Followers

Search Here...

Showing posts with label சூத்திரர்கள். Show all posts
Showing posts with label சூத்திரர்கள். Show all posts

Saturday 1 December 2018

ஜாதிகள், 4 வர்ணங்கள் பற்றி ஒரு அலசல். கீதையில் ஸ்ரீ கிருஷ்ணர், குணத்தை வைத்து தான் வர்ணம் என்று சொல்கிறார்.

நான்கு வர்ணங்கள் (குணங்கள், 4 mindsets) கொண்டவர்கள் "சமூகத்தை" நடத்த தேவைப்படுகிறார்கள்.


  1. மோக்ஷத்தை விரும்பும், உலக வசதிகளில் நாட்டமில்லாத, ஆன்மீக சிந்தனை உள்ள, நல்லதை போதிக்கும், ப்ராம்மணர்கள் (Spiritual)
  2. உலக வசதிகளில் நாட்டமுள்ள, பொருளாதார வளர்ச்சி அடைய வியாபாரம் செய்யும் வைஸ்யர்கள் (business)
  3. மற்றவர் கொடுக்கும் வேலைகளை திறம்பட செய்து அதற்கு பதில் கூலியாக சம்பளம் பெற்று, நியாயமாக வாழும் சூத்திரர்கள் (Employee)
  4. இந்த மூன்று குணங்கள் கொண்ட சமுதாய மக்கள், நிம்மதியாக வாழ வேண்டும், இவர்களை எதிரிகள் தாக்காமல் இருக்க அரண் போல இருந்து, உயிர் பற்றி கவலைப்படாமல், போர் வீரனாக இருக்கும் க்ஷத்ரியர்கள் (Protection force)

சூத்திரன் என்ற சொல்லின் அர்த்தத்தை நன்கு புரிந்து கொள்ள, மேலும் அறிய www.proudhindudharma.com/2018/07/Sudra.html படிக்கவும்.

ஒரு சமுதாயம் வளர்ச்சி அடைய, இந்த நான்கு பேரும் தேவைப்படுகிறார்கள்.

இந்த 4 நான்கு வகையில் சேராமல் இருப்பவர்களை, பொதுவாக ஐந்தாம் வகையை (பஞ்சமா) என்று சொல்கிறோம்.

* ஆன்மீகத்திலும் ஆர்வமில்லை,
* தானாக வியாபாரம் செய்து, அதில் நாலு பேருக்கு வேலை கொடுத்து வாழவும் ஆர்வமில்லை,
* வேலைக்கு சென்று இவர்களுக்கு உதவியாகவும் இருந்து, தானும் சம்பாதிக்க விருப்பமில்லை,
* இவர்களை காக்க ஒரு வீரனாக இருக்கவும் ஆர்வம் இல்லை,
என்கிற பொழுது,
அவனை சமுதாய வளர்ச்சிக்கு உதவாதவன் "பஞ்சமன்" என்றனர்.

திருடன், கொள்ளைக்காரன், கொலைகாரன், தன் வயிறு வளர்க்க எதையும் அடித்து தின்பவன், என்று யாரெல்லாம் இருக்கிறார்களோ, அவர்கள் எல்லோருமே, சமுதாய வளர்ச்சிக்கு உபயோகம் இல்லாமல் வாழ்கின்றனர்.

இவர்களை பொதுவாக பஞ்சமன் என்று அழைத்தனர்.

சத்ய யுகம், த்ரேதா யுகம் வரை குணத்தின் அடிப்படையிலேயே வர்ணங்கள் இருந்துள்ளது.
க்ஷத்ரிய அரசனாக இருந்த விஸ்வாமித்ரர், வசிஷ்டர் என்ற ப்ரம்ம ரிஷியை  போல, தானும் பிராம்மணன் ஆவேன் என்று சபதம் செய்தார்.
உலக ஆசைகளை விட்டு, க்ஷத்ரிய குணமான காமத்தையும், கோபத்தையும் விட முடியாமல் சில சமயம் சிக்கி,
மீண்டும் நிதானித்து, முயற்சி செய்து, கடைசியில் கோபத்தையும், காமத்தையும் விட்டு, மந்திர ஸித்தி பெற்றார்.
வசிஷ்டர் "நீயும் பிராம்மணனே" என்று அங்கீகாரம் செய்தார்.

அந்த நாட்களில், அதற்கு பின், 'நீ க்ஷத்ரியன்', 'நீ காமத்துக்கு அடிமை ஆனாய்' என்று கேலியும் யாரும் செய்யவில்லை.

இதற்கு காரணம், அப்பொழுது 4 வர்ணம், குணத்தின் அடிப்படையில் தான் இருந்தது.

க்ஷத்ரிய குணம் இவரை காமத்தில், கோபத்தில் விழ செய்தது என்பதால், ப்ரம்ம ரிஷியான பின், அதை பற்றிய விவாதம் நடைபெறவில்லை.

யுகங்கள் செல்ல செல்ல, வசிஷ்ட ரிஷியின் சிஷ்ய பரம்பரை, விஸ்வாமித்ர சிஷ்ய பரம்பரை, என்று ரிஷிகள் பரம்பரை ஏற்பட, சமுகம் உருவானது.

ஒரு ரிஷியின் வழி வந்த தகப்பன், அதே போன்ற மற்றோரு ரிஷியின் வழியில் வந்த பெண்ணை தன் மகனுக்கு திருமணம் செய்து வைத்தார்.
இதனால், பிறக்கும் குழந்தைகள் பிறப்பிலேயே ஆன்மீக நாட்டம் உடைய குழந்தைகளாக பெற்றனர்.

அதே போல,
ஒரு க்ஷத்ரிய அரசன், இன்னொரு க்ஷத்ரிய அரசனின் பெண்ணை தன் மகனுக்கு திருமணம் செய்து வைத்தார்.
இதனால், பிறக்கும் குழந்தைகள் பிறப்பிலேயே வீரம், நாட்டுபற்று, உயிர் பயம் இல்லாத குழந்தைகளாக பெற்றனர்.

இதே போல,
வைசிய, சூத்திரர்களும் செய்ய செய்ய, தான் பெற்று எடுக்கும் குழந்தைகள் குணம் 'இப்படி தான் இருக்கும்' என்று தெளிவு கிடைத்தது.

சமுதாயம் மேலும் மேலும் வலுவான அமைப்பை பெற்றது.

சிறந்த அரசனோ, ரிஷியோ, வைத்தியனோ, ஒரு குடும்பத்தில் வரும் போது, அது மேலும் விரிவடைந்து ஜாதிகள் உருவாக ஆரம்பித்தது.

துவாபர யுகத்தில், ஜாதிகள் அதிகம் உருவாக ஆரம்பித்தது.

உதாரணமாக,
யது என்ற க்ஷத்ரிய அரசன் இருந்தார்.
அவரின் தந்தை யயாதி, 'உன் இளமையை கொடு' என்று கேட்க, 'இயற்கைக்கு மாறான அதர்மத்தை செய்ய முடியாது' என்று மறுத்தார்.
தந்தை சொல்லை மீறினார் என்று, 'இனி உனக்கு அரசு ஆளும் உரிமை கிடையாது' என்று சொல்லிவிட்டார் யயாதி.

க்ஷத்ரிய (Army) குணம் கொண்டவராக இருந்தாலும், இனி அந்த வேலையை செய்ய முடியாது என்பதால், மாடுகளை வளர்த்து, அதில் கிடைக்கும் பாலில் இருந்து வியாபாரம் செய்து பிழைக்க வேண்டியதாகியது.

குணத்தின் படி க்ஷத்ரியன் இவர். தொழில் படி வைசியன் ஆனார்.

இரண்டுக்கும் நடுவாக இருப்பதால், இவர்களை 'இடையர்கள்' என்றனர்.

யது என்ற அரசன் மூலம் இது ஆரம்பம் ஆனதால், இவர்கள் "யது குலம்" என்று அழைக்கப்பட்டனர்.

"யாதவர்கள்" என்று அடையாளப்படுத்தப்பட்டனர்
யாதவ குலம் உருவானது.
இந்த யது குலத்தில், பரவாசுதேவன் ஸ்ரீகிருஷ்ணராக அவதாரம் செய்தார் என்பதும் நாம் மறக்க இயலாது.

இது போன்று, பல காரணங்களால் ஜாதிகள் உருவானது.
ஒவ்வொரு ஜாதிக்கும் ஒரு கதை இருக்கும்.

ஒரு அரசனையோ, ஒரு ஞானியையோ, ஒரு ரிஷியையோ பின்பற்றி, சமூகம் உருவாகி, ஜாதிகள் என்று ஆகிவிட்டது.

இது மேலும் சமுதாயத்தின் கட்டமைப்பை வலுவூட்டியது.

இவன் பிள்ளை இந்த குணம் கொண்டிருப்பான், என்று தெளிவாக சொல்ல முடிந்தது.
குணத்தில் கலப்பு ஏற்படாமல் இருந்தது.


ஆச்சர்யமான சிற்ப கலையில் தேர்ச்சி பெற்றவன் பிள்ளையும் இயற்கையாகவே அதே துறையில் அறிவு பெற்று இருந்தான்.

கலைகள், கல்விகள், ஆராய்ச்சிகள், வைத்தியம், போர் என்று அவரவர் தொழிலில் மற்றவர்கள் நுழையாமல் இருந்ததால், வேலையில்லா திண்டாட்டம், போட்டி இல்லாமல் சமூகம் நடந்தது.

படிப்பில் மகா புத்திசாலித்தனம் இருந்தாலும், ப்ராம்மணர்கள் தொழில் செய்தோ, தன் கல்வியை கொண்டு பணம் சம்பாதிப்பதோ கூடாது என்று கட்டுப்பாடு இருந்தது.
ப்ராம்மணர்களுக்கு கோவில் அருகில்  கொஞ்சம் வாழ இடம் கொடுத்து, அரசன் கோவிலையும், வேதத்தையும் காப்பாற்ற மட்டும் அனுமதி தந்தனர்.
ப்ராம்மணராகி போன விஸ்வாமித்ரர், ஸ்ரீராமருக்கு தான் கற்று வைத்திருந்த அனைத்து அஸ்திர, சஸ்திர வித்தைகளை அர்ப்பணம் செய்து விட்டார் த்ரேதா யுகத்தில் என்று பார்க்கிறோம்.

க்ஷத்ரிய அரச குடும்பம் 'மகா வீரர்களை' கொண்டவர்கள், இந்த அரச குடும்பம் 'வீரமும், புத்திசாலித்தனமும்' கொண்டவர்கள் என்று தெளிவாக அடையாளம் கண்டு பிடிக்க ஜாதிகள் உதவியது.

துவாபர யுகம் முடியும் சமயத்தில், ஜாதிகள் அதிகம் இருந்தது.
சிறிது ஜாதி கலப்பும் ஏற்பட்டு இருந்தது.

இதனால் கட்டுப்பாடும் அதிகம் இருந்தது.
ஆங்காங்கு சந்தேகம் கொள்ளும் விதத்தில் சிலர் இருந்தனர்.

'இவனுக்கு இவனை போன்ற குணம் உள்ளவன் தான் பிறப்பான்' என்று பரம்பரையில் ஒரு ஒழுக்கம் பெரும்பாலும் உருவாகி இருந்தது.

சிலர் இதில் வித்தியாசப்பட்டு இருந்தனர்.
பிராம்மண ஜாதியில் பிறந்த துரோணர், வேதம், போர் கலைகள் அனைத்தும் கற்றவர்.

கற்றதை சொல்லிக்கொடுக்க மட்டுமே அதிகாரம் உள்ள பிராம்மண குணம் கொண்ட இவர், லட்சக்கணக்கான க்ஷத்ரியர்கள் கலந்து கொண்ட பாரத போரில், தலைமை ஏற்று போர் புரிந்தார்.
பிராம்மண ஜாதியில் பிறந்த துரோணர், குணத்தில் பிராம்மண குணமும், க்ஷத்ரிய குணமும் கலந்து இருந்தது.
இவர் குடும்பத்தில் யாராவது ஒருவர், க்ஷத்ரிய பெண்ணை திருமணம் செய்திருந்து இருக்கலாம்.
அதே போல,
க்ஷத்ரிய அரசனாக தர்மபுத்திரர் பிறந்தார்.
போர் குணம், வீரம் கொண்ட இவர், அதே சமயத்தில் எல்லை மீறிய பொறுமையை கடைபிடித்தார்.
இவரின் குணத்தில் க்ஷத்ரிய குணமும், பிராம்மண குணமும் கலந்து இருந்தது.
குந்தியின் பரம்பரையை பின்னோக்கி பார்த்தால், க்ஷத்ரிய அரசர் யாராவது பிராம்மண பெண்ணை மணம் செய்து இருக்கலாம்.
இந்த சமயத்தில், குந்தியின் மகன், கர்ணன் 'க்ஷத்ரிய குணம்' கொண்டவனாக இருந்தாலும், ஒரு தேரோட்டியின் மகனாக வளர்ந்தான்.

அர்ஜுனனை எதிர்க்க நினைத்த போது, 'கர்ணன் திறமைசாலி' என்று மதித்தாலும், 'எப்படி ஒரு தேரோட்டி மகனுக்கு இந்த க்ஷத்ரியகுணம் (போர் குணம்) வந்தது?'
என்று கடைசி வரை சந்தேகப்பட்டான் அர்ஜுனன்.

இந்த கேள்வி துரோணருக்கும் ஏற்பட்டது.
பல முறை இதனால் அவமானப்படுத்தபட்டான்.
கர்ணன் இறந்த பின், இவன் குந்தியின் மகன் தான் என்ற அறிந்த போது, தெளிவு பெற்றனர்.

இப்படி குணத்தின் அடிப்படையில் இருந்த 4 வர்ண அமைப்பு, காலபோக்கில் ஒரு அழகான உருவெடுத்து ரிஷிகள், மகான்கள், அரசர்கள் மூலம் ஒரு கட்டுக்கோப்பான பிரிவுகளாக "ஜாதி' என்று பிரிந்தது.

ஜாதிகள் உருவானதால், பிராம்மண வர்ணத்திலேயே
ரிஷி குடும்பம், வைதீக குடும்பம், லௌகீக குடுமபம், ஐயர் குடும்பம், ஐயங்கார் குடும்பம்
என்று பிராம்மண வர்ணத்திலும் "ப்ரம்ம விசாரம் செய்வதில் நாட்டம் உள்ளவர்கள்", "பெருமாள் பக்தி செய்பவர்கள்" என்று பிரிக்க முடிந்தது.

இது மேலும் சமுதாயத்தை கட்டுக்கோப்பாக வளர்க்க உதவி செய்தது.

மகாபாரத சமயத்தில், அர்ஜுனனுக்கு ஜாதி வெறி கிடையாது என்றாலும், கர்ணன் எப்படி போர் குணம் கொண்டவனாக இருக்கிறான்? என்று சந்தேகித்தான்.

"நீ சூத புத்திரன்" (you are employee son)
என்று பல முறை சொல்லி இருக்கிறான் அர்ஜுனன்.

சூத்திரர்களை (employee) தாழ்த்தி பேசும் நோக்கத்தில் அர்ஜுனன் சொல்லவில்லை.
ஆனால், "கர்ணா, நீ எப்படி போர் குணம் கொண்டவனாக உள்ளாய்?" என்று தான் அர்ஜுனன் எப்பொழுதும் சந்தேகித்தான்.

நாம் ஒழுங்காக கவனித்தோம் என்றால்,
கர்ணன் பிறப்பை அறிந்து இருந்த ஸ்ரீ கிருஷ்ணர், கீதையில் அர்ஜுனனுக்கு அதனால் தான் "வர்ணம் என்பது குணத்தின் அடிப்படையில் தான்" என்று தெளிவாக சொல்கிறார்.

"குலத்தை வைத்து பேச கூடாது, குணத்தை வைத்து பார்"
என்று சொல்கிறார் ஸ்ரீ கிருஷ்ணர்.

இந்த தெளிவு அர்ஜுனன் அண்ணன் "யுதிஷ்டிரனுக்கு" இருந்தது.
யக்ஷன் "யார் பிராம்மணன்?" என்று கேட்கும் கேள்விக்கு,
"குணத்தை வைத்து தான் பிராம்மணன் அறியப்படுகிறான்" என்று பதிலாக சொல்கிறார்.

கர்ணன் உண்மையில் குந்தி புத்திரன் தான் என்று கடைசியில் தெரிந்து கொள்கிறான் அர்ஜுனன்.

ஜாதிகள் இருந்ததால், 'பிறக்கும் குழந்தைகள் இந்த குணத்தோடு தான் பிறக்கும்'
என்ற தெளிவு பிறக்கிறது.
இந்த கட்டுக்கோப்பான அமைப்பு கலியுகத்திலும் தொடர்ந்தது.
புத்தர் பிறந்த பின், பௌத்த மதம் பரவ, அதிகமாக கலப்பு ஏற்பட்டது.

ப்ராம்மண குணம் கொண்ட பெண், க்ஷத்ரியனை மணக்க, அவளுடைய ஆன்மீக எண்ணம், உலக பற்று இல்லாத குணம் அவள் மூலமாக அந்த குடும்பத்தில் பிறந்த மகனுக்கோ, பேரனுக்கோ, எதிர்கால சந்ததிக்கோ வந்தது.


Gene என்று இன்றைய அறிவியல் இதை ஒத்துக்கொள்கிறது.

இப்படி கலப்பு ஏற்பட ஆரம்பித்த பின்,
"பிறக்கும் குழந்தை தன் குணத்தில் இருப்பானா?"
என்று தந்தையால் கூட கணிக்க முடியாமல் போனது.

இப்படி கலப்பு ஏற்பட ஆரம்பித்த பின்,

  • இசையில் தேர்ச்சி பெற்றவனின் பிள்ளை, இசையில் ஆர்வம் இல்லாமல் பிறந்து விடுகிறான்.
  • ஆஸ்தீக குடும்பத்தில், நாத்தீக குணத்தோடு பிறந்து விடுகிறான்.
  • நாத்தீகனுக்கு ஆஸ்தீகன் பிறந்து விடுகிறான்.
  • சேமிக்கும் பழக்கம் உள்ளவனுக்கு ஊதாரி மகனாக பிறந்து விடுகிறான்.

இப்படி பல குழப்பங்கள் ஜாதி கலப்பினால் ஆரம்பம் ஆகி விஸ்வரூபம் எடுத்தது கலியில்.

பௌத்த மதம் வளர்ந்து கொண்டிருக்கும் சமயத்தில் தான், சந்திரகுப்த அரசன் பாரதம் முழுதும் ஆண்டார்.
அலெக்சாண்டர் பாரத தேசத்தில் கால் வைத்து விட்டான் என்றதும் அவனால் நியமிக்கப்பட்ட செலுகாஸ் நிகேடர் என்பவனை தோற்கடித்து, அவன் நட்பு கரம் நீட்டி தன் தங்கையை திருமணம் செய்து வைத்தான். கிரேக்க நாட்டு பெண் இந்திய அரசனை கை பிடித்தாள்.
இவருக்கு பின் வந்த அசோக சக்கரவர்த்தி, மகா வீரனாக இருந்தும், கலிங்க போரின் முடிவில், ஒரு புத்த பிட்சு சொன்ன அஹிம்சை போதனையால் மனம் மாறினான் என்று சொல்லப்படுகிறது.
க்ஷத்ரிய ரத்தம் ஓடும் அசோக சக்கரவர்த்தி "ப்ராம்மண" புத்தி கொண்டதற்கு காரணம் இவர் முந்தைய பரம்பரையில் ஒரு பிராம்மண பெண்ணையோ, ஆணையோ திருமணம் செய்து இருக்கக்கூடும்.

சரித்திரத்தை பின்னோக்கி ஆராய்ச்சி செய்தால் இதன் கலப்பு கண்டுபிடிக்கப்படலாம்.

அசோக சக்கரவர்த்தி காலத்தில், சிற்றரசர்கள் இவரால் பௌத்த மதத்திற்கு இழுக்கப்பட்டனர்.

போர் செய்ய அவசியம் ஏற்படாமல் போக, போர் குணம் இருந்தாலும், பயிற்சி இன்றி இருந்தனர்.
போர் வீரர்கள் பௌத்த மடம் கட்டுவதில் ஈடுபட்டனர்.

விளைவு: ஈரான், ஆப்கான் போன்ற பௌத்த மதம் பரவி இருந்த தேசங்களை இஸ்லாமியர்கள் தாக்கி, "கோரி" அரசாட்சியை நிலை நாட்டினர்.

பௌத்தனாக இருந்த இவர்கள், சந்நியாசி மதத்தில் இருந்து தோற்றதற்கு பதில் இஸ்லாமியன் ஆவோம் என்று மாறி விட்டனர்.
இந்த தேசங்களே இஸ்லாமிய தேசமானது.

ஜாதி கலப்பு அதிகம் ஏற்பட, 
பிறக்கும் குழந்தைகளின் குணம், பெற்றவர்கள் குணத்துடன் வேறுபட ஆரம்பித்தது.

இஸ்லாமியர்கள் இந்த சமயத்தில் பாரத தேசத்தை 1000 வருடங்கள் தாக்கி கொள்ளை, கொலை, கற்பழிப்பு, மத மாற்றம் என்று அழிக்க முயற்சி செய்தனர்.

இந்த போராட்டத்தில் கோடிக்கணக்கான செல்வங்களை இழந்ததை விட, க்ஷத்ரிய குணம் கொண்டவர்கள் பெரும்பாலும் அழிந்தனர்.

இந்த இழப்பு, பிராம்மண, வைசிய, சூத்திர குணம் கொண்ட, அந்த தொழில் செய்து கொண்டிருந்தவர்களுக்கு பெரும் சவாலாக இருந்தது.

சூத்திர (employee) குணம் கொண்டவர்கள் எப்படியோ யாருக்கோ உழைத்து தன் வேலையை செய்து வாழ்ந்தனர்.

வைசியர்கள் வியாபாரம் செய்து  எப்படியோ சமாளித்து வாழ்ந்தனர்.

ப்ராம்மணர்கள் உலக ஆசை இல்லாத வாழ்க்கை வாழ்ந்தாலும், அரசன் இவர்களை காப்பாற்ற இல்லாமல் போக, தனிமை படுத்தப்பட்டனர்.
இருந்த போதும், துளசி தாஸ், ராகவேந்திர, ராமதாசர், கிருஷ்ண சைதன்யர் போன்ற மகான்கள் அவதரித்து, ஏழ்மையிலும் ஹிந்துக்களுக்கு ஆன்மீகத்தை விதைத்தனர்.
ஆதி சங்கரர் கேரளாவில் அவதரித்து, காஷ்மீர் வரை சென்றார். ஒவ்வொரு தேசத்திலும் ஒரு மொழி பேசப்பட்டாலும், பொது மொழியாக சமஸ்கரிதம் இருந்துள்ளது.
காஷ்மீர் வரை சென்று, சமஸ்கரித மொழியில் விவாதம் செய்து வேத மார்க்கத்தை நிலை நாட்டினார்.

இவர் தன் தாய் மொழி மலையாளம் பேசவில்லை.
சமஸ்கரித மொழியில் மற்ற மாநிலங்களில் பேசினார்.

இன்று ஆங்கிலம் போல, அனைவருக்கும் தெரிந்த மொழியாக சமஸ்கரிதம் இருந்துள்ளது.

இந்த 1000 வருட இஸ்லாமிய ஆட்சியில், ஹிந்துக்கள் வர்ணிக்க முடியாத கொடுமைகளை சந்தித்தனர்.

முக்கியமாக, ஹிந்து பெண்களை காப்பது பெரும் சவாலாக இருந்தது.
ராணி பத்மாவதி போன்ற க்ஷத்ரிய பெண்களே, இஸ்லாமியர்களிடமிருந்து  தன் மானத்தை காப்பாற்றி கொள்ள தீ மூட்டி தற்கொலை செய்து கொண்டனர் என்றால், பொது மக்கள் நிலை எப்படி இருந்திருக்கும்?

ராமாயண காலத்தில் தசரதன் இறந்த பிறகு வாழ்ந்தனர் அவர் மனைவிகள்.
பாண்டு மகாராஜன் இறந்த பின்னும் குந்தி போன்றவர்கள் வாழ்ந்தனர்.

இந்த இஸ்லாமிய ஆக்கிரமிப்பில், சிக்கிய பாரத மக்கள், கணவன் இறந்து விட்டால், பயத்தினாலும், மானதிற்கு பயந்தும், தீயில் இறங்கினர்.

இந்த பய உணர்ச்சி, அவரவர் குடும்பத்தை விட்டு வெளியூர் சென்று சம்பாத்தியம் செய்வதை தடை செய்தது.

ஏழையாக போனாலும் கூட்டுக்குடும்பமாக இருந்து விடுவோம் என்று வாழ ஆரம்பித்தனர்.

விளைவு, வைசிய, சூத்திர தொழில் செய்பவர்கள் சமஸ்கரித மொழி பேச வாய்ப்பு இல்லாமல் போனது.

தமிழ் தேசத்தவர்கள், தெலுங்கு, கன்னட தேசம் சென்றால் தானே, பொது மொழியான சமஸ்கரிதம் பேசி உரையாட தேவைப்படும் !!
பயத்தின் உச்சத்தில் 1000 வருட இருந்த ஹிந்துக்கள், சம்ஸ்க்ரிதம் பேச வாய்ப்பு இல்லாமல் போனது.

100 வருடத்தில் 4 தலைமுறைகள் மாறும் பொது, 1000 வருடங்களில் 40 தலைமுறைகள் இந்த இஸ்லாமிய ஆக்கிரமிப்பில் சிக்கி விட்டது.
வெளியூர் சென்று வாணிபம் செய்வது போன்றவை தடைபட்டு, பொது மொழியாக இருந்த சமஸ்க்ரிதம் பேச்சு வழக்கில் இருந்து மறைந்து விட்டது. 

மேலும் தமிழனுக்கு கன்னடக்காரன் பேசும் பாஷை புரியாமல் போக, உட்பூசல் உண்டாகி, சகோதரர்கள் நாம் என்று கூட மறக்கும்படியாக செய்து விட்டனர் இஸ்லாமியர்கள்.     

இந்த 1000 வருடத்தில், கற்பழித்தும், கடத்தியும், கத்தியை காட்டியும் மதம் மாறி போனவர்கள், இன்றைய தேதியில் 40-50 தலைமுறை இஸ்லாமியனாகவே வாழ்ந்து வருகின்றனர்.

இவர்களும் ஹிந்துக்கள் தான் என்று சொன்னாலும், குறைந்தது 40 தலைமுறைகளாவது  கடந்து விட்டதால், இஸ்லாமியர்களாகவே இந்திய முகத்தை வைத்துக்கொண்டு வாழ்கின்றனர்.

ப்ராம்மணர்கள் மட்டும் வேதம் ஓதுவதால், சமஸ்கரித மொழி இவர்களிடம் மட்டும் பயன்பாட்டில் இருந்தது.

1000 வருட காலப்போக்கில், ப்ராம்மணர்களுக்கும் பேச்சு வழக்கில் இருந்து சமஸ்கரித மொழி பயன்படாமல் போக, அவரவர் மாநில மொழிகளில் பேச ஆரம்பித்தனர்.
அந்தந்த மாநில மொழிகளில் பக்தி பாடல்கள் உருவானது.


சமஸ்கரித மொழி பயன்பாட்டில் இல்லாமல் மெதுவாக அழிந்தது.

1000 வருட இஸ்லாமிய ஆட்சி முடிவுக்கு வந்து, கிறிஸ்தவ ஆட்சி ஆரம்பிக்க, படிப்பில் பிராம்மணன் மட்டுமே இருக்கிறான் என்று கவனித்தனர்.
மேலும் கோபம் என்ற குணம் எளிதில் வராதவர்களாக இருப்பதும் நிர்வாகத்துக்கு தேவைப்பட்டது.

க்ஷத்ரியர்கள் இல்லாமல் போய் விட்ட நிலையில், வாழ வழியை தேட, பிராம்மண குடும்பத்தில் ஒரு பிள்ளை ஆங்கிலேயன் கொடுக்கும் வேலைக்கு சென்றான்.
குடுமியை மறைத்து கொண்டு வேலை செல்ல, தலைப்பாகை அணிய ஆரம்பித்தனர்.
மற்ற குழந்தைகள் வேதம் கற்றனர்.
இவன் வருமானத்தில் குடும்பம் நடந்தது.
இது 200 வருட கிறிஸ்தவ ஆட்சியில், சூத்திரர்களுக்கு (employee) வாழ்வாதாரம் பெரிதும் பாதிப்பு ஏற்படுத்தியது. கொத்தடிமைகள் ஆக்கப்பட்டனர்.

வைஸ்யர்கள் (Business) தன் பிழைப்பை எப்படியோ பார்த்து கொண்டதால், அவர்கள் எதுவும் சொல்லாமல் இருந்தனர்.

காலப்போக்கில் நான்கு குணத்தில் (Spritual mind, Business Mind, Protection mind, Employee mind) இல்லாத, சமூக முன்னேற்றத்துக்கு உதவாதவர்களை பொதுவாக பஞ்சமர்கள் (திருடன், கொலைகாரன்) என்று அழைக்கப்பட்டவர்களை சமூகத்தில் விஷயங்களில் ஈடுபடுத்தாமல், ஒதுக்கினர்.
ஆங்கிலேய ஆட்சி காலத்தில், சூத்திர (Employee) தொழில் செய்பவர்கள் ஏழைகளாக அவதியுற்றனர்.
கால ஓட்டத்தில், பஞ்சமர்கள் என்று சமூகத்தின் விவாதத்தில் ஒதுக்கப்பட்டவர்களோடு சமூகத்துக்கு பாடுபடும் பலரும் விஷமத்தனமாக ஆங்கிலேயர்களால் பிணைக்கப்பட்டனர்.
அடிமை வாழ்க்கை வாழும் நிலைக்கு தள்ளினார் கிறிஸ்தவர்கள்.

விடுதலைக்கு பின், பஞ்சமர்கள் என்று அழைக்கப்பட்டவர்களில் கலப்பு ஏற்பட்டு இருந்ததால், திருடன், கொள்ளையன் போன்ற சமூக விரோதிகளோடு சேர்த்து, சாதாரண ஏழைகளும் இருந்தனர்.
கிறிஸ்தவ அரசாட்சியில், இவர்களுக்கு தலித் என்ற புதிய பெயரை வைத்தனர் கிறிஸ்தவர்கள்.

திருடன், கொள்ளைக்காரன் போன்ற கும்பலோடு, ஏழைகளாகி போன சமூகத்தினரையும் சேர்த்து அவமானப்படுத்தி, அடிமைகளாக்கி பார்த்தனர் ஆங்கிலேய கிறிஸ்தவர்கள்.
இவர்களது 200 வருட ஆதிக்கத்தில், இவர்களை தாழ்த்தப்பட்டவர்கள்  என்றே அழைத்து அடையாளப்படுத்தினர் கிறிஸ்தவர்கள்.

விடுதலை அடைந்த பின், அம்பேத்கர் பல ஜாதியில் இப்படி ஆங்கிலேயே அரசாட்சியில் தாழ்த்தப்பட்டவர்கள் என்று சொன்னவர்களை, தலித் என்றே அடையாளப்படுத்தி அவர்களுக்கும் உரிமைகள் கிடைக்க சட்டத்தில் வழி செய்தார்.

இந்தியா விடுதலை அடைந்த பின், சூத்திரர்கள் (employee) ப்ராம்மணர்கள் மட்டும் வேலைக்கு செல்வார்களா? நாங்கள் செல்ல கூடாதா? என்று எதிர்த்தனர்.
ராஜாஜி போனறவர்கள் மீண்டும் "குல கல்வி" கொண்டு வரலாம் என்றார்.
இது தவறு என்று ஏற்க மறுத்தனர்.

ஒரு வேளை "குலகல்வி" கொண்டு வரப்பட்டு இருந்தால்,
இன்று அனைத்து "பிராம்மணர்கள்" வேதம் கற்பதும், கோவில் பூஜைகள் கவனிப்பது என்று மட்டும் தான் இருந்து இருப்பார்கள்.

'குலகல்வி' சட்டம் ஆக்கப்பட கூடாது என்றதால், இன்று ப்ராம்மணர்கள் வைசிய என்று அனைவரும் சூத்திர(employee) தொழில் செய்கின்றனர். Competition உருவானது.

அரசர்கள் இருந்த வரை,
ப்ராம்மணர்களுக்கு அடிப்படை வசதி செய்து கொடுத்து, வேதம், கோவிலை மட்டும் பார்த்துக்கொள்ள செய்தனர். மற்ற தொழில், வேலையில் ஈடுபட கூடாது என்று விதித்தனர்.
மற்ற தொழிலை கற்று கொள்ள அனுமதி உண்டு, ஆனால் செய்ய அனுமதி அளிக்கப்படவில்லை அன்றைய காலத்தில்.

இந்த உதவியை விடுதலை அடைந்த பின், இந்திய அரசாங்கம் செய்ய தயார் இல்லாததால், ப்ராம்மணர்கள் படித்து தானே சம்பாதிக்க வேண்டியதாகியது.

அனைவரும் படிக்கலாம் என்ற சட்டம், நல்ல நோக்கத்தில் உருவாக்கபட்டாலும், எந்த படிப்புக்கு வேலை வாய்ப்பு அதிகமோ அதில் அனைவரும் முயற்சிக்க ஆரம்பித்தனர்.
இதனால் பல இதர தொழில்கள் அழிந்தன.
ஒரே வேலைக்கு லட்சக்கணக்கான பேர் படிப்பதால், வேலை இல்லா திண்டாட்டம் உருவானது.

படிப்பு ஒன்று, வேலை ஒன்று என்று அலங்கோலம் ஆகி, இன்று குழம்பி போய் இருக்கும் சமுதாயமாக ஆகி விட்டது.
1947ல் ஆரம்பித்து 60 வருடங்கள் ஏழைகள் ஆகி இருந்த ஹிந்துக்கள், தங்கள் குடும்பங்களை நிதானித்து சரி செய்து கொள்ள இரண்டு தலைமுறைகள் ஆகி விட்டது.

இந்தியர்கள் மீண்டும் ஹிந்து மதத்தின் பெருமையை அறிய ஆரம்பித்துள்ளனர்.
தங்கள் குடும்பங்களை பொருளாதார ரீதியில் முன்னேற்ற, முயற்சிகள் நடந்து கொண்டிருக்கிறது.

இன்னும் இரண்டு தலைமுறையில் மீண்டும் ஹிந்துக்கள் தங்கள் பெருமையை நிலை நிறுத்துவார்கள்.

அடிப்படை தேவைகளான வீடு, உணவு, உடைக்கு உழைத்து தான் பெற வேண்டும் என்ற நிலையில் இருந்து விடுபட பாடுபடுகின்றனர் இன்றைய தலைமுறைகள்.

அடிப்படை தேவைகள் நிறைந்த சமுதாயம்,
ஆராய்ச்சி, புதிய கண்டுபிடிப்புகள், கலை போன்றவற்றில் ஈடுபட சாமானிய மக்களுக்கும் இடமளிக்கும், நேரம் கொடுக்கும்.

1000 வருட இஸ்லாமிய, 200 வருட கிறிஸ்தவ ஆக்ரமிப்பில் பாரத தேசத்தில் பலர் பயத்தில், கற்பழிப்பில் மதம் மாற்றபட்டாலும், ஹிந்துக்களை காப்பாற்றியது இந்த லட்சக்கணக்கான ஜாதிகளும், வேதத்தில் சொல்லியுள்ள பல தெய்வங்களும் தான்.
இத்தனை ஜாதிகள், இத்தனை தெய்வங்கள் இருந்ததால் தான் , பல பிரிவுகளாக  இருந்த நாம் ஹிந்துக்களாகவே இருக்க முடிந்தது.

ஜாதிகளையும், ஹிந்து தெய்வங்களையும் அழித்தால், கிறிஸ்தவ மதத்தை பரப்பலாம் என்று, இன்று பெரு முயற்சி செய்து கொண்டுள்ளனர் காசுக்காக இன்று மதம் மாறி போனவர்கள்.   

இத்தனை காலத்துக்கு பின்னும், இன்னும் 100 கோடி ஹிந்துக்கள் தன்மானத்துடன் வீறு கொண்டு உள்ளனர்.

20 கோடி ஹிந்துக்கள் இந்த சமயத்தில் மதம் மாற்றப்பட்டனர் என்பது வேதனை என்றாலும், மீண்டும் ஹிந்துக்களை உருவாக்க, பலப்படுத்த ஹிந்துக்கள் விழித்து விட்டனர்.

தன் பெருமைகளை உணர தொடங்கி விட்ட ஹிந்துக்கள், மீண்டும் மலர்வார்கள்.

பிற மதங்கள், மனிதர்களால் காக்கப்படுகிறது.
ஹிந்துக்களை தெய்வங்கள் காக்கிறது. ஜாதி அமைப்புகள் காக்கிறது.

ஜாதியை ஒழிக்க நினைக்கும் திருடர்களை ஒடுக்க வேண்டும்.

"ஜாதிகள் இல்லையடி பாப்பா" என்று பாடிய பாரதியாரின் நோக்கம் அடுத்த வரிகளில் புலப்படுகிறது.
"குல தாழ்ச்சி உயர்வு சொல்லல் பாவம்" என்று சொல்லும் போது தான், அவர் கீதையின் சாரத்தை சொல்கிறார் என்று தெரிகிறது.

ஜாதிகள் கட்டுப்பாட்டுக்காகவும், ஒரு அரசனையோ, ரிஷியையோ, கொண்டு உருவானது என்று அறிகிறோம்.


ஜாதியை கொண்டு இழிவு சொல்ல கூடாது.
பிறப்பில் பிராம்மண ஜாதியில் இருந்தாலும், குணத்தில் நாத்தீகனாக, திருடனாக, கொள்ளை அடிப்பவனாக இருந்தால், அவன் "பஞ்சமன்" தான்.

ஹிந்துக்களின் எதிரிகள் இந்த பஞ்சம குணத்தில் உள்ளவர்களே.
இவர்கள் அனைவரும் ஒடுக்க பட வேண்டும்.

ஹிந்துக்கள் ஒன்று பட வேண்டும். ஹிந்துக்கள் சேர வேண்டும்.
வாழ்க பாரதம். வாழ்க ஹிந்துக்கள்.