Followers

Search Here...

Showing posts with label கட்டாய கல்வி. Show all posts
Showing posts with label கட்டாய கல்வி. Show all posts

Saturday 16 March 2019

தாய் மொழியையும், சம்ஸ்க்ரித மொழியையும் கட்டாய கல்வி ஆக்க வேண்டும்.. ஏன்?

"உலகையே ஒரு குடையில் ஆண்ட" மகாவீரர்களை பெற்றெடுத்தது இந்த பாரத மண்.


இந்தியாவை தேடி, கடலில் அலைந்து திரிந்து தான், "கொலம்பஸ்" தவறுதலாக அமெரிக்காவில் கரை இறங்கினான்.
"அடுத்தவன் வீட்டில் எதை கொள்ளை அடிக்கலாம். யாரை ஏமாற்றலாம்?"
என்று தேடி தான், இந்தியாவை நோக்கி தொப்பியும், ரொட்டியும் மட்டுமே பார்த்த, போர்ச்சுகல், டச், பிரெஞ்ச், பிரிட்டிஷ் போன்றவர்கள் நுழைந்தனர்.
இந்தியாவின் செல்வத்தை பார்த்து தான் "கஜினி முகம்மது" 17 முறை உள்ளே நுழைய பார்த்தான்.

  • 17 முறை ஹிந்து அரசனிடம் தோற்றவன் இவன்.
  • 17 முறையும், ஹிந்து அரசனிடம் மன்னிக்கப்பட்டவன்.
  • 18வது முறை திடீரென்று தாக்கி சோம்நாத் கோவிலில் உள்ள தங்கத்தை எடுத்து கொண்டு ஓடினான்.
  • 18 முறை ஒரே ஒரு கோவிலை மட்டுமே குறி வைத்து கொள்ளை அடித்தான் என்றால், பாரத பூமி முழுவதும் எத்தனை செல்வங்கள் இருந்து இருக்கும் என்று நினைத்து பாருங்கள்..

"இந்தியாவுக்குள் நுழைந்த பின்னர் தான் இவர்களுக்கு அறிவியல் வளர்ச்சி மட்டுமல்ல, அறிவு வளர்ச்சியே ஏற்பட்டது" 
என்பதற்கு சான்று, இன்று வரை இவர்கள் கண்டுபிடித்த அறிவியல் சாதனைகள் தான்.
ராமாயண காலத்தில், "ராவணன் புஷ்பக விமானம் (flight) வைத்து இருந்தான்" என்று வால்மீகி எழுதி உள்ளார்.
சீதையை, இலங்கையில் இருந்து அயோத்திக்கு ஸ்ரீ ராமர் அதே புஷ்பக விமானத்தில் ஏற்றி கொண்டு, ஓரே நாளில் திரும்பினார் என்றும் பார்க்கிறோம்.
பரதன், தன் அண்ணன் ஸ்ரீ ராமரை மீண்டும் அயோத்திக்கு கூட்டி வர புறப்பட்ட போது,
தன்னுடன் வந்த அயோத்தி மக்கள் வசதிக்காக,

  • போகும் வழியெல்லாம், உடனுக்குடன் சாலைகள் அமைத்து,
  • தண்ணீர் உணவு ஆங்காங்கு ஏற்பாடு செய்து,
  • பெரிய பெரிய மரங்களை காட்டிலிருந்து வேரோடு எடுத்து, சாலைகள் இருபுறமும் நட்டு,

தன் மக்களுக்கு வெயில் கூட படாமல் கூட்டி சென்றான் என்று பார்க்கும் போது, ஹிந்துக்களின் அறிவியல் வளர்ச்சி எப்படி இருந்துள்ளது என்று தெரிகிறது.
எத்தனை அற்புதங்களை இழந்து நிற்கிறோம் என்று தெரிகிறது.


இன்றைய என்ஜினீயரிங் படிப்பு மூலம், இது போன்று
ஒரே நாளில் ரோடு போட்டு,
மரங்களை ஒரு இடத்தில் இருந்து எடுத்து சாலை நெடுக வைத்து,
சாப்பாடு வசதி செய்து விட முடியுமா? என்பது கூட சந்தேகம் தான்.

12 லட்ச வருடம் முன்பு இருந்தது த்ரேதா யுகம்.
த்ரேதா யுகத்தில் "ராமர்" அவதாரம் நிகழ்ந்தது.
அந்த சமயத்திலேயே பாரத மக்களாகிய (நாம்), இத்தனை அறிவியல் முன்னேற்றம் பெற்று இருந்தனர் என்று பார்க்கிறோம்.

பொதுவாகவே, த்ரேதா யுகத்தில், "யோகம், தியானம், விரதம்" போன்ற பயிற்சிகளால் அனைவருக்கும் ஆயுசும் அதிகமாக இருந்தது.
16000 வருடங்கள் வாழ்ந்த தசரதன், தன் மகன் "ஸ்ரீ ராமனுக்கு முடி சூடலாம்" என்று நினைத்த போது,
அவர் தலைமுடியில் 'ஒரு முடி மட்டும் வெள்ளையாக இருந்ததை கவனித்தார்' என்றால், அன்று இருந்த அறிவியலை என்னவென்று சொல்வது?
"தலை முடி கொட்டாமல், தலை முடி நரைக்காமல் இருக்க" ராஜ யோகங்களை கடைபிடித்தனர் அரசர்கள் என்று சொல்கிறது இதிகாசங்கள்.

"மேலை நாடுகளின் உதவியால் தான் அறிவியல் முன்னேற்றம் ஏற்பட்டது"
என்று யாராவது சொன்னால், அவர்களிடம் ஒரே கேள்வி தான் ஹிந்துக்கள் கேட்க வேண்டும்.
இந்தியாவுக்குள் இவர்கள் அனைவரும், நுழைவதற்கு முன் என்ன அறிவியல்  கண்டுபிடிப்பு செய்தார்கள் இவர்கள்?
ஒரு ஊசியில் நூல் கோர்க்க, ஊசியில் எங்கு ஓட்டை போடுவது? என்று கூட தெரியாமல் இருந்தனர் என்பது தான் உண்மை.
ஆதி காலத்தில் இவர்கள் உடை அலங்காரத்தை பார்த்தால்,
நம் அரசர்களின் அலங்காரத்தை பார்த்தாலே,
நம் பாரத மக்கள் ஆடையில் எத்தனை ஆச்சர்யமான வண்ணங்கள் கொண்ட ஆடைகளை அணிந்தவர்கள் என்று தெரியும்
1000 வருடங்களில், தேவ பாஷையில் (சமஸ்கரித மொழியில்) உள்ள,
ரகசிய க்ரந்தங்கள், சாஸ்திரங்கள் எல்லாவற்றையும் max muller முதல் பல வெளிநாட்டவர்கள் படித்து,
அதன் சூத்திரத்தை (formula) அவர்கள் நாட்டிற்கு எடுத்துக்கொண்டு, ஆராய்ச்சிகள் பல செய்து கண்டுபிடிக்க ஆரம்பித்தனர்.
இந்த 1000 வருடத்தில், நாம் அனைவரும் பேசி வந்த தேவ பாஷையை பயன்படுத்த முடியாமல்,
"கொலைகள், கொள்ளைகள், கற்பழிப்புகள்" என்று பாரத தேசம் முழுவதும் அரங்கேற்றி,






  • பல ஹிந்துக்களை கத்தியை காட்டி மதமும் மாற்றி,
  • தமிழ் நாட்டில் தமிழும், சமஸ்கரிதமும் அறிந்த நம்மை, ஊர் விட்டு ஊர் சென்று வியாபாரமோ, வேலையோ செய்ய விடாமல், உயிர் பயத்தை உருவாக்கி,
  • தனியாக பெண்களை வீட்டில் விட்டு சென்றால், "எவன் வீட்டுக்குள் புகுவானோ?" என்ற பயத்தில், அடுத்த தேசங்களான கர்நாடக தேசம் கூட செல்ல முடியாமல், பாரத மக்கள் அவரவர் தெருவிலேயே கிடைத்ததை வைத்து வாழ ஆரம்பித்தனர்.

தசரதன் இறந்த பின், அவருடைய மனைவிகள் யாரும் தீக்குளிக்கவில்லை.  ஸ்ரீ ராமர் திரும்பி வரும்போது, "கோசலை" வரவேற்றாள்.
பாண்டு இறந்த பின்னும் "குந்தி" தேவி வாழ்ந்தாள்.
பெண்களின் பாதுகாப்புக்கு அச்சம் தலை விரித்து ஆடிய இந்த 1000 வருடத்தில்,
கணவன் இறந்தால், விதவைகளாக போன பெண்கள் கணவனோடு உடன் கட்டை ஏறினர்.
எத்தனை உயிர் பயம் இருந்தால் பொது மக்கள் இந்த காரியத்தை செய்ய துணிந்து இருப்பார்கள்?
ராஜஸ்தான் சித்தூர் கோட்டையை கில்ஜி படையினர் தகர்த்து விட்டனர் என்றதும், தன் கணவன் போரில் இறந்து விட்டான் என்றதும்,
மகாராணியே தன்னோடு சேர்த்து பல ஹிந்து பெண்களுடன் தீக்குளித்தால் என்றால், 
பொது மக்களின் (பெண்களின்) கற்புக்கு என்ன பாதுகாப்பு இருந்து இருக்க முடியும் இந்த சமயத்தில்?
ஹிந்துக்களின் இருண்ட காலங்கள் என்று தான் சொல்ல வேண்டும்.

குறைந்தது 1000 வருடங்களில் (947AD to 1947AD),
நம் 40 தலைமுறை பாட்டனார்களாவது இந்த பேராபத்தில் அவதிப்பட்டு இருப்பார்கள்.

தமிழன், கன்னடகாரனோடு பேச பொது மொழியாக இருந்த 'சமஸ்கரித மொழி' பயன்பாட்டில் இல்லாமல் போக, பாரத மக்களுக்குள் தொடர்பு அகன்றது.

"நான் தமிழன்", "நான் தெலுங்கன்" என்று இன்று பிரித்து பேசும் குணம், 1000 வருட வெளி ஆக்ரமிப்பால், நமக்கு வந்த சிறுமை எண்ணங்கள்.
இது முதலில் தொலைய வேண்டும்.
நாம் அனைவருமே ஹிந்துக்கள். பாரத தேசத்தவர்கள்.

இஸ்லாமிய ஆட்சி முடிந்த சமயத்தில், சம்ஸ்க்ரிதம், பேச்சு வழக்கில் இருந்து மெதுவாக நம்மிடம் அழிய, கிறிஸ்தவர்கள் தங்கள் மொழியை பிரபலப்படுத்த, வர்த்தகம் செய்ய, "ஆங்கிலத்தை" புகுத்தினர்.


பொது மொழியாக "ஆங்கிலம்" உருவாக, பள்ளிகளை கட்டி, அங்கு படிக்கும் ஹிந்துக்களுக்கு கணக்கு எழுதும் வேலை, கூர்க்கா வேலை தருவதாக அடிமை வேலைகள் கொடுத்து,
ஆங்கில மோகத்தை உருவாக்கி, முதலில் ஆதரவு இல்லாமல் விடப்பட்ட பிராம்மண சமுதாயத்தை ஆசை காட்டி இழுத்தனர்.

ப்ராம்மணன் ஆங்கிலம் கற்று, அரசாங்கத்திற்கு, கணக்கு எழுத போனான்.
சமஸ்கரிதம் பேச்சு வழக்கில் அழிந்ததும், அந்த மொழியை வைத்து தான்,

  • வேதம் என்ன சொல்கிறது?
  • யோக சாஸ்திரம் என்ன சொல்கிறது?
  • நாட்டிய  சாஸ்திரம் என்ன சொல்கிறது?
  • சிற்ப சாஸ்திரம் என்ன சொல்கிறது?

என்று கற்று வந்த பாரத மக்கள், அதை திருடி ஆராய்ச்சிகள் செய்து,
அதையே ஆங்கிலத்தில் நமக்கு கொடுத்து,

  • ஆங்கிலத்தில் மருத்துவம்,
  • ஆங்கிலத்தில் கணிதம்,
  • ஆங்கிலத்தில் இன்ஜினியரிங்,
  • ஆங்கிலத்தில் கவிதை

என்று நமக்கே திருப்பி கொடுத்து விட்டனர் ஆங்கிலேயர்கள்.

சமஸ்கரித மொழியை அறிந்து கொள்ள முடியாததால், பல அற்புதமான ரகசிய சூத்திரங்கள் இன்றும் கண்டுபிடிக்க படாமலேயே உள்ளது.
"பொன்னான சமஸ்கரித மொழியை 1000 வருட ஆக்கிரமிப்பால் இழந்தோம்"
என்ற அறிவு இல்லாமல்,
சுதந்திரம் அடைந்த பின்னும்,
மீண்டும் சமஸ்கரித மொழியை படித்து ஆராய்ச்சிகள் செய்து சுயமாக பாரத மக்கள் வாழ வழி செய்யாமல்,
கடந்த 70 வருடங்களாக மெக்காலேயின் கிறிஸ்தவ பாட புத்தகத்தை கொண்டே கல்வியை தொடர்ந்தது நேருவின் அரசாங்கம்.

விளைவு, வேற்று மொழியான ஆங்கிலத்தில் தமிழன் படித்து, அதை பற்றிய மேலும் ஆராய்ச்சி செய்ய, அவர்கள் என்ன எழுதியுள்ளார்கள்? என்றே படித்து,
வாணிபம், தொழில், படிப்பு என்று எதை எடுத்தாலும் வெளிநாட்டிடம் பிச்சை எடுக்கும் நிலை வந்தது.




ஜப்பான் போன்ற சிறு நாடுகள் கூட அவர்களுக்கான மொழியிலேயே படிக்கிறார்கள். அவர்கள் எந்த நாட்டையும், இன்று வரை நம்பி வாழவில்லை.

இந்தியா முழுவதும் அவரவர் தாய் மொழியும், பொது மொழியாக சம்ஸ்க்ரிதமும் வளர்க்கப்பட்டு இருந்தால்,
இன்று சிற்ப சாஸ்திரம் படிப்பவன், வேதத்தில் சொன்ன ரகசியங்களை அறிந்து, உலகமே இவன் சிற்பங்களை வாங்க அலைய வைத்து இருப்பானே!!
'தமிழ்' முனி என்று பெருமையாக நாம் சொல்லும் "அகத்தியர்",
வனவாசமாக "ஸ்ரீ ராமர்" வந்த பொழுது,
பொது மொழியான 'சமஸ்கரித' மொழியில் பேசி, தான் வைத்து இருந்த அஸ்திர சஸ்திரங்களை ஸ்ரீ ராமரின் பாதத்தில் சமர்ப்பித்தார் என்று பார்க்கிறோமே..
பாரத பூமி முழுவதும் மொழி பிரச்சனை இல்லாமல் தமிழன் சுற்றி இருக்கிறானே!!

திருச்சி அருகில், வனமாக இருந்த "அன்பில்" என்ற ஊரில் பிறந்த வேடுவன் "பிரம்மாவை, நாரதரை" தரிசித்தான்.
தமிழனாக பிறந்து "வால்மீகி" என்ற முனியாக ஆகி,
சமஸ்கரித மொழியில் "ராமாயணம்" எழுதி உலகம் முழுவதும் பிரபலமாக உள்ளாரே!!
வால்மீகி "தமிழன்" என்று கூட தெரிய கூடாது என்ற அளவுக்கு, தமிழனை மூளை சலவை செய்தது யார்?
70 வருட காங்கிரஸ் அரசாங்கம் தானே!!
ஸ்ரீ ராமர் அவதார காலம் வரை உத்தர பிரதேசம் சென்று ராமாயணத்தை எழுதி முடித்து,
மீண்டும் தமிழகம் வந்து "திருநீர்மலையில் ராமர் இவருக்கு காட்சி கொடுத்து, வைகுண்டம் அழைத்து சென்றார்"
என்பதும் தமிழனுக்கு தெரியாமல் மறைக்கப்பட்டதே !!
வால்மீகியின் முக்தி ஸ்தலம் அல்லவா திருநீர்மலை !!.
'தமிழன்' அல்லவா வால்மீகி.
இதன் காரணமாக தானே, கம்பன் ஸ்ரீ ராமாயணத்தை "தமிழில்" எழுத ஆசைப்பட்டான்.
தமிழனின் பொக்கிஷம் அல்லவா ராமாயணமும், வால்மீகியும்.
ஆதி சங்கரர் கேரள தேசத்தில் பிறந்தும், பாரதம் முழுவதும் சஞ்சரித்தார் என்று பார்க்கிறோம்.
மற்றவர்களுடன் 'மலையாளமா' பேசினார்?
பொது பாஷையான 'சம்ஸ்க்ரித' மொழியில் தானே பேசினார்.

ஆங்கில வழி கல்வியால், தமிழையும் இழந்து விட்டான் தமிழன்.

தமிழில் எழுதி உள்ள,

  • திருக்குறளுக்கும்,
  • கம்ப ராமாயணத்துக்கும்,
  • ஆழ்வார்கள் பிரபந்தங்களுக்கும்,
  • நாயன்மார்கள் பாசுரங்களுக்கும்

இன்றைய தமிழனுக்கு 'உரை' தேவைப்படுகிறதே!! 
இதை விட அவமானம் நமக்கு என்ன இருக்கப்போகிறது?.

சுதந்திரம் அடைந்து, 70 வருடங்கள் நாட்டை மறைமுகமாக அடிமை நாடாக ஆக்கி விட்டனர் காங்கிரஸ் அரசாங்கம். 
காங்கிரஸில் அன்று இருந்த அனைவருமே, ஆங்கில வழி கல்வி கற்றவர்கள். நாட்டின் கல்வியை சீர்படுத்த கிடைத்த வாய்ப்பை கோட்டை விட்டனர்.
1000 வருட சுரண்டலில், இந்தியர்கள் அனைவரும் பிச்சைகாரர்களாக விடப்பட்ட சூழ்நிலையில்,
காங்கிரசில் உள்ள முக்கிய தலைவர்கள் ஆங்கில வழி கல்வி கற்றவர்கள் என்பதை நாம் மறந்து விட முடியாது.

இன்று பல இந்தியர்கள் "வெளி நாடு சென்று வேலை பார்த்தால் தான், அதிகம் பணம் சம்பாதிக்க முடியும்" என்று நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.
வெளிநாடு சென்று, மேற்கத்திய கலாச்சாரம் ஊடுருவ,
இன்று 'முதியோர்கள்' அனாதைகளாக யாரும் பார்க்க ஆளில்லாமல் தனி வீட்டில் வாழ்கின்றனர்.

இந்த அவலம் போக வேண்டும் என்றால்,
தாய் மொழியையும், சம்ஸ்க்ரித மொழியையும் கட்டாய கல்வி ஆக்க வேண்டும்.

"சம்ஸ்க்ரிதமும், தமிழும்" கற்ற ஒரு தமிழன்,
அகத்தியர், சித்தர்கள் அருளிய ஆச்சர்யமான 'சித்த மருத்துவ' நூல்களின் ரகசியங்களை புரிந்து கொண்டு வெளி கொண்டு வரலாம்.
"சம்ஸ்க்ரிதமும்" தெரிவதால்,
வேத சாஸ்திரங்கள், யோக சாஸ்திரங்கள், சிற்ப சாஸ்திரங்கள் என்ன சொல்கிறது? என்று ஆராய்ச்சி செய்து,
எந்த நாட்டையும் நம்பி பிழைப்பு நடத்தும் அவசியம் பாரத மக்களுக்கு இல்லை, என்று ஆக்கலாம்.

இதற்கு கல்வியில்,
தாய் மொழியும், சமஸ்கரித மொழியும் கட்டாயப்படுத்தியே ஆக வேண்டும்.

பாரத மக்களில் பல லட்சக்கணக்கான ஹிந்துக்கள், இன்று 'இஸ்லாமிய, கிறிஸ்தவர்களாக' வாழ்கின்றனர்.
இவர்கள் சமஸ்கரித மொழியை படிக்க மறுத்தால், அவர்களுக்கு தாராளமாக விலக்கு அளிக்கலாம்.
கோடிக்கணக்கான ஹிந்துக்கள் "சமஸ்கரித" மொழியை கற்று கொள்ளும் வாய்ப்பை அரசு தர வேண்டும்.
இந்த மொழிகளை கற்றுக்கொள்ளும் போது தான், நாம் இன்று பார்க்கும் கோவிலில்,

  • கல்லில் எப்படி சங்கிலி செய்தார்கள்?
  • கல் தூணில் எப்படி சப்த ஸ்வரங்கள் கேட்கிறது?

என்று ஆராய முடியும்.

இது போன்ற சட்டம், ஆங்கில மோகம் கொண்ட அரசால் நமக்கு கிடைக்கவே கிடைக்காது.
சமஸ்கரித மொழி, அவரவர் தாய் மொழியை வளர்க்க, பாரத தேச பற்றுள்ள  கட்சிகளே நம் பாரத மக்களுக்கு தேவை.

70 வருடங்களாக ஆங்கில மோகம் கொண்ட அரசுகள், 
நம் வாழ்க்கையே வெளிநாட்டுக்காரனுக்கு வேலை செய்து பிச்சை வாங்கும் நிலையில் தான் வைத்தது.

நம் தாய் மொழியையும், சம்ஸ்க்ரித மொழியையும் கட்டாய கல்வியாக ஆக்க முயற்சி செய்யும் அரசே நமக்கு தேவை.

மொழி அறிவு நமக்கு வரும் போது, தொலைந்த பொக்கிஷங்களை நாமே தோண்டி எடுத்து விடலாம்.

ஆயிரம் மொழிகளை கற்று தேர்ச்சி அடைய புத்தியுடைய நமக்கு,
தாய் மொழியையும், சம்ஸ்க்ரித மொழியையும் கற்பது என்ன கஷ்டமா? புத்திசாலிகள் தானே நாம் !!.

வாழ்க ஹிந்துக்கள்.

Hare Rama, Hare Krishna - Bhajan


Sandhyavandanam - Afternoon Prayer with meaning  

Sandhyavandanam - Evening Prayer with meaning 




Sandhyavandanam - Morning Prayer with meaning