Followers

Search Here...

Showing posts with label பெண்ணுக்கு. Show all posts
Showing posts with label பெண்ணுக்கு. Show all posts

Saturday 25 April 2020

ஆணுக்கு உடல் வலிமையே 'பலம்'. பெண்ணுக்கு பலம் எது?

ஆணுக்கு உடல் வலிமையே 'பலம்'. பெண்ணுக்கு பலம் எது?
ஆண், தன்னை எதிர்ப்பவர்களை தன் உடல் பலத்தால் எதிர்க்கிறான். 

பெண், தன்னை எதிர்ப்பவர்களை, தன் பொறுமையால், தியாகத்தால், அன்பால் எதிர்க்கிறாள். 
எதிர்க்க வேண்டும்.




பெண்ணுக்கு பொறுமையும், தியாகமும், அன்புமே பலம்.
பொறுமை இல்லாத பெண், குலத்தை நாசம் செய்கிறாள்.
தியாக குணம் இல்லாத பெண், பிரச்சனையை வளர்க்கிறாள்.
அன்பு இல்லாத பெண், வெறுப்பை வளர்க்கிறாள்.

சீதாதேவி, 10 மாதம் ராவணனால் சிறைபிடிக்கப்பட்டு, ராமபிரான் ராவணனை கொன்ற பின்,
வானரர்கள், ராக்ஷஸர்கள் முன்னிலையில் 'அக்னியில் இறங்கி' தன் கற்பை நிரூபித்தாள்.
இருந்தாலும்,
'சீதாதேவி, 10 மாதம் ராவணனால் சிறைபிடிக்கப்பட்டாள்' என்ற காரணத்தை காட்டி, சீதையை பற்றி அவதூறு பேச ஆரம்பித்து விட்டார்கள் அயோத்தி மக்கள்.

'ராமர் மோகத்தால் இப்படி சீதையை ஏற்று கொண்டு விட்டாரே!!!!'
என்று ராமரை பற்றியெல்லாம் பேச ஆரம்பித்து விட்டனர்.

அயோத்தி அரசரான ராமபிரான், பெரும் சங்கடத்தில் ஆழ்ந்தார்.
"இப்படி ஒவ்வொருவருக்காகவும் சீதையை அக்னி பிரவேசம் செய்ய வைக்க முடியுமா? இது நியாயமா?.. 
இப்படி மக்கள் சீதையை இப்படி பேச ஆரம்பித்து விட்டார்களே!!
இவர்கள் சந்தேகத்தை போக்க வழியே இல்லையே!!" 
என்றும் கவலைப்பட்டார்.




அரசனுக்கு "மனைவி மக்கள் மட்டும்" குடும்பம் அல்ல.
அரசனுக்கு, "மக்கள் அனைவருமே" தன் குடும்பம் தான்.
அனைவருக்கும் சம்மதமாக வாழவேண்டியது தலைவனின் கடமை.

சீதாதேவி, அரசனாக இருக்கும் ராமபிரானின் நிலைமையை உணர்ந்து கொண்டாள்.
சீதாதேவி, அயோத்தியாவின் அரசர் ராமபிரானை பார்த்து சொல்கிறாள்,
"அயோத்தி மக்களுக்கு ஏற்பட்ட சந்தேகத்தை நீக்க, உங்களை பற்றி அவதூறு பேசுவதும் நிற்க, நான் உங்களை விட்டு விலகுவதே வழி. 

ஆண் தன்னை எதிர்ப்பவர்களை, உடல் பலத்தால் அடக்குகிறான். 

உடல் ரீதியாக வெல்லமுடிந்தாலும், ஆண்களால் எதிரியை திருத்த முடியாமல் போகிறது.

பெண்ணுக்கு பலம் பொறுமையும், தியாகமும், அன்புமே.

சந்தேகப்படும் என் மக்களிடம் கோபத்தை காட்டுவதை விட, என் பொறுமையையே காட்ட விரும்புகிறேன். நான் உங்களை விட்டு விலகி சென்று, என் தியாகத்தால், மக்களின் சந்தேகத்தை நீக்கி, அவர்கள் அன்பை பெறுவேன். நீங்கள் கவலைப்படாதீர்கள். 
மேலும் உங்களை என் காரணமாக பழித்து பேசுவதும் நிற்கும்"
என்று சொல்கிறாள்.
ஸ்ரீ ராமரின் குணங்களை பார்த்தே, "இவர் பரமாத்மா" என்று உணர்ந்தார் ஹனுமான் என்று பார்க்கிறோம்.

ராமபிரானின் குணங்களுக்கு ஈடு கொடுக்கிறாள் சீதாதேவி.
பெண்ணுக்கு 'சகிப்பு தன்மையே, த்யாகமே, அன்பே பலம்' என்று சீதாதேவியே நமக்கு காட்டுகிறாள்.

சீதையின் பெருமையை கொண்டாடுபவர்கள் "ராமா" என்று சொல்வதை விட "சீதாராம்" என்று சீதையை சேர்த்து சொல்லி ஆனந்தப்படுகிறார்கள்.

ஜெய் சீதாராம். 

Saturday 25 May 2019

ஹிந்து பெயரில் மறைந்து கொண்டு, ஹிந்துக்களை பற்றி இழுவாக பேசும் பிற மதக்காரர்களை (வாஹீகர்கள்) பற்றி நாரதர் அப்பொழுதே எச்சரித்து இருக்கிறார் - தெரிந்து கொள்வோமே ! மஹாபாரதம்

சாந்தி பர்வத்தில், மோக்ஷ தர்ம பர்வத்தில் நாரதர் சொல்கிறார்.



नारद उवाच॥ 
अनाम्नाय मला वेदा 
ब्राह्मणस्या व्रतं मलम् ।
मलं पृथिव्या वाहीकाः 
स्त्रीणां कौतूहलं मलम् ॥
-  महाभारतम्-12-शांतिपर्व

நாரதர் வ்யாசரிடம் சொல்கிறார்
அனாம்நாய மலா வேதா
ப்ராஹ்மணஸ்யா வ்ரதம் மலம் |
மலம் ப்ருதிவ்யா வாஹிகா:
ஸ்த்ரீனாம் கௌதூஹலம் மலம் ||
-  மஹாபாரதம் சாந்தி பர்வா 
1.
சப்த ப்ரம்மமாகிய "வேதம்" ஓதப்படாமல் இருந்தால், அது வேதத்திற்கே கறை.
2.
ஒழுக்கமுள்ள ப்ராம்மணன், கொடுத்த வாக்கை மீறினால், அது ப்ராம்மணனுக்கு கறை.
3.
பாரத நாட்டில் பிறந்தும் வெளி கலாச்சார நம்பிக்கை, உடை, உணவு பழக்கம் கொண்டவர்கள் (வாலிகர்கள்), உலகிற்கே கறை.
4.
ஆர்வமே பெண்ணுக்கு கறை.
வேதம் ஓதப்படாமல் இருந்தால், வேதம் மறையும், தீயவர்களுக்கு கொண்டாட்டம்.
வேதம் உலகெங்கும் ஓதப்பட்டால், நாதீகம் அழியும். ராக்ஷஸ குணம் கொண்டவர்கள் தானாக அடங்குவார்கள்.
கொடுத்த வாக்கை மீறும் ப்ராம்மணன் மரியாதை இழக்கிறான்.
வாக்கை காப்பாற்றும் ப்ராம்மணன் மதிக்கப்படுகிறான்.


பாரத நாட்டில் பிறந்தும் வெளி கலாச்சார நம்பிக்கை, உடை, உணவு பழக்கம் கொண்டவர்கள் (வாலிகர்கள்), உலகிற்கே கறை/களங்கம். பாரத கலாச்சாரத்தை கெடுப்பவர்களை துடைத்து எடுத்து விட்டால், பாரத கலாச்சாரம் தானாக பிரகாசம் அடையும்.
ஆர்வமே பல சமயங்களில் பெண்களுக்கு பாதிப்பை ஏற்படுத்த கூடும்.
பெண்கள் தன் ஆர்வத்தை கட்டுப்படுத்தி, எல்லை தாண்டாமல் பழகி கொள்ளும் போது, பெண்கள் மரியாதை பெறுகிறார்கள்.



மகாபாரதம்....