்று கொள்ளப்படும்.

இந்த சீர்திருத்தங்களை கொண்டு வரும் வரை, 
அவரவர் மாநிலத்தில் உள்ள தாய் மொழியை, தனியார் பள்ளியிலும் கட்டாய பாடமாக சொல்லி தர வேண்டும். 

போலி அரசியல் வாதிகள், 
"ஹிந்து தெய்வங்களின் மேல் பக்தி, தெய்வ நம்பிக்கை ஏற்பட்டு விடுமே" என்பதால் பதிகங்களை, பாசுரங்களை ஒதுக்க தமிழை தாங்கள் நடத்தும் தனியார் பள்ளிகளில் சொல்லி தருவதில்லை. 

போலி தமிழர்கள் ஒடுக்க பட  வேண்டும்.