Followers

Search Here...

Showing posts with label doing. Show all posts
Showing posts with label doing. Show all posts

Wednesday 4 September 2019

ஏன் குடம் பாலை சிவனுக்கு அபிஷேகம் செய்ய வேண்டும் ? ஒரு டம்ளர் பாலை பக்திக்காக அபிஷேகம் செய்ய கூடாதா? ஏழைகளுக்கு கொடுக்கலாமே...

ஏன் குடம் பாலை சிவனுக்கு அபிஷேகம் செய்ய வேண்டும் ? 
பக்திக்காக (ஆசைக்காக வேண்டுமானால்), ஒரு டம்ளர் பாலை அபிஷேகம் செய்து விட்டு, மீதியை ஏழைகளுக்கு கொடுக்கலாமே!!.....



இப்படி ஒரு கேள்வியை "ஏழைக்காக தன் சொத்தையே கொடுத்து வாழும்" தியாகிகள் சிலர் சொல்லி கேட்டு இருக்கலாம்...

சில பேச்சுக்கள், நல்ல 'விஷயம்' போல வெளியில் தெரியும், ஆனால்
அது 'விஷயமாக' இருக்காது, 'விஷ' பேச்சாக தான் இருக்கும்.

புரிந்து கொள்ளும் தெளிவு இல்லாததாலோ,
ஹிந்து தர்மத்தின் மீது உள்ள 'பொறாமை கலந்த வெறுப்பாலோ' தான்,
இப்படிப்பட்ட பேச்சுக்கள் வெளிப்படுகிறது என்பதை நாம் மறக்க கூடாது.
இப்படி கேட்பவன் ஹிந்துவாக இருந்தால்,
அவன் வீட்டிலும் ஒரு சின்ன விக்ரஹம் பூஜை அறையில் இருக்க வாய்ப்பு உண்டு.
புரிந்து கொள்ளும் தெளிவு இல்லாததால் தான் இப்படி ஒரு கேள்வி இவர்களுக்கு எழுகிறது.
ஏழைக்காகவே உருகும் இது போன்ற நல்ல உள்ளங்கள், குடம் பாலை தன் வீட்டில் உள்ள தெய்வ விக்ரஹத்துக்கு அபிஷேகம் செய்யவே வேண்டாம்.
பக்திக்காக, அந்த விக்ரஹத்துக்கு ஒரு அரை ஸ்பூன் பாலை அல்லது தண்ணீரை விட்டு அபிஷேகம் செய்து விட்டு,
ஏழைக்கு உதவும் நெஞ்சக்காரன்,
வாசலுக்கு சென்று ஒரு பிச்சைக்காரனை தன் வீட்டுக்கு அதிதியாக (விருந்தாளி) அழைத்து,
ஆசனம் போட்டு, கால் அலம்பி,
"அவன் உள்ளும் பரமாத்மா இருக்கிறார்" என்ற நினைவோடு அவன் காலில் விழுந்து நமஸ்கரித்து,
"ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்கிறேன்" என்ற நினைவோடு,
தன் வீட்டில் அருமையான உணவு செய்து சாப்பிட சொல்லி,
கையில் கொஞ்சம் காசும் கொடுத்து வழி அனுப்பலாம்.

இது 'நடைமுறையில் இருந்த வழக்கம் தான்', என்பதையும் நாம் மறக்க கூடாது...  

"பாலை கொட்டுகிறார்களே!! ஏழைக்கு கொடுக்கலாமே!!" என்று வருந்தும் உத்தமர்கள்,
தங்கள் வீட்டில் செலவுகளை குறைத்துக்கொண்டு,
அதிக காசு கொடுத்து மாமிசம் சாப்பிடுவதை நிறுத்தி, 
விலை கம்மியான காய் கனிகள் மட்டுமே சாப்பிட்டு,
முடிந்தால் எதுவுமே சாப்பிடாமல் விரதம் இருந்து, தண்ணீர் மட்டுமே குடித்துக்கொண்டு, 
ஏழைகளுக்கு, தான் சம்பாதிக்கும் பணத்தை செலவு செய்யலாமே..  
ஊருக்கு தான் உபதேசமா?
வீட்டில் உள்ள தெய்வ விக்ரஹங்களுக்கு குடம் பால் வேண்டவே வேண்டாம்.
பக்தி (ஆசை) இருந்தால் முடிந்தால், கொஞ்சம் தண்ணீர் மட்டும் விட்டு அபிஷேகம் செய்யுங்கள். போதும்.


பாலை வீண் செய்ய வேண்டாம். 
அந்த பாலை ஏழைக்கே கொடுக்கலாம். 
ஏழைக்கு கொடுக்கும் போது, பரமாத்மா அவர்களிடத்திலும் இருக்கிறார் என்று அவர்களுக்கே கொடுக்கலாம். தவறே இல்லை.
ஊருக்கு உபதேசம் செய்யும் இது போன்றவர்கள், தன் வீட்டில் செய்து, தான் ஏழையாக போனாலும் பரவாயில்லை என்று அன்ன தானம் செய்து வாழலாமே. 
ஊருக்கு தான் உபதேசமா?




ஒரு வேளை இப்படி ஒரு கேள்வி, ஹிந்து அல்லாத ஒருவனுக்கு வந்தால்? அவனுக்கு பூஜையே கிடையாது என்ற சுதந்திரம் வேறு உள்ளது..
ஒரு மாதம் விரதம் இருப்பதற்கு பதில், வருடம் முழுவதும் விரதம் இருந்து, தான் சம்பாதிக்கும் அனைத்தையும் வைத்து, ஊருக்கே உணவு போடலாமே..  
பூஜையும் கிடையாது.. அன்னதானம் செய்யும் பழக்கம் உண்டா?...
தான் ஏழையாக போனாலும் பரவாயில்லை என்று அன்ன தானம் செய்து வாழலாமே. 
ஊருக்கு தான் உபதேசமா?
"வீட்டில் நீங்கள் சொல்வதை போல செய்கிறோம்..  எதற்காக கோவிலில் குடம் குடமாக ஊற்றுகிறார்கள்?...  கொஞ்சம் பாலை ஏழைக்கு கொடுக்கலாமே..!!"

இதற்கு பதில் சொல்வதற்கு முன்னால்....
அப்படி கோவிலில் வீண் செலவு ஆகிறது.. பால் அபிஷேகம் என்ற பெயரில் வீண் செய்கிறார்கள் என்று நாம் சொன்னால், அப்படி நஷ்டம் அடையும் கோவிலை எதற்கு அரசாங்கம் வைத்து இருக்கிறது?.. 
வருமானம் இல்லாமலா கோவிலை பிடித்து கொண்டு தொங்குகிறார்கள்?

பழனி, சபரி மலையில் கிடைக்கும் பணத்தை, அரசாங்கம் வாங்கி கொண்டு,
கோவில் வழியாக கிடைத்த பணத்தை வாங்கி, 
ஹஜ் பயணம் போகும் போது, 
ஜெருசலம் பயணம் போகும் போது 
புத்தி உள்ளவனுக்கு என்ன தோன்றும்?
கோவில்கள் ஏழைக்கு மட்டுமல்ல, தன் கோவிலுக்கு வராமல் வேறு எங்கோ போக ஆசைப்படுபவர்களுக்கும் உதவி செய்கிறதே என்று கொஞ்சம் அறிவு இருந்தால் கூட புரிந்து விடும்..


1000 ரூபாய்க்கு பால் பழ அபிஷேகம் செய்யும் கோவிலில், 
அதை பார்க்க வரும் கூட்டம், தரிசனம் பெற்ற ஆனந்தத்தில், 
அதை விட அதிகம் கொடுத்து விட்டு போகிறார்கள் என்று கவனிக்க வேண்டும்.

தெய்வத்துக்கு 1000 ரூபாய் செலவு, 
கோவிலுக்கு மட்டும் வருமானம் தரவில்லை, அரசாங்கத்துக்கே தருகிறது.. 
அங்கு வேலை பார்க்கும் ஆயிரக்கணக்கான ஊழியர்களுக்கு
"சிவனும், பெருமாளும், முருகனும்" தான் மாத சம்பளம் கொடுத்து சோறு போடுகின்றனர். 
வெறும் 1000ரூபாய் தெய்வத்துக்கு பால் செலவு செய்வதால்
பிரசாத ஸ்டால் போடுபவனும் கோவிலில் பிழைக்கிறான்.
கோவிலில் கோலம் போடுபவனும் கோவிலில் பிழைக்கிறான்.
பூஜை செய்பவன்மாலை கட்டுபவன்வளையல் விற்பவன், என்று அனைவரும் பிழைக்கிறார்கள்...
இன்று எந்த பிச்சைக்காரனும் வீட்டுக்கு வந்து பிச்சை கேட்பதில்லை..  அவர்களுக்கும் சோறு போடுகிறது 'கோவில்'.

திருப்பதி போன்ற கோவிலுக்கு இது போன்று பேசுபவர்கள் போனால், இவர்களுக்கும் இலவசமாக சோறு போட்டு அன்னதானம் செய்கிறது கோவில்கள்.
ஏழைக்காக மனம் இறங்கும் இது போன்ற போலிகள்,
கோவில்கள் அருகிலேயே பெரிய அன்ன தான கூடம் அமைத்து சோறு போடுங்கள்.. யார் வேண்டாம் என்றது?
கோவிலில் வேலை பார்க்கும் அனைவருக்கும் நாங்களே சம்பளம் கொடுக்கிறோம், நீங்கள் சும்மா இறை பக்தி மட்டும் செய்யுங்கள் என்று சொல்லலாமே...

இவை செய்ய முடிந்தால், கோவிலில் உள்ள சிவனுக்கு ஒரு டம்ளர் பால் மட்டும் அபிஷேகம் பக்திக்காக செய்ய சொல்லலாம்.
பாம்புக்கு விஷம் உண்டு.. 
"நல்ல பாம்பு" என்று பெயரை வைத்து கொண்டு விட்டால் மட்டும், விஷம் இல்லாத பாம்பு என்று நினைத்தால் எத்தனை முட்டாள் தனம் அது.
"நல்ல பாம்பு" என்று பெயரை வைத்து போர்த்தி கொண்டு வந்தாலும், பாம்பு பாம்பு தானே...


அது போல,
நல்ல "விஷயம்" பேசுவது போல "விஷத்தை" பேசும் முட்டாள்களை,
ஹிந்து தர்மத்தை குறை சொல்ல முயற்சிக்கும் போலிகளை
கடுமையாக எதிர்க்க வேண்டும்.

ஹிந்துவாக இருந்தும், போலிகளால் குழப்பப்பட்டதால் இது போன்ற கேள்வி கேட்டால், புரிய வைக்க முயற்சிக்க வேண்டும்..

இதற்கு முதலில் நமக்கு தெளிவு வேண்டும்.
தெளிவு இல்லாத பட்சத்தில், "காலம் காலமாக நடக்கும் ஹிந்து சம்பந்தமான விஷயங்கள் பல ஆழ்ந்த காரணங்களால் தான் கடைபிடிக்க படுகிறது"
என்ற அளவாவது ஹிந்துக்களுக்கு புத்தி இருக்க வேண்டும்.

வாழ்க ஹிந்துக்கள்..